Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!!

Featured Replies

ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!!

 

 

 

IMG-20180806-WA0002.jpg

 
 
 

வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகளை அழைத்து கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் அழைக்கச் சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

IMG-20180806-WA0001.jpgIMG-20180806-WA0000.jpgDSC07036-750x430.jpgDSC07035-750x430.jpgDSC07034-750x430.jpgDSC07033-750x430.jpgDSC07032-750x430.jpg

http://newuthayan.com/story/10/ஏ-9-வீதியில்-கோர-விபத்து-தாயும்-வெளிநாட்டிலிருந்து-வந்த-மகளும்-உயிரிழந்த-சோகம்.html

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்காவில் இருந்து நேரா ஊர் போகவேண்டும் என்று, டிரைவர் இரவோட இரவா ஓடி வராதும்.... ஓய்வெடுக்காமல், திரும்புவதும், இப்படி விபத்துகளுக்கு காரணமாகின்றது. பார ஊர்தி நிறுத்தியிருப்பதை தூரத்திலே அவதானிக்க முடியாத தூக்க கலக்கம். 

மதுவைப் போல, நித்திரை கலக்கமும் கொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கட்டுநாயக்காவில் இருந்து நேரா ஊர் போகவேண்டும் என்று, டிரைவர் இரவோட இரவா ஓடி வராதும்.... ஓய்வெடுக்காமல், திரும்புவதும், இப்படி விபத்துகளுக்கு காரணமாகின்றது. பார ஊர்தி நிறுத்தியிருப்பதை தூரத்திலே அவதானிக்க முடியாத தூக்க கலக்கம். 

மதுவைப் போல, நித்திரை கலக்கமும் கொல்லும்

அடிக்கடி விபத்துக்கள் கொழும்பிலிருந்து தூக்க கலக்கத்தில் வரும் வாகனங்களே அடிபடுகின்றன 

ஆழ்ந்த அனுதாபங்கள் ஊரைப்பார்க்க பல ஆசைகளுடன் வந்திருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நேருக்கு நேர் மோதுவது வேறு, நித்திரை மயக்கத்தில் வீதியில் நிறுத்தி இருந்த வாகனத்தை பின்னால் வந்து மோதுவது வேறு.

தவறு வான் டிரைவரது தான். 

மேலை நாடுகளில் பார ஊர்தி இயக்குபவர்கள், ஒருநாளுக்கு இவ்வளவு நேரம் தான் ஓடவேண்டும் என்ற சட்டபூர்வ வரையறை உள்ளது.

எங்கே, எத்தனை மணிக்கு கிளம்பினார், எங்கே ஓய்வு எடுத்தார் என்ற பதிவு, டிரைவரிடமும், கம்பனியில் உள்ள அவரது மனேஜரிடமும் மிகச் சரியாக இருக்க வேண்டும். 

ஒரே மாதிரி இல்லாவிடில், அபராதம், லைசன்ஸ் ரத்து. மேலாக, கம்பனி தன்னை விரைந்து செல்ல தூண்டுகிறது என போலீஸாரை டிரைவர் அழைத்தாலும், தூண்டியவர் உள்ள போவார் என்பதால் எல்லாம் ஓர் ஒழுக்கமான முறையில்.

டிரைவருக்கு ஓவர்ரைம் ....? சட்டபூர்வமான தடை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

0.3 மதுசாரம் அவரது சுவாசத்தில் கலந்திருந்தால் வாகனமோட்டும் திறனில் மாற்றமேற்படும் அதனால் வீதியைப்பற்றிய எதிர்வுகூறலும் அதன்பின்னதான செயற்பாடும் வழமையானதாக இருக்காது.  

தொழில்முறைச் சாரதி ஒருவரது  நாலு மணிநேர வாகன ஓட்டுதலுக்குப்பின்பு ஆகக்குறைந்தது இருபது நிமிடம் அதிகூடயதாக நாற்பத்து ஐந்து நிமிடம்  ஓய்வு கட்டாயம் எடுத்தல்வேண்டும் ஆனால் இருபத்துநாஙு மணிநேரத்தில் ஒன்பது மணிநேரம் மட்டுமே வாகனம் ஓடலாம் (அதாவது பயணிகளை ஏற்றிக்கொண்டு) இந்த ஒன்பது மணிநேரத்தில் மேற்கூறிய 45 நிமிட ஓய்வுநேரம் அவரால் எடுத்திருக்கப்படல்வேண்டும்.

வாகனம் அனைத்தும் வருடத்து ஒருதரம் போக்குவரத்துக் கண்காணிப்புக்கட்டுப்பாடளரால் தகுந்தமுறையில் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதுடன் மட்டுமல்லாது பொதுப்போக்குவரத்துக்கான முதலுதவி அவசர வெளியேற்றல் மதுசாரச் சோதனைக்கருவி, சாரதீய வரைகருவி ( பயணகாலம் வாகனசாரதியின் விபரம் வேகம் ஓய்வுநேரம் ஆகியற்றைச் சரியானமுறையில் காட்டும்) பொதுப்போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திரம் ஐரோப்பிய ஒன்றிய சட்டவரைவுகளுக்கமைவான பொதுப்போகுவரத்துப்பயிற்சி முடித்ததற்கான சான்றிதளட்டை இவைகள் அனைத்தும் உள்ளடக்கியிருக்கவேண்டும். 

தவிர முக்கியமான சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அதன்போது கடைப்பிடிக்கவேண்டிய பிற விடையங்கள் ஆகியவற்றைக் கவனிக்காத வாகன சாரதிகள் அனைவருமாகக்கூடிய தண்டப்பணம் அறவிடப்படும்.

பொதுப்போக்குவரத்துப்பாதைகள் வாகன நெரிசலைக்கவனமெடுத்து கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குத் தடைசெய்யப்படும்.

வாகனச் சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரப் ப்ரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படும். புதிய நியமங்கள் உள்வாங்கப்படும் இவை அனைத்தையும் இலங்கையில் கடைப்பிடித்தால் இலங்கையில் ஓடும் டொல்பிஙள் அனைத்தும் பேரீசம்பழத்துகு விற்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பிழை பாரஊர்திகாரனில்த் தான் .ஒரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அதற்கு பின்னால் அடையாளப்படுத்த வேண்டும்.குறைந்தது மின்னிமின்னி எரிகிற வெளிச்சத்தை என்றாலும் போட வேண்டும்.

இதற்கப்புறம் தான் இடித்தவரின் பக்கம் திரும்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏ 9 உயிர்ப்பலி எடுக்கிற வீதிகளில் முதன்மையானது.

மேலும்.. நீண்ட தூரப் பயணப் பாதையில்...வேகமாக வாகனங்கள் பயணிக்கும் சூழலில்..  வாகனங்களை வீதி ஓரத்தில் நிறுத்த அனுமதிப்பது போன்ற முட்டாள் தனங்கள் பல உயிர்களைக் காவு கொண்டுள்ளன.

சொறீலங்கா வீதி விதிமுறைகள்.. காலத்தேவைக்கு ஏற்ப நடக்கும் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் மாற்றி அமைக்கப்படுவதில்லை.

நெடுஞ்சாலைகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வாகனத் தரிப்பிடம்.. அல்லது ஓய்விடத்தை அமைத்துக் கொடுப்பதன் வாயிலாக.. இப்படியான சம்பவங்களை கணிசமாகக் குறைக்கலாம். அத்தோடு உள்ளூர் மக்களின் வியாபாரத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கலாம்.

ஏ9 சாலை ஆண்டுக்கு அள்ளித்தரும் வருமானத்தில் ஒரு 10 சதவீதத்தை போட்டாலே.. இந்த விடயத்தை இலகுவாகச் சாத்தியமாக்கலாம்.

ஆசாதாரண சூழ்நிலையில்.. தெளிவாக வாகனம் நிறுத்தப்படுவது வேகமாக வரும் வாகனங்களின் சாரதிகள் பாதுகாப்பான தூரத்தில் உணரத்தக்க சமிக்ஞைகள் கொண்டு நிறுத்தப்படுவது தவிர.. வீதியோர வாகன நிறுத்தங்களுக்கு முற்றாகத் தடை போட வேண்டும். தவறுபவர்களின் வாகன அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும். 

குறிப்பாக இராணுவ.. கடற்படை.. விமானப்படை.. வாகனங்கள் பொதுமக்கள் பயணிக்கும் வீதிகளில் பயணிக்க தடை போட வேண்டும். மேலும்.. இராணுவ வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு கடும் கண்டிப்பான கட்டளைகள் வழங்குவதோடு.. மீறுபவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுதல் வேண்டும். குற்றம்.. புரிவோர் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ?

இவை எல்லாம் சொறீலங்காவில் உணரப்படுமே.. அது தான் திருந்துமா...???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

ஒரு பேருந்துக்கு பின்னால் சென்றுகொண்டு இருந்தால் 
பேருந்து ஓட்டுனருக்கு நிறுத்தி இருந்த வாகனம் தெரியும் 
பின்னால் செல்பவருக்கு தெரியாது. பேருந்து ஓட்டுனர் 
அருகில் சென்றதும்  வெட்டி எடுத்து விடுவார். இவர்களுக்கு திடீரெனெ 
தோன்றும் வாகனம் .... நேர் எதிர் திசையில் இருந்து என்ன வருகிறது என்று எதுவும்தெரியாது 
அந்த குழப்பத்தில்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன. 

இதை பார்க்கும்போது வான் ஓட்டுநர் பிரேக் அடிக்கவில்லை 
போல தெரிகிறது ..... ஒரு வேளை வெட்டி எடுத்துவிடலாம் என்று 
நம்பியிருப்பர் ... இடைவெளி போதுமானதாக இல்லாமல் 
சென்று மோதியிருக்கலாம்.

வேகமாக போவது என்று முடிவு எடுத்தால் ...
இடைவெளி 
எதிர்பாராத விடயங்களை 
எப்போதும் கடைபிடிக்க எதிர்பார்க்க வேண்டும்.  
இடைவெளி ரொம்ப அவசியம் 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்கள்

Image may contain: one or more people, people walking and outdoor

புலம்பெயர்ந்து பல வருடங்கள் கழிந்து தாயகத்து உறவுகளை காண ஊர் வரும் நண்பர்கள் , உறவுகள் சொந்தங்களே கொழும்பிலிருந்து வரும் போது பேருந்துகளையோ, அல்லது புகைவண்டிகளையோ பயன்படுத்துங்கள்

உங்கள் அவசர பயணம் விபரீதமாக அமைந்து விடுகிறது வெளிநாடுகளில் கூட இப்படி விபத்துக்கள் அதிகமாக நடப்பதில்லை ஆனால் இலங்கையில் மட்டும் அதிக விபத்துக்கள் எவ்வளவு தண்டப்பணம் விதித்தாலும் தடைகள் விதித்தாலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை .

ஒரு சொகுசு வானை வாடகைக்கு எடுத்து வருவதால் உங்களை உசத்தியாகவோ அல்லது மேலை நாட்டுக்காராகவோ நினைக்க வேண்டாம் .

வாகன உரிமையாளர்களோ தற்போது வெளிநாட்டிலிருந்து பலர் வருகை தருவதால் சாரதிகளை மாற்றாமலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் அவர்களையே மீண்டும் மீண்டும் பணியில் அமர்த்துவதால் சோர்வாகி போகும் போதிலும் தூக்க கலக்கத்திலும் விபத்துக்கள் கண் இமைக்கும் பொழுதில் நடந்து விடுகிறது.

நடந்த பிறகு இன்னொருவரை குற்றம் சாட்டி பலன் இல்லை ஆக முறையான பயணத்தை கையாண்டு பயணத்தை தொடருங்கள் உறவுகளை சந்தியுங்கள் சந்தோஷ்மாக உங்கள் விடுமுறையை கழித்து விட்டு செல்லுங்கள் .

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களின்ரை ஆக்கினை பெரிய ஆக்கினை.....மூலைக்கு மூலை கமராவை வைச்சுக்கொண்டு நிப்பாங்கள். இழுத்து ஓடேலாது......கொஞ்சம் ஸ்பீட் எண்டால் பின்னாலை வந்து நிப்பாட்டி காசு கட்டெண்டு நிப்பாங்கள்.
இப்ப அந்தமாதிரி இழுத்து ஓடலாம்....ரோட்டும் அந்த மாதிரி.....அங்கை பிரச்சனை எண்டு இஞ்சையிருந்து கத்துறவங்களை இழுத்துப்போட்டு மிதிக்கோணும்.

அநியாயமாக மரணித்த அந்த உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இன்று இருந்தால் கிளிநொச்சியில் விபத்துக்கள் நடந்திருக்கமாட்டது. வேகமாக வாகனத்தினை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கந்தப்பு said:

அவர்கள் இன்று இருந்தால் கிளிநொச்சியில் விபத்துக்கள் நடந்திருக்கமாட்டது. வேகமாக வாகனத்தினை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்திருப்பார்கள்.

வெறும் அபதாரம் விதிப்பதால் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியுமா?

கட்டுனாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் 380 கி.மீ. இந்த பாதையை ஓடி முடிக்க  8-9 மணி நேரம் எடுக்கிறது.

இதையே அதிவேக நெடும்சாலை போட்டால் 4 மணி நேரம் போதுமானது.

அவசர அவசரமாக யாழுக்கு புகையிரதத்தை ஓட வைத்தவர்கள்.ஏன் இன்னமும் நெடுஞ்சாலைகளை அமைக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

விபத்துக்கள்

Image may contain: one or more people, people walking and outdoor

புலம்பெயர்ந்து பல வருடங்கள் கழிந்து தாயகத்து உறவுகளை காண ஊர் வரும் நண்பர்கள் , உறவுகள் சொந்தங்களே கொழும்பிலிருந்து வரும் போது பேருந்துகளையோ, அல்லது புகைவண்டிகளையோ பயன்படுத்துங்கள்

உங்கள் அவசர பயணம் விபரீதமாக அமைந்து விடுகிறது வெளிநாடுகளில் கூட இப்படி விபத்துக்கள் அதிகமாக நடப்பதில்லை ஆனால் இலங்கையில் மட்டும் அதிக விபத்துக்கள் எவ்வளவு தண்டப்பணம் விதித்தாலும் தடைகள் விதித்தாலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை .

ஒரு சொகுசு வானை வாடகைக்கு எடுத்து வருவதால் உங்களை உசத்தியாகவோ அல்லது மேலை நாட்டுக்காராகவோ நினைக்க வேண்டாம் .

வாகன உரிமையாளர்களோ தற்போது வெளிநாட்டிலிருந்து பலர் வருகை தருவதால் சாரதிகளை மாற்றாமலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் அவர்களையே மீண்டும் மீண்டும் பணியில் அமர்த்துவதால் சோர்வாகி போகும் போதிலும் தூக்க கலக்கத்திலும் விபத்துக்கள் கண் இமைக்கும் பொழுதில் நடந்து விடுகிறது.

நடந்த பிறகு இன்னொருவரை குற்றம் சாட்டி பலன் இல்லை ஆக முறையான பயணத்தை கையாண்டு பயணத்தை தொடருங்கள் உறவுகளை சந்தியுங்கள் சந்தோஷ்மாக உங்கள் விடுமுறையை கழித்து விட்டு செல்லுங்கள் .

நம்ம யாழ்ப்பாணம்

 

 கொண்டுபோற பெட்டி சுமைகளை 
பஸ்ஸுக்கும் ரயிலுக்கு சுமந்து தெரிய வேண்டும் அல்லவா ?
அதுக்கு ஏதும் வழி  இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 கொண்டுபோற பெட்டி சுமைகளை 
பஸ்ஸுக்கும் ரயிலுக்கு சுமந்து தெரிய வேண்டும் அல்லவா ?
அதுக்கு ஏதும் வழி  இருக்குமா ?

கட்டுநாயக்கா விமான நிலையம் அருகே அரச பேருந்துகள் தரித்து நிற்கின்றன  மட்டக்களப்பு ,கல்முனைக்கு ஆனால் வடக்கு பக்கம் என்ன மாதிரியென்று அறிய முடியல ஆனால் யாழ்ப்பாண பேருந்து நிலையம்  விமான நிலையத்துக்கு பஸ்களை போக்குவரத்துக்கு விட முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக இன்ரசிற்றி எக்பிரஸ் ரயிலை, இரவு 11:30/ 11:45 மணிக்கு இருபக்கமும் ஓட்டலாமே, சனமும் பகல்நேரத்தை சேமிப்பதுடன், பாதுகாப்பாக இரவில் பயணிக்கலாம, அரசுக்கும் வருமானம் என்று ஒரு ரயில்வே உயர்பதவியில் உள்ள நணபருக்கு சொன்ன போது, இரு பக்கமும் பார்த்து விட்டு சிரித்தவாறே சொன்னார்; பஸ் ஓனர்களில் பலர் அமைச்சர்கள், அதுதான் விசயம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் எத்தனை நடந்து விட்டது. வாகன ஓட்டுனர்களின் அசட்டைதனமே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறையும் இப்படி விபத்துக்கள் நட்க்கையிலை சமூக ஊடகம்கள் தொடக்கம் இங்கு யாழ் வரை கருத்துக்கள் பயங்கரமாய் ஓடி விளயாடும் கொஞ்ச நாள் போனபின் மறந்துவிடுவார்கள் பின் அடுத்த விபத்து நடக்கும்மட்டும் அமைதியாய் போகும் ஆனால் இந்த விபத்தால் நடந்த பட்டறிவை கொண்டு அடுத்த விபத்துக்களை  தவிர்க்க முடியாமல் தொடர்வது படு கேவலமாய் இருக்கும் . இந்த கொழும்பு யாழ் வீதியில் முறையான தரிப்பிடமின்ரி வீதியின் பக்கத்தில் ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் நின்ற பாரவூர்த்திகளால் இதுவரைக்கும் 10க்கும் மேல பாரதூரமான உயிரழப்புடன் கூடிய விபத்துக்கள் நடந்துள்ளன .திருந்துவதுக்கு சான்ஸ் இல்லை . ஆனையிறவு தாண்டியவுடன் யாழ் வந்துவிட்டம் எனும் உந்துதல் இன்னும் வேகமாக ஓடியிருக்கிறார் யுத்தம் முடிந்தபின்னரும் யுத்தத்தின் போது உயிருக்கு குடுத்த மதிப்பு இன்னும் தொடர்கிறது போல் உள்ளது ..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

வெறும் அபதாரம் விதிப்பதால் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியுமா?

கட்டுனாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் 380 கி.மீ. இந்த பாதையை ஓடி முடிக்க  8-9 மணி நேரம் எடுக்கிறது.

இதையே அதிவேக நெடும்சாலை போட்டால் 4 மணி நேரம் போதுமானது.

அவசர அவசரமாக யாழுக்கு புகையிரதத்தை ஓட வைத்தவர்கள்.ஏன் இன்னமும் நெடுஞ்சாலைகளை அமைக்கவில்லை?

வீதி ஒழுங்குகளுக்கு மேலைத்தேய நாடுகளிலும் அபராதம் எனும் பெயரில்தான் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்கள். அடிதடிகளை பிரயோகிக்க மாட்டார்கள். வீதிகளின் நிலவரம் இரண்டாம் பட்சம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.