Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

Featured Replies

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க  சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்....

ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிப்பதென்பது அந்த நாட்டின் மக்களுடைய அறிவு வலிமை. இந்த அறிவு வலிமையினுடைய அடித்தளம் பாடசாலை. அதனைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே எங்களுடைய சமூகத்திலிருக்கும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் இரட்டிப்பாகும்.

எங்களுடைய ஆசிரியர்கள் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய மாணவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் வல்லுனர்களாக ஆக்கவேண்டும். அவ்வாறு அவர்களை வல்லுனர்களாக ஆக்கவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய ஆற்றல்களை ஆசிரியர்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவர்களை உச்சாகப்படுத்த வேண்டும்.

sarveswaran.jpg

  தற்போது உயர் தரத்தில் அதிக மாணவர்கள் கலை வர்த்தக பாடங்களையே தெரிவு செய்கின்றனர். வடக்கு மாகாணத்திலே 70 ஆம் 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே தன்னுடைய தேவைக்கு மேலதிகமாக கல்வி நிர்வாக சேவையாளர்களையும்  சிவில் சேவையாளர்களையும் நீதி நிர்வாக சேவையாளர்களையும் உருவாக்கியிருந்தது.

 ஆனால் தற்போது அந்த நிலை மாறி எமது மாகாணத்தில் கடமையாற்றக்கூடிய  வல்லுனர்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.

எங்களுடைய வைத்தியசாலைகளிலே தமிழ் வைத்தியர்கள்,தமிழ் தாதியர்கள் அருகிக்கொண்டு செல்கிறார்கள். அதிகமாக சிங்கள வைத்தியர்களும்,சிங்கள தாதியர்களும் தென்னிலங்கையிலருந்து வந்து பணி செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆகவே எங்களுடைய மாணவர்கள் அதிகமாக விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டும். மாணவர்கள் விஞ்ஞானத்துறையை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஆசிரியர்களினுடைய பங்களிப்பு மிக மிக அவசியமானது. ஆசிரியர்கள் மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே விஞ்ஞானத்துறை நோக்கி நகர்த்த வேண்டும்.

இவ்வாறு நாங்கள் செய்வோமாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு மாணவர்களையும் வல்லுனர்களாக்க முடியும். எந்தவொரு மாணவனும் குறைந்தவனல்ல. எல்லா மாணவர்களிடத்திலும் ஏதாவது ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கிறது. அந்த ஆற்றல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் ஆசிரியர்களுக்குத்தேவை.

மாணவர்களுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்போமாக இருந்தால் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில் வல்லுனர்களாவார்கள். அவ்வாறு வல்லுநர்களாக மாறுகின்ற போது எங்ளைப்பொறுத்தவரை எங்களுடைய இனம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறிவிலும் வலிமையிலும் அதிகமாக இருக்கவேண்டும்.

 அத்தகைய வலிமைமிக்க சமூகமாக எமது சமூகம் நிலைபேறானதாக இருக்கும். நிலைபேறான ஒரு சமூகமாக இருப்பதற்கு எங்களுடைய பரம்பரை இங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. அந்தப்பொறுப்பு சாதாரணமானதல்ல. அந்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் மேலும் தங்களுடைய சேவைகளை அதிகமாக்கி செயற்படவேண்டும். என்றார்.

http://www.virakesari.lk/article/34282

  • கருத்துக்கள உறவுகள்

 போதியளவு  மருத்துவர்கள்,தாதிகள் எம்மிடம் இருக்கும்போதே வேற்று இனத்தவர் வந்தால்தான் தப்பு மற்றும்படி,

 வைத்தியர்கள் தாதிகளிற்கு இனம் மதம் தேவையில்லை, அவர்கள் தொகை அதிகரிப்பதினால் , எந்தவிதமான பாதிப்பும் ஏற்படபோவதில்லை  .

எந்த இனத்திலிருந்து மருத்துவர்கள் பணியாற்றினாலும் காப்பாற்றப்படபோவது தமிழ் உயிர்கள் மட்டுமே!

எமது மாணவர்கள் மருத்துவதுறையில் முன்னேறணும் என்று மட்டும் சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 
கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/1/2018 at 8:22 PM, ரதி said:

படித்தவர்கள் எல்லாம் கொழும்பு, வெளிநாடு என்று ஓடினால் சிங்களவர்கள் தானே வந்து வேலை செய்ய வேண்டும் 
 
வடபகுதி விவசாயிகள் எங்கும் விட்டு ஓடவில்லை......

தாங்கள் செய்த விவசாய சாகுபடிகளை விற்க முடியாமல் விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.

காரணம் தேங்காய் முதற்கொண்டு செத்தல் மிளகாய் வரைக்கும் சிங்களவர்கள் மலிவு எனும் பெயரில் ஆக்கிரமித்து விட்டார்கள்.

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பிலயும் இல்ல ஊரில் படிச்சு பாஸ் ஆகும் போது சொல்லி கொள்வது ஊருக்கு சேவையென்று பேந்து வெளிநாட்டில போய் படித்து விட்டு வரும் போது வெளிநாடு  பிடித்து விட அங்கேயே செட்டிலாகிவிடுவது :)

நாடும் அரசியலும் ஒழுங்காய் இருந்தால்  அவனவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறான்? அவனுக்கென்ன விசரே? :cool:

அது சரி பாஸ்! தாங்கள் ஏன் மத்தியகிழக்கிற்கு போய் தவம் செய்தீர்கள்????? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வடபகுதி விவசாயிகள் எங்கும் விட்டு ஓடவில்லை......

தாங்கள் செய்த விவசாய சாகுபடிகளை விற்க முடியாமல் விவசாயத்தையே விட்டு விட்டார்கள்.

காரணம் தேங்காய் முதற்கொண்டு செத்தல் மிளகாய் வரைக்கும் சிங்களவர்கள் மலிவு எனும் பெயரில் ஆக்கிரமித்து விட்டார்கள்.

தேங்காய் முதல் செத்தல் வரை எப்படி சிங்களவர்களால் மலிவு விலையில் விக்க முடியுது? 

நாடு அரசியல் என்டுறதை விட்டுப்போட்டுப் விவசாயம் என்டு பாத்தால் எம் மக்களில் ஒரு குணம் என்ன என்டால் ஒரு சில காலம் காலமாக பயிரிடும் பயிர்களை விட்டு வெளியே வாறதில்லை.மற்றது எந்தப் போருளுக்கு நிகழ் காலத்தில விலை போகுதோ அதையே எல்லாரும் செயுறது.பின் அறுவடை செய்யும் போது அதன் விலை ஆதாள பாதாளத்திற்க்கு இறங்கி விடும்.உதாரனத்திற்ககு அண்மையில் அங்கு நான் நிக்கும் போது பச்சை புசனி கிலோ 80 ருபா போகுது என்டு எல்லாரும் ஓடுப்பட்டு அதையே பெரும் எடுப்பில செய்திசசினம்.இப்ப என்ன என்டால் கிலோ 20 க்கும் விக்க ஏலாமல் இருக்குதாம்.நிலையான விலையுள்ள எப்வும் தேவையுள்ள சில தானியங்கள் உள்ளன.மக்கள் அந்தப்பக்கமும் கவனம் செலுத்த வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஆனால் நான் ஓடுன நான் செட்டில் ஆக வில்லை ஓடி வந்துட்டேன் நான் மைக்கில நாட்டுக்கும் எனது ஊர் மக்களுக்கும் சேவை செய்வேன் என அரசியல் வாதிகள் போலும் அதிகம் படிச்ச வைத்தியர் போலவும் பேட்டி கொடுக்கவும் இல்லை சாமி கிழக்கில் 2004 ம் ஆண்டு கிழக்கில் யாரை யார் பிடித்துப்போகிறார் என்று தெரியாது அந்த நிலையில் (க்டத்தல்) தான் நாங்கள் மத்திய கிழக்கு ஓடினோம் என்னால் முடிஞ்சது அந்த நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அடிக்கவில்லை அசைலம்  போன பின்பு சுனாமி அடித்து உடைமகளை இழந்து உயிர்களை இழந்த போது அங்கேயே இருக்க வேண்டிய சூழல் சூழ் நிலை 2010 மீண்டும் வந்து விட்டேன் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.:grin::grin:

இலங்கையிலிருந்து ஓடுனவன் முன்பு சண்டை என்றான் பிறகு அரசியல் நிலை சரி இல்லை என்கிறான் இலங்கையில் அரசியல் நிலை சரிவரும் என்று நான் நினைக்கல நீங்கள் பத்திரமாக அங்கு இருக்கலாம்  :100_pray:

22 hours ago, Jude said:

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

நம்ம ஆழுகள் வெளிநாட்டுக்கு தாவிக்கொண்டிருக்கினும் ஆனால் இதை சொல்ல கூடாது பாருங்க  இப்ப முல்லைத்தீவில் புதுப்புது வாடிகள் வந்து விட்டது யாரு யாருட்ட போய் சொல்வது இப்படி இருக்கு நிலமை கடற்றொழிலினை பறித்துக்கொள்கிறார்கள் tw_unamused:

5 hours ago, ரதி said:

தேங்காய் முதல் செத்தல் வரை எப்படி சிங்களவர்களால் மலிவு விலையில் விக்க முடியுது? 

சிங்களவர்களுக்கு வரி இல்லை அதனால் அதை அதிகம் இறக்குமதி செய்து விற்கிறார்கள் என்று சொல்லுவம் :27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்களுக்கு வரி இல்லை அதனால் அதை அதிகம் இறக்குமதி செய்து விற்கிறார்கள் என்று சொல்லுவம் :27_sunglasses:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

சந்தையிலை சொந்தக்காணி தேங்காய் வித்துக்கொண்டிருக்கேக்கை.....இடையிலை சிங்கள தேங்காய் லொறி வந்து அரைவிலை விக்கேக்கை ...அதாலை பாதிக்கப்பட்டு தவிச்சவனுக்குதான் அதின்ரை வேதனை தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

சந்தையிலை சொந்தக்காணி தேங்காய் வித்துக்கொண்டிருக்கேக்கை.....இடையிலை சிங்கள தேங்காய் லொறி வந்து அரைவிலை விக்கேக்கை ...அதாலை பாதிக்கப்பட்டு தவிச்சவனுக்குதான் அதின்ரை வேதனை தெரியும். 

அறாவிலையில் அழுகின தேங்காயை வேறு வழியில்லாமல் வேதனயுடன் வாங்கி தின்ற சனத்துக்கு சிங்கள லொறியில் வந்த அரை விலை தேங்காய் பெரும் விடுதலையாக இருந்திருக்கும். சிங்களவர் வரத்தொடங்கின பிறகு சனத்துக்கு இப்படி தேங்காய் மாதிரி வேறு பல நன்மைகளும் கிடைச்சு இருக்கு. சிங்களவர் வர முடியாமல் இருந்த காலத்தில் இந்த காணி சொந்தகாரரும் கடைக்காரரும் சனத்தை போட்டு படுத்தின பாடு பெரும்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

நாடு அரசியல் என்டுறதை விட்டுப்போட்டுப் விவசாயம் என்டு பாத்தால் எம் மக்களில் ஒரு குணம் என்ன என்டால் ஒரு சில காலம் காலமாக பயிரிடும் பயிர்களை விட்டு வெளியே வாறதில்லை.மற்றது எந்தப் போருளுக்கு நிகழ் காலத்தில விலை போகுதோ அதையே எல்லாரும் செயுறது.பின் அறுவடை செய்யும் போது அதன் விலை ஆதாள பாதாளத்திற்க்கு இறங்கி விடும்.உதாரனத்திற்ககு அண்மையில் அங்கு நான் நிக்கும் போது பச்சை புசனி கிலோ 80 ருபா போகுது என்டு எல்லாரும் ஓடுப்பட்டு அதையே பெரும் எடுப்பில செய்திசசினம்.இப்ப என்ன என்டால் கிலோ 20 க்கும் விக்க ஏலாமல் இருக்குதாம்.நிலையான விலையுள்ள எப்வும் தேவையுள்ள சில தானியங்கள் உள்ளன.மக்கள் அந்தப்பக்கமும் கவனம் செலுத்த வேணும்.

நூற்றுக்கு நூறு வீதம் இயற்கையை நம்பி வாழும் பகுதி வடபகுதி. மாணிக்க கங்கையோ இல்லை மாபெரும் மகாவலியோ பாயாத பூமி அது......இவ்வளவு போர் பாதிப்புகள் இருந்தும் தலை நிமிர்ந்து நிற்கும் பூமி அது... பாரம்பரியத்தை மறக்காத பூமியென இன்று பலர் பாராட்டும் பூமி அது....
அங்கே...
கொட்டையில்லாத பயித்தங்காயும்....கொட்டையில்லாத பூசணிக்காயும்....கொட்டையில்லாத கத்தரிக்காயும் பயிரிட்டு அதன் மூலம்  நோய் எதிப்புச்சக்தியில்லாத மரக்கறிகளை சாப்பிட்டு சர்வதேச நோய்களை வரவேற்கின்றீர்கள்.
 
5 minutes ago, Jude said:

அறாவிலையில் அழுகின தேங்காயை வேறு வழியில்லாமல் வேதனயுடன் வாங்கி தின்ற சனத்துக்கு சிங்கள லொறியில் வந்த அரை விலை தேங்காய் பெரும் விடுதலையாக இருந்திருக்கும். சிங்களவர் வரத்தொடங்கின பிறகு சனத்துக்கு இப்படி தேங்காய் மாதிரி வேறு பல நன்மைகளும் கிடைச்சு இருக்கு. சிங்களவர் வர முடியாமல் இருந்த காலத்தில் இந்த காணி சொந்தகாரரும் கடைக்காரரும் சனத்தை போட்டு படுத்தின பாடு பெரும்பாடு.

அழுகின தேங்காய்க்கும் அழுகாத தேங்காய்க்கும் வித்தியாசம் தெரியாத சனத்தாலைதான் நாடு இப்பிடி உருக்குலைஞ்சு போச்சுது...

சிங்களவன் ஒல்லித்தேங்காயை வித்தாலும் ஒரு சில சனத்துக்கு அது  பொன் தேங்காய்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் நான் ஓடுன நான் செட்டில் ஆக வில்லை ஓடி வந்துட்டேன் நான் மைக்கில நாட்டுக்கும் எனது ஊர் மக்களுக்கும் சேவை செய்வேன் என அரசியல் வாதிகள் போலும் அதிகம் படிச்ச வைத்தியர் போலவும் பேட்டி கொடுக்கவும் இல்லை சாமி கிழக்கில் 2004 ம் ஆண்டு கிழக்கில் யாரை யார் பிடித்துப்போகிறார் என்று தெரியாது அந்த நிலையில் (க்டத்தல்) தான் நாங்கள் மத்திய கிழக்கு ஓடினோம் என்னால் முடிஞ்சது அந்த நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அடிக்கவில்லை அசைலம்  போன பின்பு சுனாமி அடித்து உடைமகளை இழந்து உயிர்களை இழந்த போது அங்கேயே இருக்க வேண்டிய சூழல் சூழ் நிலை 2010 மீண்டும் வந்து விட்டேன் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.:grin::grin:

இலங்கையிலிருந்து ஓடுனவன் முன்பு சண்டை என்றான் பிறகு அரசியல் நிலை சரி இல்லை என்கிறான் இலங்கையில் அரசியல் நிலை சரிவரும் என்று நான் நினைக்கல நீங்கள் பத்திரமாக அங்கு இருக்கலாம்  :100_pray:

நீங்கள் ஓடின மைலை விட நாங்கள் கொஞ்சம் தூர ஓடீட்டம் எண்டது உண்மைதான்....எங்களுக்கு செட்டில் ஆக வசதி இருந்தது...உங்களுக்கு அந்த வசதி இல்லை...இருந்திருந்தால்.?????

அரசியல் விரோதமில்லாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் உதவி செய்வோம் என்றதினால்தான் பல வீடுகளில் அடுப்பும் விளக்கும் எரிகின்றது என்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நூற்றுக்கு நூறு வீதம் இயற்கையை நம்பி வாழும் பகுதி வடபகுதி. மாணிக்க கங்கையோ இல்லை மாபெரும் மகாவலியோ பாயாத பூமி அது......

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

3 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு போர் பாதிப்புகள் இருந்தும் தலை நிமிர்ந்து நிற்கும் பூமி அது... 

வெளிநாட்டு காசில் தலை நிமிர்ந்து நிற்கிறது. உள்ளூர் உற்பத்தியில் தலை நிமிர்ந்து நின்றால் பெருமை படலாம். 

3 hours ago, குமாரசாமி said:

சிங்களவன் ஒல்லித்தேங்காயை வித்தாலும் ஒரு சில சனத்துக்கு அது  பொன் தேங்காய்...

அறாவிலைக்கு ஊரில் காணிக்காரர் விற்பதிலும் பார்க்க சமைக்க கூடிய தேங்காய் குறைவான விலைக்கு கிடைப்பது தான் மக்களுக்கு தேவை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

'

விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளதால் மூன்று  போகமும் விவசாயம்  செய்ய  நீராதாரம்  இல்லையென்பதை பற்றி நாங்கள் கதைத்தால் நீங்கள் குடிக்கவும் ........... கழுவவும் தண்ணீர் இறக்குமதி ஏற்றுமதி  பற்றி கதைக்கிறீர்களே??

காவிரியில் நீர் வரத்து இல்லாமையால் தமிழக விவசாயிகள் படும் அவஸ்தையை பார்க்கவில்லைபோலும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Jude said:

ம் ... நீர்வளம் இல்லை, ஆனால் விவசாயத்தை நம்பி வாழ்க்கை - முட்டாள்தனமாக தெரியவில்லையா?

சிங்கப்பூரில் உப்பற்ற குடிநீர் இல்லை. மலேசியாவில் இருந்து குடிநீரை வாங்கி தாமும் பயன்படுத்தி, மேலதிகமாக நீரை வடிகட்டி போத்தலில் அடைத்து மலேசியாவுக்கே திருப்பி விற்று இலாபமும் சம்பாதிக்கிறார்கள்.  இத்தனைக்கும் மலேசியாவில் இருந்து இன மேலாதிக்கம் காரணமாக பிரிந்து உருவான நாடு சிங்கபூர்.

வெளிநாட்டு காசில் தலை நிமிர்ந்து நிற்கிறது. உள்ளூர் உற்பத்தியில் தலை நிமிர்ந்து நின்றால் பெருமை படலாம். 

அறாவிலைக்கு ஊரில் காணிக்காரர் விற்பதிலும் பார்க்க சமைக்க கூடிய தேங்காய் குறைவான விலைக்கு கிடைப்பது தான் மக்களுக்கு தேவை.

மனிதன் விவசாயத்தை நம்பி வாழாமல் இரசாயன தொழிற்சாலைகளை நம்பியா வாழ்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஓடின மைலை விட நாங்கள் கொஞ்சம் தூர ஓடீட்டம் எண்டது உண்மைதான்....எங்களுக்கு செட்டில் ஆக வசதி இருந்தது...உங்களுக்கு அந்த வசதி இல்லை...இருந்திருந்தால்.?????

அரசியல் விரோதமில்லாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் உதவி செய்வோம் என்றதினால்தான் பல வீடுகளில் அடுப்பும் விளக்கும் எரிகின்றது என்பதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

அப்படி ஒரு வசது வந்தது 

ஹாஹா அப்படி அனுமதி தந்தும் உதறி விட்டு வந்தது எத்தனை வருடங்களுக்கு பாலைவனத்தில் பலியாகுவது என்று ( அரச விசா எந்த்தனை வருடங்களும் வேலை செய்யலாம் ஆனால் குடியுரிமை கொடுக்கப்பட மாட்டாது சம்பளமும் லட்சங்களை தாண்டி விடும் இறுதியில் பணம் மட்டும் மிஞ்சும் உறவும் மிஞ்சாது சந்தோசமும் மிஞ்சாது 6 வருடங்கள் அடி பணிந்தது போதும் என:104_point_left:

நீங்கள் பெருமிதம் அடைவதில் மிக்க மகிழ்ச்சி சாமி அண்ண:unsure:

19 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

அதான் உண்மை இப்ப தேங்காய் நூறு ரூபாயில் இருந்து 75 ரூபா விலை 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2018 at 5:34 PM, Jude said:

இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்படும் பொருளாதார முனேற்றம் காரணமாக இந்தியர்களும் சீனர்களும் தம் நாடுகளுக்கு திரும்பி போகிறார்கள்.

இது சீனர்களுக்கு முற்றிலும் உண்மை.

ஏனெனில், சீனர்களின் இருவகையான குடிபெயர்வாளர்கள் உண்டு.

ஒன்று தாமாகவே குடிபெயந்தவர்கள். மற்றது சீனவே சீனர்களை, முக்கியமாக மேலை நாடுகளுக்கு தொழிநுட்ப, நிர்வாக மற்றும் நிறுவன மயப்படுத்தும் அறிவையும் அனுபவ ரீதியாக பெறுவதற்கு அனுப்பியது.

ஆயினும், தற்போதைய சீனர்களின் தாய் வீட்டைல் நோக்கிய குடி வரவு என்பது தானாகவே குடிபெயந்தவர்கள் விரும்பி தாய் வீட்டுக்கு திரும்புவது, சீனாவின் ஆட்சியில் பல்வேறுபட்ட தனிப்பட்ட மனித உரிமைகள் அராசால் மதிக்கப்படாத நிலையிலும்.

இது, சீன அரசின், முக்கியமாக் க்ஸி ஜின்பிங் இன் தகுதி அடிப்படையிலான நவீன மயப்படுத்தும் கொள்கைகள் முழு மூச்சாக அமுல் செய்யப்படுவதால்.

சீனாவின் உள்நாடு நிர்வாகமும் தற்போது, முக்கியமாக நீதித் துறையும், சொத்து உரிமை சட்டங்களும் பெரும்பாலும் தனிப்பட்ட உரிமைகளை மிகவும் வலுப்படுத்தும் போக்கில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, சீன தொழில் நுட்ப துறையில் பல நிலைகளில் மேற்கத்தைய தொழில்நுட்பத்துடன் நிகராக அல்லது விஞ்சும் வகையிலும் உள்ளது.   

இது கிந்தியாவிற்கு பொருந்துமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

உங்கள் கருத்து உண்மைதான்

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக, ' சீனாவின் 2025 மட்டில் சுய உற்பத்தி' என்ற கேந்திர பொருளாதார கொள்கையை சீனாவை இறக்குமதி தீர்வை என்ற போர்வையில் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியை அளவிற்கு அமெரிக்கா ஆடிப்போயிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் கருத்து உண்மைதான்

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

மிகமிக அதிகரிக்கும்.அதைவிடை கனிசமான இளையோரும் தாயக வாழ்வை நேசிக்கிறார்கள்.இந்த தகவலும் இதே களத்தில் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

அத்துடன் வியட்நாம்  போரை சார்ந்தே  சீனர்களின் குடி  பெயர்வது  அதிகரித்தது அல்லது  தள்ளப்பட்டது

அதன்படி  பார்த்தால்  சீனர்கள்  தமது  பென்சன்  காலத்தை   தொட்டுவிட்டனர்

எனவே  அவர்கள்  கூடு  திரும்பவது  இயற்கை

இது  தாயகத்திலும்  தொடங்கியிருக்கிறது

இனி  மேலும்  மேலும்  அ◌திகரிக்கும்

 இங்கே எனக்கு தெரிந்து  பலர் ஓய்வூதிய காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். தருணம் வந்ததும் பெட்டிபடுக்கைகளுடன் சொந்த ஊரின் மடியில் வாழ்க்கையை தொடர்வர்.

நான் எப்பவோ திரும்பியிருப்பேன்.....திரும்பவும் மண்வெட்டி தூக்க தென்பில்லாத உடம்பு.:(

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மனிதன் விவசாயத்தை நம்பி வாழாமல் இரசாயன தொழிற்சாலைகளை நம்பியா வாழ்வது? 

சிங்கப்பூரில் எங்கே விவசாயம் நடக்குது? அங்கே மனிதன் வாழவில்லையா? "பாரம்பரியத்தை மறக்காத பூமி" என்று நீங்கள் பெருமைப்படும் பூமியிலும் பார்க்க சிங்கப்பூரில் மனிதன் வசதியாகவும் பாதுகாப்பாகவும் (வாள்வெட்டு குழுக்கள் அங்கே இல்லை ?.) வாழுகிறானே?

3 hours ago, குமாரசாமி said:

நான் எப்பவோ திரும்பியிருப்பேன்.....திரும்பவும் மண்வெட்டி தூக்க தென்பில்லாத உடம்பு.:(

மண்வெட்டி எதுக்கு அண்ணை? வளர்ச்சி அடைந்த நாட்டில் இருந்து போறீங்கள், சூரிய சக்தியில் வேலை செய்யும் உழவு இயந்திரத்தை கொண்டுபோவம் எண்டு கூட யோசிக்காமல்  பழைய மண்வெட்டிக்கு திரும்ப பார்க்கிறீங்கள்? எப்பவும் பின்னோக்கி போக தானா  விருப்பம் உங்களுக்கு?? நீங்கள் போனால் நாடு உருப்பட்ட மாதிரி தான்!

தமிழர்கள் கல்வி பல்வேறு தொழில்களையும் நாடியதாக பரந்துபட்டிருக்க வேண்டும்!
தற்போது இலங்கையில் தாதியர் பட்டப்படிப்பு கூட உள்ளதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.