Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை அணியுங்கள்' - சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கலாசாரத்திற்கேற்ற ஆடையை அணியவும் என்ற அறிவித்தல் பலகை, சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வைரலாகியது.

கடற்கரையோரத்தில் அணிய வேண்டிய ஆடை குறித்து தென் இலங்கையின் ஹபராதுவ பிரதேசத்தில் சமூகப் போலீஸ் பிரிவினால் அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அறிவித்தல் பலகையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

''தற்போதே இதுகுறித்து எனக்கு அறியக்கிடைத்தது. உடனடியாக அதனை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று அரச நிர்வாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பி.பி.சி இடம் தெரிவித்தார்.

''இலங்கையின் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை அணியவும்'' என்று ஹபராதுவ பிரதேசத்தில் போலீசாரின் சமூகப் பிரிவால் வைக்கப்பட்ட அறிவித்தல் பலகை கூறுகிறது.

''பிகினி'' ஆடையுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் படங்கள் பொறிக்கப்பட்டு, இந்த ஆடைகள் ''பொருத்தமற்றவை'' என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளம்பரப் பலகை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த அறிவித்தல் பலகையை விமர்சித்தே அதிகமான கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளன.

ஆடைகள் குறித்து மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் இறுக்கமான சட்ட திட்டங்களையும், ஹபராதுவ சமூக போலீஸாரின் இந்த விளம்பரப் பலகையையும் ஒப்பிட்டு ஒருவர் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

பேஸ்புக் தளத்தில் ஒருவரின் பதிவில் ''வரைபடத்தில் தொலைவில் இருந்தாலும், சௌதி அரேபியாவிற்கு நாம் நெருக்கமானவர்கள்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ஆடை கட்டுப்பாடு: இலங்கை சமூகதளத்தில் குவியும் கருத்துகள்

''வெளவாலின் வீட்டிற்கு வந்தால் தலைகீழ் தொங்கியிரு! - சமய போலீஸ், சிலோன்'' என்று குறித்த அறிவித்தலைப் பகிர்ந்துள்ள இன்னமொருவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை சுற்றுலா அபிவித்தி அதிகார சபையின் ட்விட்டர் செய்தியில், ஹபராதுவ சமூக போலீஸாரின் இந்த விளம்பரப் பலகை குறித்து கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

''இலங்கையின் அழகிய கடற்கரையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைகள் குறித்த சட்டதிட்டங்களை அமல்படுத்தும் போலீஸ் தேவையில்லை,'' எனவும், தமது நிறுவனம் இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் பலகை குறித்து ஊடக, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கவனத்திற்கு வந்ததாகவும், இதுகுறித்து அரச நிர்வாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அறிவித்துள்ளதாகவும் அரச செய்திப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடை கட்டுப்பாடு: இலங்கை சமூகதளத்தில் குவியும் கருத்துகள்

இதுகுறித்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கேட்டபோது, ''கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குட்டையாக அணியாமல், வேறு எவ்வாறு அணிவது,'' என்று கேட்டார்.

எனினும், இலங்கையில் பெண்களின் உடைகள் குறித்து அறிவிப்பு வெளியாவது இது முதன்முறையல்ல.

தாய்மார்கள் பாடசாலைக்குள் நுழையும்போது, அணிந்திருக்க வேண்டிய ஆடைகள் குறித்து பரிந்துரைக்கும் விளம்பரப் பலகையொன்று 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விளம்பரமும் அப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது.

பாடசாலைக்குள் நுழையும் பெண்கள் அணிய வேண்டிய, தவிர்க்க வேண்டிய ஆடைகள் குறித்து இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்குள் நுழையும் பெண்களின் ஆடைகள் குறித்த அனைத்து சட்டதிட்டங்களையும் நீக்கிக் கொள்ளுமாறு அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டிருந்தார்.

ஆடை கட்டுப்பாடு: இலங்கை சமூகதளத்தில் குவியும் கருத்துகள் Image caption ''இது பெண்களுக்குப் பொருத்தமான தோற்றமல்ல,'' அகற்றப்பட்ட ஒரு விளம்பரப் பலகை

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெண்களின் உடல் தோற்றத்தை ''பீப்பாய்'' ஒன்றுடன் ஒப்பிட்டு, உடற்பயிற்சி நிலையம் ஒன்று (Gym) கொழும்பில் வீதி விளம்பரமொன்றை செய்திருந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை அடுத்து இந்த விளம்பரப் பலகை அப்புறப்படுத்தப்பட்டது.

OSMO என்ற உடற்பயிற்சி நிலையத்தினால் செய்யப்பட்டிருந்த இந்த விளம்பத்தில் பீப்பாய் படமொன்று பொறிக்கப்பட்டு, ''இது பெண்களுக்குப் பொருத்தமான தோற்றமல்ல'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-45908035

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த ஊசி குத்தின அழகே தனியழகு :cool:

singkala Saree à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு கையிலை கள்ளு முட்டி....
மற்ற கையிலை பொரியல் சட்டி....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 சட்டியும் முட்டியும் எப்போதும் உங்களுக்கு பிடித்தவைதானே   :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடை  தாவணியில், பார்த்த அழகு...  அதனை, வார்த்தைகளில் வடிக்க முடியாது. ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, நிலாமதி said:

 சட்டியும் முட்டியும் எப்போதும் உங்களுக்கு பிடித்தவைதானே   :grin:

:grin:   :grin:   :grin:

அதுவும் சரிதான்.... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

48 minutes ago, குமாரசாமி said:

இந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த ஊசி குத்தின அழகே தனியழகு :cool:

singkala Saree à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு கையிலை கள்ளு முட்டி....
மற்ற கையிலை பொரியல் சட்டி....:grin:

 

22 minutes ago, நிலாமதி said:

 சட்டியும் முட்டியும் எப்போதும் உங்களுக்கு பிடித்தவைதானே   :grin:

நிலாமதி அக்கா....  ஊசி, குத்திய அழகை இன்னும் கவனிக்கவில்லை...  என்பதால் சந்தோசம்.  tw_glasses:  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாம் கவனித்தாயிற்று  அளவாக அழகாக இருக்கு .:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த ஊசி குத்தின அழகே தனியழகு :cool:

singkala Saree à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு கையிலை கள்ளு முட்டி....
மற்ற கையிலை பொரியல் சட்டி....:grin:

இப்ப காத்தால, புங்கையூரார் வந்து நிக்கப் போறார்....

தாரப்பா, எண்ட  போடி மெனிக்காவை இங்க போட்டது  எண்டு...?

*******

புதுவருசத்துக்கு, சிங்கள கிராமங்களில 'அவுருது குமாரி, (புதுவருட இளவரசி) என்ற போட்டி நடைபெறும். அதில் வெல்பவருக்கு பரிசுகள், ஏன் சினிமா சிங்கள வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த பொடி மெனிக்கே அப்படி போட்டிக்கு கிளம்பி இருக்கிறா.

Edited by Nathamuni

2 hours ago, குமாரசாமி said:

இந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த ஊசி குத்தின அழகே தனியழகு :cool:

singkala Saree à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு கையிலை கள்ளு முட்டி....
மற்ற கையிலை பொரியல் சட்டி....:grin:

ச்சா..உந்த படத்தை போட்டி பழைய ஞாபகங்களை அருட்டி விட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் ஆடம்பரம் அற்ற அமைதிதான் அழகு !

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த ஊசி குத்தின அழகே தனியழகு :cool:

singkala Saree à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு கையிலை கள்ளு முட்டி....
மற்ற கையிலை பொரியல் சட்டி....:grin:

என்னதான் சொன்னாலும் வைரமுத்து வைரமுத்துத்தான் -  சிங்களத்து சின்னக் குயிலே 

அதுசரி, இந்தப் பெண்ணை குமாரசாமியார் ஏன் தெரிவு செய்தார்....? கித்துளைப் பார்த்தா...?? தொப்புளைப் பார்த்தா...???

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பாகவே கிராமத்துப்பெண்கள் அழகு அதிலும் மலையகப் பெண்கள் பேரழகு......!  tw_blush:

(நான் எழுதிய சான்றிதழ் கதையிலும் பின் பாதியில் ஹேமா இப்படித்தான் வருகிறாள். இப்படியே அந்த கயிற்றுக் கட்டிலை நோக்கி போகிறாள். நன்றி கு.சா......!).

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

:grin:   :grin:   :grin:

அதுவும் சரிதான்.... tw_blush:

இந்தச்சிரிப்பு

சட்டியும்  முட்டியும்

குட்டியும்  என்று  எழுதாமல்  விட்டதுக்குத்தானே  அண்ணா???:D:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ச்சா..உந்த படத்தை போட்டி பழைய ஞாபகங்களை அருட்டி விட்டார்கள்..

Me TOO  வரப்போகுது  என்கிறீர்களா  ராசா..??:D:

9 hours ago, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா....  ஊசி, குத்திய அழகை இன்னும் கவனிக்கவில்லை...  என்பதால் சந்தோசம்.  tw_glasses:  :grin:

நேரம்  பொன்னானது  என்பதை கடைப்பிடித்திருக்கிறார்  :D:

அதைத்தானே  சொல்ல  வருகிறீர்கள் சிறி

 

4 minutes ago, விசுகு said:

Me TOO  வரப்போகுது  என்கிறீர்களா  ராசா..??:D:

ஏற்கனவே #HeToo வந்திட்டு!

?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

ஏற்கனவே #HeToo வந்திட்டு!

?

நிழலியைப்பற்றியா?

எங்க  ??  எங்க??:grin:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Rajesh said:

ஏற்கனவே #HeToo வந்திட்டு!

?

 

25 minutes ago, விசுகு said:

நிழலியைப்பற்றியா?

எங்க  ??  எங்க??:grin:

He (Key) என்றால் நிழலியா?  ஆமாம், யாழுக்குள் கண்டதுகளும் நுளையாமல் இருக்க அவரைத்தான் சாவி ஆக நியமித்துள்ளார்கள். ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.