Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் - 09 ஆவது அகவை - வாழ்த்துக்கள்!

Featured Replies

yarlcom9thyearcelebratizo9.gif

மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்!

யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!

  • Replies 58
  • Views 9.8k
  • Created
  • Last Reply

9 ம் வயதைக் கொண்டாடும் ,யாழ் இணையத்திற்க்கு எனது வாழ்த்துக்கள்....! பல நல்ல புதிய உறவுகளையும் இணைத்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த்கின்றேன்.....!

யாழின் சேவை மேலும் தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்துக்கு அதன் பலமே யாழ் களம் தான். கருத்தால் பல வேறுபட்ட கோணங்களோடு பலரும் இங்கு வரினும் சிலரே கருத்துக்களை பகர்கின்றனர். இணையத்தில் உலவும் பலர் கருத்துக்களைப் படிக்கின்றனர்.கருத்துக்களை கருத்துக்களாக மனித யதார்த்ததுக்கு ஊடாக பேசும் போது அவை யாழ் களத்தை மிளிர வைக்கும்..! கருத்துக்களுக்காக கருத்துரையுங்கள்... கருத்தாளர்களுக்காக அல்ல. இந்த நிலை எழவும் நிலைக்கவும் வேண்டும். கருத்துச் சுதந்திரத்தை யாழ் இணையக் குறிக்கோள்களைப் பாதிக்காத வரைக்கும் அனுமதிக்க வேண்டும்..!

யாழ் என்றும் தமிழ் தேசியத்தை உறுதியோடு பற்றி நிற்பதோடு சமூகவியல்.. உலகியல்.. அறிவியல்.. சூழலியல்.. பொருளியல் .. பொழுதுபோக்கியல் என்று அனைத்து இயல்களையும் சுவைக்கும் இடமாக விளங்க வேண்டும். தமிழ் தேசியத்தையே கட்டிட்டு அழ வேண்டும் என்ற நிலைக்கு அப்பால் தமிழ் தேசியத்தோடு அனைத்தையும் அறியவும் தெரியவும் தெளியவும் முயற்சிக்க வேண்டும்..! வழி காட்ட வேண்டும்..!

மேலும் மேலும் கருத்துக்களால் மெருகேறவும்.. கருத்து மோதல்களால் மனக்கசப்புக்கள் பெற்றோர் அதை மறந்து புதுப்புதுக் கருத்துக்களோடு களம் நுழையவும்.. நட்புறவு, சகிப்புத்தன்மை. புரிந்துணர்வு, மன்னிப்பு போன்ற மனித அடிப்படைகளை வளர்த்துக் கொள்ளவும் இக்களம் தொடர்ந்து வழிகாட்டட்டும். :P :D

திரு. யாழ்களத்திற்கு வாழ்த்துகள்!

ஆம், ஏனைய உயிரற்ற தளங்கள் போலன்றி உயிர்ப்புடன் திகளுவது இந்த யாழ்களம்.

கருத்துச் சுதந்திரம் கருவறுக்கப்பட்ட தேசத்தில், கருத்துப்பகிர வடிகால் கொடுத்தது இந்த யாழ்களம்.

எனது கருத்துக்களை நானே உரசிப்பார்த்து சீர் செய்து கொண்ட சீர்களம் இந்த யாழ்களம்.

சாணக்கியன் புதிதாய் பிறந்த இடம் இந்த யாழ்களம்.

கல்லூரிப்படிப்போடு கைவிட்டுப்போன தமிழுடன் மீண்டும் என்னை இணைத்து வைத்தது இந்த யாழ்களம்.

நன்றியுடன்,

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[font="Comic Sans MS"]9 வது அகவையில் அடி எடுத்து வைக்கும் எமது யாழுக்கு வாழ்த்துக்கள்.

9 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழை டைகர் பமிலியின் சார்பில் நாங்களும் மென்மேலும் பல ஆண்டுகாலம் சேவையாற்ற வேண்டும் எனவும்,இதனை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நன்றி வணக்கம்

டைகர் பமிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

பலவருடங்களாக முகப்பை மட்டும் தான் பார்த்துச் செல்வேன். இது போல இன்னும் பலர் இருப்பார்கள். அவர்களை ஈர்க்க யாழ்களம் ஏதாவது செய்யவேண்டும். யாழ்கள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க யாழ் நடவடிக்க எடுக்க வேண்டும். இது தொடர்பாக நாமும் ஒரு முயற்சி தொடங்கியுள்ளோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20802

யாழை ஒரு அரிய பொக்கிஷமாக மாற்றமுடியும். ஒரு 10% மான அங்கத்தவர்கள் மனது வைத்தால்.

ஒன்பதாவந்து ஆண்டை ஆரம்பிக்கும் யாழ் களத்திற்க்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

உலகெங்கும் பரந்திருக்கும் தாயக மக்களை இணைத்து உறவாடுவதில் யாழுக்கு நிகர் யாழ்தான். 9வயதுடைய யாழில் குழந்தையாக சேர்ந்திருக்கும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, நானும் சுமார் 4வருடங்களிற்கு முதலே வருவேண், வந்து மேலால் பாத்துவிட்டு சென்றுவிடுவேண். 1மாததிற்க்கு முதல்தான் 1யாழ்கள உறவு என்னை அழைத்தது. முதலில் வருவத்ற்க்கு விருப்பமிருக்கவில்லை அவ்ரின் நெருக்குதலால்தன் வந்தேன். வந்தபின்புதான் 4வருடங்கலை வீணாக்கிவிட்டோமோ என்று மண வருத்தப் பட்டேன். இனிமேல் எண்றெண்றும் யாழுடன் இணைந்திருப்பேன். யாழுக்கு மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

9 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் யாழ்களத்திற்கு

மேலும் பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள்

நன்றியுடன்

சிவா

  • கருத்துக்கள உறவுகள்

9 ஆண்டுகள் தமிழ்பணி செய்த யாழ்களத்திற்கு இனிய வாழ்த்துக்கள். எத்தனை சவால்கள் வந்தபோதிலும், அனைத்தையும் முறியடித்து, தளராமல் கொண்டு செல்லும் நிர்வாகத்திற்கு நன்றிகள்.

நான' வள'ர்ந'த களம'. 9 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப'பது மகிழ'ச'சி. மென்மேலும் பல ஆண்டுகாலம் சேவையாற்ற வேண்டும் எனவும் இதனை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நன்றி

ஆகா யாழுக்கு 9 வயதாகின்றதா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். பொறுமையோடு நிர்வகிக்கும் நிர்வாகத்தினருக்கும் தூண்களாக இருக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

சண்டை சச்சரவின்றி எல்லோர் உறவுகளும் ஒற்றுமையோடு கைதூக்கி வைக்கணும் என யாழுக்கு வாழ்த்துகள் சொல்லுகின்றேன். :P :P

  • கருத்துக்கள உறவுகள்

யாழிற்கு 9 வயதாச்சா இப்பதான் 8வது பிறந்தநாளை ரசிகா தலைமையிலை கொண்டாடினமாதிரி இருக்கு நானும் அடிக்கடி எழுதி வெட்டு வாங்காததாலை நாள் போனது தெரியேல்லை அதன் இயக்குனர்கள் மற்றும் களத்திற்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதி வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழீழ மக்களின் உணர்வையும், வீரத்தையும், எழுச்சியையும், தேசத்தின் மீதான பற்றுறுதியையும், தாய்மொழியின் மீதான காதலையும் செம்மைப் படுத்தி உலகத் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் உள்ள பிணைப்பினை மேன்மைப்படுத்தி இணையம் மூலம் ஒன்றிணைத்து உன்னதமான சேவைகள் செய்துவரும் யாழ் களம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிற்கு என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நான' வள'ர்ந'த களம'. 9 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப'பது மகிழ'ச'சி. மென்மேலும் பல ஆண்டுகாலம் சேவையாற்ற வேண்டும் எனவும் இதனை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நன்றி

நான் என்பதிலும் நாம் என்பதே பொருத்தமாக இருக்கும் பரணீதரன் அண்ணா அவர்களே..! காரணம் யாழை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரிய மோகன் மற்றும் யாழ் (சுரதா யாழ் வானன்) போன்ற பெரியவர்களே நான் வளர்த்த களம் என்று சொல்லமாட்டார்கள். யாழ் வளர்ந்ததே யாழில் இருந்த, இருக்கும் ஒவ்வொருவருராலும் தான்..! அது தொடர வேண்டும். நான் என்று ஒருவருக்குள் அது அடக்கப்பட முடியாது என்பதே எம் கருத்து..! யாழின் பழைய நண்பர்கள் பலரிடம் அறிந்த விடயங்களை வைத்து இதைக் குறிப்பிடுகின்றோம்..! குறையாக அல்ல..! எல்லோருக்கும்... நிறைவாக.. அமைய..! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நன்நாள் வாழ்த்துக்கள்

யாழ் களமே! ஈழத்தமிழரை

ஒருங்கிணைக்கும் ஓர் தளமே!

கருத்தாடல்,விவாதங்கள்

கவி, கதை கட்டுரைகள்

விளையாட்டு அரட்டை

பொழுது போக்க சினிமா

சமையல், பொது அறிவு

என்று பல கலையும்

களைகட்டும் யாழ் திடலே!

ஒன்பது ஆண்டு நிறைவு நாளா?

இந்த மாதம் உந்தன் பிறந்த நாளா?!

வந்தனம் தந்தேன் உனக்கு! வளர்

பிறையாய் வளர்ந்திடுவாய்!

ஈழத்தமிழருக்கு ஓர் நிழலாய்

என்றும் நீ இருந்திடுவாய்!

உனை இங்கு தந்திட்ட மோகன்

அண்ணா! வளர்த்திட்ட என் இன

சோதரர்கள், சோதரிகள் அனைவருக்கும்

தமிழ் வணக்கம்! ஒன்றாய் இணைந்து

ஓர் தமிழாய் பிண்ணிப் பிணைந்து

வான் முட்டும் திக்கெட்டும் சரித்திரம்

படைப்போம்! யாழ்களமே! எந்தன்

வாழ்த்து!! நீடுழீ நீ வாழ்க! .

என்றும் நீ ஆள்க!.....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ்களத்திற்கு.

மோகனுக்கும், மட்டுறுத்தினர்களுக்கும், றோயல், அரச, கங்காரு, டைகர் பமிலி உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். :D

மேலும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள். :o

இன்று போல் என்றும் வீறுநடை போட வாழ்த்துக்கள்

Edited by Rasikai

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க யாழ் தளமே நீடூழி வாழ்க.

உலகெலாம் சிதறி வாழும் முகமறியாத சொந்தங்களை இணைக்கும் தளமே வாழ்க.

நீ செய்யவேண்டிய சாதனைகள் பலவுண்டு அதுவரை நீ வாழ்க...

வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க..

நானும் இந்த தளத்திற்கு பல வருடங்களாக வருவதும் செய்தியை மட்டும் பார்த்து விட்டு உடனே திரும்பி விடுவதும் வழமை. ஒரு நாள் வழமை போல் செய்தியை பார்த்து விட்டு எனக்கு பிடித்த ஒரு செய்தி இருந்தபடியால் இது யாரால் பதிவு செய்யப்பட்டது என்பதை பார்ப்பதிற்காக சற்று கீழ் நோக்கி சென்றபோது தான் இந்த கருத்துக்களம் என்ற பகுதியை கண்டேன். அதன் கீழ் பலபெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன அதை பார்த்த போது எனக்கு சற்று புதுமையாக இருந்தது, உடனே எனது உள் மனம் என்னைத் தூண்டியது அதாவது உள்ளே போ என்ன இருக்கிறது என்பதை பார் என்று என்னை வற்புறுத்தியது நானும் அதன்படியே தமிழ்த்தங்கை என்ற பெயரை அழுத்தி உள்ளே சென்ற போது பல அதிர்சிகள் காத்திருந்தன, அன்றே நானும் ஒரு அங்கத்தவராக இணைந்து கொண்டேன். நான் இந்த தளத்தில் இணைந்ததிற்கும் பல ஆக்கங்களை பதிவதிற்கும் அறிந்தோ அறியாமலோ காரணமாகவிருந்த தமிழ்த்தங்கையிற்கும் எனது பதிவை தமிழில் பதிவு செய்வதிற்கு திண்டாடிய போது உதவிய ஆதிவாசிக்கும் எனது நண்றியை தெரிவிப்பதுடன் இந்த தளத்தின் சிறப்பைப் பற்றி அறிவதிற்கு இவ்வளவு காலம் தாமதித்ததிற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Edited by Valvai Mainthan

ஒன்பதாவது அகவையில் கால் பதிக்கும் யாழ் களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பதாவது அகவையைக் காணும் யாழ்களத்திற்கு எனது வாழ்த்துக்கள்.உறவுகளே நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து யாழை இன்னும் பல ஆண்டுகள் வாழ வைப்போம்.

மன்னிக்கவேண்டும் நண்பா

நாம் வளர்ந்த களம் என்றே வைத்துக்கொள்வோம்.

குறிப்பு

நானும் இந்த களத்திலேதான் வெளி உலகையே பார்த்தவன் என்ற முறையில் கூறினேன். தவறிற்கு மன்னிப்புடன்.....

QUOTE(Paranee @ Mar 20 2007, 03:27 PM)

நான' வள'ர்ந'த களம'. 9 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப'பது மகிழ'ச'சி. மென்மேலும் பல ஆண்டுகாலம் சேவையாற்ற வேண்டும் எனவும் இதனை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நன்றி

நான் என்பதிலும் நாம் என்பதே பொருத்தமாக இருக்கும் பரணீதரன் அண்ணா அவர்களே..! காரணம் யாழை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரிய மோகன் மற்றும் யாழ் (சுரதா யாழ் வானன்) போன்ற பெரியவர்களே நான் வளர்த்த களம் என்று சொல்லமாட்டார்கள். யாழ் வளர்ந்ததே யாழில் இருந்த, இருக்கும் ஒவ்வொருவருராலும் தான்..! அது தொடர வேண்டும். நான் என்று ஒருவருக்குள் அது அடக்கப்பட முடியாது என்பதே எம் கருத்து..! யாழின் பழைய நண்பர்கள் பலரிடம் அறிந்த விடயங்களை வைத்து இதைக் குறிப்பிடுகின்றோம்..! குறையாக அல்ல..! எல்லோருக்கும்... நிறைவாக.. அமைய..!

  • கருத்துக்கள உறவுகள்

9 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழ்களத்திற்கு புத்தனின் வாழ்த்துகள்.

குளியல் அறையில் உருவான எனது கருத்துகளை எழுதுவதற்கு வாய்ப்பு தந்த

யாழ்களத்திற்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்,இப்படியான ஒரு சந்தர்ப்பம் தார களத்தை எவரும் குழப்பமாட்டார்கள்.வாழ்க வளர்க.

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.