Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் மட்டுமல்லாது முகநூல்களிலும் முஸ்லிம் இன மக்களுக்கு கண்டியில் நடக்கும் கொடுமைகளுக்காக தமிழர்கள் மகிழ்ந்து கருத்துக்களை எழுதுகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது நாம் எவ்வளவு துடித்தோம். இன்றுவரை அதிலிருந்து மீள முடியாதவாறு எம்மினம் சீரழிந்தபடி வடுக்கள் சுமந்து எம்மினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தற்போது முஸ்லிம் இன மக்களுக்கு நடக்கும் கொடுமை எம்மவர்க்கும் தொடராது என்பது என்ன நிட்சயம்.???????

அவர்கள் எப்போதும் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கட்டும், தமிழர்கள் அழிவைக் கண்டு மகிந்தவர்களாக இருக்கட்டும். நாமும் இப்போது அவர்களைப் போல்த்தானே நடந்துகொள்கிறோம். அவர்கள் அப்படித் துவேசத்துடன்  நடந்து கொள்வதற்கு நாமும் ஒருவகையில் காரணம் தானே.

மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரையை உணவுடன்  கலக்கின்றார்கள் என்ற குற்றசாட்டு கூட உண்மையாக இருக்க முடியாது என்பது எமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஏனெனில் உங்களுக்கே தெரியும் பொருளாதார நலன்களை மட்டும் கருதி எம் தமிழர்கள் இரண்டு மூன்று குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை. போரின் பின்னால் இலங்கை அரசு பல தமிழ்ப் பெண்களுக்கு குழந்தைகள் பெற முடியாதவாறு கற்பத்தடை  செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் உண்மை உண்டு.  அதற்காக நாம் எப்போதாவது எதிர்க் குரல் கொடுத்திருக்கிறோமா ?????

சரி அங்கு தான் கர்ப்பத்தடை, மலட்டுத்தன்மை என்று பார்த்தால் இங்கு யார் மருந்து மாத்திரைகளை உணவுடன் கலந்து கொடுத்தார்கள்.?????  புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் வைத்திருக்கும் வாகனத்துக்கு அளவாகவே குழந்தைகளைப் பெறுகின்றனர் தமிழர்கள்.

ஆண்களாக நீங்கள் எதையும் பார்த்து எழுதலாம் சிரிக்கலாம். இப்படியான அவலங்கள் நடக்கும் போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதனால் எனக்கு இதை இங்கு எழுத வேண்டும் போல் இருந்தது.

மற்றவர் துன்பம் கண்டு அவர்களுக்கு நாம் உதவவேண்டாம். ஆனால் குதூகலம் கொள்ளாது, மகிந்து வசை பாடாது இருக்கலாமே உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் திரைப்படத்தில் ஓர் ந்கைச்சுவை காட்சி வருகிறதென்றால் சிரித்து விட்டு போவதும் துக்கமான காட்சி வருவதென்றால் சோகமாக இருந்தூ விட்டு வ்போவது வழமைதான் மேடம் இதுவரை அழிவுகளை சந்தித்திராத இனம் மூன்று நாளை அடிக்கு அல்லல்படுது நாம் 30 வருட அடி பட்டிருக்கம் அதுவரைக்கும் அடிபடாமல் அவல் இடிச்ச சனம் தான் அவர்கள் பேரினவாதம் என்றால் என்ன இழப்புக்கள் என்றால் என்ன உறவுகள் இழப்புக்கள்  என்றால் என்ன அனுபவிக்க வேண்டாமா நோகமல் நொங்கு தின்றவர்கள் அவர்கள் 30 வருடம்

கிழக்கில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அப்போது படம் பிடித்த ஓர் செய்தியாளன் தமிழன் அவனை போட்டு ஒட்டு மொத்த முஸ்லீம்களும் அடித்தார்கள் அடித்தது இல்லாமல் டேய் சிங்களவன் காட்டுவது போல உங்களது கோவணத்தை தமிழர்கள் எங்களிடம் காட்டினால் இது தான் நடக்கும் என மட்டக்களப்பு ஆஸ்பத்திரில் ஆளை அட்மிட் செய்தார்கள் 

உங்களுக்கு கிழக்கு முஸ்லீம்களையும் அவர்கள் செய்த அட்டூழியங்களையும் பார்க்க வில்லை போல அனுபவிக்க போல் தெரிகிறது குறிப்பாக யாழ் ( வன்னி) மக்கள் எல்லாம் இன்னும் அனுதாபிகளாக இருக்கிறீர்கள் போல தெரிகிரது எங்களுக்கு ப்ழகி போன ஒன்று கிழக்கை பொறுத்த வரைக்கும்  சும்மா புதினம் பாருங்க 

வட் நாங்களும் மனிதர்கள்தான் கலவரங்களில் அவர்களும் மனிதர்கள்தான் கலவரங்களில் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றவர் துன்பம் கண்டு அவர்களுக்கு நாம் உதவவேண்டாம். ஆனால் குதூகலம் கொள்ளாது, மகிந்து வசை பாடாது இருக்கலாமே உறவுகளே.

அக்கா,

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

முதலில் பின்புலத்தினை புரிந்து கொள்ளுங்கள்... தமிழர்கள் வீழ்ந்தபோது இவர்கள் கண்ணீர் விடவில்லை. சிங்களம், 1915 முதல் தமது பரம எதிரி என்பதனை மறந்து, தாம் தமிழ் மொழி பேசுவதனையும் மறந்து, நாம் தமிழர்கள் அல்ல, இஸ்லாமியர்கள் என்றார்களே.

ஹிஸ்புல்லாவின், தமிழர் நிலங்களை எப்படி மடக்கினேன் என்ற சுய தம்பட்ட அநியாய  வீடியோ பார்த்தீர்களா. அதுவே போதும் இவர்களது மனோ நிலைக்கு. சிங்களத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து, வடக்கு கிழக்கு இணைப்பே வேண்டாம் என்று ஒத்தக் காலில் நின்றாரே. இன்று சிங்களம் தாக்குதலை நிறுத்தாவிடில் தன் மீது தீ வைத்து பாராளுமன்றின் முன் மரிப்பேன் என்கிறாரே.

தமிழர்களின் சொத்துக்களை அடாவடியாக கிழக்கில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் அடியாட்கள் அபகரிக்க, எந்த வித உதவியும் இல்லாத நிலையில், இன்று கண்டியில் நின்று வன்முறைக்கு தூபம் போடும் அதே இனவாத மட்டக்கிளப்பு சுமண தேரர் இடம் போய், தீர்வை பெற வைத்தது ஏன்?

இந்த பசப்பு அரசியல் வாதிகள் மீதே நாம் கோபம் கொள்கிறோம் அன்றி, அல்லல்படும் முஸ்லீம் தமிழ் உறவுகள் மீது அல்ல. முஸ்லீம் மக்கள் அவர்களது அரசியல் வாதிகளின் சுஜநலத்தினால் தான் வீழ்ந்தார்கள். அன்றைய காரியப்பர் முதல் இன்றய ஹிஸ்புல்லா, அதாவுல்லா, றிசாட் வரை முழு சுஜநல வாதிகள். இவர்களது தம்நல மட்டும் மான அரசியல் தான் அவர்களை 'தொப்பி பிரட்டிகள்' என அன்றைய சிங்கள, தமிழ் சக அரசியல் வாதிகளை சொல்ல வைத்தது. (தொப்பி பிரட்டிகள்: தேர்தலில் ஜெயிக்கும் பக்கத்துக்கு, தொப்பியை மாத்தி போடுவது போல கும்பகர்ணம் அடித்து அமைச்சர் பதவிக்காக ஓடிப் போவது)

இந்த தாக்குதல்கள், அவர்களுக்கு ஒரு உண்மையை உணர்த்தி உள்ளது. தமிழ் பேசும் தமிழர்களாக இணையாவிடில் விடிவு இல்லை. அந்த வகையில் சிங்களவர்களுக்கு நன்றி. இனிமேல் பாருங்கள் அதே ஹிஸ்புல்லா, நாமும் தமிழர்களும், புட்டும், தேங்காய்ப்பூவும் என்று சொல்லிக் கொண்டு வருவார்.

அதே வேளை சிங்களவர்களின் பார்வையில் என்ன தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை வகித்தார்கள். அவர்கள் போனபின்னர், சிங்களவர்கள் தமிழர்களை வன்முறையில் வீழ்த்தினார்கள்.

தமிழர்க்கும் தமக்கும் இடையேயான மோதல்களில், தமிழர்கள் நாட்டினை விட்டு ஓடி, மேலை நாடுகளில் வசதியாக உள்ளனர். அவர்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி முஸ்லீம்கள், உள்நாட்டில் வசதியாக இருக்கின்றனர். நமது பெண்கள், ஆண்கள் மத்திய கிழக்குக்கு போய் அல்லல்பட, அங்கே எமது உழைப்பை சுரண்டும் ஷேக்குகள், இங்குள்ள முஸ்லீம் அரசியவாதிகளுடன் சேர்ந்து முஸ்லீம் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றனர்.

தமிழருடனான யுத்தம் முடிந்த பின்னர், திரும்பிப் பார்த்தால், அட, தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்டது.... இப்படியே போனால் எமது இருப்பே காலி என்று பிக்குகள் போதிக்கின்றனர். அதுவே இன்றய வன்முறைக்கு காரணம்.

மொத்தத்தில் பொறாமை தான் காரணம்.

Edited by Nathamuni

ஒரு கதை சொல்கின்றேன்

அத்தானின் முஸ்லிம் நண்பரின் குடும்பம் எம்முடன் நன்கு பழகுகின்றவர்கள். அவரது மனைவி எம் அம்மாவுடன் 'காசு மாறு' கின்ற அளவுக்கு நல்ல பழக்கம். அப் பெண்மணிக்கு உடம்பு சரியில்லை என்றால் ரசம் வைத்து கொண்டு போய் கொடுக்கும் அளவுக்கு அம்மாவுக்கு அவர் மேல் அக்கறை. 2009 மே மாதம் ஒரு நாள் அம்மாவுக்கு அப் பெண்மணி வீட்டை ஒருக்கால் வர முடியுமா என்று கேட்கின்றா...அம்மாவும் ஏதோ அவசரம் போல என்று அங்கு போனால், அவர்கள் கிரிபத் (பாற்சோறு) செய்து அம்மாவுக்கு பரிமாறுகின்றார்கள். புலிகளின் இறுதி நாள் தான் அந்த தினம். அம்மாவுக்கு அரசியல் பிரக்ஞை அவ்வளவாக இல்லையென்றாலும், தமிழர் தம் தோல்வியை இப்படி தன்னை அழைத்தே கொண்டாடி ஏளனப்படுத்துகின்றார்களே என்ற எரிச்சலில் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டார். அன்றுடன் அந்த நட்பு கட்.

இது ஒரு சாதாரண சம்பவம். யாரோ எங்கோ ஒருவர் செய்த ஒரு செயல் என்று விட்டு விடலாம். அல்லது தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது செய்த வன்முறைகளால் ஏற்பட்ட புறக்கணிக்க முடியாத வெறுப்பு தான் காரணம் என்று நியாயப்படுத்துவதை கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதன் பின் 2009 இன் பின் கிழக்கில் அவர்களால் செய்யப்பட்டு வரும் நில அகபரிப்பை எவ்வாறு விளங்கிக் கொள்வது சுமே?  கிழக்கிலும் மன்னாரிலும் தமிழர் வழிபடும் தெய்வ சிலைகளை உடைக்கும் செயல்களை எப்படி மன்னித்து விடுவது சுமே? ரிசாட் டின் ஆக்கள் முல்லைத்தீவின் கிராமங்களில் தமிழ் மக்கள் உருவாக்கி இருந்த தேக்கு மரக் சிறு காடுகளை எரித்து அழித்ததை எல்லாம் என்னவென்பது சுமே? சாய்ந்தமருதுவில் புதிய பிரதேச சபை அலகொன்றை ஏற்படுத்தி தாருங்கள் என்ற மக்களின் கோரிக்கையை 'அவ்வாறு செய்தால் கல்முனை வடக்கில் தமிழ் மக்களின் செல்வாக்கு அதிகரித்து விடும்' என்று வெளிப்படையாக எதிர்க்கும் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் செயலை எப்படி புரிந்து கொள்வது சுமே?

நான் மேலே சொல்லியவை எல்லாம் தமிழ் இயக்கங்கள் எதுவுமற்ற அல்லது ஆயுதப் போராட்டம் முடிந்து போன 2009 இன் பின் நிகழ்ந்தவை சுமே.

அமெரிக்கா ஏழை நாடுகளின் மீது தன் செல்வத்தை பயன்படுத்தி வளங்களை பெற்றுக் கொண்டால் அதை சுரண்டல் என்பர். அதையே அரேபிய நாடுகளில் இருந்து பள்ளிவாசல்களின் மூலம் பெறப்படும் பெருமளவு பணத்தை கொண்டு கிழக்கில் வாழும் ஏழை தமிழர்களின் நிலங்களை வாங்கினால் அதை வியாபாரம் என்கின்றனர். கிழக்கில் பல கரையோர தமிழ் கிராமங்கள் படிப்படியாக அரேபிய பணத்தால் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருவதை அறிந்து இருப்பீர்களா?

இவ்வளவும் நிகழும் போதும் கூட தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களின் கலவரத்தில் பங்காளிகளாக தம்மை ஈடுபடுத்தவில்லை. தமிழரால் ஒரு முஸ்லிமிம் சொத்து கூட அழிக்கப்படவில்லை. ஒரு சிறு காயம் கூட தமிழர்களால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் தமக்கு இவ்வளவு இன்னல்கள் தரும் ஒரு இனம் அடி வாங்குவதை பார்த்து சற்று மனம் மகிழ்ந்து கொள்கின்றது.   இது ஒரு தவறான செயல் என்றாலும் அது சட்டென நிகழ்ந்த தவறு அல்ல. அதுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக முஸ்லிம்களின் செயல்களும் உள்ளனவே சுமே..!?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றவர் துன்பம் கண்டு அவர்களுக்கு நாம் உதவவேண்டாம். ஆனால் குதூகலம் கொள்ளாது, மகிந்து வசை பாடாது இருக்கலாமே உறவுகளே.

நான் எங்கும் வசைபாடவில்லை.அந்த குணமும் என்னிடம் இல்லை.
ஆனால் என் மனம் தன்னையறியாமல் பூரிப்படைகின்றது.
புதிய இரத்தம் ஓடுவது போல் உடம்பு சிலிர்க்கின்றது.
ஏன்...ஏன்.....ஏன்....!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அமெரிக்கா ஏழை நாடுகளின் மீது தன் செல்வத்தை பயன்படுத்தி வளங்களை பெற்றுக் கொண்டால் அதை சுரண்டல் என்பர். அதையே அரேபிய நாடுகளில் இருந்து பள்ளிவாசல்களின் மூலம் பெறப்படும் பெருமளவு பணத்தை கொண்டு கிழக்கில் வாழும் ஏழை தமிழர்களின் நிலங்களை வாங்கினால் அதை வியாபாரம் என்கின்றனர். கிழக்கில் பல கரையோர தமிழ் கிராமங்கள் படிப்படியாக அரேபிய பணத்தால் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருவதை அறிந்து இருப்பீர்களா?

மிகவும் உண்மையான கருத்து. இவர்களுடைய நோக்கம் நிலங்களை வாங்கிக்கொண்டு தங்கள் ம‌க்கள் தொகையை அதிகரிப்பது

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஏன் ஏன்???? என்று கேள்வி கேட்பதை விட....
எதற்கு... சந்தோசப் படுகின்றார்கள்... என்று கேளுங்கள்.

இலங்கையின் முதல், இனக்   கலவரம்.
1915´ம் ஆண்டில்,   சிங்கள - முஸ்லிம்  கலவரம்.
அதனை... இங்கிலாந்து மட்டும், கொண்டு போய்.. சமாதானப் படுத்தியவர்கள்,
தமிழர்களான... சேர். பொன். இராமநாதன், அருணாசலம்  சகோதரர்கள்.
அப்படி... சமதானப் படுத்தாமல் விட்டு, இருந்தால்.... 
இன்று...  இலங்கையில்... ஒரு, முஸ்லீம் மக்களும் இருந்து, இருக்க மாட்டார்கள்.

அடுத்த... இனக் கலவரம்... 1958, 1977, 1983 - 2003. தமிழர் மீது நடத்தப்  பட்ட போது...
எந்த... முஸ்லீமாவது, எமக்கு அனுதாபப் பட்டானா ? 
சிங்களவன்... தமிழர் சொத்துக்களை எரித்தான்,  
முஸ்லீம்கள்.... தமிழர் சொத்துக்களை, "களவு" எடுத்துக் கொண்டு போனார்கள்.

நீங்கள்... இங்கிலாந்தில், வைத்திருக்கும் கடையிலேயே.....
ஒருத்தன்...  நெடுக வந்து,   "பியர்"  களவு எடுக்கின்றான்,  என்று நீங்கள் இங்கு வந்து, அழுத மாரி  இருக்கு.
இப்போ... அவர்களுக்கு,  அடி  விழும் போது....    
நாங்கள்.. சிரிப்பதா, அழுவதா... என்று தெரியாமல் இருக்கு. அக்கா....... 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அனுதாப பார்வை நன்று 90களில் கிழக்கிலங்கையில் நம்மவரின் பூர்வீக கிராமங்களை இதே முஸ்லீம் காடையர்கள் நம்மவரை சூறையாடும்போது அப்போது என்ன நிலைமையில் இருந்தீர்கள் என்பதை அறிய ஆவல் ?

இங்கு கனபேருக்கு யாழில் இருந்து முஸ்லீம் திரத்தபட்டபோதுதான் மனிதாபிமானம் பிச்சுக்கிட்டு வந்தது .

தாய் கொல்லப்படும்போது தமையன் அடித்து துரத்தின ஆட்களுக்கு ஆக தங்கை அழுத கதைக்கு ஒப்பானது தாய் எக்கேடு கெட்டாலும் எப்படி செத்தாலும் பரவாயில்லை .

 நாங்கள் அழியும்போது இதே கூட்டம் பால்சோறு குடுத்து நக்கிகொண்டு இருந்தது அப்போ இதே போல் உங்களால் அவர்களுக்கு மனிதாபிமானம் பற்றி வகுப்பு எடுக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களால் தமிழர்கள் அழிக்கப்படும்போது முஸ்லிம்கள் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்ததும் புலிகள் அழிக்கப்பட்டபோது மகிழ்ந்து கொண்டாடியதும் இப்போது முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது தமிழர்கள் மகிழ்வதும், இலங்கைத்தீவு முழுவதுமாக சிங்களமாகவே  மாற வழிவகுக்கும். 

ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒற்றுமையைப் பேணாமல் இருப்பதற்கு “மோட்டுச்” சிங்களவன் தேவையான பிரித்தாளும் தந்திரங்களை ஏற்கனவே வழிவகுத்துவிட்டான்.

அக்கா மனோ கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்தை ஒருக்கா எட்டி பாருங்கள் 

தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு மகிழ்ந்ததாக ஒரு வரலாற்றை பதிவு செய்வதால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம். அன்று தமிழர்களை வதம் செய்யும் போது இஸ்லாமியர்கள் மகிழ்ந்தார்கள் என்பதால் இன்று தமிழர்கள் மகிழ்வதாக இருந்தால் இருவரும் எதிரிகள் என்றே முடிவுசெய்யப்படுகின்றது. ஏற்கனவே எதிரி போல்தான் இருக்கின்றறோம். யாழில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதும் சரி காத்தான் குடி படுகொலையானாலும் சரி அதே போல் இஸ்லாமியர்கள் கிழக்கில் சிங்களத்துக்கு நிகராக தமிழர்களை வதம் செய்துள்ளனர். தமிழர்களின் வாழ்விடங்களை சூறையாடியுள்ளனர். இலங்கை புலனாய்வுத்துறையுடன் இஸ்லாமியர்கள் இணைந்து செய்த கொடுமைகள் ஒரு தனி வரலாறு. அறிவுள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான சிங்கள பேரினவாத வன்முறைகளை பயன்படுத்தி இனமாக ஐக்கியப்படுவோம் ஆனால் அறிவு ஆகக் கூடியவர்களாக இருந்பதால் மேலும் பகையை விதைக்கின்றோம். விதி வலியது. 

இவ்வுலகில் மதம் என்ற ஒரு நம்பிக்கை சார்ந்த பொது உணர்வை தனது இனம், சமூகம், பொருளாதார பலத்திற்கு பயன்படுத்திக்கொண்டவர்களே சக்திமிக்கவர்கள். வெறுமனே மதம் கடவுளை உண்மையென நம்பி தொங்கிக்கொண்டிருப்பவர்கள் சக்திமிக்கவர்களால் வேட்டையாடப்படுவார்கள். உலகின் நகர்வு இவ்வாறு தான் உள்ளது. சிங்களம் இஸ்லாமியர்களை கொன்றலும் சரி சிரியாவில் ரசியா கொன்றாலும் சரி ஆப்கான் ஈராக்கில் அமெரிக்கா கொன்றதானாலும் யாரையும் அல்லா காப்பாற்றியதில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் சிங்களம் கென்று குவித்த போது எந்த அம்மனும் சிவனும் பிள்ளையாரும் வந்து தடுத்ததும் இல்லை. சென்பீற்றஸ் தேவாலயத்தில் குண்டு போட்டு கொன்றபோது மாதவந்து தடுத்ததும் இல்லை. கத்தி குளறி மரண பீதியில் ஓலமிட்டாலும்  மதம் மதத்தின் பின்னணியில் உள்ள கடவுள்களால் எதையும் செய்ய முடியாது. அது ஒரு நம்பிக்கை தவிர உண்மை கிடையாது. உண்மை என்று நம்புகின்றவர்கள் அழிவதும் தவிர்க்க முடியாதது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சண்டமாருதன் said:

அண்மையில் சிரியாவுக்காக இரங்கினோம், என்ன காரணம்? அவர்களுக்கும் எமக்கும் ஒரு தொடர்பும் இல்லையே.... தமிழகத்தில் கூட ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததே.

அதுதான் மனிதாபிமானம். நாமும் அந்த அவலத்தினை அனுபவித்தோமே என்ற தவிப்பு.

முள்ளிவாய்க்காலில் அந்த கொடூரம் நிகந்த போது, லண்டனிலும், டொரோண்டோவிலும், சிட்னியிலும் நாம் பரிதவித்து போராடினோமா... அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் இவர்கள், அதாவது இப்போது வன்முறைகளுக்கு முகம் கொடுப்பவர்கள். ஒரு அறிக்கை, ஒரு சிறு கவலை வரவில்லையே. மாறாக பால் சோறு பொங்கி கொண்டாடவில்லையா.

எரிகின்ற வீட்டில் புடுக்குகிறது லாபம் என்பது போல, யுத்தகாலத்தில், கிழக்கில் தமிழ் காணிகளை அபகரித்தல், அதற்க்கான கொலைகள் எல்லாம் யுத்தக் கணக்கில் சேரும் சேரும் என்ற பாங்கில் நடத்தி முடிக்கப்படவில்லையா.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு சிறு துளி கூட இந்த வன்முறையில் இல்லையே. இந்த நிலைக்கு காரணம் என்ன, சிங்கள ஓட்டுநர் ஒருவரின் கொலை. வினை விதைத்தால், அறுக்கத்தானே வேண்டும்.

சிங்களத்தின் பேரினவாதம் தம்மை 1915ல் தாக்கியது, பின்னர் தமிழரை பலமுறை தாக்கியது. இறுதியாக 2009ல் தாக்கிய போது.... மீண்டும் எம்மை தாக்கும் என்ற பட்டறிவு இல்லாமல் போனதேன்.

சிங்களத்தினை அதீதமாக நம்பி, வடக்கு கிழக்கு இணைப்பே வேண்டாம் என்று சில முஸ்லீம் அரசியல் வாதிகள் கூறினர். இன்று தாம் பெரும்பான்மையாக வாழ்வதாக நினைத்த அம்பாறை மாவடட, அம்பாறை நகரில் அவர்களை துடைத்து எறிந்திருக்கிறது சிங்களம்.

அது மட்டுமா, கண்டியில் இனி பயமின்றி வியாபாரம் செய்ய முடியாத நிலை. 

காரணம்... அதீத நம்பிக்கை... நாம் தமிழ் பேசினாலும் தமிழர் இல்லை என்ற நிலைப்பாடு. அது யுத்த காலத்துடன் முடிந்து விட்டது... இப்போது புரியவைக்கப்பட்டுள்ளது.... நீங்கள் முஸ்லிம்கள் ஆனாலும் தமிழர்கள்... இன்னும் புரியாவிடில்... வடக்கும் இல்லை. தெற்கும் இல்லை.
 
என்னதான் இருந்தாலும் மதம் என்கின்ற பெயரில் அவர்களின் ஒற்றுமை அவர்களின் மிகப்பெரிய பலம் பாதிக்கப்பட்டோரிற்காக கிராம்ம் கிராம்மாக நிவாரணம்கள் சேர்க்க தொடங்கிவிட்டார்கள் அக்கரைப்பற்றிலுள்ள ? ஒருகிராமத்திலிருந்து மட்டும் 33 லட்சம் சேர்ந்திருக்கிறது 

அவர்கள் சிங்களவனிற்கு எமது பலம் என்ன என்று காட்டுவோம் என எழுதுகிறார்கள் 

6 hours ago, Nathamuni said:

நீங்கள்சொல்லும் எதையும் மறுப்பதற்கில்லை. அவைகளை சுட்டிக்காட்டுவதிலும் தவறில்லை. ஆனால் நாம் மகிழ்வதற்கு எதுவும் இல்லை என்பதையே சொல்ல முற்பட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழுசையோ கொலையோ அவர்கள் பிரச்சினை இல்லை அவர்களுக்கு பிரச்சனை முஸ்லீம்களை அடக்க வேண்டும் அவர்கள் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் ( முஸ்லீம்களோ) இவர்களோ  தமிழர்கள் அடங்கி விட்டார்கள் அடக்கி விட்டார்கள் நாம் தான் அரசாங்கத்துடன் கட்சி மாறும் போதெல்லாம் ஒத்து ஊதுறமே நமக்கு ஒன்றும் நட்க்காது என்று இருந்தவர்கள் இன்று நட்ந்துவிட்டது இனி அடக்கி வாசிப்பார்கள் கலவரம் வரும் என்ற பயத்தில்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

ஒருகிராமத்திலிருந்து மட்டும் 33 லட்சம் சேர்ந்திருக்கிறது 

அப்படி விழுந்த காசில் அவர்கள் என்ன குண்டா வேண்டபோகிரரார்கள் வடக்கில முக்கியமான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதுக்கு உபயோகிக்கபோகிணம் அவ்வளவே சிலவேளை நல்லூர் சுத்து வட்டாரம் அவர்களின் குறியாய் இருக்கலாம் இம்முறை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

அப்படி விழுந்த காசில் அவர்கள் என்ன குண்டா வேண்டபோகிரரார்கள் வடக்கில முக்கியமான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதுக்கு உபயோகிக்கபோகிணம் அவ்வளவே சிலவேளை நல்லூர் சுத்து வட்டாரம் அவர்களின் குறியாய் இருக்கலாம் இம்முறை .

********.....தங்களுக்கு ஏதும் நடந்தால் தட்டிக்கேட்க கன நாடுகள் இருக்கெண்ட தடிப்பு,தலைக்கனம் அந்தக்காலத்திலிருந்தே இருக்குது.
அது சரி சிலோனிலை இருக்கிற முஸ்லீம்கள் சியாவா  சன்னியா?

Edited by நியானி
தணிக்கை

14 hours ago, பெருமாள் said:

அப்படி விழுந்த காசில் அவர்கள் என்ன குண்டா வேண்டபோகிரரார்கள் வடக்கில முக்கியமான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதுக்கு உபயோகிக்கபோகிணம் அவ்வளவே சிலவேளை நல்லூர் சுத்து வட்டாரம் அவர்களின் குறியாய் இருக்கலாம் இம்முறை .

உங்களை பொறுத்த வரை குண்டு வாங்குதல் அல்லது வேறு வகை ஆயுதங்களால் தாக்குதல் தான் பழிவாங்கல் என நினைக்கிறீர்கள், அவர்கள் அழிக்க நினைத்தவன் முன்னால் தன இனத்தை முன்னரிலும் சிறப்பாக வாழவைத்தல் தான் மிகச்சிறந்த பழி வாங்கல் என நினைக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

********.....தங்களுக்கு ஏதும் நடந்தால் தட்டிக்கேட்க கன நாடுகள் இருக்கெண்ட தடிப்பு,தலைக்கனம் அந்தக்காலத்திலிருந்தே இருக்குது.
அது சரி சிலோனிலை இருக்கிற முஸ்லீம்கள் சியாவா  சன்னியா?

சியாவும் கிடையாது சன்னியும் கிடையாது   ஆசியாவின் இரண்டாவது ரோஹிங்ய என்று சொல்லலாம் .     முஸ்லீம் உலகு பலதரபட்ட பிரச்சனைகளில் இருந்து தாங்கள் மீளவே நேரம் காணாது தவிக்கினம் இதுக்குள்ள இவைட பிரச்சனைக்கு அரபு நாடுகள் குதிச்சு ஓடி வந்து இவைகளை காப்பாற்றுவினம் என்று வாய்சவுடால் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 09/03/2018 at 12:40 PM, தனிக்காட்டு ராஜா said:

ஓர் திரைப்படத்தில் ஓர் ந்கைச்சுவை காட்சி வருகிறதென்றால் சிரித்து விட்டு போவதும் துக்கமான காட்சி வருவதென்றால் சோகமாக இருந்தூ விட்டு வ்போவது வழமைதான் மேடம் இதுவரை அழிவுகளை சந்தித்திராத இனம் மூன்று நாளை அடிக்கு அல்லல்படுது நாம் 30 வருட அடி பட்டிருக்கம் அதுவரைக்கும் அடிபடாமல் அவல் இடிச்ச சனம் தான் அவர்கள் பேரினவாதம் என்றால் என்ன இழப்புக்கள் என்றால் என்ன உறவுகள் இழப்புக்கள்  என்றால் என்ன அனுபவிக்க வேண்டாமா நோகமல் நொங்கு தின்றவர்கள் அவர்கள் 30 வருடம்

கிழக்கில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அப்போது படம் பிடித்த ஓர் செய்தியாளன் தமிழன் அவனை போட்டு ஒட்டு மொத்த முஸ்லீம்களும் அடித்தார்கள் அடித்தது இல்லாமல் டேய் சிங்களவன் காட்டுவது போல உங்களது கோவணத்தை தமிழர்கள் எங்களிடம் காட்டினால் இது தான் நடக்கும் என மட்டக்களப்பு ஆஸ்பத்திரில் ஆளை அட்மிட் செய்தார்கள் 

உங்களுக்கு கிழக்கு முஸ்லீம்களையும் அவர்கள் செய்த அட்டூழியங்களையும் பார்க்க வில்லை போல அனுபவிக்க போல் தெரிகிறது குறிப்பாக யாழ் ( வன்னி) மக்கள் எல்லாம் இன்னும் அனுதாபிகளாக இருக்கிறீர்கள் போல தெரிகிரது எங்களுக்கு ப்ழகி போன ஒன்று கிழக்கை பொறுத்த வரைக்கும்  சும்மா புதினம் பாருங்க 

வட் நாங்களும் மனிதர்கள்தான் கலவரங்களில் அவர்களும் மனிதர்கள்தான் கலவரங்களில் :104_point_left:

உண்மையில் எனக்கு முஸ்லிம் இனத்தவர்களுடன் பெரிதாகப் பழக்கம் இல்லை. அவர்கள் செய்தவை எல்லாம் தெரியாது. ஆனாலும் எனக்கு மகிழ முடியவில்லை.

On 09/03/2018 at 12:41 PM, Nathamuni said:

அக்கா,

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

முதலில் பின்புலத்தினை புரிந்து கொள்ளுங்கள்... தமிழர்கள் வீழ்ந்தபோது இவர்கள் கண்ணீர் விடவில்லை. சிங்களம், 1915 முதல் தமது பரம எதிரி என்பதனை மறந்து, தாம் தமிழ் மொழி பேசுவதனையும் மறந்து, நாம் தமிழர்கள் அல்ல, இஸ்லாமியர்கள் என்றார்களே.

ஹிஸ்புல்லாவின், தமிழர் நிலங்களை எப்படி மடக்கினேன் என்ற சுய தம்பட்ட அநியாய  வீடியோ பார்த்தீர்களா. அதுவே போதும் இவர்களது மனோ நிலைக்கு. சிங்களத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து, வடக்கு கிழக்கு இணைப்பே வேண்டாம் என்று ஒத்தக் காலில் நின்றாரே. இன்று சிங்களம் தாக்குதலை நிறுத்தாவிடில் தன் மீது தீ வைத்து பாராளுமன்றின் முன் மரிப்பேன் என்கிறாரே.

தமிழர்களின் சொத்துக்களை அடாவடியாக கிழக்கில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் அடியாட்கள் அபகரிக்க, எந்த வித உதவியும் இல்லாத நிலையில், இன்று கண்டியில் நின்று வன்முறைக்கு தூபம் போடும் அதே இனவாத மட்டக்கிளப்பு சுமண தேரர் இடம் போய், தீர்வை பெற வைத்தது ஏன்?

இந்த பசப்பு அரசியல் வாதிகள் மீதே நாம் கோபம் கொள்கிறோம் அன்றி, அல்லல்படும் முஸ்லீம் தமிழ் உறவுகள் மீது அல்ல. முஸ்லீம் மக்கள் அவர்களது அரசியல் வாதிகளின் சுஜநலத்தினால் தான் வீழ்ந்தார்கள். அன்றைய காரியப்பர் முதல் இன்றய ஹிஸ்புல்லா, அதாவுல்லா, றிசாட் வரை முழு சுஜநல வாதிகள். இவர்களது தம்நல மட்டும் மான அரசியல் தான் அவர்களை 'தொப்பி பிரட்டிகள்' என அன்றைய சிங்கள, தமிழ் சக அரசியல் வாதிகளை சொல்ல வைத்தது. (தொப்பி பிரட்டிகள்: தேர்தலில் ஜெயிக்கும் பக்கத்துக்கு, தொப்பியை மாத்தி போடுவது போல கும்பகர்ணம் அடித்து அமைச்சர் பதவிக்காக ஓடிப் போவது)

இந்த தாக்குதல்கள், அவர்களுக்கு ஒரு உண்மையை உணர்த்தி உள்ளது. தமிழ் பேசும் தமிழர்களாக இணையாவிடில் விடிவு இல்லை. அந்த வகையில் சிங்களவர்களுக்கு நன்றி. இனிமேல் பாருங்கள் அதே ஹிஸ்புல்லா, நாமும் தமிழர்களும், புட்டும், தேங்காய்ப்பூவும் என்று சொல்லிக் கொண்டு வருவார்.

அதே வேளை சிங்களவர்களின் பார்வையில் என்ன தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை வகித்தார்கள். அவர்கள் போனபின்னர், சிங்களவர்கள் தமிழர்களை வன்முறையில் வீழ்த்தினார்கள்.

தமிழர்க்கும் தமக்கும் இடையேயான மோதல்களில், தமிழர்கள் நாட்டினை விட்டு ஓடி, மேலை நாடுகளில் வசதியாக உள்ளனர். அவர்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி முஸ்லீம்கள், உள்நாட்டில் வசதியாக இருக்கின்றனர். நமது பெண்கள், ஆண்கள் மத்திய கிழக்குக்கு போய் அல்லல்பட, அங்கே எமது உழைப்பை சுரண்டும் ஷேக்குகள், இங்குள்ள முஸ்லீம் அரசியவாதிகளுடன் சேர்ந்து முஸ்லீம் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றனர்.

தமிழருடனான யுத்தம் முடிந்த பின்னர், திரும்பிப் பார்த்தால், அட, தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்டது.... இப்படியே போனால் எமது இருப்பே காலி என்று பிக்குகள் போதிக்கின்றனர். அதுவே இன்றய வன்முறைக்கு காரணம்.

மொத்தத்தில் பொறாமை தான் காரணம்.

அவர்களுக்கு நடப்பதைப் பார்த்து நீங்கள் அவர்களுக்குக் குரல் கொடுங்கள் என்று சொல்லவில்லை. முஸ்லிம் இனத்தவர் எம் நிலங்களைச் சுரண்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழர்கள் தானே. அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On 09/03/2018 at 2:38 PM, நிழலி said:

ஒரு கதை சொல்கின்றேன்

அத்தானின் முஸ்லிம் நண்பரின் குடும்பம் எம்முடன் நன்கு பழகுகின்றவர்கள். அவரது மனைவி எம் அம்மாவுடன் 'காசு மாறு' கின்ற அளவுக்கு நல்ல பழக்கம். அப் பெண்மணிக்கு உடம்பு சரியில்லை என்றால் ரசம் வைத்து கொண்டு போய் கொடுக்கும் அளவுக்கு அம்மாவுக்கு அவர் மேல் அக்கறை. 2009 மே மாதம் ஒரு நாள் அம்மாவுக்கு அப் பெண்மணி வீட்டை ஒருக்கால் வர முடியுமா என்று கேட்கின்றா...அம்மாவும் ஏதோ அவசரம் போல என்று அங்கு போனால், அவர்கள் கிரிபத் (பாற்சோறு) செய்து அம்மாவுக்கு பரிமாறுகின்றார்கள். புலிகளின் இறுதி நாள் தான் அந்த தினம். அம்மாவுக்கு அரசியல் பிரக்ஞை அவ்வளவாக இல்லையென்றாலும், தமிழர் தம் தோல்வியை இப்படி தன்னை அழைத்தே கொண்டாடி ஏளனப்படுத்துகின்றார்களே என்ற எரிச்சலில் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டார். அன்றுடன் அந்த நட்பு கட்.

இது ஒரு சாதாரண சம்பவம். யாரோ எங்கோ ஒருவர் செய்த ஒரு செயல் என்று விட்டு விடலாம். அல்லது தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது செய்த வன்முறைகளால் ஏற்பட்ட புறக்கணிக்க முடியாத வெறுப்பு தான் காரணம் என்று நியாயப்படுத்துவதை கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதன் பின் 2009 இன் பின் கிழக்கில் அவர்களால் செய்யப்பட்டு வரும் நில அகபரிப்பை எவ்வாறு விளங்கிக் கொள்வது சுமே?  கிழக்கிலும் மன்னாரிலும் தமிழர் வழிபடும் தெய்வ சிலைகளை உடைக்கும் செயல்களை எப்படி மன்னித்து விடுவது சுமே? ரிசாட் டின் ஆக்கள் முல்லைத்தீவின் கிராமங்களில் தமிழ் மக்கள் உருவாக்கி இருந்த தேக்கு மரக் சிறு காடுகளை எரித்து அழித்ததை எல்லாம் என்னவென்பது சுமே? சாய்ந்தமருதுவில் புதிய பிரதேச சபை அலகொன்றை ஏற்படுத்தி தாருங்கள் என்ற மக்களின் கோரிக்கையை 'அவ்வாறு செய்தால் கல்முனை வடக்கில் தமிழ் மக்களின் செல்வாக்கு அதிகரித்து விடும்' என்று வெளிப்படையாக எதிர்க்கும் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் செயலை எப்படி புரிந்து கொள்வது சுமே?

நான் மேலே சொல்லியவை எல்லாம் தமிழ் இயக்கங்கள் எதுவுமற்ற அல்லது ஆயுதப் போராட்டம் முடிந்து போன 2009 இன் பின் நிகழ்ந்தவை சுமே.

அமெரிக்கா ஏழை நாடுகளின் மீது தன் செல்வத்தை பயன்படுத்தி வளங்களை பெற்றுக் கொண்டால் அதை சுரண்டல் என்பர். அதையே அரேபிய நாடுகளில் இருந்து பள்ளிவாசல்களின் மூலம் பெறப்படும் பெருமளவு பணத்தை கொண்டு கிழக்கில் வாழும் ஏழை தமிழர்களின் நிலங்களை வாங்கினால் அதை வியாபாரம் என்கின்றனர். கிழக்கில் பல கரையோர தமிழ் கிராமங்கள் படிப்படியாக அரேபிய பணத்தால் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருவதை அறிந்து இருப்பீர்களா?

இவ்வளவும் நிகழும் போதும் கூட தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களின் கலவரத்தில் பங்காளிகளாக தம்மை ஈடுபடுத்தவில்லை. தமிழரால் ஒரு முஸ்லிமிம் சொத்து கூட அழிக்கப்படவில்லை. ஒரு சிறு காயம் கூட தமிழர்களால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் தமக்கு இவ்வளவு இன்னல்கள் தரும் ஒரு இனம் அடி வாங்குவதை பார்த்து சற்று மனம் மகிழ்ந்து கொள்கின்றது.   இது ஒரு தவறான செயல் என்றாலும் அது சட்டென நிகழ்ந்த தவறு அல்ல. அதுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக முஸ்லிம்களின் செயல்களும் உள்ளனவே சுமே..!?

இதனை இருக்கிறதா.??? ஆனாலும் புலிகள் இருந்த காலத்திலேயே கரையோரப் பிரதேசங்களில் எல்லாம் முஸ்லிம்கள் காணிகளை வாங்குகின்றனர். வெளிநாட்டில் உள்ளவர்கள் அவற்றை வாங்குங்கள் என்று கூறினரே. யாராவது வாங்கினார்களா??? எல்லோரும் தன் தன் நலனைத்தான் பார்த்தோமே ஒழிய பொதுநலனின் அக்கறையற்றவர்களாகவே இருந்திருக்கிறோம். அவர்களை மட்டும்குறை கூறிப் பயனில்லை நிழலி.

On 09/03/2018 at 3:10 PM, குமாரசாமி said:

நான் எங்கும் வசைபாடவில்லை.அந்த குணமும் என்னிடம் இல்லை.
ஆனால் என் மனம் தன்னையறியாமல் பூரிப்படைகின்றது.
புதிய இரத்தம் ஓடுவது போல் உடம்பு சிலிர்க்கின்றது.
ஏன்...ஏன்.....ஏன்....!!!!!!!!

என்னைக் கேட்டா ????

On 09/03/2018 at 4:31 PM, colomban said:
On 09/03/2018 at 2:38 PM, நிழலி said:

அமெரிக்கா ஏழை நாடுகளின் மீது தன் செல்வத்தை பயன்படுத்தி வளங்களை பெற்றுக் கொண்டால் அதை சுரண்டல் என்பர். அதையே அரேபிய நாடுகளில் இருந்து பள்ளிவாசல்களின் மூலம் பெறப்படும் பெருமளவு பணத்தை கொண்டு கிழக்கில் வாழும் ஏழை தமிழர்களின் நிலங்களை வாங்கினால் அதை வியாபாரம் என்கின்றனர். கிழக்கில் பல கரையோர தமிழ் கிராமங்கள் படிப்படியாக அரேபிய பணத்தால் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருவதை அறிந்து இருப்பீர்களா?

மிகவும் உண்மையான கருத்து. இவர்களுடைய நோக்கம் நிலங்களை வாங்கிக்கொண்டு தங்கள் ம‌க்கள் தொகையை அதிகரிப்பது

எங்களால் சாதாரணமாகச் செய்யக்கூடிய மக்கள் தொகையையே பெருக்க முடியவில்லை. இதற்கும் அவர்களா காரணம் ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 09/03/2018 at 8:54 PM, தமிழ் சிறி said:

ஏன் ஏன் ஏன்???? என்று கேள்வி கேட்பதை விட....
எதற்கு... சந்தோசப் படுகின்றார்கள்... என்று கேளுங்கள்.

இலங்கையின் முதல், இனக்   கலவரம்.
1915´ம் ஆண்டில்,   சிங்கள - முஸ்லிம்  கலவரம்.
அதனை... இங்கிலாந்து மட்டும், கொண்டு போய்.. சமாதானப் படுத்தியவர்கள்,
தமிழர்களான... சேர். பொன். இராமநாதன், அருணாசலம்  சகோதரர்கள்.
அப்படி... சமதானப் படுத்தாமல் விட்டு, இருந்தால்.... 
இன்று...  இலங்கையில்... ஒரு, முஸ்லீம் மக்களும் இருந்து, இருக்க மாட்டார்கள்.

அடுத்த... இனக் கலவரம்... 1958, 1977, 1983 - 2003. தமிழர் மீது நடத்தப்  பட்ட போது...
எந்த... முஸ்லீமாவது, எமக்கு அனுதாபப் பட்டானா ? 
சிங்களவன்... தமிழர் சொத்துக்களை எரித்தான்,  
முஸ்லீம்கள்.... தமிழர் சொத்துக்களை, "களவு" எடுத்துக் கொண்டு போனார்கள்.

எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் புலிகள் ஓட்டுமொத்தமாக அவர்களை வெளியேற்றினார்களே??? இராமநாதனும் அருநாச்சலமும் இல்லாவிட்டாலும் அவர்கள் தப்பிப் பிழைத்து இருந்திருப்பார்கள் தான்.

On 10/03/2018 at 6:52 AM, பெருமாள் said:

உங்களின் அனுதாப பார்வை நன்று 90களில் கிழக்கிலங்கையில் நம்மவரின் பூர்வீக கிராமங்களை இதே முஸ்லீம் காடையர்கள் நம்மவரை சூறையாடும்போது அப்போது என்ன நிலைமையில் இருந்தீர்கள் என்பதை அறிய ஆவல் ?

இங்கு கனபேருக்கு யாழில் இருந்து முஸ்லீம் திரத்தபட்டபோதுதான் மனிதாபிமானம் பிச்சுக்கிட்டு வந்தது .

தாய் கொல்லப்படும்போது தமையன் அடித்து துரத்தின ஆட்களுக்கு ஆக தங்கை அழுத கதைக்கு ஒப்பானது தாய் எக்கேடு கெட்டாலும் எப்படி செத்தாலும் பரவாயில்லை .

 நாங்கள் அழியும்போது இதே கூட்டம் பால்சோறு குடுத்து நக்கிகொண்டு இருந்தது அப்போ இதே போல் உங்களால் அவர்களுக்கு மனிதாபிமானம் பற்றி வகுப்பு எடுக்க முடியுமா ?

அவர்கள் செய்வதையே நாம் செய்தால் அவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசமிருக்கப் போகிறது. ????

On 10/03/2018 at 8:19 AM, கிருபன் said:

சிங்களவர்களால் தமிழர்கள் அழிக்கப்படும்போது முஸ்லிம்கள் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்ததும் புலிகள் அழிக்கப்பட்டபோது மகிழ்ந்து கொண்டாடியதும் இப்போது முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது தமிழர்கள் மகிழ்வதும், இலங்கைத்தீவு முழுவதுமாக சிங்களமாகவே  மாற வழிவகுக்கும். 

ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒற்றுமையைப் பேணாமல் இருப்பதற்கு “மோட்டுச்” சிங்களவன் தேவையான பிரித்தாளும் தந்திரங்களை ஏற்கனவே வழிவகுத்துவிட்டான்.

அது எம்மவர்களுக்கு விளங்கவில்லை. தந்திரமாக எம்மவர்க்கு வாழத் தெரியவில்லை.

On 10/03/2018 at 12:10 PM, அபராஜிதன் said:

அக்கா மனோ கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்தை ஒருக்கா எட்டி பாருங்கள் 

இன்னும் பார்க்கவில்லை.

On 10/03/2018 at 2:40 PM, சண்டமாருதன் said:

தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு மகிழ்ந்ததாக ஒரு வரலாற்றை பதிவு செய்வதால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம். அன்று தமிழர்களை வதம் செய்யும் போது இஸ்லாமியர்கள் மகிழ்ந்தார்கள் என்பதால் இன்று தமிழர்கள் மகிழ்வதாக இருந்தால் இருவரும் எதிரிகள் என்றே முடிவுசெய்யப்படுகின்றது. ஏற்கனவே எதிரி போல்தான் இருக்கின்றறோம். யாழில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதும் சரி காத்தான் குடி படுகொலையானாலும் சரி அதே போல் இஸ்லாமியர்கள் கிழக்கில் சிங்களத்துக்கு நிகராக தமிழர்களை வதம் செய்துள்ளனர். தமிழர்களின் வாழ்விடங்களை சூறையாடியுள்ளனர். இலங்கை புலனாய்வுத்துறையுடன் இஸ்லாமியர்கள் இணைந்து செய்த கொடுமைகள் ஒரு தனி வரலாறு. அறிவுள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான சிங்கள பேரினவாத வன்முறைகளை பயன்படுத்தி இனமாக ஐக்கியப்படுவோம் ஆனால் அறிவு ஆகக் கூடியவர்களாக இருந்பதால் மேலும் பகையை விதைக்கின்றோம். விதி வலியது. 

இவ்வுலகில் மதம் என்ற ஒரு நம்பிக்கை சார்ந்த பொது உணர்வை தனது இனம், சமூகம், பொருளாதார பலத்திற்கு பயன்படுத்திக்கொண்டவர்களே சக்திமிக்கவர்கள். வெறுமனே மதம் கடவுளை உண்மையென நம்பி தொங்கிக்கொண்டிருப்பவர்கள் சக்திமிக்கவர்களால் வேட்டையாடப்படுவார்கள். உலகின் நகர்வு இவ்வாறு தான் உள்ளது. சிங்களம் இஸ்லாமியர்களை கொன்றலும் சரி சிரியாவில் ரசியா கொன்றாலும் சரி ஆப்கான் ஈராக்கில் அமெரிக்கா கொன்றதானாலும் யாரையும் அல்லா காப்பாற்றியதில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் சிங்களம் கென்று குவித்த போது எந்த அம்மனும் சிவனும் பிள்ளையாரும் வந்து தடுத்ததும் இல்லை. சென்பீற்றஸ் தேவாலயத்தில் குண்டு போட்டு கொன்றபோது மாதவந்து தடுத்ததும் இல்லை. கத்தி குளறி மரண பீதியில் ஓலமிட்டாலும்  மதம் மதத்தின் பின்னணியில் உள்ள கடவுள்களால் எதையும் செய்ய முடியாது. அது ஒரு நம்பிக்கை தவிர உண்மை கிடையாது. உண்மை என்று நம்புகின்றவர்கள் அழிவதும் தவிர்க்க முடியாதது. 

சரியாகச் சொன்னீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2018 at 12:10 AM, Nathamuni said:

அண்மையில் சிரியாவுக்காக இரங்கினோம், என்ன காரணம்? அவர்களுக்கும் எமக்கும் ஒரு தொடர்பும் இல்லையே.... தமிழகத்தில் கூட ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததே.

அதுதான் மனிதாபிமானம். நாமும் அந்த அவலத்தினை அனுபவித்தோமே என்ற தவிப்பு.

முள்ளிவாய்க்காலில் அந்த கொடூரம் நிகந்த போது, லண்டனிலும், டொரோண்டோவிலும், சிட்னியிலும் நாம் பரிதவித்து போராடினோமா... அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் இவர்கள், அதாவது இப்போது வன்முறைகளுக்கு முகம் கொடுப்பவர்கள். ஒரு அறிக்கை, ஒரு சிறு கவலை வரவில்லையே. மாறாக பால் சோறு பொங்கி கொண்டாடவில்லையா.

எரிகின்ற வீட்டில் புடுக்குகிறது லாபம் என்பது போல, யுத்தகாலத்தில், கிழக்கில் தமிழ் காணிகளை அபகரித்தல், அதற்க்கான கொலைகள் எல்லாம் யுத்தக் கணக்கில் சேரும் சேரும் என்ற பாங்கில் நடத்தி முடிக்கப்படவில்லையா.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு சிறு துளி கூட இந்த வன்முறையில் இல்லையே. இந்த நிலைக்கு காரணம் என்ன, சிங்கள ஓட்டுநர் ஒருவரின் கொலை. வினை விதைத்தால், அறுக்கத்தானே வேண்டும்.

சிங்களத்தின் பேரினவாதம் தம்மை 1915ல் தாக்கியது, பின்னர் தமிழரை பலமுறை தாக்கியது. இறுதியாக 2009ல் தாக்கிய போது.... மீண்டும் எம்மை தாக்கும் என்ற பட்டறிவு இல்லாமல் போனதேன்.

சிங்களத்தினை அதீதமாக நம்பி, வடக்கு கிழக்கு இணைப்பே வேண்டாம் என்று சில முஸ்லீம் அரசியல் வாதிகள் கூறினர். இன்று தாம் பெரும்பான்மையாக வாழ்வதாக நினைத்த அம்பாறை மாவடட, அம்பாறை நகரில் அவர்களை துடைத்து எறிந்திருக்கிறது சிங்களம்.

அது மட்டுமா, கண்டியில் இனி பயமின்றி வியாபாரம் செய்ய முடியாத நிலை. 

காரணம்... அதீத நம்பிக்கை... நாம் தமிழ் பேசினாலும் தமிழர் இல்லை என்ற நிலைப்பாடு. அது யுத்த காலத்துடன் முடிந்து விட்டது... இப்போது புரியவைக்கப்பட்டுள்ளது.... நீங்கள் முஸ்லிம்கள் ஆனாலும் தமிழர்கள்... இன்னும் புரியாவிடில்... வடக்கும் இல்லை. தெற்கும் இல்லை.
 
வினைவிதைத்தவர் அறுவடை செய்யத்தான் வேண்டும். ஆனாலும் நாம் பார்வையாளர்கள் மட்டுமாக இருப்பதே நல்லது.

On 11/03/2018 at 4:12 AM, அபராஜிதன் said:

என்னதான் இருந்தாலும் மதம் என்கின்ற பெயரில் அவர்களின் ஒற்றுமை அவர்களின் மிகப்பெரிய பலம் பாதிக்கப்பட்டோரிற்காக கிராம்ம் கிராம்மாக நிவாரணம்கள் சேர்க்க தொடங்கிவிட்டார்கள் அக்கரைப்பற்றிலுள்ள ? ஒருகிராமத்திலிருந்து மட்டும் 33 லட்சம் சேர்ந்திருக்கிறது 

அவர்கள் சிங்களவனிற்கு எமது பலம் என்ன என்று காட்டுவோம் என எழுதுகிறார்கள் 

அவர்களிடம் இருக்கும் ஒற்றுமையும் துணிவும் எம்மிடம் இல்லை.

On 11/03/2018 at 8:48 AM, பெருமாள் said:

அப்படி விழுந்த காசில் அவர்கள் என்ன குண்டா வேண்டபோகிரரார்கள் வடக்கில முக்கியமான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதுக்கு உபயோகிக்கபோகிணம் அவ்வளவே சிலவேளை நல்லூர் சுத்து வட்டாரம் அவர்களின் குறியாய் இருக்கலாம் இம்முறை .

நல்லூர் சுற்றுவட்டாரத்தில் அவர்களுக்கு காணி விற்பது தமிழனின் தவறேயன்றி வேறென்ன ???

On 11/03/2018 at 9:52 AM, குமாரசாமி said:

********.....தங்களுக்கு ஏதும் நடந்தால் தட்டிக்கேட்க கன நாடுகள் இருக்கெண்ட தடிப்பு,தலைக்கனம் அந்தக்காலத்திலிருந்தே இருக்குது.
அது சரி சிலோனிலை இருக்கிற முஸ்லீம்கள் சியாவா  சன்னியா?

ஒருக்கா போன் எடுத்துக் கேளுங்கோ அவங்களிடமே குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் எனக்கு முஸ்லிம் இனத்தவர்களுடன் பெரிதாகப் பழக்கம் இல்லை. அவர்கள் செய்தவை எல்லாம் தெரியாது. ஆனாலும் எனக்கு மகிழ முடியவில்லை.

உலகில் பச விஷயங்கள் தெரிந்து கொண்ட நீங்கள் அம்பாறை மாவட்ட தமிழர்கள் கொலைகள் தமிழ்கிராமங்களில் நடந்தவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்  அவர்களுடன் பழகித்தான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை  .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.