Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபயத்தை தகர்க்கும் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவி…

Featured Replies

இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபயத்தை தகர்க்கும் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவி…

இந்து சமுத்திரத்தில் சீனா தனது மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா இலங்கைக்கு 39 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

வெளிநாட்டு இராணுவநிதியுதவியின் கீழ் இந்த தொகையை காங்கிரஸின் அனுமதியுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கும் என கொழும்பிற்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.தமது இந்த பங்களிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெளிப்படையான விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கமைப்பை உறுதிசெய்வதற்காக தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய நாடுகளிற்கு வழங்கவுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவியின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு அமெரிக்கா இந்த நிதியை வழங்குகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவின் நம்பகம் மிக்க நாடுகளின் வட்டத்துள் கொண்டுவரப்பட்ட இலங்கை, இராணுவ உதவி பெறும் நாடுகளின் பட்டியலிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் துறைமுகங்களிலும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடுகளை அதிகரிக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த வாரம் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்திருந்தது.இலங்கையின் கடன்தொகை அதிகரித்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் கடன்களை வழங்கதயார் என சீனா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தது. குறிப்பிட்ட துறைமுகத்திற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலேயே இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.உலகின் மிகவும் முக்கியமான கேந்திர பகுதியான கிழக்கு மேற்கு கடற்பாதையில் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் நீண்டகாலமாக அமைந்துள்ள பகுதியில் சீனா காலூன்றுவதற்கான வாய்ப்பையும் இது வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/91391/

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது சொறீலங்கா.. இராணுவத்தை வைச்சு அமெரிக்கா சீனாவை கைப்பற்றப் போகிறது.

போங்கடா.. நீங்களும் உங்கட மூலோபாயமும்.

வியாபாரிகளுக்கு எவர் செத்தா என்ன மனித உரிமை எந்தக் கேடுகெட்டால் என்ன..! ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அதாகப்பட்டது சொறீலங்கா.. இராணுவத்தை வைச்சு அமெரிக்கா சீனாவை கைப்பற்றப் போகிறது.

இது அமெரிக்கா pentagon மற்றும் CIA இந்த நோக்கம் சொறி லங்கா சொறி ராணுவத்தை தனது நலன்களிற்கு எதிராக செயற்றப்படாமல் பார்த்து கொள்வது.

பசிபிக் command சொறி லங்கா சொறி ராணுவத்தை ஒரு விதமாக groom பண்ணுகிறது, தக்க தருணத்தில் தனதுநலன்களிற்கு உகந்ததாக செயற்றப்பட வைப்பதற்கு.

இதன் ஒரு பாகம், பரஸ்பர பயிறசிகள், புலமைப் பரிசில்கள் (லஞ்சமாக) என்பவற்றின் மூலம் தனிப்பட்ட ராணுவ உறவுகளை வளர்ப்பதும், சொறி லங்கா சொறி ராணுவத்திற்குள் ஊடுருவி வியாபிப்பதும்.

இன்னொன்று, அப்படி சொறி லங்கா சொறி ராணுவம் செயற்றப்படவில்லையாயின், இக்கட்டான தருணத்தில் இலங்கைத் தீவை ஓர் தற்காளிகா இயங்கு தளமாக பசிபிக் command பாவிப்பதற்கு,  சொறி லங்கா சொறி படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதும், ஒத்துழைக்க வைப்பதும்.

இங்கு இணைக்கப்பட்ட விசாரணை கட்டுரை அமரிக்காவின் இந்த மூலோபாயத்தை பற்றி தெளிவாக அலசி ஆராய்கிறது.

https://www.thenation.com/article/the-us-militarys-best-kept-secret/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெளிப்படையான விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கமைப்பை உறுதிசெய்வதற்காக தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய நாடுகளிற்கு வழங்கவுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவியின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு அமெரிக்கா இந்த நிதியை வழங்குகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவின் நம்பகம் மிக்க நாடுகளின் வட்டத்துள் கொண்டுவரப்பட்ட இலங்கை, இராணுவ உதவி பெறும் நாடுகளின் பட்டியலிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் துறைமுகங்களிலும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடுகளை அதிகரிக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த வாரம் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்திருந்தது.இலங்கையின் கடன்தொகை அதிகரித்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் கடன்களை வழங்கதயார் என சீனா தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திலை படிச்சு படிச்சு சொன்னானே கேட்டியளேடா??????

  • கருத்துக்கள உறவுகள்

300 பில்லியன் டொலர்??

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இந்தியாவுக்கு நிகராக, தமிழர்களைக் கொன்றுகுவித்ததில் பங்குகொண்ட இன்னும் ஒரு நாடு இருக்கிறது.

பலரும் இலகுவாக கடந்துபோகும் இந்த நாட்டின் போரின்போதான உதவி என்பது மிகவும் பாரதூரமானது.

2008 ‍ 2009 காலப்பகுதியில் உச்சக்கட்ட படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருந்த நாட்களில் சில நாடுகள் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கெதிரான தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருந்த தருணத்தில், அப்படியானதொரு விவாதத் தலைப்பினை அன்றைய நிகழ்ச்சி நிரலிலிருந்தே நீக்கிவிட சீனா எனும் அந்த நாடு முயற்சித்து வெற்றியும் கண்டது. 
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் போர்வலயத்தினுள் சென்று நடப்பதை அறிந்துகொள்ள எடுத்த முயற்சிகள், சர்வதேச ராஜதந்திரிகள் போர்வலயத்தினுள் பிரவேசிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி ஆகிய விடயங்களில் தனது வீட்டோ அதிகாரத்தினைப் பாவித்து தடுத்து நிறுத்தியதும் சீனாதான்.

இலங்கையில் மோசமாகிக்கொண்டிருந்த மனிதவுரிமை மீறல்களைத் தொடர்ந்து, 2007 இல் அமெரிக்க இலங்கைக்கு நேரடியான ராணுவ உதவிகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ள, இத்த‌ருணத்தைப் பாவித்துக்கொண்ட சீனா இலங்கைக்கான தனது ராணுவ முயற்சிகளுக்கான கடந்தொகையினை 1 பில்லியன் டொலர்கள் வரை உயர்த்திக்கொண்டது. இந்த கடந்தொகையில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த அதி நவீன ஆயுதங்காள் உள்ளடங்கியிருந்ததோடு, இலவச இணைப்பாக ஆறு எப் ‍ 7 யுத்த விமானங்களையும் வழங்கியிருந்தது.
இவ்வாறு தன்னால் வழங்கப்பட்ட யுத்த விமானங்களை இயக்குவதற்கு பாக்கிஸ்த்தான் விமானிகளைப் பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல், பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பெருமளவு ஆயுதங்களை சீனா இலங்கைக்கு கொள்வனவு செய்து வழங்கியிருந்தது. இவை அனைத்துமே இந்தியாவின் மறைமுக ஆசியுடனும், சம்மதத்துடனுமே நடைபெற்றிருந்தன.

இவை அனைத்திற்கும் மேலாக, ஐ. நா வில் வேறுபட்ட நாடுகளால் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தினைப் பாவித்து சீனதேசம் எதிர்க்க, இந்தியாவோ, இலங்கையின் போருக்கான சர்வதேச அந்தஸ்த்தினை வழங்குவதற்க்காக ஐ. நா வில் இலங்கைக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது.

7 minutes ago, ragunathan said:

எமது துர்பாக்கிய நிலைமயே அது தான், 3 எதிரின நாடுகளுக்கு எனது அழிவு தேவைபட்டது.

தலைவர் செய்யத ஒரு தவறு மாபெரும் தவறு இந்தியாவை / மேற்குலம் மையப்படுத்தி  எமது அரசியலை நகர்த்தியது.

நாம் மட்டும் சீனாவுடன் சேர்ந்து செயற்பட்டு இருந்தால் இப்பொழுது தமிழ் ஈழம் அடைந்திருக்காவிட்டாலும் தக்க வைக்கப்பட்டிருக்கும். ஆனால் என்னுடைய ஊகம் தமிழ் ஈழம் இப்பொழுது மலர்ந்து இருக்கும்.

அதேபோல் இந்தியா தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை அழிக்க இந்திய அரசின் கொள்கையை விட ஒரு சில தனிப்பட்ட நபர்களின் தூண்டுதல் தான் அதிகமாக இருந்தது.

ஒன்று மலையாளி கும்பல், மற்றையது தெலுங்கு திராவிட கும்பல்.

கருணாநிதி போரை தடுக்க முயற்சி செய்யாதவர் அல்ல, புலிகளையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க முன்னிற முன்னொடி தான் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒரு இலங்கையின் தந்திரமும் இல்லை. 

கணக்க கள்ளப்புருசர்கள் வைச்சிருக்கிற பொம்பிள மாதிரி, காசு தாற ஆக்கள் எல்லாரிட்டையும் வாங்கி வாங்கி செலவழிச்சாச்சு.

என்ன விசயமா காசு கொடுபடடதோ, அது வேணும் எண்டு ஒண்டா வந்து, நிக்கப்போறாங்கள், 

அப்ப தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Dash said:

எமது துர்பாக்கிய நிலைமயே அது தான், 3 எதிரின நாடுகளுக்கு எனது அழிவு தேவைபட்டது.

தலைவர் செய்யத ஒரு தவறு மாபெரும் தவறு இந்தியாவை / மேற்குலம் மையப்படுத்தி  எமது அரசியலை நகர்த்தியது.

நாம் மட்டும் சீனாவுடன் சேர்ந்து செயற்பட்டு இருந்தால் இப்பொழுது தமிழ் ஈழம் அடைந்திருக்காவிட்டாலும் தக்க வைக்கப்பட்டிருக்கும். ஆனால் என்னுடைய ஊகம் தமிழ் ஈழம் இப்பொழுது மலர்ந்து இருக்கும்.

அதேபோல் இந்தியா தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை அழிக்க இந்திய அரசின் கொள்கையை விட ஒரு சில தனிப்பட்ட நபர்களின் தூண்டுதல் தான் அதிகமாக இருந்தது.

ஒன்று மலையாளி கும்பல், மற்றையது தெலுங்கு திராவிட கும்பல்.

கருணாநிதி போரை தடுக்க முயற்சி செய்யாதவர் அல்ல, புலிகளையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க முன்னிற முன்னொடி தான் இவர்.

சமாதான காலத்தில் சீனாவில் இருந்து தலைவரை சந்திக்கவந்த உயர்மட்டக் குழுவொன்றை தலைவரை சந்திக்கவிடாமல் பண்ணியது றோ வினால் இயக்கப்பட்ட சுப தமிழ்ச்செல்வன் என்று கேள்விப்பட்ட ஞாபகம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.