Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கலைஞன் said:

அங்கை இருக்கும் பலருக்கு வெளிநாட்டுக்கு வர ஆசை. எப்பவும் வெளிநாட்டு நினைப்பு. வெளிநாட்டில இருக்கிற ஆட்கள் பலருக்கு ஊரில நடக்கிற பலதை பார்த்து கவலை. எப்பவும் ஊர் நினைப்பு. என்ன செய்யலாம்?

நாங்கள் பொற்பதி வீதியும் ஆடியபாதம் தெருவும் சந்திக்கும் மூலையில் எங்கள் மாமா வீட்டில் சுமார் நான்கு வருடங்கள் அகதியாக இருந்தோம். கொக்குவில் சுடலை அருகில்தான் இருந்தது மருத்துவபீடத்து மைதானம் அருகில். கிழமைக்கு இரண்டு உடலங்களாவது அங்கு எடுத்து செல்லப்படும் எரிப்பதற்கு. உடலம் எரியும் மணம் எங்கள் வீடுவரை வரும். சாம்பல் காற்றில் பறந்து எங்கள் வீட்டு யன்னல் ஊடாகவே வரும். இதை சுகாதாரத்துக்கு தீங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை. அருகில் குடிமனை ஒன்றும் இல்லை. ஒரு தடவை எரித்தார்கள். ஒவ்வொருநாளுமா பிணங்களை கொண்டுவந்து எரிக்கின்றார்கள்? யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் தேரரின் உடலை தகனம் செய்தால் அதை ஒரு பிரச்சனை, மனதை துன்புறுத்தும் சம்பவம் என்று சொல்லலாம். இலங்கையின் வேறு பாகங்களிலும் இப்படி மைதானங்களில் பெரிய அளவில் பந்தல் எல்லாம் அமைத்து பிரபல்யமானவர்களின் உடலங்களை எரிப்பது வழமைதானே? தென்பகுதியில் இயற்கை எய்திய தேரரை யாழ்ப்பாணத்தில் கொண்டுவந்து இப்படி தகனம் செய்தால்கூட இதை ஒரு திட்டமிட்ட செயல் என்று சொல்லலாம். தேரரின் விகாரையோ மைதானத்தை அண்மித்தே இருக்கின்றது. எனக்கு என்றால் இந்தவிடயம் பற்றி அலட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றுபடுகின்றது. தென்பகுதியில் கொழும்பு காலி வீதியில் இந்து தமிழ் பக்தர்களின் தூக்குகாவடி செல்கின்றது. இது பெளத்தர்கள் மனதை துன்புறுத்தும் சம்பவமாக அமையுமா?

உங்கள் பெரிய மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

காலி வீதியில் தூக்குக்காவடி எடுக்கும் போது யாரும் எதிர்க்கவில்லை என்பதற்காக வாயை மூடிக்கொண்டு இருக்கச்சொல்கின்றீர்களா? 
சிங்கள மக்கள் எதிர்க்கும் விடயங்களை தமிழ்மக்கள் இதுவரைக்கும் செய்ததில்லை.

அதவது அத்து மீறல் குடியேற்றம்...பிறர் காணிகளை அபகரித்தல்....

ஆனால் தமிழ்மக்கள் எதிர்க்கும் விடயங்களை சிங்களவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லும் போது ஒரு சிலருக்கு நடுமுடி சிலிர்த்துக்கொண்டு நிற்கின்றது.

  • Replies 56
  • Views 6.2k
  • Created
  • Last Reply

ஒரு கொள்ளைக்காரனுக்காக சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகள் இத்தனை முக்கியத்துவம் குடுப்பதில் ஆச்சரியம் இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் பூதவுடல் எங்கே தகனம் செய்ய பட்டது என்று யாருக்காவது  நினைவு இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

தந்தை செல்வாவின் பூதவுடல் எங்கே தகனம் செய்ய பட்டது என்று யாருக்காவது  நினைவு இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

எங்கே என்று நீங்களே சொல்லிவிடுவது, அப்புறம் எந்தவகையில் தந்தை செல்வாவும் நாகவிகாரை தேரரும் ஒரே தட்டில் வைக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் ஆணித்தரமாக வைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

தந்தை செல்வாவின் பூதவுடல் எங்கே தகனம் செய்ய பட்டது என்று யாருக்காவது  நினைவு இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

தந்தை செல்வா ஒரு கிறிஸ்துவர் !

அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது! அதி உத்தமர் ஜெயவர்த்தனா அவர்களும் வந்திருந்தது நினைவில் உள்ளது!

பின்னர் அவரது உடலை எங்கே கொண்டு போனார்கள் என்று நினைவில் இல்லை!

ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக நினைவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புங்கையூரன் said:

தந்தை செல்வா ஒரு கிறிஸ்துவர் !

அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது! அதி உத்தமர் ஜெயவர்த்தனா அவர்களும் வந்திருந்தது நினைவில் உள்ளது!

பின்னர் அவரது உடலை எங்கே கொண்டு போனார்கள் என்று நினைவில் இல்லை!

ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக நினைவில்லை!

புங்கையூரான் அண்ணா , ஏன் தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவர்  என்று தனி அடையாளம் கொடுக்கிறீர்கள்?

ஒரு நோக்கத்திற்காக மட்டுமே கேட்கிறேன் , உங்கள்மேல் குற்றம் பிடிக்க அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

புங்கையூரான் அண்ணா , ஏன் தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவர்  என்று தனி அடையாளம் கொடுக்கிறீர்கள்?

ஒரு நோக்கத்திற்காக மட்டுமே கேட்கிறேன் , உங்கள்மேல் குற்றம் பிடிக்க அல்ல!

வணக்கம் வளவன்!

எந்த விதமான காரணமும் இல்லை!

ஜுட் ஒரு கிறிஸ்தவர் என்பது எனது அனுமானம்! கிறிஸ்தவர்கள் அனேகமாக உடலை எரிப்பதில்லை. நான் அறிந்த வரையில் புதைப்பது தான் அதிகம்!

கிறிஸ்தவர்கள் உடலைப் புதைப்பதை ஜுட் அறிந்திருந்தும் தந்தை செல்வாவை ஏன் இந்தத் திரிக்குள் இழுத்தார் என்று புரியவில்லை! அதைச் சுட்டிக் காட்டவே கிறிஸ்துவத்தை இழுக்க வேண்டி ஏற்ப்பட்டது! எவரையும் புண் படுத்தும் எண்ணம் நிச்சயம் இல்லை!

  • தொடங்கியவர்

வணக்கம் ஜூட், புங்கையூரான்

என் நினைவுக்கு தெரிந்தவரை தந்தை செல்வாவின் உடல் 1977ம் ஆண்டு  தற்சமசயம் அவரது நினைவுத்தூபி இருக்கும் இடத்தில்தான் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்பு அதே இடத்தில் நினைவுத்தூபி அமைத்தார்கள்.

 ஜெயவர்த்தனா வந்து இருக்கலாம். ஆனால் அவர் சாதாரண ஜெயவர்த்தனா ஆக. அவர்  அதி உத்தமர் ஆகியது 1978இல்.  

 திருச்செல்வம்(1976 நவம்பர்),  ஜி.ஜி பொன்னம்பலம் (1977 பிப்ரவரி,)  தந்தை செல்வா (1977  ஏப்ரல்) மூவரும்  trail at bar வழக்கு  முடிந்தபின் சில மாத இடைவெளியில் அடுத்து அடுத்து காலம் ஆனார்கள்.

இந்த படத்துடன் கலண்டர் பலரது வீடுகளில் இருந்தது... 1977 அல்லது 1978 இல்

Bildergebnis für sjv chelvanayakam 

13 hours ago, Jude said:

தந்தை செல்வாவின் பூதவுடல் எங்கே தகனம் செய்ய பட்டது என்று யாருக்காவது  நினைவு இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

8 hours ago, புங்கையூரன் said:

தந்தை செல்வா ஒரு கிறிஸ்துவர் !

அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது! அதி உத்தமர் ஜெயவர்த்தனா அவர்களும் வந்திருந்தது நினைவில் உள்ளது!

பின்னர் அவரது உடலை எங்கே கொண்டு போனார்கள் என்று நினைவில் இல்லை!

ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக நினைவில்லை!

  • தொடங்கியவர்

பூதவுடல் தகனம் செய்வதை தடுக்காமல் அரசை குற்றம் சொல்வது அபத்தமானது!

பூதவுடல் தகனம் செய்வதை தடுக்காமல் அரசை குற்றம் சொல்வது அபத்தமானது!

யாழ்.முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கத்தினை குற்றம் சொல்வது அபத்தமானது. முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் தடுத்திருக்கவேண்டிய பொறுப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும், யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கும் உரிய கடமை என வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறினாா்.

யாழ்.ஆரியகுளம்- நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவருடைய பூதவுடல் யாழ்.முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்....

ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவருடைய பூதவுடல் யாழ்.முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை மக்களும், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் முன்வைக்கின்றன.

ஆனால் இருக்கும் உண்மை வேறு. விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவது தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அல்லது யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுத்திருக்க இயலும்.

அதாவது முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம். ஆனாலும் அந்த மைதான வளாகத்தில் வைத்து இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு நிச்சயமாக யாழ்.மாநகர சபையிடம் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.

காரணம் மயானங்கள் சம்மந்தமான சட்டங்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கின்றது.எனவே உள்ளூராட்சி அமைச்சர் என்ற அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்திருக்கவேண்டும் அல்லது யாழ்.மாநகர சபை நீதிமன்றத்தை நாடி தடுத்திருக்கவேண்டும்.

எனவே பிழைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் காண்பது மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும்.

முதலில் நாங்கள் எங்களை திருத்தி கொள்ளவேண்டும். வெறுமனே அறிக்கை விடுவதிலும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாலும் ஆவது ஒன்றுமில்லை எனவே மக்களும் சரி, சமூக வலைத்தளங்களும் சரி, ஊடகங்களும் சரி, உண்மையை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதனை செய்யாமல் அரசை எதற்கெடுத்தாலும்க குற்றஞ்சாட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாங்கள் தடுத்திருக்கலாம் தடுக்கவில்லை.

இதற்கு பிறகு மற்றவர்களை எப்படி குறைகாண முடியும்? குற்றம் சொல்ல முடியும்? என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/c-thavarasa-press-meeting-25

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

வணக்கம் ஜூட், புங்கையூரான்

என் நினைவுக்கு தெரிந்தவரை தந்தை செல்வாவின் உடல் 1977ம் ஆண்டு  தற்சமசயம் அவரது நினைவுத்தூபி இருக்கும் இடத்தில்தான் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்பு அதே இடத்தில் நினைவுத்தூபி அமைத்தார்கள்.

நன்றி நவீனன். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட போது நான் அங்கே சென்றிருந்தேன்.

முற்றவெளியிலும் அதனை அண்டிய பிரதேசத்திலும் பிரபலமானவர்களின் தகனம் இடம் பெறுவது பல முறை நடந்து இருக்கிறது.

துரையப்பாவின் உடலும் இந்த பிரதேசத்திலேயே தகனம் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Jude said:

தந்தை செல்வாவின் பூதவுடல் எங்கே தகனம் செய்ய பட்டது என்று யாருக்காவது  நினைவு இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

17 hours ago, புங்கையூரன் said:

தந்தை செல்வா ஒரு கிறிஸ்துவர் !

அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது! அதி உத்தமர் ஜெயவர்த்தனா அவர்களும் வந்திருந்தது நினைவில் உள்ளது!

பின்னர் அவரது உடலை எங்கே கொண்டு போனார்கள் என்று நினைவில் இல்லை!

ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக நினைவில்லை!

1 hour ago, Jude said:

நன்றி நவீனன். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட போது நான் அங்கே சென்றிருந்தேன்.

முற்றவெளியிலும் அதனை அண்டிய பிரதேசத்திலும் பிரபலமானவர்களின் தகனம் இடம் பெறுவது பல முறை நடந்து இருக்கிறது.

துரையப்பாவின் உடலும் இந்த பிரதேசத்திலேயே தகனம் செய்யப்பட்டது.

தந்தை செல்வா.... உயிரிழந்த ஒவ்வொரு நாளும், அவரின் உடலை  தரிசித்து வந்தவன் நான்.

முதலில் அவரின் உடல், கண்டி வீதியில் உள்ள தமிழரசு கட் சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப் பட்டது.
(இப்போதைய.... கட்சி அலுவலகமும், ஒரு மாற்றமும் இல்லாமல், அதே... நிலையில் உள்ளதை, சில படங்களில்... அவதானித்தேன்)
பின்பு... பலாலி வீதி வழியால்..... காங்கேசன் துறைக்கு.. கொண்டு செல்லப் பட்ட பின்...
அங்கு... குடும்பத்தினரின், அஞ்சலிகள்  முடிந்த பின்..
காங்கேசன் துறை வீதியூடாக  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து... அஞ்சலி  நிகழ்வுகள் இடம் பெற்ற  பின்.....
முக்கியமாக  கவனிக்கவும்....  இப்போதுள்ள, தனியார் இடத்தில் தகனம் செய்யப் பட்டது.
அந்தக் காணி.... யாழ்.  "ரென்னிஸ்"  கழகத்தின்,  ஒரு தனியார் பகுதி.
(அதனை... அந்தக் கழகத்தின், ஒப்புதலுடன்  பாவிக்க உரிமை உள்ளது)

தந்தை செல்வாவின்,  சிதை  எரிப்பில்... அப்போது, கொழும்பில் இருந்து வந்த தினகரன் பத்திரிகையும்,
வீரகேசரி பத்திரிகையும்.. மாறு பட்ட படங்களை வெளியிட்டு,  தினகரன் பத்திரிகை  மூக்கு உடை பட்டது  வேறு விடயம். 

தந்தை செல்வா எரியூட்டப்  பட்ட  அடுத்த நாளும், அந்த இடத்திற்க்கு...  சென்ற போது...
தமிழ் நாட்டில் இருந்து, ஆற்காடு வீராசாமி வந்து, அஞ் சலி  செலுத்த.... வேறு சிலருடன் வந்திருந்தார்.
அவருக்கு... கை  கொடுக்கும், சாட்டில்,  அவரின் கையை... யாரோ... ஆர்வ மிகுதியால், நகத்தால் ... விறாண்டி விட்டார்கள். அதுக்கு.. அந்தாள்.... எம்மை, "காட்டுப் பசங்க..." என்று பேசியது, இன்னும்.... நினைவு இருக்கு.
(கையில்... விறாண்டி, இரத்தம் வந்தால்... யாரும் அப்படித்தானே,,, பேசுவார்கள்.)

துரையப்பாவின்... உடல் எரிக்கப் பட் ட  இடம்  தொல்  பொருள் துறையின்  கட்டுப் பாட்டில், இல்லாத... யாழ்.  மாநகராட்சிக்கு சொந்தமான இடம். அங்கு ஒரு மாநகர முதல்வரை  எரிப்பதில்...  தவறு இல்லையே...

ஜூட்... இப்போதுள்ள... கேள்வி? 
தந்தை.... செல்வாவையும்,  ஒரு  ஆமத்து றுவையும்....  ஒப்பிட்டு பார்க்க,  எப்படி.... மனம் வந்தது?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

வணக்கம் ஜூட், புங்கையூரான்

என் நினைவுக்கு தெரிந்தவரை தந்தை செல்வாவின் உடல் 1977ம் ஆண்டு  தற்சமசயம் அவரது நினைவுத்தூபி இருக்கும் இடத்தில்தான் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்பு அதே இடத்தில் நினைவுத்தூபி அமைத்தார்கள்.

 ஜெயவர்த்தனா வந்து இருக்கலாம். ஆனால் அவர் சாதாரண ஜெயவர்த்தனா ஆக. அவர்  அதி உத்தமர் ஆகியது 1978இல்.  

 திருச்செல்வம்(1976 நவம்பர்),  ஜி.ஜி பொன்னம்பலம் (1977 பிப்ரவரி,)  தந்தை செல்வா (1977  ஏப்ரல்) மூவரும்  trail at bar வழக்கு  முடிந்தபின் சில மாத இடைவெளியில் அடுத்து அடுத்து காலம் ஆனார்கள்.

இந்த படத்துடன் கலண்டர் பலரது வீடுகளில் இருந்தது... 1977 அல்லது 1978 இல்

Bildergebnis für sjv chelvanayakam 

தகவலுக்கு நன்றி நவீனன், வெறும் செய்திகள் மட்டும்தான் இணைப்பீர்கள் என்று நினைத்தேன், பெறுமதிமிக்க தகவல்களும் அறிந்து வைத்திருக்கிறீர்கள்! 

உண்மையை சொல்லபோனால் ஜூட் கேட்டபின்னரே நானும் தந்தை செல்வாவின் உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என்பதை தேடினேன் ,, விடை கண்டுபிடிக்கமுடியவில்லை இதை சொல்வதில் வெட்கப்பட ஒன்றுமேயில்லை!  நமது அறியாமையை ஏதாவது சொல்லி சமாளித்தால் அதன் பெயர் குதர்க்கம், கருத்து அல்ல!

தந்தை தந்தை என்று சொன்னாலும் நம்மில் பலருக்கு அவர் வாழ்வு பயணம் எப்படி நிறைவுற்றது என்பதன் தகவல் தெரிந்திருக்கவில்லை, நாளை தலைவர் பிரபாகரனின் மறைவும் அப்படியே பதிவாகும், இன்றைய சந்ததி அவரின் வீரமிகு பெருமைகளை பேசிகிட்டு இருந்தாலும், அவரின் மறைவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மறைக்கிறோம், அல்லது மறுக்கிறோம், அல்லது குழப்பமான கருத்தை விதைக்கிறோம்!

இன்று இருப்பவர்களுக்கு பெரும்பாலும் உண்மை தெரிந்திருந்தாலும் உறுதியான பதிவுகள் இல்லாமையினால் 50 வருஷங்களின் அவர் வரலாற்ரைபற்றி படிக்கும் சந்ததி அவர் எப்படி இந்த இனத்திடமிருந்து விடைபெற்றுபோனார் என்பதுபற்றி உருப்படியான தகவல் இல்லாமலே இருக்கும்!

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கொஞ்சம் உளறிட்டேன்தான்...! மட்டுப்படுத்துவர்கள் வேண்டுமென்றால் இந்த அதிகபிரசங்கிதன கருத்தை வெட்டிவிடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜூட்... இப்போதுள்ள... கேள்வி? 
தந்தை.... செல்வாவையும்,  ஒரு  ஆமத்து றுவையும்....  ஒப்பிட்டு பார்க்க,  எப்படி.... மனம் வந்தது?

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கங்களை படித்து இருகிறீர்களா? சிறு வயதில் நான் படித்த அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் நாம் உண்மையை தேடும் போது எங்கள் கடந்த கால அனுபவங்களால் உருவாகும் அபிப்பிராயங்களில் இருந்தும் உணர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு உண்மையை தேட வேண்டும் என்று எழுதி இருந்தார்.

இங்கு பலரும் அங்கு பல அரசியல்வாதிகளும் முற்றவெளியில் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதரம் போன்ற காரணங்களையும் முன்வைத்து எழுதி இருந்தார்கள். இந்த காரணங்களில் எமக்கு உள்ள அக்கறை பற்றியும் இவ்வாறான தகனம் முன்னர் இடம்பெற்றது பற்றிய எமது அறிவு பற்றியுமான உண்மை  தேடலே எனது நோக்கமாக இருந்தது. 

முஸ்லிம்கள் பற்றிய எனது கருத்துகளும், எதிரிகளும் போற்றும் தியாகத்துக்கு ஈடு இணையற்ற விடுதலை புலிகள் பற்றிய எனது கருத்துகளும் உண்மையை தேடும் எனது அணுகுமுறை சார்ந்ததே. அதையே தந்தை செல்வாவின் தகனம் பற்றிய எனது கேள்வியிலும் காண்கிறீர்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

ஜூட்.... நீங்கள்.....  முதலில்,  நான் கேட்ட  கேள்விக்கு, பதில் கூறி  விட்டு,
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின்.... பதிலுக்கு, போவது தான் முறை.
சும்மா.... கதையை, திசை  திருப்புவது... உங்களுக்கு அழகல்ல....  

இங்கு... சுகாதாரப்  பிரச்சினையை யாரும், எழுப்பியதாக தெரியவில்லை.
பலரும்... தமிழருக்கு, விட்ட சவாலாகவே... கருதினார்கள்.  
அதனை... முதலில், புரிந்து கொள்ளுங்கள் ஜீட்.

இன்று யாழ்ப்பாணம் எங்கும், நடக்கும்... பல்வேறு சமூகங்களின்... குடியிருப்பும்,
அதன் மதத்  தலைவர்களின்.... இழப்பும், எம் முன்னோர் கட்டிக் காத்த  மண்ணை.... 
பாழாக்கி விடக்  கூ டாது, என்பதே.... எம் அச்சம்.
இப்படியானவற்றை... முளையிலேயே..... கிள்ளி எறிய  வேண்டும்.
அதற்கு.... தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
 சம்பந்தனோ.....   சுமந்திரனோ...  முன் வர மாட்டார்கள்.   
நாங்கள்... தான், குரல் கொடுக்க வேண்டும், என்று... தெரியும் தானே.....

பிறகென்ன.... .. மற்றவனுக்காக.... கூவிக் கொண்டு,  இருக்கிறியள்......:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Jude said:

30 minutes ago, Jude said:

இங்கு பலரும் அங்கு பல அரசியல்வாதிகளும் முற்றவெளியில் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதரம் போன்ற காரணங்களையும் முன்வைத்து எழுதி இருந்தார்கள். இந்த காரணங்களில் எமக்கு உள்ள அக்கறை பற்றியும் இவ்வாறான தகனம் முன்னர் இடம்பெற்றது பற்றிய எமது அறிவு பற்றியுமான உண்மை  தேடலே எனது நோக்கமாக இருந்தது. 

நான்கு தசாப்த காலங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை , நாகரிக வளர்ந்த இந்த காலத்துடனும், சூழல் மாசடைவதுபற்றி உலகமே மண்டையைபோட்டு உடைத்துகொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் , அப்போ செய்தார்கள் இப்போ ஏன் செய்யகூடாது என்று நீங்கள் நிறுவ நினைப்பது  விதண்டாவாதம்!

40 வருஷம் முன்னாடி பஸ்ஸுக்குள்கூட புகை பிடித்திருப்பார்கள் , இப்போ அதற்கு அனுமதி உண்டா?

தேரரின் உடல் முற்றவெளியில் இராணுவ ஏற்பாட்டில் தகனம் செய்யப்படுவது ,   அப்போ நடந்த ஒன்றுதான் இது என்ற அர்த்ததில் அல்ல...

தமிழீழமா வேணும் உங்களுக்கு? இது சிங்கள தேசம் என்ற அப்பட்டமான ஆணவ எகத்தாளம்!

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கங்களை படித்து இருகிறீர்களா? சிறு வயதில் நான் படித்த அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் நாம் உண்மையை தேடும் போது எங்கள் கடந்த கால அனுபவங்களால் உருவாகும் அபிப்பிராயங்களில் இருந்தும் உணர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு உண்மையை தேட வேண்டும் என்று எழுதி இருந்தார்.

இங்கு பலரும் அங்கு பல அரசியல்வாதிகளும் முற்றவெளியில் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதரம் போன்ற காரணங்களையும் முன்வைத்து எழுதி இருந்தார்கள். இந்த காரணங்களில் எமக்கு உள்ள அக்கறை பற்றியும் இவ்வாறான தகனம் முன்னர் இடம்பெற்றது பற்றிய எமது அறிவு பற்றியுமான உண்மை  தேடலே எனது நோக்கமாக இருந்தது. 

முஸ்லிம்கள் பற்றிய எனது கருத்துகளும், எதிரிகளும் போற்றும் தியாகத்துக்கு ஈடு இணையற்ற விடுதலை புலிகள் பற்றிய எனது கருத்துகளும் உண்மையை தேடும் எனது அணுகுமுறை சார்ந்ததே. அதையே தந்தை செல்வாவின் தகனம் பற்றிய எனது கேள்வியிலும் காண்கிறீர்கள்.

தமிழ் மக்களிடம்  கேட் க ஆட் கள் இல்லை  எல்லை என்ற எகத்தாளத்தில் தான் சிங்களம் இதனை செய்கிறது  என்பது  தான் பகுத்தறிவுள்ளவர்களால் அறியப்பட கூடியது. மக்களின் sencitivity  பற்றி சிங்களவர்கள் அறியாதவர்கள் இல்லை. வேண்டும் என்றே செய்கிறார்கள் என்பது தான் உண்மை நிலை. நீங்கள் எப்படி உண்மை நிலையை அறிகிறீர்கள் என்பது மிக்க ஆச்சரியமாக  உள்ளது.

நீங்கள் உண்மையை தேடுபவராக இருந்தால் அநுராதபுரத்தில் விகாரை (உதாரணத்துக்கு  அநுராதபுரம்)க்கு  அருகில் ஒரு தமிழரின் பிணத்தை எரித்து பாருங்கள். பின்னர் சிங்களவரின்  reactionஐ  பாருங்கள். அப்போ உங்களின் உண்மை நிலை பற்றிய கருத்து என்ன என அறிய மிக மிக ஆவலாக உள்ளேன்.

  • தொடங்கியவர்
விகாராதிபதியின் இறுதிச்சடங்கும் சர்ச்சையும்
கே. சஞ்சயன் /

யாழ்ப்பாணம்- ஆரியகுளத்தில் உள்ள நாகவிகாரையின் விகாராதிபதியின் மரணம், சர்ச்சை ஒன்றுடன் முடிந்து போயிருக்கிறது. 

விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, யாழ்ப்பாணம், கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளி மைதானம் தெரிவு செய்யப்பட்டதும், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுமே, இந்தச் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றன.

விகாராதிபதியின் இறுதிச்சடகுக்கான ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொண்டதும், அதன்போது உரிய விதிமுறைகளை அவர்கள் பின்பற்றாமையும்தான் இந்தச் சிக்கலுக்கான அடிப்படைக் காரணம்.

தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலம் என்பதால், அவர்களின் அனுமதியைப் பெற்றால்போதும் என்ற நிலையில் இராணுவமும் அரசாங்கமும் நடந்து கொண்டது.

சடலங்களை எரிப்பது தொடர்பாக, உள்ளூராட்சி சபைகள் கொண்டிருக்கின்ற கட்டுப்பாடுகள், சட்டங்களை அவர்கள் கருத்தில் கொள்ளவுமில்லை; அவற்றை மதித்துச் செயற்படவுமில்லை.

தமிழாராய்ச்சி மாநாட்டின்போது, படுகொலை செய்யப்பட்ட ஒன்பது தமிழர்களின் நினைவிடம், கோட்டை முனியப்பர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில், விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வடக்கில் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன.

இதைச் சட்டமீறல் என்றும், பண்பாட்டுக்கு எதிரானது என்றும், சுற்றாடலை மாசுபடுத்தும் செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக, 12 சட்டத்தரணிகள், விகாராதிபதியின் உடலை முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.

சுற்றாடல் பாதிப்பைக் காரணம் காட்டியும், அனுமதியின்றியும் இந்தத் தகனக் கிரியைகள் நடத்தப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீண்ட விவாதங்களின் போது, விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால், சமூகக் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, நீதிவான் அனுமதி அளிக்க, முற்றவெளி மைதானத்தில், விகாராதிபதியின் உடல் தகன நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சரோ, அல்லது எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளோ பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், “விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர்; இதுதானா நல்லிணக்கம்”? என்று, கடந்த புதன்கிழமை, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கேள்வி எழுப்பியிருந்தார் பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர்.

அதுபோலவே, “நாகவிகாரை விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காக, தமிழ் மக்களும் இந்து மக்களும் வெட்கப்பட வேண்டும்” என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருந்தது.

“தமிழ்த் தலைவர்களின் இறுதி நிகழ்வுகளையோ நினைவு நிகழ்வுகளையோ கொழும்பில் நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் நடத்தப்போனால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது” என்றும், ஹெல உறுமய விசனம் வெளியிட்டுள்ளது.

விகாராதிபதியின் உடல் தகன சர்ச்சை அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கிலும் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. 

சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும்தான், இந்த விவகாரம் பற்றி, அதிகளவில் குரல் எழுப்பியிருந்தார்கள். சட்ட நடவடிக்கைகளின் பின்னணியிலும் இருந்தார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இதுபோன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதும், பூதாகாரப்படுத்தப்படுவதும் வழக்கம்தான். அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலத்தில் ‘பேனைப் பெருச்சாளியாக்கும் வல்லமை’ எப்படியோ கிடைத்து விடுகிறது.

விகாராதிபதியின் உடல் தகன விவகாரத்திலும் அவ்வாறுதான் நடந்ததா என்ற கேள்வி உள்ளது.

விகாராதிபதியின் உடல் தகனம் நடந்த இடம், பொதுமக்கள் நடமாடுகின்ற ஆலயம், நினைவிடம் என்பன உள்ள, திறந்த வெளியான ஒரு பகுதி என்பதும், அங்கு உடலைத் தகனம் செய்வதால் சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படும் என்பதும் சந்தேகமில்லை.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், முக்கிய பிரமுகர்களின் உடல்கள் பொதுஇடங்களில் தகனம் செய்யப்படுவது வழக்கம். அது அவர்களுக்குப் புதிய விடயமல்ல. இதற்கு அண்மைய உதாரணம், கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியாக இருந்து மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச்சடங்குகள் நாடாளுமன்ற மைதானத்தில்தான் நடந்தன.

ஆனால், சடலங்களைப் பொது இடங்களில் தகனம் செய்யும் வழக்கம், தமிழ் மக்களிடம் அரிதாகும். அதற்காக அத்தகைய வழக்கம் தமிழர்களிடம் முழுமையாக இல்லை என்று யாரும் வாதிட முடியாது. 

1987ஆம் ஆண்டு பலாலியில் சயனைட் அருந்தி மரணமான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் உடல்கள், வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில்தான் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்டன. தகனம் நடந்த இடத்துக்கு அருகே குடியிருப்புகள் இருந்தன; ஆலயமும் இருந்தது. இதுபோன்ற பல எடுத்துக் காட்டுகள் உள்ளதால், தமிழர் தரப்பு வீண் வீம்புக்காக போய் முட்டிக் கொள்ளக் கூடாது.

விகாராதிபதியின் உடல் தகனம் நடந்த இடத்தில், அதாவது யாழ். முற்றவெளியில்தான் தந்தை செல்வாவின் இறுதிச்சடங்கு நடந்தது என்றும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தகனம் இடம்பெற்றது என்றும் ஜாதிக ஹெல உறுமய நினைவுபடுத்தியிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சில விதிவிலக்கான நிகழ்வுகள் நடந்திருப்பது உண்மையே என்றாலும், அதனை வைத்துத் தொடர்ந்து, தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

ஆலயத்தின் புனிதம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்துமான கரிசனைகள், முன்பை விட இப்போது அதிகரித்துள்ளன. 

முன்னைய காலங்களில் ஆலயங்களில் மிருகபலி அனுமதிக்கப்பட்டது. இப்போது அப்படியில்லை. நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. 

எனவே, முன்னைய உதாரணங்களைக் காட்டி, விகாராதிபதியின் உடலை முற்றவெளியில் தகனம் செய்வதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புவது அபத்தமானது. 

இந்த விடயம் சரியானமுறையில் அணுகப்படாததே இந்தளவு சிக்கலுக்கும் காரணம்.
சடலங்களைத் தகனம் செய்வதற்கு, அந்தந்த உள்ளூராட்சி சபையின் அனுமதியைப் பெற வேண்டும். யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, யாழ். மாநகரசபையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி பெறப்படவில்லை என்பது முதல் சிக்கல்.

அதேவேளை, யாழ். மாநகரசபையின் அனுமதியின்றி விகாராதிபதியின் உடல் தகன நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதனை மாநகரசபையே தடுத்திருக்கலாம். அல்லது வேறோர் இடத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்திருக்கலாம்.

இந்த விடயத்தில், வடக்கின் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதி காத்தது தவறு என்று கூறியிருக்கிறார் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா.

விகாராதிபதியின் உடல் தகன விவகாரத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்த போதும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதில் தலையீடு செய்யவோ கருத்துகள் எதையும் வெளியிடவோ இல்லை.

அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களும் அடங்கியே இருந்தனர். ஏனென்றால், இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துவது, நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்றும், விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது உண்மையான விடயமும் கூட மக்கள் நடமாடும் இடத்தில், விகாராதிபதியின் சடலத்தை எரிப்பது சுகாதாரக் கேடு என்று வரிந்து கட்டிய தமிழ் அரசியல்வாதிகள் எவருமே, யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் குடியிருப்புகளின் மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக் கோரி நடத்தப்படும் போராட்டங்களை எட்டியும் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தமிழ் மக்களும் அரசியல் பிரமுகர்களும், இந்த விடயத்தில் குரல் எழுப்பியமைக்கு வெறுமனே அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் மாத்திரம்தான் காரணம் என்று கூறமுடியாது.

அதற்கும் அப்பால், பௌத்த சிங்கள மயமாக்கல் குறித்த அச்சமும் இருக்கிறது.
வடக்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த சிங்கள மயமாக்கலும், சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளின் எழுச்சியும் தமிழ் மக்களைக் கவலையும் அச்சமும் கொள்ள வைத்திருக்கிறது.

யாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்தால், அந்த இடத்தில், பௌத்த நினைவுச் சின்னம் எழுப்பப்படுமோ, விகாரை கட்டப்படுமோ என்ற அச்சமும் தமிழர்கள் பலரிடம் உள்ளது.

அந்த அச்சமும் கூட, விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற குரல்கள் வலுப்பெறக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய எதிர்க்கும் தமிழர்கள் என்று குற்றம்சாட்டும் போது, அதற்கான சூழல் எவ்வாறு உருவானது என்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் சற்றேனும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

நல்லிணக்க முயற்சிகள் என்பது, தனியே விட்டுக் கொடுப்பது மாத்திரமன்றி, முட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வதும்தான்.

அந்தவகையில், விகாராதிபதியின் உடல் தகன விடயத்தைச் சர்ச்சையாக்கியவர்கள் குற்றவாளிகள் என்றால், சர்ச்சை உருவாகாத வகையில் செயற்படத் தவறியவர்களும் கூட குற்றவாளிகள்தான். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விகாராதிபதியின்-இறுதிச்சடங்கும்-சர்ச்சையும்/91-209570

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2017 at 5:14 PM, nunavilan said:

தமிழ் மக்களிடம்  கேட் க ஆட் கள் இல்லை  எல்லை என்ற எகத்தாளத்தில் தான் சிங்களம் இதனை செய்கிறது  என்பது  தான் பகுத்தறிவுள்ளவர்களால் அறியப்பட கூடியது. மக்களின் sencitivity  பற்றி சிங்களவர்கள் அறியாதவர்கள் இல்லை. வேண்டும் என்றே செய்கிறார்கள் என்பது தான் உண்மை நிலை. நீங்கள் எப்படி உண்மை நிலையை அறிகிறீர்கள் என்பது மிக்க ஆச்சரியமாக  உள்ளது.

இந்த விஹராதிபதி இருபது வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் இருந்து அங்குள்ள பௌத்தர்களுக்கு சமய வழிபாடுகளிலும் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். இந்த பௌத்தர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தில் இருப்பவர்கள். அவர்கள் இவரது இறுதி சடங்கில் பங்குகொள்ள ஒரு பெரிய இடம் அவர்களுக்கு தேவை. அதனால் முற்றவெளியை பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னரும் முற்றவெளி இவ்வாறு பயன் பட்டு இருக்கிறது. வேறு எவ்விடத்தில் இவர்கள் தமது இறுதி அஞ்சலியை செய்து இருக்க முடியும்?

நீங்கள் உண்மையை தேடுபவராக இருந்தால் அநுராதபுரத்தில் விகாரை (உதாரணத்துக்கு  அநுராதபுரம்)க்கு  அருகில் ஒரு தமிழரின் பிணத்தை எரித்து பாருங்கள். பின்னர் சிங்களவரின்  reactionஐ  பாருங்கள். அப்போ உங்களின் உண்மை நிலை பற்றிய கருத்து என்ன என அறிய மிக மிக ஆவலாக உள்ளேன்.

எனக்கு தெரிந்த ஒரு தமிழனின் பிணம் இவ்வாறு அநுராதபுரத்தில் தகனம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது. அந்த இடத்தில் நான் உட்பட அனைவரையும் வாகனங்களில் இருந்து  இறங்கி அந்த தமிழனின் சமாதிக்கு மரியாதை செலுத்தி செல்ல வேண்டும் என்று சிங்களவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தமிழனின் பெயர் எல்லாளன்.

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்த்து எட்டு ஆண்டுகள்தான் ஆகிறது. இருபது ஆண்டுகளாய் எந்த பவுத்தர்களுக்கு வழிபாடு ஆலோசனை செய்தவர்? தேவையில்லாமல் ஏன் பவுத்தர் இங்கு இருக்கினம்? கொழும்பில செத்த ஒருவரை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்? தலதா மாளிகைக்கு கொண்டு போயிருக்கலாம். அவரின் விகாரைக்கு பக்கத்தில செய்திருக்கலாம். முத்தி அடைந்திருப்பார். பிழையான காரியங்களை செய்யிறது. கேட்டால் நாட்டில பிரச்சனை வருமென்று வெருட்டிறது. உடனே எல்லாத்தையம் மூடிறது. இதுக்கு ஏன் ஒரு தலைவர்? பேச்சுவாத்தை, நல்லிணக்கம். அவன் வெருட்டினால் சர்வதேசத்திடம் கொண்டு போங்கள். இவனுடன் நாங்கள் வாழ முடியுமா எண்டு கேளுங்கள். அதை விட்டிட்டு எல்லாரும்  பதிலடி குடுக்கிற பிஸி.

எல்லாளன் பெரும் வீரன் மட்டுமல்ல தர்மத்துக்கு பயந்தவனும் கூட. அதனாற்தான் துட்ட  கைமுனுவின் தந்தையார் எல்லாளனுடன் போர் புரிய வேண்டாம் என்று துட்டனைத் தடுத்தான். ஆனால் தன் தந்தை எல்லாளனுடன் போர்புரிய பயப்படுகிறார் என்று எண்ணித் தன் தந்தைக்கு பெண்கள் அணியும் ஆடையை அனுப்பி வைத்தான். மிகவும் வயது முதிர்ந்த எல்லாளனை நயவஞ்சசகமாய் அவரின் யானை பர்வதத்தின் கண்ணில் அம்பை எய்ததனால் யானை கால் இடறி கீழே விழ கீழே விழுந்த எல்லாளனை பாய்ந்து வெட்டி சாய்த்தான். அதனாலேயே கைமுனு துட்ட கைமுனு ஆனான். அவருக்கு கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும் எண்டு துட்ட கைமுனு ஆணையுமிட்டான்   அவனுக்குத் தெரியும் அவர் வயதில் முதிர்ந்தாலும் அவரை தன்னால் வெல்ல முடியாது. தான் எப்படி அவரை வென்றேன் என்பது அந்தக் கோழைக்குத் தெரிந்திருந்தது. எல்லாளனின் போர்த்திறமையும் வீரத்தையும் மெச்சியுமிருந்தான். மஹிந்தா ஊரைக்கூட்டி தமிழரை அழித்து வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியபோதும் சில சிங்களவர் மஹிந்தவை அடுத்த துட்ட கைமுனுவாகவே பாராட்டினார்கள். இப்ப சொல்லுங்கள்   சிங்களவன் பெருந்தன்மையை, வீரத்தை.  சேர். பொன் இராமநாதன் முஸ்லீம் சிங்களவர் பிரச்சனையில்  சிங்களவருக்காக வாதாட பிரித்தானியா சென்று வாதாடி வெற்றி பெற்று திரும்பிய  இராமநாதனை தங்கள் தோளிலே சுமந்து நன்றி தெரிவித்தார்கள் சிங்களவர். பின்னாளில் நடந்தது  என்ன? தமிழருக்கு நடந்த அனிஞாயத்தை பிரியதானியர்களிடம் கொண்டு சென்று நிஞாயம் கேட்டாரா? சொல்லுங்கள் தமிழர் சிங்களவராலே வணங்கப்பட வேண்டியவர்களே. அதற்கு அவர்கள் தகுதி உடையவர்களே. தமிழ்த் தலைமைகளின் தூர நோக்கின்மையால் தற்புகழ்ச்சிக்கு எல்லாத்தையும்  விட்டுகுடுத்து எல்லாரும் ஏறி மிதிக்கிற நிலையில் இருப்பதுமட்டுமல்ல இப்பிடித்தான்  இருப்போம் என்று மல்லுக்கட்டுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

கொழும்பில செத்த ஒருவரை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்? தலதா மாளிகைக்கு கொண்டு போயிருக்கலாம். அவரின் விகாரைக்கு பக்கத்தில செய்திருக்கலாம்.

அவரின் விஹாரைக்கு பக்கத்தில் தானே செய்து இருக்கிரார்கள? 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வாழும் அறிஞர்கள் , மற்றும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இவர்களே கண்டும் காணாமல் போன ஒரு விடயம் இது.
தவிர இது சட்டத்திட்கு எதிரான நடவடிக்கையா என்பதை பார்க்க வேண்டும்.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் சிங்கள சமய தலைவர்கள், பிரபலங்கள் இறந்த பின்னர் பொது இடங்களில் பந்தல் அமைத்து அவர்கள் உடலை சிதையூட்டுவது வழமையான நடவடிக்கை.

விடுதலை புலிகளின் கைகளில் இருந்து யாழ்ப்பாணம் மீளவும் கைப்பற்றப்பட்டதின் பின்னர் இந்த விகாரை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது.
அதில் தொடர்ந்தும் சேவை செய்த இந்த தேரரை கௌரவப்படுத்த சிலர் எடுத்த முயற்சியாகவும்  இருக்கலாம்.
 (குறிப்பாக ராணுவம், ஆளுநர் ..)

வெளிநாடுகளில் இருக்கும் சீராணா நேர்மையான சட்ட திட்டங்களை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது.
சிங்கள அரசியல் செய்பவர்கள் இந்த வெளிநடப்பு , கண்டனங்களையும் கூட அவர்களுக்கு சாதகமானதாகவே மாற்றிக்கொள்வார்கள்.

தமிழன் பாவம் ....
ஒப்பற்ற உயிர் தியாகம் செய்த திலீபனின் நினைவு மண்டபம் யாரும் கவனிப்பாரற்று ஆட்டுப்புழுக்கையும், சிறுநீர் மனமும், வெற்றிலை துப்பலுமாய் பார்த்த ஞாபகம் ...

  • கருத்துக்கள உறவுகள்

 அவர்கள் செய்யும் அடாவடிகளை நமக்கு சாதகமாய் பயன்படுத்த இடமிருந்தும் அவனைக் காப்பாற்றி நமது வாயைப்பொத்தி அடக்கி அமைதி காப்பதாலேயே அவன் இவ்வளவு ஆட்டம் போடுறான். நாங்கள் ஓடுமட்டும் அவனும் துரத்துவான். நாங்கள் தான், நிப்பதுவோ, எதிர்ப்பதுவோ, காரணம் கேட்பதுவோ இல்லை. அவன் ஒன்று கேட்டால்  நாங்கள்  முழுவதையும் கொட்டிக்குடுத்து விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

எழுபது வருடமாய் முதலில் அஹிம்சையில் எதிர்த்து பின் பயங்கரவாதத்தால் எதிர்த்து அதற்கு பின் ஆயுதம் தாங்கி மரபுவழி யுத்தம் செய்து எதிர்த்து என்ன கண்டோம்? அப்ப அவன் துரத்தவில்லையா?

"ஒப்பற்ற உயிர் தியாகம் செய்த திலீபனின் நினைவு மண்டபம் யாரும் கவனிப்பாரற்று ஆட்டுப்புழுக்கையும், சிறுநீர் மனமும், வெற்றிலை துப்பலுமாய் ..." - அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

எழுபது வருடமாய் முதலில் அஹிம்சையில் எதிர்த்து பின் பயங்கரவாதத்தால் எதிர்த்து அதற்கு பின் ஆயுதம் தாங்கி மரபுவழி யுத்தம் செய்து எதிர்த்து என்ன கண்டோம்? அப்ப அவன் துரத்தவில்லையா?

 அவன் அஹிம்சயை வன்முறையில் அடக்கும்போது வெளிநாடுகளுக்கு அறியச் செய்திருக்க வேணுமோ வேண்டாமோ? சிங்களவனுக்காக பிரித்தானியா வரை சென்று வாதாடியவர் தன் இனத்தின் மீது நடந்த அடக்கு முறைகளை கொண்டு போயிருக்க வேணுமோ வேண்டாமோ ?   தங்கள் பிரச்சனையை உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு கொண்டு போயிருந்தால் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்திருக்கலாம். சர்வதேசத்தை சிங்களவன் ஏமாற்றி உதவி பெறுவதை தடுத்திருக்கலாம். எங்களின் செயற்திறன் அற்ற அரசியல், ஒருவர் கஸ்ரப்பட நாலுபேர் ரசிப்பது, கேலி பண்ணுவது, காட்டிகுடுப்பது, முண்டு குடுப்பது. எல்லாமே அவனுக்கு குளிர் விட்டு, தான் எது செய்தாலும் தனக்கு பச்சைக்கொடி தமிழரே பிடிப்பினம் என்று தெரிந்து அவன் செயற்படுகிறான். 

2 hours ago, Jude said:

"ஒப்பற்ற உயிர் தியாகம் செய்த திலீபனின் நினைவு மண்டபம் யாரும் கவனிப்பாரற்று ஆட்டுப்புழுக்கையும், சிறுநீர் மனமும், வெற்றிலை துப்பலுமாய் ..." - அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன

 எல்லோரும்சேர்ந்து   வடம் பிடித்தால் தேர் அசையும்அதில் என் கரமும் சேர்ந்து இழுக்கும்  என்பது என் நிலைப்பாடு.  உங்களின் ......... என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

 எல்லோரும்சேர்ந்து   வடம் பிடித்தால் தேர் அசையும்அதில் என் கரமும் சேர்ந்து இழுக்கும்  என்பது என் நிலைப்பாடு.  உங்களின் ......... என்ன?

அந்த எல்லோரும் உங்கள் நிலைப்பாட்டில் இருந்து "ஆட்டுப்புழுக்கையும், சிறுநீர் மனமும், வெற்றிலை துப்பலுமாய் " இருப்பதை பார்த்துக் கொண்டு பிக்குவின் தகனம் பற்றி   விவாதம் செய்ய, எப்போது தேர் அசையும் என்று நானும் பார்த்துக் கொண்டு   இந்த     தகன  விவாதத்தில்  பங்கேற்கிறேன். 

"தமிழன் பாவம் ...."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.