Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்

Featured Replies

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை
 
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் யாழ். நீதிமன்றத்தில் இன்று (28) ஆரம்பமானது.

இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகி தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமாஅதிபர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட்பாருக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநகபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக கொடூரம் இழைக்கப்பட்டதாகவும், நாட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள் எனவும் அவர்கள் கூட்டாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரமும் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

http://newsfirst.lk/tamil/2017/06/சர்வதேசத்திற்கு-காணொளி/

  • Replies 184
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு: உறைய வைக்கும் தகவல்கள்!

வித்தியா கொலை வழக்கு: உறைய வைக்கும் தகவல்கள்!
 
2015 ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமையின் பின் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என ஐந்தாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமா அதிபர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட்பாருக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதற்காக சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்தார் என்றும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார் என்றும் குறிப்பிட்டார்.

வழக்கின் ஒன்பது சந்தேக நபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி அவர்களே மாணவியை கொலை செய்துள்ளனர். சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக கொடூரம் இழைக்கப்பட்டதோடு, நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கம் இல்லை. வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள். அவர்கள் அனைவரும் கூட்டாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருக்கின்றது. விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிக்கவுள்ளேன். – என்று பதில் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்தார். அதற்கான ஆதாரமும் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

http://uthayandaily.com/story/8307.html

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
 
சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அறிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமான Trial at Bar விசாரணைகளின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், வித்தியா படுகொலை வழக்கின் விசாரணை இன்று ஆரம்பமானது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற சட்டவாதி ஷகிப் ஸ்மாயில், அரச சட்டத்தரணி லக்சி இ சில்வா மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் இன்று பகிரங்க நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர்.

வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் Trial at Bar முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்ட மா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் Trial at Bar -க்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, நீதிமன்றத்தில் ஆஜரான பதில் சட்ட மா அதிபர் இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள சிறுவயது பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு மூலம் ஆபாசப்படம் எடுத்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை 9 ஆவது எதிரி சுவிஸ் குமார் மேற்கொண்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக பாடசாலை மாணவி வித்தியா கொடுமையான, மிருகத்தனமான, கேவலமான பாலியல் வல்லுறவுக்கொலை மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியைக் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொடூரம் இழைக்கப்பட்டதாகவும் நாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த சம்பவம் இடம்பெற்றதைக் கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்துடனான ஆட்கடத்தல், சதித்திட்டத்துடனான கூட்டு பாலியல் வல்லுறவு, சதித்திட்டத்துடனான கொலை என்பவற்றைப் புரிந்த முக்கிய சூத்திரதாரிகள் 2 ஆம் 3 ஆம் 5 ஆம் 6 ஆம் இலக்க சந்தேகநபர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் குற்றம் புரிவதற்கு, ஏனையவர்கள் குற்ற உடந்தைகளாக இருந்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின் கழுத்தை, இவர்கள் திருகி கொலை செய்தமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தலையின் பின்புறத்திலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்ததை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவை ஒவ்வொரு சந்தேகநபரும் பல தடவைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவியின் பெண்குறியின் உட்புறமும் வெளிப்புறமும் மிகவும் மோசமாக சிதைவடைந்திருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றபோது ஐந்தாம், ஆறாம் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியில் அதனைப் பதிவு செய்து, இரண்டு காணொளிகளையும் இணைத்து முழுமையான காணொளியொன்றைத் தயாரித்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோக சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தை மன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வழக்கு தனியொரு வழக்காக பதிவு செய்யப்படும் என்பதையும் பதில் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சிலர் பாதுகாக்க முயற்சித்து வந்ததாகவும், பாதுகாக்க முயன்றவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நண்பகல் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, சுமார் 4 மணித்தியாலங்கள், வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அனுப்பி வைத்த 16 சான்றுப் பொருட்களை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொன்றாகப் பிரித்து அவற்றை அடையாளம் காணுமாறு, வித்தியாவின் தாயாரிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் தனது மகளுடையது என சிவலோகநாதன் சரஸ்வதி அடையாளம் காண்பித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் கிழிந்த சீருடை, காண்பிக்கப்பட்டபோது, அவரது தாயார் நீண்ட நேரம் கதறியழுதுள்ளார்.

வழக்கின் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் சார்பில் அரச சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன சிவலோகநாதன் சரஸ்வதியிடம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.

ஐந்தாம் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகன் ரகுபதி குறுக்கு விசாரணை நடத்தியபோது, வழக்கு விசாரணைக்குத் தேவையான கேள்விகளை மாத்திரம் கேட்குமாறு மூன்று நீதிபதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறுக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சாட்சியாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள 36 பேரில் 32 ஆவது சாட்சியாளரைக் கைது செய்து நாளை மறுதினம் (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் 11ஆவது சந்தேகநபர் தனது மகளின் திருமணத்திற்காக இந்தியா செல்வதற்கு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு அனுமதியளித்தது.

கடந்த வழக்கு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, யாழ். மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நாளை (29) வரை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை நாளை காலை 9.30க்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுதான் முதற்தடவையாக மூன்று நீதிபதிகள் அடங்கிய Trial at Bar விசாரணை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக பதில் சட்ட மா அதிபர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/06/வித்தியா-படுகொலை-வழக்கின/

4 hours ago, நவீனன் said:

அத்துடன் இதற்காக சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்தார் என்றும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார் என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச காவல் அமைப்புகள் இன்ரபோல் போன்றவற்றின் உதவியுடன் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

43 minutes ago, நவீனன் said:

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
 
ஐந்தாம் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகன் ரகுபதி குறுக்கு விசாரணை நடத்தியபோது, வழக்கு விசாரணைக்குத் தேவையான கேள்விகளை மாத்திரம் கேட்குமாறு மூன்று நீதிபதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஆர் இந்த கோடாலி காம்ப ? நல்லா நாலு வார்த்தைகளால் திட்ட தோன்றுது

  • கருத்துக்கள உறவுகள்

அட... கடவுளே......
இப்படியும், தமிழ் சனம் இருக்குமா?
அதுகும்... சுவிஸில் இருந்து போன, சுவிஸ் குமார். என்ற கயவனுக்கு, 
இப்படியும், உழைக்க வேண்டும்.... என்ற எண்ணம்  ஏன், வந்தது?

வெட்கம் கெட்ட மனிதன்.  தான்.. பிறந்து வளர்ந்த இடத்தில், காலை  பாடசாலைக்கு,
உற்சாகமாக.... சீருடை  அணிந்து, பல கனவுகளுடன் சென்ற...
மாணவியை தொட... எப்படி, மனம் வந்தது?

அன்றே... அந்த இடத்தில்,  இந்தக் கயவர் கூட்டத்தை...   அடித்தே...***.

Edited by மோகன்
(தவறாக, குறிப்பிட்ட பெயர் திருத்தப் பட்டது.)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

சர்வதேச காவல் அமைப்புகள் இன்ரபோல் போன்றவற்றின் உதவியுடன் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆர் இந்த கோடாலி காம்ப ? நல்லா நாலு வார்த்தைகளால் திட்ட தோன்றுது

காசுக்கு  கூவும் தொழில் தானே?

மக்களிடம்  வாங்கிக்கட்டட்டும்

14 minutes ago, தமிழ் சிறி said:

அட... கடவுளே......
இப்படியும், தமிழ் சனம் இருக்குமா?
அதுகும்... சுவிஸில் இருந்து போன, ரஞ்சன் என்ற கயவனுக்கு, 

மிகவும் தவறான தகவல் இது தமிழ் சிறி. சுவிஸ் ரஞ்சன் அல்ல சுவிஸ் குமார். இருவரும் வேறு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மிகவும் தவறான தகவல் இது தமிழ் சிறி. சுவிஸ் ரஞ்சன் அல்ல சுவிஸ் குமார். இருவரும் வேறு

தவறை...  சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி  நிழலி.  திருத்தி விடுகின்றேன்.

ஆரம்பத்தில்... இது நடந்த போது, அதிர்ச்சியாக வாசித்தேன். 
பின்... வழக்குகள்,  எல்லாம் இழு படும் போதும், 
அந்தப் பிள்ளையின் தாய்.... நீதிமன்றத்தில்... கதறி,  மயங்கி விழும் செய்திகளை,
வாசிக்கும் போதும், எனக்கு... இது விடயமாக, வாசிக்க... மனம்  இடம் கொடுக்கவில்லை. 
அதனால்.... தலைப்பு செய்திகளை மட்டும், வாசித்து விட்டு போவேன். அதனால்... ஏற்பட்ட பெயர் குழப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

மிகவும் தவறான தகவல் இது தமிழ் சிறி. சுவிஸ் ரஞ்சன் அல்ல சுவிஸ் குமார். இருவரும் வேறு

இதன்  பின்னணிகளில் பலருண்டு

இதனை ஆரம்பித்து ஊக்குவித்தவர்களும்

என்ன  செய்தாலும் தப்பிக்கலாம் என்றநிலையை கொண்டு வந்தவர்களும்  ஈபிடிபியினர் தான்.

இதன் தொடர்ச்சி  மிகவும் பாரதூரமானது

ஒரு சர்வதேச சந்தையாகவும்

அராஐகங்களின்  தாதாக்களின் கூடாரமாகவும் ஒரு தீவை கொண்டுவரும் முயற்ச்சியை

வித்தியா தனது உயிரைக்கொடுத்தும்

மக்கள்  எழுச்சி  பெற்றும் நீக்கியது  என்பது வரலாற்றில் பெரும் நன்றியுடன்  பதிவாகும்.

  • தொடங்கியவர்

சர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார்.

vithya.jpg
 
புங்குடுதீவு மாணவி கொலை சர்வதேச தரத்தில் திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் எனவும் , அதன் பின்னால் சர்வதேச ரீதியில் சிலர் செயற்பட்டு உள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா  ” ரயலட் பார் ” முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன் கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்  ” ரயலட் பார் ” முறைமையில் நடைபெற்றது.
 
பதில் சட்டமா அதிபர் முன்னிலை. 
 
இன்றைய வழக்கு விசாரணைக்கு பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தீர்ப்பாயம் முன்பில் முன்னிலையாகி இருந்தார். அவருடன் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நால்வர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
05 சான்று பொருட்கள் , 12 சாட்சியங்கள் இணைப்பு. 
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது. அதன் போது பதில் சட்டமா அதிபர் , குற்ற பகிர்வு பத்திரத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் , சான்று பொருட்கள் பட்டியலில் மேலும் 05 சான்று பொருட்களை உள்ளடக்கவும் , மேலும் 12 சாட்சியங்களை இணைக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நீதிபதிகள் அனுமதித்தனர்.
 
அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரம் திறந்த மன்றில் எதிரிகளுக்கு வாசித்து காட்டப்பட்டது. குறித்த எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் அதன் போது முன்வைக்கப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுகளையும் எதிரிகள் மறுத்தனர்.
 
05 எதிரிகள் மீது கடத்தல் , வன்புணர்வு மற்றும் கொலை குற்றம். 
04 எதிரிகள் மீது சதித்திட்டம் தீட்டியமை, உடந்தை ஆகிய குற்றம். 
 
அதில் 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.  ஏனைய 4ம் , 7ம் , 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
 
ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் இல்லை. 
 
 5ம் எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்கையில் , அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் , அதற்கு உதவுதல் , அதற்கு சதித்திட்டம் தீட்டுதல் , வெடி பொருட்கள் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் போன்ற குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவே ட்ரயலட் பார் விசாரணைக்கு அதிகாரம் உண்டு.
 
இத்தகைய எந்தவிதமான குற்றசாட்டுக்களும் இங்குள்ள எதிரிகள் மீது சுமத்தப்படவில்லை எனவே இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த ட்ரயலட் பார் க்கு இல்லை என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
 
பதில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.
 
அதற்கு பதில் சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். சட்டத்தரணி கூறிய குற்ற செயல்கள் தொடர்பில் கட்டாயம் ட்ரயலட் பார் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு விசேட வழக்கு என்பதினால் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரதம நீதியரசாரால் இந்த ட்ரயலட் பார் அமைக்கப்பட்டது என தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.
 
 ட்ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் உண்டு. 
 
அதனை தொடர்ந்து நீதிபதிகள் தமது கட்டளையில் , மூன்று நீதிபதிகளும் 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை ஏக மனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவை கருதி , அதன் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயலட் பார் அமைக்கபப்ட்டது. என தெரிவித்தது 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை நிராகரித்தனர்.
 
பதில் சட்டமா அதிபர் மன்றில் முன் உரை ,
 
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பணத்தில் ட்ரயலட் பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்ட வலுவான நீதியை நிலைநாட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.
 
இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டு , கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் மாணவி சிவலோகநாதன் வித்தியா. இந்த கொடூர சம்பவம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
 
இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் சட்ட நீதி ஒழுங்கில் பாரிய நீதி பிறழ்வையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பய பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.
 
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் இணைந்து குற்றபுலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனூடாக காட்டுமிராண்டி தனமாக படுகொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய 9 எதிரிகளை அவர்கள் இனம் கண்டனர்.
 
குற்றபுலனாய்வு துறையின் விசாரணைக்கு ஆலோசனைகளையும் , நெறிப்படுத்தல்களையும் சட்டமா அதிபர் வழங்கி இருந்தார். இரவு பகலாக குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பல சிரமங்கள் மத்தியில் முன்னெடுத்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணைகளின் ஊடான தீர்ப்பு நல்ல செய்தியினை சொல்லும் என நம்புகின்றேன். இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கபப்ட்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இந்த வழக்கில் சம்பந்தபப்ட்டவர்களின்  உரித்துக்களை பாதுகாக்கப்படும் எனவும் நம்புகின்றேன்.
 
எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக புதிய வழக்கு.  
 
இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் , சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் பிறிதொரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.
 
சர்வதேச ரீதியில் சதிதிட்டம். 
 
இந்த கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம். இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம்.  இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.
 
இந்த குற்ற செயல் தொடர்பில் சூழ்நிலை சான்றுகளும் , நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்ற செயலுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்கள் உள்ளன.
 
பிரதான சூத்திர தாரி சுவிஸ் குமார். 
 
அதன் அடிப்படையில் இந்த குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.
 
ஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.
 
கூட்டு வன்புணர்வினை நேரடி ஒளிப்பதிவு. 
 
சர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.
 
சுவிஸ் குமார் தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முயற்சி. 
 
அதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.
 
நால்வர் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர். 
 
இந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இவர்கள் நால்வரும் மாறி மாறி மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதனால் மாணவியின் பிறப்பு உறுப்பு மிகவும் மோசமாக பாதிப்படைந்து இருந்ததாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
வன்புணர்வை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.
வெளிநாட்டுக்கும் வீடியோ விற்பனை செய்யப்ட்டு உள்ளது. 
 
இந்த கூட்டு வன்புணர்வினை 5ம் மற்றும் 6ம் எதிரிகள் வீடியோ காட்சியாக தமது கையடக்க தொலை பேசிகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி ஒரு முழுமையான வீடியோ காட்சியாக தயாரித்து அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
 
விசாரணைகளின் ஊடாக வீடியோ காட்சிகளை மீள எடுப்பதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களால் அதனை பெற முடியவில்லை. இருந்த போதிலும் , விற்பனை செய்தமைக்கான சான்று ஆதாரங்களை பெற்றுகொண்டு உள்ளனர்.
 
பாழடைந்த வீட்டினுள் வைத்தே வன்புணர்ந்தனர். 
வீட்டின் வெளியே வைத்தே மாணவியை கொலை செய்தனர். 
 
மாணவியை 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் பாழடைந்த வீட்டினுள் வைத்தே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர். பின்னர் மாணவியின் சடலம் கிடந்த இடத்திற்கு மாணவியை தூக்கி வந்து அங்குள்ள மரங்களில் கைகள் மற்றும் கால்களை கட்டி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அதன் போது மாணவி மூச்சடக்கி மரணமடைந்துள்ளார். அதேவேளை மாணவியின் தலையின் பின் புறத்திலும் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது.
 
41 குற்ற சாட்டுக்களும் நிரூபிக்கப்படும். 
 
இந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கப்பட்டு உள்ள 41 குற்ற சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என திடமாக நம்புகின்றேன் என தனது உரையில் பதில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
 
கண்ணீருடன் சாட்சி கூண்டில் இருந்து மாணவியின் தாய் சாட்சியம். 
 
எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். வீட்டில் இருந்து பாடசாலை செல்ல ஒன்று தொடக்கம் ஒன்றரை மணித்தியாலம் தேவைப்படும். பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா ) வித்தியா பாடசாலை செல்லும் போது அழைத்து செல்வான் சில வேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் வித்தியா கூட படிக்கும் சக பிள்ளைகளுடன் செல்வாள்.
 
எனது கணவர் பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால் எமது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மகன் இடையில் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டார்.
 
வீட்டில் இருந்து பாடசாலை செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றை காடுகள் பாழடைந்த வீடுகள் உள்ளன. அவற்றை தாண்டியே செல்ல வேண்டும். வீதி குன்றும் குழியுமாக இருக்கும் மழை காலத்தில் அந்த வீதியினை பயன்படுத்த முடியாது. அந்த வீதியில் பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாக காணப்படும். பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான் அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும், ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாக இருக்கும்.
 
சம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள். நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் .அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றாள். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.
 
பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.
 
அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள். அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.
 
பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள் என போலீசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.
 
போலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய ஓட்டோவில் சென்று இருந்தோம். ஓட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது ஓட்டோ சாரதி சொன்னார் ‘நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடி சந்தியில் காண்கிறனான். இன்றைக்கு காணவில்லை. எனவே அவர் வீட்டுக்கும் ஆலடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும். எனவே அந்த பகுதிகளில் தேடி பாருங்கள் ‘என கூறினார்.
 
அன்றைய தினம் மழை பெய்து கொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும் நாம் இரவு தேடாமல் வீட்டுக்கு சென்று விட்டோம். மீண்டும் மறுநாள்  காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்கள் இவர்களுடன் வித்தியாவை தேடி சென்றோம்.
 
அதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.
 
அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா ” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.
 
நான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
 
பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாண சிறையில் எதிரிகள். 
 
எதிரிகள் ஒன்பது பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என அனுராதபுர சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
 
நாளையும் சாட்சி பதிவு தொடரும். 
 
நாளைய தினம் ஏனைய சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.
 
http://globaltamilnews.net/archives/31222

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பணத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்...மகளின்ட கல்யாணத்திறகு போவதற்காக ஒருத்தர் பிணை கேட்கிறார்...எந்த மூஞ்சியை வைச்சுக் கொண்டு போவார்?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கையிலையும் விலங்கு போட்டு ஒரு சொட்டைத்தலை தனியாக பின்னாலை போகிறது யார் ?
ஓடி தப்ப விட்டிடுவானுக மற்றவையோடை சேர்த்து கொழுவி கூட்டிட்டு போகணும்.

35 minutes ago, தமிழ் சிறி said:

அந்தப் பிள்ளையின் தாய்.... நீதிமன்றத்தில்... கதறி,  மயங்கி விழும் செய்திகளை,
வாசிக்கும் போதும், எனக்கு... இது விடயமாக, வாசிக்க... மனம்  இடம் கொடுக்கவில்லை. 
அதனால்.... தலைப்பு செய்திகளை மட்டும், வாசித்து விட்டு போவேன். அதனால்... ஏற்பட்ட பெயர் குழப்பம். 

உண்மை தமிழ். அதுவும் எமக்கு ஒரு மகளும் இருக்குமாயின் இவற்றை  வாசிக்கும் போது கடுமையான எழும் துயரமும் ஆத்திரமும் வருகின்றது.

என்னை பொறுத்தவரைக்கும் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. மரணம் எல்லா பாவங்களையும் கழுவி அவற்றில் இருந்து விடுதலை கொடுத்து விடும். இவர்களுக்கு ஆயுள் முழுதும் வெளியே வர விடாமல் கடூழிய சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும். தினம் தினம் ஒவ்வொரு வினாடியும் தாம் செய்த தவறுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அது  மட்டும்  போதாது

ஒவ்வொரு நாளும் ஆயுள் பூராகவும் தோலை  உரிச்சு

அவர்களை வெயிலில் காய  விடணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களாவது செய்த குற்றத்தை உணருகின்றதாவது<_<

  • தொடங்கியவர்
58 minutes ago, நவீனன் said:

சர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார்.

எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக புதிய வழக்கு.  
 
இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் , சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் பிறிதொரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.
 
http://globaltamilnews.net/archives/31222

இவர்களுக்கு எதிராக மிகவிரைவில் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பணத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்...மகளின்ட கல்யாணத்திறகு போவதற்காக ஒருத்தர் பிணை கேட்கிறார்...எந்த மூஞ்சியை வைச்சுக் கொண்டு போவார்?

இது, வேறை.... நடக்குதா?  எங்கை....  ரதி? tw_rage:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, தமிழ் சிறி said:

இது, வேறை.... நடக்குதா?  எங்கை....  ரதி? tw_rage:

சிறித்தம்பி! எந்த உலகத்திலை இருக்கிறியள்????
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எந்த உலகத்திலை இருக்கிறியள்????
 
குமாரசாமி  அண்ணை,  எனது உலகம். சிறியது. :)
நடப்பவற்றை பார்க்கும் போது.... அப்படியே... இருப்பது, நல்லது போல் உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணை,  எனது உலகம். சிறியது. :)
நடப்பவற்றை பார்க்கும் போது.... அப்படியே... இருப்பது, நல்லது போல் உள்ளது. 

அதுவும் நல்லதுதான்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இலகுவாக பாரிய குற்றசெயலை செய்யவும் செய்தபின் தப்பித்து கொழும்பு மட்டும் போய் பிடிபட்டதும் ,தாங்கள் செய்த செயல் பற்றி எந்த குற்ற உணர்வும் அன்றி வித்யாவின் குடும்பத்தை விசாரணை நடக்கும் காலத்திலே ஜெயிலில் இருந்தபடியே வெருட்டினது எல்லாம் பார்க்கும்போது சொரிலங்கன் அதிகாரபீட பெரிய கைகளின் உதவியன்றி இவ்வளவு திமிராக இருக்க வாய்ப்பில்லை மேலும் இந்த சுவிஸ்குமார்  வடக்கில் நடந்த பாலியல் வல்லுறவு சம்வங்களிலும் இவரின் பங்களிப்பு இருக்கின்றதா என தேட வேண்டி உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
 
சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அறிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமான Trial at Bar விசாரணைகளின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், வித்தியா படுகொலை வழக்கின் விசாரணை இன்று ஆரம்பமானது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற சட்டவாதி ஷகிப் ஸ்மாயில், அரச சட்டத்தரணி லக்சி இ சில்வா மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் இன்று பகிரங்க நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர்.

வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் Trial at Bar முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்ட மா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் Trial at Bar -க்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, நீதிமன்றத்தில் ஆஜரான பதில் சட்ட மா அதிபர் இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள சிறுவயது பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு மூலம் ஆபாசப்படம் எடுத்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை 9 ஆவது எதிரி சுவிஸ் குமார் மேற்கொண்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக பாடசாலை மாணவி வித்தியா கொடுமையான, மிருகத்தனமான, கேவலமான பாலியல் வல்லுறவுக்கொலை மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியைக் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொடூரம் இழைக்கப்பட்டதாகவும் நாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த சம்பவம் இடம்பெற்றதைக் கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்துடனான ஆட்கடத்தல், சதித்திட்டத்துடனான கூட்டு பாலியல் வல்லுறவு, சதித்திட்டத்துடனான கொலை என்பவற்றைப் புரிந்த முக்கிய சூத்திரதாரிகள் 2 ஆம் 3 ஆம் 5 ஆம் 6 ஆம் இலக்க சந்தேகநபர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் குற்றம் புரிவதற்கு, ஏனையவர்கள் குற்ற உடந்தைகளாக இருந்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின் கழுத்தை, இவர்கள் திருகி கொலை செய்தமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தலையின் பின்புறத்திலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்ததை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவை ஒவ்வொரு சந்தேகநபரும் பல தடவைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவியின் பெண்குறியின் உட்புறமும் வெளிப்புறமும் மிகவும் மோசமாக சிதைவடைந்திருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றபோது ஐந்தாம், ஆறாம் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியில் அதனைப் பதிவு செய்து, இரண்டு காணொளிகளையும் இணைத்து முழுமையான காணொளியொன்றைத் தயாரித்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோக சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தை மன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வழக்கு தனியொரு வழக்காக பதிவு செய்யப்படும் என்பதையும் பதில் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சிலர் பாதுகாக்க முயற்சித்து வந்ததாகவும், பாதுகாக்க முயன்றவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நண்பகல் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, சுமார் 4 மணித்தியாலங்கள், வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அனுப்பி வைத்த 16 சான்றுப் பொருட்களை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொன்றாகப் பிரித்து அவற்றை அடையாளம் காணுமாறு, வித்தியாவின் தாயாரிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் தனது மகளுடையது என சிவலோகநாதன் சரஸ்வதி அடையாளம் காண்பித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் கிழிந்த சீருடை, காண்பிக்கப்பட்டபோது, அவரது தாயார் நீண்ட நேரம் கதறியழுதுள்ளார்.

வழக்கின் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் சார்பில் அரச சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன சிவலோகநாதன் சரஸ்வதியிடம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.

ஐந்தாம் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகன் ரகுபதி குறுக்கு விசாரணை நடத்தியபோது, வழக்கு விசாரணைக்குத் தேவையான கேள்விகளை மாத்திரம் கேட்குமாறு மூன்று நீதிபதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறுக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சாட்சியாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள 36 பேரில் 32 ஆவது சாட்சியாளரைக் கைது செய்து நாளை மறுதினம் (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 hour ago, தமிழ் சிறி said:

இது, வேறை.... நடக்குதா?  எங்கை....  ரதி? tw_rage:

கடந்த வழக்கு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, யாழ். மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நாளை (29) வரை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை நாளை காலை 9.30க்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுதான் முதற்தடவையாக மூன்று நீதிபதிகள் அடங்கிய Trial at Bar விசாரணை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக பதில் சட்ட மா அதிபர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/06/வித்தியா-படுகொலை-வழக்கின/

  • கருத்துக்கள உறவுகள்

சுவீஸ் குமார்...
இவன் பெயரில் சுவீஸ் இருப்பதால் சுவீஸுக்கு அவமானம்...
இவன் பெயரில் குமார் இருப்பதால் தமிழுக்கு அவமானம்...
மொத்த அவமானத்தின் சின்னம்...

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் 2006இல் தொண்டு நிறுவனத்திற்கு வேலை செய்யும் 
8 பேரை கடத்தி 
கருணாவும் அவன் கும்பலும் 
அதில் இருந்த பெண்களை இதை விட மோசமாக 
பாலியல் சித்திரவதை செய்தே கொன்றார்கள்.
சிங்கள கூலிகளாக நாய்கள் வாழ்வதால் 
வெளியில் திரிகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.