Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது

Featured Replies

கிளிநொச்சியில்  விபசார நிலையம் பொலிசாரால்  முற்றுகை ; 4 பெண்கள் கைது 

கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபசார  நிலையமொன்று  பொலிசாரால்  இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.

unnamed-_28_.jpg

இந்த முற்றுகையின் போது பாலியல்  தொழிலில்  ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

குறித்த விபசார  நிலையம்  ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக  கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவிற்கான  பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட  ஊடகவியலாளர்களால்  வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்  றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில்  கிளிநொச்சி உதவிப்  பொலிஸ் பரிசோதகர்  தர்சனவினால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனை இட  விண்ணப்பம் செய்யப்பட்டதனை அடுத்து  கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின்  நீதிபதியினால் குறித்த  வீட்டை தேடுதல் நடத்த  அல்லது பார்வையிட, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தில் அதற்கென தரப்பட்டவாறான  தத்துவங்களை பிரயோகிக்கவும் கடமையை புரியவும்   கிளிநொச்சி உதவிப்  பொலிஸ் பரிசோதகர்  தர்சனவின் குழுவினருக்கு நேற்றுமுன்தினம்  அனுமதி வழங்கப்பட்டது.

unnamed-_27_.jpg

அதன் பிரகாரம்  குறித்த குழுவினர்  பொலிசார்  ஒருவரை  சிவில் உடையில் அனுப்பி உறுதிப்படுத்தியதன்  பின்னர்  குறித்த  குழு வீட்டை முற்றுகை இட்டு நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை  பொலிசார் விசாரணைக்குட்ப்படுத்தியதுடன்  நாளை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed-_26_.jpg

இவ் விபசார  விடுதியானது  கிளிநொச்சியில் பல  மாத  காலமாக  இயங்கி வந்ததுடன் இதனை  முடக்கும்  முயற்சியில் கிளிநொச்சியில் உள்ள  கல்வியலாளர்கள் , பொது அமைப்புக்கள் ,ஊடகவியலாளர்கள்   எனப் பலர் ஒன்றிணைந்து  பல   நடவாடிக்கைகளை எடுத்தமைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_25_.jpg

unnamed-_24_.jpg

unnamed-_23_.jpg

Tags

http://www.virakesari.lk/article/20091

  • தொடங்கியவர்
விபசார நிலையம் என சந்தேகம்: நான்கு பெண்கள் கைது
 
17-05-2017 02:16 PM
Comments - 0       Views - 127

article_1495011108-2.jpg

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மேற்கு பகுதியில் இயங்கிவந்த விபசார நிலையம் என சந்தேகிப்படும் வீடு, பொலிஸாரால் இன்று மதியம்  முற்றுகை இடப்பட்டுள்ளது.

இதன்போது பாலியல்  தொழிலில்  ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  நான்கு பெண்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சியில்  குறித்த விபசார  நிலையம் இயங்கி வருவதாக,  கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு  பிரதிப்  பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தரை அந்த வீட்டுக்கு அனுப்பி, உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பொலிஸார் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

article_1495011117-3.jpg

article_1495011127-4.jpg

article_1495011137-5.jpg

article_1495011147-6.jpg

article_1495011155-7.jpg

article_1495011162-8.jpg

 0  0  
- See more at: http://www.tamilmirror.lk/196791/வ-பச-ர-ந-ல-யம-என-சந-த-கம-ந-ன-க-ப-ண-கள-க-த-#sthash.F9h9Ymyi.dpuf

வெறுமனே பாலியல் தொழிலாளர்களை மட்டும் கைது செய்வது ஏன்? ஆண்  வாடிக்கையாளர்களை ஒரு போதும் கைது செய்யாமல் ஏன் விடுகின்றனர்?

ஆண்களையும்  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் அவர்களை நம்பி இருக்கும் / வரப்போகும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அபலைப் பெண்களை வைத்து காசு பார்க்கும் கயவர்கள் தப்பிவிடுவார்கள் ...
அவர்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை போராட்டத்தை புகைப்படங்கள் காட்டி நிட்கிறது.
இவர்களின் படங்களை போட்டு விளம்பரம் தேடும் பத்திரிகையாளர்கள் சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு தான் இல்லை விபச்சாரம் சிலவருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை கையும் களவுமாக பிடிக்க வேண்டும்  என்ற ஆவலில் அவளை எற்றிக்கொண்டு போனவனை ஒருவர் கண்டு கூச்சலிட  அவன் அந்த பெண்ணை இறக்கி விட்டு ஓடிவிட்டான் நானும் அந்த இடத்தில் நிற்க அந்த இடமோ நீதிமன்ற வாளாகம் அருகாமையில்  பாதுகாப்பு நின்ற பொலிஸ்க்காரன் என்ன சந்த்தம் ஏன் கத்தீனீர்கள் என்று கேட் க அந்த நபர் விபரத்தை சொன்னார் இப்படி அந்த பிள்ளை தேவையில்லாத தொழில் செய்கிறாள் அதை தடுப்பதற்கு கூச்சலிட்டேன் அப்போது அந்த பொலிஸ்க்காரன்  சரி அவள் அந்த தொழிலை விட்டு விடுவாள் தற்போது அவள் செலவுக்கு ஒரு 2000 ரூபா காசு கொடு  என்றார் கத்திய அந்த நபர் வாயடைத்து போய்விட்டார் நானும் கூட  என்ன செய்வது  இரண்டு மூன்று பிள்ளைகள் அவர்களை வளர்க்க வேண்டும் , புருசன் இல்லை  அவன் போரில் இறந்து விட்டான் எப்படி வாழ்வது ?  இவர்கள் இனம் மாற வேண்டும் மாறினால்  சமூகம் ஒத்துக்காது என்ன செய்வார்கள் வயித்து சோத்துக்காக அதுக்காக விபச்சாரம் தான் செய்து வாழ வேண்டும் அவசியம் இல்லை உழைத்து வாழ எத்தனையோ தொழில்கள் இருக்கிறது  இடியப்பம் அவிப்பது முதல்  பாய் இளைப்பது வரை ஆனால் தற்போது கனபேர் கஸ்ரப்படாமல் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .

அந்த படத்தை போட்டது தவறு என்னை பொறுத்த வரைக்கு ம்  தங்களை எதோ நல்ல  ஊடகவியாலாளராக காட்டும் எந்த நபரும் செய்ய மாட்டார்கள் ? இவர்களை இந்த தொழிலுக்கு உருவாக்கியது யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்  இதற்கு நமது சமூகமும் ஒரு காரணம் இந்த போட்டோவைப்பார்த்து நாளை இவர்கள் தொழிலை விட்டு வீதியில் போனாலும் அடுத்த நாள் காசுக்கு கூப்பிடும் ஆட் கள் ஏராளம்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தனி ஒருவன் said:

விபச்சாரம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட தொழில். இதை ஏன் கேவலமாக பார்க்க வேண்டும்?

கை கால்களை பயன்படுத்தித்தானே நாம் தொழில் செய்கின்றோம். அதே போல் பெண்களும் தங்கள் உறுப்புகளை பயன்படுத்தி தொழில் செய்கின்றார்கள். அவ்வளவுதான்.

எத்தனையோ சட்டத்தரணிகளும் வக்கீல்களும் கேவலமாக பொய் சொல்லி வாதாடி காசு சம்பாதிக்கவில்லையா? அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை.ஏனென்றால் அது கோட்டு சூட்டு போட்ட தொழில்...வாய் வல்லமை உள்ள தொழில்.நீதியெனும் பெயரில் உண்மைக்கு புறம்பான தொழில் அது.

நிற்க....

இனிவரும் காலங்களிலாவது எமது ஈழப்போரினால் அப்படி வந்தார்கள் இப்படி வரப்பட்டார்கள் என்று காரணச்சாட்டு கூறாதீர்கள்.
எமது மண்ணில் பாலியல் தொழில் அன்றும் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களிலாவது எமது ஈழப்போரினால் அப்படி வந்தார்கள் இப்படி வரப்பட்டார்கள் என்று காரணச்சாட்டு கூறாதீர்கள்.
எமது மண்ணில் பாலியல் தொழில் அன்றும் இருந்தது. 

இருந்திருக்கலாம் நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை  போர் என்றால்  இழப்பு அதில் எத்தனையோ அப்பாவிகள் இறக்க வில்லையா அதனால் அவர்கள் குடும்பங்கள் நிலை அவர் ராணுவத்தால் கூட கொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா ( ஒரு சிலரை சொல்ல வந்தேன் கையும் களவுமாக பிடிபட்டவ்ர்கள் உதாரணமாக கிழக்கில் மேயர் கைதான விபரம் தாங்கள் அறிந்திருப்பீர்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு நிறைந்தவள்..விபச்சாரியாவாதற்கும்இ வயிறு காய்ந்து கிடப்பவள்...விபச்சாரியாவதற்கும் உள்ள வேறுபாடுகளை..நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

அவள் என்ன நிலையில் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்!

வயிறு நிறைந்த எமக்கு...அவளை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வயிற்றுப்பசிக்கு விபச்சாரம் செய்கிறார்களா.. உடல் பசிக்கு விபச்சாரம் செய்கிறார்களா.. என்ற வியாக்கியானங்களுக்கு அப்பால்..  போர் மற்றும் சமூக.. பொருண்மியக் காரணிகளால்.. உழைக்க வலுவுள்ள பெண்கள்.. இப்படியான.. சமூகப் பிறழ்வான வழிமுறைகளில் பண மீட்ட.. அவர்களுக்கு பணம் கொடுத்து வாடிக்கையாளர்களாகும்... கணவான்களை யார் பிடிப்பது...???!

சொறீலங்கா பொலீஸிடம் மாட்டிவிட்ட இவர்களுக்கு அங்கு சரியான நீதி தான் கிட்டுமா.. இல்ல சொறீலங்கா பொலிஸ் இவர்களின் சேவையை விரிவாக்குமா...??!

ஏனில் தமிழர் தாயகத்தில் விபச்சாரம் என்பது ஒரு காலக்கட்டத்தில்.. பூச்சியம் என்ற அளவிற்கு.. கொண்டு வந்த ஒரு தமிழ் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது என்பதை எம்மிலும் சிலர் மறந்து விட்டார்கள். 

விபச்சாரம் ஒழிக்கப்பட்ட மண்ணில்..விறகு கட்டி பிழைத்த பெண்களை காண முடிந்தது. இன்று விபச்சாரம் மட்டுமல்ல.. போதைவஸ்தும் பெருக்கி விடப்பட்ட மண்ணில்.. உடலை விற்று.. பணத்தை வாங்கி.. நோயை பெருக்கி.. சமூகச் சிரழிவுக்குள் எமது சமூகத்தை தள்ளும்.. அந்நிய சமூக ஆக்கிரமிப்பே.. இந்த விளைவுகளின்.. பொதுக்காரணி.

அதனை அகற்றினால்.. எல்லாம் சுபமாகும்.  அது சாத்தியமில்லை என்றால்.. எமது மண்ணில்.. சமூகச் சீரழிவுகளை மக்களின் சுய விழிப்புணர்வின்றி களைவது கடினமாகும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

அபலைப் பெண்களை வைத்து காசு பார்க்கும் கயவர்கள் தப்பிவிடுவார்கள் ...
அவர்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை போராட்டத்தை புகைப்படங்கள் காட்டி நிட்கிறது.
இவர்களின் படங்களை போட்டு விளம்பரம் தேடும் பத்திரிகையாளர்கள் சிந்திப்பார்களா?

நீங்கள் சொல்லுவது சரி ஆனால் நாங்களும் அதே பிழையத்தானே விடுகிறோம்...எங்கன்ட யாழ் இணையத்தில படத்தை போட்டு பிரிச்சு மேய்யிறமல்லோ:rolleyes:

10 minutes ago, nedukkalapoovan said:

அதனை அகற்றினால்.. எல்லாம் சுபமாகும்.  அது சாத்தியமில்லை என்றால்.. எமது மண்ணில்.. சமூகச் சீரழிவுகளை மக்களின் சுய விழிப்புணர்வின்றி களைவது கடினமாகும். tw_angry:

அதை அகற்றமுடியாது .அதை அகற்ற இன்னுமொரு போராளி வர வேண்டும் அதுவும் வெற்றியளிக்காது...ஆனால் நீங்கள் கூறியது போன்று மக்களின் விழிப்புணர்வு மூலம் தான் களைய முடியும்......

இவர்கள் மேல் பரிவும், பரிதாபமும் ஏற்பட்டாலும், எமது மண்ணில் மட்டுமல்ல உலகெங்கும்  விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் கூட, விபச்சாரம் கவுரவமான ஒரு தொழில் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது!

எனவே இந்த சகோதரிகள் இந்த தொழிலில் இறங்கியது வேதனையை தருகிறது! அவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

காலில் வெறும் செருப்புக் கூட இல்லாமல் வெறும் சாதாரண உடையுடன் வாகனதில் ஏறுகிறாளே ஒருத்தி .. அவள் கூட ஆடம்பரத்துக்காகத் தன்னை விற்கின்றாள் போலவா தெரிகின்றது?  எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் குழந்தைகளைக் கிணற்றில் எறிந்து விட்டு அவளும் தன்னை மாய்த்துக் கொள்ளலாமா? ஆண்கள் தானே விபச்சாரிகளுக்குச் சந்தை அமைத்துக் கொடுக்கின்றார்கள் . அவர்கள் வைக்க வேண்டியதை...வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தால் இந்தப் பிரச்சனை தோன்றும் சாத்தியமே இல்லையே? பெண்கள் அவர்களைப் பிடித்தா இழுக்கிறார்கள்?

  • தொடங்கியவர்

கிளிநொச்சி புறநகர் பகுதியில் விபசாரம் நடத்திருக்கலாம்

சந்தேகத்தில் வீடொன்று முற்றுகை : அங்கிருந்த 4 பெண்கள் கைது

கிளி­நொச்சி  புற­ந­கர் பகு­தி­யில் விபச்­சார விடுதி என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் வீடொன்று நேற்­றுப் பொலி­ஸா­ரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டி­ருந்­தது. அங்­கி­ருந்த 4 பெண்­கள் சந்­தே­கத்­தின்­பே­ரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்து கிளி­நொச்சி மாவட்ட உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் றொசான் ராஜ­பக்­ச­வின் வழி­ந­டத்­த­லில், உத­விப் பொலிஸ் பரி­சோ­த­கர் தர்­சன தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தது.

வீட்­டைச் சோத­னை­யி­டு­வ­தற்­கான அனு­மதி கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்­றில் பெறப்­பட்­டது. நேற்று பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட நபர் ஒரு­வர் அந்த வீட்­டுக்­குச் சென்று நில­மை­களை அவ­தா­னித்­துப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னார். வீட்­டைப் பொலி­ஸார் சுற்றி வளைத்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட பெண்­க­ளில் இரு­வர் 21 வய­து­டை­ய­வர்­கள், ஒரு­வர் 26 வய­து­டை­ய­வர், வீட்­டின் உரி­மை­யா­ளர் 37 வய­து­டை­ய­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளோம், கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று கிளி­நொச்சி மாவட்ட ஊழல் தடுப்­புப் பிரி­வுப் பொறுப்­ப­தி­காரி தர்­சன தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/3280.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Rajesh said:

இவர்கள் மேல் பரிவும், பரிதாபமும் ஏற்பட்டாலும், எமது மண்ணில் மட்டுமல்ல உலகெங்கும்  விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் கூட, விபச்சாரம் கவுரவமான ஒரு தொழில் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது!

எனவே இந்த சகோதரிகள் இந்த தொழிலில் இறங்கியது வேதனையை தருகிறது! அவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

வளர்ந்த நாடுகளில்கூட விவசாயிக்கு பெரிசாக மரியாதை இல்லை.

On 5/18/2017 at 8:06 PM, குமாரசாமி said:

வளர்ந்த நாடுகளில்கூட விவசாயிக்கு பெரிசாக மரியாதை இல்லை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்' எனப் பாடினார்.
---    என்கிறார் திருவள்ளுவர்

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
---    என்கிறார் ஒளவையார்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
---    என்கிறார் பாரதியார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.