Jump to content

புடலங்காய் செட்டிநாடு சைட் டிஷ்- செய்வது எப்படி?

Recommended Posts

பதியப்பட்டது

SNAKEGOURD SIDE DISH

இது மிகவும் ருசியான செட்டிநாடு சைட் டிஷ்ஷாக அமைகிறது. சாம்பார் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் உகந்தது.

தேவையான பொருட்கள்;

புடலங்காய்-2 சுமாரானன சைஸில்; துவரம்பருப்பு-100 கிராம்; மிளகாய்த்தூள்-3 டீ ஸ்பூன்; மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்; மல்லித்தூள்-1 டீ ஸ்பூன்; உடைத்த உளுத்தம்பருப்பு-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை; பெருங்காயத்தூள் மற்றும் உப்பு.

செய்முறை:
புடலங்காயை கழுவி சுத்தம் செய்து, உள்ளே உள்ள விதைக்ளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடம் ஊற வைக்கவும். அதிலுள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு கழுவி நீரைப் பிழிந்தெடுக்கவும். இதுபோல மீண்டும் ஒருமுறை செய்யவும். இப்போது புடலங்காய் பாதியளவாகக் குறைந்து சமைக்க தயாராக உள்ளது. இதற்கிடையே, பருப்பை சுத்தம் செய்து,மஞ்சள் தூள் சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வைத்து 3 விசில் விட்டு வேக வைக்கவும். மிகக் குழைய வேகவிடக்கூடாது. அப்படி வேகவிட்டால், அது கூட்டுக்கு ஒத்து வராது. சம்பார் போல இருக்கும். ஒரு கடாயை சூடு பண்ணி, அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு தாளித்து கோல்டன் ப்ரௌன் கலர் வந்ததும், கறிவேப்பிலை தாளித்து , புடலங்காயைப் போட்டு கலக்கி, 2 நிமிடம் விடவும். பின்னர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு மூடியால் வாணலியை மூடவும். தீயை மிதமாக வைத்து, தண்ணீர் வற்றும்வரை வேகவிடவும். . பிறகு வேகவைத்த் பருப்பை காயுடன் சேர்த்து, நன்கு கலக்கி மிதமான தீயில் வைக்கவும் 15 நிமிடம் . விட்டு விட்டுக் கிளறவும். பாதி வறுபட்ட நிலைக்கு வந்தபின் வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு ஏற்றது. ஏற்கெனவே உப்பு சேர்த்துப் பிழிந்ததால், கடைசியாக கவனத்துடன் அளவாக உப்பு சேர்க்கவேண்டும்.

http://moonramkonam.com/புடலங்காய்-செட்டிநாடு-சை/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா! புடலங்காய் சாப்பிட்டு வருடக் கணக்காய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

ஆஹா! புடலங்காய் சாப்பிட்டு வருடக் கணக்காய் இருக்கும்

என்னது?

வருசக் கணக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரதி said:

ஆஹா! புடலங்காய் சாப்பிட்டு வருடக் கணக்காய் இருக்கும்

ரதி தமிழ்கடை பக்கம் போவதில்லை போல.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதமுனி,மீரா உண்மையைத் தான் சொல்கிறேன்...இஞ்சால பக்க தமிழ்கடையில் கண்டது குறைவு. அப்படி கண்டாலும் வேண்டி சமைக்க யோசிக்கவில்லை...புடலங்காய் பருப்போட சேர்த்து தேங்காய்ப் போட்டு வறை மாதிரி செய்தால் அந்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ரதி said:

நாதமுனி,மீரா உண்மையைத் தான் சொல்கிறேன்...இஞ்சால பக்க தமிழ்கடையில் கண்டது குறைவு. அப்படி கண்டாலும் வேண்டி சமைக்க யோசிக்கவில்லை...புடலங்காய் பருப்போட சேர்த்து தேங்காய்ப் போட்டு வறை மாதிரி செய்தால் அந்த மாதிரி இருக்கும்.

எங்காலிப் பக்கம்.

லண்டனில தானே இருக்கிறியள்? அல்லது வெளியாளையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

நாதமுனி,மீரா உண்மையைத் தான் சொல்கிறேன்...இஞ்சால பக்க தமிழ்கடையில் கண்டது குறைவு. அப்படி கண்டாலும் வேண்டி சமைக்க யோசிக்கவில்லை...புடலங்காய் பருப்போட சேர்த்து தேங்காய்ப் போட்டு வறை மாதிரி செய்தால் அந்த மாதிரி இருக்கும்.

சரி அடுத்த சந்திப்பு நடந்தால் புடலங்காய் வாங்கி வருகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா அருமையான அயிட்டம்....! மேலே சிறிது தேங்காய் பூவும் சேர்த்தால் சுவை கூடுதலாய் இருக்கும்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

சரி அடுத்த சந்திப்பு நடந்தால் புடலங்காய் வாங்கி வருகிறேன். 

Image result for man with snake gourd

இப்படி வந்து நிக்கிறதில்ல மீரா., சொல்லியாச்சு... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Nathamuni said:

Image result for man with snake gourd

இப்படி வந்து நிக்கிறதில்ல மீரா., சொல்லியாச்சு... :grin: 

ஆஹா.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு கல் வைச்ச அட்டியல் ஒன்று போட விருப்பம். இஞ்சால பக்கம் நகைக் கடையும் இல்லை. அடுத்த தடவை சந்திப்புக்கு வ்ரும் போது ஒன்று வாங்கி வரேலுமே மீரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

எனக்கு கல் வைச்ச அட்டியல் ஒன்று போட விருப்பம். இஞ்சால பக்கம் நகைக் கடையும் இல்லை. அடுத்த தடவை சந்திப்புக்கு வ்ரும் போது ஒன்று வாங்கி வரேலுமே மீரா?

என்ன கலரில் வேணும்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/13/2016 at 3:01 AM, suvy said:

ஆஹா அருமையான அயிட்டம்....! ..! tw_blush:

புடலங்காயத்தானே சொல்கிறீர்கள் அண்ணே :rolleyes::unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

எனக்கு கல் வைச்ச அட்டியல் ஒன்று போட விருப்பம். இஞ்சால பக்கம் நகைக் கடையும் இல்லை. அடுத்த தடவை சந்திப்புக்கு வ்ரும் போது ஒன்று வாங்கி வரேலுமே மீரா?

என்ன அக்கா  உங்கட  இடத்தில இருந்து  182 பஸ்சை  பிடிச்சா  நேர வெம்பிளியில  கொண்டுபோய்  விடும் ,அங்க  இல்லாத  கடையா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரதி said:

எனக்கு கல் வைச்ச அட்டியல் ஒன்று போட விருப்பம். இஞ்சால பக்கம் நகைக் கடையும் இல்லை. அடுத்த தடவை சந்திப்புக்கு வ்ரும் போது ஒன்று வாங்கி வரேலுமே மீரா?

8 hours ago, MEERA said:

என்ன கலரில் வேணும்

image.jpg

ரதி

ரதிக்கு.... மேலே உள்ள நீலக்  கலர், 
ஆஹா... ஓஹோ... என்று, அந்த மாதிரி இருக்கும் மீரா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீரா பித்த்ளை நகையைக் கொண்டு வந்து ரதியை ஏமாத்தேலாது.

..................................
நந்தன் நான் என்ன ஹரோ வீல்டா அல்லது பிரன்ட் குரசிலா இருக்கிறன் 182 எடுத்து வாறதிற்கு? நீங்கள் எங்க வாறீங்கள் என்று விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கச்சி கவனம்...உவங்கள் பாக்கிஸ்தான் ரோல் கோல்டை காட்டி ஏமாத்தப்போறாங்கள்...

எப்ப பாரு சந்தேகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி கவனம்...உவங்கள் பாக்கிஸ்தான் ரோல் கோல்டை காட்டி ஏமாத்தப்போறாங்கள்...

தங்கச்சிக்கு அண்ணனாய் இருந்து என்ன பலன். நீங்கள் வாங்கிக் குடுக்கிறது ரதிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று மினக்கெட்டு தமிழ்க்டைக்குப் போய் புடலங்காய் தேடி வாங்கிக் கொண்டு வந்து பருப்போடு சேர்த்து சமைத்தேன்.ஆஹா என்ன சுவை கொஞ்சம் தயிரும் சேர்த்து சாப்பிட அமிர்தமாய் இருந்தது.

..........................................

சுமோ, என்ட அண்ணணோ,நானோ எங்களுக்குள்ள கொடுக்கல்,வாங்கல்களை பகிரங்கப்படுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரதி said:

இன்று மினக்கெட்டு தமிழ்க்டைக்குப் போய் புடலங்காய் தேடி வாங்கிக் கொண்டு வந்து பருப்போடு சேர்த்து சமைத்தேன்.ஆஹா என்ன சுவை கொஞ்சம் தயிரும் சேர்த்து சாப்பிட அமிர்தமாய் இருந்தது.

ரதி, அடுத்தமுறை.... புடலங்காய்  கறிக்கு சிறிது மிளகாய்த் தூள்  போட்டு, பிரட்டல்  கறியாக சமைத்துப் பாருங்கள்.  நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி தமிழ்சிறி இனி எப்ப வேண்டிச் சமைப்பேனோ தெரியாது.சமைக்கும் போது உங்கள் முறையில் சமைத்துப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதைத் தான் சொல்லுறது எதுவும் பக்கத்தில இருந்தால் அருமை தெரியாது என்று

  • 2 weeks later...
Posted

புடலங்காய் கூட்டு

Snakegourd Dish - Cooking Recipes in Tamil

பாசிப்பருப்பு - அரை கப்
புடலங்காய் - கால் கிலோ
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
காய்ச்சிய பால் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1

தாளிக்க:-

சீரகம் - அரை டீஸ்பூன்,
ஊளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:-

பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். புடலங்காயை அரை வட்டமாக மெல்லிதாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். இவற்றை மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, உப்புடன் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்குங்கள். பின் பாலை சேர்த்து, நெய்யில் சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, கூட்டில் சேருங்கள்.

http://www.koodal.com/women/cooking/recipes.asp?id=302&title=snakegourd-dish

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.