Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

Featured Replies

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்!

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வட கிழக்கு பகுதிகளுக்கு, இந்திய படைகள் சென்றன.

இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்ஷி யோனென் சிங் முப்பது ஆண்டுகளுக்குப்பின், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்காக இந்திய அமைதிப்படையினரை பலரும் குற்றச்சாட்டும் வேளையில் அந்த பகுதிகளுக்கு அண்மையில் சென்றார்.

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

தனி நாடு கேட்டுப் போராடிவந்த விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தை பின்னோக்கி ஓடவைத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்திடமும் விடுதலைப்புலிகளிடமும் மிகப்பெரிய ஆள்ப்பற்றாக்குறை காணப்பட்டிருந்தது.

ஒரு கொரில்லா அமைப்பாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு நாட்டின் இராணுவத்தை போரில் வென்றுகொண்டிருந்தமையானது இந்தியாவின் கண்களிலே தூசியினை நெருடவைத்ததென்றுதான் சொல்லமுடியும்.

அந்தக் காலத்தில் இந்திய மாநிலங்களில் பலம்வாய்ந்த மாநிலமாக இருந்த தமிழ் நாட்டுக்கும் அதனது மக்களுக்கும் விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் புதிய உத்வேகத்தினைக் கொடுத்து விடுமோ என இந்தியா பயந்தது மறுக்கக்கூடியதன்று.

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

அதன்பின்னர்தான் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தை ஆக்கிரமித்து விடுதலைப் புலிகளை அடக்கியொடுக்குவது என்ற ஒரு திட்டத்தினை இந்தியா கொண்டுவந்தது. யோனென் சிங் அப்போது இந்திய இராணுவத்தின் மேயராகப் பணியாற்றியிருந்தார்.

இந்திய அமைதிப்படை வந்தபோது தமிழர்கள் அதனை வரவேற்றார்கள். தம்மை ஸ்ரீலங்கா இராணுவத்திடமிருந்து காக்க வந்தவர்களென்று எண்ணிக்கொண்டார்கள். விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள் என்ற வகையில் ஆரம்பத்தில் சுமூகமாகத்தான் உறவு சென்றுகொண்டிருந்தது. ஆனால் நடந்தது முற்றிலும் மாறுபட்ட செயற்பாடுகளே.

”விடுதலைப் புலிகளுடன் எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை, அவர்கள் ஆயுதத்தைக் கீழே போட மறுத்தமையினாலேயே பிரச்சினை மோசமானது” என்கிறார் யோனென் சிங்.

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

ஆனால் இந்திய அமைதிப்படையானது, பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானது. அவை இதுவரை ஒருபோதுமே விசாரணைக்கு உள்ளாகவில்லை என்பது இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.

1987 ஒக்டோபர் மாதம் 21,22 திகதிகளில் இந்திய அமைதிப்படையின் தாக்குதலால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் மருத்துவ தாதிகளும் நோயாளிகளுமென சுமார் அறுபதுபேர் படுகொலை செய்யபட்டனர்.

இந்தியப் படையினர் மருத்துவமனையினுள் புகுந்து கண்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

ஆனாலும் இந்த தாக்குதல்பற்றி தனக்கு எதுவுமே தெரியாதென்று யோனென் சிங் கூறுகின்றார். ஆனால் அது நடந்திருக்கக்கூடாதென்று அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை மிகப்பெரிய இழப்புக்களினைச் சந்தித்திருந்தது. ஆயிரக்கணக்கான தனது இராணுவச் சிப்பாய்களை விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பலியாக்கி அழுத்தத்திற்கும் அவமானத்திற்கும் மத்தியிலேயே அது இலங்கையை விட்டு வெளியேறியது என்பது வரலாறாகும்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/ipk-fight-with-ltte

 

  • கருத்துக்கள உறவுகள்

bbcதமிழை கொப்பி பண்ணி போடுது ibcதமிழ் பேசாமல் "கொப்பி பேஸ்ட்ibc" பேரை மாற்றுவது நல்லது .

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி!

 

இந்தக் காணொளியில் 2.11 வது நிமிடத்தில் சொல்லப்படும் செய்தியானது முற்றிலும் தவறானது. இந்தியப்படை தங்களை நியாயப்படுத்த மேற்கொண்ட அப்பட்டமான பொய். போரில் காயப்பட்ட சில போராளிகள் மறைமுகமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தங்களுடன் வைத்திருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு மறைந்திருப்பதாக இந்தியப் படையுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுண்ணிகள் கொடுத்த தகவலின் பேரில், பிரபாகரன் எவர் என்று தெரியாத நிலையில், கண்ணில் பட்டவர்கள் எல்லோரையும் சுட்டு வெறியாட்டம் நடாத்தினார்கள். அதற்குள் பிரபாகரனும் அகப்படுவார் என்ற நம்பிக்கையே அவர்களைச் சுட வைத்தது. அங்கு எந்த விடுதலைப் புலிகளும் ஆயுதங்களுடனும் இல்லை, இந்திய இராணுவத்துக்கு எதிராகத் அங்கு எவரும் தாக்குதல் நடாத்தவில்லை. சம்பவம் நடைபெற்றபோது உயிர்தப்பிய ஊழியர்கள், பொதுமக்கள் என்று உண்மை அறிந்த பலர் இன்றும் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை மிகப்பெரிய இழப்புக்களினைச் சந்தித்திருந்தது. ஆயிரக்கணக்கான தனது இராணுவச் சிப்பாய்களை விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பலியாக்கி அழுத்தத்திற்கும் அவமானத்திற்கும் மத்தியிலேயே அது இலங்கையை விட்டு வெளியேறியது என்பது வரலாறாகும்

இந்தியா ஓருபோதும் வல்லரசாக வரமுடியாது
இது ஈழத்து தமிழர்களின் சாபம்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவை சரியாகக் கணித்த ஒரே ஒரு ஈழத்தமிழன் என்றால்.. அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டும் தான். 

என்பதை தான் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கடந்தும் மாறாத வன்மம், பயம்  தோல்வியில் நின்று ஏதேதோ  உளறுது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

காலங்கடந்தும் மாறாத வன்மம், பயம்  தோல்வியில் நின்று ஏதேதோ  உளறுது

இந்திரா காலத்தில் சைனா அல்லது பாகிஸ்த்தான் சேட்டை விட்டால் கதை வேறு இப்ப மேற்குலகின் அடிமைகள் சண்ட வந்தால்  ஒரு நாளுக்குரிய  வெடிபொருள் கூட இல்லாத நிலையில் இந்தி

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சொல்வதின் படியே புலிகள் ஆக்கக் குறைத்து மேலும் தமது இலக்கு நோக்கி முன்னேறாமல் இருபதட்கே  அப்பாவிகளை அழிக்கும் ஹிந்தியாவின் படை என்பது  அமைதி படை என்ற வேடத்தில் வந்தது.

 புலிகளின் அரசியல் கோட்பாடு என்பது தமீழத்துக்கான சனநாயாக ஏகோபித்த ஆணை 1977 இல் இறுதியாக நடைபெற்ற சுந்தந்திரமானதும் அழுத்தங்களும் அற்ற தேர்தலில் வடகிழக்கு வாழ் மக்களால் வழங்கப்பட்டது என்பதே.

அதன் படி தமிழ் மக்கள் சனநாயாக அடிப்படையில்  தங்கள் வழங்கிய ஆணைக்கான இலக்கு நோக்கி  ஆக்கக் குறைத்து முன்னேறாமல் தடுப்பதத்திற்கே அப்பாவிகளை அழிக்கும் ஹிந்தியாவின் படை என்பது அமைதி படை என்ற வேடத்தில் வந்தது.

 இந்த அப்பாவிகளை அழிக்கும் ஹிந்தியாவின் படை என்பது, புலிகளை அழிக்கும் படையாகவே அனுப்பப்பட்டது என்பது அதில்  படைத்துறை ஆணைப் பொறுப்பிலிருந்தோருக்கு தெரிந்துள்ளது.

ஆயினும்,  இந்த புலிகளை அழிக்கும் படை என்பது,  தமிழை இலங்கைத்  தீவில் இருந்து எவ்வாறாயினும் அகற்றுவது என்ற ஓர் மிகப் பெரிய கொள்கையின் ஓர் இராணுவ அலகு என்பது இந்த  அப்பாவி படைத்துறை ஆணைப் பொறுப்ப்பாளர்களுக்கு தெரிந்திக்கருக்க சாத்தியமில்லை.

கிந்தியாவின் அந்த கொள்கை இன்னும் தொடர்கிறது, ஏனெனில் இலக்கு தமிழை இலங்கைத் தீவில் இருந்து அகற்றுவது அடையபாடவில்லை.  அதன் தொடர்ச்சியே, 2009 பிட்பாடு கிந்தியா எடுத்த எல்லா நடவடிக்கையும்.   
       
இதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது கிந்தியா மீது தமிழ் மக்களுக்கு இருந்த அளவு கடந்த, உணர்ச்சி பூர்வமான, அதீத  நம்பிக்கையான கிந்தியா (அப்போதைய இந்தியா) எத்தகைய விளைவுகள் வரினும் தமிழ் மக்களையும், அவர்களின் நலன்களையும் சிங்களத்திடம் விட்டுக்கொடுக்காது என்பதே.

இதில் மிகவும் தவறான அணுகுமுறையம் பொறுப்பும்  எல்லா இயக்கங்களிடமும் உள்ளது. ஏனெனில்,அந்த அரசியல் மாயையை உடைப்பதற்கு எந்தவோர் இயக்கமும், நிறுவன மயப்படுத்தி  தமிழ் மக்களை அரசியல் ரீதியாக  தட்டி எழுப்புவதத்திற்கு முயசிக்கவில்லை.

ஆயினும், இதை புளொட் இயக்கத்தின் ஓர் பகுதியினர் தம்மால் இயன்றவரை செய்ய முனைந்தனர் எனபதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அதன் முயற்சியின் ஓர் சிறு அங்கமே வங்கம் தந்த பாடம் எனும் ஓர் சிறு நூல். அது பரவி வெளிவராமல் ரா புளொட் மூலமாகவே செய்து முடித்து. அந்த நூலை முன்னின்று தயாரித்த முகம் தெரிந்தோர் புளொட் இயக்கத்தாலேயே கொல்லப்பட்டனர்.  

கௌடில்யரின் படி, என்னுடன் இணைந்து இருக்கும் அயலவன்  பகைவன், என்னுடன் இணையாது அயலவனுக்கு அயலவனாக இருப்பவன் எனது நண்பன். எனவே சீன ஈழத்தமிழ் தேசத்தின் நண்பன்.

உங்களின் நடிப்பு எல்லாம் போதும். உங்களுடைய சித்தாந்தத்தின் படியே கிந்தியா ஈழத்தமிழ் தேசத்தின் பகைவன்.

மற்றது, பிராந்திய வல்லரசு எனும் போது, உங்களுடைய பாதுகாப்பையும், பத்திரத்தையும் நீங்கள் உங்களிடமே தேடவும், கொண்டிருக்கவும் வேண்டும்.

சமீபத்தி கூட, டோக்லாம் இல் கிந்தியவிற்கு சீனாவை எதிர் கொள்ள அமெரிக்காவின் நேரடி, வெளிப்படையான உறுதிமொழிகளும், அதை நடைமுறைப் படுத்துவது போன்று தோற்றம் அளிப்பதற்கான அமெரிக்க, இஸ்ரேல் இன் நடவடிக்கைகளும் தேவைப்பட்டன.

சிறிய புலிகளை எதிர் கொள்ளவே உங்களுக்கு மற்ற வல்லரசுகளின் நேரடி உதவி தேவைப்பட்டது.

அதனால்,பேட்டை ரௌடியாக இருபதத்திற்கு கூட உங்களுக்கு தகுதி இல்லை, இதில் பிராந்திய வல்லரசு. முடவன் கொம்பு தேனிற்கு ஆசைப்பட்டால், இருப்பதையும் இல்லக்கா வேண்டி வரும், இலங்கை  தீவு  சீனாவின் கோட்டையாகி கொண்டிருப்பது முடவன் கொம்பு தேனிற்கு ஆசைப்படத்தின் ஓர் விளைவே.

ஹிந்தியர்கள் கலாச்சாரமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பாடற்றவர்கள் என்று மேற்குலக நாடுகள் ஆயிரம் வருடங்களாக கூறிவந்த செய்தியை - அது 100% உண்மை என்று "இந்திய அமைதிப்படை" என்ற பெயரில் வந்திறங்கிய இந்தியக் காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிநடத்திய இந்திய அரச பயங்கரவாதிகளும் நிரூபித்துள்ளார்.

On 10/4/2017 at 4:24 PM, நவீனன் said:

இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்ஷி யோனென் சிங் முப்பது ஆண்டுகளுக்குப்பின்

30 ஆண்டுகளாகியும் ஒரு போர்க்குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது, அதுவும் தமது கொலைக்களத்தில் சுதந்திரமாக திரிவது இந்த உலக அமைப்பில், ஐ.நா. சபையில் உள்ள பாரிய குறைபாடுகளை காட்டுகிறது.

****** ******  ,தமிழன் மண்ணில் ஊரில் தான் இப்படி எல்லாம் நடக்கும்   . ஒரு முஸ்லீம் நாட்டில் தன் மக்களை கொன்றவனை அழைப்பார்களா?

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள், மானுடவியல், மற்றும் வரலாறு ஆய்வு கூடத்தில் இருந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் வரலாறு பற்றிய மிகப் பழமைவந்த, அரிய நூதனப் பொருட்களை, ரா இன் சிறப்பு உத்தரவுக்கமைய இரவோடிரவாக திட்டமிட்டே திருடி கிந்தியாவிடற்கு  அனுப்பிவிட்டு, சண்டையின் உக்கிரத்திலும் ஹிந்திய சிப்பாய்களின் வெப்பியாரத்திலும் தீயில் அழிந்ததாக்க காட்சிப்படுத்திய,காட்டுமிராண்டிகளிலும் கேவலமான, பூமியில் இருந்தே சுவடு இல்லாமல் துடைத்தெரியப்படவேண்டிய கிருமிகள்.

இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் கிந்தியா தமிழை இலங்கைத் தீவில் இருந்து அகற்றுவதற்கு உத்தியோகபூர்வம் அற்ற, ஆனால் தீவிரமாக நடைமுறைத்தபடும் கொள்கையை ரத்தமும் சதையுமாக முன்னெடுத்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்கு.        

நீங்கள் திருடிய அந்த தமிழர்கள் வரலாறு பற்றிய மிகப் பழமைவந்த, அரிய நூதனப் பொருட்கல் எங்கே?

ரொமிலா தப்பார், தான் ஆண்டாண்டு காலமாக புனைந்த சரித்திரக் கட்டுக்கதைகள் எல்லாவற்றையும், இலங்கைத் தீவின் பூர்விகத் தமிழர்கள் பற்றிய புராதனமான இந்த தொல்பொருட்கள் ஒரே நொடியில் தகர்த்தெறிந்து விட்டதினால்,   அந்த தொல்பொருட்களுக்கு ஏற்ப வேறு சரித்திரக் கட்டுக்கதைகள் கட்டுகிறாரோ?   ஆனால்,அந்த தொல்பொருட்கள் ரோமிலா  தப்பாரை குடைந்து பைத்தியாமாகிவிட்டது என்பதே உண்மை. 

http://www.dailypioneer.com/sunday-edition/agenda/analysis/decline-and-fall-of-historians.html

ரொமிலா தப்பரின் கட்டுக்கதைகளுக்குள்ளேயே உள்ள முரண்பாடு உதாரணகள்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38210

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32336

மன்னிக்கவும், இதை நான் முதலே எழுதி இருக்க வேண்டும். இது எம்மவரில் அநேகமானரொருக்கு தெரியாது. கிந்திய அப்பாவிப் படைகளின்  கொடுமைகளினதும், அட்டூழியங்களிநத்தம் அழிப்பின் மத்தியில்,இதன் முக்கியத்துவத்தை உணரும் நிலையில் ஒருவரேனும் இல்லை. இப்போது கூட ஒரு சிலருக்கே இது தெரியும்.

சில வேலைகளில், கிந்தியாவின்  அப்பாவி அழிப்பு படைகளால், இலங்கைத்  தீவின் பூர்விக தமிழரின் வரலாற்றை சுவடு தெரியாமல், அத்துடன் மக்களுக்கு கொடுமை அழிவுகள் செய்யாமல், செய்யப்பட்ட  மிகப் பெரிய தமிழின அழிப்பு இதுவாகத் தான் இருக்கும்.

ஏனெனில்,  கிந்தியாவின்  அப்பாவி அழிப்பு படைகளால் முன்னெடுக்கப்பட அழிவுகள், இயற்கையாலேயே நடந்திருக்கலாம். ஆனால், எமது வரலாற்றை திட்டமிட்டு அது அழித்திராது.   

 இதே பாணியிலேயே கிந்தியா தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை, தமிழ் நாட்டின் பூர்விக, வரலாற்று, பண்பாட்டு, மொழி, அரசியல் உரிமைகளையும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வலுவையும் இல்லாமல் செய்வதற்கு, மறைத்து வைத்து இருக்கிறது

கிந்தியாவின் சமீபத்திய மறைக்கும் முயற்சி -

https://scroll.in/article/833255/transfer-of-archaeologist-from-history-defining-sangam-era-site-leads-to-uproar-in-tamil-nadu

Edited by Kadancha
add info.

On 10/8/2017 at 1:58 AM, Kadancha said:

இதே பாணியிலேயே கிந்தியா தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை, தமிழ் நாட்டின் பூர்விக, வரலாற்று, பண்பாட்டு, மொழி, அரசியல் உரிமைகளையும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வலுவையும் இல்லாமல் செய்வதற்கு, மறைத்து வைத்து இருக்கிறது

அழிப்பவர்கள் அழிந்தால் உண்மை வரலாறு வெளிப்படும் என்கிறீர்கள்.

உண்மை தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.