Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி

Featured Replies

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி
 
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி
பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 
 
சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 
160445860Shiromini_Satgunaraja.jpg
2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில், அவரது தாயாரையும் அவரையும் அந்த நாட்டில் தங்க அனுமதி வழங்கியுள்ளனர். 
 
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த மாதம் 21ம் திகதி சிரோமியின் புகலிட கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களது உறவினர்கள் குறிப்பிட்டு ள்ளனர். 
 
"அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது எமக்கு தெரியாது எனக் குறிப்பிட்ட அவர்கள், எதிர்வரும் 28ம் திகதி காலை 09.00 மணிக்கு விமானம் மூலம் சிரோமினி மற்றும் அவரது தயார் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவோம்" என கூறியுள்ளனர். 
 
இதேவேளை, அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

http://www.onlineuthayan.com/news/24375

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சணை என்னெண்டா, திரசா மே, இமிக்கிரேசன் விசயத்துக்கு பொறுப்பான, உள்நாட்டமைச்சராக இருந்த போது கொண்டிருந்த, கடுமையான குடியேற்றக் கொள்கை அமுலாக்கத்துக்கு, கமரோன் வேகத்தடையை அப்பப்ப போட்டுக் கொண்டிருந்தார்.

இப்ப அம்மணியே பிரதமர்...

அதுதான் இந்த வேகம். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடத்தல் உத்தரவு கடைசி நேரத்தில் ரத்து. இன்று விடுதலை.

மூன்று மாதம் மிகுதியாயிருக்கும் கல்வியை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணம், பாராளுமன்றம் வரை சென்று வென்றது.

http://www.dailymirror.lk/article/Deportation-of-Lankan-student-halted-124618.html

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி ....
படிப்பு சம்மந்தமாக இப்போதே வேலை எடுத்தால் ....
வேலை விசா கொடுக்க மாடடார்களா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Maruthankerny said:

மிகவும் நல்ல செய்தி ....
படிப்பு சம்மந்தமாக இப்போதே வேலை எடுத்தால் ....
வேலை விசா கொடுக்க மாடடார்களா ?

நல்ல விசா உள்ள மாப்பிளையை வைச்சு மூண்டுமுடிச்சு போடவைச்சு  விட்டால் மேடம் மே என்ன செய்வா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் 12 வயதில் சென்றவர். இப்பொழுது இவருக்கு 21 வயதிருக்கலாம். ஆகவே இவர் கிட்டத்தட்ட 9 வருட‌ங்கள்  சட்டரீதியா வாழ்ந்துள்ளார். எப்படியாவது இன்னூம் ஓர் வருடம் இழுத்து விட்டால் 10 வருடம் நிறைவு செய்தவர் ஆவர். 

பின்பு long term resident அடிப்படையில் இவருக்கு ILR இலகுவாக விண்ணப்பிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நல்ல விசா உள்ள மாப்பிளையை வைச்சு மூண்டுமுடிச்சு போடவைச்சு  விட்டால் மேடம் மே என்ன செய்வா?

பிரச்சனை இறுகினாப் பிறகு உது இனிச் செய்யேல்லாது.

விசயம் எண்னெண்டா.... இமிக்கிறேசன் உள்ளார எங்கண்ட ஆக்கள் கணபேர் வேலை.

அவயள்... தாலிகட்டுறது... அறுக்கிறது... தூசி கிளம்ப ஓடுறது எண்டு எல்லாத்தயும் விலா வாரியா விவரிக்கினம், மேல இருக்கிற வெள்ளயளுக்கு.

இப்படித்தான் பங்களாதேஸ் காரர் 85% ரெஸ்ரோரண்ட் வைச்சிருக்கிறம். செவ் இறக்கோணும், விசா வேணும்  எண்டு நாண்டு கொண்டு நிக்க, உள்ள இருக்கிற ஆக்கள் புத்தி சொல்லிக் கொடுக்க, உங்க வேலை இல்ல எண்டு பெனிபிற்றில இருக்கிற உங்கண்ட ஆக்களை பிடிச்சு தாறம்.. ரெயினிங் கொடுங்க... அதுக்கு வேறயா அரசு காசு தரும். முடிஞ்சோன்ன வேலைய குடுங்க எண்டு சொல்ல... வெலவலுத்துப் போயெல்லே இருக்கினம். ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, colomban said:

இவர் 12 வயதில் சென்றவர். இப்பொழுது இவருக்கு 21 வயதிருக்கலாம். ஆகவே இவர் கிட்டத்தட்ட 9 வருட‌ங்கள்  சட்டரீதியா வாழ்ந்துள்ளார். எப்படியாவது இன்னூம் ஓர் வருடம் இழுத்து விட்டால் 10 வருடம் நிறைவு செய்தவர் ஆவர். 

பின்பு long term resident அடிப்படையில் இவருக்கு ILR இலகுவாக விண்ணப்பிக்க முடியும்.

இவா.. சட்ட ரீதியா வாழவில்லை. ஏனெனில்.. இவா.. அகதி அந்தஸ்து கேட்டு.. அது நிராகரிப்பட்டதுடன்.. அதற்கான அப்பீல் உரிமையும் இல்லை. எனவே இவா இப்ப சட்டத்துக்குப் புறம்பாகவே உள்ளா. எனவே 10 வருட சட்டரீதியான வதிவிடம் அல்லது 5 வருட சட்டரீதியான வதிவிடம் ( இது உயர் கல்வித்தகமை.. வேலை உள்ளவர்களுக்கானது) இவர்களுக்கு இப்போ செல்லாது.  ( உள்நாட்டு அமைச்சின் அந்த முடிவு சட்டரீதியற்றது என்று நிரூபிக்கப்பட்டால்.. மட்டும்.. இவா 10 வருட சட்ட வதிவிடம் காட்டலாம்.) 

இவாக்கு இருக்கும் ஒரே வழிமுறை... discretion தான். அதன் கீழ் மனித உரிமைகளை இனங்காட்டி.. 3 வருட தற்காலிக விசா அதன் பின் இன்னொரு நீட்டிப்பு.. அதன் பின் நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட முடியும்.  அப்படித்தான் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு களவா ஒளிச்சிருந்த நம்மவர்கள் பலர் விசா எடுத்திருக்கினம். அதுவும் இப்ப சொறீலங்கா பாதுகாப்பான நாடு.. போனவை.. திரும்பி வாங்கோன்னு.. நம்மவர்களே அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதால்.. பிரச்சனையில இருக்காம்.. என்று கேள்வி. 

இப்ப இவா திருமணம் முடித்தாலும்.. ஊர் போய் தான் விசாக்கு அப்பிளை பண்ணி வரனும். இப்போ.. முன்னர் மாதிரி.. விசா இல்லாதவர்கள் எல்லாம் இங்கு விசா உள்ளவையை கல்யாணம் கட்டி.. விசா எடுக்கிற வித்தை எல்லாம் இறுக்கப்பட்டாயிற்று. எந்த வழியில் என்றாலும்.. discretion தான் இவாக்கு உள்ள ஒரே வழிமுறை. அதுவும் அவங்களா பாவ புண்ணியத்தில்.. செய்தால் தான். tw_blush:

ஊரில இவங்களுக்கு யாருமே இல்லை என்பது நம்பக் கூடியதாவா இருக்கு..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்திருக்கும் என்றால்.. ???.. படிக்க வந்த தகப்பனோட குடும்பமா வந்திருக்கினம். பிள்ளை இங்கேயே.. படிக்கத் தொடங்கி இருக்குது. இடையில தகப்பன் இறக்க.. யாரோ எங்கடையள்.. அசைலம் அடியுங்கோன்னு புத்தி சொல்லிக் கொடுத்திருக்கினம். இவை அசைலம் அடிச்சிருக்கினம். இப்ப அது நிராகரிப்பட்டு.. அப்பீல் உரிமையும் இல்லை. அவங்கள் சட்டப்படி நாடுகடத்த வெளிக்கிட்டிருக்கிறாங்கள். உடன பிள்ளை.. தான் யுனில கடைசி ஆண்டில் உள்ளதை வைச்சு.. சொறீலங்கால யாருமே இல்லை.. சொறீலங்கா பாதுகாப்பில்லை என்று சொல்லி.. கூடப் படிச்சவையின் ஆதரவோடு.. பெட்டிசன் போட்டு.. எம் பிக்கு மனுக்கொடுத்து.. இப்ப மனிதாபிமான  discretion  கேட்டு உள்நாட்டு அமைச்சுக்கு அப்பிளை பண்ணி இருக்கினம். பெரும்பாலும்.. discretion கொடுப்பாங்கள் என்னு தான் தோனுது. காரணம் இவாவை விட பலவீனமான நிலையில் இருந்த எம்மவர் பலருக்கு அகதி அந்தஸ்து நிராகரிப்பட்ட பின்.. நாடுகடத்தப்படும் நிலையில் இருந்தும்.. discretion..கொடுத்திருக்கினம். அந்த வகையில்.. இவாக்கு பிரச்சனை வராது என்றே தோன்றுகிறது. ஆனாலும்.. சொறீலங்கா மீது நம்மவர்களே அடிக்கிற வெள்ளையை பார்த்தால்.. எதிர்காலத்தில்.. எம்மவர்களுக்கு.. discretion.. னும் சிக்கல் தான்.  :rolleyes:

ஆனால்.. இதே மாதிரி.. இன்னொரு கேசில்.. இதே வயதுடைய ஆப்கானிஸ்தான்.. பையன்.. அவனுக்கு காதலியும் இருக்கு இங்க. அங்கு தகப்பனும்.. தலிபானால்.. கொல்லப்பட்டிருக்கிறார்.. தாய் எங்கென்றே தெரியவில்லை... இருந்தும் நாடு கடத்தப்பட்டிருந்தார். எனவே அவரவருக்கு உள்நாட்டு அமைச்சகம்.. என்ன முடிவு செய்யுதோ.. அதுதான் இறுதிமுடிவு. கோட் கேஸ் என்று போனால்.. நல்லதும் நடக்கலாம்.. கெட்டதும் நடக்கலாம். எம்மவர்கள் ஒருகாலத்தில்.. கோட் எல்லாம் நிராகரிக்க நிராகரிக்க.. ஓடி ஓளிச்சு.. 14 வருசத்துக்குப் பிறகு  வெளில வந்தும் விசா எடுத்தவை. இப்ப அதெல்லாம் நிப்பாட்டி.. அதை 20 வருசம் ஆக்கிட்டாங்கள். எல்லாம் எம்மவர்கள் காட்டிக்கொடுத்தது தான். இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கினது.. இந்த இந்திய உபகண்ட.. ஆபிரிக்க நாட்டுக் குடிவரவாளர்களின் தில்லுமுல்லுகளே. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனிக்கு இந்தப் பிள்ளையை பிடிச்சுப் போச்சுப் போல:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நாதமுனிக்கு இந்தப் பிள்ளையை பிடிச்சுப் போச்சுப் போல:rolleyes:

அப்ப குமாரசாமி அண்ணரின் ஐடியாவை ...
இங்கேயே முடித்து விடலாம் என்று எண்ணுகிறேன்.

ஒரு சாம்ரதாய முறையாக ....
கிருபன் அவர்களையும் மொசாத்திய அக்கா அவர்களையும் 
ஆரம்ப பேச்சுக்கு ... பெண் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். 

கால அவகாசம் குறைவாக இருப்பதால் .....
வேலைகளை சட்டு புட்டு என்று பார்ப்பதே நன்று !

9 hours ago, nedukkalapoovan said:

இவா.. சட்ட ரீதியா வாழவில்லை. ஏனெனில்.. இவா.. அகதி அந்தஸ்து கேட்டு.. அது நிராகரிப்பட்டதுடன்.. அதற்கான அப்பீல் உரிமையும் இல்லை. எனவே இவா இப்ப சட்டத்துக்குப் புறம்பாகவே உள்ளா. எனவே 10 வருட சட்டரீதியான வதிவிடம் அல்லது 5 வருட சட்டரீதியான வதிவிடம் ( இது உயர் கல்வித்தகமை.. வேலை உள்ளவர்களுக்கானது) இவர்களுக்கு இப்போ செல்லாது.  ( உள்நாட்டு அமைச்சின் அந்த முடிவு சட்டரீதியற்றது என்று நிரூபிக்கப்பட்டால்.. மட்டும்.. இவா 10 வருட சட்ட வதிவிடம் காட்டலாம்.) 

இவாக்கு இருக்கும் ஒரே வழிமுறை... discretion தான். அதன் கீழ் மனித உரிமைகளை இனங்காட்டி.. 3 வருட தற்காலிக விசா அதன் பின் இன்னொரு நீட்டிப்பு.. அதன் பின் நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட முடியும்.  அப்படித்தான் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு களவா ஒளிச்சிருந்த நம்மவர்கள் பலர் விசா எடுத்திருக்கினம். அதுவும் இப்ப சொறீலங்கா பாதுகாப்பான நாடு.. போனவை.. திரும்பி வாங்கோன்னு.. நம்மவர்களே அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதால்.. பிரச்சனையில இருக்காம்.. என்று கேள்வி. 

இப்ப இவா திருமணம் முடித்தாலும்.. ஊர் போய் தான் விசாக்கு அப்பிளை பண்ணி வரனும். இப்போ.. முன்னர் மாதிரி.. விசா இல்லாதவர்கள் எல்லாம் இங்கு விசா உள்ளவையை கல்யாணம் கட்டி.. விசா எடுக்கிற வித்தை எல்லாம் இறுக்கப்பட்டாயிற்று. எந்த வழியில் என்றாலும்.. discretion தான் இவாக்கு உள்ள ஒரே வழிமுறை. அதுவும் அவங்களா பாவ புண்ணியத்தில்.. செய்தால் தான். tw_blush:

ஊரில இவங்களுக்கு யாருமே இல்லை என்பது நம்பக் கூடியதாவா இருக்கு..???! 

விளக்கத்திட்கு நன்றி நெடுக்ஸ் ...

எனது உறவினர்கள் சிலர் ..இப்படி ஒரு மரண நிகழ்விட்கு விசாவில் 
வந்தார்கள் பின்பு திரும்பி போகவில்லை ...
லண்டனில் அசைலம் கேட்டு .... அவர்கள் கொடுத்தும் விட்டார்கள் 
இப்போது ஒரு பிரச்சனையும் இல்லை.
(அப்போது அங்கு இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருந்தது) 

அவர் அவர் விதி படி நடக்கிறது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

அப்ப குமாரசாமி அண்ணரின் ஐடியாவை ...
இங்கேயே முடித்து விடலாம் என்று எண்ணுகிறேன்.

ஒரு சாம்ரதாய முறையாக ....
கிருபன் அவர்களையும் மொசாத்திய அக்கா அவர்களையும் 
ஆரம்ப பேச்சுக்கு ... பெண் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். 

கால அவகாசம் குறைவாக இருப்பதால் .....
வேலைகளை சட்டு புட்டு என்று பார்ப்பதே நன்று !

பெட்டை கருப்பு என்டாலும் அழகி...பிரான்சில் அழகு ராணியாய் போட்டியிட்ட பெட்டையை விட இந்தப் பெட்டை எவ்வளவோ வடிவு:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாதானே போய்கிட்டு இருக்கு .........

பாவம் இந்த பிள்ளை ஒரு மாதிரி கரை சேர்த்து விடலாம் என்றால் 
இப்ப எதுக்கு எந்த அழகியை இதுக்குள்ள கொண்டு வாறீர்கள் ?
பின்பு நாத முனி அவர்கள் இது வேண்டாம் .... அது வேண்டும் என்றால் 

இந்த பிள்ளையின் எதிர்காலம் பற்றி யோசித்தீர்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பெட்டை கருப்பு என்டாலும் அழகி...பிரான்சில் அழகு ராணியாய் போட்டியிட்ட பெட்டையை விட இந்தப் பெட்டை எவ்வளவோ வடிவு:cool:

1 hour ago, ரதி said:

நாதமுனிக்கு இந்தப் பிள்ளையை பிடிச்சுப் போச்சுப் போல:rolleyes:

என்ரை அக்கா என்னை கரை சேர்க்க நிக்கிறா...

நமக்கு விசா வேணுமே முதலில் :grin: 

On 26/02/2017 at 10:52 PM, Nathamuni said:

பிரச்சணை என்னெண்டா, திரசா மே, இமிக்கிரேசன் விசயத்துக்கு பொறுப்பான, உள்நாட்டமைச்சராக இருந்த போது கொண்டிருந்த, கடுமையான குடியேற்றக் கொள்கை அமுலாக்கத்துக்கு, கமரோன் வேகத்தடையை அப்பப்ப போட்டுக் கொண்டிருந்தார்.

இப்ப அம்மணியே பிரதமர்...

அதுதான் இந்த வேகம். :mellow:

நேற்று இரவு நியூஸ்ல ஒரு செய்தி.

ஒரு ஆபிரிக்க பெண்... வியாதி... எலும்பு மச்சை மாத்தினால் தான் தப்ப ஏலும்.

தரக் கூடிய தங்கைக்கு விசா மறுக்கப் பட்டது.

பல பொது மக்கள் கையெழுத்து வைத்து, மனு அளித்த பின், விசா வழங்கப் பட்டு, இப்போது அக்கா சுகமாகியுள்ளார். தங்கை திரும்புகிறார்.

இவர்கள் சில வேலைகள் புரிய முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

என்ரை அக்கா என்னை கரை சேர்க்க நிக்கிறா...

நமக்கு விசா வேணுமே முதலில் :grin: 

நாதமுனி சென்றல் லண்டனில நல்ல வேலையில இருக்கிறீங்கள். உங்களுக்க்கு விசா இல்லையாtw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நாதமுனி சென்றல் லண்டனில நல்ல வேலையில இருக்கிறீங்கள். உங்களுக்க்கு விசா இல்லையாtw_cry:

இவரின் இந்த கதையை நம்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இவரின் இந்த கதையை நம்புகிறீர்களா?

முனியர் கல்யாணம் கட்டி குழந்தையும் இருக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

இவர்கள் சில வேலைகள் புரிய முடிவதில்லை

இங்குள்ள கள்ளர் காடையர் கூட்டத்துக்கு விசாவும் போய் சிட்டிசனும் குடுப்பாங்கள் உண்மையிலே பாதிக்கபட்ட நபர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாய் டக்ஸ் கட்டி பத்து வருடம் மேல் வாழ்ந்தாலும் பிடிச்சு சொர்லன்காவுக்கு அனுப்பி நாலாம் மாடியில் தலைகிழாக தொங்க விடுவாங்கள். இதுதான் லண்டன் இமிகிரேசன் 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

நாதமுனி சென்றல் லண்டனில நல்ல வேலையில இருக்கிறீங்கள். உங்களுக்க்கு விசா இல்லையாtw_cry:

2 hours ago, Maruthankerny said:

பின்பு நாத முனி அவர்கள் இது வேண்டாம் .... அது வேண்டும் என்றால் 

இந்த பிள்ளையின் எதிர்காலம் பற்றி யோசித்தீர்களா ? 

மருதர்... ஐடியா தந்திட்டாரே... அதுதான்... எச்சரிக்கையா இருக்கிறம் இல்ல.. :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.