Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  

ஈரநிலா

1182828085.jpg

உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது.

கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி.  ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது.

எப்படி ஆயிற்று?

சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்…..

எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு,

நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது.

வீடு தேடி வந்தவனை………

வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............,

என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற…..,

சிவா….

அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது.

“வாங்க வாங்க உள்ளே வாங்க”

என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது.

எத்தனை ஆண்டுகள்……

கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது.

 “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள்.

இதுதான் காதலா?

வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது….

எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?.......

அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது.

இருப்பினும்

நேற்றைய காதல்......

உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன.

“உனக்கு நான்

எனக்கு நீ ”

என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு.

விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

பிரிக்கப்பட்ட காதல்,

திணிக்கப்பட்ட வாழ்வு

பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள்,

வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள்,

விடுபடமுடியாத மனச்சுமைகள்……

சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது…

எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை.

அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள்

ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.

Edited by நியானி
எழுத்துரு மாற்ற

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை....இது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ............................ எனக்கு ஒழுங்காக பாமினியில் தெரிகிறது .

ஈக்கலப்பையில் உழாததால் இந்தத் தண்டனையா???????

  • கருத்துக்கள உறவுகள்

 சகாரா ஈர நிலாவை  ..தமிழில் தரவும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் மட்டூஸ் யாராவது மாத்தி விடுங்கப்பா..... மறுபடியும்  கீபோர்ட்டில் குத்துப்படமுடியாது தட்டி கனநாளாப் போச்செல்லோ.

நன்றி நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு  ........

.... சோகத்தைச் சொல்லிய விதம் அருமை .பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா தொலைத்த ஒவ்வொரு வாழ்க்கையும் மறக்க முடியாதது.அதிலும் காதல்...............!

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியுற்ற காதல், மிகவும் சோகமானது.
கதைக்கு நன்றி,  வல்வை  சகாரா.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியடைந்த காதல் பூரணத்துவம் பெறுகின்றது, வெற்றி பெறாத காதல் அமரத்துவம் அடைகின்றது....!

மீனா சிவாவின் காதலும் அமரத்துவம் அடைந்து விட்டது.....!

நன்றி சகோதரி....!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் எனக்கும் நிறையக் காதல்கள் வந்து போயின!

அது காதல் தானா...என்று தீர்மானிப்பதற்கிடையேயே...அவை நீர்க்குமிழிகள் போல மறைந்தும் போயின!

ஆனால்...இரண்டு காதல்கள் மட்டும்....மரணிப்பதாக இல்லை!

ஒன்று....எல்லாவற்றையுமே ...எனக்காக விட்டுக் கொடுக்கத் தயாரானது!

மற்றது...எல்லாவற்றையுமே...என்னை விட்டுத்தரும் படி..கேட்டது!

முதலாவது கனிந்து வரும் வேளையில்...வானத்திலிருந்து சீறி வந்த அக்கினிக் குஞ்சொன்று...அந்த அழகிய புறாவை...எரித்து விட்டுக் கொக்கரித்தது!

இரண்டாவதைப் பற்றி...நான் கணக்கிலெடுக்கவே இல்லை!

ஒரு அழகிய காதல் மாளிகையொன்று .....தாஜ்மகாலாகிப் போன கதை ..அது!

காதலைத் தொலைத்த இரு காதலர்கள்..மீண்டும் சந்திக்கும் போது...அவர்கள் உடல்கள் மீதான கவர்ச்சி நிச்சயம் மறைந்திருக்கம் எனினும்...அந்தக் காதல் மட்டும்...மீண்டும் பிறப்பில்லாத ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுவது போல...என்றும் வாழ்த்து கொண்டேயிருக்கும்!

உங்கள் வரிகள்...உயிருள்ளவை என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்!

தொடர்ந்தும்  எம்முடன் இணைந்திருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு  ........

.... சோகத்தைச் சொல்லிய விதம் அருமை .பாராட்டுக்கள்

வரவுக்கும் வாசிப்பிற்கும் பதிவுக்கும் நன்றி நிலாமதியக்கா

12 hours ago, ஈழப்பிரியன் said:

சகாரா தொலைத்த ஒவ்வொரு வாழ்க்கையும் மறக்க முடியாதது.அதிலும் காதல்...............!

ஈழப்பிரியன் நீங்களும் நானும் முடியாதது என்று எண்ணுகிறோம்.... ஆனால் சிலர் எல்லாவற்றையும் மறந்துவிட்டதாக சொல்கிறார்கள் நடிக்கிறார்களா? அல்லது இறந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதையே சங்கடமாக கருதுகிறார்களா?........ சரி சரி என்போன்ற எழுத்துச் சிரங்கு பிடித்தவளிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி  அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தோல்வியுற்ற காதல், மிகவும் சோகமானது.
கதைக்கு நன்றி,  வல்வை  சகாரா.

தோல்வியுற்ற காதல் சோகமானது உண்மைதான் எனினும்........என்னவோ சொல்லத் தோன்றுகிறது. வார்த்தைகள் அகப்படவில்லை....ஹி ஹி :cool: நன்றி இலையான் கில்லர்.

4 hours ago, suvy said:

வெற்றியடைந்த காதல் பூரணத்துவம் பெறுகின்றது, வெற்றி பெறாத காதல் அமரத்துவம் அடைகின்றது....!

மீனா சிவாவின் காதலும் அமரத்துவம் அடைந்து விட்டது.....!

நன்றி சகோதரி....!

இதானே வேண்டாங்கிறது...... அமரத்துவம் என்றால் இறந்து போவதா?tw_bawling: 

நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் tw_angry:

ஏற்றுக் கொள்ளமாட்டேன் tw_anguished:

ஏற்றுக் கொள்ள மாட்டேன்tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

ஒரு காலத்தில் எனக்கும் நிறையக் காதல்கள் வந்து போயின!

அது காதல் தானா...என்று தீர்மானிப்பதற்கிடையேயே...அவை நீர்க்குமிழிகள் போல மறைந்தும் போயின!

ஆனால்...இரண்டு காதல்கள் மட்டும்....மரணிப்பதாக இல்லை!

ஒன்று....எல்லாவற்றையுமே ...எனக்காக விட்டுக் கொடுக்கத் தயாரானது!

மற்றது...எல்லாவற்றையுமே...என்னை விட்டுத்தரும் படி..கேட்டது!

முதலாவது கனிந்து வரும் வேளையில்...வானத்திலிருந்து சீறி வந்த அக்கினிக் குஞ்சொன்று...அந்த அழகிய புறாவை...எரித்து விட்டுக் கொக்கரித்தது!

இரண்டாவதைப் பற்றி...நான் கணக்கிலெடுக்கவே இல்லை!

ஒரு அழகிய காதல் மாளிகையொன்று .....தாஜ்மகாலாகிப் போன கதை ..அது!

காதலைத் தொலைத்த இரு காதலர்கள்..மீண்டும் சந்திக்கும் போது...அவர்கள் உடல்கள் மீதான கவர்ச்சி நிச்சயம் மறைந்திருக்கம் எனினும்...அந்தக் காதல் மட்டும்...மீண்டும் பிறப்பில்லாத ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுவது போல...என்றும் வாழ்த்து கொண்டேயிருக்கும்!

உங்கள் வரிகள்...உயிருள்ளவை என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்!

தொடர்ந்தும்  எம்முடன் இணைந்திருங்கள்!

ஆகா ரோமியோ நிறையக்காதல்களா? எப்படி?

இரண்டை மறக்க முடியவில்லையா? என்ன அநியாயமா இருக்கு.....

நன்றி ரோமியோ கலகலப்பான பதில் பதிவுக்கு.......உயிருள்ளர்களுக்கு நடுவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத்தான் கதையாக எழுதியிருக்கிறேன். நான் இங்கு எழுதியதை விட சற்று கூடுதலாக அறிந்துள்ளேன். கதைக்கு இவ்வளவு போதும் என்பதால் தவிர்த்துவிட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் நான் இக்கதை எழுதுவதை அறிவர். தம்மை விட அதிகமாக உணர்வு பூர்வமாக எழுதி இருப்பதாக முதுகில் தட்டிக் கொடுத்தார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எதோ எழுதவேண்டும் என்று வில்லங்கத்துக்கு எழுதியுள்ளீர்கள்.ஆனாலும் ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆனாலும் என்று தொக்கி நிற்கிறீர்கள்?

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீளவும் சுய ஆக்கத்திற்குள் வருகிறேனா..... கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல ஆர்வமும் இல்லை. இந்தக் கதை நான் முன்பு எழுதிய "ஆகாயத் தாமரை"யின் மறுபக்கமாக எழுதியுள்ளேன். இயல்பாக எழுதமுடியவில்லை என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் மெல்லத் திறந்தது கதவு....தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வல்வை சகாறா said:

தோல்வியுற்ற காதல் சோகமானது உண்மைதான் எனினும்........என்னவோ சொல்லத் தோன்றுகிறது. வார்த்தைகள் அகப்படவில்லை....ஹி ஹி :cool: நன்றி இலையான் கில்லர்.

இதானே வேண்டாங்கிறது...... அமரத்துவம் என்றால் இறந்து போவதா?tw_bawling: 

நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் tw_angry:

ஏற்றுக் கொள்ளமாட்டேன் tw_anguished:

ஏற்றுக் கொள்ள மாட்டேன்tw_angry:

நிஜம் கசக்கும்தான், ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்....!

இறந்து போதலுக்கும் அமரத்துவத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு சகோதரி. கோடிக்கணக்காணவர்கள் இறந்து போகின்றார்கள் அனால் சில ஆயிரங்களே அமரத்துவமாய் நிலைக்கின்றன. காதலும் அப்படியே தோல்வி என்னும் சாம்பலில் இரண்டு இலையுடன் துளிர்த்திருக்கும் பாகல் விதைபோல் அமரத்துவமாய் மனசுக்குள் வாழ்ந்திருக்கும். என்னிடமும் ஒரு பாகல் செடி இருப்பதால்தானோ என்னமோ....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகாறா அக்கா...நீண்ட நாட்களின் பின் கண்டது மகிழ்ச்சி

On ‎19‎/‎03‎/‎2017 at 8:06 AM, புங்கையூரன் said:

ஒரு காலத்தில் எனக்கும் நிறையக் காதல்கள் வந்து போயின!

அது காதல் தானா...என்று தீர்மானிப்பதற்கிடையேயே...அவை நீர்க்குமிழிகள் போல மறைந்தும் போயின!

ஆனால்...இரண்டு காதல்கள் மட்டும்....மரணிப்பதாக இல்லை!

ஒன்று....எல்லாவற்றையுமே ...எனக்காக விட்டுக் கொடுக்கத் தயாரானது!

மற்றது...எல்லாவற்றையுமே...என்னை விட்டுத்தரும் படி..கேட்டது!

முதலாவது கனிந்து வரும் வேளையில்...வானத்திலிருந்து சீறி வந்த அக்கினிக் குஞ்சொன்று...அந்த அழகிய புறாவை...எரித்து விட்டுக் கொக்கரித்தது!

இரண்டாவதைப் பற்றி...நான் கணக்கிலெடுக்கவே இல்லை!

ஒரு அழகிய காதல் மாளிகையொன்று .....தாஜ்மகாலாகிப் போன கதை ..அது!

காதலைத் தொலைத்த இரு காதலர்கள்..மீண்டும் சந்திக்கும் போது...அவர்கள் உடல்கள் மீதான கவர்ச்சி நிச்சயம் மறைந்திருக்கம் எனினும்...அந்தக் காதல் மட்டும்...மீண்டும் பிறப்பில்லாத ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுவது போல...என்றும் வாழ்த்து கொண்டேயிருக்கும்!

உங்கள் வரிகள்...உயிருள்ளவை என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்!

தொடர்ந்தும்  எம்முடன் இணைந்திருங்கள்!

ஒரு பெண் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் அவள் நல்ல பெண்..அந்தப் பெண்ணை எவ் வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நீங்களும் விரும்பி இருந்தால் மகிழ்ச்சி...பெண் மட்டுமே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து வர வேண்டும் என்பது நியாயமில்லைத் தானே<_<

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரை சந்திக்கவேண்டும் என்ற நினைப்பு மட்டும் எப்பவும் இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா தலைப்பு ஈரநிலா தானே? இங்க நிறைய நிலாக் காயுது .......

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கீழுள்ள பதிவுக்கு நான் எழுதிய இரண்டு பின்னூட்டங்கள் இங்கு பொருந்தும் என நினைக்கிறேன்.

போன பஸ்சுக்கு கைகாட்டும் நிலையில் இப்போது பெண்கள் இருக்கிறார்களா? மற்றும்படி Tinder, kik எண்டு சோடி இருக்கத்தக்கதாக தற்காலிக சோடியை தேடி உலகம் ஓடிட்டு இருக்கு

On ‎18‎/‎02‎/‎2015 at 1:16 PM, Thumpalayan said:

எனது முதல் காதலியே எனது மனைவியாகிவிட்டாள் அதனால் காதலினால் வந்த வலி இல்லை. ஆனால் அவளின் முன்னர் என்னுடன் பலவருட காலம் டியூசன் வந்த ஒருத்தியில் விருப்பம்/கவர்ச்சி (crush) இருந்தது. அவளின் பால் நார் ஈர்க்கப்பட்டது எனக்கு பதினோரு வயதாக இருந்தபோது. கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை ஆனால் அவளைப் பிடித்திருந்தது. நான் போகும் பல போட்டிகளுக்கு அவளும் வந்து போவாள், அவளின் நடை உடை பாவனை, குடும்பம் பெற்றோர் படிப்பு திறமைகள் அனைத்தும் என்னுடைய மீடிறனில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. வசதியான குடும்பம். பெற்றோர் இருவருமே உத்தியோகக் காரர். ஆனால் அவள் என்னிடமோ நான் அவளிடமோ கதைக்கவில்லை. நான் உயர்தரம் படிக்கும் போது என்னுடைய மனைவி எனது பதினெட்டாவது வயதில் அறிமுகமாகி விட்டாள். ஆச்சரியம் என்னவென்றால் பெண்களுக்கும் உருவம், நடை, உடை பாவனை, குடும்பம் என அநேக ஒற்றுமைகள் இருந்தது தான். அவுஸ் வந்தபின்னர் ஒருமுறை அவளுடன் அரைநிமிடம் பேசினேன் அம்மா வாறா என்று விட்டு வைத்துவிட்டாள். எனக்கும் காதலி இருந்த நிலையில் சும்மா இருப்பவளை ஏன் குளப்புவான் என்றுவிட்டு விட்டுவிட்டேன். எனது மனைவிக்கும் இவளைப்பற்றித் தெரியும். கனவுகளிலே வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

என்னதான் சுத்தியிருந்து சாப்பிட்டு தேநீர் குடித்து கிரிக்கெட் பாத்து A ஜோக்கடிக்கும் அதிஷ்டமுள்ள  குடும்பத்தில் நாங்கள் மூண்டு பெடியங்களும் பிறந்திருந்தாலும் காதல் என்று வரும்போது முதலில படிச்சு முடியடா, நானே கட்டிவைக்கிறேன் என்பது தான் அம்மாவின் கருத்தாக இருந்தது. அந்த வயதில் அதை சீரியஸாக அவர்கள் ஏனோ கதைக்க மறுத்து விட்டார்கள். நான் அசைய மறுத்ததால் எனது முதல் காதலியே எனது மனிவியாகும் பாக்கியம் கிடைத்தது. எனது முதல் கவர்ச்சி காதலியாகி, மனைவியாகியிருந்தால் என்ன நடந்திருக்கும் எனக் கூறத் தெரியவில்லை.

On ‎20‎/‎02‎/‎2015 at 2:49 PM, Thumpalayan said:

காதலின் அடிப்படையே காமம் தானே. காதலின்றி காமம் வரலாம் ஆனால் காமமின்றி காதல் வராது. தாம் காதலித்தவருடன்/வளுடன் கற்பனயிலாவது உல்லாசம் அனுபவியாதவன்/வள் உண்டோ?  காமம் அற்ற காதல், தாம்பத்தியம் உப்பில்லாத உணவுக்கு சமன். சாப்பிடலாம் ஆனால் ருசி இருக்காது. எனக்கு வந்தது காதல் என்பதை விட ஒரு கவர்ச்சி என்றுதான் சொல்லுவேன். அதனால் தான்  பதத்தையும் பாவித்திருந்தேன். கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேனே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு இழவும் அந்த வயதில் வரவில்லை:unsure: . ரொம்ப இறுக்கமா  இருந்திட்டனோ என்னமோ தெரியல tw_astonished:,ஆனா இப்போ மனைவியை  ஆசைதீர  காதலிக்கிறேன்.tw_heart:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/03/2017 at 8:02 AM, வல்வை சகாறா said:

கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி

On 19/03/2017 at 8:02 AM, வல்வை சகாறா said:

திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது

அருமையான வரிகள்...... 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தொடருங்கள் சகாறா அக்கா...நீண்ட நாட்களின் பின் கண்டது மகிழ்ச்சி

ஒரு பெண் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் அவள் நல்ல பெண்..அந்தப் பெண்ணை எவ் வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நீங்களும் விரும்பி இருந்தால் மகிழ்ச்சி...பெண் மட்டுமே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து வர வேண்டும் என்பது நியாயமில்லைத் தானே<_<

ரதி...என்னை நேரில பார்த்தால்....இப்படியும் ஒரு அப்பாவியா என்று தான் நினைப்பீர்கள்!

கலியாண வீடு நடக்கிறது போது....அம்மியில மிதிச்ச படி....மூன்று தரம் சுத்தி வரச் சொல்லுவினம்! அந்த நேரம் ஒரு வாளிக்குள்ள மஞ்சள் தண்ணிய விட்டு..அதற்குள் ஒரு மோதிரத்தையும் போட்டு..மாப்பிளை, பொம்பிளையை எடுக்கச் சொல்லி ஒரு விளையாட்டுக் காட்டுவினம்!!

மூன்று தடவையும் நான் மோதிரத்தை எடுக்கவில்லை என்றால்....என்ர விட்டுக்கொடுப்பு...எவ்வளவு பெரியது எண்டு கற்பனை பண்ணிப் பாருங்கோவன்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2017 at 9:58 PM, Kavallur Kanmani said:

ஆனாலும் மெல்லத் திறந்தது கதவு....தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள் அறியாதவளா நான் முயற்சிக்கிறேன் தோழி

On 3/20/2017 at 3:27 AM, suvy said:

நிஜம் கசக்கும்தான், ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்....!

இறந்து போதலுக்கும் அமரத்துவத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு சகோதரி. கோடிக்கணக்காணவர்கள் இறந்து போகின்றார்கள் அனால் சில ஆயிரங்களே அமரத்துவமாய் நிலைக்கின்றன. காதலும் அப்படியே தோல்வி என்னும் சாம்பலில் இரண்டு இலையுடன் துளிர்த்திருக்கும் பாகல் விதைபோல் அமரத்துவமாய் மனசுக்குள் வாழ்ந்திருக்கும். என்னிடமும் ஒரு பாகல் செடி இருப்பதால்தானோ என்னமோ....! tw_blush:

பாகல் செடி உங்களிடமும் இருக்கா...... கற்பனையில் கூட நான் திங் பண்ணல.....அவ்வளவு நல்ல பிள்ளை ஆயிற்றே..... இருக்கலாம் நல்ல பிள்ளைகள்தான் அதிகம் தோல்வியைத் தழுவிக் கொள்வார்கள்.tw_cry:

On 3/20/2017 at 9:18 PM, Thumpalayan said:

போன பஸ்சுக்கு கைகாட்டும் நிலையில் இப்போது பெண்கள் இருக்கிறார்களா? மற்றும்படி Tinder, kik எண்டு சோடி இருக்கத்தக்கதாக தற்காலிக சோடியை தேடி உலகம் ஓடிட்டு இருக்கு

பெண்களை ஒட்டுமொத்தமாய் கலாய்க்கிறதாக நினைப்போ தும்பளையான்.  அன்புக்கு முன்னால் போன பஸ் வந்த பஸ் நின்ற பஸ் என்று எதுவும் இல்லை. இறந்த காலம் என்பது புறச்சூழலுக்கு மட்டுந்தான் என்று நினைக்கிறேன். அடுத்த பிறப்பு என்று இருந்தால் தும்பளையானை காதலியை பிரிந்த ஏக்கம் வாட்டி வதைக்கவேணும்  காதலி முகத்தை காண மாட்டோமா என்று இந்தாள்  கவிதைகள் கதைகள் எழுதி புலம்பி திரிய வாய்ப்புக் கொடுக்கும்படி கடவுளிடம் பிரிந்து வருந்தும் காதலர்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.