Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்…

Featured Replies

சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்…

பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

omalpe-sobitha-Sumanthran.jpg?resize=607

வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து என்பதுடன் இதன் மூலம் மத பேதங்கள் ஏற்படும். இதனால், சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதை மாத்திரமே சுமந்திரன் எதிர்க்கின்றார். வேறு மத தலங்களை நிர்மாணிப்பது அவருக்கு பிரச்சினையல்ல. முழு வடக்கு, கிழக்கிலும் பௌத்த அடையாளங்கள் பரவிக்கிடக்கும் போது சுமந்திரன் யாருடைய அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு இப்படியான கருத்துக்களை வெளியிடுகிறார் எனவும் ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/78064/

  • Replies 63
  • Views 5.4k
  • Created
  • Last Reply

அமெரிக்காவின் செல்லபிள்ளை சுமத்திரன் ஐயாவை ஒருத்தனும் ஒன்றும் செய்ய முடியாது . முடிஞ்சா கை வைத்து பாருங்க பின்பு இலங்கையில் சிங்கள இனமே இருக்காது .

  • தொடங்கியவர்

 நான் அப்படிக் கூறவில்லை” – கருத்தை திரிவுபடுத்துகிறார்கள்…

sumanthiran-mp.jpg?resize=640%2C480

வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என தான் கூறியதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுமந்திரன்,  வார பத்திரிகை ஒன்றில் தான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தான் கூறிய விடயத்தை திரிபுப்படுத்தி கூறி, பௌத்த மக்களை தூண்ட இதன் மூலம் முயற்சித்துள்ளனர். பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுவதில் அர்த்தமில்லை என நான் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறியிருந்தேன்.

அப்படியான பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் ஊடக சந்திப்பில் கூறியிருந்தேன்.

பொய்யான செய்தியை வெளியிட்டு மக்கள் இடையில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்தமை காரணமாக குறித்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net

ஆட்ரா ராமா ஆட்ரா - மூன்றாம் பிறை 

  • தொடங்கியவர்

'தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை' - சிங்களத்தில் அறிக்கைவிட்டார் சுமந்திரன்

தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை தான் முற்றாக எதிர்க்கவில்லை என;று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யுமாறு வலியுறுத்தியதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து இன்றைய தினம் சிங்களத்தில் அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்இ யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கீ.துரைராஜசிங்கத்துடன் இணைந்து கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

அதன்போது தமிழர் தாயகத்தில் புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வினவிய போதுஇ இவ்வாறான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக அவர் பதிலளித்திருந்தார்.

சுமந்திரனின் அந்தக் கருத்துக்கள் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மே மாதம் ஏழாம் திகியான நேற்றைய தினம் திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள சிங்கள மொழியிலான அறிக்கையில் வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யுங்கள் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தான் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தி பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் வகையில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தி சோடிக்கப்பட்ட செய்திகளை பிரசுரிப;பதன் ஊடாக சமூகங்களுக்கிடையில் மோதல்களை தூண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சுமந்திரன் இவ்வாறான செய்திகளை பிரசுரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் திரிபுபடுத்தப்பட்ட செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் சரியான செய்தியை பிரசுரிப்பதுடன் தான் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் ஊடகங்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யுமாறு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்ட காணொளி:

http://www.ibctamil.com/politics/80/100239?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்லூர் கந்தன் ஆலயவீதியில் விகாரை அமைக்கப்பட்டாலும் எதிர்க்கமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ,அவங்களுக்கு அது தெரியுதில்லையே...அவசரபடுகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை அகற்ற வாக்குகள் போதும்.(பின் கதவால் வரும் வரை.ஆனால் அது எம்மிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

நீங்கள் நல்லூர் கந்தன் ஆலயவீதியில் விகாரை அமைக்கப்பட்டாலும் எதிர்க்கமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ,அவங்களுக்கு அது தெரியுதில்லையே...அவசரபடுகிறார்கள்..

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Jude said:

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

கண்டியில் தமிழர்கள் சைவர்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள். கண்டி தமிழ் மன்னனின் ஆட்சியில் இருந்துள்ளது. எனவே அங்கு சைவக் கோவில் அமைவதற்கும்.. சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்திராத.. வாழாத இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவத்தை இருத்தி வைச்சுக் கொண்டு.. ஆக்கிரமிப்பு நோக்கில்.. பெளத்த சின்னங்கள் நிறுவப்படுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர முடியாத மாதிரி சிலர் நடித்துக் கொண்டு.. இனச் சரணடைவுகளுக்கூடாக எதையாவது பெற்று.. அசெஸ்ட் பண்ணி வாழ்ந்துக்கோ என்று இப்ப வகுப்பெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது மிகவும் ஆபத்தானது. தமிழர்கள் தங்கள் வரலாற்று ரீதியான.. நில தனித்துவத்தை இழக்கவே இவை வழி வகுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

கண்டியில்  பல ஆயிரம் மலையக தமிழர்கள்,இலங்கை தமிழர்கள்னு காலம் காலமாக வாழ்கிறார்கள், ஆகவே கோவில் இருக்கிறது...நல்லூர் கந்தன் கோவில் வட்டாரத்தில் காலம் காலமாய் பல ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்தால்... வாழ்ந்திருந்தால் விகாரை அமையலாம் தப்பில்லை...வாழ்ந்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

சிங்களத்தின் அடுத்த  தலைமுறைப்பிள்ளைகள்  சொல்வார்கள்

நல்லூரில் எதற்காக பெரிய  கோவில்??

இது  சிங்களத்தின்  பூர்வீக  பூமியல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Jude said:

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

சைவமக்கள் நிறைய இருந்த இடத்தில் கோவில்களை கட்டினார்கள். அது கட்டாய திணிப்பாக இருக்கவில்லை. கலாச்சார பரவலாகாக்கமாக கருதப்படவில்லை.ஆத்ம திருப்திக்காக வழிபாட்டுக்காக அன்று கோவில்களை அமைத்தார்கள். ஆனால் இன்று தமிழர் பிரதேசங்களில் அனாவசியமற்ற இடங்களில் விகாரைகள் அமக்க்கப்படுவது ஏன்? யார் வந்து வணங்குவதற்கு?
உலகில் பலரால் போற்றப்படும் பௌத்த மதத்தை துர்ப்பிரயோகம் செய்வது சிங்கள இனவாதிகள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

கண்டியில் தமிழர்கள் சைவர்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள். கண்டி தமிழ் மன்னனின் ஆட்சியில் இருந்துள்ளது. எனவே அங்கு சைவக் கோவில் அமைவதற்கும்.. சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்திராத.. வாழாத இடங்களில் எல்லாம் ...

சிங்கள இனம் தோன்றிய தீவில் அவர்கள் எழுபது வீதமாக இருந்தும் ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ முடியவில்லை?  மாறாக தமிழர்கள் கண்டியிலும் மற்ற சிங்கள பிரதேசங்களிலும்  "காலம் காலமாக" வாழ முடிகிறதே?

இப்படியாக சிங்கள மக்கள் குடிப்பரம்பலில் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவ வேண்டிய தேவை இருக்கிறதே?

9 minutes ago, குமாரசாமி said:

சைவமக்கள் நிறைய இருந்த இடத்தில் கோவில்களை கட்டினார்கள். 

ம்ம் ...  சிங்கள பகுதிகளில் எல்லாம் சைவ மக்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் பௌத்த மக்கள்  "நிறைய" இருக்க  முடியவில்லை ... அரசு உதவேண்டும் என்கிறீர்களா? 

6 hours ago, valavan said:

கண்டியில்  பல ஆயிரம் மலையக தமிழர்கள்,இலங்கை தமிழர்கள்னு காலம் காலமாக வாழ்கிறார்கள், ஆகவே கோவில் இருக்கிறது...நல்லூர் கந்தன் கோவில் வட்டாரத்தில் காலம் காலமாய் பல ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்தால்... வாழ்ந்திருந்தால் விகாரை அமையலாம் தப்பில்லை...வாழ்ந்தார்களா?

சிங்கள பகுதிகளில் எல்லாம் சைவ மக்கள் பல ஆயிரம் இருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் பௌத்த மக்கள் இனியாவது வாழ வேண்டாமா? அரச உதவியும் விகாரைகளும் அவர்கள் குடியேற தேவை தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிங்களத்தின் அடுத்த  தலைமுறைப்பிள்ளைகள்  சொல்வார்கள்

நல்லூரில் எதற்காக பெரிய  கோவில்??

இது  சிங்களத்தின்  பூர்வீக  பூமியல்லவா?

தமிழர் மட்டும் வித்தியாசமாகவா செய்கிறார்கள்? நாகர்களின் நாட்டில் நல்லூர் கோவிலை கட்டிவிட்டு தமிழர் தம் பூர்விக பூமி என்று நாக நாட்டை நாம் ஆக்கிரமிக்கவில்ல்லையா? அமெரிக்க பூர்வீக குடிகளை ஐரோப்பியர்  அழித்தது போல நாக மக்களை அழித்து தமிழ் போர்வீரரும் வணிகரும் நாக நாட்டை ஆக்கிரமித்து தமிழர் பூமி ஆக்கவில்லையா? எஞ்சியுள்ள நாக மக்களை தமிழ் பேச வைத்து ஒரு சாதியின் பெயரில் இன்று குறுக்கி வைத்து இருக்கிறார்களே தமிழர்?

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Jude said:

ம்ம் ...  சிங்கள பகுதிகளில் எல்லாம் சைவ மக்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் பௌத்த மக்கள்  "நிறைய" இருக்க  முடியவில்லை ... அரசு உதவேண்டும் என்கிறீர்களா? 

மன்னிக்கவும்......ஒரு காலத்தில் அதிகமாக இருந்தார்கள். செழிப்பாக இருந்தார்கள். ஆனால் இன்று இனக்கலவரங்கள மூலம் துரத்தப்பட்டார்கள். அழிக்கப்பட்டார்கள். அன்றய காலத்தை வைத்து இன்றைய விகாரைகள் அமைப்பது பற்றி ஒப்பிடப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கவும்......ஒரு காலத்தில் அதிகமாக இருந்தார்கள். செழிப்பாக இருந்தார்கள். ஆனால் இன்று இனக்கலவரங்கள மூலம் துரத்தப்பட்டார்கள். அழிக்கப்பட்டார்கள். அன்றய காலத்தை வைத்து இன்றைய விகாரைகள் அமைப்பது பற்றி ஒப்பிடப்படாது.

கலவரத்தில் தமிழரும் தான் சிங்களவரை யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தினார்கள். 

இன்றைய காலத்தை வைத்து ஒப்பிடுவோமே? சைவ கோவில் தலதா மாளிகையில் இருந்து நடை தூரத்தில் உயர்ந்து நிற்கிறதே? அது போல  நல்லூர் கோவிலுக்கு நடை தூரத்தில் பார்வைக்கு எட்டிய இடத்தில் விகாரைக்கு இடம் கொடுக்கலாமே? கண்டியில் தமிழர் இருப்பது போல நல்லூரிலும் சிங்களவரை வாழ அனுமதிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

omalpe-sobitha-Sumanthran.jpg?resize=607

சுமந்திரனின்.... நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை,  பறிக்க வேண்டும் என்று கூறிய பிக்குவிற்கு  நன்றி.
அத்துடன்.....  சுமந்திரனை  நாடு கடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால்... இன்னும் நல்லாய் இருந்திருக்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Jude said:

கலவரத்தில் தமிழரும் தான் சிங்களவரை யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தினார்கள். 

இன்றைய காலத்தை வைத்து ஒப்பிடுவோமே? சைவ கோவில் தலதா மாளிகையில் இருந்து நடை தூரத்தில் உயர்ந்து நிற்கிறதே? அது போல  நல்லூர் கோவிலுக்கு நடை தூரத்தில் பார்வைக்கு எட்டிய இடத்தில் விகாரைக்கு இடம் கொடுக்கலாமே? கண்டியில் தமிழர் இருப்பது போல நல்லூரிலும் சிங்களவரை வாழ அனுமதிக்கலாமே?

இனக்கலவரத்தில் துரத்தியடிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுத்தது. ஆனால் துரத்தியடிக்கப்பட்ட தமிழருக்கு இன்றுவரை நீதியே கிடைக்கவில்லை....சும்மா எழுந்தமானத்தில் எழுதுவதை தவிர்க்கவும்.

முதலில் சிங்களவருக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அதை தமிழருக்கும் கொடுக்கட்டுமே.

சகல வளங்களும் இருக்கும் தென் பூமியை விட்டு வரட்சியை நோக்கி வரும் வடபகுதிக்கு உங்கள் சிங்கள உறவுகள் வர துடிப்பதன் காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

முதலில் சிங்களவருக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அதை தமிழருக்கும் கொடுக்கட்டுமே.

நல்லூர் கோவிலுக்கு பார்க்கும் தூரத்தில் விகாரை கட்ட சிங்களவருக்கு இல்லாத உரிமை தமிழருக்கு தலதா மாளிகைக்கு பார்க்கும் தூரத்தில் சைவ கோவில் கட்ட இருக்கிறதே?

34 minutes ago, குமாரசாமி said:

சகல வளங்களும் இருக்கும் தென் பூமியை விட்டு வரட்சியை நோக்கி வரும் வடபகுதிக்கு உங்கள் சிங்கள உறவுகள் வர துடிப்பதன் காரணம் என்ன?

வெளிநாட்டு பணத்துடன் தமிழர் முண்டியடித்து தென் பகுதியை ஆக்கிரமிப்பதால் வெளிநாட்டு பணமில்லாத ஏழை சிங்களவர் வரட்டு வடக்குக்கு வந்து காடுகளை கடும் உழைப்பால் களனியாக்கி வாழ விரும்புகிறார்கள். நீங்களோ என்றால் வரட்டு வடக்கும் எனக்கு தான் வேண்டும், வளம் மிக்க தெற்கையும் வாங்கி சைவ கோவில் கட்டுவேன் என்று நிற்கிறீர்கள். துட்ட கைமுனு சரியாக தான் சொன்னான் "தெற்கில் பெரும் கடல், வடக்கில் கெட்ட தமிழன், நாம் எங்கே போக முடியும்?" என்று.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Jude said:

சிங்கள பகுதிகளில் எல்லாம் சைவ மக்கள் பல ஆயிரம் இருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் பௌத்த மக்கள் இனியாவது வாழ வேண்டாமா? அரச உதவியும் விகாரைகளும் அவர்கள் குடியேற தேவை தானே?

சிங்கள பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்ததனால்தான் அங்கே கோவில்கள் உருவாகியது...

தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் இல்லாத இடங்களில்கூட விகாரைகள் முந்திக்கொண்டு வருகிறதே அதற்கு என்ன காரணமாயிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இலங்கையின்  மிக பெரும் நிலப்பரப்பை தம் வாழ்விடங்களாக கொண்ட சிங்களவர்கள்..

நிலவளம்,நீர் வளம், வேலைவாய்ப்பு எல்லாம் அங்கு காலம் காலமாகவே வாழும் தமிழர்களுக்கு அருந்தலாக உள்ள இலங்கையின் மிக குறுகிய நிலபரப்பை கொண்ட பிரதேசத்தில்...

சிங்களவர்களும்,பெளத்தமும் குடியேறியே ஆகவேண்டும் என்று அவர்களும் நீங்களும் ஒற்றைகாலில் நிற்பதற்கு...

என்ன காரணம் என்பதை ஒரே வரியில் உங்களால் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Jude said:

நல்லூர் கோவிலுக்கு பார்க்கும் தூரத்தில் விகாரை கட்ட சிங்களவருக்கு இல்லாத உரிமை தமிழருக்கு தலதா மாளிகைக்கு பார்க்கும் தூரத்தில் சைவ கோவில் கட்ட இருக்கிறதே?

வெளிநாட்டு பணத்துடன் தமிழர் முண்டியடித்து தென் பகுதியை ஆக்கிரமிப்பதால் வெளிநாட்டு பணமில்லாத ஏழை சிங்களவர் வரட்டு வடக்குக்கு வந்து காடுகளை கடும் உழைப்பால் களனியாக்கி வாழ விரும்புகிறார்கள். நீங்களோ என்றால் வரட்டு வடக்கும் எனக்கு தான் வேண்டும், வளம் மிக்க தெற்கையும் வாங்கி சைவ கோவில் கட்டுவேன் என்று நிற்கிறீர்கள். துட்ட கைமுனு சரியாக தான் சொன்னான் "தெற்கில் பெரும் கடல், வடக்கில் கெட்ட தமிழன், நாம் எங்கே போக முடியும்?" என்று.

நான் கேட்ட தமிழர் பிரச்சனைக்கு பதிலேதுமில்லாமல் புத்தவிகாரை கட்டுவதிலேயே நிற்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2018 at 2:39 PM, spyder12uk said:

அமெரிக்காவின் செல்லபிள்ளை சுமத்திரன் ஐயாவை ஒருத்தனும் ஒன்றும் செய்ய முடியாது . முடிஞ்சா கை வைத்து பாருங்க பின்பு இலங்கையில் சிங்கள இனமே இருக்காது .

ஆமா... அப்படி போடு அருவாளை. ? ✔️
சுமந்திரனை.... சும்மா... லேசுப்  பட்ட  ஆள்  ? என்று, சிங்களவர் நினைக்கின்றார்கள். ? 
(சும்மா... எங்கள் பங்குக்கு, கொளுத்திப்  போடுவம்.)  ? ?

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை வாய்.... இது, நாறல்  வாய். ?

//நான் அப்படிக் கூறவில்லை” – கருத்தை திரிவுபடுத்துகிறார்கள்…//

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு எப்போதுமே ஒரு பயம்
எங்கள் நிலைமை என்னாவது என்று
எப்படி இருந்த நாங்கள் எப்படி இந்த நிலையில் இன்று
நாளை அதற்கும் ஒரு வில்லங்கம் வராமல் இருப்பதற்கு
சுமந்திரன் எபிரஹாம் இருக்க வேண்டும் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

சிங்கள பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்ததனால்தான் அங்கே கோவில்கள் உருவாகியது...

தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் இல்லாத இடங்களில்கூட விகாரைகள் முந்திக்கொண்டு வருகிறதே அதற்கு என்ன காரணமாயிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இலங்கையின்  மிக பெரும் நிலப்பரப்பை தம் வாழ்விடங்களாக கொண்ட சிங்களவர்கள்..

நிலவளம்,நீர் வளம், வேலைவாய்ப்பு எல்லாம் அங்கு காலம் காலமாகவே வாழும் தமிழர்களுக்கு அருந்தலாக உள்ள இலங்கையின் மிக குறுகிய நிலபரப்பை கொண்ட பிரதேசத்தில்...

சிங்களவர்களும்,பெளத்தமும் குடியேறியே ஆகவேண்டும் என்று அவர்களும் நீங்களும் ஒற்றைகாலில் நிற்பதற்கு...

என்ன காரணம் என்பதை ஒரே வரியில் உங்களால் சொல்ல முடியுமா?

தமிழரின் வெளிநாட்டு பணத்தினால் தென்பகுதியில் நிலம் விலையேறி விட்ட நிலையில் வடக்குக்கு அவர்கள் வந்து குடியேற வேண்டிய தேவையும் அதனால் அவர்கள் வழிபட விகாரைகளும் தேவையாக உள்ளன.

4 hours ago, குமாரசாமி said:

நான் கேட்ட தமிழர் பிரச்சனைக்கு பதிலேதுமில்லாமல் புத்தவிகாரை கட்டுவதிலேயே நிற்கின்றீர்கள்.

விகாரையை பற்றி பேசத்தொடங்கினோம். முதலில் அதை முடித்து விட்டு உங்கள் கேள்விக்கு வரலாம். நல்லூர் வீதியில் விகாரை கட்ட நீங்கள் சம்மதமா இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.