Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

Featured Replies

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

Palaly_Airport-300x200.jpgபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன.

போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“இங்கு, குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவுகளுக்கான முனையங்களையும், அவற்றின் பணியாளர்களுக்கான விடுதிகளையும் அமைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் திட்டங்களை வரைகின்றனர்.

முதலில் பலாலி விமான நிலையத்தை ஒரு பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கும், பின்னர் அதனை ஏனைய நாடுகளுக்கான விமானங்களும் பயணம் மேற்கொள்ளும் வகையில், அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையே இந்த புதுப்பித்தல் நடவடிக்கைகளைக் கையாளவுள்ளது.” என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது பலாலி இராணுவ விமான நிலையம், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள போதும், 750 ஏக்கர் காணியில் மாத்திரமே, விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என்று யாழ். மாவட்ட  மேலதிக செயலர் (காணிகள்) முரளிதரன் தெரிவித்துள்ளார்.

“விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் சனத்தொகை பாடசாலைகள், மின் இணைப்புகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விரிவான சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலாலி விமானத் தளத்தில் மேலதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் ” என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று பேர் கொண்ட இந்திய விமானத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த வாரம் பலாலிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம், கேள்வியின் அடிப்படையில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“பிராந்திய விமான நிலையத்தில் மிகப் பெரியளவு போக்குவரத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து நாங்கள் அறிவோம். அதனால் தான் கட்டம் கட்டமாக விமான நிலைய அபிவிருத்தியை மேற்கொள்வதென முடிவு செய்திருக்கிறோம்.

இதற்கான சாத்திய ஆய்வுகள் பூர்த்தியடைந்துள்ள போதிலும், நிதியை ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.

சிறிலங்கா விமானப்படையின் பரிந்துரைகளுடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம், கட்டம் கட்டமாக பாரிய உட்கட்டமைப்பு முதலீடுகளைச் செய்வதன் மூலம் நியாயமான வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறுகிறது.

அத்துடன், அந்த அறிக்கையில், A 320, A 321, B 737 போன்ற ரகங்களைச் சேர்ந்த, சுமார் 150 தொடக்கம் 180 பயணிகளை ஏற்றக் கூடிய, குறைந்தது இரண்டு நடுத்தர ஜெட் விமானங்களைக் கையாளும் வகையில், விமான நிலையத்தை முதற்கட்டமாக தரமுயர்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியிருந்தது. இதுதொடர்பாக இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தன.

இந்தியாவின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் பரிந்துரைகள் சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 109 மில்லியன் டொலர் (11,312 மில்லியன் ரூபா) தேவைப்படும் என்றும், மூன்றரை ஆண்டுகளில் திட்டத்தை நி்றைவு செய்ய முடியும் என்றும் அந்தக் குழுவினால், மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா ஏற்கனவே இணங்கிய கொடையைப் பயன்படுத்தி, விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் விமான நிலைய அதிகார சபை சம்பந்தப்பட்ட இந்தியா அதிகாரிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது,

http://www.puthinappalakai.net/2018/08/26/news/32539

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அபிவிருத்தி அடைஞ்ச கதை தான். ?

தமிழ் மக்களை எவ்வாறு எல்லாம் இந்த உலகம் ஏமாற்றுகிறது என்பதை 2009 மே க்குப் பின் காலம் நமக்கு கண்முன்னே காட்டி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

....

அத்துடன், அந்த அறிக்கையில்,  A 320, A 321, B 737 போன்ற ரகங்களைச் சேர்ந்த, சுமார் 150 தொடக்கம் 180 பயணிகளை ஏற்றக் கூடிய, குறைந்தது இரண்டு நடுத்தர ஜெட் விமானங்களைக் கையாளும் வகையில், விமான நிலையத்தை முதற்கட்டமாக தரமுயர்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

.....

http://www.puthinappalakai.net/2018/08/26/news/32539

அடச்சே..!  இந்த கொசுறு அபிவிருத்திக்குத்தான், இந்த அலப்பறையா?

கொடுக்குற செய்திகளை பார்த்தால் "Code F compliant" ஏர்பஸ் 380 தரையிறங்குமளவிற்கு விரிவாக்கம் செய்யுற  பில்ட் அப் வேற..!

கொடுமைடா சாமி..!!

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி பற்றி அங்கு உள்ள மக்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.பார்ப்போம்.பஞ்சு மெத்தையில் படுத்துக்கொன்டு பாயைப்பற்றி கதைக்க கொஞ்சம் யோசிக்க வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அபிவிருத்தி பற்றி அங்கு உள்ள மக்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.பார்ப்போம்.பஞ்சு மெத்தையில் படுத்துக்கொன்டு பாயைப்பற்றி கதைக்க கொஞ்சம் யோசிக்க வேணும்

இந்த அபிவிருத்தி பற்றிய செய்தி அங்குள்ள மக்களுக்கு தெரியுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

அடச்சே..!  இந்த கொசுறு அபிவிருத்திக்குத்தான், இந்த அலப்பறையா?

கொடுக்குற செய்திகளை பார்த்தால் "Code F compliant" ஏர்பஸ் 380 தரையிறங்குமளவிற்கு விரிவாக்கம் செய்யுற  பில்ட் அப் வேற..!

கொடுமைடா சாமி..!!

சிறிலங்கா அரசின் பில்டப்புக்கு எப்போதும் குறைச்சல் இல்லை. அதற்கு ஜால்ரா போட ஒரு தமிழ் கூட்டம் சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

சிறிலங்கா அரசின் பில்டப்புக்கு எப்போதும் குறைச்சல் இல்லை. அதற்கு ஜால்ரா போட ஒரு தமிழ் கூட்டம் சொல்லி வேலையில்லை.

அந்த கூட்டத்தால்  தான் தமிழனுக்கு கிடைக்கவேண்டியதும் கிடைக்காமால் தள்ளி போகுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

சிறிலங்கா அரசின் பில்டப்புக்கு எப்போதும் குறைச்சல் இல்லை. அதற்கு ஜால்ரா போட ஒரு தமிழ் கூட்டம் சொல்லி வேலையில்லை.

48 minutes ago, பெருமாள் said:

அந்த கூட்டத்தால்  தான் தமிழனுக்கு கிடைக்கவேண்டியதும் கிடைக்காமால் தள்ளி போகுது .

ஐயோ கடவுளே..l...

அந்த....அதுதான்....அவையைப்பற்றி ஒண்டும் குறையாய் கதைக்காதேங்கோ.........

அவையளுக்கு உலக சாணக்கியம் எக்கச்சக்கமாய் தெரியும் கண்டியளோ.....

அவையள் சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாய் வரேக்கை வெட்டியாடுவினம் சரியோ.....

இப்ப என்ன குடியே முழுகிப்போச்சு?

அவங்கள் இடையிலை வந்து குழப்பிப்போட்டாங்கள்......

இல்லாட்டில் அவையள் எப்பவோ கதையை முடிச்சிருப்பினம் எல்லே :cool:

  • கருத்துக்கள உறவுகள்

Addl.Info:

ICAO Aerodrome Reference Code -2  ன் படி, விமான இறக்கைகளின் அகலத்திற்கேற்றவாறு அமையும் விமான ஓடுதளங்களை, ஆறு வகையான தரப்படுத்துதலை இன்றுவரை கடைப்பிடிக்கிறார்கள்.

அவையாவன:

Code letter Wingspan Outer main gear wheel span Typical aeroplane
A < 15 m < 4.5 m PIPER PA-31/CESSNA 404 Titan
B 15 m but < 24 m 4.5 m but < 6 m BOMBARDIER Regional Jet CRJ-200/DE HAVILLAND CANADA DHC-6
C 24 m but < 36 m 6 m but < 9 m BOEING 737-700/AIRBUS A-320/EMBRAER ERJ 190-100
D 36 m but < 52 m 9 m but < 14 m B767/AIRBUS A-310
E 52 m but < 65 m 9 m but < 14 m B777/B787 Series/A330
F 65 m but < 80 m 14 m but < 16 m BOEING 747-8/AIRBUS A-380-800

இந்த ஓடுதளங்களை வடிவமைப்பதில் பலவகையான முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நிர்மாணிக்கப்படுவதால், முதல்தடவை விரிவாக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிடுவது நல்லது. (குறிப்பாக AirBus 380 விமானங்களுக்கு).

மிக முக்கிய அம்சம், இந்த வழித்தடத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையும்(Traffic Demand) இருக்க வேண்டும். மிகுந்த பொருட்செலவில் AirBus 380 வந்து போகுமளவிற்கு(Code-F) மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்துவிட்டு, சிங்களர்கள் அந்த விமான நிலையத்தில் நெல் மூட்டைகளை சேமிக்கும் கிடங்காகவும், ஓடுதளத்தை தானியங்களை உலரவிடும் களமாகவும் மாற்றியதைப்போல, யாழ்வாசிகள் பலாலி விமான நிலையத்தை மாற்றிவிடக்கூடாது, வலு கவனம்..!

சென்னை விமான நிலையத்திற்கு இன்னமும் "CODE-F"  சான்று கிடைக்கவில்லை..

ஏனெனில் இச்சான்றை பெற, விமான ஓடுதளத்தின் நீளம்(3050 மீட்டர் ), அகலம், ஓடுதளத்தின் கடினம், ஓடுதளத்தில் சமிஞ்சை விளக்குகள்(ILS), பொறியமைப்புகள், ஓடுதளத்தையும் விமான தரிப்பிடத்தையும் இணைக்கும் வழிகளின் (Taxi Way)அகலம் முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும். மேலும் பயணிகள் வந்திறங்கும் கட்டிடத்தின் இணைப்பு பாலங்கள்(Aero Bridge) இரு அடுக்குகளாக மாற்றியமைக்க வேண்டும். இவற்றை மாற்றியமைக்க மிகுந்த பொருட்செலவும், அதிக நிலங்களும் கையகப்படுத்த வேண்டும்.

ஆனால் புதிதாக வேறு இடத்தில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள பெங்களூரு, ஐதராபாத் சர்வதேச விமான நிலையங்கள் CODE-F சான்றிதழைப் பெற்றுள்ளன.

Edited by ராசவன்னியன்

15 hours ago, சுவைப்பிரியன் said:

அபிவிருத்தி பற்றி அங்கு உள்ள மக்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.பார்ப்போம்.பஞ்சு மெத்தையில் படுத்துக்கொன்டு பாயைப்பற்றி கதைக்க கொஞ்சம் யோசிக்க வேணும்

சுவைப்பிரியன் தாயக மக்களின் அபிவிருத்தி குறித்த உங்கள் அக்கறையில் 1% அக்கறை கூட தாயக மக்களுக்கு இல்லை என்பதே கவலைக்குரிய உண்மை. சோம்பேறித்தனமும் பழமைவாதமும் ஒருபோதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாது.  துரதிஷரவசமாக அதுதான் அங்கு நிறைந்து காணப்படுகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் தாயக மக்களின் அபிவிருத்தி குறித்த உங்கள் அக்கறையில் 1% அக்கறை கூட தாயக மக்களுக்கு இல்லை என்பதே கவலைக்குரிய உண்மை. சோம்பேறித்தனமும் பழமைவாதமும் ஒருபோதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாது.  துரதிஷரவசமாக அதுதான் அங்கு நிறைந்து காணப்படுகிறது. 

மிசினை வைச்சு இல்லாட்டி ஆமியை வைச்சு தேர் இழுப்பனே தவிர உவங்கடை மூச்சுக்காத்தும் தேர்வடத்திலை பட விடமாட்டன்.
#பழமைவாதம்#

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் தாயக மக்களின் அபிவிருத்தி குறித்த உங்கள் அக்கறையில் 1% அக்கறை கூட தாயக மக்களுக்கு இல்லை என்பதே கவலைக்குரிய உண்மை. சோம்பேறித்தனமும் பழமைவாதமும் ஒருபோதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாது.  துரதிஷரவசமாக அதுதான் அங்கு நிறைந்து காணப்படுகிறது. 

99 வீதம் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.