Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம்.

Featured Replies

மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம்.

யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத் தம் கசிவதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று அங்கு கூடினர்.

அந்த ஆலயத்துக்கு சமீபமாக வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து சிவப்பாகக் கண்ணீர் கசியத் தொடங்கியதாகவும், அதனை முதலில் அவ்வீட்டுச் சிறுமி தந்தைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டது.

மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை அவதானித்த ஆசிரியர் சொரூபத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தார் என்றும் அறிய வந்தது.

தேவாலயத்தில் உள்ள சிறிய தேர் ஒன்றில் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதும் ஒரு அடி உயரமானதுமான சிலையின் இடது கண்ணீர் இரத்தக்கசிவு ஏற் பட்டு உள்ளதை மிக அருகில் இருந்து அவதானிக்கக் கூடியதாக விருந்தது.

இந்தச் செய்தி பரவியதை அடுத்து தேவாலயத்திற்குள்ளேயும், வளாகத்திலும் பெருந்திரளான மக்கள் திரண்டு அதனைத் தரிசித்தனர்.

மக்கள் முண்டியடிக்காமல் வரிசையாகச் சென்று தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

-Tamilwin-

எங்கட சனத்திற்கு இப்படி மாதா சிலையினூடாக இரத்தம் வடியுது, பிள்ளையார் பால் குடிக்கிறார் போன்ற கதைகளை நம்பி ஓடித்திரியும் வியாதி யுகம் யுகமாகவே இருக்கின்றது. தங்கள் உடம்பின் ஊடாக, தங்கள் உறவுகளின் உடம்பின் ஊடாக போரின் காரணமாக காயம்பட்டு உண்மையான இரத்தம் பாயும் போது வராத ஆர்வம் இப்படியான சம்பவங்களைப் பார்ப்பதில் நம் சனங்களிற்கு வருவதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. உண்மையை, ஞானத்தை தேடாது, உண்மையான இறைவனைத் தேடாது இப்படியான மூடநம்பிக்கைகளில், கட்டுக்கதைகளில் நாம் புதைந்துபோயிருக்கும் வரை தமிழன் முன்னேறப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சனத்திற்கு மட்டுமில்லை, அது ஒரு மனிதனுக்கு உள்ள சராசரி உணர்வு. இயற்கைக்கு முரணான விதத்தில் ஏதும் நடந்தேறினால் அதனை பார்த்துவிடவேண்டும் என்று எந்த மனிதனும் ஆவலுடன் இருப்பான். அதற்கு எங்கள் மக்கள் மட்டும் விதிவிலக்காகி விட முடியாது.

காயம்பட்டு இரத்தம் ஓடியபோது அங்கு வாழ்ந்த மக்கள் அக்காயத்திற்கு மருந்து போட்டுவிட்டதால்தான் அங்கு இன்னமும் மக்கள் வாழ்கிறார்கள். அப்படி காயப்பட்டிருப்பவரை காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு இல்லாது இருந்திருந்தால் அம்மண்ணில் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டு மக்கள் தொகை மிகவும் குறைவடைந்திருக்கும். மக்கள் தாங்கள் செய்யவேண்டியவற்றை செய்துகொண்டே இருக்கிறார்கள். போர்ச்சூழலில் வாழ்கிறார்கள் என்பதற்காக அவர்கள் தம் வாழ்வில் எந்தவொரு நிகழ்வையும் அறியக்கூடாது என்பதல்ல. ஒரு விடயத்தை பார்த்து அறியும் போதுதான் அது உண்மையா பொய்யா என்பதை அறியமுடியும்.

Edited by பிறேம்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு அறிவியல் சமூகமும் இதுதான் பகுத்தறிவு என்று சொல்வதைக் கேட்டு அதன் வழி செல்லாது. தானாக ஆராய்ந்து முடிவெடுக்கும். மக்கள் அசாதாரண நிகழ்வை அவதானிப்பது தவறன்று. அவர்களை இழக்காரம் செய்வதும் மூடநம்பிக்கை என்று பழிப்பதுமே அறிவிலித்தனமானது. அறிவுபூர்வமானதாக கையாள வேண்டின் யாழில் உள்ள கல்விச் சமூகம் சிலையின் கண்ணீரை குறைந்தது சாதாரண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு சரியான தகவலை வழங்குதலே ஆகும். அதை விடுத்து மாறுப்பட்ட கருத்துக்களை கண்ணை மூடிக் கொண்டு வைப்பதெல்லாம் பகுத்தறிவு வாதம் அல்ல. அப்படி எண்ணுவதும் அறிவீனம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:

யாழில் உள்ள கல்விச் சமூகம் சிலையின் கண்ணீரை

எலி,பூனை விளையாட்டு தான் நெடுக்ஸ்,இந்த சமூகம் தான் மாதா சிலையை ஊர்வலமா எடுத்து செல்வார்கள்,அவர்கள் எப்படி பகுப்பாய்வுக்கு அனுப்புவார்கள்

:icon_idea::D:D

நெடுக்ஸ் சொன்னதுதான் சரியான கருத்து. ஆனால் பகுப்பாய்வு செய்யப் போனால் கடவுள் கோபித்துக் கொள்வார். நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொன்னதுதான் சரியான கருத்து. ஆனால் பகுப்பாய்வு செய்யப் போனால் கடவுள் கோபித்துக் கொள்வார். நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தயாரா?

தாராளமா. ஆனா சாம்பிள் எடுத்து அனுப்ப விடுவார்களோ தெரியல்ல. ஆனால் யாழ் பல்கலைக்கழகம் செய்யலாமே தானே..! :icon_idea::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகள் செதுக்கப்பட்டதில் தவறு நடந்திருக்கலாம்.

ஈழத்தில் தான் மனித படுகொலைகள் ரத்த ஆறாய் ஓடுகிறதே. அதன் வெளிப்பாடாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்திலிருந்தே இப்படியான உடான்சுகளாலதான் சமயங்கள வளர்த்தவங்க பாருங்கோ. பிள்ளையார் பால்குடிச்ச நேரத்தில் கொஞ்சம் விஸ்கிய வச்சுப் பார்க்க அதையும் இழுத்திற்றார். பைபிளுக்குள்ள மயிர் கிடக்குதாமெண்டு ஒரு நாளும் திறக்காத பைபிளொண்டை எடுத்துப் பார்க்க அங்க ஒண்டையும் காணல்ல. அடிக்கடி வாசிச்ச பைளிலதான் தலையில இருந்து உதிர்ந்த மயிர் கிடந்தது. மாதா கண்ணில இருந்து வடியிற இரத்தத்துக்கும் இப்பிடி ஏதாவது காரணம் இருக்கும். எதுக்கும் தீர விசாரிச்சுப் பாருங்கோ.

அப்படி சொல்ல கூடாது தெய்வ குற்றம் ஆகிடும்,எதையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பின் தான் நாங்கள் அதை உறுதிபடுத்துவோம்,

எதற்கு பகுப்பாய்வு செய்வது என்று விவஸ்தையே இல்லாம போச்சு....

:icon_idea::lol::lol:

தொலைக்காட்சியில் செய்தியில் காட்டினார்கள். உண்மையாகவே ரத்தம் வருது. பார்த்தால் நம்பத்தான் வேணும். ஆனால் நீங்க என்ன என்னமோ எல்லாம் சொல்லுறீங்க. அப்போ அது பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகள் செதுக்கப்பட்டதில் தவறு நடந்திருக்கலாம்.

ஈழத்தில் தான் மனித படுகொலைகள் ரத்த ஆறாய் ஓடுகிறதே. அதன் வெளிப்பாடாய் இருக்கும்.

கறுப்பி அக்கா சொல்வது உண்மைதான். சிலை செதுக்கும் போது கண்ணுக்குச் செல்லும் இரத்த நாடியை அறுத்து விட்டார்களாம். அதுதான் இரத்தம் ஓடுகிறது போல..! யாழ் கள அறிவாளிகளே போதும் உண்மையைக் கண்டறிய. எதுக்கு சாம்பிள் பகுப்பாய்வு எல்லாம்..! :lol::icon_idea:

போங்கப்பா உங்க ஆய்வுகளை கொண்டு போங்க.

நான் இப்பவு பார்த்தேன் ஆழமாக உன்னிப்பாக பார்த்தேன் ரத்தம் கசிவதை. (in Tv)

அண்மையில் தான் புத்தர் ஏதோ லைட் அடிகிறார் என்டு கதை விட்டார்கள்! இப்ப இது வேரையா? நாடு உருப்பட்ட மதிரி தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு அறிவியல் சமூகமும் இதுதான் பகுத்தறிவு என்று சொல்வதைக் கேட்டு அதன் வழி செல்லாது. தானாக ஆராய்ந்து முடிவெடுக்கும். மக்கள் அசாதாரண நிகழ்வை அவதானிப்பது தவறன்று. அவர்களை இழக்காரம் செய்வதும் மூடநம்பிக்கை என்று பழிப்பதுமே அறிவிலித்தனமானது. அறிவுபூர்வமானதாக கையாள வேண்டின் யாழில் உள்ள கல்விச் சமூகம் சிலையின் கண்ணீரை குறைந்தது சாதாரண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு சரியான தகவலை வழங்குதலே ஆகும். அதை விடுத்து மாறுப்பட்ட கருத்துக்களை கண்ணை மூடிக் கொண்டு வைப்பதெல்லாம் பகுத்தறிவு வாதம் அல்ல. அப்படி எண்ணுவதும் அறிவீனம். :icon_idea:

அங்கு சென்ற மக்கள் கூட்டத்தில் ஒரு 5% மாவது அறிவியல் நோக்கத்திற்காக சென்று தரிசித்திருக்கும் என்பது சந்தேகமே. மற்றவர்கள் எல்லாம் சும்மா விடுப்புப் பார்க்கவும் மற்றும் பக்தி முற்றிப்போனவர்களும் தான்.

இதையெல்லாம் பகுப்பாய்வு செய்யத்தேவை இல்லை. அந்த தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் நிர்வாகத்தினரைக் கூப்பிட்டு 'பகுப்பாய்வு' செய்தாலே எல்லாம் வெளிக்கும்.

இப்படிப்பட்ட சில்லறை வேலைகளுக்கெல்லாம் யாழ் கல்விச்சமூகத்தை எதிர்பார்ப்பது தவறு. இன்னொரு வார்த்தையில் சொன்னால், இதனால் தான் யாழ் கல்விச்சமூகம் இதில் தலையிட வில்லை. போகிறபோகில் BUSINESS நடக்காத கோயில் தேவாலயங்களிலை எல்லாம் பிள்ளையார் பால் குடிப்பார் மதாவுக்குக் கண்ணீர் வடியும், கல்விச்சமூகம் அங்கெல்லாம் போய் ஆராய்ச்சி நடத்தி மக்களை அறிவியல் தெளிவிக்க வேண்டுமா?

மேலும், ஆராய்ச்சி நடத்துகிறேன் பேர்வழி என்று யாராவது போய் sample எடுக்க வெளிக்கிட்டால் இருக்கு மிச்சத்திருவிழா. சாமி குத்தம் என்று சாமியாடி வந்தவர்களை விரட்ட ஒரு கும்பல் கட்டாயம் இருக்கும். அந்தக்கும்பலை தூண்டிவிடுவது யார் என்று சொல்லத்தேவையில்லை.

இதனால் தான் பிள்ளையார் பால் குடிப்பது, கண்ணில் ரத்தம் வருவது மற்றும் விபூதி கொட்டுவது போன்ற விடயங்களை எமது சமுதாய மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகக் கணித்து கல்விச்சமூகம் ஒதுங்கிக் கொண்டது.

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மருந்து மாதிரி. வருத்தம் வரும் போது (மனம் சஞ்சலப் படும்போது) அளவாக எடுத்துக்கொண்டால் வாழ்கையில் முன்னேறலாம். அதையே அளவுக்கதிகமாக எடுத்தால் (addicted அனால்) அதுவே எமனாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தான் புத்தர் ஏதோ லைட் அடிகிறார் என்டு கதை விட்டார்கள்! இப்ப இது வேரையா? நாடு உருப்பட்ட மதிரி தான்!

பிள்ளை உமக்கு உம்மையான கதை தெறியாதா நான் அன்றைக்கு டோர்ச் லைட் அடித்து கொண்டு வீதியால் வோர்கிங் போனனான் அதை பார்த்து விட்டு கந்தப்பு கொப்பி பேஸ்ட் பண்ணிவிட்டார் அது தான் உண்மையக நடந்தது

:icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கீட்டாங்கப்பா :P

தொடங்கீட்டாங்கப்பா :P

என்னத்த தாத்தா

:icon_idea::lol:

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மருந்து மாதிரி. வருத்தம் வரும் போது (மனம் சஞ்சலப் படும்போது) அளவாக எடுத்துக்கொண்டால் வாழ்கையில் முன்னேறலாம். அதையே அளவுக்கதிகமாக எடுத்தால் (addicted அனால்) அதுவே எமனாகிவிடும்.

அழகாகச் சொன்னீர் பண்டிதர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- மானிட வாழ்வின் வளர்ச்சியில் அறிவுத் தேடல் தொடர்ந்து இருக்கும். தகவல்களை அல்லது செய்திகளைப் பிரசுரிக்கும் முன் பத்திரிகையாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்வுடன் நடக்கவேண்டிடயது கடப்பாடானது. ஆனால் இன்றைய உலகம் விளம்பர மாயைக் கீலங்ககளால் வியாபித்திருக்கிறது.

- பகுத்துணரும் பாங்கை நாம் பெறாதவிடத்து சில தகவல் வலை வீச்சுகளில் அள்ளுண்டு போவது தவிர்க்க முடியாததுதான்.

- பெரியார் திரைப்படம் திரைக்கு வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இப்படம் என்னதான் சொல்ல வருகிறது? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதன் என்னதான் செய்திருக்கிறான்? இப்படியான திரைப்படங்கள் ஐரோப்பாவில் திரைக்கு வருமா?

- படிக்கத் தெரியாத பாமரனுக்குப் புரியக் கூடியதாக கற்றுத்தந்த ஒருவர் சென்ற நூற்றாண்டில் தமிழ் பேசும் மக்கள் மத்தில் வாழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய விடையம். இதனால்தான் மக்களின் அன்புப் பெயராக 'பெரியார்' என இன்றும் அழைக்கப் படுகிறார்.

- ஆம் அறிவுக் கண்ணைத் திறந்த எவரையும் மதிக்கும் பாரம்பரியம் கொண்டது நம்மவர் பண்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியர் பக்கத்தில வைச்சு இறைச்சி வெட்டியிருப்பார். அது தெறிச்சு மாதா சுருவத்தின்ற கண்ணடியில பட்டிருக்கும். :icon_idea:

கண்ணால இரத்தம் வாறது சரி....கை உடைஞ்சிருக்கு அதால இரத்தம் வரவில்லையே?

இப்படியெல்லாம் கதைச்சு யாழ்களத்திக்கு தெய்வக் குற்றமாகுதோ தெரியேல்லை.

எப்பொருள் யார்வாய்ச்சொற்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

கேரளாவிலிருந்து(கானாபிரபா எங்கிருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளவும்) சக்திவாய்த மந்திரவாதிகளை அழைத்து யாழ்களத்துக்காக 10நாட்கள் விசேட யாகம் நடத்தவுள்ளோம்ஞான் மலையளத்தில் சம்சாரிக்காண்ணுட்டோ பி-கு யாகத்திற்கு உதவிசெய்ய விரும்பும் பக்தகோடிகள் உடனே தொடர்பு கொள்ளவும் கிரடிற்காட் அக்சபண்ணுபடும்.

Edited by விது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.