Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கரைபற்றில் பதற்றம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கும்.                                                              ,,

நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு நகர வட்டாரங்களில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் காணி விற்றல் வாங்கல் தொடர்பாக பதட்டநிலை உருவாகிவருகிறது. முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆய்வுகளில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் துர் அதிஸ்ட்ட வசமான சூழலில் சில வார்தைகள் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். 
.
யழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிகளை தமிழரும் கிழக்கில் தமிழர் காணிகளை முஸ்லிம்களும் வாங்கும் போக்கு பொதுவாக அதிகரித்து வருகிறது. . வடக்கில் முஸ்லிம்கள் தமது காணிகளை தமிழருக்கு விற்க்க வேண்டாமென நான் எழுதியும் கோரிக்கை வைத்துமிருக்கிறேன். இது பொதுவான நீதியாகும். பாரம்பரிய நிலம் தொடர்பாகவோ அல்லது ஏற்கனவே விற்க்கப்பட்ட தனியார் நிலம் தொடர்பாகவோ தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே காணிப் பிரச்சினைகள் எழுந்தால் அவை நீதிமன்றத்தில் மட்டுமே தீர்துகொள்ளப்பட வேண்டுமென நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறேன்.

ஏற்கனவே தமிழரிடமிருந்து வாங்கிய நிலத்திற்க்கு வேலிபோடச் சென்ற முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். கண்டனத்துக்குரிய இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது. 
.
உலகில் ஒரே பிரதேசத்தில் இரண்டு அல்லது அதிக இனங்கள் வாழும் நாடுகளில் -உதாரணத்துக்கு வட அயர்லாந்து போன்ற இடங்களில் எல்லாம் இத்தகைய பிரச்சினைகள் உள்ளது. அண்மைக் காலங்களில் பொதுபலசேன போன்ற அமைப்புகள் இனங்களுக்கிடையிலான மாறுபட்ட குடிசன வளர்சி நிலம் கைமாறுதல் போன்ற அச்சங்களை முன்னிலைப்படுத்தி தமிழர் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஆபத்தான போக்காகும். வட அயர்லாந்து போன்ற பல்லின தேசங்களில் இத்தகைய அச்சங்கள் தீர்த்து வைக்கபட்டுள்ளது. மாறுபட்ட குடித்தொகை வளர்ச்சிப் பின்னணியில் நில உரிமைப் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் அதிகார பகிர்வு பிரச்சினைகள் தொடர்பாக புரட்டஸ்தாந்து (ஸ்கொட்டிஸ்) மற்றும் கத்தோலிக்க (ஐரிஸ்) இனங்களின் மத்தியில் அனுபவரீதியாக நிறைய ஆய்வறிவும் விதிகளும் நவீன தீர்வுகளும் எட்டப்படுள்ளன. . வடகிழக்கில் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் வட அயர்லாந்துபோன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம். 
.
தமிழரும் முஸ்லிம்களும் விற்று வாங்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றமும் பேச்சுவார்த்தை அரங்கும் அரசியல் தலமைகளும் சிவில் சமூகங்களின் சந்திப்புகளும் பத்திரீகைகளும், உள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யாரும் வன்முறையில் ஈடுபடுவது அனுமதிக்கப்படக்கூடாது.
.
அப்பம் பிரிக்க குரங்குகள் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

அவர்கள் திருப்பி வட்டியும் முதலுமாக தரும்போது எல்லாரும் தாராளமாக ஒப்பாரி வைக்கலாம்.

ஸ்ரீ லங்கா அரசின் தமிழருக்கு எதிரான போரில்  சில முஸ்லிம்கள் அரசுக்கு உதவியதை வைத்து முழு முஸ்லிம்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்றிய போது கை தட்டியவர்கள் பின்னர் முஸ்லிம்கள் மட்டுமல்ல  இப்படி வெளியேற்ற படாத தமிழ் "ஒட்டு குழுக்களும்" (தலைவரின் பாசறையில் பாசத்துடன் வளர்க்கப்பட்ட கருணா அம்மான் உட்பட)  இணைத்து ஸ்ரீ லங்கா அரசுடன் பூரணமாக ஒத்துழைத்து முற்றாக அழித்த போது வைத்த ஒப்பாரியை இவ்வளவு வேகமாகவா மறந்து விட்டீர்கள்?

மீண்டும் மீண்டும் அழிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் எந்த இனமும், மதமும், குழுமமும் தாமாக அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.  ஈழத்தமிழ் இனம் இவ்வாறு அழியும் இனத்துக்கான அனைத்து தன்மைகளையும் கொண்டு உள்ள ஒரு இனமாகவே தெரிகிறது.

கவிஞர் ஜெயபாலன் இந்த அழிவை தடுக்க அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த நாளில் இருந்து இன்றைய முதிர் பருவம் வரை தன்னால் ஆனதை செய்கிறார். ஆனால் என்ன செய்வது? "கெடு குடி சொற் கேளாது." என்ற தமிழ் முதுமொழி ஈழத்தமிழருக்காகவே உருவானதாக இருக்க வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வடக்கில் இருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியாற்றாது போயிருந்தால் 
அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ..... மற்றும் காத்தன்குடி பள்ளிவாசலுக்கு குண்டு வைத்த 
கருணை கொம்மான் எல்லாம் தமிழர் பக்கம் நின்று போராடி இருப்பார்கள் என்றால் ?

மியன்மாரில் இருந்து வெறிபிடித்த நாய்கள் மாதிரி குதற குத்தற கடிக்க 
தப்பி ஓடிய ரோகிஞ்சா மக்களை காப்பாற்ற எந்த நாயும் ஏன் போகவில்லை ? 

எப்பவும் ஆட்டுக்குள் கொண்டுவந்து மாட்டை விடுவதே பிழைப்பாய் போய்விட்ட்து.
நான் கொழும்பில் இருந்த நாட்களில் .... நான் இருந்த வீட்டில் இருந்து ஐ பி சி ரோட்டில் 
(எனக்கு எதுவுமே தெரியாது) வானுக்கு பெயிண்ட் அடித்துதான் பின்பு கூட்டுபடை தலைமையகத்தில் 
கொண்டுபோய் குண்டுடன் விட்ட்டார்கள். நான் ஓடிப்போய் கம்பகாவில் யாழில் இருந்து இடம்பெயர்ந்த 
முஸ்லீம் வீட்டில்தான் தங்கி இருந்தேன் ... ரஞ்சன் விஜயரடனாவுக்கு குண்டு வெடித்தபோதும் அங்குதான் 
போனேன். அப்போது வெள்ளவத்தை போலீஸ் அதிகாரியாக இருந்தவர் நல்லவர் ஒன்றும் செய்ய மாட்ட்டார் 
ஒருக்கா எல்லோரையும் அள்ளிக்கொண்டு போய் 3-4 நாள் அந்த ஜெயிலில் பூட்டி வைப்பார் .. அது மேலிடத்து ஓடர் அவர் அதை செய்து கொள்வார். அந்த ஜெயிலில் இருக்கும் அறுவெறுப்புக்காக தான் நான் கம்பாக ஓடுவது. 

ஆனாலும் இலங்கை பெரும்பான்மை முஸ்லீம்கள் தமிழ் விரோத எண்ணம் கொண்டவர்கள் 
இதை என்னிடம் முஸ்லிம்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சிற்றறிவுக்கு ஏற்ப அவர்களிடம் 
ஒரு எண்ணம் இருக்கிறது தமிழர்களை அழித்து இலங்கையில் இரண்டாம் இனமாக வாழ முடியும் என்று.

இந்திய பார்ப்பனர்கள் போல நாம் கை  ஓங்கினால் அப்பாவியாகி கெஞ்சுவார்கள்
யாரும் அப்பாவிகள் அவர்களிடம் தனியாக மாடினால்தான் அவர்கள் உண்மை முகம் தெரியும். 

யாழ்ப்பாணத்தில் ஒரு சில முஸ்லீம்கள் இராணுவத்துக்கு உடந்தையாக இருக்கவில்லை 
அப்பட்மாக பொய் பிரசஹகாரம் செய்யாதீர்கள் .......... காக்கைவெளியில்  இராணுவம் இறங்குவது இவர்கள் 
யார் யார் என்ன என்ன செய்வது என்று பள்ளி வாசலில் வைத்து திட்டம் எல்லோருக்கும் விளக்க பட்டு இருக்கிறது  ஊர்வாகத்துறையில் இராணுவம் இறங்க முழு வேவு வேலை செய்து கொடுத்தவர்களும் இவர்கள்தான். 

சாவகச்சேரியில் கைது ஆனது தற்செயலாக நடந்தது பக்கத்து தமிழ் கடைக்காரர்கள் சொல்லிக்கொடுக்க 
புலிகள் எதோ கிரானைடு வைத்திருக்கிறார்கள் என்றுதான் எண்ணிக்கொண்டு போனார்கள் .... கிடந்த ஆயுதங்களை பார்த்த பின்புதான் .... சரியான விசாரணைக்கு தொடங்கினார்கள். புலிகள் 3 நாட்கள் பிந்தி இருந்தால்  காக்கைதீவில் இராணுவம் இறங்கி கோடடையையும் மீட்டு யாழ் நகர் பூரா 1990யிலேயே கைப்பற்றி இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஐயா,

கிழக்கில் ஹிஸ்புல்லா, றிசாட் அடாவடிகள் குறித்தும் நீங்கள் பேசினால் நியாயமாக இருக்கும். தமிழர்கள் நியாயத்துக்கு ஆக, இனவாதியான, மட்டக்கிளப்பு சுமண தேரரிடம் போய் தீர்வு பெற வைத்தது இவர்களின் கைங்கரியம்.

இந்த சம்பவம், சிங்கள இனவாதிகள் ஆசீர்வாதம் இல்லாமல் நடக்க முடியாது.

நானும் முஸ்லிம்களுக்கு இடையே வாழ்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன். அவர்கள் தமது நலன்களை மட்டும் கருத்தில் கொண்டால், நிலைமை மோசமாகும். 

இன்று இலங்கையில், யுத்த நிலைமையினைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார வளத்தில் சிங்களவர்கள், தமிழர்கள் அனைவரையும் பின் தள்ளி இஸ்லாமியர்கள் வளர்ந்து விட்டது, சிங்களவர்களின் கண்களை உறுத்துகிறது.

மறுபுறத்தே, தமிழரிலும் பார்க்க சிறுபான்மையாக இருந்து கொண்டே, அரச திணைக்களங்களிலும், அமைச்சரவைகளிலும், பல இடங்களை அவர்கள் கைப் பிடித்து கொண்டுள்ளனர் என மனோ கணேசன் சொல்லுமளவுக்கு நிலைமை.

மேலும் மொழி வேறானாலும் பரவாயில்லை... அரபி மொழி பொதுவாக இருப்பதால், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என பலர் சுற்றுலா விசாவில் வந்து, உள்ளே கலியாணம் செய்து செட்டில் ஆகின்றனர். இந்த விஷயம் புரிந்ததும் அரசு அண்மையில் உசாராகி உள்ளது.

தமிழர்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. முஸ்லிம்கள் மடியில், பையில் நிறைய வைத்து உள்ளனர்.... அவர்கள் தான் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.... முக்கியமாக சிங்களவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள.
 

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு திருடப்படும் முஸ்லிம்களின் காணியும் சுய நல சமூகமும்

%255BUNSET%255D

செவிப்பறையைப் பிய்த்து விடுமளவிற்கு அலார மணியடித்தும் சுகமான மெத்தையில் சயனித்திருக்கும்
இந்த சமூகத்திடம் நீதி நியாயங்களை எத்தனை தூரம் எடுத்துச் சொல்வது?
 
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 40 கட்டையில் தனக்குச் சொந்தமான காணிக்கு வேலியமைக்கச் சென்ற முஸ்லிம் காணி உரிமையாளரையும் அவரது சகாக்களையும்  சில தமிழ் இனவாதிகள் கடுமையான அடித்து விரட்டியிருக்கிறார்கள்.
 
காணியைச் சுற்றிப் போடப்பட்ட தகரத்தை பிய்த்தெறிந்து, கட்டைகளால் அடித்து,மோட்டார் வாகனங்களை சேதப்படுத்தி ஒரு களேபரமே நடந்திருக்கின்றது. தாக்கப்பட்டவர்களில் சிலர் கல்முனை வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
 
காரணம் தமிழர்களின் பிரதேசத்தில் சோனி நீ காணி வாங்குவதா?
 
அப்பட்டமான கடைந்தெடுத்த இனவாதத்திற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை கூற முடியாது.
 
இதற்கு உடந்தையாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரும் இருந்திருக்கிறார் என நம்பகமான செய்திகள் சொல்கின்றன.
 
அக்கரைப்பற்றின் நாலா பக்கங்களிலும் தமிழர்களின் பிரதேசங்களில் முஸ்லிம்களின் நிலங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்களை விரட்டுவதற்கான பிரயத்தனங்கள் தமிழ் இனவாதிகளால் எடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.அந்த அடிப்படையில்தான் இந்த சம்பவம் பார்க்கப்படவேண்டும்.முஸ்லீம்களின் காணிகளை அபரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
இந்தச் சம்பவம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நடந்தேறியிருக்கிறது.முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் பிரதேசத்தில் கூட இதனைக் கட்டுப்படுத்தும் திராணி எமக்கில்லை என்றால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் எமது நிலங்களின் நிலையை சொல்லத் தேவை இல்லை.
 
இதில் வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விடயம் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே.
 
அடித்தவர்கள்,தூண்டியவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள் பொலீசார்.
 
இதுதான் பொலிஸாரின் தந்திரம்.பெண்களைக் கைது செய்து சமர்ப்பித்தால் பெண்கள் என்ற அடிப்படையில் பிணை கிடைக்கும்.அதன் பிறகு ஆண்களை கொண்டுவந்தால் பெண்களுக்குப் பிணை கிடைத்ததைச் சொல்லி ஆண்களுக்கும் பிணை எடுத்துவிடலாம்.
 
பிடிபட்டவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது  ,இந்த நிகழ்வை ஒரு இனவாதச் செயற்பாடாகப் பார்க்கவேண்டும் என்று  சட்டத்தரணி றதீப் அஹமட் வாதாடியும்  இப்பிரச்சினை இரண்டு குழுக்களுக்கிடையிலான காணிப்பிரச்சினையே ஒழிய இனவாதப்பிரச்சின அல்ல என்று நீதிபதி கூறி கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பிணை கொடுத்திருக்கிறார்.
 
இனியென்ன.பிடிபடும் அனைவரும் பிணையில் வெளிவருவார்கள். நூற்றோடு நூற்றி ஒன்றாக இந்த வழக்கும் இனி ஆகிவிடும்.பிணை கிடைக்கும் என்ற தைரியத்தில் இன்னும் பிழைகள் செய்வார்கள் அவர்கள்.
 
இங்குதான் எமது சமூகம் தவறிழைக்கிறது.ஒரு சமுகப் பிரச்சினையை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையாக இதைக் குறுக்கிய குற்றத்தை எமது சமூகமே இழைக்கின்றது.
 
இவ்வாறான சம்பவங்களின் போது முழு சமூகமும் தனது எதிர்ப்பைக்காட்டவேண்டும்.பிணைவழங்குவது நீதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட விடயம்.ஒரு நீதிபதி நடந்தேறிய குற்றம் சம்பந்தமாக ஒரு சமூக அழுத்தம் இல்லாதிருந்தால் இலகுவாக பிணை வழங்கிவிடுவார்.
 
குற்றவாளிகளை வெளியேவிடுவது ஆபத்து.சமூகம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது,அவர்களை வெளியே விடுவது பல பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிபதி உணர்ந்தால்தான் பிணையை அவர் மறுப்பார்.
 
அதனை உணர்த்தும் கடமை சமூகத்திற்குரியது.
 
அந்த சமூகம் இப்படியான விடயங்களில் கொந்தளிக்காவிட்டால் இது ஒரு வெற்று வளவுச் சண்டையாகப் பொலீசாராலும் நீதிமன்றத்தாலும் பார்க்கப்பட்டுவிடும்.சமுகம் கொந்தளிக்க வேண்டும் என்பது தமிழர்களின் கடைகளைப் போட்டு உடைப்பதோ அவர்களைத் தாக்குவதோ அல்ல.முழுச் சமூகமும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்திற்கும் பொலீசாருக்கும் அழுத்தம் கொடுப்பது.
 
கைது செய்யப்பட்டவர்களைக் கொண்டு வரும்போது நீதி மன்ற முன்றலில் நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்,அனைத்து முஸ்லிம் சட்டத்தரணிகளும் இந்த  வழக்கிற்காக எழுவது,நீதமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது,காடையர்களைக் கைது செய்யும்படி பொலீசாருக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற செயற்பாடுகள் நீதிமன்றத்தை பிணை கொடுப்பதில் இருந்து தடுத்துவிடும்.அக்கரைப்பற்று மாநகர சபை இதில் தலையிட்டு பொலீசாருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.மாநகர சபை உறுப்பினர்கள் வீதிக்கு வந்திருக்க வேண்டும்.இப்படித்தான் ஒரு சமுகப்பிரச்சினையை ஒரு சமூகமாக எதிர்கொள்வது.
 
ஆனால் எதுவுமே நடக்காததுபோல் இருப்பதும்,இது எனது கட்சிக்காரன் அல்ல ஆகவே எனது பிரச்சினை அல்ல என்பதும்,எனக்கு இப்போது பதவி இல்லை ஆகவே நான் எதுவும் செய்யமாட்டேன் என்பதும்,இது எனது காணியல்ல எனக்கேன் வம்பு என்றிருப்பதும்,எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கும் இந்தக் கோழைத்தனங்கள்தான் இனவாதிகள் எம்மீது அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான காரணங்கள்.
 
இந்த சுயனலம்தான் எம்மை அழித்துவிடப்போகிறது.
 
ஒரு சமூகப் பிரச்சினையை சமூகமாக எதிர்கொள்ளுங்கள்.
 
இனி கைது செய்யப்படப்போபவர்களையாவது பிணை கொடுக்க விடாமல் ஒரு சமூகமாக நின்று ஒற்றுமையாகப் போராடுங்கள்.
 
ராஸி முகம்மத் ஜாபிர் ( குரல் அமைப்பு)
 
www.madawalaenews.com
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகிறார்?

பிணை கேட்பது ஒருவரது சட்டபூர்வமான உரிமை. அதில் இவருக்கு என்ன பிரச்சணை?

காணி விசயத்தில் பிணக்கெண்டால், விவேகத்துடன் பேசித் தீர்வை காணவேண்டும் என்று அறிவுறுத்தாமல், நவீன மாதன முத்தா ஸ்ரைலில அறிவுரை கொடுக்கிறார். யாரு இவரைக் கேட்டது?

பிரச்சணை பட்ட காணிகாரர், மீண்டும் தமது காணிக்கு போகவேண்டாமா.?

ஜடியா சொல்லுறார், ஜடியா.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/19/2018 at 6:05 PM, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

உது எப்பவோ தெரிஞ்ச விசயந்தானே...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை, முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம் - அக்கறைப்பற்றில் துண்டுப்பிரசுரம்

அக்கறைப்பற்றில் வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்



 

index.jpg
 
 

"முஸ்லிம் இனவாதிகளே" எனக்கூறி, தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை

 
 
'முஸ்லிம் இனவாதிகளே...' எனக்கூறி தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை
 
index.jpg

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2018 at 11:31 PM, Jude said:

அவர்கள் திருப்பி வட்டியும் முதலுமாக தரும்போது எல்லாரும் தாராளமாக ஒப்பாரி வைக்கலாம்.

ஸ்ரீ லங்கா அரசின் தமிழருக்கு எதிரான போரில்  சில முஸ்லிம்கள் அரசுக்கு உதவியதை வைத்து முழு முஸ்லிம்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்றிய போது கை தட்டியவர்கள் பின்னர் முஸ்லிம்கள் மட்டுமல்ல  இப்படி வெளியேற்ற படாத தமிழ் "ஒட்டு குழுக்களும்" (தலைவரின் பாசறையில் பாசத்துடன் வளர்க்கப்பட்ட கருணா அம்மான் உட்பட)  இணைத்து ஸ்ரீ லங்கா அரசுடன் பூரணமாக ஒத்துழைத்து முற்றாக அழித்த போது வைத்த ஒப்பாரியை இவ்வளவு வேகமாகவா மறந்து விட்டீர்கள்?

மீண்டும் மீண்டும் அழிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் எந்த இனமும், மதமும், குழுமமும் தாமாக அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.  ஈழத்தமிழ் இனம் இவ்வாறு அழியும் இனத்துக்கான அனைத்து தன்மைகளையும் கொண்டு உள்ள ஒரு இனமாகவே தெரிகிறது.

கவிஞர் ஜெயபாலன் இந்த அழிவை தடுக்க அவர் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த நாளில் இருந்து இன்றைய முதிர் பருவம் வரை தன்னால் ஆனதை செய்கிறார். ஆனால் என்ன செய்வது? "கெடு குடி சொற் கேளாது." என்ற தமிழ் முதுமொழி ஈழத்தமிழருக்காகவே உருவானதாக இருக்க வேண்டும்.

வட்டி முதல் எல்லாம் பிறகு பார்க்கிரது அது முஸ்லீமுடைய காணியாக இருக்கலாம் காணி பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் போது அதற்குள் அத்து மீறி நுளைவது குற்றம் 40 ம் கட்டை பகுதியில் சின்ன களப்பு , பெரிய களப்பு பகுதிகளை காணியை மீறி வேலி போட்டதால் வந்த பிரச்சினைதான் அது நாள் தோறும் கை கடுக்க மீன் வீசி விற்பவனுக்குத்தான் அந்த தொழிலின் வலியும் வேதனையும் தெரியும் எல்லாம் தெரிஞ்சால் போல் டைப்படிச்சுப்போடுவதில்லை அப்பு  அந்தக்களப்பை நம்பித்தான் அங்கே 40 க்ட்டை , தம்பட்டை . தம்பிலுவில் , திருக்கோவில் சனம் வாழுது இவங்கள் காத்தான் குடிக்கு மேற்குப்புறத்தே குப்பை போட்டு போட்டு நிரப்பி எடுப்பது போல் எடுத்தால் அந்த மக்கள் எங்கே போவது  பாவம் அவங்களுக்கு வேறு  தொழிலும் தெரியாது விவசாயம் , வலை வீச்சு மாத்திரம் மட்டுமே இல்லாட்டால் விற்றுபோட்டு ஐரோப்பாவில இல்ல அமெரிக்காவில் குடியேற வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தால் சொல்லுங்க வேற என்ன செய்வது ?

அதென்னப்பா கர்ணா மட்டுமா துரோகி நான் கேட்கிறேன்  அந்தக்கால தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு தீர்வு என்று மாலை போடுறவர்கள் அந்தக்காலத்தில் பல உல்டா வேலை செய்து விட்டு ஓடுனவர்கள் எல்லாம் புனிதர்களா??  சொல்லுங்க பார்ப்போம் சந்தர்ப்பம் சூழ் நிலையும் நல்லவன் கெட்டவன் ஆவதும் கெட்டவன் நல்லவன் ஆவதும் சகஜமே சார்

கவிஞர்ருக்கு அக்கறை இருக்கலாம்   ஊரில் அவருக்கு நல்ல முஸ்லீம், நண்பர்கள் இருக்கிறார்கள் போல் அவர்களும் சந்தர்பத்துக்கேற்றால் போல தான்  கல்முனையில் நடந்த ஆர்ர்ப்பாட்டம் ஐயாவுக்கு தெரியாது போல் மற்றும் கண்டிக்கலவரம் ,அம்பாறைக்கலவரம் ஐயாக்கு தெரியும் தானே  சிங்களவனுக்கு தமிழ் தெரியாது தெரிந்திருந்தால் சிலநேரம் நிற்பாட்டி இருப்பான்  இனவாத கோபத்தில் எவனையும் பார்ப்பதில்லை யென்பது ஐயாவுக்கு நன்கு தெரியும் 

முப்பதாண்டு முன்னர் நடந்தகலவரத்தில் வானுக்கு தீ மூட்டிவிட்டு அதன் முன் ஆடிய சம்பவங்களும் உண்டு சார்  

 

1 hour ago, குமாரசாமி said:

உது எப்பவோ தெரிஞ்ச விசயந்தானே...tw_glasses:

நமக்கு இப்பதான் கொஞ்ச கொஞ்சமா தெரியவருகிறது சாமியார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தமிழர்களை, முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்த வேண்டாம் - அக்கறைப்பற்றில் துண்டுப்பிரசுரம்

அக்கறைப்பற்றில் வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்



 

index.jpg
 
 

"முஸ்லிம் இனவாதிகளே" எனக்கூறி, தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை

 
 
'முஸ்லிம் இனவாதிகளே...' எனக்கூறி தமிழ் இளைஞர் படையணி விடுத்துள்ள எச்சரிக்கை
 
index.jpg

இவரை யார் தமிழரரின் ஏரியாவிற்குள் வீடு வாங்க சொன்னது?...கொஞ்சம்,கொஞ்சசமாய் தமிழரது நிலத்தை புடுங்குறத்திற்கு படுற பாடு 

 

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்று இருந்தேன்.

கொழும்பில் நண்பர் ஒருவரிடம் சென்று இருந்தேன்.  வீடு மாறும் முனைப்பில் இருந்தார்.

அவர் ஒரு சதுர காணித் துண்டில் இடது பக்க மேல் மூலை சதுரத் துண்டில் வீடு வைத்திருக்க, மீதமிருக்கும் L Shape காணியில் ஒரு முஸ்லீம் வியாபாரி. இவரது துண்டு காணியை தனக்கு தருமாறு, நச்சரித்துக் கொண்டிருந்தாராம்.

வேறு காணி கிடைத்தால் தருவதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு சிங்கள பெண். அதே தெருவில், நண்பருடையதை விட, இன்னும் பெரிய அளவு காணி விற்பனை செய்ய, வியாபாரி போய் கேட்க.... அவரோ விற்பனைக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அவர் இவரிடம் வந்து, அந்த வீட்டினை நீ வாங்கேன்.... நான் இதை வாங்கிறேனே என்று சொல்ல... இவர் போய் கேட்க்க அவர் ஒரு விலை சொல்லி இருக்கிறார். மேலும் தமிழருக்கு சும்மாவே கொடுத்தாலும்... அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். (என்ன காரணமோ?)

மேலும் அவர் சொன்ன விலை.. இவரது வீட்டுக்கு வியாபாரி கொடுக்க தயாரான விலையிலும் பார்க்க குறைவு என்பதால்.... வாங்கி விட்டார்.

கடைசியில்.... ஏதோவகையில்... இவரை வெளியே அனுப்பி..... முழு சதுர காணிக்கும் சொந்தக் காரராகி விட்டார்....

இதுதான் இலங்கை முழுவதும் நிலை..

றிசாட் வில்பத்து, பாதுகாக்கப்பட்ட காடுகளில் கை வைத்தார். மாட்டியதும்... முல்லைத்தீவு காட்டில் கை வைத்தார்.

இராக் சதாம் தலையில் ஏதோ மிளகாய் அரைத்து... கிழக்கில் சதாம் நகர்.... பின்னர் இப்போது சவூதி பணக்கார்கள்.....

ஹிஸ்புல்லா, 5 ஏக்கர் நிலத்தினை மடக்கி.... அரபிக் கல்லூரி அமைக்கிறார். உபயம் சவூதி ஷேக்குகள்..

1 hour ago, Nathamuni said:

 

 

 

இதுதான் இலங்கை முழுவதும் நிலை..

றிசாட் வில்பத்து, பாதுகாக்கப்பட்ட காடுகளில் கை வைத்தார். மாட்டியதும்... முல்லைத்தீவு காட்டில் கை வைத்தார்.

..

இப்பொழுது அதுவும் மாட்டு பட்டு விட்டது.

அதனால் தான் இப்பொழுது கிளிநொச்சியில் கை வைத்துள்ளார் போல் உள்ளது....!!!! 

ஆனால் சில நாட்களாகவே நானா சைலண்டகி விட்டார்.

தாதா பிக்கு ஞானசாரரையே உள்ளுக்குள் நீதி மன்றம் தள்ளியதால் அடுத்தது தான் தான் என்ற பயம் வந்துட்டுது போல...!!!!

 

On 6/19/2018 at 5:05 PM, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களுக்கு அடி விழுந்தால் பொயட் மட்டும் அங்கு நிற்கிறார்  :35_thinking:

ஒரு ரம்சான் பிரியாணிக்காக இப்படியா ....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் போன்றோர் முஸ்லீம்கள் 40 வருடத்திற்கு முன்பு இருந்தது போல் இப்பொழுதும் உள்ளார்கள் என நினக்கின்றார்கள். தற்காலத்தில் இலங்கையில் வாழும் மிகவும் ஓர் சுயநலமான ஓர் சமூகமாக மாறிவிட்டார்கள். 

இப்பொழுது இருக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கூட மதவாதிகளாகவும் / தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களாகவுமே உள்ளார்கள். சமீபத்தில் ஓர் கணொலியில் 'லாகிலாஹ இல்லல்லா மொகம்மது ரசூலுல்லா' என்று கலிமா கூறிய முஸ்லீம்கள் மாத்திரம்தான் இந்த பூமியில் வாழத்த்குதியானவர்களாம். மற்றவ்ர்கள் எல்லோரும் காபீர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாம் என அந்த மதகுரு கூறுகின்றார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தவரை முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக போகவேண்டும், முஸ்லிம்களுக்கு நாம் துரோகமிழைத்துவிட்டோம் என்று கதறி தன் பெயரை பிரபல்யபடுத்தும் தமிழர்களே அதிகம்... ஆனால்..

தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டே தமிழரை கொன்றோம், அவர்களை காட்டி கொடுத்தோம்,ஒரேமொழி ஒரே பிரதேசம், ஒரே சமூகவட்டம் என்று வாழ்ந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழரை பலவீனபடுத்த சிங்களவருடன் சேர்ந்து நின்றோம் அது தவறு என்று எந்த முஸ்லீமும் ...

கட்டுரையோ...கவிதையோ...கருத்தோ சொன்னதேயில்லை...

அடிவாங்கினது நாமாக இருந்தாலும், அடித்தவனை அணைத்துபோக சொல்லும் எருமைமாட்டு இனம் உலகில் நாமாக மட்டுமே இருக்க முடியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.