Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

Featured Replies

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்யோகப்பூர்வ இணைய முகவரியில் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது.

கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது. இப் பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15180

  • தொடங்கியவர்

க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி..

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கு ஜனவரி 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான மீள் திருத்தும் விண்ணப்ப பத்திரம், பெறுபேறுகளுடன் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு எதிர்வரும் நாட்களில் தேசிய பத்திரிகைகள் ஊடாக வெளியிடப்படும் விளம்பரத்தின் படி விண்ணப்ப பத்திரத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilwin.com/education/01/130812?ref=home

 
  • தொடங்கியவர்

உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்...

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ..

வவுனியா மாவட்டம்

உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டம்

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை - ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆனந்த கல்லூரியின் மாணவன் முதித அகலங்க முதலாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் - சுன்னாகம் - ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப்பிரிவில் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி முதலிடத்திடம் பெற்றுள்ளதாக கல்வித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 ஏ தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (காலை, வர்த்தகம், கணிதம்) இம்முறை 3 ஏ தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா கோல்புறுக் பாடசாலை மாணவி கலைப்பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி 3 ஏ தர சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

http://www.tamilwin.com/education/01/130811?ref=home

பொறியியல் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவன் முதலிடம்

 


பொறியியல் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவன் முதலிடம்
 

2016 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொறியியல் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவரான கனகசுந்தரம் ஜதுர்சஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

உயிர் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாத்திமா அரோச மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை உயிரியல் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியால மாணவன் எம். ரோஷேன் அக்தார் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் க்லேரின் திலுஜான் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் மானிப்பாய் இந்துகல்லூரியின் பத்மநாதன் குருபரேஷான் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/01/பொருளியல்-தொழிநுட்பவியல/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

சித்தி அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

இனி வழக்கம் போல் வட மாகாண கல்வி தரம் கவிழ்ந்து போச்சு என ஆய்வு அறிக்கைகள் வரும்,

ஆனால் இலங்கை அரசின் உத்தியோகப்பூவுர்வ அறிக்கைகளை பார்க்கும் போதோ நிலைமை வேறுமாதிரி உள்ளது.

  • தொடங்கியவர்

கிளிநொச்சியின் சாதனையாளர்கள்..

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள் கல்லூரியும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயமும், தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலய மாணவி காசிலிங்கம் தனுசா இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையை பெற்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சிம்மேந்திரன் சஜீபா இரண்டு ஏ,பி பேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் இராமமூர்த்தி செந்தீபன் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்கள்.

கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களான சந்திரகேசரன் சோபனபிரியன், 3ஏ பெறுபேறுகளை பெற்று முதலாம் நிலையையும், நாகேந்திரன் கேசவராஜ் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சௌந்தரராஜா யோகதர்மினி ஏ, இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் ஏ,இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி தர்மகுலபாலசிங்கம் டிலோஜன் மூன்று பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சிவகுமாரன் தர்சிகா இரண்டு பி,சி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிகப்பிரிவில் கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று முதல் நிலையிலும், பளை மத்திய கல்லூரி மாணவி அண்ணாவிப்பிள்ளை ஆன்நிலக்சனா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையினையும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் இரவீந்திரன் துவாகரன் மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/130848?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்கள் கவலையை விட்டிட்டு.. சாத்தியமான அடுத்த வழிமுறைகளில் முன்னேறிச் செல்ல வாழ்த்துக்கள். தவறான வழியை தெரிவு செய்யாத வகைக்கு அவர்களுக்கு வழி காட்டுதல்களை பாடசாலைச் சமூகமும் கல்விச் சமூகமும் வழங்க முன்வர வேண்டும். 

வெற்றி பெற்றவர்களும்.. அடுத்த படிநிலைக்கு முன்னேறிச் செல்வது பற்றி சிந்திக்கனுமே தவிர.. வெற்றி மமதையில்... பல்கலைக்கழகக் கல்வியில் கோட்டை விடப்படாது. tw_blush:

  • தொடங்கியவர்

வரலாற்றில் முதல்தடவை குடும்பிமலை பிரதேசத்திலிருந்து வர்த்தகப்பிரிவு மாணவி சாதனை

வரலாற்றில் முதல் தடவையாக கல்குடா கல்வி வயத்திற்குப்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட குடும்பிமலை பிரதேசத்தை சேர்ந்த கோவிந்தமூர்த்தி பிரசாளினி எனும் குறித்த மாணவி வர்த்தகப் பிரிவில் இம்முறை 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 44வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

வரலாற்றில் முதல்தடவையாக சந்திவெளி விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக பிரிவில் 4 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். குறித்த பாடசாலையில் கலைப் பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு மாத்திரம் உள்ளது.

மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மாணவியின் தந்தை சைக்கிளில் விறகு எடுத்து விற்று தங்களின் குடும்பத்தையும் தனது படிப்புக்குரிய செலவுகளையும் செய்து வந்தாக தெரிவித்தார்.

எனது குடும்பிமலை பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம், அங்கு உயர்தரம் படிப்பதற்குரிய பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் பல கஸ்டத்தின் மத்தியில் சந்திவெளி பாடசாலையில் படித்தோம்.

எனது தங்கைகளில் ஒருவர், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கும், மற்றையவர் 5ம் தர புலம்மைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

எனது பிரதேசம் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பிரதேசம், கல்வியைத் தொடர துடிக்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் தங்களின் வாழ்க்கையை இடை நடுவில் விட்டுவிட்டு இளவயது திருமணம் மற்று பெண்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் நான் எதிர்காலத்தில் உயர்தரப் படிப்பினை தொடர்ந்து எனது குடும்பிமலை பிரதேசம் மற்றும் சந்திவெளி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்குரிய சேவைகளைச் செய்வேன்.

இன்றைய நிலையில் ஊடகங்கள் உயர்தரத்தில் உயர் நிலையை அடைந்த மாணவர்களை மாத்திரம் இலக்கு வைத்து செய்திகளைப் பரப்புகின்றார்கள்.

என்னைப்போன்ற பல்வேறு நின்னல்களை சந்தித்த பிரதேசங்களில் இருந்து வெளியில்வரும் மாணவர்களை கண்டுகொள்ளாமை மனவேதனை அளிப்பதுடன் எதிர்காலத்தில் ஊடகங்கள் அவற்றை செவ்வனவே செய்வார்கள் என நினைக்கின்றேன்.

எனது குடும்ப நிலையினை நான் கூறியிருக்கின்றேன், எனது குடும்பிமலை பிரதேசத்தை மையப்படுத்திய எனது எதிர்கால கல்வி நகர்வுகள் இருப்பதினால் எனது உயர் கல்வியைத் தொடர எமது புலம்பெயர் வாழ் தமிழர்கள், அத்துடன் எமது நாட்டு நல்ல உள்ளம்படைத்தவர்கள் எனக்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டுமென தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என மாணவி பிராசாளினி தெரிவித்தார்.

இன்றைய கல கட்டத்தில் எனது குடும்பத்தின் வாழ்வாதார நிலைமை ஒரு சைக்கிள் விறகுடன்தான் செல்கின்றது.

எனது மூன்று பெண் பிள்ளைகளையும் படிக்கவைக்க வேண்டும், அதிலும் வர்த்தக பிரிவில் மூத்த மகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறாள், உயர்கல்வியைத் தொடர எனது மகளின் கல்விக்கு உதவி செய்ய விரும்பியவர்கள் முன்வந்து உதவியைச் செய்யவேண்டுமென மாணவயின் தயார் தெரிவித்தார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/education/01/130826?ref=home

 

 

Edited by போல்

  • தொடங்கியவர்

அகில இலங்கை ரீதியாக ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த மாணவர்கள்..

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக, பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வர்த்தகப்பிரிவு (Commerce) - கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அகலங்க ராஜபக்ஸ முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவு (Arts) - கண்டி உயர்தர மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் இன்டிவரி கவரமன்ன முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் பிரிவு (Biological sciences) - மாத்தறை, ராஹூல பாடசாலையில் கல்வி கற்றும் நிசல் புன்சர முதலிடம் பெற்றுள்ளார்.

பௌதீகவியல் பிரிவு (Physical sciences) - குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையில் கல்வி கற்றும் அமாயா தர்மசிறி முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பம் (Engineering technologies) - யாழ்ப்பாணம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கனகசுந்தரம் யதுர்சாயன் முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரி அமைப்புகள் தொழில்நுட்பங்கள் (Bio Systems technologies) - கேகாலை கோல்டன் ஜூபிலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கே. மலினி சசிகலா தில்ரங்க முதலிடம் பெற்றுள்ளார்.

குறித்த பெறுபேறுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் பொறியியல் தொழில்நுட்பத்தில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

http://www.tamilwin.com/education/01/130841?ref=editorpick

'நீ உருப்பட மாட்டாய்' என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி ; கிளிநொச்சியில் சம்பவம்

 

 

(எஸ்.என்.நிபோஜன்)

நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது என உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தெரிவித்துள்ளார்.

இவா் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா்.இவர் ஒரு   கூலித் தொழிலாளியின் மகன்.

asdfafd1.jpg

இன்று  ஊடகவியலாளர்களின்  செவ்விக்கு  கருத்து தெரிவித்த போது தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.

க.பொ.த சாதாரணதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிாிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தாா். என கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.  அதுவே எனக்கு சவாலக அமைந்தது  ஆனாலும்  அது  எனக்கு  இன்னமும்  வலிக்கிறது  இதே  போல்  யாரையும்  திட்டாதீர்கள்  என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்

http://www.virakesari.lk/article/15200

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்பது வெறும்  தொழில் மட்டும் இல்லை.இதை சகல ஆசிரியர்களும் உணர வேண்டும்.மாணவனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • தொடங்கியவர்

நீ உருப்பட மாட்டாய் என்றார் அதிபர்...! அதுவே எனக்கு சவாலாக அமைந்தது

நீ உருப்பட மாட்டாய் என்றார் அதிபர் அதுவே எனக்கு சவாலக அமைந்தது என சாதனைப் படைத்த மாணவன் ஒருவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவர் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரனே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவர் கிளிநொச்சி உருததிரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் ஒரு கூலித் தொழிலாளியின் மகன்.

இவர் இன்று ஊடகவியலாளர்களின் செவ்விக்கு கருத்து தெரிவித்த போது தான் ஆரம்பகல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவர்களை ஏளனமாகவே பார்ப்பது வழமை. எள்ளுக்காட்டில் உள்ளவர்கள் படிக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

க.பொ.த சாதாரனதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிரிவில் உயர்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக ஆயத்தமான போது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தார் என்று கண்கள் கலங்க கூறினார் அதுவே எனக்கு சவாலாக அமைந்தது.

ஆனாலும் அது எனக்கு இன்னமும் வலிக்கிறது, இதே போல் யாரையும் திட்டாதீர்கள் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

உருததிரபுரம் எள்ளுக்காடு பின் தங்கிய கிராமமாக இருந்தாலும் மாணவரின் சாதனையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

குறிப்பு -

இங்கு ஒரு மாணவனை அதிபர் கண்டித்தார் என்பது சாதாரணமான விடயம். ஒருவரை கண்டிக்கின்றார்கள் என்றால் அவர்கள் உருப்படாமல் போவதற்கு அல்ல. அவர்கள் இனிமேலாவது நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே..

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள், சகோதரர்கள் என அனைவருமே மாணவர்களை கண்டிப்பார்கள். நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில் யாரேனும் கண்டித்து திட்டினால் மனம் உடைந்து போகாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.

அதற்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

அதேபோல் இந்த மாணவர்களை சாதிக்கத்தூண்டிய அதிபரும் இதில் வெற்றிபெற்றிருக்கின்றார் என்றால் மிகையாகாது.

 

http://www.tamilwin.com/community/01/130852?ref=home

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, போல் said:

குறிப்பு -

இங்கு ஒரு மாணவனை அதிபர் கண்டித்தார் என்பது சாதாரணமான விடயம். ஒருவரை கண்டிக்கின்றார்கள் என்றால் அவர்கள் உருப்படாமல் போவதற்கு அல்ல. அவர்கள் இனிமேலாவது நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே..

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள், சகோதரர்கள் என அனைவருமே மாணவர்களை கண்டிப்பார்கள். நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இவர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில் யாரேனும் கண்டித்து திட்டினால் மனம் உடைந்து போகாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.

அதற்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

அதேபோல் இந்த மாணவர்களை சாதிக்கத்தூண்டிய அதிபரும் இதில் வெற்றிபெற்றிருக்கின்றார் என்றால் மிகையாகாது.

 

இந்தக் குறிப்பெழுதினவர் பழைய நூற்றாண்டில் வாழ்கிறார் போலும். இன்றைய கற்கை திட்டமிடல்கள் என்பது மாணவர்களின் உளத்திறன் வளர்ச்சி..ஸ்திரத்தன்மை.. நுண்ணறிவியல் வளர்ச்சி.. என்று பல்வேறு காரணிகளை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு.. ஆசிரியர்களும் அதிபர்களும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் வேளையில்.. ஒரு அதிபர் தராதரம் உள்ளவர் ஒரு மாணவனை திட்டுவது என்பது இன்றைய உலகில் மன்னிக்கப்பட முடியாத ஒரு விடயம்.

அதிபர்கள் ஆசிரியர்கள் பெளதீக ரீதியாக மட்டுமல்ல.. வேர்பல் ரீதியாகவும் மாணவர்களைத் துன்புறுத்தக் கூடாது. மாறாக மாணவர்கள் உணரும் வகையில்.. சில மென் தண்டனைகளை வழங்கலாம்.. அல்லது ஆலோசனைகளை வழங்கலாம்.. அல்லது பெற்றோரிடம் முறையிடலாம். 

அதிபர் திட்டி ஒரு மாணவன் திறமையை வெளிக்காட்டினான் என்பதிலும்.. அந்த மாணவனின் திறமையை அதிபர் சரியாக இனங்கண்டு வளர்க்கத்தவறிவிட்டார் என்பது தான் நியாயமான உண்மை இங்கு. இன்னொரு பாடசாலை அவனிடம் இருந்த திறமையை வளர்த்து விட்டிருக்குது. அவன் வெற்றி பெற்றிருக்கிறான்.

ஆக.. அதிபரின் பலவீனத்தை.. இந்தக் குறிப்பெழுதினவர் பாதுகாத்து.. அந்த அதிபரின் திறமை இன்மையை.. திறமையாகச் சித்தரிப்பது.. மிகவும் தவறாகும். அதிபர் எனியாவது தன்னை மாற்றிக்கனும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 இன்றைய கற்கை திட்டமிடல்கள் என்பது மாணவர்களின் உளத்திறன் வளர்ச்சி..ஸ்திரத்தன்மை.. நுண்ணறிவியல் வளர்ச்சி.. என்று பல்வேறு காரணிகளை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு.. ஆசிரியர்களும் அதிபர்களும் தயார்ப்படுத்தப்பட்டு வரும் வேளையில்.. ஒரு அதிபர் தராதரம் உள்ளவர் ஒரு மாணவனை திட்டுவது என்பது இன்றைய உலகில் மன்னிக்கப்பட முடியாத ஒரு விடயம்.

அதிபர்கள் ஆசிரியர்கள் பெளதீக ரீதியாக மட்டுமல்ல.. வேர்பல் ரீதியாகவும் மாணவர்களைத் துன்புறுத்தக் கூடாது. மாறாக மாணவர்கள் உணரும் வகையில்.. சில மென் தண்டனைகளை வழங்கலாம்.. அல்லது ஆலோசனைகளை வழங்கலாம்.. அல்லது பெற்றோரிடம் முறையிடலாம். 

அதிபர் திட்டி ஒரு மாணவன் திறமையை வெளிக்காட்டினான் என்பதிலும்.. அந்த மாணவனின் திறமையை அதிபர் சரியாக இனங்கண்டு வளர்க்கத்தவறிவிட்டார் என்பது தான் நியாயமான உண்மை இங்கு. இன்னொரு பாடசாலை அவனிடம் இருந்த திறமையை வளர்த்து விட்டிருக்குது. அவன் வெற்றி பெற்றிருக்கிறான்.

அதிபர் எனியாவது தன்னை மாற்றிக்கனும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

எனது பாடசாலை அதிபராலும் ஆசிரியர்களாலுமே இந்நிலைக்கு வந்தேன் என்று ரியூசனில் படித்து நல்ல பெறுபெறுபேறுகளை பெற்றுவிட்டு முகஸ்துதிக்கு பத்திரிகைகளுக்கு பொய் சொல்லும் மாணவர்களைவிட உண்மையை சொல்லிய இந்தமாணவனுக்கு ஒரு சல்யூட்...

  • தொடங்கியவர்

கிண்ணியாவில் வரலாற்று சாதனை..

உயர்தரப் பரிட்சையில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் "மஹ்தி றொசான் அக்தார்" வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மாவட்டத்தில் 1ஆம் இடமும் தேசியத்தில் 2ஆம் இடமும்பெற்று வரலாற்றில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இன்று வெளியான க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த "மஹ்தி றொஸான் அக்தார் " மூன்று பாடங்களிலும் ஏ தரம் சித்தி பெற்று தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற இவர் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவராவர்.

இவர் முன்னாள் வங்கி ஊழியர் மஹ்தி, பாயிதா ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/130845?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வென்றவர்கள் இருவருமே.

அவரை உசுப்பவே வாத்தியார் அப்படி சொல்லியிருக்கிறார்.

இது புதிதல்ல. 

மாணவர் அதிபருக்கு நன்றி சொல்வதுடன், அதிபர் மேலும் பல, கவனச்சிதறல் காட்டும் மாணவரை, அதே வழியில் உசுப்பேத்தி வெல்ல வைக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

தொழில்நுட்பத்துறையில் அகில இலங்கை ரீதியாக 3ஆம் இடத்தைப் பெற்ற ஓட்டமாவடி மாணவி

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவின் உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்துறையிலே இல்யாஸ் பாத்திமா அரூசா என்ற மாணவி 3 ஏ சித்திகளைப் பெற்று உயர் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

“எனது குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் என்பதினால் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலே கல்வியைத் தொடர்ந்தேன். உயர் தரத்தில் முதன் முதலாக கலைத் துறையைத் தெரிவு செய்து படித்த வேளை கலைத் துறையில் இருந்து மாறி குறித்த உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவைத் தெரிவு செய்தேன்.

ஒரு குறுகிய காலப் பகுதியில் இப்பாடத்துறையை விரும்பி விடாது கற்றமையினால் சிறந்த பெறுபேற்றைப் பெற்றேன்” எனத் தெரிவித்தார்..

அவரது தந்தை கூறுகையில்,

“எனது மகள் அகில இலங்கை ரீதியாக நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். நாங்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கொண்டு எனது மகளின் படிப்புச் செலவுகளையும் ஏனைய குடும்பச் செலவுகளையும் கவனித்து வந்தேன்” எனத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/130867?ref=home

 

 
  • தொடங்கியவர்

ஆரையம்பதியில் மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்ற மாணவி

மட்டக்களப்பு ஆரையம்பதியிலே 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சந்திரகுமார் சர்மிலா மூன்று பாடங்களிலும் A தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது நிலையையும் அகில இலங்கை ரீதியாக 51 வது நிலையையும் பெற்று தான் கல்விகற்ற ஆரையம்பதி இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்திற்கும் தமது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பொருளாதார நிலையில் பின் தங்கிய குடும்ப பின்னணியைக் கொண்ட இந்த மாணவியின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பக்க பலமாய் இவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இருந்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நகர பாடசாலைகளைத் தேடிச் சென்று கல்வி கற்கும் வழக்கமுள்ள இந்தப் பிரதேசத்தில் கிராம பாடசாலையிலே பயின்று மாவட்டத்தில் முன்னணியில் சித்தி பெற்றுள்ள இந்த மாணவிக்கு பாடசாலையின் அதிபர் பாராட்டினைத் தெரிவித்தார்.

 

http://www.tamilwin.com/community/01/130849?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர தேர்வில் சித்தி எய்தி சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பின் தங்கிய பிரதேசங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் இருந்து பல மாணவர்கள் சாதனை படைத்தது பெருமையாக விடயம்.

  • தொடங்கியவர்

யாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில் கஜரோகணன் கஜானன் கணிதத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும் இரவீந்திரன் பானுப்பிரியன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தனன் நான்காமிடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் 14 மாணவர்கள் கணிதத் துறையில் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், யோகேந்திரராசா சாகித்தியன் நான்காமிடத்தையும், திருமாறன் இளமாறன் ஐந்தாமிடத்தையும், மேலும் நான்கு மாணவர்கள் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

 

http://www.tamilwin.com/education/01/130881?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

தேர்வில் சித்தியெய்தி சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.