Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்

Featured Replies

kkk-696x696.jpg

 

(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது)

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், ‘விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை!

அவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது?

1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக் குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளி யானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.

கருணாநிதியின் அழைப்பை ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதியின் சாதனையாகும்.

1985-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, ஈரோஸ் தலைவர்  பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி சிங்கள ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என முடிவுசெய்து அறிக்கையும் வெளியிட்டனர். 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திம்பு மாநாடு வரை இந்த ஒற்றுமை நீடித்தது.

திம்பு மாநாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த கோரிக்கைகளை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, போராளி இயக்கங்களை மிரட்டி பிளவுபடுத்தத் திட்டமிட்டது. இதற்கான சதித் திட்டத்தை ‘றோ’ உளவுத் துறை வகுத்தது. ‘றோ’ விரித்த வலையில் முதலில் ரெலோ இயக்கமும் அதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு ‘றோ’ உளவுத் துறை ஆயுதங்களை அளித்துத் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கம் என்பவரை ரெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து இறுதியில் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்.

அவருக்காக சென்னையில் இரங்கல் கூட்டத்தை கருணாநிதி நடத்தினார். அதில் பேசும்படி என்னை அழைத்தபோது, ‘புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கத்துக்கும் சேர்த்து இரங்கல் கூட்டம் நடத்துங்கள்’ என்று நான் கூறியபோது அதைஅவர் ஏற்கவில்லை. எனவே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தேன். கருணாநிதி போன்ற ஒரு தலைவர் போராளி இயக்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவர், புலிகளுக்கு எதிராகவும் ரெலோ இயக்கத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டார். இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். புலிகளும் ஓரளவு ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால், பிற இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை ‘றோ’ உளவுத்துறை கொடுத்து

நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘றோ’ உளவுத் துறையின் சீர்குலைப்பு வேலைகள் வெற்றி பெறவில்லை.

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களில் இருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எப். என்ற ஓர் அமைப்பை ‘றோ’ உளவுத் துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன்ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.

இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழீழப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும் படுகொலை செய்யவும் ‘றோ’ உளவுத் துறை பயன்படுத்தியது. இதை நான் சொல்லவில்லை… அப்போது ‘றோ’ உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் எழுதி உள்ளார். ‘கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு உள்ள தலைமை பிரபாகரன் ஆவார். தமிழ் மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதது இந்தியா செய்த மாபெரும் தவறாகும். புலிகளுக்கு எதிராக போட்டிக் குழுக்களை ஊக்குவித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்டது” என்று அவர் சொல்லியதையும் கருணாநிதி கவனிக்க வேண்டும். இவை அவருக்குத் தெரியாதவை அல்ல.

‘றோ’ உளவுத் துறையின் இந்தப் பிளவு வேலைகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டித்தார். சட்டமன்றப் பதிவேட்டிலும் இது பதிவாகி உள்ளது. ஆனால் இப்போது, தான் கூறியதற்கு மாறாக சகோதர யுத்தத்தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு புலிகளே பொறுப்பு என்ற வகையிலும் திரும்பத் திரும்பச் சொல்வது பச்சைப்பொய்!

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். ‘மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்: ‘எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.”

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், ‘மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்” என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள். ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.

புலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்!

http://oorukai.com/?p=2042

  • Replies 50
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் கண் முன் நடந்த அப்பட்டமான உண்மைகள்.

இதுக்குள் யாரும் கருத்து எழுதமாட்டினம்... கொலைஞர் கருணாநிதி உத்தமருன்னு. அவருக்கும் ஈழப் போராட்டத்திற்கும் என்ன தொடர்புன்னு கேட்கும் வேடிக்கையாளர்கள் கூட. ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Athavan CH said:

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும்

நெடுமாறன் ஐயா 2009 மேயில் முள்ளிவாய்க்காலில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் “இருக்கின்றார்” என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பவர். தனது குற்றவுணர்வை மறைக்க பிறரை பழிசுமத்தும் இன்னோர் அரசியல்வாதியாக தன்னைக் குறுக்கிக்கொண்டவர். அவருடைய இந்த நேர்காணலையும் மீள்பிரசுரம் செய்து கலைஞர் கருணாநிதி மீதான காழ்ப்புணர்ச்சியை காட்ட குடிசைக் கைத்தொழில் இணையங்கள் நடத்துபவர்களுக்கு தேவை இருக்கின்றது. அதற்கு முட்டுக்கொடுக்கவும் சிலர் உள்ளனர். இதெல்லாம் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மேலும் தனிமைப்படுத்தப்படத்தான் உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, கிருபன் said:

நெடுமாறன் ஐயா 2009 மேயில் முள்ளிவாய்க்காலில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் “இருக்கின்றார்” என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பவர்.

இருக்கிறார் இல்லை என்பதற்கப்பால்........

காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என நிறுத்தி நிதானமாக பல நடுநிலையாளர்கள் இன்றும் சொல்கின்றார்கள். அது அவரின் உடலாக இருந்திருந்தால்  அந்த பூதவுடலை வைத்து சிங்கள அரசு சுதந்திரதின கொண்டாட்டத்தை விட வெகுவிமரிசையாக மாதக்கணக்கில் கொண்டாடியிருப்பார்கள் என சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என நிறுத்தி நிதானமாக பல நடுநிலையாளர்கள் இன்றும் சொல்கின்றார்கள்.

நடுநிலையாளர்கள்??

நெடுமாறன்,  வைகோ, திருமாவளவன், “செந்தமிழன்” சீமான் எல்லாரும் இப்படியான நடுநிலையாளர்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தலைவர் உயிருடன் இருக்கிறார் எனச்சொல்லப்படுவது சிலவேளைகளில் நெடுமாறனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லாதிருருக்கலாம் ஆனால் தமிழினவிரோததேசம் இந்தியாவுக்கும் சிங்களத்துக்கும் தமிழர் அரசியல்வாதிகளுக்கும் நிறையவே இலாபமிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

நடுநிலையாளர்கள்??

நெடுமாறன்,  வைகோ, திருமாவளவன், “செந்தமிழன்” சீமான் எல்லாரும் இப்படியான நடுநிலையாளர்கள்தானே.

நான் கூற வந்தது காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என்பது மட்டும்தான். சீமான் வைகோ திருமாளவன் போன்றவர்களின் நிலைப்பாட்டை பற்றியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு திரி வீணாக எரியப் போகுது.?

இங்கு நெடுமாறன் மீது சேறு எறிபவர்களுக்கு நெடுமாறன் யார் என்பது தெரியாது எந்த கட்சி என்றாவது தெரியாமல் சடுகுடு விளையாட்டு 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி போன்ற குள்ளநரி ஊழல் அரசியல்வாதிகளை விட நெடுமாறன் ஐயா எவ்வளவோ மேல். இங்கே ஒருவர் என் கருணாநிதிக்கு ஓவரா செம்பு தூக்கிறார் என்று தெரியவில்லை??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

கருணாநிதி போன்ற குள்ளநரி ஊழல் அரசியல்வாதிகளை விட நெடுமாறன் ஐயா எவ்வளவோ மேல். இங்கே ஒருவர் என் கருணாநிதிக்கு ஓவரா செம்பு தூக்கிறார் என்று தெரியவில்லை??

கருணாநிதியின்ரை கொள்கை கொள்ளை எல்லாத்துக்கு சேர்த்து தூக்கீனம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் அவர்கள் தலைவர் இன்னும் சாகவில்லை என்று சொல்லிவருவது ஒரு புறமிருக்கட்டும். எங்களுள் எத்தனை பேருக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது தெரிந்திருக்கிறது? எவருக்குமே எதுவும் தெரியாது. ஆளாளுக்கு அவர்களின் எண்ணவோட்டங்களுக்கு ஏற்றவகையிலும், தமது விருப்பங்களுக்கு ஏற்றவகையிலும் முடிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் திரு நெடுமாறன் அவர்களின் நிலைப்பாடும் என்று நினைக்கிறேன். அவரைப் பொறுத்தவரையில், தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று நினைப்பது சரியானதாகப் படலாம், அல்லது சிங்கள அரசு காட்டிய தலைவரின் உடல் பற்றிச் சந்தேகம் இருக்கலாம், அதனால்  தலைவர் இறந்துவிட்டார் என்பதை அவரால் இன்னும் நம்பமுடியாமல் இருக்கலாம். 

தலைவரின் இருப்புத் தொடர்பான திரு நெடுமாறன் அவர்களின் நிலைப்பாடு எமக்குத் தவறு என்று படுவதால், அவர் சொல்லும் எல்லாவற்றையுமே தவறு என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற தேவை எப்படி வருகிறது?


இங்கே திரு நெடுமாறன் அவர்களால் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் நடக்கவில்லை என்று எவராலும் நிரூபிக்க முடியுமா? அவர் சொல்லும் அத்தனை விடயங்களும் நடந்தனவா இல்லையா? அனைத்தும் நடந்தவைதான் என்று எமக்கு நன்றாகத் தெரிந்த பின்னரும் கூட, நெடுமாறன் தலைவர் இருக்கிறார் என்று சொல்வதால் அவர் சொல்லும் ஏனைய விடயங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்க வேண்டும் என்று சொல்லுமளவிற்கு அப்படியென்ன காழ்ப்புணர்ச்சி?

கருனாநிதி போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்ததற்குப்பதிலாக திரு நெடுமாறன் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் எமக்கு உதவியாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம். 

திரு நெடுமாறன், திரு வைக்கோ போன்றவர்கள் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் அப்படி நெருக்கமாக இருந்ததற்குக் கட்டாயம் ஒரு காரணம் இருக்கும். 

வெறுமனே ஒருவர் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதைச் சொல்கிறார் என்பதற்காக அவர் கூறும் எல்லாவற்றையும் தவறென்று வாதிடுவது சரியாகப் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்குள்  சகோதர சண்டையை தூண்டி விட்ட  கருணாநிதி,
மறைந்து ஒரு  கிழமைக்குள்.. அவரின் குடும்பத்துக்குள்ளேயே  சகோதர சண்டை ஆரம்பம்.
இதனைத் தான்... சொல்வது... "முற்பகல் செய்யின்... பிற்பகல் விளையும்." 
என்ன செய்வது,  அவர் விதைத்த வினையை.... அவரின் பிள்ளைகள் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது விதி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா தலைவர் உள்ளார் என்பதை நம்புவது இருக்க.. தலைவர் இல்லை என்பதை முதலில் அவருக்கு அஞ்சலி செய்யும் நபர்கள் விஞ்ஞான பூர்வமாகவாவது உறுதி செய்யட்டும் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருணாநிதிக்கு செம்பை நான் தூக்கவில்லை?

சகோதர யுத்தத்திற்குக் காரணம் கருணாநிதி; முள்ளிவாய்க்கால் அழிவுக்குக் காரணம் கருணாநிதி என்று எல்லாப் பழிகளையும் இலகுவாக கருணாநிதி மீது சுமத்திவிட்டு புலிகளுக்குப் பினாமியாக இருந்து சுருட்டியவர்களும் அவர்கள் நடத்தும் குடிசைக் கைத்தொழில் இணையங்களும் தப்பிக்கொள்வதைப் பற்றித்தான் எனது விமர்சனம். அதற்காக கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று அர்த்தமல்ல. 

நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக நன்மைகள் செய்திருந்தாலும் 2009 இல் எதுவித அழுத்தத்தையும் திரைமறைவிக் கொடுக்கமுடியாதவராக இருந்தார். இவரையும் வைகோ போன்றவர்களையும் தமிழர்கள் அழிவுக்குக் காரணமானவர்களாக நான் கருதுகின்றேன். மே 2009 இன் இவர்கள் விட்ட அறிக்கைகளே இவர்கள் மீதான நம்பகத்தன்மையை பூச்சியமாக்கி உள்ளது. ஆனாலும் இப்படியானவர்களுக்கு செம்பு தூக்குபவர்களும் இங்கு பலர் உள்ளனர்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இங்கு கருணாநிதிக்கு செம்பை நான் தூக்கவில்லை?

?

கிருபன் இப்படியான சகதிக்கள் நீங்கள் வீழ்வதை விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

சகோதர யுத்தத்திற்குக் காரணம் கருணாநிதி; முள்ளிவாய்க்கால் அழிவுக்குக் காரணம் கருணாநிதி என்று எல்லாப் பழிகளையும் இலகுவாக கருணாநிதி மீது சுமத்திவிட்டு புலிகளுக்குப் பினாமியாக இருந்து சுருட்டியவர்களும் அவர்கள் நடத்தும் குடிசைக் கைத்தொழில் இணையங்களும் தப்பிக்கொள்வதைப் பற்றித்தான் எனது விமர்சனம். அதற்காக கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று அர்த்தமல்ல. 

சரி....அவர்கள் யார் யாரென்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். நானும் உங்களுடன் துணைக்கு வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சரி....அவர்கள் யார் யாரென்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். நானும் உங்களுடன் துணைக்கு வருகின்றேன்.

இந்த பத்து வருடங்களில் யார் யாரென்று தெரியாமல் இருப்பதால்தான் போராட்டத்துக்கு என்று சேர்த்த காசை வைத்து தமது வாழ்க்கையை சொகுசாகக் கொண்டு நடாத்தும் துணிவைக்கொண்டுள்ளார்கள். யார் யார் வெளியாரைக் குற்றம் சுமத்துகின்றார்களோ அவர்கள்தான் இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை சாட்டி கிட்டத்தட்ட 90% தமிழர்களும் சொகுசுவாழ்க்கை தேடினது தானே யதார்த்தம்.. கிருபண்ணா. இதில காசடிச்சவன்... தனி.. அசைலம் அடிச்சவன்... தனின்னு.. எதுக்கு ஒரு பாகுபாடு. ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதி போன்ற குள்ளநரி ஊழல் அரசியல்வாதிகளை விட நெடுமாறன் ஐயா எவ்வளவோ மேல். இங்கே ஒருவர் என் கருணாநிதிக்கு ஓவரா செம்பு தூக்கிறார் என்று தெரியவில்லை??

அதைவிட மோசம் சமூக நீதிகாவலர் என்று புகழ் பாடத்தொடன்கியிட்டினம் நாலு பெண்டாட்டி கட்டி பெண்ணினத்தை கேவலப்படுத்திய ஒருவர் சமூகநீதிகாவலராம் .

  • கருத்துக்கள உறவுகள்

1012118_178530588982978_372593509_n.jpg?

கூட்டி கழித்து பார்த்தால்  போராட்டம் தோல்வியடைய உவர் தான் முக்கிய காரணம் ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இங்கு கருணாநிதிக்கு செம்பை நான் தூக்கவில்லை?

சகோதர யுத்தத்திற்குக் காரணம் கருணாநிதி; முள்ளிவாய்க்கால் அழிவுக்குக் காரணம் கருணாநிதி என்று எல்லாப் பழிகளையும் இலகுவாக கருணாநிதி மீது சுமத்திவிட்டு புலிகளுக்குப் பினாமியாக இருந்து சுருட்டியவர்களும் அவர்கள் நடத்தும் குடிசைக் கைத்தொழில் இணையங்களும் தப்பிக்கொள்வதைப் பற்றித்தான் எனது விமர்சனம். அதற்காக கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று அர்த்தமல்ல. 

நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக நன்மைகள் செய்திருந்தாலும் 2009 இல் எதுவித அழுத்தத்தையும் திரைமறைவிக் கொடுக்கமுடியாதவராக இருந்தார். இவரையும் வைகோ போன்றவர்களையும் தமிழர்கள் அழிவுக்குக் காரணமானவர்களாக நான் கருதுகின்றேன். மே 2009 இன் இவர்கள் விட்ட அறிக்கைகளே இவர்கள் மீதான நம்பகத்தன்மையை பூச்சியமாக்கி உள்ளது. ஆனாலும் இப்படியானவர்களுக்கு செம்பு தூக்குபவர்களும் இங்கு பலர் உள்ளனர்?

கிருபன், முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கருணாநிதி காரணம் என்று நான் கூறவில்லை. சகோதர யுத்தம் நடைபெற முக்கிய காரணியாக இருந்தவர் அவரென்பதே நான் கூறியது. அவர் செய்த ஊழல்களால்தான் அவரால் அன்றய மத்திய அரசுக்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முக்கிய காரணியாக இருந்து போராட்டம் மௌனிக்கப்படப்போகிறது என்று தெரிந்தும் அப்பாவி புலம்பெயர் சமூகத்திலிருந்து பணம் பறித்த புலிப்பினாமிகளுக்கு என்றுமே மன்னிப்பில்லை. அவர்கள் என்றுமே எமது சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்களே.

வைகோ ஒரு பச்சோந்தி என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆனால் நெடுமாறன் ஐயா தன்னால் முடிந்ததை எமது இனத்திற்கு செய்கிறார். அவரால் தமிழ் நாடு அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ அழுத்தம் கொடுக்க முடியாது.ஆனால் அவர் எமது இனத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அறிக்கை எதையும் விடவில்லை என்பது எனது கருத்து..தலைவர் உயிரோடிருக்கிறார் என்று அவர் கூறியது தலைவர் மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அதைவைத்து அவர் அங்கு அரசியல் நடத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Eppothum Thamizhan said:

தலைவர் உயிரோடிருக்கிறார் என்று அவர் கூறியது தலைவர் மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையாகவும் இருக்கலாம்

சகோதர யுத்தம் நடைபெற “ரோ” முக்கிய காரணி. ஆனால் அவர்களும் தமிழ் இயக்கங்களிடையே இயல்பாக இருந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியற்ற செயல்பாடுகளையும் சாதுரியமாக பாவித்துக்கொண்டனர். கருணாநிதி தனது கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தியே “ஈழப்போராளிகளையும்”, தமிழீழப் போராட்டத்தையும் பார்த்தார். ஒரு கட்சியின் தலைவர் என்ற  வகையில் அந்தக் காலத்தில் அவர் நடந்துகொண்ட முறைதான் சகோதர யுத்தத்தை தூண்ட முக்கிய காரணி என்பது போராட்ட இயக்கத் தலைவர்கள் ஒன்றும் விளங்காத மொக்கர்கள் என்று சொல்லுவது போலாகும். 

 

நெடுமாறன் ஐயா அதீத நம்பிக்கைதான் வைத்திருக்கின்றார். கீழுள்ள காணொளியில் உள்ள அவரின் பேச்சு எப்படியான அசட்டு நம்பிக்கை என்பது கடந்த 10 வருடங்களில் ஈழத்தமிழர்களின் போராட்டம் சென்ற திசையையும், தமிழ் அரசியல் தலைமைகள் பதவிக்காகவும், சுயநல நோக்கங்களுக்காகவும் செய்யும் கூத்துக்களில் இருந்தும் புரிந்துகொள்ளலாம்.

 

 

On 8/14/2018 at 12:18 PM, Athavan CH said:

 

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள். ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.

புலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்!

http://oorukai.com/?p=2042

போர் தோல்விக்கும் அழிவுகளுக்கும் என்ன முக்கிய காரணம் என்று இக்கட்டுரையில் திரு நெடுமாறனே தெளிவாக கூறி இருந்தும் கருணாநிதி உதவி செய்யாத‍து தான்  முக்கிய காரணம் என்று  அவரை திட்டோ திட்டு என்று திட்டுவது அதன் மூலம் தமிழக்கதின் முக்கிய பெரிய கட்சியான திமுக ஆதரவாளர்களின் பகையை சம்பாதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் பெற்றுக் கொள்ளும் ராஜதந்திர அனுகூலம் என்ன என்பதை கருணாநிதியை திட்டுபவர்கள் தெரிவிப்பார்களா?  20 நாடுகளுக்கும் புலிகளை அழிக்க கருணாநிதி உத்தரவிட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

திரு முத்துவேலர் கருனாநிதி அவர்கள் மரணமானபோது மலேசியாவிலிருந்து அதன் தலைவர் இரங்கல் தெரிவித்திருந்தார் தவிர அமெரிக்க அலுவலகமும் தனது இரங்கலை ட்வீட்டர்மூலம் தெரிவித்திருந்ததாக நினைவு தவிர சிறீலங்காவின் தற்போதைய அரசதலைவர் மைத்திரிபாலசிறீசேன அவர்களும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்திருந்தார்.

இலங்கையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச்சேர்ந்தவர்களும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் மரண வீட்டுக்குச் சென்றிருந்தார்கள் தவிர ஏனைய தமிழர் தலைவர்கள் (?) எனச்சொல்லப்படுபவர்கள் எவரும் அங்கு சென்றதாக நினைவில்லை விக்கியர் வழக்கமாக ஒரு அனுதாப அறிக்கையைத்தட்டிவிட்டார்.

இதில் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழர் சார்பாகச்சென்ற தலைவர் எனக்கூறமுடியாது காரணம் அவர் இலங்கை பாராளுமன்றக்கமிட்டியில் உபதலைவராக அங்கம்வகிக்கிறார் அது கிட்டத்தட்ட இராஜாங்க அமைச்சர் தரத்திலான ஒரு பதவி.

இவை இப்படி இருக்க

யாழ்குடாநாட்டிலோ வன்னிநிலப்பரப்பிலோ அன்றேல் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்தில் வாழும் ஒரு தமிழர்களும் திரு முத்துவேலர் கருனாநிதி அவர்களது மரணம்தொடர்பாக அலட்டிக்கொள்ளவைல்லை மாறாக முல்லைத்தீவில் வெடிகொளுத்தி தமது கருத்தினை வெளியிட்டதைத்தவிர, அன்றைய தினங்களில் வானில் கருப்பாகக் காகங்கள் பறந்திருக்கலாம் ஆனால் எந்தக் கருப்புக்கொடியையும் யாரு தொங்கவிடவில்லை. இதனைப் புலம்பெயர்தேசங்களிலிருந்து யாரும் சொல்லிச்செய்ததாகவும் தகவல் இல்லை (இல்லை சொனாப்போல செய்திடப்போயினம்)

இப்படியாக அவரது மரணத்தில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ்மக்கள் ஒரு கூட்டுச்சமூக எதிர்வினையாற்றுகையில் யாழ்களத்தில் மட்டும் ஏன் நாம் குத்திமுறியவேண்டும். 

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.