Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் A-9 வீதியில் வைத்து உணவினை உண்ணும் இளைஞர் யுவதிகள்..!

Featured Replies

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலைவாய்ப்புக் கோரி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகவும் நீடிக்கிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து வீதியில் வைத்து உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தாங்கள் "கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்", அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?" என சுலோகங்கள் அடங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கோரியே இந்தத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/137411?ref=top-imp-parsely

  • Replies 67
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மேய்ச்சாலும் அரசாங்க உத்தியோகம் தான் வேணும் என்ற காலம் கழிந்த சிந்தனையில்.. பட்டதாரிகள் என்று சொல்வோரும் வாழ்வதால் தான் இந்த நிலைமை.

இன்று ஊரில்.. பல சுயதொழில்களுக்கான வாய்ப்பும் வளமும் பெருகிக் கிடக்கிறது. வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தலைமுறை இளைஞர்களே இப்ப ஊரில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறார்கள். சிலர் முதலீடுகளையும் செய்துள்ளார்கள். ஆனால்... ஊரில் உள்ளவர்கள் இன்னும்.. அரசாங்கத்தை நம்பிக்கொண்டு.. அதுவும் கனவுகளோடு படிச்சவை.. சொந்தக் கனவை நிறைவேற்ற வழி தெரியாமல்.. அரசாங்கத்தை.. நம்பிக்கிடக்கிறார்கள்..

மொத்த சொறீலங்காவையே.. கடனுக்கு விட்டிருக்கும்.. சிங்கள அரசுகளால்.. இவர்களின் கனவை எந்தளவுக்கு நிவர்த்திக்க முடியும் என்பதே.. இன்னொரு தனிக்கனவு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நெfடுக்குக்கு விசயம் தெரியாதோ  கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதெண்டால் அரசாங்க தொழில் செய்யுற மாப்பிள்ளைதானாம் இப்ப வேணுமாம் அப்பன் tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, முனிவர் ஜீ said:

நெfடுக்குக்கு விசயம் தெரியாதோ  கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதெண்டால் அரசாங்க தொழில் செய்யுற மாப்பிள்ளைதானாம் இப்ப வேணுமாம் அப்பன் tw_confused:

சுயதொழிலில் விவசாயமும் அடங்கிறது.. முனிவர் ஜீ. அது சுயதொழிலுக்கும் அப்பால்.. ஜீவனோபாயத் தொழில். அப்படித்தானே.. விவசாய பாடத்தில் படிப்பிக்கினம். பட்டதாரிகளுக்கு அந்த படிப்பு ஞாபகத்தில் இல்லாமை துரதிஷ்டம்.  பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல.. இன்று ஊரில்.. பலருக்கு விவசாயம் என்பது மட்டமான தொழிலாகிவிட்டது. ஆனால்.. ஒரு காலத்தில்.. யாழ் குடா நாட்டை உலகின் மத்தியில் தலைநிமிர்த்தி வைச்சிருந்தது.. அகதி அந்தஸ்தால் வந்த வெளிநாட்டுக் காசல்ல.. விவசாயம். 

வன்னி மண்.. சிங்கள அரசுகளின் பொருண்மியத் தடைகளை தாண்டி பல இலச்சம் தமிழ் மக்களின் உயிர் காத்து.. கெளப்பி உற்பத்தியில்.. தன்னிறைவோடும் இருந்தது.. கடும் யுத்த காலத்தில். இன்று.. அந்த மண்ணில்................................................ அரசாங்க உத்தியோகத்துக்கு.. சாலையில் சமையல்.. செய்யும் நிலை... அதுவும் பட்டதாரிகள். என்ன பட்டத்தை தரிச்சிருக்கினமோ..??! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஆடு மேய்ச்சாலும் அரசாங்க உத்தியோகம் தான் வேணும் என்ற காலம் கழிந்த சிந்தனையில்.. பட்டதாரிகள் என்று சொல்வோரும் வாழ்வதால் தான் இந்த நிலைமை.

இன்று ஊரில்.. பல சுயதொழில்களுக்கான வாய்ப்பும் வளமும் பெருகிக் கிடக்கிறது. வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தலைமுறை இளைஞர்களே இப்ப ஊரில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறார்கள். சிலர் முதலீடுகளையும் செய்துள்ளார்கள். ஆனால்... ஊரில் உள்ளவர்கள் இன்னும்.. அரசாங்கத்தை நம்பிக்கொண்டு.. அதுவும் கனவுகளோடு படிச்சவை.. சொந்தக் கனவை நிறைவேற்ற வழி தெரியாமல்.. அரசாங்கத்தை.. நம்பிக்கிடக்கிறார்கள்..

மொத்த சொறீலங்காவையே.. கடனுக்கு விட்டிருக்கும்.. சிங்கள அரசுகளால்.. இவர்களின் கனவை எந்தளவுக்கு நிவர்த்திக்க முடியும் என்பதே.. இன்னொரு தனிக்கனவு. :rolleyes:

பரம்பரை, பரம்பரையாக வந்த பழக்க தோசம்...

நமக்கு வரும் சிந்தனை தெளிவு, நாம் வாழும் நாட்டுச்சூழல் காரணமாகிறது.

அங்கே, credit facility system மே இல்லாத நிலையில்... சொந்தக்காரரிடம் கடன் கேட்பதிலும் பார்க்க, இது இலகுவாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அங்கு நிற்க்கும் போது பார்த்து ஆச்சரியமும் வேதனையும் பட்ட விடையம் கிராமத்தில் உள்ளவர்களே காசு கொடுத்து கோழி முட்டை வாங்குவது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் அங்கு நிற்க்கும் போது பார்த்து ஆச்சரியமும் வேதனையும் பட்ட விடையம் கிராமத்தில் உள்ளவர்களே காசு கொடுத்து கோழி முட்டை வாங்குவது தான்.

களவு எடுத்தால், கோழிக்கள்ளன், முட்டைக்கள்ளன் என்று பட்டம் கட்டி விடுவார்களே... 

நாங்களும் காசு கொடுத்துத் தானே, இங்க முட்டை வாங்கிறோம்.

:grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

களவு எடுத்தால், கோழிக்கள்ளன், முட்டைக்கள்ளன் என்று பட்டம் கட்டி விடுவார்களே... 

நாங்களும் காசு கொடுத்துத் தானே, இங்க முட்டை வாங்கிறோம்.

:grin: 

உங்களின் பொயின்ற் விழங்குது. என்டாலும் சொல்லுறன் வீட்டில நாலு கோழி வளர்க்க வக்கில்லாதவர்களுக்கு கோழிக்குஞ்சு கொடுப்பனவு.:unsure:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அரச உத்தியோகம் மாதம்,மாதம் நிரந்தர சம்பளம் சொன்ன தேதிக்குள் வரும் என்பதால் அரச உத்தியோகத்தை விரும்புகினம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

அரச உத்தியோகம் மாதம்,மாதம் நிரந்தர சம்பளம் சொன்ன தேதிக்குள் வரும் என்பதால் அரச உத்தியோகத்தை விரும்புகினம்

கொஞ்சம் வடிவான ஆக்களும் இருக்கினம் போல கிடக்குதக்கா... பார்த்தியலோ? :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் வடிவான ஆக்களும் இருக்கினம் போல கிடக்குதக்கா... பார்த்தியலோ? :10_wink:

இதோடா!tw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, சுவைப்பிரியன் said:

உங்களின் பொயின்ற் விழங்குது. என்டாலும் சொல்லுறன் வீட்டில நாலு கோழி வளர்க்க வக்கில்லாதவர்களுக்கு கோழிக்குஞ்சு கொடுப்பனவு.:unsure:tw_angry:

சரி... ஊர்ல என்ன வேலை போகுது... நாட்டுக் கோழி முட்டை? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.. 6 முட்டை.. 300 ரூபாக்கு வாங்கினன். tw_blush:

அங்க 10 குத்தி.. 5 ரூபா குத்தி.. 1 ரூபா குத்தி.. 2 ரூபா குத்தி..... 20 ரூபா.. ரூபா நோட் எல்லாம் எதுக்கு வைச்சிருக்காங்கன்னே.. புரியல்ல. 50 சதம்.. கண்ணிலையே படேல்ல. காணாமலே போயிட்டு. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதுசரி கூட்டத்தோடை கூட்டமாய் ஆமையோடு பிக்குவும் இருக்கிறாரோ????? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

சரி... ஊர்ல என்ன வேலை போகுது... நாட்டுக் கோழி முட்டை? 

18 / 20 ரூபாய்கள் மூதூரில்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

18 / 20 ரூபாய்கள் மூதூரில்.

நெடுக்கர் கூடக் குடுத்துப் போட்டார்.

ஆ... போனது கலியாண விசயமல்லோ.. சும்மா வீசியிருப்பார் காசை... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, முனிவர் ஜீ said:

நெfடுக்குக்கு விசயம் தெரியாதோ  கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதெண்டால் அரசாங்க தொழில் செய்யுற மாப்பிள்ளைதானாம் இப்ப வேணுமாம் அப்பன் tw_confused:

இது...இதுதான்.....எம்மவர்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாததிற்கான மூல காரணம்.
இப்படியான பிற்போக்குகளை புரட்சிகள் மூலமே சாகடிக்க முடியும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

4-5 வருடம் கம்பஸில் போய் இருந்துவிட்டு .......

நான் படிச்சனான் .... நான் படிச்சனான் 
என்று எவன் சொல்லுறானோ அவன் உருப்படதே இல்லை.

அங்கு சொல்லிக்கொடுத்தவற்றை மூலாதாரமாக்கி 
எவன் உலகை படிக்கிறானோ அவனுக்கு தோல்வியே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

4-5 வருடம் கம்பஸில் போய் இருந்துவிட்டு .......

நான் படிச்சனான் .... நான் படிச்சனான் 
என்று எவன் சொல்லுறானோ அவன் உருப்படதே இல்லை.

அங்கு சொல்லிக்கொடுத்தவற்றை மூலாதாரமாக்கி 
எவன் உலகை படிக்கிறானோ அவனுக்கு தோல்வியே இல்லை.

மருதர்,

எப்படீ, இப்படீ...

அப்படிப்போடுங்க அரிவாளை.

10 hours ago, Nathamuni said:

சரி... ஊர்ல என்ன வேலை போகுது... நாட்டுக் கோழி முட்டை? 

10 hours ago, nedukkalapoovan said:

அண்மையில்.. 6 முட்டை.. 300 ரூபாக்கு வாங்கினன். tw_blush:

அங்க 10 குத்தி.. 5 ரூபா குத்தி.. 1 ரூபா குத்தி.. 2 ரூபா குத்தி..... 20 ரூபா.. ரூபா நோட் எல்லாம் எதுக்கு வைச்சிருக்காங்கன்னே.. புரியல்ல. 50 சதம்.. கண்ணிலையே படேல்ல. காணாமலே போயிட்டு. tw_blush:

:grin::grin::grin:

9 hours ago, MEERA said:

18 / 20 ரூபாய்கள் மூதூரில்.

இங்கு 15 - 16 ரூபாய்க்கு வாங்கலாம். சிலவேளைகளில் தெரிந்த வீடுகளில் தொடர்ந்து வாங்குபவர்கள் 12 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள்.

இல்லை கார்கில்சிலதான் வாங்குவேன் எண்டா அங்கேயும் 24 ரூபாய் 

அப்புறம் 300 / 6 = 50 ரூபாய் 
இதைத்தான் குருடன் யானை பாத்த கதை என்பது.

சரி யானையின் காதை மட்டுமே தடவி பாத்திட்டு யானை சுளகு மாதிரி என்று அடம் பிடிப்பதுக்கு என்ன செய்யலாம் 
ஒன்றுமே பண்ண முடியாது

Sorry நெடுக்ஸ்

பெட்டெர் லக் நெஸ்ட் டைம்:grin:

  • தொடங்கியவர்

பட்டதாரியானால் அரச வேலை தான் தேவை என கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?

இதே உரிமை க.பொ.த. உயர்தரம் முடித்த மாணவர்களுக்கு இல்லையா?

இதே உரிமை க.பொ.த. சாதாரண தரம் முடித்த மாணவர்களுக்கு இல்லையா?

இவர்கள் மட்டுமல்ல அனைத்து பகுதிகளிலும் அரச வேலை கேட்டு பிச்சைகாரப் போராட்டம் நடத்தும் பட்டதாரிகள் அனைவரும் தாங்கள் வெறும் காகிதப் பட்டதாரிகள் என்பதையும், சொந்த முயற்சியற்ற சோம்பேறிகள் என்பதையும், எந்தவொரு வேலைக்கும் தேவையான தகுதியை இன்னமும் பெறவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்தி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, முனிவர் ஜீ said:

நெfடுக்குக்கு விசயம் தெரியாதோ  கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதெண்டால் அரசாங்க தொழில் செய்யுற மாப்பிள்ளைதானாம் இப்ப வேணுமாம் அப்பன் tw_confused:

கோழி மேய்த்தாலும் கோறணமேந்திலேதான் மேய்க்கவேணும் என்ற அறிவுரை வழங்கும் பழமொழி தமிழில்தானே உள்ளது முனிவரே!

கோழிப்பண்ணை வைத்து வேலை வழங்காதது அரசின் குற்றமே தவிர பட்டதாரிகளின் குற்றமல்ல. :(

11 minutes ago, Paanch said:

கோழி மேய்த்தாலும் கோறணமேந்திலேதான் மேய்க்கவேணும் என்ற அறிவுரை வழங்கும் பழமொழி தமிழில்தானே உள்ளது முனிவரே!

கோழிப்பண்ணை வைத்து வேலை வழங்காதது அரசின் குற்றமே தவிர பட்டதாரிகளின் குற்றமல்ல. :(

உங்களுக்கு எனக்கு யார் வேலை தேடித் தந்தார்கள்
தாமாகவே வேலை தேட திராணியற்றவர்கள் 
பட்டதாரிகள் என்று சொல்வது வெறும் பிதற்றல்.

12 minutes ago, போல் said:

இவர்கள் மட்டுமல்ல அனைத்து பகுதிகளிலும் அரச வேலை கேட்டு பிச்சைகாரப் போராட்டம் நடத்தும் பட்டதாரிகள் அனைவரும் தாங்கள் வெறும் காகிதப் பட்டதாரிகள் என்பதையும், சொந்த முயற்சியற்ற சோம்பேறிகள் என்பதையும், எந்தவொரு வேலைக்கும் தேவையான தகுதியை இன்னமும் பெறவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்தி வருகின்றனர்.

:91_thumbsup:

2 hours ago, Maruthankerny said:

4-5 வருடம் கம்பஸில் போய் இருந்துவிட்டு .......

நான் படிச்சனான் .... நான் படிச்சனான் 
என்று எவன் சொல்லுறானோ அவன் உருப்படதே இல்லை.

அங்கு சொல்லிக்கொடுத்தவற்றை மூலாதாரமாக்கி 
எவன் உலகை படிக்கிறானோ அவனுக்கு தோல்வியே இல்லை.

:91_thumbsup:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு எனக்கு யார் வேலை தேடித் தந்தார்கள்
தாமாகவே வேலை தேட திராணியற்றவர்கள் 
பட்டதாரிகள் என்று சொல்வது வெறும் பிதற்றல்.

:91_thumbsup:

:91_thumbsup:

 எந்த முயற்சியும் இல்லை. போரட வந்த இடத்திலும் சமையல் சாப்பாடு...

இவயளுக்கு, அரசு அல்லது முதலாளி ஒருவர் வந்து படுக்கையில தட்டி எழுப்பி, வாருங்க வேலைக்கு...கூப்பிடவேணும்... படிப்புக்கேத்த வேலை தருவினம்... என்று எதிர்பார்கின்றனர்.

Edited by Nathamuni

2 minutes ago, Nathamuni said:

 எந்த முயற்சியும் இல்லை. போரட வந்த இடத்திலும் சமையல் சாப்பாடு...

இவயளுக்கு, அரசு அல்லத முதலாளி ஒருவர் வந்து படுக்கையில தட்டி எழுப்பி, வாருங்க வேலைக்கு...கூப்பிடவேணும்... படிப்புக்கேத்த வேலை தருவினம்... என்று எதிர்பார்கின்றனர்.

:91_thumbsup::91_thumbsup:

உங்கை குந்தி இருக்கிற நேரத்துக்கு நாலு அப்பிளிகேஷனை அனுப்பி இருந்தாலாவது பிரயோசனம் கிடைத்திருக்கும்.
சொன்னா விசரன் என்று அடிப்பாங்க பிரதர் 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.