Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி

Featured Replies

உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி
 

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

image_a2fd4cff01.jpg

யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

“எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளதுடன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சுவரொட்டியின் அடியில் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உன்னிகிருஷ்ணனுக்கு-எதிராக-யாழில்-சுவரொட்டி/71-202252

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த யாழ் மக்கள்.....?? முகம்காட்டினால் குறைந்தா போய்விடுவார்கள். :(

Bildergebnis für யாழ் மக்கள் 

  • தொடங்கியவர்
உன்னிகிருஷ்ணனுக்கு வரவேற்பு…
 

image_d1b53af7d4.jpg

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியப் பிரபல பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோருக்கு, மட்டக்களப்பில், நேற்று (11) பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.

அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலையத்தில், “இன்னிசை பாடிவரும்” எனும் இசை நிகழ்ச்சியொன்றையும் நேற்று மாலை, அவர்கள் நடத்தியிருந்தனர்.

(படப்பிடிப்பு: எஸ்.பாக்கியநாதன்)

image_2fd3ce67e8.jpgimage_04fab52ad1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அட உண்மையை சொன்னதுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிரான்கள்.

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

யாழில் உன்னிகிருஷ்ணனின் இன்னிசை பாடிவரும் நிகழ்வு வாபஸ்; காரணம் இதுவா?

 
 
யாழில் உன்னிகிருஷ்ணனின் இன்னிசை பாடிவரும் நிகழ்வு வாபஸ்; காரணம் இதுவா?

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்வு யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தி மைதானத்தில் இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறவிருந்தது. ரிக்கெற் காட்சியாக நடைபெறவிருந்த குறித்த நிகழ்வில் உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்தரா உன்னிக்கிருஷ்ணனும் பாடவிருப்பதாக விளம்பரங்களில் அறிவித்தல் செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் தற்பொழுது இது திடீரென ரத்தாகியுள்ளமையினால் யாழ்ப்பாண மக்கள் ஏமாற்றம் வெளியிட்டிருப்பதாக எமது களநிலைச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பே இசை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதற்கு காரணம் என பொதுவாகக் கூறப்பட்டாலும் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மறு அறிவித்தல்வரை னிகழ்வை இரத்துச் செய்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்வில் உன்னிக்கிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். சங்கிலியன் தோப்பில் நடந்த இந்த நிகழ்வில் அப்போதைய அமைச்சராக இருந்த ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உன்னிக்கிருஷ்ணனுக்கு மேடையில் பொன்னாடை போர்த்தியதோடு தனது நினைவுப் பரிசையும் வழங்கினார்.

அதன்பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் உன்னிகிருஷ்ணனுக்கு எதிர்ப்புக் கிழம்பியிருந்தது. இதையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் கைகளால் கௌரவம் பெற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாக உன்னிக்கிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதற்கு டக்ளஸ் தேவானந்தாவும் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு யாழ் நகரப்பகுதியெங்கும் உன்னிக்கிருஷ்ணனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மக்கள் எனும் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-music-event-suddenly-canceled

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒருத்தரோ அல்லது ஒரு குழவோ முடிவெடுத்து விட்டார்கள்.தாயகத்து மக்கள் ஒன்றையும் அனுபவிக்க இயலாது என்று.:unsure:நல்லது அப்பதானே எங்களுக்கும் அவல்களுக்கும் வித்தியாசம் இருக்கும்.tw_angry:

  • தொடங்கியவர்

ஈபி­டிபி ஆத­ர­வா­ளர் மிரட்­டல்

சுவ­ரொட்­டி­யால் உன்­னி­கி­ருஸ்ண­னின் இசை நிகழ்ச்சி நிறுத்தம்

 
ஈபி­டிபி ஆத­ர­வா­ளர் மிரட்­டல்
 

ஈ.பி.­டி.பி. ஆத­ர­வா­ளர்­க­ளின் எதிர்ப்பு மற்­றும் மிரட்­டல் காரண­ மாக யாழ்ப்­பா­ணத்­தில் தான் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி யைத் திடீ­ரென நிறுத்­தி­னார் தென்­னிந்­தி­யப் பாட­கர் உன்னி கிருஸ்­ணன்.

அவர் உயி­ருக்­கும் அவ­ரது மக­ ளின் உயி­ருக்­கும் ஆபத்து ஏற் பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்­தால் யாழ்ப்­பாண இசை நிகழ்சி கடைசி நேரத்­தில் நிறுத்­தப்­பட்­ட­தாக ஏற்­பட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரும் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­தார் உன்னி கிருஸ்­ணன். அப்­போது மேடை­யில் வைத்து அவ­ருக்கு மதிப்­ப­ளித்­தார் அன்று அமைச்­ச­ராக இருந்த டக்­ளஸ் தேவா­னந்தா. நாடு திரும்­பிய உன்­னிக் கிருஸ்­ணன், டக்­ளஸ் போன்ற ஒரு­வ­ரால் தனக்கு மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­மைக்­காக வருந்­து­கி­றார் என்று தெரி­வித்­தார் என ஊட­கங்­கள் செய்­தி­களை வெளி­யிட்­டன.

இந்­தப் பின்­ன­ணி­யில், உன்­னிக் கிருஸ்­ண­னின் இசை நிகழ்ச்சி யாழ். நக­ரப் பகு­தி­யில் நேற்­றி­ரவு நடை­பெற ஏற்­பா­டாகி இருந்த நிலை­யில் முதல்­நாள் இர­வோடு இர­வாக அவ­ருக்கு எதி­ரான சுவ­ரொட்­டி­கள் நக­ரில் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும், ‘யாழ் மக்­கள்’ என்ற அடை­யா­ளத்­து­டன் அநா­ம­தே­யச் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது.

‘‘எங்­கள் தலை­வர் டக்­ளஸ் தேவா­னந்தா மீது அவ­தூறு சுமத்­தும் பொய்­யான குற்­றச்­சாட்­டைக் கூறிய உன்னி எங்­கள் மண்­ணில் இன்­னிசை பாட முடி­யாது. பகி­ரங்க மன்­னிப்­புக் கேட்க வேண்­டும்’’ என்று சுவ­ரொட்­டி­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து அச்­ச­தின் கார­ண­மாக இசை நிகழ்ச்சி நிறுத்­தப்­பட்­டது. யாழ்ப்­பாண இசை நிகழ்­சி­யில் பங்­கேற்­றால் தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டும் என்று உன்­னிக்­கி­ருஸ்­ணன் அச்­ச­ம­டைந்த கார­ணத்­தால் இசை நிகழ்வை இரத்­துச் செய்­யக் கோரி­ய­தாக, நிகழ்சி ஏற்­பட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

யாழ். நக­ரின் மையத்­தில் மணிக்­கூட்டு கோபுர வீதி மற்­றும் ஸ்ரான்லி வீதி ஆகிய சந்­திக்­கும் இடத்­தில் உள்ள வெற்­றுக் காணி­யில் பாட­கர் உன்­னிக் கிருஸ்­ண­ன­தும் அவ­ரது மகள் உத்­த­ரா­வி­ன­தும் திரைப் பாடல்­கள் இசை நிகழ்ச்சி நடப்­ப­தாக இருந்­தது. இந்த நிகழ்ச்சி நிறுத்­தப்­பட்­டா­லும் மட்­டக்­க­ளப்பு மற்­றும் திரு­கோ­ண­மலை நிகழ்­வு­கள் திட்­ட­மிட்­ட­படி நடக்­கின்­றன.

http://newuthayan.com/story/18995.html

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒன்றை நடத்தினால் இன்னொருவருக்கு பிடிக்கவில்லை  ( அபிவிருத்தியும் அடக்கம்) சாதாரண இசை நிகழ்ச்சியையும் சேர்த்துதான் .

என்னவோ  இந்த  சுவரொட்டிக்கு  பின்னால் எவரோ ?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

டக்­ளசுவிடம், உன்­னிக் கிருட்­ணன் மன்னிப்புக் கேட்டிருந்தால் அது அவருக்கும் யாழ் தமிழர்களுக்கும் மிகப்பெரும் கேவலமாக இருந்திருக்கும். யாழில் இசை நிகழ்ச்சியை ரத்துச் செய்தது மேலான செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

 .

என்னவோ  இந்த  சுவரொட்டிக்கு  பின்னால் எவரோ ?? :rolleyes:

1)முன்னாள் போராளிகள்
2) புலம்பெயர்ந்த புலிகள்
3)சுவிஸ் மாபியா
4)புலம்பெய்ர்ந்த  தமிழர்
5)புலம்பெயர்ந்த சாதி தடிப்பினர்
6)புலம்பெயர்ந்த மாற்று கருத்து மாணிக்கங்கள்
7) ..........

8) CBI

9)CIA

10)M15

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

1)முன்னாள் போராளிகள்
2) புலம்பெயர்ந்த புலிகள்
3)சுவிஸ் மாபியா
4)புலம்பெய்ர்ந்த  தமிழர்
5)புலம்பெயர்ந்த சாதி தடிப்பினர்
6)புலம்பெயர்ந்த மாற்று கருத்து மாணிக்கங்கள்
7) ..........

8) CBI

9)CIA

10)M15

சிங்கள பெளத்த பேரினவாதிகள் (சி.பெள.பே) 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

1)முன்னாள் போராளிகள்
2) புலம்பெயர்ந்த புலிகள்
3)சுவிஸ் மாபியா
4)புலம்பெய்ர்ந்த  தமிழர்
5)புலம்பெயர்ந்த சாதி தடிப்பினர்
6)புலம்பெயர்ந்த மாற்று கருத்து மாணிக்கங்கள்
7) ..........

8) CBI

9)CIA

10)M15

 ஓ இத்தனை பேருமா இருக்கிறார்கள் பார்த்தீர்களா புத்தன் சாதரண இசைக்கச்சேரிக்கே இவ்வளவு எதிர்ப்பு  இருக்கிறது  உங்களால் ஊகிக்க முடிந்தவை இவைகள்  ஆனால் இங்குள்ள மக்களுக்கு இதே போல் பல பழைய சங்கத்து உறுப்பினர்களால் பிரச்சினை யிருக்கிறது 

  • தொடங்கியவர்

 

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடகர் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி இரத்து

என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர்! வருத்தத்துடன் உன்னிகிருஷ்ணன்

நான் ஒரு கலைஞன், இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோர் இன்று திருகோணமலைக்கு வருகை தந்தனர்.

அவர்களது இசை நிகழ்ச்சி இன்று மாலை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடக்கவிருப்பதோடு அது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்றது. இதன்போதே குறித்த கருத்தை வெளியிட்டார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தந்த தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது,

பாடகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த நிகழ்வானது யாழில் நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் கடந்த முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது, எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் தெரிவித்த பின்னரே தாம் இங்கு வந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, யாழ்ப்பாண நிகழ்ச்சியின் இறுதியில் அவர் பாடல் ஒன்றை பாடி முடித்தவுடன் முன்னாள் அமைச்சர் எனக்கு பொன்னாடை அணிவித்தார். அப்போது அவர் யாரென்று கூட தெரியாத நிலையில் அவரது மரியாதையை நான் ஏற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தாம் நாடு திரும்பிய வேளை குறித்த விடயத்தினை மேற்கோள்காட்டி பலர் பல வகையில் சர்ச்சைகளை கிளப்பியிருந்தனர்.

இப்பிரச்சினை இருந்து கொண்டிருக்க வேறு ஒரு இசை நிகழ்ச்சிக்கு கனடாவிற்கு சென்றிருந்த வேளை அங்கும் குறித்த நிகழ்வினை நடத்த சிக்கலாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதனையடுத்து தாம் மன்னிப்பு கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதை கனடாவில் இருப்பவர்கள் ஒரு அறிக்கையாக வெளியிட்டனர் எனவும் குறித்த அறிக்கைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

நான் ஒரு கலைஞன், நான் இங்கு வந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே. ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்

http://www.tamilwin.com/statements/01/155108?ref=home-top-trending

 
46 minutes ago, Rajesh said:

இந்திய அரசின் அழைப்பின் பேரில் கடந்த முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது, எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் தெரிவித்த பின்னரே தாம் இங்கு வந்ததாக தெரிவித்தார்.

 

46 minutes ago, Rajesh said:

ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி அரசியல் செய்து விட்டனர் என தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்

இந்திய அரசை நம்பினதற்கான விலையை உன்னிகிருஷ்னன் கொடுத்துள்ளார்.
இந்திய அரசு  தமது நாட்டில் படுகொலை செய்த தேடப்படும் குற்றவாளி டக்ளசின் நெருங்கிய தோழன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாது.. நிகழ்ச்சியை ரத்துச் செய்தததும் அல்லாமல்.. ஹிந்திய அரச - தமிழ் ஒட்டுக்குழு கூட்டு நாடகத்தை மீண்டும்.. நாடகம் நடந்த சொறீலங்காவில் வைச்சே போட்டுடைச்ச உன்னிக் கிருஷ்ணனின் நேர்மையை பாராட்டித்தான் ஆகனும். 

உங்கள் திறமையை.. தமிழ் மக்களுக்கு பல வழிகளில் வழங்கலாம்.. உன்னி. ஆனால்.. ஹிந்திய அரச.. தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களுக்கு எதிராக நீங்கள் உங்கள் உண்மையைச் சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அது நிச்சயம் தமிழ் மக்களோடு உங்களை இதயங்களால் இணைக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 13/08/2017 at 10:58 PM, colomban said:

சிங்கள பெளத்த பேரினவாதிகள் (சி.பெள.பே) 

அவர்கள் செய்திருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை....அவையள் எல்லாம் இப்ப "அப்பே மினிசு"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.