Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அமெரிக்க உளவாளியல்ல ; புதிய கடற்படை தளபதி தெரிவிப்பு

Featured Replies

நான் அமெ­ரிக்க உள­வா­ளி­யல்ல ; புதிய கடற்­படை தள­பதி தெரி­விப்பு

 

 

இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார்.

 

நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர்  குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல்  ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த  போதே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில், கடற்­ப­டையில் நான் 35 ஆண்­டுகள் சேவை புரிந்­துள்ளேன். இந்த நாட்­டுக்­கா­கவும் நாட்டின் விடு­த­லைக்­கா­கவும் என்­னா­லான சகல சேவை­யி­னையும் நான் எமது கடற்­ப­டை­யி­ன­ருடன் இணைந்து முன்­னெ­டுத்­துள்ளேன். நான் கடற்­ப­டையில் இணைந்த இரண்டு ஆண்­டு­களில் நாட்டில் பயங்­க­ர­வாத போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆகவே எனது கடற்­படை பய­ணமும் கடி­ன­மா­ன­தா­கவே அமைந்­தது. யுத்தம் முடியும் வரையில் நான் படையில் இருந்தேன். எனினும் யுத்­தத்தை விடவும் சமா­தான காலமே மிகவும் கடி­ன­மான கால­மாக இருந்­தது என்று நான் நம்­பு­கின்றேன். யுத்­தத்தை நிறைவு செய்­ததை விடவும் சமா­தா­னத்தை பலப்­ப­டுத்­தவே எமக்கு கடி­ன­மாக உள்­ளது. மக்­களின் மனங்­களில் இன்றும் யுத்த கல­வரம் மட்­டுமே உள்­ளது. எனவே அதையும் தாண்­டிய சமா­தா­னத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். 

இந்த நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் ஏற்­ப­டு­வ­தற்­கான எந்­த­வொரு வாய்ப்­பு­ம் இல்லை என நான் தனிப்­ப­டை­யாக நம்­பு­கின்றேன். இந்த நாட்டில் உள்ள சகல மக்­களும் அப்­பாவி மக்­க­ளே­யாவர். போரில் பொது­மக்­களே அதி­க­மாக உயி­ரி­ழந்­தனர். அவர்­க­ளு­க்கா­க­வுமே இந்த நாட்டை நாம் பயங்­க­ர­வா­தத்தில் இருந்து மீட்­டுள்ளோம். அதேபோல் நாட்டை விட்டு நான் வெளி­யே­றிய காலத்­திலும் இலங்கை கடற்­ப­டைக்­காக பல சேவை­களை செய்­துள்ளேன். அமெ­ரிக்க கடற்­படை அதி­கா­ரி­யாக நான் செயற்­பட்ட காலத்­திலும் என்னால் இலங்கை கடற்­ப­டைக்கு பல்­வேறு சேவைகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளு­ட­னான கூட்டு பாது­காப்பு நகர்­வு­க­ளுக்­காக உத­வி­களை நான் முன்னெ­டுத்­துள்ளேன். ஆனால் இவற்றை இப்­போது பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. அவை இடம்­பெற்று நீண்ட கால­மா­கி­விட்­டது. 

 

கேள்வி :- இலங்கை கடல் எல்­லைக்குள் நீர்­மூழ்­கிக்­கப்பல் நகர்­வுகள் உள்­ள­தாக கூறப்படு­கின்­றது. இது நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யுமா?

பதில்:- அயல் நாடு­களின் மூல­மாக இலங்­கைக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. நாம் அயல்­நாட்டு கடற்­ப­டை­யி­ன­ருடன் நட்­பு­றவை மேற்­கொண்டு வரு­கின்றோம். எனினும் மறு­புறம் இலங்கை கடல் பரப்பில் அயல்­நாட்டு நீர்­மூழ்கிக் கப்பல் பிர­வே­சிக்க வாய்ப்­புகள்  உள்­ளன. அதனால் எமது பாது­காப்பு நகர்­வு­களில் எந்த பாதிப்பும் ஏற்­பட வாய்ப்­புகள்  இல்லை. கடல் எல்­லைக்குள் நுழை­யாத போதிலும் எல்­லை­களின் மூல­மாக பய­ணிக்க வாய்ப்­புகள் உள்­ளன. எனினும் இதில் அச்­சு­றுத்­தல்கள் இல்லை.

 

கேள்வி:- எவன்கார்ட்  நிறு­வனம் தொடர்பில் கடற்­ப­டையின் செயற்­பா­டுகள் எவ்­வா­றாக உள்­ளன?

பதில் :- எவன்கார்ட் கடல்­பா­து­காப்பு நிறு­வனம் குறித்து தவ­றான கருத்­து­க்க­ளுடன் கடற்­ப­டை­யினர் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஆனால் எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கும் இலங்கை கடற்­ப­டைக்கும் இடையில் ஒரு தொடர்பு மட்­டுமே உள்­ளது. கடல் பாது­காப்பு நகர்­வு­களில் ஆயு­தங்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை மட்­டுமே இலங்கை கடற்­படை முன்­னெ­டுத்­தது. அதை தவிர்ந்த ஏனைய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எவன்கார்ட் நிறு­வ­னமே முன்­னெ­டுத்­தது. அதேபோல் எவன்கார்ட் நிறு­வ­னத்தின் ஆயு­தங்­களை நாம் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை. இலங்கை கடற்­ப­டையின் ஆயு­தங்­க­ளையே நாம் பயன்­ப­டுத்தி கடல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். 

அதை தவிர எவன்கார்ட் பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தது. பய­ணி­களை கொண்டு செல்லல், பண்­டப்­ப­ரி­மாற்றம், ஹோட்­டல்­க­ளு­க்கான உல்­லாச பய­ணி­களை கொண்­டு­செல்லல், உல்­லாச களி­யாட்ட நட­வ­டிக்­கை­களை எல்லாம் அவர்கள் முன்­னெ­டுத்­தார்கள். இதில் எந்த செயற்பாட்­டிலும் இலங்கை கடற்­படை ஈடு­ப­ட­வில்லை.  நாம் கடல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் தகு­தி­யான நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோமா­லிய எல்­லையில் கூட எமது பாது­காப்பு செயற்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இப்­போது எவன்கார்ட் செயற்­பா­டுகள் இல்லை. 

 

கேள்வி :- கடற்­படை மீதான போர்க்­குற்றம் தொடர்பில் கடற்­படை தள­ப­தி­யாக உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில் :- இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் தொடர்பில்  பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் முன்­வைக்­கப்­பட்ட கார­ணி­களில் உண்மை இல்லை. இலங்கை கடற்­ப­டையை பொறுத்­த­வரை மிகவும் ஒழுக்­க­மான படை­யா­கவே நாம் கரு­து­கின்றோம். 

எனினும் கடற்­படை சீரு­டை­யினை அணிந்­து­கொண்டு கட­மைக்­கா­லத்தில் ஏதேனும் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்றால் அவை நிரூ­பிக்­கக்­கூ­டிய வகையில் இருக்­கு­மாயின் யாராக இருப்­பினும் அவர்­க­ளுக்கு தண்­டனை உண்டு. அதில் மாற்றுக் கருத்­து­க்கு இட­மில்லை. எனினும் பொய்­யாக குற்­றங்­களை சுமத்தி எவ­ரையும் தண்­டிக்க முடி­யாது. பாது­காப்பு வீரர் ஒருவன் கொலை­யாளி அல்ல, கொலை­யாளி ஒருவன் பாது­காப்பு வீரனும் அல்ல. இரா­ணுவ தள­பதி இந்த கருத்தை கூறுவார். இந்த வாக்­கி­யத்தில் நானும் முழு­மை­யாக உடன்­ப­டு­கின்றேன். 

 

கேள்வி :- புலி­களின் பட­கு­களை அழித்த  பின்னர் உங்­க­ளுக்­கான அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­ட­வில்­லையா?

பதில் :- புலி­களின் ஆயுதப் பட­குகள் அழிக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ணியில் எனது தலை­மைத்­துவம் இருந்­தது. புலி­களின் 10 அதி நவீன ஆயுதக் கப்­பல்­களை நாம் அழித்த போது இந்த செய்தி வெளியில் வர­வில்லை. ஆனால் அவர்­களின் பட­கு­களை அழித்­த­மையே புலி­களின் கடற்­படை பலத்தை குறைக்க பிர­தான கார­ண­மாக அமைந்­தது. இந்த செயற்­பாட்டில் எனது பெயர் வந்­தி­ருக்­கு­மாயின் எனக்கு மட்­டு­மல்ல எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் அச்­சு­றுத்­த­லாக இருந்­தி­ருக்கும். எனது குடும்­பத்­தினர் தனி­மையில் கண்­டியில் இருந்­தனர். நான் முழு நேர­மாக கடற்­ப­டையில் என்னை ஈடு­ப­டுத்தி இருந்த கார­ணத்­தினால் அவர்­க­ளுக்கு பாது­காப்பு குறை­வா­கவே இருந்­தது. இந்­நி­லையில் எம்மால் இந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன என்­பது தெரிய வந்­தி­ருக்­கு­மாயின் எமக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்கும். எனினும் எனது பெயர் வெளியில் வர­வில்லை. நான் மட்டும் அல்ல என்­னைப்போல் பலர் யாரென்று தெரி­யாத நிலை­மைகள் இன்றும் உள்­ளனர். என்­னுடன் கட­மை­யாற்­றிய பலர் இன்றும் அடை­யாளம் காட்­டிக்­கொள்­ளாது சேவை­யாற்றி வரு­கின்­றனர்.  இன்றும் எமக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. எனினும் நாம் எம்மை பாது­காத்துக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் உள்ளோம். பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இல்­லாத கார­ணத்­தினால் எமக்கு அழுத்­தங்கள் இல்லை. 

 

கேள்வி:- யோஷித்த ராஜபக் ஷ இன்னும் கடற்­ப­டையில் உள்­ளாரா ?

பதில் :- யோஷித்த ராஜபக் ஷ தற்­போது கடற்­ப­டையில் இல்லை. அவ­ருக்­கான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆகவே அது வரையில் அவரை சேவையில் இருந்து இடை நிறுத்தியுள்ளோம். விசா­ர­ணைகள் முடியும் வரையில் அவர் சேவையில் இருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். விசா­ர­ணை­களின் பின்னர் தீர்ப்­பு­களை பொறுத்து அவரை மீண்டும் இணைப்­பது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும். இந்த விசா­ர­ணை­களின் பூரண தக­வல்கள் தொடர்பில் இன்னும் நான் அவ­தா­னிக்­க­வில்லை. எனினும் யோஷித்த ராஜபக் ஷ தொடர்பில் பாரிய குற்­றங்கள் இல்லை. அவர் கட­மையில் நேர்த்­தி­யில்­லாது அதிக விடு­மு­றை­களை எடுத்­துள்ளார். தனிப்­பட்ட வெளி­நாட்டு பய­ணங்­களை மேற்­கொண்­டுள்ளார். இந்த விட­யங்­களை பாரிய குற்­ற­மாக கருத முடி­யாது. இவ்­வாறு பலர் உள்­ளனர். அவர்­க­ளுக்­கான கடற்­படை சட்டம் நடை­மு­றையில் உள்­ளது. அதற்­க­மைய தண்­டனை வழங்­கப்­படும். 

கேள்வி :- நீங்கள் ஒரு  உள­வாளி  என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளனர், இது தொடர்பில் உங்களின் பதில் என்ன ?

பதில் :- என்னை ஒரு அமெரிக்க உளவாளியாக சில அரசியல் வாதிகள் கூறுகின்றமையை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் ஒரு உளவாளி அல்ல. நான் இந்த நாட்டுக்காகவும் எமது நாடு என்ற உணர்விலும் 35 ஆண்டுகள் சேவை செய்தவன். நான் அமெரிக்க கடற்படையில் இணைந்த போதிலும் என்னால் இலங்கை கடற்படைக்கு பல்வேறு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளன. எமது கடற்படையினரை உறுதிபடுத்தவும், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நான் அமெரிக்க கடற்படையின் உதவியுடன் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். 

அதேபோல் உளவாளி என்றாலும் கூட அது இலங்கைக்கு நன்மையாகவே அமையும். அதன் மூலமாக இலங்கைக்கு தேவையான பல்வேறு காரியங்களை சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நான் அமெரிக்க உளவாளி அல்ல என்றார். 

http://www.virakesari.lk/article/23543

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த சின்னையா தமிழில் பேட்டி கொடுத்தவரோ ...ஆங்கிலத்தில கொடுத்தவரோ ? சும்மா ஒரு ஜெனரல் நொலெட்ஜ்க்குத்தான் கேட்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அது சரி உந்த சின்னையா தமிழில் பேட்டி கொடுத்தவரோ ...ஆங்கிலத்தில கொடுத்தவரோ ? சும்மா ஒரு ஜெனரல் நொலெட்ஜ்க்குத்தான் கேட்கிறேன்...

முத்தையா முரளிதரனின் வாரிசு. என்ன மொழியில் பேட்டி கொடுப்பார்..?! அதுசரி.. இந்தா மாங்குளத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கிறன்.. யாழ்ப்பாணத்தில் அமைக்கிறன் என்ற முரளிதரன் இப்ப எங்க..??! எல்லாரும் மகிந்தவுக்கு வெற்றிக்குரல் கொடுத்திட்டு.. தங்கட பிழைப்பை பார்க்கப் போயிட்டினம். :rolleyes:

ஆனால்.. மலையகத்தில் இருந்து வந்து கரும்புலிகளான.. தமிழீழ விடுதலைக்குப் போராடின.. போராளிகளும் உள்ளனர். அவர்களை நாம் எப்போதும் மதிக்க வேண்டும்.. இந்த அமெரிக்க தொழில்நுட்பத்தில்.. ஹிந்தியனின் கப்பலை வைச்சு.. புலிகளின் ஒரு கப்பற் பாதையில்.. அவர்களின் கப்பலை அடிப்பது என்பது.. மிகச் சுலபமான விடயம். ஏதோ சாதிக்க முடியாததை சாதித்த கணக்கு.

புலிகள் விட்ட தவறு.. ஆயுத விநியோகத்திற்கு ஆழ்கடல் கப்பல்களை மட்டும்.. நம்பி இருந்தது தான். அதுவும் இன்றைய நவீன செய்மதி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அமுலில் இருந்த நிலையில்...!

மற்றும்படி.. புலிகளின் கப்பல்கள்.. நடுக்கடலில் அழிக்கப்பட்டிக்காவிட்டாலும்.. கரைக்கு வரும் போதும் அழிக்கப்பட்டிருக்கலாம்.. தமிழகம் ஊடான ஆயுதம் விநியோகம் தடைப்பட்ட பின்.... தமிழீழத்துக்கான ஆயுத விநியோகம் என்பது.. எப்போதுமே சவாலான விடயமாகவே இருந்தது.

எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட முக்கியமான காரணிகளில்.. ஆயுத வழங்களில் கடலை மட்டும் நம்பி இருந்தமையும்.. தமிழீழத்தின் பூகோள அமைவிடமும்.. தமிழகத்தில் எம் ஜி ஆருக்குப் பின்.. ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தரக் கூடிய சக்திகள்.. ஆளும் தரப்பினராக இல்லாமல் போனதும் தான்.. முக்கிய காரணம்.

ஏனெனில்.. உந்த அமெரிக்க வல்லாதிக்கப் புளுகர்களால்.. உலகில் எந்த இடத்திலும் புலிகள் போன்ற ஓர் அமைப்பை இன்னும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம்.. அந்தந்த நாடுகளின் பூகோள நிலை தான். ஆப்கானிஸ்தானில்.. இத்தனை வருசமா குப்பை கொட்டினம்..  உலகின் குண்டுகளுக்கு எல்லாம் தாய்க் குண்டை எல்லாம் கொட்டினம்.. ஒரு பயனுமில்லை. உந்தக் கெட்டிதனங்கள்.. ஏன் தலிபான்களிடம்.. வேர்கவுட் ஆகவில்லை. ஆப்கானிஸ்தானின் பூகோள அமைவிடம் தான் முக்கிய காரணம். 

ஏன் உலக அரசுகளுக்கு எல்லாம் அரச பயங்கரவாதத்தையும் ஆயுதங்களையும் சப்பிளை பண்ணும் இஸ்ரேலால்... கமாஸை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை...??!  ஹிஸ்புல்லாக்களை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை..??!

பலவீனமான களத்திலும்.. இயன்ற வரை.. பலமாகப் போராடிய புலிகள் தான் உண்மையான புத்திசாலிகள்.  அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக் குரலை காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி இலட்சியம் வெல்லும் வரை எடுத்துச் செல்ல வேண்டியதே மக்களின் பொறுப்பு.

இவர் எல்லாம் 5 வருசமோ.. 10 வருசமோ அடிமை சேவகம் செய்திட்டு போயிடுவார்.. ஆனால்.. தமிழ் மக்களுக்காக வெல்லப்பட வேண்டிய உரிமை என்பது சந்ததிகளுக்கும் அவசியமான ஒன்று. tw_angry:

Edited by nedukkalapoovan

31 minutes ago, nedukkalapoovan said:

முத்தையா முரளிதரனின்

இப்ப தம்பியுடன் சேர்ந்து எத்தனோல் கடத்துவது தான் இவரது பிரதான தொழில்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னையா என்ற பெயர் தற்பொழுது அரசின் முக்கியத்துவம் கருதி முதன்மை படுத்தப்படுகிறது என நான் நினைக்கிறேன் இவர் கடற்படை இளநிலை தளபதியாக இருக்கும் பொழுது நிச்சயமாக இவரது பெயர் சின்னையாவாக இருந்திருக்காது ..ட்ரவிஸ் என்ற பெயருடன் தான் வலம் வந்திருப்பார்,....இன்று சிறுபான்மையினரும் படைகளில் தளபதியாக இருக்கினம் என உலகுக்கு காட்டுவதற்கே இந்த சின்னையா என்ற பெயர் பிரபலப்படுத்தப்படுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால், அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கடற்படை தளபதி இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், " நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நான் நம்பவில்லை.

கடற்படையை மேலும், அதிக திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்ற வேண்டும். அதுவே எனது இலக்கு.

அந்த வகையில், கடற்படை நிர்வாகத்திலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாடு குறித்தும் வெளிப்படைத்தன்மை பேணப்படும்" என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் போது எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால் அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாகவும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கவும் அதை தக்கவைக்கவும் தெரிந்த மனிதன். சிங்களவனுக்கு இவர்கள் எவ்வளவு சேவை செய்தாலும் அவன் இவர்களை கௌரவிக்கப் போவதுமில்லை,நன்றி சொல்லப்போவதுமில்லை. மகிந்தர் சொல்வதுபோல் புலிகளை நாமே அழித்தோம் என்று பெருமிதம் ஒருபுறம். புலிகளால் ஆபத்து என்கிற கூப்பாடு மறுபுறம். யார்யாரோ அழிக்க அதில இவர்கள் கூதல் காயினம்.

  • தொடங்கியவர்

குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் – புதிய கடற்படை தளபதி

 
குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் – புதிய கடற்படை தளபதி
 

குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவில் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, புதிய கடற்படைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னைய்யா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் தங்களின் உத்தியோகபூர்வ சீருடையைப் பயன்படுத்திக் கொண்டு குற்றங்களைப் புரிய அனுமதிக்க முடியாது.

யாராக இருந்தாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களின் ஊடாக விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

அவர் எந்த பதவியில், எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும், இந்த விடயத்தில் சலுகைகள் இல்லை என்று வைஸ்ட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னைய்யா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போர் நிறைவடைந்து முழுமையான சமாதானத்தை நோக்கி நகரும் காலப்பகுதியில் இலங்கை இருப்பதாகவும், இதற்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு படையினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை, இந்திய கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ட்ரெவிஸ் சின்னைய்யா கூறியுள்ளார்.

http://newuthayan.com/story/22434.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது ஒரு இறைமையுள்ள நாட்டின் கடற்ப்படைத்தளபதி, ஏவலுக்கும் கூப்பிட்டதும் ஓடிவரவும் சுத்திவரப்பத்துப்பேர். சப்பாத்துத் துடைச்சுக்கொடுக்க எடுபிடிகள் (இது பிரிட்டி ஸ்காலத்திலிருந்தே தொடர்கிறது) இப்படிப் படைபட்டாளத்துடனும் பதவியுடனும் வாழ்ந்தாலும் புலிகளால் ஆபத்து எனும் தலைக்குபின்னால் சுற்றும் ஒளிவட்டம் தெரிய வலம்வருவதில் இந்தக்கனவான் அதிகம் விரும்புகிறார் எனில் 

 அவர்பெற்ற வெற்றி பதவி எல்லாம் அவரதல்ல, அவரது வெற்றியல்ல புலிகளது வெற்றி.  

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  எத்தனை  தலைமுறைக்கு 

இதையே  காவித்திரிவதாக எண்ணம்??

போய் ஏதாவது புதிதாக செய்யுங்கப்பா  நம்பும்படி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கிறிஸ்தவப் பெயராக தெரிகிறது. அன்றுதொட்டு இன்றுவரை தமிழனை வைச்சே தமிழனை அழிக்கும் சிங்களவனின் வியூகத்திற்கு இவர் ஒரு வாழும் உதாரணம். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் திகதியிலிருந்து கடற்படைத்தளபதியாக பொறுப்பேற்றார். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழரசு said:

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால் அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாகவும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

புலியின்ரை அச்சுறுத்தல் இருந்தால் ஆதாரத்தை காட்டவேண்டியதுதானே..

  • தொடங்கியவர்

புலிகளின் கப்பல்களை அழித்ததனால் இப்போதும் அச்சுறுத்தல்; தமிழரான கடற்படைத் தளபதி!

 
புலிகளின் கப்பல்களை அழித்ததனால் இப்போதும் அச்சுறுத்தல்; தமிழரான கடற்படைத் தளபதி!

விடுதலைப் புலிகளின் சக்தி வாய்ந்த ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்தவர் என்று சொல்லப்படும் ஸ்ரீலங்காவின் தற்போதைய கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா, அந்தக் காரணத்திற்காக அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா கடற்படையை அதிக திறமையான ஒரு படையணியாக உருவாக்குவதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பட்டுள்ள அவர், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின்போது செய்தியாளர்களின் கேள்களுக்கு தமிழரான சின்னையா பதில் வழங்கியிருந்தார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அவர், " நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நான் நம்பவில்லை. கடற்படையை மேலும், அதிக திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்றுவதே எனது இலக்கு. அந்த வகையில், கடற்படை நிர்வாகத்திலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாடு குறித்தும் வெளிப்படைத்தன்மை பேணப்படும்.” என்றார்.

மேலும், ”யுத்தத்தின் போது எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள். அத்துடன், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால் அவர்களின் அச்சுறுத்தல் எனக்கு இருக்கின்றது.

இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது தொடர்பாக புதிய தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த முயற்சி தடுக்கப்படும். ஸ்ரீலங்கா கடற்படையானது இந்திய மீனவர்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும். இந்த விடயம் குறித்து நாமும் இந்திய கடற்படை மற்றும் கடலோர கண்கானிப்புப் படையினரும் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகிறோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/destroying-the-powerful-ships-of-the-LTTE

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தளபதி சின்னையாவின் முழுபெயர் Travis Jeremy Liyanduru Sinniah என்று கடற்படையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

 

தளபதி சின்னையாவின் முழுபெயர் Travis Jeremy Liyanduru Sinniah என்று கடற்படையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது இவர் தமிழரல்ல .....என்று சொல்லுறீயள்
:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2017 at 2:11 AM, nedukkalapoovan said:

முத்தையா முரளிதரனின் வாரிசு. என்ன மொழியில் பேட்டி கொடுப்பார்..?! அதுசரி.. இந்தா மாங்குளத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கிறன்.. யாழ்ப்பாணத்தில் அமைக்கிறன் என்ற முரளிதரன் இப்ப எங்க..??! எல்லாரும் மகிந்தவுக்கு வெற்றிக்குரல் கொடுத்திட்டு.. தங்கட பிழைப்பை பார்க்கப் போயிட்டினம். :rolleyes:

ஆனால்.. மலையகத்தில் இருந்து வந்து கரும்புலிகளான.. தமிழீழ விடுதலைக்குப் போராடின.. போராளிகளும் உள்ளனர். அவர்களை நாம் எப்போதும் மதிக்க வேண்டும்.. இந்த அமெரிக்க தொழில்நுட்பத்தில்.. ஹிந்தியனின் கப்பலை வைச்சு.. புலிகளின் ஒரு கப்பற் பாதையில்.. அவர்களின் கப்பலை அடிப்பது என்பது.. மிகச் சுலபமான விடயம். ஏதோ சாதிக்க முடியாததை சாதித்த கணக்கு.

புலிகள் விட்ட தவறு.. ஆயுத விநியோகத்திற்கு ஆழ்கடல் கப்பல்களை மட்டும்.. நம்பி இருந்தது தான். அதுவும் இன்றைய நவீன செய்மதி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அமுலில் இருந்த நிலையில்...!

மற்றும்படி.. புலிகளின் கப்பல்கள்.. நடுக்கடலில் அழிக்கப்பட்டிக்காவிட்டாலும்.. கரைக்கு வரும் போதும் அழிக்கப்பட்டிருக்கலாம்.. தமிழகம் ஊடான ஆயுதம் விநியோகம் தடைப்பட்ட பின்.... தமிழீழத்துக்கான ஆயுத விநியோகம் என்பது.. எப்போதுமே சவாலான விடயமாகவே இருந்தது.

எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட முக்கியமான காரணிகளில்.. ஆயுத வழங்களில் கடலை மட்டும் நம்பி இருந்தமையும்.. தமிழீழத்தின் பூகோள அமைவிடமும்.. தமிழகத்தில் எம் ஜி ஆருக்குப் பின்.. ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தரக் கூடிய சக்திகள்.. ஆளும் தரப்பினராக இல்லாமல் போனதும் தான்.. முக்கிய காரணம்.

ஏனெனில்.. உந்த அமெரிக்க வல்லாதிக்கப் புளுகர்களால்.. உலகில் எந்த இடத்திலும் புலிகள் போன்ற ஓர் அமைப்பை இன்னும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம்.. அந்தந்த நாடுகளின் பூகோள நிலை தான். ஆப்கானிஸ்தானில்.. இத்தனை வருசமா குப்பை கொட்டினம்..  உலகின் குண்டுகளுக்கு எல்லாம் தாய்க் குண்டை எல்லாம் கொட்டினம்.. ஒரு பயனுமில்லை. உந்தக் கெட்டிதனங்கள்.. ஏன் தலிபான்களிடம்.. வேர்கவுட் ஆகவில்லை. ஆப்கானிஸ்தானின் பூகோள அமைவிடம் தான் முக்கிய காரணம். 

ஏன் உலக அரசுகளுக்கு எல்லாம் அரச பயங்கரவாதத்தையும் ஆயுதங்களையும் சப்பிளை பண்ணும் இஸ்ரேலால்... கமாஸை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை...??!  ஹிஸ்புல்லாக்களை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை..??!

பலவீனமான களத்திலும்.. இயன்ற வரை.. பலமாகப் போராடிய புலிகள் தான் உண்மையான புத்திசாலிகள்.  அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக் குரலை காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி இலட்சியம் வெல்லும் வரை எடுத்துச் செல்ல வேண்டியதே மக்களின் பொறுப்பு.

இவர் எல்லாம் 5 வருசமோ.. 10 வருசமோ அடிமை சேவகம் செய்திட்டு போயிடுவார்.. ஆனால்.. தமிழ் மக்களுக்காக வெல்லப்பட வேண்டிய உரிமை என்பது சந்ததிகளுக்கும் அவசியமான ஒன்று. tw_angry:

அவங்களுக்கு செய்மதி ஒன்றும் தேவை படவில்லை 
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து உடனுக்கு உடன் செய்தி 
கொடுத்த கே பி என்ற துரோகி இப்போ கிளிநொச்சியில் இருக்கிறான்.

இரண்டாவது மூன்றாவது அடிப்பட்ட பின்பு என்றாலும் 
அவர்கள் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும். உள்ளுக்கும் பார்த்து இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.