Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்

Featured Replies

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

 

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=71705

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
 
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும். 
 
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
 
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
 
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது. 
 
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
 
 
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். 
 
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன. 
 
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும். 
 
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15009&ctype=news

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் சிங்களவனுக்கு பதிலா நாடு நாடாய் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார் போல் உள்ளது  அண்ணருக்கு cv இடம் வாங்கிகட்ட காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கைதானே. நாலு பணம் விதை மாத்திரம் நட்டவர் தமிழர் பகுதியுள் வேறு ஒன்றும் இதுவரை தமிழர்க்கு செய்ததா சரித்திரம் இல்லை மொத்தத்தில் இவர் ஓய்வு போனால் வடமாகாண அரசியல் ஒரு குழப்பமும் இல்லாமல் போகும் இன்று இப்படி சொல்றவர் நாளை தேர்தல் மேடையில் பல்டி அடித்து கதைப்பார் நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்லிவிட்டு போய் விடுவார்.  தமிழர்க்கு கிடைத்த சாபக்கேடு சுமத்திரன் அரசியலுக்கு வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

 

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
 

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

ஒரு பால் குடத்தில் ஒரு துளி மலம் விழுந்தாலும் நீங்கள் சகிச்சுகொண்டு குடிப்பியல் எங்களால் உங்களை போல் முடியாது .

 

அருமை
அற்புதம்
ஆழம்
நிறைந்த
ஆரோக்கியமான கருத்து

மேலும் அதிகம்
எதிர்பார்க்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உவர்ர கூட்டமைப்பிலேயே பல முன்னாள் கடத்தல்காரர்கள் இருக்கினம், அவர்களையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே? 

அதானே ஆரம்ப காலங்களில் அரசாங்க துணையுடன்  கடத்தியவர்கள் இன்று கதிரையிலே இருக்குறார்கள் அவர்களை இவர் கண் பார்க்க வில்லையா அல்லது அவர்கள் இவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று யோசிக்கிறாரா என்ன 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்... இருக்கும் .மட்டும்.. வாலை சுருட்டிக் கொண்டு, பதுங்கி  இருந்து விட்டு, 
பின் கதவால்.... தமிழ்  அரசியலுக்குள் நுழைந்து, 
இன்று.. தமிழ்  மக்களுக்காகவே... போராடி மடிந்த, புலிகளை விமர்சிக்க...
சுமந்திரனுக்கு... என்ன அருகதை உள்ளது.
(வாயில கனக்க  வருது, எழுத்து...  நாகரிகம் கருதி, எழுதவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சார் பெரிய நீதிமான் போல பேசிட்டராம்...

அப்படின்னா.. நீதிமான் அவர்களே..

தாங்கள் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஆட்பிடிப்பு பற்றியும் விசாரிக்க கேட்கலாம்..

ஏன்.. சிங்கள இளைஞர்களை கட்டாய ஆட்பிடிப்புக்கு உட்படுத்திய சொறீலங்கா இராணுவத்தையும் விசாரிக்க கேட்கலாம்..

அதுபோக.. சிங்கள இராணுவத்தின் கைக்கூலி உதிரி தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு சொறீலங்கா இராணுவம் ஆட்பிடிக்க உதவியமை குறித்தும் விசாரிக்கலாம்..

அதுக்கு மேல.. தமிழரசுக் கட்சி ஆட்கள்.. சாராயமும்.. சோடாப் போத்தலும்.. கத்தி.. பொல்லும் கொடுத்து இளைஞர்களை... ஆட்சேர்த்தது குறித்தும் விசாரிக்கலாம்..

இதுகளை தாங்கள்.. பேச மறுப்பது ஏனோ.. நீதிமான் அவர்களே..

ஓ தங்களுக்கு புலிகள் என்றால்.. கொஞ்சம் நடுக்கம் போலும். tw_blush::rolleyes:

முடிஞ்சா.. உந்த சுமந்திரன் என்ற வகையறா.. யாழ் இணையத்தளத்தில் நேரடி கேள்வி பதிலுக்கு வருவாரா... 

ஒரு உருப்படியான.. ஈழத்தின் வரலாறே தெரியாத.. இந்த அரைகுறை.. இப்ப ஈழத்தமிழர்களின் அரசியலை தீர்மானிப்பது.. அவமானம்..!tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Athavan CH said:

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!

கலோ மிஸ்டர் சுமந்திரன்! 
என்ன சொல்லி வாக்கு கேட்டு பாராளுமன்றம் போனீர்கள்?
ஞாபகமிருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்ப வேண்டாம் என்றது ..........?

முன்பக்கம் விசாரியுங்கோ ...
பின்பக்கம் விசாரியுங்கோ ....
சுத்தி சுத்தி விசாரியுங்கோ ....

தமிழர்களை திட்டமிட்டு கொன்ற சிங்கள அரசை யார் விசாரிப்பது ?

ஏற்கனவே இங்கு இருந்தவர் ஒருவர் மீண்டும் 
வேறு பெயரில் வந்து குழை அடிச்சுக்கொண்டு நிற்கிறார்.

சிலர் நினைக்கினம் ... முதல்வர் சி வி ஒன்றும் செய்யவில்லை என்பது 
எமக்கு தெரியாது என்று ....... அவர் ஒன்றும் செய்யவில்லை .... இனிமேலும் ஒன்றும் 
செய்யவும் மாட்ட்டார் ....... இது யாழில் இருக்கும் சாதரண மக்களுக்கும் தெரியும் 
அப்படி அவர் ஏதும் செய்தாலும் .......... சிங்களவன் விடடாலும் 
பொறுக்கிகள் விட மாட்டார்கள் என்பதும் யாவருக்கும் தெரியும். 

இருந்தாலும் எமக்கு சி வி தான் வேண்டும்.
ஒரே ஒரு காரணம் ..........

இப்படி சொந்த இனத்தை வித்து பிழைக்க அந்த மனுஷன் துணியாது 
எனும் ஒரே காரணம்தான். 

  • தொடங்கியவர்
முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

 

15018.jpg
பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம்  ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.
 
அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள்  போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.
 
நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.
 
தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.
 
தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
 
இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.
 
ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில்; தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.
 
இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.
 
அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.
 
ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர். ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.
 
தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு  பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.
 
சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்றுவரை தெரியவில்லை.
 
நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.
 
போரில் அழிக்கப்பட்ட  ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?
 
அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்து வதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15018&ctype=news

 

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைக் கும்பலுக்கு யாரோ (யார் ஹிந்திய எஜமானர்கள் தான். நக்கிறதுக்கு.. பொறுக்கிறதுக்கு.. கூனுறத்துக்கு குறுகிறதுக்கு.. போற இடமெல்லாம் எஜமானர்கள் வாய்க்கிறது... சகஜம் தானே..)     சொல்லிக்கொடுத்துள்ள ராஜதந்திரம் என்ன என்றால்.. உங்கள் சிங்கள எஜமானர்களை செல்லக் கிள்ளுப் பண்ணனுன்னா.. சொந்த இனத்துக்கு தலையில் சம்மட்டியால் அடிச்சு வீழ்த்தனும். நீங்களே உங்கள் இனத்தை அழிக்க உதவனும்.. அப்ப தான்.. நீங்கள் எங்களையும்.. உங்கள் சிங்கள எஜமானர்களையும் மகிழ்வித்து.. சுயபோக.. சுகபோகங்களை அனுபவிக்கலாம்.

இது தான் சம் சும் மாவை கும்பலின் ராஜதரித்திரம். இது தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மீள முடியாத அடிமை நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டுமே.. யதார்த்தமாகும்.

புலிகளை அழித்ததும் இந்தா தீர்வு என்றார்கள்.. இன்று... தீர்வு.. தமிழர்களை அழி என்றாகி வந்து நிற்கிறது. இந்தக் கும்பலின் ராஜதரித்திரத்தின்.. முடிவு இது.

இந்தக் கும்பலை முதலில் தமிழ் மக்களுக்கான அரசியலை தீர்மானிக்கும்.. தளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியது தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கு இப்போ.. மிக முக்கியமாக அமைகிறது. இந்தக் கும்பலுக்கு வால்பிடிக்கும் அனைவரும்.. வெளியேற்றப்படனும். இன்றேல்.. தமிழ் மக்களுக்கு அரசியல் சமூக.. பொருண்மிய விடிவு என்பது ஈழ மண்ணில்.. எனி அமைய வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை.. இல்லாமல் செய்வதே இந்த கும்பலின் அரசியலாகும்.  இது மிகவும் ஆபத்தானது. புலித் துவேசிகள்.. இதுக்கு விசிலடிக்கலாம்.. ஆனால்.. இல்லாத புலிகளை சம்பந்தப்படுத்தி.. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையும்.. பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு.. வழங்கப்பட வேண்டிய உரிமையையும்.. பறிப்பது.. ராஜதந்திரம் அல்ல.. ராஜதரித்திர அணுகுமுறை... இது மொத்த தமிழ் இனத்துக்குமே பாதகமான விளைவுகளையே உண்டு பண்ணும். ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிக்கலாம். அவ்வளவும் தான். 

சம் சும் மாவை கும்பல்.. இதை தான் செய்யும் என்று அப்பவே சொல்லிட்டார்கள்.. நாமும் இங்கு யாழில் சொல்லி இருந்தோம். இது ஒன்றும்.. எதிர்பார்க்காதது அல்ல. ஆனால்.. மக்கள்.. இன்னும் இவர்களை நம்பும் முட்டாள்களாக இருப்பது தான் வேடிக்கை. 

இவர்களின் சிந்தனை ஓட்டம்.. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த சிந்தனை ஓட்டமாக அன்றி.. அன்று ஒப்புக்காவது சில இனத்துக்கு விசுவாசமாக சிந்திக்கச் செய்யப்பட்டார்கள்.. இன்று அந்த ஒப்பும் இழந்து.. எஜமான விசுவாச நோக்கமும்.. சுயநலமுமே இவர்களிடம் பழையபடி மண்டி இட்டுக் கிடக்கிறது. இவர்களை மக்கள் எனியும் சரியாக இனங்கண்டு.. அரசியல் தளத்தில் இருந்து விரட்டி அடிக்கவில்லை என்றால்.. சரியான பதில் பிரதியீடுகளை செய்யவில்லை என்றால்... ஈழத்தீவில் தமிழ் மக்களின் இருப்பும் அரசியலும் நிச்சயம் முற்றாக நாசம் செய்யப்படும்.. சிங்கள ஹிந்திய வல்லாதிக்க எஜமானர்களாலும்.. அவர்களுக்கு வால்பிடிக்கும் எமது இன சுயபோக.. சுகபோகத் துரோகிகளாலும். :rolleyes:tw_angry:

மக்கள் தான் இப்போ தமது தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்களாகி உள்ளனர். 

அவர்களை வழிநடத்த.. நிச்சயம்.. நல்ல சிந்தன உள்ள இளைஞர்கள் தாயகத்திலும்.. புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர்.

உலகம்.. வன்முறைக்கு எதிராக நிலை எடுத்துள்ள நிலையில்.. நாம்.. எமது மூலோபாயங்களை மாற்றி.. எமது மக்களின் அரசியல் சமூக.பொருண்மிய.. தேச விடுதலை என்பதை.. சாத்தியமாக்கும் எல்லா மாற்றுவழிகளையும் பாவிப்பதே இன்றுள்ள நல்ல தெரிவாகும். இதற்கு ஒரு குழுவாக அன்றி பல குழுவாக இயங்கினாலும்.. இலக்கை ஒன்றாக்கினால்... இன்னும் எதிரிகளை சமாளிப்பது இலகுவாகும்.  ஆனால்.. இனம்.. தேசம். என்ற கொள்கைப் பிடிப்பில் இருந்தும்.. அடைய வேண்டிய இலக்கில் இருந்தும்.. விலகாத.. நல்ல நோக்கம் அங்கு நிலையாக இருந்தால்.. வெற்றிகள் நிச்சயம் அமையும். மக்கள்  எனி இது தொடர்பில் தான் சிந்திக்கனும். பழைய பஞ்சாங்களையும்.. அவற்றை ஒட்டி உள்ள.. புதிய சந்தனம்.. குங்குமங்களையும் நம்பி.. எமது இனம்.. தேசம்.. தனது உரிமையை ஒருபோதும் அடையாது. அப்படி அடையச் செய்வதற்கான எந்த வலுவும்.. உந்தப் பஞ்சாங்கங்களிடம் இல்லை. அதையே.. கடந்த.. 8 வருடங்கள் எமக்கு உணர்த்தி உள்ளன. இதுவே காலம் கடந்தது தான். எனியும் காலம் கடத்துவதும்.. இந்த கோமாளிகளுக்கு..இனத்துரோக.. கூத்துக்காட்ட இடமளிப்பதும்.. ஆபத்தான விளைவுகளையே உண்டு பண்ணும்.

ஒன்றில்.. இந்தக் கோமாளிகள்.. தம்மை திருத்திக் கொள்ள மக்கள்.. தம்மை தம் வலுவை பாவிக்கனும்.. இல்லை.. இவர்களை.. மக்கள் தம் தீர்ப்பால்.. அரசியல் களத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும். அதேவேளை.. சோரம் போகாத..சரியான பிரதியீடுகளை செய்தும் கொள்ளவும் வேண்டும்.

இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். 

நன்றி.. நெடுக்காலபோவன். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 2:42 PM, வைரவன் said:

15 நிமிட உரையில்
ஒரு சிறு பகுதியை
ஒட்டி அரசியல்
செய்யினம்
அரசியலில் எதையும்
காத்திரமாக செய்ய முடியாதவர்கள்

சுமந்திரன் தவறாக
எதுவும் சொல்லவில்லை
இறுதி யுத்தத்தில்
புலிகள் சாரி சாரியாக
பலவந்தமாக ஆட்களை
பிடிச்சுக்க கொண்டு  
போனது உண்மை
அது அனைவருக்கும் தெரிந்த
உண்மை

ஆனால் அதற்கு
தண்டனை கொடுக்க
இன்று புலிகள் இல்லை

அவர்கள் மீது வைக்கும்
குற்றச்ச்சாட்டுக்கு
எந்த பலனும் இனி
இல்லை

ஆனால் டக்கிளஸ்
கருணா ஆகியோர் உட்பட
போர்க்குற்றவாளிகள்
அனைவரும் இன்றும்  மிச்சமாக
உள்ளனர்
அவர்களுக்கான தண்டனை
கண்டிப்பாக பெற்றுக்
கொடுக்க வேண்டும்

சுமா
எம் தரப்பும் தவறு
செய்தது என்று ஒத்துக்கொண்டு
மேற் சொன்னவர்களுக்கு
தண்டனை பெற்று
கொடுப்பதற்காக

இதை தன் 15 நிமிட உரையில்
ஒரு இடத்தில்
இதனை குறிப்பிட்டு
இருக்கின்றார்
எனில் அவர் சொன்னதை
நானும் ஆதரிக்கின்றேன்

செத்துப் போன உங்க ஆயா நடத்தை கெட்டவள் / கொலைகாரி என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? 

* முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-24 at 3:49 AM, விசுகு said:

ஒரு  பொறுப்பிலுள்ளவர்கள்

அதுவும் ஒரு இனம்

அதிலும் விடுதலைக்காக தம்மை பலவாறும் அர்ப்பணித்து

போராடிக்கொண்டிருக்கும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அமைப்பு

முக்கியமாக  தீர்மானங்கள்

இனம் சார்ந்த கூட்டங்களில் பங்கு பெறுவதற்கு முன்னர்

இனத்தினை  பாதிக்காவண்ணம் 

வரலாறுகளை  உணர்ந்து

ஒவ்வொருத்தரும் எப்படி  எதிர்கொள்வது?

எவ்வாறு பதிலளிப்பது?

அது பற்றிய மக்கள்  பிரதிநிதிகளின் கருத்து என்ன?

என்று ஏன்  இவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை செய்து

பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவாக பேசுவதில்லை  என்பது தான் எனது பல  நாளைய  கேள்வி

சாதாரண  ஊர்ச்சங்கம் வைத்திருப்பவர்களே

முக்கிய நேரங்களில் நிர்வாகக்கூட்டத்தை கூட்டித்தான் முடிவுகளை  எடுத்து 

அதனை நிர்வாக முடிவு என  அறிவிக்கும் போது

இவர்களின் பொறுப்பறிந்து ஏன்  நடந்து  கொள்வதில்லை

ஆளாளுக்கு  வாய்க்கு வந்தது போல் பேசுவதென்றால் சுயேட்சையாக நிற்கவேண்டியது தானே??

அது சிங்கக்கொடி பிடிப்பதாக இருந்தாலும்

சிறீலங்கா சுதந்திரதினத்தில் கலந்து கொள்வதென்றாலும்

புலிகளை விசாரிக்கணும் என்பதாக இருந்தாலும்....

உவையள் தாங்களே தங்களுக்கு ஒளிவட்டமிருக்கு என்று நினைச்சுகொண்டு கதைக்க வெளிக்கிடுற்வையள்

  • கருத்துக்கள உறவுகள்

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுபேஸ் said:

பாரு.. முழுவதும் அம்பியா மாறிப்போன டக்ளசையும்.. முழுவதும் வில்லானா மாறிப்போன சுமந்திரனையும் பாரு..

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

:10_wink::10_wink:.....மத்தியில் ஆட்சி மாறினால் மீண்டும் டக்கிளஸ் வில்லனாகவும் ,சும்த்திரன் அம்பியாகவும் மாறக்கூடும்...

 

5 hours ago, nunavilan said:

 சுமந்திரன் மாற மாட்டார் என்பது எனது கணிப்பு.

தமிழருக்கு மறதி அதிகம் 
சுமந்திரன் ஏன் அரசிலுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதே மறந்து போச்சு.

கோத்தபய எல்லோரையும் கடாசிய நேரத்தில் ... தமிழ்த்தேசிய கூடடமிப்பிலும் கை வைக்கலாம் 
எனும் நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. சிங்கள மூத்த பத்திரிக்கையாளர்களையே களை 
எடுத்துக்கொண்டு இருந்த நேரம் ....... சம்மந்தருக்கு ஒரு குலை நடுக்கம் இருந்தது 
தன்னையும் ஏதும் காரணம் சொல்லி உள்ளே போடடால் என்ன செய்வது என்று.

அப்போதான் கொழும்பு வாழ் மகிந்த கூட்ட்டத்துடன் ஒட்டி உறவாடி கொண்டு இருந்த 
சுமந்திரன் தட்டு பட்டார் ......... அவரை கொண்டு கோத்தபாயவிட்கு செய்தி அனுப்பினார்.
நாங்கள் தேர்தலில் வெல்ல சும்மா அப்பிடி இப்படி பேசினோமே தவிர 
மற்றும்படி ....... நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று 
அதை சுமந்திரன் சாதகமாக்கி .........புலி இல்லை ... இனி உயிருக்கு ஆபத்தும் இல்லை 
என்று தெரிந்த பின்தான் பின் கதவால் உள்ளே வந்தார்.

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

 

உண்மையை சொன்னால் சுமந்திரனுக்கு ....... இப்போதைய ஆட்ச்சியை விட 
மகிந்த அன் கோ தான் ரொம்ப சவுக்கியம். 
அவர்களுக்கும் இவர்கள் ரொம்ப முக்கியம் .... அவர்கள் தமிழ் என்போரை போட்டு தள்ளுவார்கள் 
மேற்குலக ஐ நா பிரதி நிதிகளுக்கு  சம் சும் கும்பல் அதை மேவி மெழுகி விடுவார்கள்.
அவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ........... 

இந்த அரசு வருமுன்பு அதுதான் நடந்துகொண்டு இருந்ததது......

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

  • தொடங்கியவர்
2 hours ago, putthan said:

பத்திரிகையாளர் டி.பி. எஸ் ஜெயராஜ் சுமத்திரனின் மாமா என்று முகப்புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்மையோ தெரியாது....முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை அந்த பத்திரிகையாளரின் செய்தியின் அடிப்படையிலயே பலர் விவாதத்தில் ஈடுபட்டனர்.ஆகவே கூட்டி கழித்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுகின்றார்கள் போன்று தெரிகின்றது

 டி.பி. எஸ் ஜெயராஜ் கனடாவில் இலங்கைத் தூதரகத்துடன் சேர்ந்தியங்கியவர் என்றும் அவர் சுமத்திரனின் உறவினர் என்றும் , சுமத்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் எனறும் நானும் எங்கோ படித்துள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.