Jump to content

யாழ்ப்பாணத் தோசை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Nathamuni said:

உங்க லண்டன் ஹரோவ் பக்கம் வந்தியல் எண்டால் ஒரு பவுனுக்கு 3 தோசை...

ஒரு வேளை....தோசையை றீ சைக்கிளிங்க்  பண்ணுறாங்களோ?

எப்படிக் கட்டு படியாகும்?:unsure:

 images?q=tbn:ANd9GcQtJHwvhtkMUH_MZAQtmEt

Posted
9 hours ago, MEERA said:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மாமியை கூட்டிக்கொண்டுபோய் காட்டுங்கோ :grin:
வயதான காலத்தில வெயிட் கூடுறதும், சுகர் கூடுறதும் நல்லதுக்கில்லை - ஆமா இப்பவே சொல்லிப்புட்டேன்.:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, சுவைப்பிரியன் said:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

உங்கட கதையைக் கேட்டு அந்தாள் 15 தோசை வேணும் என்று அடம்பிடிக்கப் போகிறார். 

ஆனாலும் ஜீவனின் உடம்பு 15 தோசையை தாங்குமா என்பது சந்தேகமே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, சுவைப்பிரியன் said:

தோசை என்டால் சிவப்பு மிழகாயில் இடித்த சம்பல் அதில வெங்காயமும் உப்பும் லேசாய் கடிபட ஒரு 15 தோசையை அமுக்குற எனக்கு உதைப்பாத்து வயிறு எரியாது.tw_blush:

உந்த கோதாரியாலைதான் ஒருசில வீடுகளிலை தோசையே சுடுறேல்லை.......tw_angry:

Posted
3 minutes ago, குமாரசாமி said:

உந்த கோதாரியாலைதான் ஒருசில வீடுகளிலை தோசையே சுடுறேல்லை.......tw_angry:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

இதே கதையை எனது நண்பனும் எனக்கு சொல்லி இருக்கிறார். எல்லா நண்பர்களும் ஒரே கதையை கொப்பி செய்கிறார்களோ :rolleyes:

Posted
1 minute ago, தமிழரசு said:

இதே கதையை எனது நண்பனும் எனக்கு சொல்லி இருக்கிறார். எல்லா நண்பர்களும் ஒரே கதையை கொப்பி செய்கிறார்களோ :rolleyes:

இப்ப கனடாவில் இருக்கிறார். சில வேளை எதுக்கோ வாங்கின அடி தழும்புகளை காட்டி எங்களுக்கு புலுடா விட்டானோ யாருக்கு தெரியும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஜீவன் சிவா said:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

எங்க வீட்டிலும் இது நடந்தது, அம்மா புரிந்து கொண்டு சிறிய தோசையாக சுட, சுருட்டி உள்ளே தள்ளிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஏஜன்சில வெளிநாடு போக பலர் பணம் குடுத்து பின்னால முன்னால திரியினம். அந்த ஏஜென்சிக்கு பொறுப்பானவரும் அந்த ஊர்ல குடும்பத்துடன் வீடெடுத்து இருந்தவர்.காசைக் குடுத்த பொடியள் இண்டைக்கு டிக்கட் வாங்கிறது அல்லது காசு வாங்கிறது என்று அவற்ர வீட்டுக்கு போனால் என்னடா நேற்றுதானே வந்தனி  சொன்னனாந்தானே. "இல்லாட்டி அண்ணை நான் தந்த காசு". அது கிடக்கட்டும், நீ இப்ப பசியோடு வந்திருப்பாய் மேல அக்கா தோசை சுடுறா போய் சாப்பிட்டுட்டு போ என்ன. பொடியாலும் மேல போனால் அக்கா 24 மணி நேரமும் தோசை சுட்டுக் கொண்டே இருப்பா. போனவருக்கு ரெண்டு தோசையும் சாம்பலும் தட்டிலே விழும். அப்ப அவர் வருவார். தாணும்  ஒரு தோசை எடுத்துக் கொண்டு சொல்லுவார் சே இந்தத் தோசை இவ்வளவு பெரிதாய் இருக்கு , " ஒண்டு ரெண்டுக்கு மேல மனிசனாய் பிறந்தவன் சாப்பிடுவானோ" அதுக்கு மேல காசுக்கு போனவர் ரெண்டு தோசை சாப்பிட்டுட்டு நடையைக் கட்டிட வேண்டியதுதான்...! tw_blush:

Posted

அரசனும் மந்திரியும் தோசைக் கல்லும் என்றும் ஒரு கதை இருக்குது

நான் அதை இங்கு பகிர்ந்தால் மட்டூஸ் எல்லாம் என்னுடன் மல்லுக் கட்ட லைனில வருவார்கள் // ஜீவன் எஸ்கேப் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

ஒரே ரேஸ்ரா இருக்குது. அப்ப எப்பவோ ஒரு நாள் சேர்ந்து அடிக்கத்தான் இருக்கு.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது வீட்டிலும் அடிக்கடி தோசை இட்லி செய்வார்கள்.தோசைக்கு அவித்த மாவும் இட்லிக்கு அவித்த ரவாவும் சேர்ப்பார்கள்.  

இதில் எனக்கு இட்லிக்கு செய்த மாவில் தோசை சாப்பிட எப்போதுமே ஒரு விருப்பம்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் சுடும் தோசையையே பிள்ளைகளில் இருந்து மனைவி வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தோசைக்கு பொரித்த செத்தல் மிளகாய் சம்பலும் இட்லிக்கு தண்ணீர்ச் சம்பலும்(சட்னி) சாம்பாரும்.

1 hour ago, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

சிங்களவர்கள் நன்றாக மாசி சம்பல் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசையை சிறிது மாற்றி செய்தால் ஊத்தப்பம். இது சிறிது தடிப்பமாக தோசை போல் இருக்கும். மிகவும் ருசியானது.

முட்டை தோசை /  நல்லேண்ணை தோசை / மசாலா தோசை என பலவகை உண்டு. 

தோசைக்கு மிளகாய்பொடியுடன் நல்லண்ணை கலந்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/03/2017 at 5:04 PM, colomban said:

தோசையை சிறிது மாற்றி செய்தால் ஊத்தப்பம். இது சிறிது தடிப்பமாக தோசை போல் இருக்கும். மிகவும் ருசியானது.

முட்டை தோசை /  நல்லேண்ணை தோசை / மசாலா தோசை என பலவகை உண்டு. 

தோசைக்கு மிளகாய்பொடியுடன் நல்லண்ணை கலந்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும்.

முக்கியமான நெய்த்தோசை, வெங்காயத்தோசை ஆகியவையையும் சேர்த்து கொள்ளலாம் கொழும்பான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/03/2017 at 0:51 AM, Nathamuni said:

நெருப்பு வெக்கைல, தென்னோலை, தென்னம்பட்டை, உமல், பனம்மட்டை, பனையோலை எண்டதில வித்தியாசம் இருக்குதோண்ணை?

அம்மம்மா.... மண்ணெண்னை அடுப்பில செய்தாலும் அந்தமாதிரி இருக்கும்.

உது கைப்பக்குவம்... நெருப்புச்சூடில்லை எண்டு நினைக்கிறன்.

மண்ணெண்ணெய் அடுப்புச் சமையல் சுவையாக இராது. மண்ணெண்ணெய் மனம் உணவில் இருக்கும். நீங்கள் முன்பு பசியில் சாப்பிடுவதனால் சுவையாகவே இருந்திருக்கும்.

On 25/03/2017 at 10:04 AM, ஜீவன் சிவா said:

உந்த தோசை கதையை வாசிக்க எனக்கும் ஒரு இரைமீட்டல்

எனது நண்பனின் வீட்டில் அன்று அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தா

ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு சென்றனர் + எனது நண்பனின் முறையும் வந்தது

அம்மா தோசை சுட்டு திருப்பியபோது பிய்ந்து விட்டது.

நண்பனோ பிய்ந்த தோசை எனக்கு வேண்டாம் எண்டு அடம் பிடிக்க // அங்கு வந்த அப்பாவும் அவனை ஆறுதல் படுத்திவிட்டு புதிதாக பிய்யாமல் ஒரு தோசை சுட்டு கொடுக்கும்படி அம்மாவிடம் கோரினார். அம்மாவும் ஒரு தோசையை சுட்டு தட்டில் போட்டபோது அப்பாவும் பூவரசம் கம்புடன் பிரசன்னமாகி இருந்தார்.

தோசையை எடுத்து தின்ன முயன்ற நண்பனுக்கு முன்னால் பூவரசு நீண்டது. // நீ கேட்டபடி பிய்யாமல் தோசை இருக்கு இப்ப இதை பிய்க்காமல் தின்னு எண்டார்.

முழுசா ஒரு தோசையை முழுங்கவா  முடியும்.

அப்புறம் என்ன பூசைதான்.:grin::grin::grin:

dd2d2e7f6959675c0ec52bffe43e9f3a.png

On 25/03/2017 at 4:55 PM, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் அடிக்கடி தோசை இட்லி செய்வார்கள்.தோசைக்கு அவித்த மாவும் இட்லிக்கு அவித்த ரவாவும் சேர்ப்பார்கள்.  

இதில் எனக்கு இட்லிக்கு செய்த மாவில் தோசை சாப்பிட எப்போதுமே ஒரு விருப்பம்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் சுடும் தோசையையே பிள்ளைகளில் இருந்து மனைவி வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தோசைக்கு பொரித்த செத்தல் மிளகாய் சம்பலும் இட்லிக்கு தண்ணீர்ச் சம்பலும்(சட்னி) சாம்பாரும்.

சிங்களவர்கள் நன்றாக மாசி சம்பல் செய்வார்கள்.

ஏன் மீன்குழம்பு , கோழிக் கறி, ஆட்டுக்கறியுடன் கூட தோசை உண்ணலாம் தான். ஆனாலும் அந்தச் சிவப்பு மிளகாயைப் பொரிச்சு இடிச்ச சம்பல் தனிச் சுவைத்தான்.

On 25/03/2017 at 3:21 PM, முனிவர் ஜீ said:

தோசையில் நிண்டு மல்லுக்கட்டுறியளே  நம்மட பங்குக்கு  அடுப்பில் இருந்து இறக்கியவுடன் காஞ்ச மிளகாய் சம்பல்  அதற்குள் கொஞ்சம்  மாசி போட்டு வெங்காயம் கடிபட இடிச்ச சம்பலுக்கும் போட்டி போட்டுக்கொண்டு  எத்தனை தோசையென்றாலும் இறக்கலாம் :113_tongue:

எனக்கு மாசி பிடிக்கிறதே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மாசி பிடிக்கிறதே இல்லை

மாசி இலையென்றால் அதன் சுவை கொஞ்சம்  குறைவுதான் பாருங்க :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மண்ணெண்ணெய் அடுப்புச் சமையல் சுவையாக இராது. மண்ணெண்ணெய் மனம் உணவில் இருக்கும். நீங்கள் முன்பு பசியில் சாப்பிடுவதனால் சுவையாகவே இருந்திருக்கும்.

முற்றிலும் உண்மை.

இங்கு ஜேர்மனியில் கூட இறைச்சிகளை வாட்டுவதற்கு ஒரு சில மரக்கட்டைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
ஊரில் கூட எல்லா மர விறகுகளையும் சமையலுக்கு பயன் படுத்துவதில்லை. 
நெருப்பு தொட்டால் சுடும்/எரியும். அதற்காக எல்லா நெருப்பிலும் எதுவும் எல்லாம் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/03/2017 at 5:06 PM, முனிவர் ஜீ said:

மாசி இலையென்றால் அதன் சுவை கொஞ்சம்  குறைவுதான் பாருங்க :unsure:

மாசி போட்டால்த்தான் சுவை குறைவாக இருக்கும் எனக்கு.:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.