Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைதீவில் படகு விபத்து – 6 மாணவர்கள் உயிரிழப்பு!!

Featured Replies

மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு

 
மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு
 

பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத்  தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

மேலதிக விவரங்கள் விரைவில்….

http://newuthayan.com/story/23607.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு

 
மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு
 
இரண்டாம் இணைப்பு

படகில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.

நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

3-11-750x400.jpg

http://newuthayan.com/story/23607.html

  • தொடங்கியவர்

படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் சடலமாக மீட்பு.!

 

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த  படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை, ஒருவர் உயிர்தப்பிய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்டபோது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/23711

  • தொடங்கியவர்
சோகமயமானது யாழ். போதனா

உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது குழுமியுள்ளனர். அந்தப் பகுதியே சேகமயமாகக் காணப்படுகின்றது.

viber-image6-3-750x400.jpgviber-image8-750x400.jpg

 

 

http://newuthayan.com/story/23607.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் பலி

 
 

மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி

 

அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

2222-750x400.jpg22222-750x400.jpg222222-750x400.jpg2222222-750x400.jpg

http://tamil.adaderana.lk

http://newuthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவு கடலில் மிதக்கு நடைபாதை போட்டு.. படகுச் சவாரி என்று செய்தி வந்த போதே யாழில் கள உறவுகள் எச்சரித்தார்கள்.. இப்படி நடக்குக் கூடாதுன்னு.

சில தினங்களுக்கு முன்னும் இதே பகுதியில் படகு கவிழ்ந்து சாவு நிகழ்ந்திருந்தது.

யாழ் மாநகர சபை அதிகாரிகளின் அசைட்டையும்.. தகுந்த மக்கள் பாதுகாப்பில் அக்கறையின்றிய வெறும் வருமானத்தை இலக்காகக் கொண்ட திட்டங்களும்.. அதற்கு அனுமதி அளிப்பவர்களிடம் இந்த திட்டங்கள் தொடர்பான அடிப்படை அறிவின்மையும்.. இப்படி அநியாயமாக.. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பொறுபேற்று யாழ் மாநகர சபை மற்றும் சொறீலங்கா அதிகாரிகள் பதவி விலகுவதோடு.. தகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமுலாக்கப்படும் வரை படகுச் சவாரி முற்றாக நிறுத்தப்படுதல் வேண்டும்.

மாணவர்களை பாதுகாப்பின்றி.. கடலுக்குள் படகுச் சவாரிக்கு அனுமதித்தவர்கள் மீது கொலை குற்றத்தின் கீழ் கைதும்.. நீதியின் கீழ்  கடுமையான தண்டனையும்... வழங்கப்படுதல் வேண்டும். 

மாணவர்களை தகுந்த பாதுகாப்பின்றிய இடங்களுக்கு களியாட்டத்துக்கு கண்காணிப்பின்றி அனுப்பும் பெற்றோரும் இதில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதோடு.. பாடசாலை நிர்வாகம் என்பது.. மாணவர்கள் பாடசாலை முடிந்ததும்.. சரியான நேரத்துக்கு.. வீடு திரும்புவதை உறுதி செய்யும் நடைமுறைகளை அமுலாக்க வேண்டும். tw_angry:

அப்பாவி உயிர்கள் அதிகாரிகளின் அசமந்தத்தால்.. அழிக்கப்படுவது தொடரக் கூடாது. அபிவிருத்தி என்ற போர்வையில் மக்கள் மீது பாதுகாப்பற்றவற்றை திணித்து கொள்ளை வருமானம் அடிப்பதை நிறுத்த வேண்டும். மக்கள் மீது அக்கறையும் பாதுகாப்பும் காட்டும்.... சுகாதாரத்துடன் கூடிய நீண்டு நிலைக்கக் கூடிய அபிவிருத்தியே எம் மக்களுக்குத் தேவை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

A/L பரீட்சை கடைசி நாள் என்பதனால் மிகவும் சந்தோசாமாக எங்காவது போய்  enjoy பண்ணி விட்டு வருவோம் என நினத்துள்ளார்கள். இது பொதுவாக பரீட்சையின் கடைசி நாளில் எல்லோரும் செய்வது. 

மாணவர்களிலேயே தவறுள்ளது. சரியான பாதுகாப்பு (rescue tube) கவசங்களை அணியாமல் யாருடைய அனுமதியும் இன்றி கட்டப்பட்டிருந்த படகில் ஏறி கடலுக்குள் சென்றது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

உயிரிழந்த மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

A/L பரீட்சை கடைசி நாள் என்பதனால் மிகவும் சந்தோசாமாக எங்காவது போய்  enjoy பண்ணி விட்டு வருவோம் என நினத்துள்ளார்கள். இது பொதுவாக பரீட்சையின் கடைசி நாளில் எல்லோரும் செய்வது. 

மாணவர்களிலேயே தவறுள்ளது. சரியான பாதுகாப்பு (rescue tube) கவசங்களை அணியாமல் யாருடைய அனுமதியும் இன்றி கட்டப்பட்டிருந்த படகில் ஏறி கடலுக்குள் சென்றது தவறு.

நீங்கள் ஒருசிலர் தான் இப்படி எழுதக் கூடியவர்கள்.

கடலுக்கு போகும் சாதாரண மக்கள் கடல் பற்றி அறிவோடும் பாதுகாப்போட்டும் போகனும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு வழிகாட்டி அனுப்ப வேண்டியது இந்தத் திட்டங்களை அமுல்படுத்துபவர்களின் கடமை. 

உலகில்.. இப்படியான சம்பவங்களை தடுக்க என்று குறித்த கடல் சார்ந்த அறிவோடு கடலோர காவல் அணி ஒன்று ஆபத்தான கடல்களில் மக்களின் பாதுகாப்பு நிமித்தம் தொலைநோக்கிகள் பாதுகாப்பு மீட்பு படகுகள் உபகரணங்கள் சகிதம் நிற்கும். இவ்வாறு செல்பவர்களை கண்டு அவதானித்து தடுப்பது விபத்துக்கள் நேர்ந்தால்.. காலதாமதமின்றி சென்று மீட்பது இவர்களின் கடமை.

இந்த அணியை நிறுத்தாமல்.. இந்த பகுதியை மக்கள் பாவனைக்கு திறந்தது தான் இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

யாழ் பண்ணை படகு விபத்து - மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்

 
59a409212e4da-IBCTAMIL.jpg
59a40bf690770-IBCTAMIL.jpg
 
 
 
 

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

 

59a40d9d83627-IBCTAMIL.jpg

யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கவிழ்ந்த படகிலிருந்து தப்பி வந்த ஒரு மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சற்று முன்னர் வரை 5 உயிரிழந்த சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 10 பேரையும் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-boat-accident

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)

ஒருவர் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்தார்

 
 
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கடற்பகுதியில்  இடம்பெற்ற  படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 
 
இச்சம்பவம் இன்று (28)  பிற்பகல் 2.00  மணியளவில் மண்டை தீவு, சிறுதீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
 
இப்பகுதியில்   உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்துச் சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர்.  
 
அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை. பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
Jaffna-Mandaitivu-Boat-Accident-6-Dead-2
 
மேலும் இதன் போது   நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
உயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய், கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
 
யாழ். தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள், நண்பர் ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது  இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதே வேளை  சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர்  இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு, நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்கடற்பகுதி ஆழமற்றதாக இருந்த போதிலும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://thinakaran.lk/2017/08/28/உள்நாடு/19571

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் ஒருசிலர் தான் இப்படி எழுதக் கூடியவர்கள்.

கடலுக்கு போகும் சாதாரண மக்கள் கடல் பற்றி அறிவோடும் பாதுகாப்போட்டும் போகனும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு வழிகாட்டி அனுப்ப வேண்டியது இந்தத் திட்டங்களை அமுல்படுத்துபவர்களின் கடமை. 

உலகில்.. இப்படியான சம்பவங்களை தடுக்க என்று குறித்த கடல் சார்ந்த அறிவோடு கடலோர காவல் அணி ஒன்று ஆபத்தான கடல்களில் மக்களின் பாதுகாப்பு நிமித்தம் தொலைநோக்கிகள் பாதுகாப்பு மீட்பு படகுகள் உபகரணங்கள் சகிதம் நிற்கும். இவ்வாறு செல்பவர்களை கண்டு அவதானித்து தடுப்பது விபத்துக்கள் நேர்ந்தால்.. காலதாமதமின்றி சென்று மீட்பது இவர்களின் கடமை.

இந்த அணியை நிறுத்தாமல்.. இந்த பகுதியை மக்கள் பாவனைக்கு திறந்தது தான் இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம். :rolleyes:

 

நெடுக்க்ஸ்,

சில ஆனலும் சில அடிப்படை பாதுகாப்பு பொறிமுறைகளை நாங்களாவே அறிந்து இருப்பது எதிர்பார்க்கப்படுகின்றது.

(உ+ம்) காரை நிறுத்தியவுடன் hand brake போடுவது, சிறுவர்களை காரின் முன் சீட்டில் வைத்து driving செய்வதை தவிர்ப்பது.

இங்கு excessive heating (50C) போது அதிகளவு உப்பு உட்கொள்ள செய்வது, குளிர் நாடுகளில் அணிய வேண்டிய உடைகளை பற்றிய அறிவு.
இரவில் சைக்கிள் ஓடும்போது reflective jacket அணிவது, தீ எற்படும்போது அது type A, B C D என அறிந்து அதற்கேற்ப‌ தண்ணீராஅல்லது Co2, அல்லது foam/dry-powder பாவிப்பது, அடிப்படை முதலுதவி அறிவு, இவைகள் எல்லாம் commonsense என்று சொல்வோமே. 

அமெரிக்கவில்தான் Baywatch படங்களில் போன்று பிகினி அணிந்த அழகு மங்கைகள்  அடித்து கொண்டு போகும்போது இழுந்து வந்து மார்பை நசுக்கி, வாயேடு வாய்வைத்து நீரை ஊறிந்து உயிரை காப்பற்றுவார்கள்.

 இங்கு எப்படி இவற்றை நடைமுறைப்படுத்த முடியும். இது மக்கள் மாலை வேளையில் நடந்து / உலாவித்திரிய போட்டது.

இவர்கள் தனியாக படகை எடுத்து யாருடைய மேற்பார்வையும் இன்றி சென்றுள்ளார்கள். இது பிழை   

சும்மா எல்லவற்றிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை குற்றம் சொல்லக்கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த நாட்டிலை ஒருவருக்கும் உயிரின்ரை மதிப்பு தெரியாதா. ரோட்டிலைதான் மோதிச் சாகிறாங்களெண்டால் இப்ப கடலிலும் போய் வீணா சாகத்தொடங்கிட்டானுங்க. அரசியல்வாதிங்க என்னத்தை புடுங்கிறானுங்க. அவங்களுக்கு இது பத்தோடை பதினைங்சு. அப்படித்தானே. ஆட்சிமன்ற கூட்டங்களிலை என்னத்தை அரசியல்வாதிகள் கதைக்கிறானுங்க. அது மாகாணமோ மாவட்டமோ அல்லது நகரமோ எதுவாயிருந்தாலும் உடனடியான நடவடிக்கை அவசியம். பொக்கட்டுக்கை கையவிட்டு சொறியிறதை விட்டுட்டு ஏதாவது செய்யப்பாருங்கப்பா மடப்பயலுகளா !!!

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்

3 மாணவர்கள் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இவர்களில் 3 மாணவர்கள் யாழ். பரியோவான் கல்லூரி மாணவர்கள், ஏனையோர் கொக்குவில் இந்து கல்லூரி,  யாழ் மத்திய கல்லூரி, பெரியபுலம் மகா வித்தியாலய மாணவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

நெடுக்க்ஸ்,

சில ஆனலும் சில அடிப்படை பாதுகாப்பு பொறிமுறைகளை நாங்களாவே அறிந்து இருப்பது எதிர்பார்க்கப்படுகின்றது.

(உ+ம்) காரை நிறுத்தியவுடன் hand brake போடுவது, சிறுவர்களை காரின் முன் சீட்டில் வைத்து driving செய்வதை தவிர்ப்பது.

இங்கு excessive heating (50C) போது அதிகளவு உப்பு உட்கொள்ள செய்வது, குளிர் நாடுகளில் அணிய வேண்டிய உடைகளை பற்றிய அறிவு.
இரவில் சைக்கிள் ஓடும்போது reflective jacket அணிவது, தீ எற்படும்போது அது type A, B C D என அறிந்து அதற்கேற்ப‌ தண்ணீராஅல்லது Co2, அல்லது foam/dry-powder பாவிப்பது, அடிப்படை முதலுதவி அறிவு, இவைகள் எல்லாம் commonsense என்று சொல்வோமே. 

அமெரிக்கவில்தான் Baywatch படங்களில் போன்று பிகினி அணிந்த அழகு மங்கைகள்  அடித்து கொண்டு போகும்போது இழுந்து வந்து மார்பை நசுக்கி, வாயேடு வாய்வைத்து நீரை ஊறிந்து உயிரை காப்பற்றுவார்கள்.

 இங்கு எப்படி இவற்றை நடைமுறைப்படுத்த முடியும். இது மக்கள் மாலை வேளையில் நடந்து / உலாவித்திரிய போட்டது.

இவர்கள் தனியாக படகை எடுத்து யாருடைய மேற்பார்வையும் இன்றி சென்றுள்ளார்கள். இது பிழை   

சும்மா எல்லவற்றிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை குற்றம் சொல்லக்கூடாது.

 

படகை எப்படி.. அவர்கள் அடைந்தார்கள்..???!

அபிவிருத்தின்னு.. பாதுகாப்பின்றி போட்ட அரைவேர்க்காட்டுத் தனத்தால் தானே..??!

இதற்கு முன் இப்படி சம்பவங்கள் நடக்கவில்லையே...! அப்பவும் மீன் பிடி படகுகள் அங்கு தரித்து நின்றன தானே.

ஒரு வாரத்துக்குள் இரண்டாவது சம்பவம். ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை.. ஒரு கடல் கண்காணிப்பு அணியை உருவாக்கனும் என்ற எண்ணம் வரல்லைன்னா.. அந்த நாடு இந்தப் பூமியில் இருந்து பிரயோசனம் இல்லை. 

நீங்க எதையும் சொல்லிக் கொள்ளுங்கள். இது சொறீலங்காவின் அரைவேர்க்காட்டு அதிகாரிகளின்.. மக்கள் அக்கறையற்ற செயற்பாடுகளின் தொடர்ச்சி.

இதற்கு தமிழ் மக்களையும் பலியிட வேண்டாம்.

யாழ் மாநகர சபை இப்படியான மரணங்களை தடுக்க உடனடி திட்டம் போடனும். 

  • தொடங்கியவர்

யாழ் படகு கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 6 மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

21175367_10208051475759412_208219721_n.j

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21175472_1841152492579369_855563807_n.jp

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

21208495_10208051475839414_1623185530_n.

உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச்  சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

IMG_0895.jpg

IMG_0909.jpg

IMG_0910.jpg

IMG_0915.jpg

IMG_0917.jpg

IMG_0920.jpg

IMG_0923.jpg

IMG_0925.jpg

IMG_0931.jpg

IMG_0946.jpg

IMG_0946.jpg

IMG_0950.jpg

IMG_0953.jpg

http://www.virakesari.lk/article/23716

  • தொடங்கியவர்

 

பிறந்த நாள் கொண்டாட்டம் ஆறு பேரின் உயிரை பறித்தது

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியும் வாகன விபத்தும் தான் பதின்ம வயது 
இளைஞர்களை காவுகொள்ள கூடிய மிகவும் ஆபத்தான 
விடயங்கள் என்று பலமுறை நானே இங்கு எழுதி இருக்கிறேன்.

ஒரு வேளை  படகு கவிழ்ந்தால் ?
என்ற முன்னெச்சரிக்கை கேள்வி என்பதை 

பெரும்பாலும் எமது சமூகம் பயம் என்ற கோணத்தில்தான் பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

கடலேரியை பார்த்தால் அவ்வளவு ஆழமில்லையே.. நீந்தி கரையேறலாம் போலவே உள்ளது..!

பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயமில்லையோ..?

  • தொடங்கியவர்

யாழ்மண்ணை உலுக்கிய கொடூர இழப்புக்கள்; ஏனிந்த நிலை எமக்கு?

 
யாழ்மண்ணை உலுக்கிய கொடூர இழப்புக்கள்; ஏனிந்த நிலை எமக்கு?

அதிர்ச்சியும் சோகமும் கலந்த ஒரு அந்தர நாளாக யாழ்மண்ணின் இன்றைய நாள் கடந்துபோகிறது. ஒரே நாளில் வலி மிகுந்த இழப்புக்கள். ஒரு பக்கம் என்றுமே இல்லாத யானைத் தாக்குதல், மறுபக்கம் படகு விபத்து... எம் இனத்துக்கு ஏன் இந்தக் கொடுமை!

விழுங்கிவிடுமளவுக்கெல்லாம் ஆழமானதல்ல அந்தக் கடற்பகுதி. வளம் நிறைந்த கண்டமேடைக் கடல் என்று சொல்வார்கள். யாழ்ப்பாண நிலத்திணிவை குடாநாடு என்று சொல்வதற்கு ஏதுவாய் அமைந்த கடனீரேரி அது. வடக்கின் மிகப்பெரிய நீரியல்வளச் சொத்துக்கள் முத்துக்கள் அனைத்தும் இயற்கையால் கொட்டப்பட்ட பகுதி.

அப்படியான ஒரு இடத்தில் எங்கள் எதிர்காலச் சொத்துக்கள் கொத்தாகப் பறிபோனதை மனம் ஏற்குதில்லையே. ஏன் இந்த விபரீத எண்ணங்கள்? எங்கள் இளைஞர்களுக்கு இருக்கக்கூடாத பண்பல்லவா?

மனிதன் இயற்கையோடு இணைந்து கொண்டாட முற்படுகின்ற நேரமெல்லாம் இயற்கையோடு இயைந்து செல்லுதல் என்ற ஒன்றை மறந்துவிடுவதால்தான் இயற்கை அவனைத் தண்டிக்கிறது.

பயிற்சியும் பழக்கமும் வழக்கமும் இல்லாத ஒரு செயலைச் செய்யப்போகின்றபோதுதான் இயற்கை தனது குரூர முகத்தைக் காட்டிவிடுகிறது. சமூகத்திற்கு சீர்கேடுகளைத் தரவல்ல எந்தவொரு கொண்டாட்டமும் வெறுக்கப்படவேண்டிய ஒன்றே.

அவர்கள் யார் பெற்ற பிள்ளைகளோ அறியேன்; யார் ஊட்டி வளர்த்த பிள்ளைகளோ அறியேன்; யார் கற்பித்து ஆளாக்கிய பிள்ளைகளோ என்பதையும் அறியேன். ஆனால் அவர்களை இழந்ததனால் அந்த முகம்தெரியாத மனிதர்கள் எவ்வளவு பதறியும் கதறியும் தேற்றுவார் யாருமின்றி தேகத்தை நோவார்கள் என்பது தெரியும். நிதானமுள்ள மனிதர்களால் சாதாரணமாகவே அடுத்தவர் வேதனைகளை உணர்ந்துகொள்ள முடியும்.

இளங்கன்று பயமறியாது என்ற ஒற்றைத் தொடருக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்களை எம் முன்னோர் எப்படியெல்லாம் பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை சில நிகழ்வுகள்தான் அவ்வப்போது எடுத்துக்காட்டுகின்றன. பயமறியாத அந்த இளமனது, தனது எதிர்காலத்தை மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையே கணத்தில் சிதைத்துவிடுகிறது.

இன்றைய மண்டைதீவுச் சம்பவம் இனிமேலும் நடக்காதளவுக்கு இன்றைய பெற்றோர் தமது பிள்ளைகளை வளப்படுத்தவேண்டும். நண்பர்களாக ஒன்றிணைதல் தவறல்ல, ஆனால் சுய பழக்கவழக்கமும் சுய பாதுகாப்பும் மிக மிக முக்கியமானது. காட்டெருமைக் கூட்டத்தை வேட்டையாடவந்த சிங்கம் பலவீனமான எருமை ஒன்றை இனங்காணபதற்காக எவ்வளவு நேரமும் காத்திருக்குமாம். பின்னர் அதனைக் கூட்டத்திலிருந்து பிரித்து இலகுவாக வேட்டையாடுமாம். இயற்கையின் வேட்டையும் அவ்வாறானதே.

நண்பர் கூட்டத்தோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை மறந்துவிடுகிறோம். நிலமை மோசமடைகின்றபோதுதான் நம்மை நாமே உணரத் தொடங்குகிறோம். அப்பொழுது நமக்காக இயற்கை சிறு துளியளவுகூட இறங்கிவரப்போவதில்லை. மிக மோசமாக வஞ்சித்துவிடுகிறது.

கூடுவாரோடு கூடுவதும் குற்றம், கூடாத செயல்களைப் பழகுவதும் குற்றம். உங்களைப் பெற்றவர்களின் கனவுகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்தையும் சிதைக்கின்ற காரியங்கள் இனிமேலும் வேண்டாம் இளைஞர்களே. உயரிழந்த அந்த உறவுகளுக்கு நெஞ்சம் கனத்த இரங்கல்கள்!!

https://news.ibctamil.com/ta/internal-affairs/boat-accident-in-jaffna

27 minutes ago, நவீனன் said:

 

அவர்கள் யார் பெற்ற பிள்ளைகளோ அறியேன்; யார் ஊட்டி வளர்த்த பிள்ளைகளோ அறியேன்; யார் கற்பித்து ஆளாக்கிய பிள்ளைகளோ என்பதையும் அறியேன். ஆனால் அவர்களை இழந்ததனால் அந்த முகம்தெரியாத மனிதர்கள் எவ்வளவு பதறியும் கதறியும் தேற்றுவார் யாருமின்றி தேகத்தை நோவார்கள் என்பது தெரியும். நிதானமுள்ள மனிதர்களால் சாதாரணமாகவே அடுத்தவர் வேதனைகளை உணர்ந்துகொள்ள முடியும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/boat-accident-in-jaffna

ஆழம் குறைந்த இந்த கடலில் எப்படி இது நிகழ்ந்து இருக்கும் என்பதை புரிய முடியுது இல்லை.
எனக்கு மச்சான் முறையான  ஒரு உறவு, மண்டை தீவில் இருந்து ஷாப்பிங் பாக் (shopping bag) இல் உடுப்புகளை வைத்துக் கொண்டு நீந்தியே பண்ணை கடல் கரைக்கு வருவான் ...அந்தளவுக்கு இது ஆழம் குறைந்தது மட்டுமன்றி அலை சிறிதும் இல்லாத கடல்.

படகு தரிப்பிடத்திற்கு சென்று கட்டி இருந்த படகை அவிழ்த்து கடலுக்குள் சென்றிருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது.  பண்ணை கடலில் மீன் பிடிக்கும் ஓரிருவர் மட்டும் செல்லக் கூடிய சிறிய படகு போலும். ஆட்கள் கூடியதால் கவிழ்ந்து இருக்க வாய்ப்புகள் இருக்கு.

கடந்த வருடம் லண்டனில் குளிக்க போய் ஐந்து தமிழ் இளைஞர்கள் பலியாகினர். இன்று யாழில் 6 பேர்.

கொத்து கொத்தாக சாக பிறந்த கூட்டம் நாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மண்டதீவுக் கடலில் பரிதாபம்.

மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 05 இளைஞசர்கள் கடலில் முழ்கி மரணம் இன்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு பணிப்புரை..

18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட றஜீவ், பிரவீன், தனுரதன், தனுசன் மற்றும் செல்வின் ஆகியோர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

குளிக்க சென்று இருக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது மேலதிக விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Image may contain: one or more people, swimming, ocean, outdoor and water
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் ஆழந்த அஞ்சலிகள்.அவர்களின் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த மிகவும் சோகமான நிகள்வையும் அரசியலுக்கு பயன் படுத்தாமால் இருப்போமாக.

உறவுகளே,

இது போன்ற சம்பவம் இனிமேலும் நடக்காதிருக்க சமூக மட்டத்தில் என்னவகையான அறிவூட்டல்களை / செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள்? எப்படி இவற்றை கூடிய அளவுக்கு தடுக்கலாம் என நம்புகின்றீர்கள்? இந்த செய்தி உயிர்ப்பாக இருக்கும் இந்த வேளையில் இது பற்றியும் உரையாடுவது பலன் தரும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் யாழ் மாநகர சபைக்கும்.. வடமாகாண சபைக்கும் உட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளதால்.. அதுவும் ஏலவே ஒரு மரணம் நிகழ்ந்த பின் தொடர்ந்தும் குறித்த கடல் பகுதியில் மக்களின் பாதுகாப்புக் குறித்த அக்கறையின்மை காரணமாக நிகழ்ந்துள்ளது. 

எனவே.. அதிகாரிகள்.. அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் போது மக்களின் பாதுகாப்பிற்கும்.. அவர்களின் நலனிலும் கூடிய அக்கறை செய்ய வேண்டும். 

அந்த வகையில்.. ஆபத்தான இடங்களில் களியாட்டங்களில் ஈடுபடும் மக்களை கண்காணிக்கும் வகையில்... விரைவு உதவி முதலுதவி  அணி ஒன்றை..ஆரம்பித்து.. அதற்குரிய பயிற்சியும்.. உபரகணங்களும் வழங்கப்பட்டு.. அந்த விரைவு உதவி.. முதலுதவி முக்கிய இடங்களில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதில் பட்டதாரிகள்.. பொலிஸ் பிரிவினர்.. சொறீலங்கா கடற்படை... மற்றும் யாழ் மாநகர சபை.. வடக்கு மாகாண சபை இணைந்து ஒரு அணியை விரைந்து உருவாக்கிக் கொள்வது உடனடியாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். 

உங்களால் முடியவில்லை என்றால்.. முன்னாள் கடற்புலி வீரர்களைக் கொண்ட ஒரு பொதுமக்கள் பாதுகாப்பு அணியை உருவாக்குங்கள். அவர்கள் ஆயுதம் தரிக்கமாட்டார்கள். அவர்களுக்கு..மக்கள் உயிர்காப்புக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட பயிற்சியும் வளங்களும் அளிக்கப்பட்டால்.. அவர்கள் சிறந்த மக்கள் சேவையை வழங்குவார்கள். 

யாழ் மாநகர ஆணையாளரிடம்.. இது தொடர்பில் முறையிடுவது நல்லது. 

அவரின் தொடர்புகளுக்கு.. http://jaffna.mc.gov.lk/en/index.php

அனுபவமில்லாதவர்கள் சென்ற இந்த படகு விபத்தும், அனுபவம் குறைந்த படகோட்டியால் இயக்கிய சில கிழமைகளுக்கு முன்னர் நடந்த விபத்தும் மாணவர்களின், இளைஞர்களின் செல்பி மோகத்தால் நடந்த விபத்துகள் என தப்பியவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.   

படகின் சமநிலையைப் பேணாத போது, படகு சரியத் தொடங்கும் போது, பயத்தால் அங்குமிங்கும் ஓடுவதால் படகு கவிழ்வதை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும். பெரும்பாலான விபத்துக்கள் இவ்வாறே ஏற்படுகின்றன.

இதுபோன்ற நிலைமைகளில் அனுபவமிக்க படகோட்டிகள் இருந்தால், அவர்கள் இயந்திரத்தின் வலு மூலம் சமநிலையைப் பேணி சமாளித்துவிடுவார்கள்!

முன்பு நாங்கள் நீச்சல் பழகுவதில் இருந்த ஆர்வம் இப்போதைய இளைஞர்களிடம் இல்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.