Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!

Featured Replies

விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!
 
விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!

விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!

வடமாகாண முதலமைச்சர் தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்ததாகவும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கே அவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பரு­த்தித்­து­றை­யி­லுள்ள இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில்இ கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் நேற்று முன்தினம் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு பல்வேறுகூட்டங்களில் பேசியுள்ளார். அத்துடன் விரைவில் வடமாகாணத்துக்கான புதிய அமைச்சரவையொன்றை நியமிப்பதுதொடர்பிலும் பேசியுள்ளார்.

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்படவிருந்த நான்குபேரில் ஒருவரே தனக்கு இத்தகவலைத் தெரிவித்ததாகவும், இதன்பின்னரே தான் முதலமைச்சருக்கு கடிவாளம் போடுவதற்கு திட்டமிட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டதாகவும்தெரிவித்துள்ளார்.

இன்­னும் இரு வாரங்­க­ளுக்குள் புதிய அரசமைப்புக் கான இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு விடும் எமது கட்­சி­யின் சார்­பில் இ.ஆனோல்ட்டை அமைச்சராக நிய­மிக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ருக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளோம். முத­ல­மைச்­சர் எமது கட்­சி­யின் விருப்­புக்கு மாறாக அமைச்­சர்­களை நிய­மித்­தால்இ நாம் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப் போவ­தில்லை. மக்­க­ளுக்கு உண்­மை­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­துவோம்.

அத்துடன், தமது கட்சிசார்ந்த விடயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக விரைவில் பத்திரிகையொன்றையும் வெளியிடவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=72295

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் இவருக்கு ஆப்பு.

இவர்கள் வெளியில் விட்ட இராண்டாம் பெரும்பான்மை வாக்குப் பெற்ற அனந்திக்கு அமைச்சுப் பதவி வழங்கியதன் மூலம்.. அந்தாள்.. இவருக்கு.. உச்சந்தலையில் சாத்தி இருக்குது.

இவர் வலிக்காதமாதிரி நடிக்க வேண்டியான். 

மக்கள் முன் சம் சும் கும்பலின் பித்தலாட்டம் எனி வேர்க்கவுட் ஆகாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:
 
விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!

அத்துடன், தமது கட்சிசார்ந்த விடயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக விரைவில் பத்திரிகையொன்றையும் வெளியிடவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=72295

எதற்காக புதிய பத்திரிகை.?????  உதயன் பத்திரிகை காலை வாரினாலும் வாரிவிடும், என்ற பயம்போலும்.:unsure: :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியருக்கு கடிவாளம் போட இவையால முடியாது
இவையால சும்மா எம்பி எம்பிதான் குதிக்கேலும்.
சின்னக்கதிர்காமருக்கு சனங்கள் சீக்கிரம் லாடன் அடிச்சு ந** எடுப்பினம் கொஞ்சம் பொறுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

விக்கியருக்கு கடிவாளம் போட இவையால முடியாது
இவையால சும்மா எம்பி எம்பிதான் குதிக்கேலும்.
சின்னக்கதிர்காமருக்கு சனங்கள் சீக்கிரம் லாடன் அடிச்சு ந** எடுப்பினம் கொஞ்சம் பொறுங்க.

செயற்திறன் அற்ற
இரண்டு வருடங்களுக்கும்
மேலாக ஊழல்வாதிகளை
அரவணைத்துச் சென்ற,
அதற்கு எதிர்ப்பு வரும்
என்பதற்காக
தமிழக அரசியல் தவளைகள்
போன்று
உணர்ச்சி அரசியல் செய்து
மக்களை ஏமாற்றிய
விக்கி ஐயாவுக்கு
எல்லாம் பெரிய பிளான்
போட்டு கடிவாளம்
போடத் தேவையில்லை

நிர்வாகத் திறனும்
செயற் திறனும்
அறவே அற்ற இவரால்
ஒரு போதும்
அரசியல் தலைவராக
வரவும் முடியாது

இன்னும் கொஞ்சம்
உணர்ச்சி அரசியல்
செய்து மக்களை ஏமாற்றினால்
ஒரு எம்பி பதவி வேண்டும்
என்றால் கிடைக்கும்
ஆனால் ஒரு போதும்
இவரால் அரசியல் தலைவராக
முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வைரவன் said:

செயற்திறன் அற்ற
இரண்டு வருடங்களுக்கும்
மேலாக ஊழல்வாதிகளை
அரவணைத்துச் சென்ற,
அதற்கு எதிர்ப்பு வரும்
என்பதற்காக
தமிழக அரசியல் தவளைகள்
போன்று
உணர்ச்சி அரசியல் செய்து
மக்களை ஏமாற்றிய
விக்கி ஐயாவுக்கு
எல்லாம் பெரிய பிளான்
போட்டு கடிவாளம்
போடத் தேவையில்லை

நிர்வாகத் திறனும்
செயற் திறனும்
அறவே அற்ற இவரால்
ஒரு போதும்
அரசியல் தலைவராக
வரவும் முடியாது

இன்னும் கொஞ்சம்
உணர்ச்சி அரசியல்
செய்து மக்களை ஏமாற்றினால்
ஒரு எம்பி பதவி வேண்டும்
என்றால் கிடைக்கும்
ஆனால் ஒரு போதும்
இவரால் அரசியல் தலைவராக
முடியாது

அப்போ

இத்தனையாம்  திகதி தமிழருக்கு தீர்வு  வருகுது  என்பவர்களால் தான் தமிழருக்கு தலைவராகலாம்  என்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இவர்கள் வெளியில் விட்ட இராண்டாம் பெரும்பான்மை வாக்குப் பெற்ற அனந்திக்கு அமைச்சுப் பதவி வழங்கியதன் மூலம்.. அந்தாள்.. இவருக்கு.. உச்சந்தலையில் சாத்தி இருக்குது.

மக்கள் இவருக்கு
வாக்கு போட்டது
எழிலனுக்காக
விடுதலைப் புலிகள்
மீது கொண்ட
பாசத்திற்காக

ஆனால் இவர்
ஜெனிவாவுக்கு
ஓசி டிக்கெட்டில்
வந்து போனதை தவிர
இதுவரைக்கும் சாதிச்சது
ஒன்றும் இல்லை

16 minutes ago, விசுகு said:

அப்போ

இத்தனையாம்  திகதி தமிழருக்கு தீர்வு  வருகுது  என்பவர்களால் தான் தமிழருக்கு தலைவராகலாம்  என்கிறீர்கள்

உருப்படியான ஒரு
அரசியல் தீர்வு
இவர்கள் மூலம்
வரவே வராது என்று
சொல்லும் என்னிடம்
இந்த கேள்வி
செல்லாது

ஆனால்

சபை குழப்பி
விக்கி ஐயாவை விட

சம் சும் கூட்டத்தின்
இருப்பு இன்று
அவசியம்

ஏன் அவசியம் என்பதை
திங்கள் திறக்க இருக்கும்
மயிலிட்டித் துறையும்
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும்

மீண்டும் மீண்டும் சொல்லும்
உங்களுக்கு

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வைரவன் said:

மக்கள் இவருக்கு
வாக்கு போட்டது
எழிலனுக்காக
விடுதலைப் புலிகள்
மீது கொண்ட
பாசத்திற்காக

ஆனால் இவர்
ஜெனிவாவுக்கு
ஓசி டிக்கெட்டில்
வந்து போனதை தவிர
இதுவரைக்கும் சாதிச்சது
ஒன்றும் இல்லை

உருப்படியான ஒரு
அரசியல் தீர்வு
இவர்கள் மூலம்
வரவே வராது என்று
சொல்லும் என்னிடம்
இந்த கேள்வி
செல்லாது

ஆனால்

சபை குழப்பி
விக்கி ஐயாவை விட

சம் சும் கூட்டத்தின்
இருப்பு இன்று
அவசியம்

ஏன் அவசியம் என்பதை
திங்கள் திறக்க இருக்கும்
மயிலிட்டித் துறையும்
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும்

மீண்டும் மீண்டும் சொல்லும்
உங்களுக்கு

ம்ம்ம்

நாவற்குளி  சிங்கள  குடியேற்றமும்

அங்குலத்துக்கு  அங்குலம் முளைக்கும்  பௌத்தவிகாரையும்

பௌத்த  பிக்குகளின்  ரத்த  தானமும் 

சொல்லாத  செய்தியை இவை  சொல்லப்போவதில்லை

இப்பொழுதெல்லாம்

சலுகைகளே கண்ணில் தெரிகின்றன

முழுமையாக  தமிழர்கள்  விழுங்கப்படுவதும்

பொய் பேசி  மக்களை  ஏமாற்றுவதும்  தேவையான  பொருளாக  பார்க்கப்படுகிறது

இதுக்கு சாணக்கியம்  என்று  பெயர் வேறு...

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வைரவன் said:

ஏன் அவசியம் என்பதை
திங்கள் திறக்க இருக்கும்
மயிலிட்டித் துறையும்
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும்

20 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

நாவற்குளி  சிங்கள  குடியேற்றமும்

அங்குலத்துக்கு  அங்குலம் முளைக்கும்  பௌத்தவிகாரையும்

பௌத்த  பிக்குகளின்  ரத்த  தானமும் 

சொல்லாத  செய்தியை இவை  சொல்லப்போவதில்லை

இப்பொழுதெல்லாம்

சலுகைகளே கண்ணில் தெரிகின்றன

முழுமையாக  தமிழர்கள்  விழுங்கப்படுவதும்

பொய் பேசி  மக்களை  ஏமாற்றுவதும்  தேவையான  பொருளாக  பார்க்கப்படுகிறது

இதுக்கு சாணக்கியம்  என்று  பெயர் வேறு...

உங்கள் நேரத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

நாவற்குளி  சிங்கள  குடியேற்றமும்

அங்குலத்துக்கு  அங்குலம் முளைக்கும்  பௌத்தவிகாரையும்

பௌத்த  பிக்குகளின்  ரத்த  தானமும் 

சொல்லாத  செய்தியை இவை  சொல்லப்போவதில்லை

இப்பொழுதெல்லாம்

சலுகைகளே கண்ணில் தெரிகின்றன

முழுமையாக  தமிழர்கள்  விழுங்கப்படுவதும்

பொய் பேசி  மக்களை  ஏமாற்றுவதும்  தேவையான  பொருளாக  பார்க்கப்படுகிறது

இதுக்கு சாணக்கியம்  என்று  பெயர் வேறு...

சரி
விக்கி ஐயா
அல்லது கஜேந்திரகுமார்
வந்தால் / வந்து இருந்தால்
இவற்றை நிறுத்தி இருக்க
அல்லது
நிறுத்த முடியுமா?

பெளத்தம் அரச
மதமாக
அரசமைப்பில் இருக்கும்
வரைக்கும்
இது சாத்தியமில்லை

அதை மாற்ற கூடிய
அரசியல் பலமோ
பொருளாதாரமோ
எமக்கு இன்னும்
இல்லை

அதை வளர்த்தெடுக்க
எமக்கு ஒரு
நல்லிணக்க அரசியல்
கண்டிப்பாக வேண்டும்
அதற்கு
சம் சும்
கட்டாயம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

சம் சும்
கட்டாயம் வேண்டும்

நாங்க ஊரில் இருக்கிறம் சாமி எங்களூக்கு இவங்க வேண்டாம்    எலக்‌ஷன் இவங்களுக்கு ஒரு பாடம் சொல்லி  கொடுக்கும் விக்கியர் பிரிந்து இருந்தால் :104_point_left:

ஒன்றும் இல்லை அந்த ப்பாடம் கன பேர் வீட்டுக்குள்ளேயே இருந்திருப்பர் காலம் பதில் சொல்லும் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கைப்புண்ணைக் கூட கண்டுகொள்ள முடியாமல் கண்ணாடி தேடுகிறான். 70 ஆண்டுகால வாழ்க்கை தந்த அனுபவத்தைக் கூடக் கண்டுகொள்ள முடியாது தவிக்கின்றான். தமிழனை பொருளாதாரத்தில் மேம்படுத்தி விட்டால் போதும் என்ற நிலையில் சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மண்ணில் நிறுவிய காகித ஆலை, சீமேந்து தொழிற்சாலை, இரசாயணத் தொழிற்சாலைகள் எல்லாம் எங்கே...??? தமிழருக்காக தமிழ்மண்ணில் நிறுவிய பல்கலைக் கழகங்கள் இன்று யாருடைய ஆளுமையில் உள்ளன....??? தற்போது நிறுவப்போகும்.....

மயிலிட்டித் துறையும்....
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும் .......???

ஆயுதத்தால் தமிழனுக்கு வாழ்வுதர வந்தவனை அழித்தாயிற்று. இனி அறிவால் தமிழனுக்கு வாழ்வுதர முயல்பவனையும் அழித்துவிட சம், சுங் போன்றவர்கள் தமிழனுக்கு அவசியம் தேவை.
 
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வைரவன் said:

சரி
விக்கி ஐயா
அல்லது கஜேந்திரகுமார்
வந்தால் / வந்து இருந்தால்
இவற்றை நிறுத்தி இருக்க
அல்லது
நிறுத்த முடியுமா?

பெளத்தம் அரச
மதமாக
அரசமைப்பில் இருக்கும்
வரைக்கும்
இது சாத்தியமில்லை

அதை மாற்ற கூடிய
அரசியல் பலமோ
பொருளாதாரமோ
எமக்கு இன்னும்
இல்லை

அதை வளர்த்தெடுக்க
எமக்கு ஒரு
நல்லிணக்க அரசியல்
கண்டிப்பாக வேண்டும்
அதற்கு
சம் சும்
கட்டாயம் வேண்டும்

பதில்தாயகத்திலிருந்து....

19 minutes ago, தனி ஒருவன் said:

நாங்க ஊரில் இருக்கிறம் சாமி எங்களூக்கு இவங்க வேண்டாம்    எலக்‌ஷன் இவங்களுக்கு ஒரு பாடம் சொல்லி  கொடுக்கும் விக்கியர் பிரிந்து இருந்தால் :104_point_left:

ஒன்றும் இல்லை அந்த ப்பாடம் கன பேர் வீட்டுக்குள்ளேயே இருந்திருப்பர் காலம் பதில் சொல்லும் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

16 minutes ago, Paanch said:

தமிழன் கைப்புண்ணைக் கூட கண்டுகொள்ள முடியாமல் கண்ணாடி தேடுகிறான். 70 ஆண்டுகால வாழ்க்கை தந்த அனுபவத்தைக் கூடக் கண்டுகொள்ள முடியாது தவிக்கின்றான். தமிழனை பொருளாதாரத்தில் மேம்படுத்தி விட்டால் போதும் என்ற நிலையில் சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மண்ணில் நிறுவிய காகித ஆலை, சீமேந்து தொழிற்சாலை, இரசாயணத் தொழிற்சாலைகள் எல்லாம் எங்கே...??? தமிழருக்காக தமிழ்மண்ணில் நிறுவிய பல்கலைக் கழகங்கள் இன்று யாருடைய ஆளுமையில் உள்ளன....??? தற்போது நிறுவப்போகும்.....

மயிலிட்டித் துறையும்....
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும் .......???

ஆயுதத்தால் தமிழனுக்கு வாழ்வுதர வந்தவனை அழித்தாயிற்று. இனி அறிவால் தமிழனுக்கு வாழ்வுதர முயல்பவனையும் அழித்துவிட சம், சுங் போன்றவர்கள் தமிழனுக்கு அவசியம் தேவை.
 
இதுக்கெல்லாம் தமிழரசு கட்சி தான்  காரணம் என்றால்   இல்லை அரசாங்கம் வட கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமைபாட்டில் இருக்கிறது காரணம் யுத்தம் முடிவடைந்து  வட கிழக்கு   இன்னும் எந்த அபிவிருத்தியும்  அடையவில்லை  அரசாங்கம் ராணுவம் விடு விக்கிறது என்றால் அது மக்களின் ந்லன் கருதி அதற்கு இவர்கள் ஒன்றும் புடுங்க வில்லை 

புடுங்கியது முன்னாள் போராளியை மீண்டும் சிறைக்கு  அனுப்பியது தான்   சும் சம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

அரசாங்கம் வட கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமைபாட்டில் இருக்கிறது

அதுக்கு  காரணமேஅந்த போராளிகள் செய்த தியாகங்கள்தான்

ஆனால் இவர்கள் எப்படியாவது அவர்களை  அழிக்கணும்

காட்டிக்கொடுக்கணும்  என்றபடி...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

மக்கள் இவருக்கு
வாக்கு போட்டது
எழிலனுக்காக
விடுதலைப் புலிகள்
மீது கொண்ட
பாசத்திற்காக

ஆனால் இவர்
ஜெனிவாவுக்கு
ஓசி டிக்கெட்டில்
வந்து போனதை தவிர
இதுவரைக்கும் சாதிச்சது
ஒன்றும் இல்லை

அந்த மனிசியைக் கண்டாலே சிலருக்கு வவுத்தால போவுது. கடாசி வீசப் பார்த்திச்சினம். இப்ப அமைச்சர் ஆகிட்டுது. தனக்கில்லாவிட்டாலும்.. தன்னைப் போன்று கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்காவது உதவுவா என்ற நம்பிக்கை இருக்குது. அதுக்காகப் போராடின மனுசி தட்டம் தனிய. இப்பவும்.. எதிரிகளிடம் கையளித்து.. தொலைக்கப்பட்டவர்களுக்காக.. நீதிமன்றம் போய் நிற்குது. tw_blush:

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் புதிய கட்சி தொடங்க இருந்ததால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கின்றார். ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில்லை என்பது கூட சட்ட வல்லுனரும் ஊடக பேச்சாளருமான திரு சுமந்திரனுக்கு தெரியவில்லை.

இன்னும் இரு வாரங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும் என்கின்றார். இவர்கள் மக்களை முட்டாளாக கருதித்தான் அறிக்கை விட்டுக்கொண்டுருக்கின்றார்கள். நேற்றய தினம் பிரதமமந்திரி அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசும் பொழுது இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வரும் என்கிறார். எது உண்மை?

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சசகாலம் பொறுங்கோ எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும்.தமிழ் மக்கள் எல்லாரும் வெளி நாடு வந்த பின்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Suguthar said:

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் புதிய கட்சி தொடங்க இருந்ததால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கின்றார். ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில்லை என்பது கூட சட்ட வல்லுனரும் ஊடக பேச்சாளருமான திரு சுமந்திரனுக்கு தெரியவில்லை.

இன்னும் இரு வாரங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும் என்கின்றார். இவர்கள் மக்களை முட்டாளாக கருதித்தான் அறிக்கை விட்டுக்கொண்டுருக்கின்றார்கள். நேற்றய தினம் பிரதமமந்திரி அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசும் பொழுது இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வரும் என்கிறார். எது உண்மை?

இப்பபசிறீலங்காவிலை 1மாதமென்பது 2வாரமாகிவிட்டுதெண்டு சும் சொல்லுறார். அவர் சொன்னா சரியாத்தானிருக்குமோ!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

சபை குழப்பி
விக்கி ஐயாவை விட

சம் சும் கூட்டத்தின்
இருப்பு இன்று
அவசியம்

ஏன் அவசியம் என்பதை
திங்கள் திறக்க இருக்கும்
மயிலிட்டித் துறையும்
கிளிநொச்சியில் திறக்கப்படும்
பொறியியல் பீடத்தில்
இரு மாடிக்கட்டடமும்

மீண்டும் மீண்டும் சொல்லும்
உங்களுக்கு

சபை குழப்பிகள் சிறிலங்காவில் விக்கியர் அரசிய‌லுக்கு வர முதலே நடைபெற்ற ஒன்று...இந்தியாவின் நலனுக்கு எதிராக வடமகாணத்தில் எதாவது கருத்து சொன்னால் அது இன்று சபை குழப்புவது போன்று தான் தெரியும் ,அதைதான் அன்மையில் வந்த இந்திய தூதுவரும் சொல்லாமல்  சொல்லி சென்றுள்ளார்(தமிழ் அரசியல் வாதிகள் ஒற்றுமை பட வேண்டுமென்று)....தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகள் வரும் பொழுதெல்லாம் சபை குழப்பும் உத்தமர்கள் பற்றி...இனி வரும் தீர்வின் பொழுது ம‍ஹா சபை குழப்பி வருவான் அப்பொழுது எல்லொரும் மீண்டும் ..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Suguthar said:

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் புதிய கட்சி தொடங்க இருந்ததால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கின்றார். ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில்லை என்பது கூட சட்ட வல்லுனரும் ஊடக பேச்சாளருமான திரு சுமந்திரனுக்கு தெரியவில்லை.

இன்னும் இரு வாரங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும் என்கின்றார். இவர்கள் மக்களை முட்டாளாக கருதித்தான் அறிக்கை விட்டுக்கொண்டுருக்கின்றார்கள். நேற்றய தினம் பிரதமமந்திரி அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசும் பொழுது இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வரும் என்கிறார். எது உண்மை?

எனக்கு   சுமத்திரன் காசு குடுத்து பட்டம் வேண்டின ஆள் போல் தான் இருக்கு ஏனென்றால் அவரின் அந்தர்பல்டி அறிக்கைகள் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனி ஒருவன் said:

இதுக்கெல்லாம் தமிழரசு கட்சி தான்  காரணம் என்றால்   இல்லை அரசாங்கம் வட கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமைபாட்டில் இருக்கிறது காரணம் யுத்தம் முடிவடைந்து  வட கிழக்கு   இன்னும் எந்த அபிவிருத்தியும்  அடையவில்லை  அரசாங்கம் ராணுவம் விடு விக்கிறது என்றால் அது மக்களின் ந்லன் கருதி அதற்கு இவர்கள் ஒன்றும் புடுங்க வில்லை 

புடுங்கியது முன்னாள் போராளியை மீண்டும் சிறைக்கு  அனுப்பியது தான்   சும் சம்

இனி வரும் காலத்தில் தமிழரின் எத்தகைய போராட்டமும் வீறுகொண்டு எழுந்தால் அதனை அழிப்பதற்கு உலகம் உதவிக்கு வராது என்பது சிங்களத்துக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. சிறுபான்மை இனக்களுக்கு ஏதாவது நல்லது செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் அது உள்ளது. மகிந்தா திரும்ப ஆட்சிக்கு வந்தால்கூட இந்நிலையிலிருந்து மாறமுடியாது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் இருப்பைத் தக்கவைப்பதற்கு நாடகம் ஆடுகின்றனர். விக்கி ஐயாவுக்கு ஒன்று என்றவுடன் கிளர்ந்தெழுந்த இளைஞர் அணி அடுத்த தேர்தலில் இவர்களுக்குப் பதில்சொல்லும் என நம்பலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Paanch said:

வடக்கில் நடந்த சம்பவங்கள்  கிழக்கில் எதிரொலிக்கும்  பலரின் உள்ளக்கருத்துக்கூட  அதாவது தேவையில்லாத ஆணிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுக்கும் பகிரங்கச் சவால்

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தலிலேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அண்மையில் வடமாகாண முதலமைச்சரின் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதி ஒடுக்கமானது. அதில் நூறு பேரிருந்தாலும் பாரிய ஜனப்பிரளயம் போன்றே தென்படும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
 
அதனைக் கண்டு தனக்கு மக்கள் சக்தியிருக்கிறது என முதலமைச்சர் நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைப்பாராகவிருந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பினரை எதிர்த்து எழுக தமிழ்ப் பேரணியொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற அந்த எழுக தமிழ்ப் பேரணியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது சுமந்திரனுக்குத் தெரியும்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உடனடியாகவே முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய இளைஞர் கூட்டத்தையும்,

இரண்டாம் நாளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் வெற்றிகரமாகக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்ததும் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏற்றுக் கொள்வது கடினமாகத்தானிருக்கும்.

ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவான மக்கள் எழுச்சி அவர்களை மிரட்டியுள்ளது என்பது தான் உண்மை.

இதனால் தான் வடமாகாண முதலமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். வடமாகாண சபையைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தல் நடாத்த வேண்டும் என்றெல்லாம் சுமந்திரன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும்.

அவ்வாறு சுமந்திரன் வெற்றியடைந்த பின்னர் குறிப்பிட்டால் அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருக்கும்.

எமது மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் சகல உரிமைகளையும் விற்றுப் பிழைப்பவர்கள் என்று பெயரெடுத்த சுமந்திரன் போன்றவர்கள் வடமாகாண மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற முதலமைச்சருக்கு எதிராகச் சவால் விடுவது அர்த்தமற்ற, சிறுபிள்ளைத்தனமான செயல் எனவும் கடுமையாகச் சாடினார்

Lankasri.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.