Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

..எனவே தான் பிரபாகரன் அவர்களை மாபெரும் வீரன் என்கின்றோம்

Featured Replies

  • தொடங்கியவர்

மேலே உள்ள காணொளியில் இந்திய இராணுவ அதிகாரிகள் தலைவரை பார்த்து  "உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருக்கு...அவர்களும் வாழ வேண்டும் தானே " என்ற ரீதியில் மிரட்டுகின்றனர். ஆனால் தலைவர் அதற்கு தனக்கே உரித்தான விதத்தில் உடனடியாக சிரிச்ச்சுக் கொண்டு பதில் கொடுக்கின்றார்.

எந்தவிதமான அசச்சுறுத்தல் வந்தாலும் தன் உறுதியை அவர் கைவிடவில்லை. இந்த போக்கு சரியா பிழையா என்பதுக்கு அப்பால் எதிரிகளுக்காக அவர் ஒரு போதும் தன் சுய மரியாதையை இழக்க நினைக்கவில்லை.

பேரம் பேசுதல் என்பதும் விட்டுக் கொடுப்பு என்பதும் சுயமரியாதையை இழந்த பின் அல்ல என்பதை தலைவர் உணர்ந்து இருந்தார்.  அவ்வாறே உலக நாடுகளில் உள்ள சுயமரியாதை கொண்ட தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். அதனால் தான் அவர்களால் மக்களுக்கானதை பெற்றுக் கொள்ள முடிந்தது
ஆனால் கீழே உள்ள படத்தில் இருப்பவர் எம்மை கொன்ற இரத்தம் தோய்ந்த கைகளை கொண்டவருடன் மது அருந்தி கொண்டு அளவளாவுகின்றார், எவர்களுடன் பேசி எமக்கான அரசியல் தீர்வை பெற வேண்டுமோ அவர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கின்றார். எந்த இந்திய அரசு எம் தீர்வுக்கு எதிராக இருக்கின்றதோ அவ் அரசின் அதிகாரிகளுக்கு மத்தியில் கையில் கோப்பை கொண்டு இன்புறுகின்றார்.

1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, எங்கேயோ போயிட்டார்!

நாங்கள் தான் பழைய நினைவுகளில....இன்னும் நீந்திக்கொண்டிருக்கிறோம் போல உள்ளது!

அவர் மது அருந்துவது தவறு என்று நான் கூற வரவில்லை!

ஆனால் என்னால் அவர் மது அருந்துவதை....ஜீரணிக்க முடியவில்லை!

  • தொடங்கியவர்
Just now, புங்கையூரன் said:

அவர் மது அருந்துவது தவறு என்று நான் கூற வரவில்லை!

ஆனால் என்னால் அவர் மது அருந்துவதை....ஜீரணிக்க முடியவில்லை!

அவர் தாராளமாக மது அருந்தட்டும். மது அருந்துவதும் அருந்தாமல் விடுவதும் அவர் சொந்த விடயம். ஆனால் தமிழ் மக்களின் தீர்வுக்காக பேச வேண்டிய எதிர் தரப்புடன் தண்ணி அடிச்சு கொண்டு உரையாடுவது மகா கேவலம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவர் தாராளமாக மது அருந்தட்டும். மது அருந்துவதும் அருந்தாமல் விடுவதும் அவர் சொந்த விடயம். ஆனால் தமிழ் மக்களின் தீர்வுக்காக பேச வேண்டிய எதிர் தரப்புடன் தண்ணி அடிச்சு கொண்டு உரையாடுவது மகா கேவலம்.

அதுகும்... இவ்வளளவு இழப்புக்களின் பின்னரும்....
இலங்கையின் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு,
சர்வதேசம் மூலம்  கிடைத்த  சந்தர்ப்பகளையும் பயன்படுத்த மனம் இல்லாமல்,
தாங்களும் பாராளுமன்றம் செல்கின்றோம் என்று, ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும் இவர்களை நினைக்க,
பெரும்  வேதனை தான் மிஞ்சுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு வருத்தமாக இருந்தாலும், ஐயா அவர்கள் இணக்க அரசியலுக்கு 'இலக்கணம்' வகுக்கிறாரென எண்ணுகிறேன்..!  rougir5.gif

திலீபன் இறந்தவுடன் அச்செய்தி அமிர்தலிங்கத்திற்கு தெரியவந்தபோது அவர் காட்ஸ் விழையாடிக்கொண்டிருந்தார் ஆனால் செய்தி கேட்ட பின்பும் விழையாட்டை நிறுத்தவில்லை என்று அந்த நேரம் பலர் கதைக்கக் கேட்டிருக்கின்றறேன். அதையே சம்மந்தன் ஞாபகப்படுத்துகின்றார்.  

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தளம் இல்லை அதனால் இவர்கள் ஆட்டத்தில் இல்லை.  இவர்கள் தமிழர்களின் அரசியல் வழிநடத:துனர்கள் என்றதொரு மாயை உண்டு. அது மாயை தவிர உண்மையில்லை.

போர்க்குற்றங்களை துருப்புச் சீட்டாக கையில் எடுத்து நீதிக்கான போராட்டமாக ஒரு புதிய அரசியல் தளத்திற்கான கடசி வாய்ப்பு புலம்பெயர் தமிழர் கையில் இருந்தது ஆனல் அது நாடு கடந்த அரசு என்றதொரு வேறு  வடிவத்தில்  கடசி துருப்புச் சீட்டும் ஜோக்கர் அகிவிட்டது. 

Edited by சண்டமாருதன்
3

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே....  கூறை ச் சீலை  கட்டி....  "சிவப்பு வைன்"   குடிக்கும் போது,
இந்தச்  சம்பந்தன்,   பட்டுச்  சால்வை போடாமல்...  "கூப்பன்"  கடையில் வாங்கிய துணியில்,
சட்டை  தைத்து  விழாவிவிற்கு, வந்திருப்பதை பார்க்க....
இங்கு.. பெண்கள்,  (schlafanzug -  sleepwear)  இரவு படுக்கப்  போகும் உடை போலுள்ளது. ஆளுக்கு... என்ன நடந்தது?

ஒரு  இனத்தின் தலைவராக.... ஒரு பார்ட்டிக்கு போகும் போது  கூட,  நாகரீமான உடையை, தெரிவு செய்ய வேண்டாமா..?
முதல்வர்  விக்கினேஸ்வரன் மாதிரி.... வேட்டி, சால்வையுடன்  போக... அப்புக்கு, வெட்கமாய்... இருக்கோ....
பிறகு..... என்ன,  "விஸ்கி"  குடிக்காவா ...  அரசியலுக்கு வந்தனியள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார பகிர்வு பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் - பிரித்தானியாவிடம் சம்பந்தன்

Image may contain: 2 people, people standing and suit

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

அதிகார பகிர்வு பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் - பிரித்தானியாவிடம் சம்பந்தன்

Image may contain: 2 people, people standing and suit

சிங்கள உடையில்... சம்பந்தன்.
இவருக்கு... யாராவது.... ஒரு சால்வை, போத்தி  விடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person       Image may contain: 2 people, people smiling, people standing

இந்த திரி தலைவரின் குணச்சிறப்பை பற்றி கதைக்கவா? சம்பந்தரை மட்டம் தட்டவா?தலைவர் இடத்தில் சம்பந்தரை வைத்து பார்ப்பது உங்களின் பிழையே தவிர சம்பந்தரின் பிழை இல்லை

ஒரு தூதரகத்தின் அழைப்பை ஏற்று போனால் அங்கு எப்படி நடக்கணுமோ அப்பிடி தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார் 

சம்பந்தரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கு  அவற்றை விமர்சிக்கலாம் பியர் குடிப்பதும் உடை உடுத்துவதும் தான் உண்மையில் உங்கள் கண்களை உறுத்துகிறதா?

  • தொடங்கியவர்
30 minutes ago, அபராஜிதன் said:

இந்த திரி தலைவரின் குணச்சிறப்பை பற்றி கதைக்கவா? சம்பந்தரை மட்டம் தட்டவா?தலைவர் இடத்தில் சம்பந்தரை வைத்து பார்ப்பது உங்களின் பிழையே தவிர சம்பந்தரின் பிழை இல்லை

ஒரு தூதரகத்தின் அழைப்பை ஏற்று போனால் அங்கு எப்படி நடக்கணுமோ அப்பிடி தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார் 

சம்பந்தரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கு  அவற்றை விமர்சிக்கலாம் பியர் குடிப்பதும் உடை உடுத்துவதும் தான் உண்மையில் உங்கள் கண்களை உறுத்துகிறதா?

அபராஜிதன்

நீங்கள் கேட்பதில் ஓரளவு நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. மேலே இணைக்கப்பட்ட வேறு சில படங்களுடன் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால் உரிமைகள் எவற்றையும் தர மாட்டன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சிங்கள அரசுகளின் தலைவர்களுடன் பேசி தீர்வை பெற முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு அளவளாவி தண்ணி அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது நட்பு ரீதியிலான உரையாடல் என்பதற்கும்  அப்பாலானது.பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பு மற்ற தரப்பின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் போக்கையே இது காட்டுகின்றது.

இவ்வாறு பம்பல் அடிச்சு கதைச்சு போட்டு  நாளைக்கு எமக்கான உரிமைகளை தா என்று உறுதியான தொனியில் கதைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் இனத்துக்கான தலைவர்.

சம்பந்தன் இனத்துரோகத் தலைவர்.

அவ்வளவும் தான். 

22 hours ago, நிழலி said:

அபராஜிதன்

நீங்கள் கேட்பதில் ஓரளவு நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. மேலே இணைக்கப்பட்ட வேறு சில படங்களுடன் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால் உரிமைகள் எவற்றையும் தர மாட்டன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சிங்கள அரசுகளின் தலைவர்களுடன் பேசி தீர்வை பெற முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு அளவளாவி தண்ணி அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது நட்பு ரீதியிலான உரையாடல் என்பதற்கும்  அப்பாலானது.பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பு மற்ற தரப்பின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் போக்கையே இது காட்டுகின்றது.

இவ்வாறு பம்பல் அடிச்சு கதைச்சு போட்டு  நாளைக்கு எமக்கான உரிமைகளை தா என்று உறுதியான தொனியில் கதைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா ?

சம்பந்தர் அரசியல் வாதி தானே தவிர எமக்காக ஆயுதம் தாங்கி போராடிய போராளி இல்லை என்பதை நாம் இலகுவாக மறந்து விடுகிறோம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து பக்காவா ஃபாலோ பண்றவர் தலைவருடன் அவரை ஒப்பிடுவதை விட கலைஞருடன் ஒப்பிட்டால் அதிக ஒற்றுமைகளை காணமுடியும் இருவருக்கிடையிலும்

தூதரக விருந்தில் சேர்ந்து தண்ணி அடிப்பதை விமர்சிக்கும் நாம் தமது மகளின் 21து பிறந்த நாளுக்கு ஜனாதிபதியை அழைத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையோ? மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை  அழைத்த தமிழ் பெண் துணை அமைச்சரையோ பெரிதாக கண்டு கொள்ளாமல் விடுகிறோம் 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14.10.2017 at 5:42 PM, அபராஜிதன் said:

சம்பந்தர் அரசியல் வாதி தானே தவிர எமக்காக ஆயுதம் தாங்கி போராடிய போராளி இல்லை என்பதை நாம் இலகுவாக மறந்து விடுகிறோம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து பக்காவா ஃபாலோ பண்றவர் தலைவருடன் அவரை ஒப்பிடுவதை விட கலைஞருடன் ஒப்பிட்டால் அதிக ஒற்றுமைகளை காணமுடியும் இருவருக்கிடையிலும்

தூதரக விருந்தில் சேர்ந்து தண்ணி அடிப்பதை விமர்சிக்கும் நாம் தமது மகளின் 21து பிறந்த நாளுக்கு ஜனாதிபதியை அழைத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையோ? மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை  அழைத்த தமிழ் பெண் துணை அமைச்சரையோ பெரிதாக கண்டு கொள்ளாமல் விடுகிறோம் 

ஆம்! இவர் போராளியில்லைத்தான். இன்னொரு கருணாநிதியே. ஆனால் இவர் தமிழரது தற்போதைய தலைவராக(தலைவிதி) இருப்பதால், அவர்தனக்கென ஒரு வழிகாட்டலை திட்டமிட்டே செயற்படவேண்டும். உடைப்பண்பு,  உணவுப்பண்பு, உரையாடல்வெளி, கலந்துகொள்ள வேண்டி நிகழ்வுகள், அழைத்தாலும் தவிர்க்க வேண்டிய நிகழ்வுகள் என்ற ஒரு திட்டமிடல்தேவை. ஏனென்றால்; இவரொன்றும் சாதாரண இராசவரோதயம் சம்பந்தரல்ல. இவர் எதிர்க்கட்சித் தலைவர். தமிழரது  இனப்பிரச்சினையைக் கையாழும் தலைவர் என்று இரண்டு மூன்று முகங்களோடு திரிபவர்.  சில அழைப்புகளை நாகரிகமாகப் தவிர்ப்பதுகூட சில செய்திகளைச் சொல்லக்கூடியது.  உரிமையை மறுப்பவரோடு தண்ணியடித்தவிட்டு நாளை  விருந்துக்கு அழைத்த தூதுவரிடமேபோய் அவர்கள் அதை இதை செய்கிறார்களில்லையென்று சுட்டமுடிமா?  இவரது ஒவ்வொரு நகர்வும் தமிழரைத் தரைமட்டமாக்கவும்  தலைநிமிரவும்(?) கரணியமாகலாம். எனவே அவர தனக்கெனச் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுடையவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.