Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம்

Featured Replies

ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ்

இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம்

 

இந்த ஆண்டு இறு­திக்­குள் பலாலி வானூர்­தித் தளத்­தில் அன்­ட­னோவ் தர வானூர்தி தரை­யி­றங்­கும். தமி­ழ­கத்­தின் திருச்சி அல்­லது மதுரை வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­ப­டும் வானூர்­தியே முத­லா­வ­தாகத் தரை­யி­றங்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, இந்த வானூர்­திச் சேவை­யில் எழுந்­துள்ள தொழில்­நுட்ப பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக, இலங்கை சிவில் வானூர்­தி­கள் திணைக்­க­ளத்­தின் அதி­கா­ரி­க­ளுக்­கும், இந்­திய அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யி­லான மிக முக்­கிய உயர் மட்­டச் சந்­திப்பு நாளை வியா­ழக் கிழமை கொழும்­பில் நடை­பெ­ற­வுள்­ளது.

பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தமி­ழ­கத்­தின் சென்னை, மதுரை, திருச்சி வானூர்தி நிலை­யங்­க­ளுக்கு ஆரம்­பத்­தில் சேவை நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­காக வானூர்­திப் பாதை வரை­யும் பணி ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பலாலி வானூர்­தித் தளத்­துக்­கும், தமி­ழ­கத்­தின் சென்னை, மதுரை, திருச்சி வானூர்­தித் தளங்­க­ளுக்­கும் இடை­யி­லான தூரம் மிகக் குறை­வாக உள்­ளது. அத­னால் வானூர்­தி­கள் தமது வான் பாதை­யி­லி­ருந்து தாழி­றங்­கத் தொடங்­கும்­போது எந்த வானூர்தி நிலை­யக் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருக்க வேண்­டும் என்­பது தொடர்­பான தொழில்­நுட்ப பிரச்­சினை எழுந்­துள்­ளது.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் பேச்சு நடத்­து­வ­தற்கே இந்­தி­யா­வின் உயர் மட்­டக் குழு­வி­னர் கொழும்­புக்கு நாளை வரு­கின்­ற­னர். இந்­தச் சந்­திப்­பின் பின்­னர் தொழில்­நுட்ப பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டும் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, திருச்சி அல்­லது மது­ரை­யி­லி­ருந்து ஆண்­டி­று­திக்­குள் பலாலி வானூர்­தித் தளத்­துக்கு அன்­ட­னோவ் தர வானூர்தி நிச்­ச­யம் தரை­யி­றங்­கும் என்று இரண்டு நாட்டு அதி­கா­ரி­க­ளும் தெரி­வித்­துள்­ள­னர்.

https://newuthayan.com/story/10/ஆண்டிறுதிக்குள்-பலாலியில்-அன்டனோவ்.html

5 hours ago, நவீனன் said:

பலாலி வானூர்­தித் தளத்­தில் அன்­ட­னோவ் தர வானூர்தி தரை­யி­றங்­கும்

ஏன் ஆண்டிறுதிவரை? இப்பவே தரையிறங்க அங்கு வசதி இல்லையோ?

அல்லது சீனாக்காரன் அனுமதி தரேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இப்படி அண்டனோவ் அது இது என பில்ட் அப் கொடுங்கினமோ தெரியாது. ஆனால் இது எதுவும் தமிழருக்கு நல்லது செய்யவேணும் என்று செய்யப்படவில்லை என்பது மட்டும் உண்மை. cargo வா passenger விமானமா? எந்த அண்டனோவை சொல்லுறாங்கண்ணு புரியலை. An-225 அண்டனோவ் எம்பி உயரபறக்கமுன்னரே  திருச்சி விமானநிலையம் வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ பலாலிக்கு அன்டனோவ் வந்து போகாத மாதிரி எல்லோ கதை போகுது.

அன்ரனோவ் ரக விமானங்களை பலாலியில் இறக்கி காட்டினது.. ஹிந்தியப் படைகளின் 1987 தமிழீழ ஆக்கிரமிப்பு.

அதன் பின் சொறீலங்கா விமானப் படையும் அதனை வாங்கிப் பாவித்தது. இவற்றில் சில ரஷ்சிய.. உக்ரைன் விமானமோட்டிகளோடு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டும்.. சில இயந்திரக்கோளாறு காரணமாக வீழ்ந்தும் போனது கடந்த கால வரலாறு.

இது பலாலி விஸ்தரிப்புன்னு.. ஒரு பகுதி காசை அடிக்கவும்.. இன்னொரு பகுதி நில ஆக்கிரமிப்பை நிரந்தரப்படுத்தவும் நடக்கும் கைங்கரியமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

இதில் தமிழ் மக்களின் நலன் என்பது கிஞ்சிதமும் கருத்தில் கொள்ளப்படவில்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வீழ்த்தியது இது 
மிகவும் பாரமான குண்டுகளை 
கொண்டுவந்து கொட்டிட இதை பாவித்தார்கள் 
இதைத்தான் நாம் 'சகடை" என்று அழைப்பது.
குண்டு கீழே ஆடி ஆடி வர ஒரு 3 நிமிடம் செல்லும்  

Related image

அவர்கள் இறக்க போகிறோம் என்று சொல்வது 
இதைத்தான் என்று நினைக்கிறேன்.
இதுதான் உலகின் பாரிய விமானம் (பார ஊர்தி) 

Image result for antonov

Image result for antonov

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Maruthankerny said:

புலிகள் வீழ்த்தியது இது 
மிகவும் பாரமான குண்டுகளை 
கொண்டுவந்து கொட்டிட இதை பாவித்தார்கள் 
இதைத்தான் நாம் 'சகடை" என்று அழைப்பது.
குண்டு கீழே ஆடி ஆடி வர ஒரு 3 நிமிடம் செல்லும்  

Related image

சகடை என்று அழைக்கப்பட்டது அன்ரனோவ் அல்ல சீன தயாரிப்பு வை-8 விமானங்கள் என்று நினைக்கிறேன்.

Related image

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொன்ன இந்திய இராணுவத்துடன் வந்தவை இதுதான் 

Related image

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

சகடை என்று அழைக்கப்பட்டது அன்ரனோவ் அல்ல சீன தயாரிப்பு வை-8 விமானங்கள் என்று நினைக்கிறேன்.

Related image

 

நீங்கள் அவ்ரோ விமானங்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன்
அல்லது 90களின் பின்பு இதை பயன் படுத்தினார்களோ தெரியவில்லை 
அவ்ரோ இதே போலத்தான் இருக்கும்  பண்ணை கடலுக்குள் புலிகள் வீழ்த்தியது 

வை-12 தான் அவர்களிடம் இருந்தது போக்குவரத்து விமானமாகத்தான் 
இருந்தது. அதையும் குண்டு போட பயன்படுத்தினார்களோ தெரியவில்லை.
அவ்ரோவும் டிரான்ஸ்போர்ட் விமானம்தான் ..... பலாலிக்கு வரும்போது 
3 குண்டையும் கொண்டுவந்து போட்டுவிட்டு போகும்.  

Image result for sri lanka air force planes

 

Image result for sri lanka air force planes

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நெடுக்கர் சொன்ன இந்திய இராணுவத்துடன் வந்தவை இதுதான் 

Related image

 

இது  அண்டனோவ் அல்ல Boeing Globemaster (Indian Version)

  • கருத்துக்கள உறவுகள்

அன்டனோவ் 32 ரக விமானங்களை தான் தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஹிந்தியப் படைகளை.. படை தளபாடங்களை நகர்த்த ஹிந்தியா பயன்படுத்தியதாக கீழ் வரும் குறிப்புச் சொல்கிறது.

In 1987, the IAF supported the Indian Peace Keeping Force (IPKF) in northern and eastern Sri Lanka in Operation Pawan. About 70,000 sorties were flown by the IAF's transport and helicopter force in support of nearly 100,000 troops and paramilitary forces without a single aircraft lost or mission aborted.[68] IAF An-32s maintained a continuous air link between air bases in South India and Northern Sri Lanka transporting men, equipment, rations and evacuating casualties.[68] Mi-8s supported the ground forces and also provided air transportation to the Sri Lankan civil administration during the elections.[68] Mi-25s of No. 125 Helicopter Unit were utilised to provide suppressive fire against militant strong points and to interdict coastal and clandestine riverine traffic.[68]

https://en.wikipedia.org/wiki/Indian_Air_Force

இதுதான் அன்டனோவ் 32 ரக விமானம்.

Image result for An-32s

விமானங்களின் வகைகளைப் பற்றி யாழ் உறுப்பினர்கள் இத்திரியில் ஆக்கபூர்வமாக ஆராய்வது நல்ல முன்னேற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2018 at 2:53 PM, vanangaamudi said:

எதற்காக இப்படி அண்டனோவ் அது இது என பில்ட் அப் கொடுங்கினமோ தெரியாது. ஆனால் இது எதுவும் தமிழருக்கு நல்லது செய்யவேணும் என்று செய்யப்படவில்லை என்பது மட்டும் உண்மை. cargo வா passenger விமானமா? எந்த அண்டனோவை சொல்லுறாங்கண்ணு புரியலை. An-225 அண்டனோவ் எம்பி உயரபறக்கமுன்னரே  திருச்சி விமானநிலையம் வந்திடும்.

அதை நாம தான் பயன் படத்த வேணும்.மற்றும்படி நல்ல விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

அதை நாம தான் பயன் படத்த வேணும்.மற்றும்படி நல்ல விடையம்.

இந்தியாவில் உடு துணிகள் புடவைகள் சட்டைகள் போன்ற வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்ன அண்ண:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.