Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

Editorial / 2018 டிசெம்பர் 29 சனிக்கிழமை, பி.ப. 01:13 Comments - 0

-டி.விஜிதா

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தாகவும் 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி சாடினார்.

இந்த செயற்பாட்டின் போது தான் தமித்ழ் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த செயற்பாட்டில் தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறதெனவும் ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றனலெனவும் குறிப்பிட்டார்.

அரசமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாத தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், ஏனெனில், ஓர் அரசியல் தீர்வை தாம் எதிர்நோக்குவது, அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வாகுமெனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு மூலமாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது. இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவரும் எனவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பெப்-4க்கு-முன்னர்-வரைவு-வெளிவரும்/150-227245

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப வர வர .... எதோ ரஜனி படம் வெளிவர மாதிரி 
போய்க்கொண்டு இருக்கிறது.

இதுக்கும் சினிமாவுக்கும் பெரிதாக ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. 

இவ்வரசியல் அமைப்பு திருத்த வரைவில் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்பதற்கு மேல் ... 

 ... ஒரு அரசியலமைப்பு திருந்த சட்டங்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டுமாயும்,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையால்தான் நிறைவேற்றப்பட வேண்டும்!  ...  இல்லையா??

அப்படியாயின், இந்த வரைபும் ஒரு புஸ்வாணமா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

வட்ட மேசை, தீர்வு, தீர்வுப்பொதி, பொக்கிசம் எல்லாம் முடிஞ்சுது..... இனி வரைவாம்.....நடக்கட்டும்....நடக்கட்டும்.
கடைசியிலை எப்பிடி முடியுமெண்டது அனுபவப்பட்ட எங்களுக்கு நல்லவடிவாய் தெரியும்...:127_older_man:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கூட தாம் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதுமே ஆதரவளிக்கப்போவதிலை என்று ஜே வீ பி சூளுரைத்திருந்தது. அவ்வாறே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட பெள்த்தத்திற்கும்சிங்களத்துக்கும் வழங்கப்படும் விசேட அந்தஸ்த்துக் குறைக்கபடாதென்று ரணில் நேற்றுக் கூறியிருக்கிறார். அப்படியிருக்க அவர்களுடன்  இணைந்து கொண்டுவரப்படும் அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது? அது இப்போதிருக்கும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதில்தான் சென்று முடியப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for sri lanka districts map

இது கூகிளில் தட்டினால் வரும் 
ஏன் சுமந்திரன் கஸ்ரபட்டு வரைகிறார் ? 

  • கருத்துக்கள உறவுகள்

இது முதல் வரைபு அல்லவா? எனவே இதில் உள்ளதை விடவும் குறைவாகத் தான் இறுதி வரைபு இருக்கும். ஆனால் ஏதாவது ஒன்று பைப்லைனில் இருக்க வேண்டும், எனவே பெப்.4 இல் வந்தால் வரவேற்கக் கூடியதே. ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் திட்டுவார்களே? ஆனால், பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது, எமக்குப் பிடிக்கா விட்டாலும் சிறி லங்காவில் இருக்கத் தான் போகிறது. இதை எழுத்தில் வைத்திருக்கா விட்டாலும் இது எழுதாச்சட்டமாக இருக்கத் தான் போகிறது. உதாரணமாக இந்தியாவைப் பாருங்கள், செகுலர் ஜனநாயகம் என்று தான் சொல்கிறார்கள், ஆனால் பி.ஜே.பி ஆட்சியில் இந்துக்களுக்கு முதலிடம் தான் வழங்கப் படுகிறது. எனவே , பௌத்தம் முதலிடம் பெற்றாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை உதாரண புருசனாய் காட்டுது ஒரு தெம்மாங்கு சிங்கம்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் எனும்பொழுது, தமிழர்  தாயகத்தில் ஒவ்வொரு நாளும் முளைக்கும் புத்த விகாரைகளும் அடங்கும். அநியாயம் என்னவென்றால் புதிய யாப்பு இதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மாறிவிடும் என்பதுதான். 

பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் கோட்பாட்டை நாம் ஏற்பதென்பது அதனோடு இணைந்து வரப்போகும் ஏனைய அடக்குமுறைகளையும் ஏற்பதாகிவிடும்.

பெளத்தத்திற்கும், சிங்களத்திற்கும் முதலிடம், இணையாத வடக்கும் கிழக்கும்.........இனி என்னதான் மீதமாய் இந்த வரைபில் தமிழருக்கு இருக்கப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ragunathan said:

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

1 hour ago, vanangaamudi said:

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

இது தான் நடக்காது. கல்வி காணி பொலிஸ் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க சிங்கள அரசுகள் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

ராணுவத்தினை மீறி எதுவும் செய்ய முடியாது. இராணுவத்தை வைத்திருப்பதே குடியேற்றங்களையும் புத்தர் சிலைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ளவும்  மக்களை அச்சுறுத்தவும் தான்.

16 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

2004 /2005 இல் வன்னி உட்பட தமிழர் தாயகத்தின் அநேகமான முக்கிய பிரதேசங்களையும் இலங்கையின் 45 வீதத்துக்கு மேற்பட்ட, முக்கியமாக சர்வதேச கடற் போக்குவரத்து பாதைகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கடல் பிரதேசங்களை தம் செல்வாக்குள் வைத்திருந்தனர் புலிகள்.

ஓயாத அலைகள் 3 இன் மூலம் யாழ் தீபகற்பத்தை துண்டாடிக் கொண்டு இருந்த ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றியும் இருந்தனர்.

தீச்சுவாவலை எனும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையை முறியடித்து இலங்கை அரச படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்கும் முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு தம்மால் இலங்கை எங்கும் விரும்பிய இடத்தில் தாக்குதல் செய்யலாம் என நிரூபித்து இருந்தனர்.

இப்படி கடும் பலத்துடன் புலிகள் இருந்தும் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட PTOMS எனப்படும் சுனாமிக்கு பின்னரான மக்களின் துயர் துடைக்கும் ஒரு திட்டத்தை சிங்களம் புலிகளுடன் / தமிழர்களுடன் செய்ய அங்கீகரிக்கவில்லை. இதில் ஜேவிபி / ஐதேக மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் கூட PTOMS இற்கு ஒத்துழைக்கவில்லை.

30 வருடங்களும்மு மேலாக போராடிய புலிகள் பலமாக இருக்கும் போது கூட சிங்கள பெளத்த பேரினவாதம் இயற்கை அழிவுக்கான துயர் நீக்கும் நடவடிக்கையில் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை.

ஆனால் இன்று

எமக்கென்று எம் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசமும் இல்லை, இராணுவ பலமும் இல்லை, காத்திரமான பொருளாதார பலமும் இல்லை, உருப்படியான அரசியல் தலமையும் இல்லை, ஒரு ம**ரும் இல்லை.

பலமாக இருக்கும் போதே ஒன்றையும் தராத சிங்களம் இப்ப மட்டும் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

இல்லை எனில் இப்போதைக்கு கிடைக்க கூடிய ஆகக் கூடிய விடயங்களை பெற்று மக்களை ஓரளவுக்கேனும் பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து செல்லும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பலத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பதை தவறு என்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நீங்கள் கூறுவதும் சரிதான்,

சிங்களம் எதையுமே தரப்போவதில்லை. இப்போது இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ள ஒரு அதிகாரமாவது இருந்தால்ப் போதும் என்கிற நிலைமைதான் இப்போது. அதுக்குக்கூட சிங்களம் விரும்பினால்த்தான்.

எங்கள் தலைவிதியை நினைத்து எங்களையே நொந்துகொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.