Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

Featured Replies

மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்
 
கனடாவின்  கியூபெக் மாநிலத்திலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள குடியிருப்பில் வைத்து, தனது மனைவியைக் மனைவியை கொலை செய்த இலங்கையரொருவர், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தை,  வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்த நிலையில், அனுஜா பாஸ்கரனின்  சடலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனேடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் அவரை நாடுகடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து புதன்கிழமை கனடாவில் இருந்து அவரை இலங்கைக்கு விமான மூலம் நாடுகடத்தப்பட்டார். அவரை, குற்றத்தடுப்பு புலன்விசாரணை பிரிவினர் விசாரனை செய்து வருவதுடன், விசாரணைமுடிந்தவுடன் அவரை விடுவிக்கப்படுவார் டஎன, பொலிஸார் தெரிவித்தனர். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனைவியைக்-கொலை-செய்த-இலங்கையர்-நாடுகடத்தப்பட்டார்/175-200132

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளை விடுவிப்பதும், குற்றமற்றவர்களைக் கூண்டில் அடைப்பதும் சிறீலங்காவின் புத்தர் பிரானின் அருள்வாக்கு.! :shocked:  

ஒரு கொலைக்குற்றவாளிக்கு உரிய தண்டனை கொடுக்காமல் எதன் அடிப்படையில்  கனடா நாடு கடத்தியது?

கனடாவில் சட்டங்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா?
அல்லது
கொலைக்குற்றவாளிகள் வாழப் பொருத்தமான இடம் சொறிலங்கா என்று கனடா முடிவு செய்துவிட்டதா?

எது எப்படியோ சிங்கள அரசுக்கு ஒரு புதிய பால்ய நண்பர் கனடாவிலிருந்து கிடைத்துள்ளார்!

  • தொடங்கியவர்

இணைப்பு2 – மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்

sivaloganathan.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில்  இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை அவரைக் கடத்துவதற்கான உத்தரவினை பிறப்பித்திருந்தநிலையில் நேற்று நள்ளிரவு அவர் இலங்கையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார்

Apr 11, 2017 @ 03:27

2012ம் ஆண்டில் அனுஜா பாஸ்கரன் என்ற பெண்ணின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மொன்டரல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பெண் குறித்த நபரின் மனைவி எனவும், பெண்ணை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர்  கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

2012ம் ஆண்டில் அனுஜா பாஸ்கரன் என்ற பெண்ணின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மொன்டரல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பெண் குறித்த நபரின் மனைவி எனவும், பெண்ணை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/23858

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2017 at 3:29 AM, Rajesh said:

ஒரு கொலைக்குற்றவாளிக்கு உரிய தண்டனை கொடுக்காமல் எதன் அடிப்படையில்  கனடா நாடு கடத்தியது?

கனடாவில் சட்டங்கள் இவ்வளவு மோசமாக உள்ளதா?
அல்லது
கொலைக்குற்றவாளிகள் வாழப் பொருத்தமான இடம் சொறிலங்கா என்று கனடா முடிவு செய்துவிட்டதா?

கொலைகார ஈழத் தமிழனை கனடா தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இலங்கைக்கு ஊடாக தானே தமிழ் ஈழம் போக முடியும்? ஈழத்து கொலைகாரரை சிறையில் வைத்து சாப்பாடு போடும் கனடிய செலவுக்கு நீங்களா பணம் கொடுப்பீர்கள்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

கொலைகார ஈழத் தமிழனை கனடா தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இலங்கைக்கு ஊடாக தானே தமிழ் ஈழம் போக முடியும்? ஈழத்து கொலைகாரரை சிறையில் வைத்து சாப்பாடு போடும் கனடிய செலவுக்கு நீங்களா பணம் கொடுப்பீர்கள்?

கொலைகார சிங்களவனோ அல்லது கொலைகார சோனகனோ கனடா சிறையில் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கொலைகார சிங்களவனோ அல்லது கொலைகார சோனகனோ கனடா சிறையில் இல்லையா?

கனேடிய குடிமக்களை  அவர்கள் தமிழர்கள், சோனகர்கள் அல்லது சிங்களவர்கள் என்ற காரணத்துக்காக  கனடா மற்ற நாட்டு சிறைகளில் வைக்க முடியாது. ஆனால் கொலைகார  ஈழத்தமிழ் அகதியை கனடா தனது நாட்டு சிறையில் வைத்து சாப்பாடு  போட கனேடிய குடிமக்கள்  அனுமதிக்க மாட்டார்கள். அது வீண் செலவு.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Jude said:

கனேடிய குடிமக்களை  அவர்கள் தமிழர்கள், சோனகர்கள் அல்லது சிங்களவர்கள் என்ற காரணத்துக்காக  கனடா மற்ற நாட்டு சிறைகளில் வைக்க முடியாது. ஆனால் கொலைகார  ஈழத்தமிழ் அகதியை கனடா தனது நாட்டு சிறையில் வைத்து சாப்பாடு  போட கனேடிய குடிமக்கள்  அனுமதிக்க மாட்டார்கள். அது வீண் செலவு.

கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரை  அனுப்ப முடியுமா என்ன  ஏன் அங்கே விசாரித்து  தண்டனை வழங்க முடியாது ?? விளக்கம் தரமுடியுமா யாராவது ?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனி ஒருவன் said:

அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரை  அனுப்ப முடியுமா என்ன  ஏன் அங்கே விசாரித்து  தண்டனை வழங்க முடியாது ?? விளக்கம் தரமுடியுமா யாராவது ?

குடியுரிமை என்பது வேறு. நிரந்தர வதிவுரிமை என்பது வேறு. இதில் நிரந்தரக் குடியுரிமை என்று தான் எழுதி இருக்கினம். 

கனடாவைப் பற்றி தெரியவில்லை. அண்மைய இஸ்லாமிய மதப் பயங்கரவாத நடவடிக்கைகளை சாக்கு வைச்சு.. பிரித்தானியாவில் கடும் குற்றவாளிகளை அவர்களின் குடியுரிமையைப் பறித்து மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது. இதனை இன்னும் வலுவாக்கப் போகிறார்கள். ஓரளவு கடும் குற்றம் புரிந்தாலும் அனுப்பக் கூடிய வகையில்.

எனிமேல்.. வதிவிட உரிமை நிராகரிப்பட்டவர்கள்.. நாட்டுக்குள் இருந்து தான் சட்டரீதியாகப் போராடனும் என்ற நியதியை மாற்றி நாட்டுக்கு வெளியில் இருந்தும் போராடலாம் என்று கொண்டு வரப் போகிறார்கள். 

இப்படி ஆனால்.. எங்கட ஆக்கள் பலர் நாட்டுக்கு திரும்ப வேண்டி வரும்.. அங்கிருந்து தான் பின்னர் அப்பீல் பண்ணனும். தற்போதைய நடைமுறைகள் ஐரோப்பிய ஒன்றிய நீதிச் சட்டங்களையும் உள்வாங்கி இருப்பதால்.. அதன் கீழ் எம்மவர்கள் பலர் தப்பிப் பிழைத்தார்கள். எனிமேல்.. பிரித்தானிய சட்டம் என்று தனித்து அமுலானால்.. அரசு தனக்கு தேவையான எல்லாத்தையும் புகுத்தி.. குடிவரவாளர்களின் எண்ணிக்கையை சில பத்தாயிரங்களாக்க முனையும். அதுதான் அதன் இலக்கே.  tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனி ஒருவன் said:

அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரை  அனுப்ப முடியுமா என்ன  ஏன் அங்கே விசாரித்து  தண்டனை வழங்க முடியாது ?? விளக்கம் தரமுடியுமா யாராவது ?

சொந்த வீட்டுக்கும்

வாடகை  வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதா  ராசா???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

சொந்த வீட்டுக்கும்

வாடகை  வீட்டுக்ககும் வித்தியாசம் தெரியாதா  ராசா???

புரிகிறது ஆனால் குடியுரிமை என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது  குடியுரிமையெனும் போது அவர் அந்த நாட்டு பிரஜையாக இருக்கையில் பிறகு ஏன் அவரை   நாடு கடத்த முனைகிறார்கள் குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கையில் அவருக்கான தண்டனை அங்கே தானே வழங்கப்பட வேண்டும் ஏன் நாடு கடத்துகிறார்கள்  அப்போ குற்றவாளி இல்லையா இவர் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

புரிகிறது ஆனால் குடியுரிமை என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது  குடியுரிமையெனும் போது அவர் அந்த நாட்டு பிரஜையாக இருக்கையில் பிறகு ஏன் அவரை   நாடு கடத்த முனைகிறார்கள் குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கையில் அவருக்கான தண்டனை அங்கே தானே வழங்கப்பட வேண்டும் ஏன் நாடு கடத்துகிறார்கள்  அப்போ குற்றவாளி இல்லையா இவர் ?

இது  வரவு  செலவு சார்ந்தது

ஒருவரை தாம் வாழ்நாள் பூராகவும் சிறையில் வைத்த பராமரிப்பதைவிட

கொஞ்ச பணத்தை கொடுத்தாவது அவர்களது  பிறந்தநாட்டுக்கு  அனுப்புவதையே தெரிவு செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

புரிகிறது ஆனால் குடியுரிமை என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது  குடியுரிமையெனும் போது அவர் அந்த நாட்டு பிரஜையாக இருக்கையில் பிறகு ஏன் அவரை   நாடு கடத்த முனைகிறார்கள் குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கையில் அவருக்கான தண்டனை அங்கே தானே வழங்கப்பட வேண்டும் ஏன் நாடு கடத்துகிறார்கள்  அப்போ குற்றவாளி இல்லையா இவர் ?

பிறப்பால் வந்த குடியுரிமையை பறிப்பது சாத்தியம் குறைவு. ஆனால் இடைநடுவில் வந்த குடியுரிமையை சரியான காரணங்களோடு பறிக்கலாம். அப்படிச் சொல்லித்தான் அது வழங்கப்படுகிறது.

சொந்த அம்மாவும்.. வளர்ப்பு அம்மாவும் ஒன்றல்ல.

ஆனால்.. எம்மவருக்கு வளர்ப்பு அம்மாவின் செழிப்பில் ஒரு கவர்ச்சி. அதனால்.. சொந்த அம்மாவை விட வளர்ப்பு அம்மாவை புகழ்ந்து தள்ளித் திரிகிறார்கள். ஆனால் ஏட்டில் எழுதிப் படிப்பதோ.. வேதாந்தம். tw_blush:

  • தொடங்கியவர்
55 minutes ago, தனி ஒருவன் said:

அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரை  அனுப்ப முடியுமா என்ன  ஏன் அங்கே விசாரித்து  தண்டனை வழங்க முடியாது ?? விளக்கம் தரமுடியுமா யாராவது ?

தமிழ் ஊடகங்கள் நேரம் ஒரு செய்தி எழுதுவதால் வரும் குழப்பம்.

கனடா, நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் எதிர்க்கப் போவதில்லை – சிவலோகநாதன்

கனடா நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவலோகநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்காக கனடாவில் தண்டனை அனுபவிப்பதனை விடவும், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதனை சிவலோநாதன் விரும்புவதாக கனேடிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

31 வயதான சிவலோகநாதன் கடனாவில் புகலிடம் கோரியிருந்த நிலையில் அவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனைவியை கொலை செய்ததாக சிவலோகநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/26576

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரதும் பதிலுக்கு நன்றி இடை நடுவே பெறப்படும் குடியுரிமை பறிக்கப்படலாம் என்பது  சுட்டிக்காட்டியதற்கு நன்றி நெடுக்கர் 

5 minutes ago, nedukkalapoovan said:

பிறப்பால் வந்த குடியுரிமையை பறிப்பது சாத்தியம் குறைவு. ஆனால் இடைநடுவில் வந்த குடியுரிமையை சரியான காரணங்களோடு பறிக்கலாம். அப்படிச் சொல்லித்தான் அது வழங்கப்படுகிறது.

சொந்த அம்மாவும்.. வளர்ப்பு அம்மாவும் ஒன்றல்ல.

ஆனால்.. எம்மவருக்கு வளர்ப்பு அம்மாவின் செழிப்பில் ஒரு கவர்ச்சி. அதனால்.. சொந்த அம்மாவை விட வளர்ப்பு அம்மாவை புகழ்ந்து தள்ளித் திரிகிறார்கள். ஆனால் ஏட்டில் எழுதிப் படிப்பதோ.. வேதாந்தம். tw_blush:

இது தான் உன்மை  ஆனால் பலர் மறந்துவிட்டார்கள் சிலர் சொல்லிட்டு திரியுறார்கள்  சொல்லி  திரிபவர்களுக்கு ஒரு ஏக்கம் எப்போ அந்த மண்ணில் கால் வைப்போம் என மறந்து விட்டவ்ர்கள் அடிக்கடி விசிட் அடித்துவிட்டு போவார்கள் 

அடுத்தது இவருக்கான கொலைக்குற்றத்திற்க்கான தண்டனை இலங்கையில் வழங்கப்படுமா??

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தனி ஒருவன் said:

அடுத்தது இவருக்கான கொலைக்குற்றத்திற்க்கான தண்டனை இலங்கையில் வழங்கப்படுமா??

அதனை அவரிடம் உள்ள பணத் தொகையைக் கொண்டு சிறீலங்கா நாடு தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனி ஒருவன் said:

அனைவரதும் பதிலுக்கு நன்றி இடை நடுவே பெறப்படும் குடியுரிமை பறிக்கப்படலாம் என்பது  சுட்டிக்காட்டியதற்கு நன்றி நெடுக்கர் 

இது தான் உன்மை  ஆனால் பலர் மறந்துவிட்டார்கள் சிலர் சொல்லிட்டு திரியுறார்கள்  சொல்லி  திரிபவர்களுக்கு ஒரு ஏக்கம் எப்போ அந்த மண்ணில் கால் வைப்போம் என மறந்து விட்டவ்ர்கள் அடிக்கடி விசிட் அடித்துவிட்டு போவார்கள் 

அடுத்தது இவருக்கான கொலைக்குற்றத்திற்க்கான தண்டனை இலங்கையில் வழங்கப்படுமா??

இதைத்தான்  உங்களுக்கு சொல்கின்றோம்

சொந்த மண் போல் வராது

இருங்கள்

காலூன்றுங்கள்  என்று

அடுத்து நீங்க வரவேண்டியது தானே  என்ற  கேள்வியை வைக்கிறார்கள்

35  வருடங்கள்  புலம் பெயர்ந்து

இனி புடுங்கி எடுத்தால் எவருக்கும் பிரயோசனமற்று   போய்விடும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

அடுத்தது இவருக்கான கொலைக்குற்றத்திற்க்கான தண்டனை இலங்கையில் வழங்கப்படுமா??

இவர் இலகுவாக தப்பிவிடுவார். இலங்கையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். ஆனால் கர்மா (பெண் பாவம் பொல்லாதது) என ஒன்று உண்டு அது நிச்சயம் இவரை தப்பவிடாது, விரட்டிப்பிடிக்கும், கொடுராமாக தண்டிக்கும்.

உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நிரந்தர வதியுரிமை வேறு நாட்டு குடிமக்கள் நிரந்தரமாக கனடாவில் வாழ வழங்கப்படும் உரிமை. இவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. வாக்கு போட முடியாது.  கனேடிய  கடவுச்சீட்டும் இவர்களுக்கு இல்லை.    ஆனால் கனடிய குடிமக்கள் ஆன பின்னர்  இவர்களுக்கு கனடாவே நாடு.  இலங்கையர்கள். இந்தியர்கள், சீனர்கள் மற்றும் சிங்கபூரியர்கள் கனடிய குடிமக்களான பின்னர் அவர்களின் முன்னைய நாட்டு குடியுரிமை தானாக இரத்தாகும். இவர்கள் கனடிய  நாட்டு கடவுச்சீட்டை மட்டுமே பயன்படுத்தலாம். இந்த நடைமுறை அமேரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கும்  ஒரே விதமானது.   சில  நாடுகள்  இரட்டை குடிமக்களை  ஏற்று கொள்கின்றன. பலர்  கனேடிய  மற்றும் அமெரிக்க குடிமக்களாக  இருக்கின்றனர்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

  அப்போ அவர்கள் ஈழ தமிழர்கள் இல்லையா ?
கொலை செய்தல்தால்தான் ஈழ தமிழரா ?
அல்லது கொலை செய்யாமலும் ஈழ தமிழர் ஆகமுடியுமா ? 

கொலை செய்யாமல் ஈழ தமிழராகும் வாய்ப்பு இருந்தால் ....
நானும் ஈழ தமிழர் ஆகலாம் என்று எண்ணி உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்ட்டர் தனியொருவன் !

மேலே இருக்கும் பல பதில்கள் தவறானவை. இது ஒரு சிக்கலான நாடு கடத்ததும் முடிவாகவே இது இருக்கிறது.
குடியுரிமை உள்ள ஒருவருவரை கொலை செய்த பின்பு நாடு கடத்த மாட்டார்கள் தண்டனையைதான் வழங்குவார்கள். 

எமது முன்னைய நாட்டுக்கும் ..... தற்போது குடியுரிமை உள்ள நாட்டுக்கும் சில உடன்படிக்கைகள் உண்டு.
அதன் அடிப்படையில்தான் சுவிஸ் போன்ற நாடுகள் சிறு குற்றம் இழைப்போரையும் குடியுரிமையை ரத்து 
செய்துவிட்டு இலங்கைக்கு அனுப்பி விடுகிறார்கள். தவிர நாட்டுக்கு நாடு குடியுரிமை வழங்குவதிலும் 
சில வேறுபாடுகள் உண்டு. 

இவருடைய வழக்கில் நடந்த விடயம் .......... (சுருக்கமாக) 
இவர் கொலை செய்யும் முன்னரே .... மனைவியை துன்புறுத்திய குற்றத்தில் கைதாகி பின் 
விடுதலை செய்யப்படடாலும் ..  வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அந்த வழக்கில் இவர் தன்னை இலங்கை அனுப்பும்படி கோரி இருக்கிறார்.
அதன் பின்புதான் கொலை நடந்து இருக்கிறது. கொலையில் இவர்தான் குற்றவாளி என்றாலும் 
நீதிமன்று இன்னமும் இவர்தான் குற்றவாளி என்று கூறவில்லை.
(மொத்தம் 204 வழக்குகள் கியூபெக் மாநிலத்தில் நிலுவையில் உண்டு) இப்போ கியூபெக் மாநிலத்தில் 
ஜோர்டான் ருள் என்று ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து வழக்குகளை ஒரு வருடத்துக்கு மேல் 
வைத்திருக்க முடியாது என்று அமுல் செய்து இருக்கிறார்கள். 

இவருடைய வழக்கில் இவர் குற்றவாளி என்று நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாது போனால் 
அது போலீசுக்கு இழுக்காக முடியும் என்பதால்.
சொந்த நாட்டுக்கு போக விரும்பும் ஒருவரை .......... தடுத்து வைத்திருக்க கனடிய சட்ட்டத்தில் 
இடம் இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டு .....
முன்னைய வழக்கில் இவர் இலங்கை போக விரும்பியதை சுட்டி காட்டி 
இப்போ இவரின் விருப்பத்தில் அனுப்புவது போலவே 
நாடு கடத்தி இருக்கிறார்கள்.

கொலை செய்த ஒருவருவருக்கு சோறு கொடுக்க வழியில்லாமல் கனடா அனுப்பவில்லை 
ஒரு கனடிய வெள்ளையை கத்தியால் குத்தினால் சோறு கிடைக்கும். 

வழக்கு சிக்கலாக உள்ளது .....
ஏற்கனவே மனைவியை துன்புறுத்திய  ஒருவரை 
மீண்டும் சேர்ந்து வாழ அனுமதித்த தவறு காவல் துறைமீது இருக்கிறது 
வழக்கு நீதிமன்று போனால் இப்படி ஆதாரம் ரீதியாகவும் சிக்கல் இருக்கிறது.
அதுதான் 2012இல் இருந்து இந்த வழக்கு இழுபட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போ ஜோர்டான் விதிமுறை வேறு ஒரு வருடம் மேல் வைத்திருக்க முடியாது என்கிறது.

சொந்த நாடு போக விரும்பும் ஒருவரை ... தடுக்க முடியாது அப்படி கனடிய சடடத்தில் 
இடம் இல்லை என்று கூறி நைசாக காவல்துறை நழுவி இருக்கிறது. 

Sivaloganathan Thanabalasingam, centre, waived his right to refugee protection and asked to be deported. Accused of killing his wife in Quebec five years ago, his second-degree murder charge was stayed.

Image result for sivaloganathan thanabalasingam

1st Quebecer to have murder charge stayed due to Jordan ruling to remain in detention

Sivaloganathan Thanabalasingham, 31, accused of murdering his wife, is appealing his deportation order

Thanabalasingham's brother, Thanarupan Thanabalasingham, offered to post bond for him and have him stay with him and his wife.

He testified at the hearing, occasionally giving contradictory answers.

Sivaloganathan Thanabalasingham has several previous convictions for domestic violence. 

He pleaded guilty to assault charges related to three incidents in 2011 and 2012 and was ordered to serve four months in jail. The victim of the assaults was his wife, Anuja Baskaran.

He was later accused of killing his wife.

However, his case never went to trial. Last week, the second-degree murder charge laid against him in 2012 was stayed because of unreasonable delays in getting to trial.

Morin at one point asked Thanarupan Thanabalasingham if he thought courts in Canada were wrong to convict his brother of domestic violence offences.

"No," he replied.

Morin then asked Thanarupan Thanabalasingham if he thought his brother had done anything wrong.

"According to my knowledge, he did not do anything wrong," he replied.

Morin concluded that allowing Thanabalasingham to stay with his brother would not constitute a reasonable alternative to detention.

Police report accepted as evidence

Thanarupan Thanabalasingham's wife also testified.  Her name is protected by a publication ban.

She testified that her brother-in-law had stayed with her family in the past and that she never feared for her safety or the safety of her children.

She testified that, in her opinion, Thanabalasingham's problems were caused by his wife often calling police.

She also said she was unaware of how Thanabalasingham's wife had died.

Thanabalasingham's wife, Anuja Baskaran, died in 2012 after her throat was cut.

Morin concluded that the sister-in-law was not aware of the relevant facts in the case.

Morin allowed a police report on Baskaran's death to be admitted into evidence over the objections of Thanabalasingham's lawyer.

While he acknowledged that people are not guilty until they are convicted, Morin said the report had probative value, that is, was admissible because it was prepared by a member of a police force.

Thanabalasingham will remain in detention until at least his next review hearing, which is scheduled for May 11.

Those detained while awaiting deportation have automatic detention review hearings every 30 days.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டான் ரூலை கடாசி விட்டு போலீஸ் இவரை நீதிமன்றில் எப்போதோ நிறுத்தி இருந்தால் 
ஒரு 20-30 வருடம் உள்ளே தள்ளி இருப்பார்கள்.

அந்த லூசு விதிமுறை வழக்கை இழுபட செய்து இருக்கிறது 
அதுதான் இவருக்கு சார்பாக அமைந்து இருக்கிறது. 
இவரது லோயர் நல்ல கெட்டிக்காரனாக இருந்து இருக்கிறார் 
அதுதான் ........ காவல் துறையுடன் நேரடியாக போகாமல்.

எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாக அகதி கோரிக்கையை 
முன்னிறுத்தி வழக்கை திசை திருப்பி  அதன் மூலம் நாடு கடத்தி இருக்கிறார். 

(போலீசிடம் போதிய ஆதாரம் இருக்கவில்லை என்பது எனது ஊகம் மட்டுமே.
வழக்கு இழுபட்ட காரணத்தால் நான் அப்படி எண்ணுகிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

கனேடிய குடிமக்களை  அவர்கள் தமிழர்கள், சோனகர்கள் அல்லது சிங்களவர்கள் என்ற காரணத்துக்காக  கனடா மற்ற நாட்டு சிறைகளில் வைக்க முடியாது. ஆனால் கொலைகார  ஈழத்தமிழ் அகதியை கனடா தனது நாட்டு சிறையில் வைத்து சாப்பாடு  போட கனேடிய குடிமக்கள்  அனுமதிக்க மாட்டார்கள். அது வீண் செலவு.

எழுத முதல் நன்றாக வாசித்து விட்டு எழுதவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, colomban said:

இவர் இலகுவாக தப்பிவிடுவார். இலங்கையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். ஆனால் கர்மா (பெண் பாவம் பொல்லாதது) என ஒன்று உண்டு அது நிச்சயம் இவரை தப்பவிடாது, விரட்டிப்பிடிக்கும், கொடுராமாக தண்டிக்கும்.

உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்

ஆனால் கொழும்பான் இங்கே சிக்கலான கேசு கூட இலகுவாக தீர்ந்து விடுகிறது அண்மையில் மட்டக்களப்பில் ஒரு முஸ்லிம் உணவு  விடுதியில்  மலசல கூடத்தில்  இறைச்சி வகைகளை வெட்டியது கையும் களமாக பிடிபட்டு  சீல் வைக்கப்பட்டது 15 , 20 நாட்கள் கழிந்த பின் வழக்கு போட்டு இன்று அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது காசுக்காக மக்கள் சுகாதாரத்தையும் பற்றி கவலைப்படாமல் அந்த கேசுக்காக வாதாடி வென்று கொடுப்பார்களை என்ன செய்வது   பணம் ஒன்றே நீதியையும் நிலை நிறுத்துகிறது என்பது  கொஞ்சம் மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது இதில் என்ன  மெய்ஞானம் என்றால் நீதிபதிக்கு கூட தெரிந்த குற்றம் ,குற்றவாளிகள்  இந்த வக்கீல்களின் வாதத்தால் தப்பித்து கொள்கிறார்கள் பாவம் அப்பாவிகள் மட்டும்  சிக்கி கொள்கிறார்கள் ஒரு சில வழக்குகளை தவிர

2 hours ago, Maruthankerny said:

மிஸ்ட்டர் தனியொருவன் !

மேலே இருக்கும் பல பதில்கள் தவறானவை. இது ஒரு சிக்கலான நாடு கடத்ததும் முடிவாகவே இது இருக்கிறது.
குடியுரிமை உள்ள ஒருவருவரை கொலை செய்த பின்பு நாடு கடத்த மாட்டார்கள் தண்டனையைதான் வழங்குவார்கள். 

எமது முன்னைய நாட்டுக்கும் ..... தற்போது குடியுரிமை உள்ள நாட்டுக்கும் சில உடன்படிக்கைகள் உண்டு.
அதன் அடிப்படையில்தான் சுவிஸ் போன்ற நாடுகள் சிறு குற்றம் இழைப்போரையும் குடியுரிமையை ரத்து 
செய்துவிட்டு இலங்கைக்கு அனுப்பி விடுகிறார்கள். தவிர நாட்டுக்கு நாடு குடியுரிமை வழங்குவதிலும் 
சில வேறுபாடுகள் உண்டு. 

இவருடைய வழக்கில் நடந்த விடயம் .......... (சுருக்கமாக) 
இவர் கொலை செய்யும் முன்னரே .... மனைவியை துன்புறுத்திய குற்றத்தில் கைதாகி பின் 
விடுதலை செய்யப்படடாலும் ..  வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அந்த வழக்கில் இவர் தன்னை இலங்கை அனுப்பும்படி கோரி இருக்கிறார்.
அதன் பின்புதான் கொலை நடந்து இருக்கிறது. கொலையில் இவர்தான் குற்றவாளி என்றாலும் 
நீதிமன்று இன்னமும் இவர்தான் குற்றவாளி என்று கூறவில்லை.
(மொத்தம் 204 வழக்குகள் கியூபெக் மாநிலத்தில் நிலுவையில் உண்டு) இப்போ கியூபெக் மாநிலத்தில் 
ஜோர்டான் ருள் என்று ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து வழக்குகளை ஒரு வருடத்துக்கு மேல் 
வைத்திருக்க முடியாது என்று அமுல் செய்து இருக்கிறார்கள். 

இவருடைய வழக்கில் இவர் குற்றவாளி என்று நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாது போனால் 
அது போலீசுக்கு இழுக்காக முடியும் என்பதால்.
சொந்த நாட்டுக்கு போக விரும்பும் ஒருவரை .......... தடுத்து வைத்திருக்க கனடிய சட்ட்டத்தில் 
இடம் இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டு .....
முன்னைய வழக்கில் இவர் இலங்கை போக விரும்பியதை சுட்டி காட்டி 
இப்போ இவரின் விருப்பத்தில் அனுப்புவது போலவே 
நாடு கடத்தி இருக்கிறார்கள்.

கொலை செய்த ஒருவருவருக்கு சோறு கொடுக்க வழியில்லாமல் கனடா அனுப்பவில்லை 
ஒரு கனடிய வெள்ளையை கத்தியால் குத்தினால் சோறு கிடைக்கும். 

வழக்கு சிக்கலாக உள்ளது .....
ஏற்கனவே மனைவியை துன்புறுத்திய  ஒருவரை 
மீண்டும் சேர்ந்து வாழ அனுமதித்த தவறு காவல் துறைமீது இருக்கிறது 
வழக்கு நீதிமன்று போனால் இப்படி ஆதாரம் ரீதியாகவும் சிக்கல் இருக்கிறது.
அதுதான் 2012இல் இருந்து இந்த வழக்கு இழுபட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போ ஜோர்டான் விதிமுறை வேறு ஒரு வருடம் மேல் வைத்திருக்க முடியாது என்கிறது.

சொந்த நாடு போக விரும்பும் ஒருவரை ... தடுக்க முடியாது அப்படி கனடிய சடடத்தில் 
இடம் இல்லை என்று கூறி நைசாக காவல்துறை நழுவி இருக்கிறது. 

Sivaloganathan Thanabalasingam, centre, waived his right to refugee protection and asked to be deported. Accused of killing his wife in Quebec five years ago, his second-degree murder charge was stayed.

Image result for sivaloganathan thanabalasingam

1st Quebecer to have murder charge stayed due to Jordan ruling to remain in detention

Sivaloganathan Thanabalasingham, 31, accused of murdering his wife, is appealing his deportation order

Thanabalasingham's brother, Thanarupan Thanabalasingham, offered to post bond for him and have him stay with him and his wife.

He testified at the hearing, occasionally giving contradictory answers.

Sivaloganathan Thanabalasingham has several previous convictions for domestic violence. 

He pleaded guilty to assault charges related to three incidents in 2011 and 2012 and was ordered to serve four months in jail. The victim of the assaults was his wife, Anuja Baskaran.

He was later accused of killing his wife.

However, his case never went to trial. Last week, the second-degree murder charge laid against him in 2012 was stayed because of unreasonable delays in getting to trial.

Morin at one point asked Thanarupan Thanabalasingham if he thought courts in Canada were wrong to convict his brother of domestic violence offences.

"No," he replied.

Morin then asked Thanarupan Thanabalasingham if he thought his brother had done anything wrong.

"According to my knowledge, he did not do anything wrong," he replied.

Morin concluded that allowing Thanabalasingham to stay with his brother would not constitute a reasonable alternative to detention.

Police report accepted as evidence

Thanarupan Thanabalasingham's wife also testified.  Her name is protected by a publication ban.

She testified that her brother-in-law had stayed with her family in the past and that she never feared for her safety or the safety of her children.

She testified that, in her opinion, Thanabalasingham's problems were caused by his wife often calling police.

She also said she was unaware of how Thanabalasingham's wife had died.

Thanabalasingham's wife, Anuja Baskaran, died in 2012 after her throat was cut.

Morin concluded that the sister-in-law was not aware of the relevant facts in the case.

Morin allowed a police report on Baskaran's death to be admitted into evidence over the objections of Thanabalasingham's lawyer.

While he acknowledged that people are not guilty until they are convicted, Morin said the report had probative value, that is, was admissible because it was prepared by a member of a police force.

Thanabalasingham will remain in detention until at least his next review hearing, which is scheduled for May 11.

Those detained while awaiting deportation have automatic detention review hearings every 30 days.

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி மருதர்  ஆனால் இலங்கை வந்து தப்பித்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கிறதே அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.