Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி!

Featured Replies

இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி!

 
இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி!
 

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தியது.

viber-image4-1-750x400.jpg இவர் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் குழுவில் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றிய ஒரு அதிகாரியும் வந்துள்ளார்.

கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்லறைத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

viber-image1-9-750x400.jpgviber-image2-7-750x400.jpg

http://newuthayan.com/story/20742.html

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட பொது சனங்களை நினைவுகூர வழியில்லையெனும்போது இவர்கள் மீது எரிச்சல் வருவதில் தப்பே இல்லை.

திருபெரும்புதூரில் பொதுமக்கள் யாரும் சென்று அஞ்சலி செலுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ராசவன்னியன் said:

கொல்லப்பட்ட பொது சனங்களை நினைவுகூர வழியில்லையெனும்போது இவர்கள் மீது எரிச்சல் வருவதில் தப்பே இல்லை.

கொல்லப்பட்டது பொது சனங்கள் அல்ல புலிகள் என்று சொல்லும் தமிழ்கூட்டம் இருக்கும் போது....????????

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் 4 வது பெரிய இராணுவத்தை ஈழத்தமிழன் போரிட்டு வென்றான்.. என்பதற்கும் இது சாட்சியாக அமையும். வேற வழியில்லாமல்.. 25 நாடுகளை கூட்டி வைச்சு..  இந்த அஞ்சலிக்காக.. ஈழத்தமிழனை அழித்தார்கள்.. ஹிந்தியர்கள் என்ற வெட்கம் கெட்ட வரலாறையும் இது சொல்லும். :rolleyes:

எங்கள் அன்புச் சகோதரி.. வீரவேங்கை.. மாலதியிடம் தோற்றவர்களுக்கு இன்று அஞ்சலி. தமிழிச்சி.. வீரத்துக்கு இது எடுத்துக்காட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவை விடவும் மிகவும் ஏழை நாடு போலுள்ளது...

கல்லறையின் பூசு வேலை மிகவும் மோசமாக உள்ளது...

 

-- சந்தேகம், பின்னாடி சூட்கேஸ் துணியில் சட்டை தச்சி அணிந்திருக்கும் அந்த சின்ன பையன், அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறானா??

  • தொடங்கியவர்

யாழ்.கோப்பாயில் இந்திய இராணுவத்தின் சமாதிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி.!

 

 

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்சியாவுக்கான கட்டளை  தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்.கோப்பாயில் உள்ள இந்திய இராணுவத்தின் சமாதிக்கு இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினர். 

DHlH4DZXsAAh4to.jpg

இந்திய இராணுவம், அமைதிப் படையாக வடக்கு - கிழக்கில் செயற்பட்ட தருணத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் பலியானர்கள். 

DHlHt8SW0AADxSP.jpg

அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுத் தூபியொன்றே கோப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23343

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் துணையுடன் நடைபெறும்  போர்க்குற்றவாளிகளான இந்திய பயங்கரவாதிகளின் இது போன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DHlH4DZXsAAh4to.jpg

களி மண்ணிலை ஏதோ செய்து விளையாடினமாதிரி இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

DHlH4DZXsAAh4to.jpg

களி மண்ணிலை ஏதோ செய்து விளையாடினமாதிரி இருக்கு....

 

அதுவும் அடாத்தாப்பிடிச்ச கள்ளக் காணியில். சிறீபெரும்புத்தூரில்.. மிஸ்டர் ராஜீவின் சிலைக்கருகில் அடாத்தா காணிபிடிச்சு தாணுக்கு யாரும் சிலை வைக்க ஏலுமோ..??! 

இப்ப தமிழரின் உண்மையான எதிரிகள் யார் என்பதை எனியாவது தமிழர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

DHlH4DZXsAAh4to.jpg

களி மண்ணிலை ஏதோ செய்து விளையாடினமாதிரி இருக்கு....

அவசர அவசரமாக எதற்க்காகவோ செய்து முடித்திருக்கிறார் என்பபது மட்டும் விளங்குகிறது... 

பாவப் பட்டவர்களுக்கு கடமைக்காக செய்து முடித்திருப்பது போன்று தான் தெரிகிறதே தவிற மரியாதை நிமித்தமாக ஒரு மண்ணும் இல்லை...

இந்தியர்களுக்கு இந்த மரியாதை போதும் என்று நினைத்தார்களா என்பது இந்திய அரசாங்கத்திற்கே வெளிச்சம்...

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிலத்தில் எமது மக்களை கொண்ட காட்டுமிராண்டி ஹிந்தியை இராணுவத்துக்கு  மரியாதை கொல்லப்பட்ட மண்ணுக்கு சொந்த மக்களுக்கு ஒன்றுமில்லை இதென்ன கொடுமை.  என்னும் என்னனென்ன நடக்க இருக்கிறதோ அதையெல்லாம் பார்க்க விட்டிருக்கின்றான் இறைவன்.

  • கருத்துக்கள உறவுகள்

21_05_10_jaffna_05.jpg

வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டிருந்த தாமரை வடிவ.. வடமராட்சியில்.. இந்திய இராணுவம் படுகொலை செய்த தமிழ் மக்கள் நினைவுத் தூபி சிங்களப் படைகளால்.. ஹிந்திய கூட்டாளிக்களின் தேவைக்காக உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. இது 2010 இல் இருந்து இப்படி உள்ளது.

ஆனால்.. ஹிந்திய இராணுவத்துக்கு நினைவு தூபி புதுப்பித்துக் கொடுக்கிறது சொறீலங்கா சிங்கள இராணுவம்.. அதுவும் தமிழ் மக்களின் நிலத்தில் :rolleyes:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38776

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை மாற்றான் கையில்.....

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்குள்..... இந்தியாவிலிருந்து சீக்கிரம் வந்துவிடலாம் என்று ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை மாற்றான் கையில்.....

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்குள்..... இந்தியாவிலிருந்து சீக்கிரம் வந்துவிடலாம் என்று ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது.

இப்பொழுது ஈழத் தமிழர்களின் வாழ்க்கை (வாழ்க்கையா, எதிர்காலமா?) யார் கையில் இருக்கிறது என்கிறீர்கள்...

நம்பி இருக்கிறோம் என்கிறீர்களா?? அல்லது 

கட்டுண்டு கிடக்கிறது என்கிறீர்களா??

கோப்பாய் மண்ணில் இந்தியாவுக்கும் எங்களுக்கும் இரு வேறு நியாயம்

இறந்தவர்களை நினைவுகூருவது என்பது மனித உரிமையுடன் சார்ந்தது.
எல்லாள மன்னனும் துட்டகைமுனுவும் போரிட்டு எல்லாளன் இறந்தபோது அவ்விடத் தில் எல்லாள மன்னனுக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்துமாறு துட்டகை முனு உத்தரவிட்டதான சம்பவங்கள் உண்டு.
 
தவிர, 1987ஆம் ஆண்டு கோப்பாயில் உயிரி ழந்த இந்திய இராணுவ அதிகாரிக்காக அமைக் கப்பட்ட நினைவிடம் இப்போது புதுப்பிக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 
கோப்பாயில் உயிரிழந்த இந்திய இராணுவ அதிகாரிக்கு நினைவிடம் அமைத்து இந்திய இராணுவத் தளபதி ஒருவர் அங்கு வந்து அஞ் சலி செலுத்தியமை இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமையுடன் சார்ந்தது.
 
இந்த விடயத்தைப் பல கோணங்களில் பார்க்க முடியும். அதிலொன்று இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போரிட்டபோது, கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவ அதி காரி ஒருவர் உயிரிழந்தார்.
 
அவருக்கு அதேயிடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது என்பதுடன் இந்திய இராணு வம் தமிழர் தாயகத்துக்கு வந்து போன செய்தி யும் விடுதலைப் புலிகளுடன் போரிட்ட தகவ லும் வரலாறாகப் பார்க்கப்படக் கூடியதாகும்.
 
இரண்டாவது அச்சம்பவம் இராணுவ உத்தி யோகத்தராக இருந்தவர் இப்போது இராணு வத் தளபதி தரத்தில் இருக்கின்ற நிலையில் தன் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்துகின்ற ஒரு நன்றிகூரும் நிகழ்வாக அதைப்பார்க்க முடியும்.
தவிர, வெளிநாடாக இருந்த போதிலும் உயி ரிழந்தவர்கள் விடயத்தில் மனிதநேயம் காக் கப்பட வேண்டும் என்பதுதான்.
 
இதைவிட இன்னும் பலவற்றை நாம் விமர் சன நோக்கில் பார்க்கலாம். எதுவாக இருந் தாலும் உயிரிழந்தவரை நினைவுகூருகின்ற ஒரு நிகழ்வு மனிதாபிமானத்தின் பேரால் நடந் தேறியுள்ளது.
எனவே கோப்பாயில் உயிரிழந்த இந்திய இராணுவ அதிகாரிக்கு அதேயிடத்தில் நினை விடம் அமைத்து அஞ்சலி செலுத்தப்பட்டமையை நாம் முன்மாதிரியான செயலாகப் பார்க்கிறோம்.
 
இதேபோல் விடுதலைப் புலிகளின் சமரின் உயிரிழந்த இலங்கைப் படையினரின் நினை விடங்கள் ஆனையிறவு உள்ளிட்ட பல இடங் களில் உள்ளது. அங்கு சிங்கள மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவதைப் பார்க்கின் றோம். இதையும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை என்ற கோணத்தில் பார்க்கி றோம்.
ஆனால், நாங்கள் தமிழர்கள் எங்கள் உரிமைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த எங்கள் பிள்ளைகளின் நினைவிடங்களை; அவர்கள் துயிலும் இல்லங்களை அழித்து அந்த இடத்தில் படைத்தரப்பின் அலுவலகம் அமைத்திருக்கிறீர்களே இது எந்தவகையில் நியாயமாகும்?
 
இந்திய இராணுவ அதிகாரிக்கு கோப்பா யில் நினைவிடம்; இலங்கைப் படைத்தரப்புக்கு ஆனையிறவில் நினைவாலயம் ஆனால் எங் கள் பிள்ளைகள் எங்கள் மண்ணில் குருதி சிந்தி உயிரிழந்தனரே அவர்களுக்கு கோப்பா யில் நினைவாலயம் அமைத்தால் அதை இடித்து தகர்த்து விடுகிறீர்கள். 
 
இதுபற்றி இந்தியாவும் பேசாமல் இருந்தது எனில் உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?
ஆக, கோப்பாய் மாவீரர் துயிலும் இல் லத்தை மக்களின் அஞ்சலிக்காக ஒப்படைப் பதே தர்மமும் நீதியுமாகும். இதை இலங்கை அரசு செய்ய வேண்டும், இந்திய அரசு செய் விக்க வேண்டும்.
கூடவே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்காக நினைவாலயம் அமைப்பது தொடர்பில் ஓர் அமைப்பு உருவாக்கி அதை செயலாக்குவது அவசியம்.

 

http://valampurii.lk/valampurii/content.php?id=15274&ctype=news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, மியாவ் said:

இப்பொழுது ஈழத் தமிழர்களின் வாழ்க்கை (வாழ்க்கையா, எதிர்காலமா?) யார் கையில் இருக்கிறது என்கிறீர்கள்...

நம்பி இருக்கிறோம் என்கிறீர்களா?? அல்லது 

கட்டுண்டு கிடக்கிறது என்கிறீர்களா??

எதுவுமேயில்லை....

பழி தீர்க்கப்படுகின்றது. 

தேவையில்லாமல் பழி தீர்க்கப்படுகின்றது. 

ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எதுவுமேயில்லை....

பழி தீர்க்கப்படுகின்றது. 

தேவையில்லாமல் பழி தீர்க்கப்படுகின்றது. 

ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.

என்ன செய்தி??

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழன் ஒரு கேட்ப்பாரற்ற  அநாதை என்று தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

 தமிழன் ஒரு கேட்ப்பாரற்ற  அநாதை என்று தெரிகிறது. 

இதில் என்ன செய்தி என்று குமார சாமி அவர்கள் சொன்ன பதிலை நோக்கி கேட்ட கேள்விக்கு அடுத்தாற் போல் உங்கள் பதிவு விழுகிறது... இதில் நீங்கள் என் பதிவை கோட் செய்ய வில்லை... இருப்பினும் "என்ன செயதி" என்ற கேள்விக்கான பதில் என்றே கொள்கிறேன்...

இது செய்தி அல்ல... உலகறிந்த உண்மை... 

தமிழினம் உணர்வு மிகுதியாக இருப்பதாலேயே இந்த நிலை... இந்த உணர்வு மிகுதி என்பதில் அனைத்தும் அடங்கும்...

அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இறந்த இராணுவத்தினர் என்ற அடயாளம் இருக்கின்றது. அவ் அடயாளத்தை வைத்து தமது கடந்தகால நடவடிக்கையை நியாயப்படுத்துவார்கள். அதை மக்களையும் ஏற்றுக்கொள்ள வைப்பார்கள். எமக்கு நினைவு கூர தியாகி திலீபன் அன்னை பூபதி குமரப்பா புலேந்திரன் சம்பவம் என்னும் ஏராளமான படுகொலைச் சம்பவங்கள் இருக்கின்றது. நினைவு கூர இலங்கை அரசு விடாது என்றாலும் புலம்பெயர் நாடுகளில் நினைவு கூரலாம். அதை வெளிப்படுத்த ஏராளமான சமூக ஊடகங்களும் இருக்கின்றது. ஆனால் நாம் நினைவு கூரலில் இருந்து படிப்படியாக விடுபட்டு அடியோடு கைவிடும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆக்கிரமிப்பாளன் வெற்றி பெறுவது ஒரு சம்பவம். அதனால் தோற்றவர்கள் அடிமையாவது என்று வரையறுப்பதில்லை. ஆக்கிரமிப்பாளன் தனது ஆக்கிரமிப்புக்கு நியாயங்களை நிலைநிறுத்தும் போது வெற்றிபெறுகின்றான். அடிமைகள் அதை ஏற்றுக்கொண்டு தமது தரப்பு நியாயத்தை விட்டுக்கொடுக்கும் போது பூரண அடிமையாகின்றனர். 

7 hours ago, சண்டமாருதன் said:

நினைவு கூர இலங்கை அரசு விடாது என்றாலும் புலம்பெயர் நாடுகளில் நினைவு கூரலாம். அதை வெளிப்படுத்த ஏராளமான சமூக ஊடகங்களும் இருக்கின்றது. ஆனால் நாம் நினைவு கூரலில் இருந்து படிப்படியாக விடுபட்டு அடியோடு கைவிடும் நிலைக்கு வந்துவிட்டோம்.

இந்த நினைவுகூரல் நிகழ்வுகளை கண்டிக்கும் அதிமேதாவிகள் பலர் உலகில் புலம்பெயர்ந்து இருக்கின்றனர்.

 

இந்தியக் கொலைகாரர்களின் இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த நேரத்தில் உலக வரைபடத்தில் இந்தியா ஒரு மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகளின் தேசம் என்று யாழ்ப்பாண மக்கள் பலரும் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் கருத்துக்களில் நியாயமும் உண்மைகளும் நிரம்பியிருந்தது.

11 hours ago, Rajesh said:

இந்தியக் கொலைகாரர்களின் இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த நேரத்தில் உலக வரைபடத்தில் இந்தியா ஒரு மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகளின் தேசம் என்று யாழ்ப்பாண மக்கள் பலரும் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் கருத்துக்களில் நியாயமும் உண்மைகளும் நிரம்பியிருந்தது.

ஹிந்தியர்கள் பண்பாடற்ற, நாகரிகமற்ற ஒரு இனம் என்பது பல நூறாண்டுகளாக கூறப்பட்டுவந்த உண்மை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.