Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்!

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மாவட்ட செயலகம் மற்றும் யாழ். மாநகர சபை என்பன முழு அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு 40 மில்லியன் ரூபாவரை இதற்கென ஒதுக்கப்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றான ஒல்லாந்தர் கோட்டையும் அதனோடு இணைந்த பண்ணைக் கடற்கரையும் தற்பொழுது மாலை வேளைகளில் மக்கள் பெருக்கத்தால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையிலேயே கடலில் நடப்பதற்கான வசதிகளும் செய்யப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Walking-in-the-sea

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

பண்ணைக் கடலில்..... திடீரென்று,   பத்து மீற்றர் உயரமுள்ள... மிகப்  பெரிய,   இராட்சத  அலைகள்  வரலாம்...  :rolleyes: tw_glasses:
நீந்தத்  தெரியாதவர்கள், பண்ணைக் கடலில்... நடந்து போகும் ஆசையை, மூட்டை  கட்டி வைப்பது நல்லது.  :grin: :D:

Edited by தமிழ் சிறி

12 minutes ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

பண்ணைக் கடலில்..... திடீரென்று,   பத்து மீற்றர் உயரமுள்ள... மிகப்  பெரிய,   இராட்சத  அலைகள்  வரலாம்...  :rolleyes: tw_glasses:
நீந்தத்  தெரியாதவர்கள், பண்ணைக் கடலில்... நடந்து போகும் ஆசையை, மூட்டை  கட்டி வைப்பது நல்லது.  :grin: :D:

தவறான தகவல்களை வழங்க வேண்டாம் தமிழ் சிறி.

-----------------------------------
------------------------------------------------
------------------------------------------------------

அங்கு 25 மீற்றர் உயரமுள்ள அலைகள் கூட சர்வ சாதாரணம் :grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ  அபிவிருத்திகளையும்

துறை  சார்ந்த

மற்றும்  நிலம் சார்ந்த மூளவளங்களையும்கொண்டு

எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களுக்குத்தான்முக்கியம் கொடுக்கணும்

இது போன்ற  செயல்கள் இருக்கும்மக்களையும்

சோம்பேறிகளாக்கி

சுற்றுலாவை  வளர்க்கின்றோம் என்றபடி  மேலும்  மக்கள்  வெளியேற்றத்தை  தான் தூண்டும்

5 minutes ago, விசுகு said:

விசுகு, இப்படியான செயல்கள் எப்படி சோம்பேறித்தனத்தை தூண்டும்? புலம்பெயர் நாடுகளில் நாம் பூங்காக்களும் சுற்றுலாக்களுக்கும் செல்வதில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

விசுகு, இப்படியான செயல்கள் எப்படி சோம்பேறித்தனத்தை தூண்டும்? புலம்பெயர் நாடுகளில் நாம் பூங்காக்களும் சுற்றுலாக்களுக்கும் செல்வதில்லையா ?

கருத்தில்   தவறு  இருக்கிறது  நிழலி 

நன்றி

வேலை  வாய்ப்புக்கு  முக்கியம்  கொடுக்காவிட்டால் என்று வரணும்

5 minutes ago, விசுகு said:

கருத்தில்   தவறு  இருக்கிறது  நிழலி 

நன்றி

வேலை  வாய்ப்புக்கு  முக்கியம்  கொடுக்காவிட்டால் என்று வரணும்

விசுகு, உண்மையில் அங்கு ஏராளமான வேலைகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது. சுய தொழிலுக்கும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு  புலம்பெயர்ந்தமையால் மனித வலுவுக்கும் அங்கு கணிசமான தேவை இருக்கின்றது.
ஆனால் எல்லாவற்றையும் வெளிநாட்டு கனவும் நாம் அங்கு போய் காட்டும் போலித்தனம் உருவாக்கிய மோகமும் அங்குள்ளவர்களை அவற்றில் ஈடுபடாமல் விலத்தி வைக்கின்றது. 

என்னை பொறுத்தவரைக்கும் அங்கு விளையாட்டு கழகங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு போட்டிகள் சோம்பேறித்தனத்தை மாற்றவல்லன .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தவறான தகவல்களை வழங்க வேண்டாம் தமிழ் சிறி.

-----------------------------------
------------------------------------------------
------------------------------------------------------
------------------------------------------------------

-----------------------------------
------------------------------------------------
------------------------------------------------------
------------------------------------------------------

-----------------------------------
------------------------------------------------
------------------------------------------------------
------------------------------------------------------

-----------------------------------
------------------------------------------------
------------------------------------------------------
------------------------------------------------------

அங்கு 25 மீற்றர் உயரமுள்ள அலைகள் கூட சர்வ சாதாரணம் :grin::grin::grin:

தவறான தகவலை... தந்ததற்கு,  மன்னிக்கவும் நிழலி.
நான் பண்ணைக் கடலை  பார்த்த  காலங்களில்..... 
"சளக்... சளக்...."  என்று, இரண்டு இஞ்சி உயரத்தில்.... அடித்துக் கொண்டிருந்த அலை, :unsure:
திடீரென்று... பத்து மீற்றர் உயரத்துக்கு வந்து, பண்ணை  கடற்கரை மணலில்.... சாத்தி வைத்திருந்த,
எனது,  "ரலி"  சைக்கிளை  அள்ளிக் கொண்டு போயிட்டுது.
நல்ல காலம், அந்த நேரம்... வறுத்த  கச்சான்  கடலை வாங்க, 
தூரத்தில் உள்ள கடைக்குப் போனதால், நான் தப்பி விட்டேன்.  :grin:

இப்ப... 25 மீற்றர் உயரத்துக்கு... அலை வருது என்றால், பூமி சரியான வெப்பமாகி...
"அண்டாக்கிக்கா " பனி மலை உருகுது என்று தான், நான் நினைக்கின்றேன்.tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

விசுகு, உண்மையில் அங்கு ஏராளமான வேலைகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது. சுய தொழிலுக்கும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு  புலம்பெயர்ந்தமையால் மனித வலுவுக்கும் அங்கு கணிசமான தேவை இருக்கின்றது.
ஆனால் எல்லாவற்றையும் வெளிநாட்டு கனவும் நாம் அங்கு போய் காட்டும் போலித்தனம் உருவாக்கிய மோகமும் அங்குள்ளவர்களை அவற்றில் ஈடுபடாமல் விலத்தி வைக்கின்றது. 

என்னை பொறுத்தவரைக்கும் அங்கு விளையாட்டு கழகங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு போட்டிகள் சோம்பேறித்தனத்தை மாற்றவல்லன .

நான்  ஊருக்கு  போயிருந்தபோது அங்கு  சொன்னது

எனது  ஊரை  கூட்டி  துப்பரவாக்கி

அதில்கிடைப்பவற்றை  விற்றால் (இலை குழை பனை  ஓலை தென்னை ஓலை  பனங்காய் தேங்காய்)

நான்  கோடீசுவரனாகிவிடுவேன் என்று.

அநேக  ஊர்களில் விளையாட்டுக்கழகங்கள் ஊக்கிவிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் நடக்கின்றன

என்ன  அவற்றுக்குள்ளும் எம்மினத்தின் எச்சங்களும் விசங்களும் புகுந்து விடுகின்றன

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

........................................................................................:101_point_up::101_point_up:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

விசுகு, உண்மையில் அங்கு ஏராளமான வேலைகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது. சுய தொழிலுக்கும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு  புலம்பெயர்ந்தமையால் மனித வலுவுக்கும் அங்கு கணிசமான தேவை இருக்கின்றது.
ஆனால் எல்லாவற்றையும் வெளிநாட்டு கனவும் நாம் அங்கு போய் காட்டும் போலித்தனம் உருவாக்கிய மோகமும் அங்குள்ளவர்களை அவற்றில் ஈடுபடாமல் விலத்தி வைக்கின்றது. 

என்னை பொறுத்தவரைக்கும் அங்கு விளையாட்டு கழகங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு போட்டிகள் சோம்பேறித்தனத்தை மாற்றவல்லன .

நிதர்சனமான கருத்து.ஏனோ தெரியவில்லை இப்படியான திரிகள் எரிவதில்லை.எப்ப பாத்தாலும் அரசியல்.அரசியலும் அபிவிருத்தியும் சமாந்தாரமாக பயனிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

நிதர்சனமான கருத்து.ஏனோ தெரியவில்லை இப்படியான திரிகள் எரிவதில்லை.எப்ப பாத்தாலும் அரசியல்.அரசியலும் அபிவிருத்தியும் சமாந்தாரமாக பயனிக்க வேண்டும்.

தேவையானது தேங்கி கிடப்பது வழமை தேவையில்லாதது தேவைப்படும் ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எவ்வளவோ  அபிவிருத்திகளையும்

துறை  சார்ந்த

மற்றும்  நிலம் சார்ந்த மூளவளங்களையும்கொண்டு

எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களுக்குத்தான்முக்கியம் கொடுக்கணும்

இது போன்ற  செயல்கள் இருக்கும்மக்களையும்

சோம்பேறிகளாக்கி

சுற்றுலாவை  வளர்க்கின்றோம் என்றபடி  மேலும்  மக்கள்  வெளியேற்றத்தை  தான் தூண்டும்

அப்படி சொல்ல ஏலாது விசுகர்.

குறைந்த பட்சம்: கொத்துரொட்டி கடை, டீ காப்பி, ஐஸ் கிரீம் கடை. சாப்பாட்டுக்கடை 

கூடிய பட்சம்; பிஸ்சா, KFC, McD, Starbucks

வேலை வாய்ப்பு வரும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான்  ஊருக்கு  போயிருந்தபோது அங்கு  சொன்னது

எனது  ஊரை  கூட்டி  துப்பரவாக்கி

அதில்கிடைப்பவற்றை  விற்றால் (இலை குழை பனை  ஓலை தென்னை ஓலை  பனங்காய் தேங்காய்)

நான்  கோடீசுவரனாகிவிடுவேன் என்று.

அநேக  ஊர்களில் விளையாட்டுக்கழகங்கள் ஊக்கிவிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் நடக்கின்றன

என்ன  அவற்றுக்குள்ளும் எம்மினத்தின் எச்சங்களும் விசங்களும் புகுந்து விடுகின்றன

விசுகு, 
இலங்கையில் உள்ள, தமிழ் ஊர்களில்......  முயற்சியான, ஒற்றுமையான..  ஊர் என்பதை, 
பல இடங்களில்... கண்டு வியந்துள்ளேன்.  

நீங்களே... இப்படி, சொல்வது சரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைதேயத்தவரைப்போல் சந்தைப்படுத்தலின் திறமையை எமது மக்களுக்கு ஊட்ட வேண்டும்.

உதாரணத்துக்கு அஞ்சாறு மெழுகுசிலையை வைச்சு சனத்தை எப்பிடி  பேக்காட்டலாம் எண்டு வெள்ளையளிட்டை பாடம் எடுக்கோணும்.

Bildergebnis für london madame tussauds

Bildergebnis für london eye

உந்த ராட்டினத்தாலையும் பயங்கர வருமானமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டவரின் வருகையை ௯ட்டுவற்கான ஒரு முயற்சி..உண்மையாக தேவை என்று சொல்ல இயலாது..இவற்றில் பழக்கபடாத குழந்தை குட்டி எல்லாம் நடந்து பார்க்க வெளிக்கிட்டதன் பிற்பாடு நாளாந்தம் வர இருக்கும் செய்திகளையும் பார்கத்தான் போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அப்படி சொல்ல ஏலாது விசுகர்.

குறைந்த பட்சம்: கொத்துரொட்டி கடை, டீ காப்பி, ஐஸ் கிரீம் கடை. சாப்பாட்டுக்கடை 

கூடிய பட்சம்; பிஸ்சா, KFC, McD, Starbucks

வேலை வாய்ப்பு வரும் தானே.

மேலே

 அபிவிருத்திகளையும்

துறை  சார்ந்த

மற்றும்  நிலம் சார்ந்த மூலவளங்களையும்கொண்டு

எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களுக்குத்தான்முக்கியம் கொடுக்கணும்

என்று  எழுதியுள்ளேன்  நாதர்

நீங்கள் குறிப்பிடுவது வியாபாரம்

நான்   சொல்வது  எமது   மூலவளங்கள்களையும் பாவித்து  செய்யப்படும் சொந்தக்காலில் நிற்றல்

சீமானின்  பேச்சுக்களை  கேட்கும்  உங்களிடமிருந்து?????

12 hours ago, தமிழ் சிறி said:

விசுகு, 
இலங்கையில் உள்ள, தமிழ் ஊர்களில்......  முயற்சியான, ஒற்றுமையான..  ஊர் என்பதை, 
பல இடங்களில்... கண்டு வியந்துள்ளேன்.  

நீங்களே... இப்படி, சொல்வது சரியல்ல.

அப்படி  தொடர்ந்து இருப்பதற்கு

தூங்கவிடக்கூடாது  ராசா

விட்டால்  எழுப்புவது?????

13 hours ago, சுவைப்பிரியன் said:

நிதர்சனமான கருத்து.ஏனோ தெரியவில்லை இப்படியான திரிகள் எரிவதில்லை.எப்ப பாத்தாலும் அரசியல்.அரசியலும் அபிவிருத்தியும் சமாந்தாரமாக பயனிக்க வேண்டும்.

அரவணைப்பு  எவ்வளவு  இதமாக  இருந்தாலும்

அடி  என்று  வந்து விட்டால் தானே பதட்டம்வருகிறது

அதனால்  இருக்குமோ?

ஆனாலும் நேரம் கிடைக்கும்போது

நீங்களும்

நானும்

நாமும்

எம்மால் முடிந்தவரை  கொழுத்தித்தான் விடுகின்றோம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவை வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் சுப்பற்ற கொல்லைக்குள் சுத்திக் கொண்டு நிற்காமல்.. வடக்குக் கிழக்கில் சுற்றுலாத்துறைக்கு சாதகமான இடங்களை இனங்காணவும் அவற்றை சுற்றுலாத்துறைக்கு தகுந்த மாதிரி சூழல் பாதிப்பின்றி மாற்றி அமைக்கவும் உள்ளூர் மக்களுக்கு அதன் மூலம் நிரந்தர வருமானத்தை கொண்டு வரவும்.. ஈட்டப்படும் இலாபமானது சொந்தப் பிரதேச அபிவிருத்தி நோக்கி பயன்படுத்தப்படவும் உருப்படியான வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதுடன்.. நவீனத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு.. சுகாதாரம்.. மக்கள் பாதுகாப்பு.. சூழல் பாதுகாப்பு.. வசதிகளின் பராமரிப்பில்.. கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

காசை பிடுங்கி பொக்கட்டுக்குள் போட்டுக் கொண்டு போற வேலைகளை நோக்கி இவை போகின்.. எல்லாம் சர்வ நாசமாகும். :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

மேலைதேயத்தவரைப்போல் சந்தைப்படுத்தலின் திறமையை எமது மக்களுக்கு ஊட்ட வேண்டும்.

உதாரணத்துக்கு அஞ்சாறு மெழுகுசிலையை வைச்சு சனத்தை எப்பிடி  பேக்காட்டலாம் எண்டு வெள்ளையளிட்டை பாடம் எடுக்கோணும்.

Bildergebnis für london madame tussauds

Bildergebnis für london eye

உந்த ராட்டினத்தாலையும் பயங்கர வருமானமாம்.

எங்கட தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் இருந்த காலத்தில்.. பனையை வைச்சே.. எவ்வளவோ விளையாட்டுக்காட்டினவை. அவை அழகும்.. கவர்ச்சியும்... சூழலுக்கும் பாதிப்பில்லை. 

இப்ப எல்லாரும் சூழல் பாதிப்பு பற்றி பேசினம்.. பொலித்தீனுக்கு தடை என்றினம். இதனை அப்பவே.. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.. முன்மொழிந்தது. 

இன்று... உலகம்.. மரபணு மாற்றுப் பயிர்களுக்குப் பதறினம்.. ஆனால்.. அன்றே இயற்கை முறை கலப்பின் மூலம்.. நல்ல விளைச்சலை.. குறைந்த காலத்தில் தரும்... தென்னை.. மா.. கொய்யாங்களை.. இயற்கைக்கு இசைவாக.. உருவாக்கியது எங்கட தமிழீழ பொருண்மிய மேம்ப்பாட்டுக் கழகம்.

அதனைச் சார்ந்த சிலர் இப்பவும் தாயகத்தில் இருக்கினம். அவையால  ஒரு நல்ல வழிகாட்டுதலை செய்ய முடியும்.

ஆனால்.. அதுகளை செயற்பட விடாமல்.. தடுப்பதில்.. குறியா இருக்குது.. சிங்கள எஜமான விசுவாச... சுயபோக.. சுகபோக விரும்பிக் கூட்டம். 

இதுதான் நாங்கள் அபிவிருத்தி அடையாததற்கு முக்கிய காரணம்.

தானும் படாதுகள்.. தள்ளியும் படாதுகள்.. நிறைய எங்கள் மத்தியில்.... இந்த நிலையை மாற்றனும். உந்தச் சிந்தனையோட்டம் மாறாமல்.. எம் நிலமும் இனமும் முன்னேறாது.. சொர்க்கத்தைக் கொண்டு வந்து அதில் வாழ விட்டாலும்.. அதையும் நாசமாக்குங்கள். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மேலே

 அபிவிருத்திகளையும்

துறை  சார்ந்த

மற்றும்  நிலம் சார்ந்த மூலவளங்களையும்கொண்டு

எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களுக்குத்தான்முக்கியம் கொடுக்கணும்

என்று  எழுதியுள்ளேன்  நாதர்

நீங்கள் குறிப்பிடுவது வியாபாரம்

நான்   சொல்வது  எமது   மூலவளங்கள்களையும் பாவித்து  செய்யப்படும் சொந்தக்காலில் நிற்றல்

சீமானின்  பேச்சுக்களை  கேட்கும்  உங்களிடமிருந்து?????

நான் சொல்ல வந்தது பண்ணை கடல் கரை அண்மிய உடனடி வேலை வாய்ப்புகள்.

தமக்குள் அடிபடுவதை விடுத்து, வட மாகாணசபை பொருளாதார ரீதியிலான மிக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இங்கே பல தடவை எழுதியுளேன்.

புலம் பெயர் பொருளாதாரம் எங்கே போகின்றது என்பது தென் இலங்கை அரசை விட வட மாகாணசபைக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

அரசியல் ஒரு பக்கமும், பொருளாதரா வேலைகள் மறு புறமுமாக இருக்க வேண்டாமா?

இந்த மிளகாய் தூளும், ப்ரோடடா ரொட்டியும், குத்தரிசியும் மலையாளியா இங்கே அனுப்ப வேண்டும்?

தாய்லாந்திலிருந்து பிலாப்பழமும், இளனியும், நெத்தலியும் வரவேண்டுமா?  

இறக்குபவர்களை குறை சொல்ல முடியாது. லாபம் பார்ப்பவர்கள்.

ஆனால், மண்டைதீவு, வன்னி  போன்ற பகுதிகளில் தொழில் பேடடைகளை அமைத்து, கொழும்பு அரசுடன் பேசி, கட்டு நாயக்க சுதந்திர வர்த்தக மையம் போன்று வரி வாய்ப்புகளை பெற்று, இந்த இறக்குமதியாளர், எம்தமிழர்களை கவர முடியுமே.

மேலும் இங்குள்ள ஊடகங்களில், விக்கினேஸ்வரன் நேரடியாக மக்களிடம் ஊர்ப் பொருட்களை வாங்க கோரிக்கை விட முடியுமே.

மேலும் GSP + க்கு அதிகமாக தமிழர் பகுதி பொருள்களுக்கு விசேட சலுகைகளை, கனேடிய, ஐரோப்பிய அரசுகளுடன் பேசி பெறலாம். 

ஏர்லங்கா போன்ற விமான சேவைகளிடம் குறைந்த கட்டன சலுகை பேசிப் பெறலாம்.

இவ்வகையில் இறக்குமதியாளர்கள் செலவினைக் குறைத்தால், அவர்கள் வாங்குவார்கள் தானே.

முஸ்லீம் தலைவர்கள் மத்திய கிழக்கில் அரசுகளிடம் சலுகை பெற்று தமது மக்களை வாழ வைக்கின்றனர்.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன். எமது அரசியல் விடுதலை வர முதல், பொருளாதார விடுதலை வர வேண்டும்.

பொருளாதார விடுதலை வரும் போது, வேலை தேடி தமிழ் படித்துக் கொண்டு தென் இலங்கையர் வருவர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவும், இந்தியாவின் மும்பையும் தலை நகரங்கள் அல்ல. ஆனால் பொருளாதார மையங்கள்.

இதை புரிந்து எமது புலம் பெயர் சார் பொருளாதாரம் கட்டி எழுப்ப பட வேண்டும். விக்கியர், தகுந்த நிபுணர்களை தேடிப் பிடித்து பொறுப்பை கொடுக்க வேண்டும்.

இந்த நோக்கம் குறித்து தெளிவாக கொழும்புக்கு எடுத்து சொல்லி, அங்குள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு பெற வேண்டும்.

செய்வாரா?

சிலவேளைகளில் விக்கியர், தம்மை முழுமையாக அரசியல் பக்கமே வைத்துப்பதால், intellectual capability (அறிவார்ந்த திறன்) உள்ளவரா என்று தோன்றுவதுண்டு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Nathamuni said:

வடமாகாண  சபை ஆரம்பித்து  விக்கியர்  முதலமைச்சராக  வந்தவுடன்இதை நானும் எதிர்பார்த்தேன்

ஆனால் என்னவோ  அவர்வேறு  விடயங்களுக்கு  முன்னுரிமை கொடுக்கிறார்

நாங்கள் தூர  இருந்து கொண்டு சொல்வது சுலபம்

ஆனால்  அவருக்கும் என்னென்ன...........????

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

வடமாகாண  சபை ஆரம்பித்து  விக்கியர்  முதலமைச்சராக  வந்தவுடன்இதை நானும் எதிர்பார்த்தேன்

ஆனால் என்னவோ  அவர்வேறு  விடயங்களுக்கு  முன்னுரிமை கொடுக்கிறார்

நாங்கள் தூர  இருந்து கொண்டு சொல்வது சுலபம்

ஆனால்  அவருக்கும் என்னென்ன...........????

அதற்கு தான் சொன்னேன்: விக்கியர், தகுந்த நிபுணர்களை தேடிப் பிடித்து பொறுப்பை கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ செய்ய வேண்டியவை இருக்க இப்போ இந்த நடக்கிறது.ஓடுறது.பறக்கிறது இவற்றில தான் கவனம் என்றால் யாரு என்ன செய்ய முடியும்..எனக்கு ஒரு ஆசை யாரு இந்த திட்டத்தை கொண்டு வந்தார்களோ அவர்களையே முதலில் நடக்க வைக்க வேண்டும்.நிலவில் கால் பதித்த முதல் மனிதன் போல் இவர்காலையாவது கழுவட்டுமே.எவ்வளவு தான் கொழுத்திப் போட்டாலும் சில நேரங்களில் பேப்பரை வைச்சு எரிச்ச மாதிரி பட்டென்று நுர்ந்துடுது என்ன செய்யிறது.?

திரி தான்..

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

எவ்வளவோ  அபிவிருத்திகளையும்

துறை  சார்ந்த

மற்றும்  நிலம் சார்ந்த மூளவளங்களையும்கொண்டு

எமது மக்களுக்கான வேலை வாய்ப்புக்களுக்குத்தான்முக்கியம் கொடுக்கணும்

மூல வளங்களில் தங்கி இருக்கும் பொருளாதாரம் சிறிய நாடுகளுக்கு மிகச் சிறிய வளர்ச்சியையே கொடுக்கும். இதற்க்கான காரணங்கள் இரண்டு:

  1. பெரும்பாலான மூலவளங்களின் விலை பெரும் இலாபத்தை தராது.
  2. சிறிய நாடுகளில் கிடைக்கும் மூலவளங்களின் அளவு நாட்டின் பொருளாதார தேவையுடன் ஒப்பிடும் பொது மிகச்சிறிய அளவே ஆகும்.

பெரும் பொருளாதார வளர்ச்சியை தர வல்லது உயர் தொழில்நுட்பமும் அதற்கு அடுத்தாதாக தொழிநுட்ப பொருட்களின் பாரிய அளவு உற்பத்தியும் ஆகும்.     உயர் தொழில்  நுட்பத்தில்    அமேரிக்கா,  ஜப்பான்,  கொரியா,  இசுரேல்  மற்றும்ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிட சிங்கபூர், துபாய்  போன்ற நாடுகள் கூட  இயலாமல் இருப்பதை கவனிக்க வேண்டும்.

பெருமளவு வளர்ச்சி அடைந்த நாடுகளும்  வளரும் நாடுகளும் சுற்றுலா துறையில் போட்டியிடுகின்றன. இந்த போட்டியில் வளரும் நாடுகளுக்கு சாதகமாக குறைவான வாழ்க்கை செலவு, சம்பளம் மற்றும் இலகுவான குடிவரவு  என்பன அமைந்து இருக்கின்றன.     வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாதுகாப்பு, சிறந்த நிருவாகம், வசதிகள், தொழில்நுட்பம் ஆகியவை சாதகமாக அமைந்து இருக்கின்றன. சுற்றுலா துறையில் வளரும் நாடுகள் பாதுகாப்பு, சிறந்த நிருவாகம், வசதிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்று வெற்றி பெரும்  சாத்தியம்  உள்ள அதே நேரம் வளர்ச்சி அடைந்த நாடுகள் வாழ்க்கை  செலவையோ சம்பளத்தையோ குறைக்க முடியாது. மேலும் குடிவரவை இலகுவாக்கவும் முடியாது. ஆகவே சிறிய நாடுகளுக்கு சுற்றுலா துறை  ஒரு சிறப்பான பொருளாதார மேம்பாட்டு அணுகுமுறையாகும். இதனால் தான் சிங்கபூர்   மற்றும் துபாய்  போன்ற    சிறிய   செல்வந்த நாடுகள்  கூட சுற்றுலா துறையில் அதிக ஆர்வம்   காட்டுகின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

உங்களது  கருத்தும்  சரியே

துறை  சார் வல்லுநர்கள் தான் முடிவெடுக்கணும்

ஆனால்  உடனடி தேவைகளைப்பூர்த்தி  செய்ய  கிடைப்பவற்றைக்கொண்டு

சிறு  தொழில்களை  சிறு  முதல்களுடன்  ஆரம்பிக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.