Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

Featured Replies

அமெரிக்க தூதர் தன் பாதுகாப்பு பற்றி கவலைபட வில்லை போல இருக்கே....! இருக்கட்டும்... இந்த தாக்குதலை புலிகளில் திட்டமிட்ட தாக்குதல் எண்டு கொழும்பு ஆய்வாளர்கள் கூட சொல்லக்கூடும்....! ஆனாலும் இந்த புலனாய்வு தகவலை யாராவது புலிகளுக்கு கொடுத்தார்கள் எண்று சிங்கள இராணுவத்தினர் கைது செய்யப்படக்கூட முடியும்....!

இதுக்கு காரணம் இருக்கிறது ஏனெண்டால் இராஜிய ரீதியில் இது பெரும் சங்கடத்தை அரசுக்கு குடுக்கும்... மட்டக்களப்பை முழுவதுமாக கைப்பற்றி விட்டோம் எண்று சொல்லும் அரசு, உயர் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் அழைத்து வந்த இராஜதந்திரிகள் காயப்பட்டமையானது விடயத்தை மூடி மறைக்க முடியாதவாறு செய்து உலகுக்கு வெளிப்படையாக சொல்கிறது...!

இங்கு உலகம் உணர்ந்து கொள்ளப்போகும் செய்தி என்ன எண்றால் புலிகள் அந்த இடத்துக்கு அருகில் இருக்கிறார்கள், அல்லது துரத்தில் இருந்து ஏவும் ஆட்லறிகளுடன் பலமாகவே இருக்கிறார்கள் என்பது... இலங்கை இவ்வளவு செலவு செய்ததும் வீண் என்பது....

  • Replies 152
  • Views 22.4k
  • Created
  • Last Reply

இனி உண்மையில் இலங்கை முழுதும் அரச கட்டுப்பாட்டில் வந்தாலும், சிறீலங்கா அரசு சொன்னாலும், ஒருத்தரும் வரமாட்டாங்கள் வந்து பார்க. :o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்ன செய்ய?

வினைவிதைத்தவனை குண்டு தேடிச்செல்கிறது

குகதாசன்

தமிழில் எழுத உதவிய அனைவருக்கும் கோடி நன்றிகள்.

மாப்புக்கு எப்பவும் ஜோக்தான், அனேய் மாப்பு சிறீ லங்கா படைகளின் மானம் போறதுக்கு ஏதும் அவங்ககிட்ட இருக்கா......? அதெல்லாம் எப்பவோ காத்தில போய்ட்டு, இனிமே போறதுக்கு அவங்க கிட்ட என்னதான் இருக்கு.......?

கோவணத்துண்டு?

அமெரிக்காவின் பிரபல ஊடகம் WashingtionPost ம் Reuters இன் செய்தியை இப்போது பாடத் தொடங்கியுள்ளது: :P

The Italian, German and U.S. Ambassadors to Sri Lanka were slightly injured on Tuesday when Tamil Tiger rebels shelled a delegation of diplomats led by the island's human rights minister, the military said.

Hospital officials in the eastern district of Batticaloa treated Italian Ambassador Pio Mariani and German envoy Jurgen Weerth.

U.S. Ambassador Robert Blake's arm was grazed either by shrapnel or a stone, the military said, but he was not taken to hospital and his embassy said he was fine and unharmed.

It is believed to be the first attack on Western envoys since the rebels began fighting for a separate homeland in 1983.

The Tigers said they were sorry the envoys were injured by their fire, but blamed the army for putting them in harm's way.

The attack came as helicopters carrying Disaster Management and Human Rights Minister Mahinda Samarasinghe as well as ambassadors from the United States, European Union, Germany and France landed in Batticaloa on a goodwill mission.

"Due to Tiger shelling, the two helicopters were slightly damaged. They took off, but the U.S., Italian and German ambassadors had already got off and received minor injuries," said Lieutenant-Colonel Upali Rajapaksa of the Media Center for National Security.

"The act of shelling this delegation is a very serious thing by the Tigers," he added. "It shows the Tigers' callous disregard for the betterment of civilians in the east."

The minister and other ambassadors, who were visiting the area on a needs assessment trip for thousands of refugees displaced by a new chapter in the island's two-decade civil war, were unharmed, military and embassy officials said.

Italian embassy officials were not immediately available for comment.

U.S. embassy officials said Blake was fine.

"The ambassador was there and is fine. He was not taken to hospital," said U.S. embassy Public Affairs Officer Terry White.

TIGERS SORRY, BLAME ARMY

The Tigers said they had not been advised foreign diplomats were being transported into what they called a military operational area, and accused the army of firing at them first. The military said the Tigers fired mortars rounds and artillery shells.

"We are sorry that they are injured. But we did not injure them," said Tiger military spokesman Rasiah Ilanthiraiyan. "It is the military's fault for putting them in a war zone."

"Even this morning they fired at us and we retaliated. No-one informed us the ambassadors were there," he added.

The attack comes after months of deadly artillery exchanges, air raids, land and sea battles and ambushes. The violence has killed about 4,000 people in the past 15 months.

Sri Lanka's stock market fell on the news of the attack, traders said, and was down around 0.44 percent in early afternoon trade.

வெப்உலகம்

புலிகள் தாக்குதலில் யு.எஸ்., இத்தாலி தூதர்கள் காயம்!

செவ்வாய், 27 ஃபிப்ரவரி 2007 (12:28 ஐளுகூ)

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்க ராணுவத்தின் விமானதளத்தை குறிவைத்து விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க, இத்தாலி தூதர்கள் காயமுற்றனர்!

இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே, அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ பிளேக், இத்தாலி தூதர் பியோ மாரியானி ஆகியோர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெப்பர் மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கியபோது புலிகள் சுட்ட எறிகணை ஒன்று வந்து விழுந்ததாகவும், அதில் அமெரிக்க, இத்தாலி தூதர்கள் உட்பட 6 பேர் காயமுற்றதாகவும் இலங்கை ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரும், தூதர்களும் வந்திறங்கிய இரண்டு ஹெலிகாப்டர்களை குறிவைத்தே விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியதாக சமரசிங்கே கூறினார். இதில் இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கேவிற்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதையும் பிரசாத் சமரசிங்கே உறுதி செய்தார்.

விடுதலைப் புலிகள் வருத்தம், கண்டனம்!

இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன், அரசு ரீதியான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் ஒரு ராணுவ பகுதிக்கு அயல் நாட்டுத் தூதர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அழைத்து வந்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது சிறிலங்க அரசு என்று குற்றம் சாற்றியுள்ளார்.

மட்டட்களப்பு நகரில் உள்ள வெப்பர் மைதானத்தில்தான் சிறிலங்க ராணுவத்தின் 23-3 பிரிகேட் கமாண்டரின் ராணுவத் தலைமையகம் உள்ளது என்றும், அதை நோக்கி தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கு வந்திறங்கியவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்த தூதர்கள் என்பதை அறிந்துகொண்டதும், உடனடியாக எறிகணைத் தாக்குதலை நிறுத்திவிட்டதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

அந்நிய நாட்டுத் தூதர்களின் பாதுகாப்பு விஷயத்தில் சிறிலங்க அரசு காட்டிய அலட்சியம் தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் இளந்திரையன் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் இரட்டை முகம் அம்பலமாகிட்டுது. அதைவிடுங்க. அவங்கட முகமே அப்படித்தானே. :o

அச்சொட்டான துல்லியமான தாக்குதலில் கெலிக்கு என்னப்பா ஆனது..??! ஐ பி சில கேட்டுச் சொல்லுங்கோ..! :o

புலிகள் புலிகள் தான். வெள்ளைக்காரனுக்கு அவன்ர பாணியிலேயே.. அடிச்சுப் போட்டு சோ சொறி சொல்லிட்டுடாங்க. குட். :lol::o

முள்ள முள்ளாலதான் எடுக்கனும் என்டு புரிஞ்சு வச்ச்சு இருக்காங்க, நம்ம பசங்க :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(1ம் இணைப்பு)அமைச்சர்கள் பயணம் செய்த உலங்கு வானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

ஜி.ரி ஜஈழம்ஸ

வுரநளனயலஇ 27 குநடிசரயசல 2007 05:49

மட்டக்களப்பு மாவட்டத்தின் முற்றவெளியில் இன்று செவ்வாக்கிழமை காலை 8.30 மணியளவில் தரையிறக்கம் செய்யும் போது இரு மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது 10 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க தூதுர் ரொபட்டே பிளக் சிறு காயமடைந்துள்ளார் எனினும் அமைச்சர்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. என தெரிவிக்கப்படுகினறது.

காயமடைந்தவர்கள் அமெரிக்க தூதுர் ரொபட்டே பிளக் சிறு காயமடைந்துள்ளதாவும பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டுயிருந்த நான்கு இராணுவம் மூன்று விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர்.

தெரிவிக்கப்படுகின்றது. இன்று மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டம் இடம்பெறயிருந்தது. இதில் 9 வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக கலந்துரையாடல் மற்றம் விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடம் என்பவற்றுக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் தலைமையிலான வெளிநாட்டு தூதுக் குழுவினர் சென்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின் பின்னர் வாகரை பகுதிக்கு இக்குழுவினர் செல்லயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அமெரிக்க தூதுவர் ரொபட்டே பிளேக் இத்தாலிய தூதுவர் மரியானோ இவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நான்கு பேர் விசேட அதிரடிப்படையினர் மூவர் இராணுவம் ஒருவர் விமானப்படை இருவர் மற்றும் பாடசாலை மாணவர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் படைத்தரப்பினர் அம்பாறை பொலநறுவை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஜப்பான் அமெரிக்கா இத்தாலி நாட்டு பிரதிநிதிகள் உட்பட யூனிசப் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய குழுவினர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு விமான உலங்கு வானுர்தியில் இறங்கியுள்ளனர். மற்றொரு உலங்கு வானுர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது ஒரு வானுர்தி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

www.swissmurasam.ch

தமிழ்த் தம்பி good thinking ...

வேண்டியோ வேண்டாமலோ நடந்தது நடந்துவிட்டது. நிச்சயமா விடுதலைப் புலிகள் இதனூடாக சொல்லவேண்டிய செய்தியொன்றைச் சொல்லவேண்டிய வழியில் சொல்லவேண்டிய பகுதிக்குச் சொல்லிவிட்டார்கள். விளைவுகள் எதுவானாலும் அதை அரசியல் சாணக்கியத்துடன் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

எல்லாம் சரியப்ப வாசிங்டன் தகவல்கள் என்ன சொல்லுது புஸ்ரின்ட போணூம் வேலை செய்யுதில்ல ரைஸ்யிண்டையும் வேலலைசெய்யமட்டன்னென்னுது யாரவது விசரிச்சு சொல்லுங்கோவன்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரியப்ப வாசிங்டன் தகவல்கள் என்ன சொல்லுது புஸ்ரின்ட போணூம் வேலை செய்யுதில்ல ரைஸ்யிண்டையும் வேலலைசெய்யமட்டன்னென்னுது யாரவது விசரிச்சு சொல்லுங்கோவன்?

அவைக்கு இன்று நேரம் சரியில்ல.. அங்கால ஆப்கானிஸ்தானில அமெரிக்க உப அதிபர் சென்னி கொஞ்சத்தில உயிர் தப்பிட்டார். அவரிருந்த முகாம் மீது தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டு 20 பேர் பலி. தலிபான் வேற உரிமை கோரிட்டுது.

ஈராக் மட்டுமில்ல ஆப்கானிஸ்தானிலும் கணக்கு பிழைச்சுக் கொண்டே போகுது என்றதால புஷ்.. றைஸ் பதுங்கிறதுதான் இப்போதைக்கு நல்லம். :o:o

சிறீலங்காவின் சதி

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை அற்புதம்!

மொத்தத்தில் புலிகள் ஒற்றை அறிக்கை வாயிலாக கிழக்கு இன்னமும் சிங்களத்தின் முளுப் பிடியில் இல்லை, தமிழர் தாயகத்தில் ஒரு தமிழ் அரசு இயங்குகின்றது, தமிழ் அரசு சர்வதேச விதிகளின் படி நடக்கிறது முதலாய பல செய்திகளைத் திறம்படக் கூறியிருக்கிறார்கள். அற்புதம்!

*******************

இளந்திரையனின் பேட்டியின் படி, ஐ.நா அமைப்பு கிளிநொச்சிக்கு ஐயோ ஐயோ நிப்பாட்டுங்கோ எண்டு சொன்னதும் அங்க மட்டக்களப்பில

புலிகளின் ஆட்லெறி பரல்கள் ஓய்வுக்கு வந்தன!!!!

யதார்த்தம் இதுவாகத்தான் இருக்கும்.....

நாங்கள் காய்களை.... உலகுக்கு.... வடிவாக..... நகர்த்த..... துவங்கவேண்டும்...

இனி அதில்தான் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் . :o

உள்களபோர்களைவிட.... :o

Edited by மோகன்

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது.

இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அமெரிக்க கம்புர்க்கறையும், இத்தாலி பிசாவையும் கொல்லுறதால புலிகளிற்கு எந்ந வித நலனும் இல்லை என்பது சின்னப்பிள்ளைக்கும் தெரியும். முட்டாள் சிங்களம் யோசிக்க தவறி விட்டது. இந்த உலங்குவானூர்தியில் ஒரு சிங்கள தளபதியை பயணம் செய்ய விட்டுட்டு அவரை அரசாங்கமே போட்டுத்தள்ளிட்டு புலிகள் கொண்றுவிட்டார்கள் என்று கதை தயாரித்திருந்தால் மகிந்தருக்கு சதகமா அமஞ்சிருக்கும். இவ்வளாத்துக்கு யோசிக்கிறதுக்கும்மகிந்தருக

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது.

இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

தெரிந்து செய்தார்களா தெரியாது செய்தார்களா என்பது தேவையற்ற விடயம். சும்பவம் நடந்த பிறகு எவ்வாறு அதைக் கையாண்டார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் திறம்படக் கையாண்டுள்ளார்கள் என்பது எனது கருத்து.

ஒரு சிறு குறிப்பு, தெரிந்து தான் செய்தார்கள் என்று கூறுபவர்களை (நான் அவர்களுள் ஒருவன் இல்லை என்ற போதும்) துரோகிகள் என அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் மேற்படி கூற்றை இயக்கத்தின் மீது இம்மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாத் தான் நான் பார்க்கிறேன். அதாவது தமிழீழ எல்லைக்குள் நடப்பன அனைத்தையும் தமிழீழ அரசு அறிந்துள்ளது என்பதே இம்மக்களின் சிந்தனையின் அடிப்படையாக இருக்கும் என்பது எனது கருத்து.

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது. இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

குறுக்ஸ், இல்லை புலிகள் வழக்கம் போலவே சும்மா தான் அடித்தார்கள் ஆனால் அங்கு போனவர்கள் தான் அடிவிழுமென்று தெரிந்து கொண்டும் அங்கு போனார்கள். இது யாருடைய பிழை. புலிகளின் அறிக்கையை வாசித்த பின்னருமா உங்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. case closed !!

உந்த அசைக்க முடியாத தும்பிக்கையின் பெயரால் விதம் விதமாக உளறிறவையால் தான் அரைவாசிப் பிரச்சனை.

உதுகளுக்கு இடங்குடுத்து அங்கீகரித்தால் எதிர்காலத்தில் அதுவே எதிரிகளிற்கு வசதியான வழிகளை கொடுக்கும் திட்டமிட்டு குழப்பத்தை விளைவிக்கவும் பிரச்சாரத்தையும் முடுக்கி விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது. இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

சிறிலங்கா அரசு இவ்வாறன ஒரு பிரச்சாரத்தைத் தான் பரப்புகின்றது. புலிகளுக்கு அறிவித்தும், அவர்கள் தெரிந்து கொண்டு அடித்தார்கள் என்ற கணக்கில் பெருமிதத்தோடு எழுதுவது மிகமிக ஆபத்தானது. சிங்கள தேசத்தின் கபடத்தை வெளிக்காட்ட வெண்டிய நேரத்தில், நியாயப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சிங்கள அரசின் பிரச்சார வலையில் விழாதீர்கள் நண்பர்களே!

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது.

இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

Yes! you are right. I dont think today's incident was a premeditated attack. Cunningly Lankan government is trying to fish in the troubled waters. Like you said, such hasty and shallow opinions from some members in the forum, only going to help governments intention of diverting international opinions against the tigers in this regard.

உந்த அசைக்க முடியாத தும்பிக்கையின் பெயரால் விதம் விதமாக உளறிறவையால் தான் அரைவாசிப் பிரச்சனை.

உதுகளுக்கு இடங்குடுத்து அங்கீகரித்தால் எதிர்காலத்தில் அதுவே எதிரிகளிற்கு வசதியான வழிகளை கொடுக்கும் திட்டமிட்டு குழப்பத்தை விளைவிக்கவும் பிரச்சாரத்தையும் முடுக்கி விடவும்.

தாம் எதிரியின் பிரச்சார வலைக்குள் விளுகிறோம் என்று தெரியாதே விளும் இவர்களின் அறியாமையினையும் அவர்கள் உணரத் தவறும் அந்த அறியாமையின் எதிர்வினைகளையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

எனது கருத்து என்னவெனில், முட்டாள்கள் என்று இவர்களை அழைப்பது கூடப் பொருந்துமோ (ஏனெனில் தமது தவறின் தார்ப்பரியம் தெரியாது இவர்கள் செய்வதனால்) துரோகிகள் என்பதனை விட (தெரிந்தே எதிர்வேலை செய்வது), ஏனெனில் துரொகிகள் என்ற பதத்திற்கு முற்றாகப் பொருந்தும் பல கிருமிகள் இன்னமும் இருப்பதனால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரசின்ரை ரைமிங் சரியில்லை என்று நினைக்கிறேன். உலக அளவில விடுதலைப்புலிகள் மீது சேறுபூசும் முயற்சி டிக் விடுதலைப்புலிகளின் சாமர்த்திய அறிக்கையினாலும் டிக் செனியினாலும் தடுக்கப்பட்டுள்ளது.

செனி இன்னும் பங்கருக்குள்ளாலை வெளியில் வரவில்லையாம். இப்ப எல்ல மீடியாவும் அவரைப்பார்க்க பங்கர் வாசலிலை நிக்கினம்.

Sri Lanka Governments plot to kill foreign diplomats foiled

Written by Roshan Perera

Tuesday, 27 February 2007

"The rebel Liberation Tigers of Tamil Eelam admitted responsibility for the attack, but expressed "shock and sadness" that the government had exposed the envoys to potential conflict. "Simple diplomacy could have avoided the unfortunate incident and condemned the childish action of the Sri Lankan military," Tamil military spokesman Rasiah Ilanthirayan said in a statement. "

http://lankanpost.com/index.php?option=com...e&Itemid=55

மட்டக்களப்புக்கு இராஜதந்திரிகள் புறப்பட ஆயத்தமாகும் படங்களை கீழே காணலாம். இதில் இரண்டாவது படத்தில் பச்சை ரீசேட்டுடன் காணப்படுபவர் காயப்பட்ட இத்தாலிய தூதுவர். மூன்றாவது படத்தில் காணப்படும் உயரமான மனிதர் அமெரிக்க தூதுவர். இத்தாலிய தூதுவருக்கு இடதுபுறத்தில் ஜேர்மன் தூதரும், வலப்பக்கத்தில் யூரோபியன் யூனியனின் இலங்கைகான தலைவரும் காணப்படுகிறார்கள். தூதுவர்களை ஏற்றிச்சென்ற ஊர்தியை முதலாவது படத்தில் காணலாம்!

isgeazf25270207132341phvy1.jpg

isgeazf25270207132341phnm8.jpg

mtfh81953nootri72582460nn8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ!

முதலே படம் எல்லாம் எடுத்துவைச்சிட்டுத் தான் சிங்கள அரசு அனுப்பி வைச்சதோ? நல்லாத் தான் பிளான் பண்ணுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.