Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன்

January 23, 2019

இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த முயற்சி வெற்றியளித்தால், வந்த காரியம் முடிந்துவிட்டதென விலகுவதாகவும் இல்லையாயின் தோல்வியடைந்தால், தொடர்ந்தும் அரசியலில் இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்வதா? அல்லது அரசியலை விட்டு விலகுவதா என்பது தொடர்பில், தீர்மானமொன்றை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு, நேற்று முன்தினம் (21.01.19) இரவு வழங்கிய நேரலை நிகழ்ச்சியொன்றின்  செவ்வியின் போது தொடர்ந்துரைத்த அவர், அரசமைப்பை நிறைவேற்றாது, அடுத்த தேர்தலொன்றுக்குச் செல்வோமாயின், தமது கட்சி, வாக்குப் பலத்தைப் பெற்றுக்கொள்வது, பாரிய சிக்கலாக இருக்குமென்றும் தமது கட்சிக்கு எதிராக, இனவாதிகள் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் தம்மிடம் ஆதரவைக் கோரினால், அது குறித்து அப்போது தான் தீர்மானிப்பதாகவும் அரசியலில் இருக்கும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், சுமந்திரன் கூறியுள்ளார்.

“புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரப் பாடுபடுவேன், இல்லையேல் அரசியலை விட்டு விலகுவேன் என வாக்குறுதியளித்தே, அரசியலுக்குள் நான் பிரவேசித்தேன். அதனால், அரசமைப்பை நிறைவேற்றும் விடயத்தைக் கொண்டு, என்னுடைய அரசியல் பயணம் தீர்மானிக்கப்படும். ஆனால், இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை நான் எடுக்கவில்லை. “அரசமைப்பை நிறைவேற்ற முடியுமென்ற உறுதி என்னுள் இருக்கிறது. இருந்தாலும், அதைச் செய்ய முடியாவிட்டால், நான் என்னுடைய முடிவை எடுக்க வேண்டும். காரணம், அரசியலுக்காக, அரசியல்வாதியாக நான் என்னுடைய வாழ்க்கையைக் கொண்டுசெல்ல விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்தில், 78ஆம் ஆண்டு அரசமைப்பில் உள்ளதை, அப்படியே அரசமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தவிர, அனைத்து மதங்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளோம். இதில், பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பெரும்பான்மையினரின் வாதமாக இருப்பின், அதையே தொடர்வதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எமது மக்களுக்கு, நாம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா? ஏன் எமது மதங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாதென்ற ஒரு எண்ணம் இருக்கின்றது” என்றும், சுமந்திரன்  சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும், தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்‌ஸவை வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.

“புலிகள் பயங்கரவாதிகள் என்றால், அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான். வடக்கு மாகாண சபை, முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன். இனி அதனை நாங்கள் சரியாகக் கையாள்வோம்.

“புதிய அரசமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

“ஒற்றை ஆட்சி என்றால், ஓரிடத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கும். அப்படியானால், எப்படி நீங்கள் அதிகாரத்தைப் பகிர்வீர்கள்? நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிருங்கள். அதையே கூறுகிறோம். ஒருமித்த நாடு அல்லது ஒன்றுபட்ட நாடு என்று கூறலாம் என்று நான் யோசனை முன்மொழிந்தேன். அதில், ஒருமித்த நாடு என்று குறிப்பிடுவது நல்லதெனத் தீர்மானித்தார்கள்.

“தெற்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இது புரியாமல் உள்ளது. சமஷ்டி இல்லையென டெலோ என்ற எங்களின் பங்காளிக்கட்சி கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்தச் சிந்தனை இருக்கக் கூடாதென, நான் மக்களிடம் சொல்கிறேன். இதே சில வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தால், பின்னர் எப்படி திரும்பி வந்திருப்பேன்?

“அரசமைப்பு என்பது சமூக ஒப்பந்தம். அதனால் தான், அனைவரதும் இணக்கம் இதற்குத் தேவையெனக் கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சினைகள், உயிரிழப்புகள், சேதங்களுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கு மக்கள் இன்னமும் ஏன் சமஷ்டி கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள்? காரணம், அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால், எமக்கெதிரான சக்திகள் தலைதூக்குமென அவர் மேலும் கூறினார்.

19 hours ago, கிருபன் said:

“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன்

சாத்தான் அப்பப்ப வேதமோதுகிறது!
இல்லையென்றால் மக்களை ஏமாத்தி வாக்குகளை பெற முடியாது.

திட்டமிட்ட தமிழின அழிப்பை பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் என்பது மிக மோசமான இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதத்துக்கு இணையானது.

சுமந்திரனின் அப்பா காட்டிக்கொடுத்து புலிகளிடம் அடி வாங்கியதை சுமந்திரன் எப்படி மறப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2019 at 5:45 PM, கிருபன் said:

“புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரப் பாடுபடுவேன்,

புதிய மாெத்தையில் பழைய கள்ளு. இதில் இவர் பாடுபட என்ன இருக்கிறது? அதை தமிழர் தலையில் கட்டியடிக்க பாடுபடுகிறார் பாேலிருக்கிறது.

On 1/24/2019 at 12:15 PM, கிருபன் said:

புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை

நான் ஆதரிப்பதெல்லாம் தமிழினக் கலவரங்களைச் செய்த யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்து சாம்பலாகிய ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை மட்டும் தான் என்டு சுமந்திரன் சொல்லவாறார்.

Quote

“புதிய அரசமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

Quote

புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர் 

... அந்தப்பழம் தான் வேண்டும் ... ஆனால் அது புளிக்கும்/கிடைக்காது!

தேர்ந்தெடுக்கப்பட்ட/புறக்கணிக்கப்பட்ட சொல் ... துன்புறுத்தப்பட்டனர்? இனப்படுகொலை? ...  கூத்தமைப்பிலுள்ள சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell" உறுப்பினர் சிறப்பாக செவ்வி அளித்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2019 at 4:01 AM, பிரபாதாசன் said:

சுமந்திரனின் அப்பா காட்டிக்கொடுத்து புலிகளிடம் அடி வாங்கியதை சுமந்திரன் எப்படி மறப்பார் 

இது உண்மையா? உங்களிடம் ஆதாரம் உண்டா? இன்னொரு இடத்தில் களவெடுத்து தண்டனை பெற்றதாக யாரோ எழுதினர். அப்ப இரண்டுமே கற்பனையா அல்லது இரண்டும் உண்மைகளா? அல்லது தேசிக்காய்கள் வெறுக்கும் சும் என்பதால் அப்பர் ஏன் தண்டிக்கப் பட்டார் என்பதே முக்கியமில்லையா? 

54 minutes ago, Justin said:

இது உண்மையா? உங்களிடம் ஆதாரம் உண்டா? இன்னொரு இடத்தில் களவெடுத்து தண்டனை பெற்றதாக யாரோ எழுதினர். அப்ப இரண்டுமே கற்பனையா அல்லது இரண்டும் உண்மைகளா? அல்லது தேசிக்காய்கள் வெறுக்கும் சும் என்பதால் அப்பர் ஏன் தண்டிக்கப் பட்டார் என்பதே முக்கியமில்லையா? 

... சும்மரின் டாட் 90களில் பச்சை மட்டை வாங்கியதாக வதந்தி! சும்மரும் தொடர்ந்து புலி வாந்தி எடுப்பதற்கு காரணம் ... கொள்கை? அரசியல்? ... இருப்பதாக தெரியவில்லை? 

இங்கு லண்டனிலும் பலர் இன்றும் புலிவாந்தி, கேட்டால் கொள்கை என்பார்கள்! பின்னணியை ஆராந்தால்  ....  அவர்களும் இன்னொரு சுமந்திரர்களே என்பது தெரியும்😪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

31 minutes ago, Nellaiyan said:

... சும்மரின் டாட் 90களில் பச்சை மட்டை வாங்கியதாக வதந்தி! சும்மரும் தொடர்ந்து புலி வாந்தி எடுப்பதற்கு காரணம் ... கொள்கை? அரசியல்? ... இருப்பதாக தெரியவில்லை? 

இங்கு லண்டனிலும் பலர் இன்றும் புலிவாந்தி, கேட்டால் கொள்கை என்பார்கள்! பின்னணியை ஆராந்தால்  ....  அவர்களும் இன்னொரு சுமந்திரர்களே என்பது தெரியும்😪

சுமந்திரன் & மதியாபரணம்  குடும்பம் இருந்தது பெரும்பாலும் கொழும்பில்,

இப்பபடியான சம்பவம் இடம்பெற்றதாக கேள்விப்படவில்லை. அநேகமாக வதந்தியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nellaiyan said:

... சும்மரின் டாட் 90களில் பச்சை மட்டை வாங்கியதாக வதந்தி! சும்மரும் தொடர்ந்து புலி வாந்தி எடுப்பதற்கு காரணம் ... கொள்கை? அரசியல்? ... இருப்பதாக தெரியவில்லை? 

இங்கு லண்டனிலும் பலர் இன்றும் புலிவாந்தி, கேட்டால் கொள்கை என்பார்கள்! பின்னணியை ஆராந்தால்  ....  அவர்களும் இன்னொரு சுமந்திரர்களே என்பது தெரியும்😪

அப்ப ஆதாரம் இல்லை! உங்களுக்கு வதந்தியின் உண்மைத் தன்மை அவசியமில்லை என்பதை அறிவேன், ஆனால் ஒரு வதந்தியை ஒருவரின் அரசியலை அல்லது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவும் மலினப் படுத்தவும் பாவிப்பது உங்கள் அறிவுத் திறனுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமதிப்பாகத் தெரியவில்லையா? 

புலம் பெயர்ந்த தீவிர தேசியபக்தர்களுக்கும் கொள்கையெல்லாம் கிடையாது, பின்னணியில் ஒரு வருமான விவகாரம், அசைலம், வெளிநாட்டுக்குக் குடும்ப அழைப்பு என்று உள்நோக்கங்கள் வைத்திருப்பார்கள் என ஒரு கருத்தை நான் சொன்னால் எப்படி உணர்வீர்கள்? ஒரு பேச்சுக்குத் தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர்

Quote

“புலிகள் பயங்கரவாதிகள் என்றால், அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான்.

சுமந்திரன் ஐயா நாங்க ஒத்துக்கொள்கிறோம், நீங்கள் ஒரு அப்புகாத்து என்று! தன்தரப்பு வாதிகளுக்காக(?) நன்றாக வாதாடுகிறீர்கள்.

19 hours ago, Justin said:

அப்ப ஆதாரம் இல்லை! உங்களுக்கு வதந்தியின் உண்மைத் தன்மை அவசியமில்லை என்பதை அறிவேன், ஆனால் ஒரு வதந்தியை ஒருவரின் அரசியலை அல்லது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவும் மலினப் படுத்தவும் பாவிப்பது உங்கள் அறிவுத் திறனுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமதிப்பாகத் தெரியவில்லையா? 

புலம் பெயர்ந்த தீவிர தேசியபக்தர்களுக்கும் கொள்கையெல்லாம் கிடையாது, பின்னணியில் ஒரு வருமான விவகாரம், அசைலம், வெளிநாட்டுக்குக் குடும்ப அழைப்பு என்று உள்நோக்கங்கள் வைத்திருப்பார்கள் என ஒரு கருத்தை நான் சொன்னால் எப்படி உணர்வீர்கள்? ஒரு பேச்சுக்குத் தான்! 

சும்மின் அரசியல்! சும்மின் நிலைப்பாடு! ... தயவு செய்து என்னவென்று கூறுங்கள்????????????.................

 ... பின் வாசலால் நுளையும் மட்டும், மன்னிக்கவும் பின்வாசலால் உட்புகுத்தப்படும் எங்கிருந்தார்? அப்போது அவரின் நிலைப்பாடு என்ன? ........ வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது, " எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது ...",. யார் இவர் எம் கடந்த காலங்களை அரசியலை விமர்சிக்க? 

தேசிய பக்தர்களுக்கு வருமான விவகாரம் என்றால், அதை விட கூடிய வருமான விவகாரம் புலி வாந்தி எடுப்பவர்களுக்கு! எமக்கு புலி வாந்தி எடுக்க, இறைக்கப்படுவதற்கு கணக்கு காட்ட, கூடக்கூட வாந்தி எடுக்க வேண்டும்!

நாமும் அன்று, யுத்தம் காலத்திலேயோ அல்லது முடிந்த பின்னும் பல ஏமாற்றங்கள்/கோபங்கள்/விரக்திகளில் பல கேள்விகள் கேட்டவர்கள்தான்! இன்றும் ஏப்பம் விடும் சிலரை நோக்கி கேள்விகள் கேட்கிறோம்தான்! 

 இன்று எங்கள் பிரதிநிகள் எனும் பெயரால் இராஜபோகங்கள் அனுபவிப்பதை விட என்னத்தை எம்மக்களுக்கு செய்தார்கள்?????

சுமந்திர/சம்பந்தர்கள் இன்று செய்வது விபச்சாரத்தை விட மோசமானது! விபச்சாரிகள் பணத்துக்காக தங்கள் உடலைத்தான் விற்கிறார்கள்! ஆனால் இவர்கள், கேவலம் அப்பாவி மக்களின் வாழ்மை விற்று, தாம் வாழ்கிறார்கள்!

On 1/27/2019 at 9:25 AM, Justin said:

சுமந்திரனின் குடும்பம் கொழும்புக்கு ஓடி தப்பியவர்கள் , ஐ தே கட்சியின் பரம விசிறி மற்றும் தமிழின துரோகி தான் இவரின் அப்பா . அதனால் தான் இப்பவும் அண்ணருக்கு புலிகள் என்றால் அன்போ அன்பு ....

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தனது பக்க நியாயத்தை முன்வைப்பதற்குப் புலிகளை விமர்சிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறதென்பது ஒரு முக்கியமான கேள்வி.

எனது பார்வையில், சிங்களத் தலைவர்கள் செய்யவேண்டிய ஒரு வேலையை சுமந்திரன் செய்கிறார் என்று நினைக்கிறேன். அதாவது, "தமிழர்கள் புலிகளை வெறுக்கிறார்கள், அவர்கள் ஒருபோதுமே பிரிவினையை ஆதரிக்கவில்லை, அவர்கள் விரும்புவது ஒருமித்த நாட்டிற்குள் ஒரு தீர்வையே, சமஷ்ட்டி என்பது நாட்டைப் பிரிப்பது கிடையாது" போன்ற விளக்கங்களை சுமந்திரனைக் கொண்டே சிங்கள மக்களிடம் தெரிவிக்க சிங்களத் தலைவர்கள் விரும்புகிறார்கள். அல்லது, "போய்ப் பட்டுத் தெளியட்டும்" என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சுமந்திரன் பேச்சுப்பற்றி சிங்களவர்கள் கொதித்தெழும்போது, ரணிலோ அல்லது அவரது அமைச்சர்களோ தமக்கும் சுமந்திரன் கூறுவதற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், அவர் கூறுவது தவறு என்பதுபோலவும் நடந்துகொள்கிறார்கள். ஏக்கிய ராஜ்ஜிய எனும் சிங்களச் சொல்லிற்கு சுமந்திரனும் ரணில் உற்பட்ட பல அமைச்சர்களும் கொடுத்த வேறுபட்ட விளக்கங்களே இதற்குச் சாட்சி.

அடுத்ததாக, சிங்களவர் முன் தனது தீர்வை முன்வைக்கும் சுமந்திரன், அவர்கள ஆத்திரப்படாதவாறு நடந்துகொள்ள முயற்சிக்கிறார். அதாவது சிங்களவர்கள் விரும்புவதை அவர்களுக்குச் சொல்லுவது.
"புலிகள் அழிக்கப்பட்டதை நான் தவறென்று கருதவில்லை, அது சரியானதுதான்" என்கிற அவரது வாதம், தன்னைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தும் ஒரு கைங்கரியம் என்பதோடு, சிங்களவரின் மனங்களைக் குளிர்விக்கவும் அவர் இதன்மூலம் எத்தனிக்கிறார்.

இதேபோல, சிங்களவரை ஆத்திரமூட்டும் இன்னொரு விடயமான சிங்கள ராணுவத்தினர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் என்பது பற்றிய கருத்தாடல்களை வேண்டுமென்றே தவிர்ப்பதன் மூலம் தனது கருத்தினைச் சிங்களவர்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கிறார்.  பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை வேண்டுமென்றே பேச மறுக்கும் சுமந்திரன், வெறுமனே, "பயங்கரவாதிகளைக் கொன்ற விதமும் பயங்கரவாதமே" என்பதன் மூலம் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சிங்கள மக்கள் முன் தமிழராக பறைசாற்றுவதோடு மட்டுமல்லாமல், ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவித்ததை மறைத்துவிட்டு வெறுமனே புலிகளை மட்டுமே கொன்றதாக முடித்து விட நினைக்கிறார். 

இப்படிச் செய்வதன் மூலம் சிங்களவரின் நன்மதிப்பையும், அபிமானத்தையும், அத்துடன் தனது தீர்வுப்பொதிக்கான ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று சுமந்திரன் நினைக்கலாம். ஆனால், அதற்கான ஆதரவென்பது எந்தச் சிங்களத் தலைவரிடமிருந்தும் இதுவரை வரவில்லை. மகிந்த அணியினர் சுமந்திரன் நாட்டைப் பிரிக்க முயல்கிறார் என்று சிங்கள மக்களை உசுப்பேற்ற, சுமந்திரன் கஷ்ட்டப்பட்டு பதவியில் அமர்த்தியிருக்கும் ரணிலோ, சுமந்திரன் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அப்பட்டமாக அறிவிக்க, யார் சிறந்த பெளத்த சிங்கள இனவாதியென்கிற போட்டி மகிந்த - ரணிலுக்கிடையில் நடக்கிறது. இதில் அடிபட்டுப் போகப்போவது சுமந்திரனது கருத்து மட்டுமில்லாமல், மொத்தத் தமிழர்களது மீதமிருக்கும் ஒரு சில நம்பிக்கைத் துளிகளும்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2019 at 4:18 PM, Nellaiyan said:

சும்மின் அரசியல்! சும்மின் நிலைப்பாடு! ... தயவு செய்து என்னவென்று கூறுங்கள்????????????.................

 ... பின் வாசலால் நுளையும் மட்டும், மன்னிக்கவும் பின்வாசலால் உட்புகுத்தப்படும் எங்கிருந்தார்? அப்போது அவரின் நிலைப்பாடு என்ன? ........ வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது, " எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது ...",. யார் இவர் எம் கடந்த காலங்களை அரசியலை விமர்சிக்க? 

தேசிய பக்தர்களுக்கு வருமான விவகாரம் என்றால், அதை விட கூடிய வருமான விவகாரம் புலி வாந்தி எடுப்பவர்களுக்கு! எமக்கு புலி வாந்தி எடுக்க, இறைக்கப்படுவதற்கு கணக்கு காட்ட, கூடக்கூட வாந்தி எடுக்க வேண்டும்!

நாமும் அன்று, யுத்தம் காலத்திலேயோ அல்லது முடிந்த பின்னும் பல ஏமாற்றங்கள்/கோபங்கள்/விரக்திகளில் பல கேள்விகள் கேட்டவர்கள்தான்! இன்றும் ஏப்பம் விடும் சிலரை நோக்கி கேள்விகள் கேட்கிறோம்தான்! 

 இன்று எங்கள் பிரதிநிகள் எனும் பெயரால் இராஜபோகங்கள் அனுபவிப்பதை விட என்னத்தை எம்மக்களுக்கு செய்தார்கள்?????

சுமந்திர/சம்பந்தர்கள் இன்று செய்வது விபச்சாரத்தை விட மோசமானது! விபச்சாரிகள் பணத்துக்காக தங்கள் உடலைத்தான் விற்கிறார்கள்! ஆனால் இவர்கள், கேவலம் அப்பாவி மக்களின் வாழ்மை விற்று, தாம் வாழ்கிறார்கள்!

சும்மின் நிலைப்பாடு அவரே பல தடவை கேட்டு விட்டீர்கள் தானே? அதை எதிர்க்கலாமே? அல்லதி அவர் பேசும் தமிழே விளங்கவில்லையா? அது உங்கள் பிரச்சினையல்லவா? உங்களுக்கு வாழைபழத்தை உரித்து வாயில் வைக்க நான் நேரம் மெனக்கெட வேணுமா?

அதி விளங்கா விட்டால் ஒரு உறுதியாகத் தெரியாத வதந்தியை வைத்துக் கொண்டு வடை சுடுவீர்களா? இது நிச்சயம் உங்கள் "தேசியத்தை" வளர்க்கும் என நினைக்கிறேன்!😎

On 1/28/2019 at 1:09 AM, பிரபாதாசன் said:

சுமந்திரனின் குடும்பம் கொழும்புக்கு ஓடி தப்பியவர்கள் , ஐ தே கட்சியின் பரம விசிறி மற்றும் தமிழின துரோகி தான் இவரின் அப்பா . அதனால் தான் இப்பவும் அண்ணருக்கு புலிகள் என்றால் அன்போ அன்பு ....

இதற்கென்ன ஆதாரம்? வழமை போல உங்கள் தேசிக்காய் மன- நோயின் கற்பனையா?

12 hours ago, Justin said:

சும்மின் நிலைப்பாடு அவரே பல தடவை கேட்டு விட்டீர்கள் தானே? அதை எதிர்க்கலாமே? அல்லதி அவர் பேசும் தமிழே விளங்கவில்லையா? அது உங்கள் பிரச்சினையல்லவா? உங்களுக்கு வாழைபழத்தை உரித்து வாயில் வைக்க நான் நேரம் மெனக்கெட வேணுமா?

அதி விளங்கா விட்டால் ஒரு உறுதியாகத் தெரியாத வதந்தியை வைத்துக் கொண்டு வடை சுடுவீர்களா? இது நிச்சயம் உங்கள் "தேசியத்தை" வளர்க்கும் என நினைக்கிறேன்!😎

இதற்கென்ன ஆதாரம்? வழமை போல உங்கள் தேசிக்காய் மன- நோயின் கற்பனையா?

ஒரே ஊர் , இதனை விட என்ன உங்களுக்கு வேண்டும் , எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இன்னும் தெரியாமல் இருக்கின்ற நீங்களா எனக்கு பதில் போடுகிறீர்கள் , காமடி யாக உள்ளது . மன வருத்தம் என்றால் ஹாஸ்பிடல் போகவும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2019 at 9:01 AM, பிரபாதாசன் said:

சுமந்திரனின் அப்பா காட்டிக்கொடுத்து புலிகளிடம் அடி வாங்கியதை சுமந்திரன் எப்படி மறப்பார் 

1 hour ago, பிரபாதாசன் said:

ஒரே ஊர் , இதனை விட என்ன உங்களுக்கு வேண்டும் , எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இன்னும் தெரியாமல் இருக்கின்ற நீங்களா எனக்கு பதில் போடுகிறீர்கள் , காமடி யாக உள்ளது . மன வருத்தம் என்றால் ஹாஸ்பிடல் போகவும் 

ஒரே ஊர் என்கிறீர்கள் இதனை உறுதிப்படுத்துங்கள்

அவரின் அப்பா இப்ப இருந்திருந்தால் அடி வாங்கிய அடையாளத்தை போட்டோ எடுத்து போடலாம் . 
காலம் கடந்த விடயம் இது , இப்ப உள்ள இளையவர்களுக்கு இது தெரிய சந்தர்ப்பம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபாதாசன் said:

ஒரே ஊர் , இதனை விட என்ன உங்களுக்கு வேண்டும் , எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இன்னும் தெரியாமல் இருக்கின்ற நீங்களா எனக்கு பதில் போடுகிறீர்கள் , காமடி யாக உள்ளது . மன வருத்தம் என்றால் ஹாஸ்பிடல் போகவும் 

ஐயா தாசன், ஒரே ஊர் என்றால் நீங்கள் காழ்ப்புணர்வில் சொல்வதெல்லாம் உண்மையென்று நம்பவா வேண்டும்? இங்கேயே செவி வழி சொல்வதை உண்மையென்று நம்பிக் கொந்தளிப்பவர் நீங்கள், "ஒரே ஊர்" என்பது உங்களுக்கு ஆதாரமா? அப்பா துரோகியாக என்ன செய்தார் என்பதை கூடச் சொல்லப் பயமா? மான நஷ்ட வழக்குப் போட சும் இதெல்லாம் பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். சொல்லும் சீரியசான அவதூறுகளுக்கு ஆதாரங்களை விபரிப்புகளாகவாவது தாருங்கள்! இல்லையேல் அவதூறு செய்யாதீர்கள்.

இது உங்கள் பிரச்சினை மட்டுமல்ல. தீவிர தேசியர்கள் 90% பேர் இப்படியானோர் தான். அது தான் "தேசிக்காய் மன நோய்" என்றேன். இந்த மனநோயின் இன்னொரு அறிகுறி இதற்கு மற்றவர்கள் மருத்துவம் தேட வேண்டும் என்று நம்புவது!😎

சொன்ன தூரோகிப் பட்டம் ஏன் என்று தகவல் தாருங்கள், இல்லையேல் அவதூறைத் தொடராதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சும்மாயிருங்கப்பா ...சுமந்திரன் போய் அடுத்து வந்து எங்கட தலையில் மிளகாய் அரைக்கப்போகும் நரேந்திரனுக்கும், அதற்க்கு பிறகு வரப்போகும் குபேந்திரனுக்கும்  வாக்குப்போட தயாராகிட்டோம் ...இதுக்குள்ள நீங்கவேற இந்தாள்ற அலம்பலை பெரிசா எடுத்துகொண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் வளைக்க இருந்த எலியெல்லாம்.. இப்ப.. வெளில வந்து புலிவாந்தி எடுக்குதுங்க.

முதல்ல.. மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை ஒரு நேர்தியா அளிக்க வக்கில்ல.. வசனத்தை மாத்தி மாத்திப் பேசி.. அதுக்கு ஒவ்வொரு நாளும்.. புதுவிளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றுவது போலல்ல.. புலிகளைப் பற்றிப் பேசுவது. 😂

On 1/29/2019 at 4:29 PM, Justin said:

சும்மின் நிலைப்பாடு அவரே பல தடவை கேட்டு விட்டீர்கள் தானே? அதை எதிர்க்கலாமே? அல்லதி அவர் பேசும் தமிழே விளங்கவில்லையா? அது உங்கள் பிரச்சினையல்லவா? உங்களுக்கு வாழைபழத்தை உரித்து வாயில் வைக்க நான் நேரம் மெனக்கெட வேணுமா?

கொஞ்சம் படிப்பு குறைவு! காதும் சீராக கேதாது! நீங்கள் பார்த்து, விளங்கி, புரிய வைக்க முடியும், என் போன்றதுகளை!...

* இதோ தீர்வு, அதோ தீர்வு?
* அடுத்த வருடத்துக்குள் தீர்வு?
* ஏக்கிய ராட்சியத்தில் தீர்வு?
* ஏக்கிய இராட்சியம் என்றால் சமஸ்டியே?
* வடக்கு கிழக்கு இணைப்பு?
* காணி அதிகாரம்?
* நிதி?
* ....?

உண்மையில் சுமந்திரன் மிக தெளிவாக இருக்கிறார். அவரை பின்வாசலால் உள்நுளைத்த பிராந்திய வல்லரசு கொடுத்த அசைன்மென்டை, மிக செவ்வனே செய்கிறார். மிக குறுகிய காலத்தில் கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். சர்வதேச அழுத்தம், சிறிலங்கா அரசு/படைகள் மீதான யுத்தக்குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பற்றவே, இந்த தீர்வுப்பொதி நாடகத்தை, தன் நிலை மறந்து மோட்சமோ/நரகமோ போக தயாராக இருக்கும் தலைவரை வைத்து ஆடுகிறார். சிங்கள் இராணுவ/புலாய்வாலர்களின் பாதுகாப்பு கவசங்களுக்குள் இருந்து கொண்டு, செம்புகளின் துணையுடன் புலி வாந்திகள்! ... இதை விட சுருகமாக ... முடியாது!

https://www.pathivu.com/2019/01/TNA_29.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.