Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்

Featured Replies

அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர் 

(எம்.எம்.மின்ஹாஜ் )

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  தரன்ஜித் சிங் சந்து  மற்றும்   அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். 

Taranjit-Singh-Sandhu-ranil-wickramasing

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை  ஜனாதிபதி செயலகத்திலும்    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  அலரி மாளி்கையிலும்  இரண்டு தூதுவர்களும்  சந்தித்து   பேச்சு நடத்தியுள்ளனர். 

இன்றுகாலை    இந்திய  உயர்ஸ்தானிகர்   தரன்ஜித் சிங் சந்து    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.  அத்துடன் மாலை   இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப்  அலரி மாளிகையில்   பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார்.      அதேபோன்று இரண்டு நாடுகளினதும்  தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிப்பட்ட ரீதியில்   ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.  

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை  தீர்க்கும் நோக்கிலேயே   அமெரிக்க மற்றும்  இந்திய தூதுவர்கள்   பிரதமரையும் ஜனாதிபதியையும்   சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள்   நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/30585

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒண்ணும் குடி முழுகல்ல.....

சைனாகாரன் பூந்து வெளாடிட்டான்.

வெள்ளி பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்ப ஓடியாடி திரிந்தென்ன செய்யிறது?

Edited by Nathamuni

20 minutes ago, Nathamuni said:

இப்ப ஒண்ணும் குடி முழுகல்ல.....

சைனாகாரன் பூந்து வெளாடிட்டான்.

வெள்ளி பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்ப ஓடியாடி திரிந்தென்ன செய்யிறது?

நாதமுனி, சைனா காரன் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  எப்படி புகுந்து விளையாடினான் என்று சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

நாதமுனி, சைனா காரன் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  எப்படி புகுந்து விளையாடினான் என்று சொல்ல முடியுமா?

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

12 minutes ago, Nathamuni said:

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

பணம் கொடுத்து மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்ததாக எதிர்கட்சிகள் உட்பட யாரும் முறையிடவில்லை நாதம். அப்படி செய்ததற்கான ஆதாரமும் இல்லை. மகிந்தவின் பிரச்சாரம் கூட பெரிய எடுப்பில் பெரும் பணம் செலவளித்து இடம்பெறவில்லை.

மகிந்த சீனாவின் உற்ற நண்பன் என்றாலும் இந்த வெற்றியில் சீனாவின் பங்களிப்பு எதுவும் இல்லை. சிங்கள மக்கள் இன்னமும் மகாவம்ச தாக்கத்தில் இருப்பவர்கள். எக் காரணமும் கொண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச தீர்வைத்தானும் கொடுக்க கூடாது என்ற சிந்தனையில் இருக்கும் பேரினவாதிகள் அவர்கள்.  இதை விட்டு விட்டு சீனாவினால் தான்  மகிந்த வெற்றி பெற்றார் என்பது சிங்கள மக்களின் இனவாத சிந்தனையை முற்றாக புறக்கணிப்பதாக ஆகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

1 hour ago, Nathamuni said:

சைனாகாரன் வேலை தெரியாதா, என்ன?

பணமையா, பணம்...

பிணத்தையும் வாய் திறக்க வைக்கும் பணம்....

பணம் கொடுத்து மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்ததாக எதிர்கட்சிகள் உட்பட யாரும் முறையிடவில்லை நாதம். அப்படி செய்ததற்கான ஆதாரமும் இல்லை. மகிந்தவின் பிரச்சாரம் கூட பெரிய எடுப்பில் பெரும் பணம் செலவளித்து இடம்பெறவில்லை.

கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் பணம் கொடுத்ததாக இல்லை.

1 hour ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் பணம் கொடுத்ததாக இல்லை.

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

  • தொடங்கியவர்

கூட்டமைப்புகாரர் சொல்கிறார்கள் இப்படி..:rolleyes:

அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பினும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், போதைப்பொருட்கள் வழங்கும் செயற்பாடுகளில் பல கட்சிகள் செயற்பட்டன.

30 minutes ago, நிழலி said:

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

கூட்டமைப்பு பணம் கொடுத்ததாக தனி ஒருவனை தவிர வேறு யாரும் சொல்லவில்லை - அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

சீனாக்காரன் பணத்தில் தான், தமிழக ஸ்ரைலில், வாடகை பஸ்ஸில், பிரியாணி பார்சல், அரைப்போத்தில் மெண்டிஸ் உடன் சேர்த்த கூட்டம் என்பதே மகிந்த எதிர்ப்பாளர்கள் சொல்லும் கதை.

ரணில் தனது, மகிந்த பூணைக்கும் தோழன், மகிந்த ஊழல் விசாரணை நடாத்த விடா காவல் என்று இருந்து, மறுபுறம் ரவி கருணானாயக்கவின் வங்கி பிணை முறி ஊழலில் கோட்டை விட்டு அதற்கான விலையை செலுத்துகிறார்.

இவரின் நிலைப்பாட்டால் விரக்தியடைந்த தரகர் சந்திரிகா, சற்று விலகி இருக்கும் நோக்கில் இங்கிலாந்து பறந்து விட்டார்.

ரணில் தலைவிதி எதுவாயினும், மைத்திரி, இந்தியா, மேற்கு ஆகிய மூன்று பகுதிக்கும் உள்ள ஓரே வழி, ஊழல் விசாரணை என்ற பெயரில், மகிந்தவை மடக்குவது தான்.

அந்த அலையில் ரவி உட்பட பலர் சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

அவர்களை எதிர்க்கும் கட்சியினர் கூட இக் குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை

அடிச்ச மப்பும் குழப்பமும் முடிய ஒவ்வொன்றாய் எழும்பி போட்டு தருவினம் பாருங்க காத்திருப்பம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

அடிச்ச மப்பும் குழப்பமும் முடிய ஒவ்வொன்றாய் எழும்பி போட்டு தருவினம் பாருங்க காத்திருப்பம் .

ஒப்பந்தம்,கையெழுத்து,அத்தாட்சிப்பத்திரம் எதுவுமில்லாமல் நல்லாட்சி அமைச்ச கொம்பனியெல்லே......

விடிய விடிய விசயங்கள் வெளிக்கும் பாருங்கோ :27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விஷயம்பற்றி வெளிநாட்டு தூதரகங்கள் ஏதாவது பேசினால்,கருத்து சொன்னால் உடனே, இலங்கை ஒரு இறையாண்மை உள்ளநாடு, அதன் உள்நாட்டு விஷயங்களில் வேறுநாடுகள் தலையிடகூடாது ,அதை எப்படி தீர்த்துகொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தலையில் நெருப்பு வைக்கப்பட்டமாதிரி அலறும் பேரினவாதிகள்,

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு தேர்தலின்மூலம் மாறிமாறிவரும் சிங்கள அரசுகளுக்குள் ஏற்படும் நெருக்கடியின்போது மட்டும், வெளிநாட்டு அரசுகளும்,அதன் தூதரகங்களும்,ராஜதந்திரிகளும் ஜனாதிபதி மாளிகை,அலரிமாளிகையின் அடுப்படிவரை போய் கருத்து சொல்ல பேரினவாதிகள் அனுமதிப்பது ஏன்?

தனது இனத்துக்கு ஒரு நெருக்கடியென்றால் எவர் காலையும் பிடித்து சுமுக நிலையை, உருவாக்கும் ராஜதந்திரத்தை சிங்களவரிடம் தனியான வகுப்பிற்குபோய் தமிழ்கட்சிகள் கற்றுக்கொண்டால் என்ன? ரியூசன் பீசுக்காக ஆகும் செலவை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

சீனாக்காரன் மாலத்தீவை மடக்கியது மட்டுமல்ல, இந்தியா படை அணுப்பினால் கதையே வேற என்று சொல்லிட்டான்

இப்ப, இலங்கை.... பிச்சுக்கப் போகுது..

  • கருத்துக்கள உறவுகள்
On 14/02/2018 at 10:23 PM, valavan said:

தமிழர்கள் விஷயம்பற்றி வெளிநாட்டு தூதரகங்கள் ஏதாவது பேசினால்,கருத்து சொன்னால் உடனே, இலங்கை ஒரு இறையாண்மை உள்ளநாடு, அதன் உள்நாட்டு விஷயங்களில் வேறுநாடுகள் தலையிடகூடாது ,அதை எப்படி தீர்த்துகொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தலையில் நெருப்பு வைக்கப்பட்டமாதிரி அலறும் பேரினவாதிகள்,

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்நாட்டு தேர்தலின்மூலம் மாறிமாறிவரும் சிங்கள அரசுகளுக்குள் ஏற்படும் நெருக்கடியின்போது மட்டும், வெளிநாட்டு அரசுகளும்,அதன் தூதரகங்களும்,ராஜதந்திரிகளும் ஜனாதிபதி மாளிகை,அலரிமாளிகையின் அடுப்படிவரை போய் கருத்து சொல்ல பேரினவாதிகள் அனுமதிப்பது ஏன்?

தனது இனத்துக்கு ஒரு நெருக்கடியென்றால் எவர் காலையும் பிடித்து சுமுக நிலையை, உருவாக்கும் ராஜதந்திரத்தை சிங்களவரிடம் தனியான வகுப்பிற்குபோய் தமிழ்கட்சிகள் கற்றுக்கொண்டால் என்ன? ரியூசன் பீசுக்காக ஆகும் செலவை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருப்பார்கள்!

சொறி சிங்கள அரசு சொல்வது சரியானதே. அதாவது இறைமையுள்ள அரசு என்பது அதன் எல்லையிலும் எல்லைக்குள்ளும் எந்த எந்த விடயங்களை நடைபெற அனுபதிப்பது அல்லது அனுமதி மறுப்பது என்பதுவே, இறையாண்மை உள்ள வேறு அரசுக்கள் தனது  எல்லைக்குள் உள்ள  விடயங்களில் தனது அனுமதியுடன் தலையிடுவதை அனுபதிப்பதை இல்லையா எனபதும் கூட,    இறையானமை உள்ள அரசு என்பதிற்கான தலையாய பண்பும் உரிமையும் ஆகும்.

ஆயினும், சொறி சிங்கள அரசிற்கு  இறையாண்மை உள்ளதா என்பதே கேள்வி? இல்லை என்பதே  அரசு மற்றும் சர்வதேச, அரசுக்கள் இடையிலான உறவில் அதி உன்னத மற்றும் சிறப்பு தேர்ச்சி அடைந்த சட்ட வல்லுனர்களின் சட்டக் கருத்தாகும்.

அதை இல்லாமல் ஆக்கியதே  சொறி சிங்கள அரசு தான். வேறொன்றினால் அல்ல, அயலில் உள்ள தனக்குத் தானே  தானே பிராந்திய வல்லரசு என்று மகுடம் சூட்டி, வெளிப்படையாக சொறி சிங்கள அரசின் காலில் வீழ்ந்து கெஞ்சுவதை ஏனைய அரசுகள் எவ்வாறு நோக்கும்  எனப்தாஹி பற்றி கூட கவலைப்படாத இந்திய அரசுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை (treaty ) மூலமாகவே சொறி சிங்கள அரசு தனது இறையாண்மையை இந்திய அரசிடம் விற்றது.

இங்கே நான் treaty என்ற ஆங்கில பதத்தையே கருத்தில் எடுக்கிறேன். ஏனெனில் treaty என்பது மிகவும் கட்டுப்பாடுடைய சட்டக் கடமைகளும் (obligations), உரித்துகளும் அரசுகளுக்கு மட்டும் இடையிலேயே ஏற்படுத்தப்படக் கூடியதாகும். அது போலவே, ஏதாவது ஓர் அரசு  (that is party to the treaty) தனது கடமைகளை வழங்கவில்லையானால், ஏனைய அரசு அல்லது அரசுக்கள் அந்தக் கடமைகளை யுத்தம் மூலமாக அந்தக் கடமைகளை வழங்காத அரசை வழங்க வைக்கலாம்.

ஆகையினால் தான், இந்திய-சிங்கள அரசு உடன்படிக்கை உயிர்புடன் (13ம் திருத்தும்) இருக்க வேண்டும் என்று பலரிடம் கூறியுள்ளேன்.

ஏனெனில், சிங்கள அரசுடன் (மன்னிக்கவும், சொறி லங்கா அரசுடன்) ICC வாயிலாக சட்ட சவால் இடைவெளி திறக்கப்படுமானால், சொறி லங்கா அரசின் இறையாண்மை வாதத்தை இலகுவாக முறியடிக்கலாம்.      

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.