Jump to content

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரியைக்கொளுத்திய தமிழ்சிறி அவர்களுக்கு நன்றி.
எல்லா இனங்களிலும் எல்லாக்குணவியல்புகளும் உள்ளவைதான். ஆனால் யாரையும் மதியாத குணம் அதிகமென்றால், இங்கு வாழும் வெளிநாட்டவரில் துருக்கியரே முதலிடம் பிடிப்பர். அது  இஸ்லாமிய மதத்தைக் கடைப்பிடிப்பதலோ தெரியவில்லை. அதற்காக மற்றவர்கள் எல்லாம் சுத்தமென்றல்ல. எதிர்காலத்தில் யேர்மனியை துருக்கியரே ஆண்டாலும் அதிசயிக்கமுடியாது. சிறிய வர்தகங்கள் முதல் சிறிய கட்டுமானப்பணிகளென பொருண்மிய வளர்ச்சியிலும் அவர்கள் வளர்முகமே. விழாக்களுக்கான மண்டபங்கள் கூட அவர்களிடம் உள்ளது. இனத்துவ அடிப்படையில் ஒற்றுமையானவர்கள். எங்களைப் போல ஏறியதும் ஏணியை உதைப்பவர்களல்ல. ஏறிய ஏணியைவைத்துப் பலரை ஏற்றிவிடுவார்கள்.   
 

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கிற பக்கம் முழுக்க துருக்கிக்காரன்கள் தான்....அவங்கட கடைகளில் விக்கிற பாண் ஓரளவுக்கு இலங்கையில் பாண் சாப்பிட்ட மாதிரித் தான் இருக்கும்...ஊரில் லூசாக விக்கிற எங்கட ஊர்த் தேயிலையைத் தான் பாவிப்பார்கள்.இரவிரவாய் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்...நட்ஸ்சும் நல்லாய் சாப்பிடுவார்கள்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இப்போது இருக்கும் நாடுகளின் எல்லை கோடுகள் 
ஆங்கிலேயரும் ... பிரெஞ்சு  ... காரர்களும் கணிசமான ரோமியர்( இத்தாலி)ரும் 
தமது ஆக்கிரமிப்பு வேலைகளை கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாது 
சுமூகமாக பார்ததுக்கொள்ள வரையபட்டவை.

சிரியா இந்த பிராந்தியத்திலேயே மிக பழமை வாய்ந்த ஒரு முக்கிய நாடு 
பல காலமாக பாரிய போர்களை சந்தித்து அவற்றை வென்ற நாடும் கூட 

அதுபோல குர்திஷ் இன மக்களும் மிக பழமையான நாகரீம் வளர்ந்த மக்கள் 
இவர்களும் தமிழர்கள்போல் தமக்குள் அடிபட்டு தமது பாரம் பரியங்களை 
அழித்து விட்ட்டவர்கள்.

இந்த பிராந்திய வரலாறுகள் படித்தால் இப்போதைய பல 
பிரச்சனைகளை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் 

ஈரானின் வரலாறுகள் படிக்கும்போது நிறைய தமிழ் பெயர்களை மாறி மாறி காணலாம் 
கிழக்கு ஆசிய நாடுகள்போல் கம்போடியா தாய்லாந்து நாடுகள் கடந்த வரலாறு பார்த்தால் 
நிறைய தமிழின் ஆதிக்கம் இருக்கும் ... இவர்களின் முக்கிய கடவுள் சிவன் இப்போதும் அங்கு 
சிவன்தான் அவர்கள் பெயரை மாற்றி அழைக்கிறார்கள். 

ஈரானை ஆண்ட இறுதி வம்சம்... "பல்லவி வம்சம்" 
1979இல் நடந்த ஈரானிய புரடசியின் போதே இது தூக்கி ஏறியபட்டது.  

Pahlavi dynasty

The Pahlavi dynasty (Persian: دودمان پهلوی‎‎) was the ruling house of Iran from 1925 until 1979, when the monarchy was overthrown and abolished as a result of the Iranian Revolution. The dynasty was founded by Reza Shah Pahlavi in 1925, a former Brigadier-General of the Persian Cossack Brigade, whose reign lasted until 1941 when he was forced to abdicate by the Allies after the Anglo-Soviet invasion. He was succeeded by his son, Mohammad Reza Shah Pahlavi, the last Shah of Iran.

The Pahlavis came to power after Ahmad Shah Qajar, the last ruler of the Qajar dynasty, proved unable to stop British and Soviet encroachment on Iranian sovereignty, had his position extremely weakened by a military coup, and was removed from power by the parliament while in France. The National Assembly, known as the Majlis, convening as a Constituent Assembly on 12 December 1925, deposed the young Ahmad Shah Qajar, and declared Reza Shah the new monarch of the Imperial State of Persia. In 1935, Reza Shah asked foreign delegates to use the term Iran, the historical name of the country, used by its native people, in formal correspondence and the official name Imperial State of Iran (Persian: کشور شاهنشاهی ایران‎‎ Keshvar-e Shāhanshāhi-ye Irān) was adopted.

Faced with growing public discontent and popular rebellion throughout 1978, Mohammad Reza Shah Pahlavi went into exile with his family in January 1979, sparking a series of events that quickly led to the dissolution of the state on 11 February 1979, officially ending the 2,500-year-old tradition of monarchy in Iran.[2] At the death of Mohammad Reza Shah Pahlavi on 27 July 1980, his son Reza Pahlavi became the head of the Pahlavi royal family.

Shah_and_Farah.jpg

Mohammad_Pahlavi_Coronation.jpg

மொட்டாக்கு போடுறது ... மூடுறது ... பெண்ணடிமை 
எல்லாம் இப்போ 1970இன்  பின்புதான் ...
இந்த மூதேவிகளால் தோற்றுவிக்க பட்டிருக்கு 

இந்த பிராந்தியத்தில் வாழ்ந்த எல்லா சமூகமும் 
ஒரு துண்டால் தலையையும் காதையும் மூடியே வந்திருக்கிறார்கள் 
அது குளிரால் என்று நினைக்கிறேன். இஸ்லாம் ... கிறிஸ்தவர்கள் .. யூதர்கள் 
எல்லோரும் மூடிதான் இருந்து இருக்கிறார்கள் 
இந்த மூதேவிகள்தான் அதை சமயம் என்று சொல்லி பிரகாணப்படுத்தி உள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் எல்லாம் அந்த காலத்தில் பெருத்த அழகிகள் 
சில ராஜ்ஜியங்களையே கவுத்து இருக்கிறார்கள் ..
கஸல் என்ற கவிதையே அவர்களை பாடியதுதானே ? 

மருதங்கேணி... நீங்கள் தகவல்களை தேடிய விதம், நன்றாக உள்ளது.
நாங்கள், அனுபவப்  பட்டதை விட....  உங்களது பதில்கள்.... உண்மையில், மெய் சிலிர்க்க வைக்கின்றது. :101_point_up: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வல்வை சகாறா said:

இலையான் கில்லர் நன்றாக இருக்கிறது தொடருங்கள்....பாம்புப்படைத்தலைவியாக இருந்து வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்:cool:

எம்... பாம்பு  கட்சியின்  தலைவியே.....  வல்வை..... 
எம்மை,...  தவிக்க, விட்டு விட்டு... எங்கை  போநீர்கள்.
தலைவியை இழந்து... நாம் த(விக்கிறோம்... )
மீண்டும்... எழுந்து, வாருங்கள்  தலைவியே.... 

சத்தியமாக.... தமிழக அரசியலுக்கு, இதில் தொடர்பில்லை. :grin:

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

எனக்கு 6 ஈரோவுக்கு தலைமயிரும் வெட்டி மீசையையும் அழகுபடுத்தி தேத்தண்ணியும் தருவார்கள் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்.:cool:

 

17 hours ago, தமிழ் சிறி said:

ஆக... தலைமயிர் வெட்ட மட்டும், துருக்கி சலூனுக்கு போவேன். அங்கு  6 ஐரோவுக்கு  தலைமயிரை வெட்டி விடுவார்கள். 
ஜேர்மன் சலூனுக்கு போனால், 20  ஐரோ கொடுக்க வேண்டும். 

நான் கடந்தவருடம் ஒரு அலுவலக அலுவலாக சுவிஸ் வந்த பொது, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சலூன் ஏதாவது நான் நிக்கும் இடத்துக்கு கிட்டாவாக இருக்குதா எண்டு கேட்டேன். நான் நிக்கும் இடத்துக்கு அருகில் ஒரு தமிழ் பொடியள் நடத்துற சலூன் இருக்குது எண்டு கூறி போவதற்கான பாதையையும் தெளிவாக கூறினார். நானும் ஒருவாறாக அந்த சலூனுக்கு போய் சேவ் எடுத்த பின்பு (முடி வெட்டவில்லை) எவ்வளவு காசு எண்டு கேட்ட  பொது 7 சுவிஸ் பிராங்க் எண்டார். எனக்கும் அங்கயுள்ள விலை விபரம் தெரியாததாலும், நான் வசிக்கும் நாட்டிலும் கிட்டத் தட்ட இதே அளவு காசுதான்  சேவ் எடுக்க கொடுப்பதாலும், 7 பிராங்க்ஐ கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

திரியைக்கொளுத்திய தமிழ்சிறி அவர்களுக்கு நன்றி.
எல்லா இனங்களிலும் எல்லாக்குணவியல்புகளும் உள்ளவைதான். ஆனால் யாரையும் மதியாத குணம் அதிகமென்றால், இங்கு வாழும் வெளிநாட்டவரில் துருக்கியரே முதலிடம் பிடிப்பர். அது  இஸ்லாமிய மதத்தைக் கடைப்பிடிப்பதலோ தெரியவில்லை. அதற்காக மற்றவர்கள் எல்லாம் சுத்தமென்றல்ல. எதிர்காலத்தில் யேர்மனியை துருக்கியரே ஆண்டாலும் அதிசயிக்கமுடியாது. சிறிய வர்தகங்கள் முதல் சிறிய கட்டுமானப்பணிகளென பொருண்மிய வளர்ச்சியிலும் அவர்கள் வளர்முகமே. விழாக்களுக்கான மண்டபங்கள் கூட அவர்களிடம் உள்ளது. இனத்துவ அடிப்படையில் ஒற்றுமையானவர்கள். எங்களைப் போல ஏறியதும் ஏணியை உதைப்பவர்களல்ல. ஏறிய ஏணியைவைத்துப் பலரை ஏற்றிவிடுவார்கள்.   

நொச்சி.... 
"வயித்துக் குத்தும், தலை இடியும்......  அவனவனுக்கு, வந்தால்தான் தெரியும்"  என்று சொல்வார்கள்.
ஜேர்மனியில்... துருக்கிகளுடன்  வேலை செய்வதற்கும், பழகுபவர்களுக்கும் தனித் திறமை வேண்டும்.
கொஞ்சம் .... அச மந்தமாக இருந்தாலும், "காதில் பூ" வைத்து விட்டுப் போய் விடுவார்கள்.  

"யாதும் ஊரே... யாவரும் கேளிர்" என்ற படியால்... 
இன்று, சொந்த நாடும், இல்லாமல் தவிக்கும்.....   இனம், தமிழ் இனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இருக்கிற பக்கம் முழுக்க துருக்கிக்காரன்கள் தான்....அவங்கட கடைகளில் விக்கிற பாண் ஓரளவுக்கு இலங்கையில் பாண் சாப்பிட்ட மாதிரித் தான் இருக்கும்...ஊரில் லூசாக விக்கிற எங்கட ஊர்த் தேயிலையைத் தான் பாவிப்பார்கள்.இரவிரவாய் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்...நட்ஸ்சும் நல்லாய் சாப்பிடுவார்கள்:unsure:

ரதி...
நான்.... எக்கச் சக்கமாக...  சொன்னால், நீங்கள் கோவிப்பீர்கள், என்பதால்...  
உங்களுக்கு,  குமாரசாமி  அண்ணை வந்து பதில், சொல்வது தான் நல்லது. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für feuer zeug gif

உங்கை... இன்னும், மலிவு போலை இருக்கு அண்ணே.....
இங்கை.. தேத்தண்ணி தரமாட்டார்கள், எனக்கு மீசை இல்லாத படியால் அதில் கை வைக்க வேண்டிய தேவை இல்லை. கண் இமையை அழகாக வெட்டி, காதில் முளைத்திருக்கும் மயிரை நெருப்புக் காட்டி எரித்து.... தலை, காது  எல்லாம்  30 செக்கன் மஸாஜ்  பண்ணி விடுவார்கள். tw_smiley:

என்னை..  பாகிஸ்தான்காரனோ என்று கேட்டார்கள். நானும் ஓம் என்று சொல்லி விட....
அவர்கள்... "சலாம் அலைக்கும்"  என்று  சொல்ல, பதிலுக்கு நானும்... "அலைக்கும்  சலாம்" என்று சொல்லி அலுவல் நடந்து கொண்டு இருக்குது. :grin:

சாம்பிராரணி குச்சி மாதிரி ஒண்டிலை நெருப்பை கொழுத்திப்போட்டு காதாவடியிலை வைச்சு அஸ்கு புஸ்கு எண்டு கையாலை விசுக்கி விடுவாங்கள் அவ்வளவு மயிரும் கருகிப்போயிடும்....tw_blush:

சிறித்தம்பி நீங்கள் அங்கை பாகிஸ்தான்....நான் இஞ்சை அசார்.:grin:
மண்ணாங்கட்டி என்ன பாஸ்போட்டையே வாங்கி பாக்கப்போறாங்கள்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சாம்பிராரணி குச்சி மாதிரி ஒண்டிலை நெருப்பை கொழுத்திப்போட்டு காதாவடியிலை வைச்சு அஸ்கு புஸ்கு எண்டு கையாலை விசுக்கி விடுவாங்கள் அவ்வளவு மயிரும் கருகிப்போயிடும்....tw_blush:

சிறித்தம்பி நீங்கள் அங்கை பாகிஸ்தான்....நான் இஞ்சை அசார்.:grin:
மண்ணாங்கட்டி என்ன பாஸ்போட்டையே வாங்கி பாக்கப்போறாங்கள்?:cool:

சிரிச்சு.... விக்கல்...  வந்துட்டுது, அண்ணே.
 
துருக்கியை... பற்றி, கன  பகிடி கிடக்குது. 
"மெயின்" பகிடிகள் இன்னும்... ரொ ம்ப..... இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சாம்பிராரணி குச்சி மாதிரி ஒண்டிலை நெருப்பை கொழுத்திப்போட்டு காதாவடியிலை வைச்சு அஸ்கு புஸ்கு எண்டு கையாலை விசுக்கி விடுவாங்கள் அவ்வளவு மயிரும் கருகிப்போயிடும்....tw_blush:

சிறித்தம்பி நீங்கள் அங்கை பாகிஸ்தான்....நான் இஞ்சை அசார்.:grin:
மண்ணாங்கட்டி என்ன பாஸ்போட்டையே வாங்கி பாக்கப்போறாங்கள்?:cool:

இதைத்தான் அறிவுப் பரிமாற்றம் எண்டு சொல்லுறது!

நீங்கள் சொல்லுற அந்தச் சாம்பிராணிக் குச்சியை மூக்குக்குள்ளையும் பாவிக்கலாமோ!

பெரிய பிரச்சனையாய்க் கிடக்குது!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

முனிவர் எப்படி இப்படி .... உங்களின் அறிவுக் கூர்மையைப் பார்க்க புல்லரிக்குது....! tw_blush:

எல்லாம் ஒரு மனக்கணக்குதான் அண்ணை அப்போ ஆள் அப்படித்தானா??  என்ற முருகா  tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

இதைத்தான் அறிவுப் பரிமாற்றம் எண்டு சொல்லுறது!

நீங்கள் சொல்லுற அந்தச் சாம்பிராணிக் குச்சியை மூக்குக்குள்ளையும் பாவிக்கலாமோ!

பெரிய பிரச்சனையாய்க் கிடக்குது!:unsure:

Bildergebnis für nasenhaartrimmer testsieger

உதுக்கெண்டு மிசின் விக்கிது..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für nasenhaartrimmer testsieger

உதுக்கெண்டு மிசின் விக்கிது..:grin:

உது லைட்டர்  போல  மூக்கில் வைத்தவுடன் சுடர் விட்டு எரியுமா.... எரிஞ்ச்சு  கருகிறதைத்தான் புங்கை விரும்புகிறார் என நினைக்கிறேன். முடி.......!  :unsure:  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.3.2017 at 8:14 AM, புங்கையூரன் said:

இதைத்தான் அறிவுப் பரிமாற்றம் எண்டு சொல்லுறது!

நீங்கள் சொல்லுற அந்தச் சாம்பிராணிக் குச்சியை மூக்குக்குள்ளையும் பாவிக்கலாமோ!

பெரிய பிரச்சனையாய்க் கிடக்குது!:unsure:

 

18 hours ago, suvy said:

உது லைட்டர்  போல  மூக்கில் வைத்தவுடன் சுடர் விட்டு எரியுமா.... எரிஞ்ச்சு  கருகிறதைத்தான் புங்கை விரும்புகிறார் என நினைக்கிறேன். முடி.......!  :unsure:  tw_blush: 

47359-081-0_kl.jpg    Bildergebnis für pincette

துருக்கிக்  காரனை கொண்டு,  மூக்குக்குள்.... நெருப்புக்  காட்டி விளையாடும் போது... 
பின் விளைவுகளுக்கு, அவர்கள் பொறுப்பு ஏற்க மாட் டார்கள்.  :grin:
அத்துடன்... மூக்குக்குள் உள்ள, எல்லா முடிகளையும் அகற்றுவது  சரியல்ல.
வெளியே தெரியும் முடியை மட்டும்... சிறிய கத்தரிக் கோலால் அல்லது, 
மேலே உள்ள tweezers எனப்படும் இடுக்கியால்.... புடுங்கி  விடலாம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10.3.2017 at 10:42 PM, Surveyor said:

நான் கடந்தவருடம் ஒரு அலுவலக அலுவலாக சுவிஸ் வந்த பொது, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சலூன் ஏதாவது நான் நிக்கும் இடத்துக்கு கிட்டாவாக இருக்குதா எண்டு கேட்டேன். நான் நிக்கும் இடத்துக்கு அருகில் ஒரு தமிழ் பொடியள் நடத்துற சலூன் இருக்குது எண்டு கூறி போவதற்கான பாதையையும் தெளிவாக கூறினார். நானும் ஒருவாறாக அந்த சலூனுக்கு போய் சேவ் எடுத்த பின்பு (முடி வெட்டவில்லை) எவ்வளவு காசு எண்டு கேட்ட  பொது 7 சுவிஸ் பிராங்க் எண்டார். எனக்கும் அங்கயுள்ள விலை விபரம் தெரியாததாலும், நான் வசிக்கும் நாட்டிலும் கிட்டத் தட்ட இதே அளவு காசுதான்  சேவ் எடுக்க கொடுப்பதாலும், 7 பிராங்க்ஐ கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

சேர்வயர்  நீங்கள்...  வித்தியாசமான ஆளாக  இருக்கின்றீர்கள். :grin:
வீட்டில்...  மூன்று நிமிடத்தில் சேவ் எடுத்து முடித்து விடக்  கூடிய நிலையில்,
வேலை அலுவலாக வந்த.... தெரியாத இடத்தில்,  
சலூனுக்கு போய் சேவ் எடுத்ததை நினைக்க, ஆச்சரியமாக உள்ளது.
இது வரை.... நான் சலூனிலில், ஒரு முறை கூட சேவ் எடுத்ததில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  பல  துருக்கியர்...   படிக்க விரும்பும், அல்லது படிக்க ஆர்வம் உள்ள...   தமது பிள்ளைகளைக்  கூட தொடர்ந்து படிக்க அனுமதிக்காமல், 18 வயது வந்தவுடன்.....  தான் வேலை செய்யும் செய்யும் இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுவார்கள். அவர்கள் உழைத்து... அதில் பெரும் பகுதியை, தந்தைக்கு கொடுக்க வேண்டும். (வளர்த்த கடன்). தகப்பனில் மிகுந்த  பயம் உள்ளதால், மறு  பேச்சு பேசாமல் பணத்தை தகொடுத்து விடுவார்கள்.

ஒரு துருக்கிய இளைஞன்   சில வருடங்களாக பணத்தை தகப்பனிடம் கொடுத்த பின்பு அவனுக்கு திருமணமாகி   வேறு வீட்டில்  வசித்த போதும், அவனின் தந்தை பணத்தை எதிர்பார்த்தார்.  அந்த இளைஞனின்... மனைவி   பணத்தை இனி கொடுக்க வேண்டாம். எமக்கு தேவை என்று கூறியதில் நியாயம் இருப்பதை உணர்ந்து... தந்தைக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். 

இதனை ஏற்றுக்  கொள்ளாத தந்தை... தனது மகன் வேலை முடிந்து களைப்பில் வெளியே வரும் போது, வேறு நான்கைந்து துருக்கி ஆட்களை வைத்து, தனது மகனையே.... அடித்து துவைத்து எடுத்து விட்ட மிகவும் பரிதாபமான சம்பவத்தை  பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். 

இவர்களில்.... திருமணம் செய்த,  பல பிள்ளைகளுக்கு தந்தையாக, 50 வயதுக்கு மேற்பட்டு இருந்தாலும்....  யாராவது ஒரு பெண்ணை கண்டால், எந்த வயதென்றாலும் காரியமில்லை... அவரைப் பார்த்து, ரசித்து... ஜொள்ளு விட்டுக்  கொண்டு நிற்பார்கள். வீதியால்... ஒரு பெண் இவர்களை  கடந்து சென்றால் கூட... அந்தப் பெண் மறையும் வரை, திரும்பி நின்று பார்த்துக் கொண்டே நின்றாள்... அந்த மனிதநை 100 % துருக்கிக் காரன் என்று சொல்லி விடக்  கூடிய அளவிற்கு... இவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். முன்பு... புகையிரத நிலையங்கள்,  பல் பொருள் அங்காடிகளில்.. கையில் ஒரு மாலையையும்  வைத்து  உருட்டிக் கொண்டு நிற்கும் பல துருக்கிகளை  அதிகம் காணலாம். இப்போது... அப்படியானவர்களை காண்பதில்லை. வேறு நகரங்களில், இப்படியானவர்கள் இன்னும்  இருக்கின்றார்களோ தெரியவில்லை. tw_glasses:

என்னுடன் வேலை செய்யும், இந்த துருக்கிகளின் செயலைப்  பார்க்க பத்திக் கொண்டு வரும். 
இத்தாலியை பூர்வீகமாகவும், ஜேர்மனியை   பிறப்பிடமாகவும் கொண்ட ஒரு பெண்ணை... துருக்கி பெடியன்  ஒருவன் காதலித்துக்  கொண்டு தனி வீட்டில் வசிக்கின்றார்கள்.  அந்தப் பெடியனின் 56 வயது  தகப்பனும், எமது இடத்தில் தான் வேலை செய்கிறார். தனது மகன் இல்லாத நேரம், இந்த தகப்பன்... எனது மருமகளே என்று,  அவளை தூக்கி, கொஞ்சி சில்மிஷம் செய்வதைப் பார்க்க மிகவும் அருவருப்பாக இருக்கும். இவ்வளவிற்கும்.... அவர் மிகுந்த மத  நம்பிக்கை உடையவர்.  அடிக்கடி குரானில்  என்ன சொல்லியிருக்கு என்று, மற்றவர்களுக்கு இலவச வகுப்பு எடுக்கிற ஆள்.

இன்னும்... எழுதவா, இதோடை  நிறுத்தவா..... :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

சேர்வயர்  நீங்கள்...  வித்தியாசமான ஆளாக  இருக்கின்றீர்கள். :grin:
வீட்டில்...  மூன்று நிமிடத்தில் சேவ் எடுத்து முடித்து விடக்  கூடிய நிலையில்,
வேலை அலுவலாக வந்த.... தெரியாத இடத்தில்,  
சலூனுக்கு போய் சேவ் எடுத்ததை நினைக்க, ஆச்சரியமாக உள்ளது.
இது வரை.... நான் சலூனிலில், ஒரு முறை கூட சேவ் எடுத்ததில்லை. 

நான் வழமையாக 2 கிழமைக்கு ஒருக்கா சலூனிலை போய் சேவ் எடுக்கிறானான் (கிளீன்  சேவ் இல்லை). கீழ உள்ள படத்தில் உள்ளதுபோல கட்டிங். வீடில்லை இப்படி கட் பண்றது கஷ்டம். வீட்டிலை ட்ரிம்மிங் மட்டும்தான்.

Image result for french beard style for men

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் சிறியர். இந்த விடயத்தில் பிரெஞ்சக்காரர் , அடையாரும் கூட  குறைவில்ல. அழகிய பாகங்களை நேராகவே பார்த்துக் கொண்டு கதைப்பார்கள். எமக்கெல்லாம் அவ்வளவு தைரியம் கிடையாது. "யான் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்"......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

முன்பு... புகையிரத நிலையங்கள்,  பல் பொருள் அங்காடிகளில்.. கையில் ஒரு மாலையையும்  வைத்து  உருட்டிக் கொண்டு நிற்கும் பல துருக்கிகளை  அதிகம் காணலாம். இப்போது... அப்படியானவர்களை காண்பதில்லை. வேறு நகரங்களில், இப்படியானவர்கள் இன்னும்  இருக்கின்றார்களோ தெரியவில்லை. tw_glasses:

மாலை உருட்டியவர்களில் பலர் அல்லாவிடம் சென்றுவிட்டார்கள். சிலர்  இஞ்சத்தையான் குளிருக்கு வாற முதுகுவலி தாங்கேலாமல் துருக்கிக்கே சென்று விட்டார்கள். tw_lol:

9 hours ago, தமிழ் சிறி said:

இன்னும்... எழுதவா, இதோடை  நிறுத்தவா..... :grin:

இன்னும் முக்கியமான விசயத்துக்கே வரேல்லை போலை கிடக்கு.....அதுக்கிடையிலை நிக்கட்டோ போகட்டோ எண்டால் என்னமாதிரி?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையிலே விடக்கூடாது தொடருங்கள் தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.3.2017 at 4:18 PM, குமாரசாமி said:

மாலை உருட்டியவர்களில் பலர் அல்லாவிடம் சென்றுவிட்டார்கள். சிலர்  இஞ்சத்தையான் குளிருக்கு வாற முதுகுவலி தாங்கேலாமல் துருக்கிக்கே சென்று விட்டார்கள். tw_lol:

-------

இன்னும் முக்கியமான விசயத்துக்கே வரேல்லை போலை கிடக்கு.....அதுக்கிடையிலை நிக்கட்டோ போகட்டோ எண்டால் என்னமாதிரி?:grin:

குமாரசாமி அண்ணே....  துருக்கியர் 90 வீதமான ஆட்களுக்கு, நாரிப் பிடிப்பு இருப்பது உண்மை.
ஆனால்  இவர்களுக்கு, வரும் முதுகு வலி குளிரால் வாற  முதுகு வலி மாதிரி தெரியவில்லை.
அளவுக்கு அதிகமாக.. உடலுறவில் ஈடுபட்டாலும், நாரிப் பிடிப்பு வரும்.:grin:
------
என்ன முக்கியமான விசயத்தை  குறிப்பிடுகின்றீர்கள் என்று எனது நினைவுக்கு வரவில்லை.  
குறிப்பிட்டு சொன்னா ல்....  "பிரித்து, மேய்ந்து... விடலாம்."  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für moschee in pforzheim

Pforzheim மசூதி ஜேர்மனி.

Bildergebnis für hamm amman kovil   Bildergebnis für hamm amman kovil

Hamm அம்மன் கோவில் ஜேர்மனி.

வெள்ளிக்கிழமைகளில்  ஒரு முறையாவது போய் தொழுகை நடத்தும் வழக்கம் உள்ளவர்கள்.  இவர்களது மசூதிகளில்... சிறுவர்களிலிருந்து, வயது முதிர்ந்த பெரியவர்கள், பெண்கள்... என்று  அவர்களுக்குள் ஒரு அமைப்பு உள்ளூர் துருக்கிகளை இணைத்து ஒரு அமைப்பு இயங்கிக் கொண்டு இருக்கும்.  அதில் ஜேர்மன்  சட்டம் சம்பந்தமான ஆலோசனை வழங்கவும், சட் டம் படித்த துருக்கியர் உதவி செய்வார்கள்.   அது பாராட்டக் கூடிய விடயம். எமது கோவில்களில் வைத்து, எம் மக்களை இணைக்க  இப்படி இல்லையே... என்று ஏங்குவது உண்டு. 

ஜேர்மனியில்  இவர்களின்  மசூதியில், வெளியே  கோபுரம் தெரியும் படியாக... அமைந்த வழிபாட்டு இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இவர்களால்... எல்லா நகரங்களிலும் பெரிய மசூதிகள் அமைக்க வசதிகள் இருந்தும்.... அந்தந்த நகராட்சி சபைகள்  அனுமதி கொடுப்பதில்லை. ஜேர்மன்  உள்ளூர்  மக்களின் எதிர்ப்பும் ஒரு காரணம். சைவக்  கோவில்களுக்கும் அதே நடை முறை தான். பல நகரங்களில்.... சமய அடையாளங்கள் தெரியாத மாதிரி, மண்டபங்களுக்கு உள்ளே  தத்தமது வழிபாடுகளை  நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

############## ############## ################

தினமும் ஐந்து முறை தொழ  வேண்டும் என்று இவர்களின் சமயத்தில்  குறிப்பிடப் பட்டிருப்பதால்,  அந்த குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், செய்யும் வேலையை விட்டு விட்டு.... கால், காது, முகம் எல்லாம் 10 நிமிடம்  கழுவி, 20 நிமிடம் குனிந்து... மெக்கா எந்தத் திசையில் உள்ளதோ... அந்தத் திசையை பார்த்து தொழுவார்கள். இவ்வளவும்... வேலை செய்து கொண்டு இருக்கும் இடத்தில் நடக்கும். கும்பிடும் போது  சப்பாத்து பின் பக்கம் இருக்கும். அவர்கள் கும்பிடும் திசையில் தெரியாத்  தனமாக ஆரும் முன் பக்கம், குறுக்கே நடந்து  போய் விட்டால் சகுனம் பிழைச்ச மாதிரி ஒரு வித கலக்கத்துக்கு உள்ளாகி விடுவார்கள்.  இதனை அறிந்த மற்றைய நாட்டவர்களுக்கு,  இது  "தமாசாக"  இருப்பதால்...tw_glasses: வேண்டும் என்றே குறுக்கே போய் வருபவர்களும் உண்டு. 

ஒரு துருக்கி இப்படி சப்பாத்தை,  பின் பக்கம் வைத்து விட்டு கும்பிடும் போது...  வேறு  மதத்தை சேர்ந்த ஒருவர், அந்தத் துருக்கியின் சப்பாத்தில், ஒன்றை... ஒழித்து வைத்து விட்டார். துருக்கி கும்பிட்டு முடிந்து திரும்பிப் பார்த்தால்... சப்பாத்து ஒன்றை காணவில்லை. பின்பு...  சப்பாத்தை  ஒழித்து வைத்தவரும், துருக்கியுடன் சேர்ந்து தேடி... ஒரு மணித்தியாலத்தின் பின் சப்பாத்தை  கண்டு பிடித்தார்கள். சப்பாத்தை... ஒழித்தவருக்கு தானே... எங்கை இருக்கு என்று தெரியும் :grin:. அதன் பின்... அவர் சப்பாத்தை  பின் பக்கம் வைத்து விட்டு கும்பிடாமல் தனக்கு முன்னே வைத்து கும்பிடத் தொடங்கி விட்டார்.  :)

மீரா, சுவி, குமாரசாமி அண்ணை, ரதி ஆகியோரின்  வேண்டுதலுக்கு இணங்க,  இன்னும் வரும்.....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி சாப்பாடுகள் சுவையானவையே தமிழிசிறி. kofta / kabab எல்லாம் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/03/2017 at 10:44 PM, தமிழ் சிறி said:

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

நான்  வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல...  துருக்கி  ஆட்களின்,  
30 ஆண்டு கால... நினைவு  மீட்டல்.  
------

ஒவ்வொரு துருக்கியரும்....  ஜனவரி முதலாம் திகதி  பிறந்திருப்பார்.

துருக்கியர்  மட்டுமல்ல

பிறந்ததிகதியை  சரியாக சொல்லமுடியாத

அனைவரும்  இவ்வாறு தான்  பதிகின்றனர்

நானறிந்தவரையில்   ஆபிரிக்கர்களே அதிகமாக இவ்வாறு பதிகின்றனர்

நான் கடையில்  பணம் அனுப்புதல்  செய்கின்ற  படியால்  வயதானவர்களுக்கு

பிறந்த திகதியே  கேட்க தேவையிருக்காது

01-01- தான்

அல்லது 00-00-

தற்பொழுது கணணி இதை ஏற்க மறுப்பதால் 01-01...

 

தொடருங்கள்சிறி.

தொடர்ந்துபார்த்து வந்தாலும் எழுத நேரம்   கிடைப்பதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.