Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்!

January 28, 2019
ltte-uniform-300x200.jpg

விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர்.

வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் ஒன்றை அடுத்து, வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். எனினும், பொலிசார் தேடிச்சென்றவர் தப்பிச் சென்றிருந்தார்.

அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

21 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போது, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் குழுவொன்று உருவாகி வருவதாக காண்பித்து, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் திட்டமிட்ட அடிப்படையில் ஒரு குழு செயற்பட்டு வந்திருப்பது, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புலிகளின் குழுவொன்று ஆயுதப் பயிற்சி பெறுவது போன்ற படங்களை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் எவ்வளவு உண்மையிருக்கோ? யாமறியோம் பராபரமே!

8 hours ago, ஏராளன் said:

இந்த செய்தியில் எவ்வளவு உண்மையிருக்கோ? யாமறியோம் பராபரமே!

கிருபன் இங்கு இணைக்கும் அநேகமான செய்திகள் புனைவுச் செய்திகளே.

கிளுகிளுப்புக்கான பல செய்திகள் ஊர்ப்புதினத்தில் இணைக்கப்படுவதை பலதடவை பலர் சுட்டிக்காட்டி இருந்தும் இணைக்கின்றார் என்றால் - அது அவருக்கும் யாழ் நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை.

நமக்கேன் வம்பு - வாசிக்காமல் விடலாம் 

அது எமது உரிமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

அட இப்படியான செய்திகளை வாசித்து கிளர்ச்சியடையலாம் என்று பலர் இருக்கின்றார்கள் என்று இப்பத்தான் தெரியும்.

செய்திகளை நான் ஒன்றும் புனைவதில்லை. நம்பகமான குளோபல் தமிழ், வீரசேசரி, தமிழ் மிரர், உதயன் அத்துடன் தமிழ்ப்பக்கம் போன்ற தளங்கள்தான் நான் வாசிப்பது. செய்திகளை திரிக்கும் லங்காசிறி, ஐ பி சி, தமிழ்வின் போன்றவற்றை எட்டியும் பார்ப்பதில்லை. 

உங்கள் பார்வையில் எந்தத் தளங்கள் நம்பகமான செய்திகளை வெளியிடுகின்றன என்று சொன்னால் நானும் படித்துவிட்டு இணைக்கமுடியும்😎

ஆங்கிலத்தில் திவயின சிங்களப் பத்திரிகையை source ஆகக் காட்டி செய்தி வந்துள்ளது. அதுவும் புனைவு என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

Did Vavuniya youths don LTTE uniforms to make IDs?

Security forces had arrested six youths who had taken photographs wearing LTTE uniforms.

The security forces had received a tip-off regarding a suspect who had been engaged in LTTE activities, but when they had raided his home, the suspect had fled. However they had searched his house and found the laptop that was left at the house.

Upon examining the contents of the laptop, photos of 21 youths had been found.

The security forces had launched an operation to arrest the youths whose photographs were on the laptop but they only managed to take six of them into custody.

Upon questioning, the arrested youths had denied any knowledge of the others in the photographs, but investigations revealed that they are currently missing.

The security forces suspect that these photographs of the youths wearing the LTTE uniforms, were taken to make them their LTTE identity cards.

Based on this suspicion, when the arrested youths were questioned, they had revealed that these photographs of them in uniform and of them receiving training were sent abroad by individual and collecting funds from overseas.

Upon investigating the information revealed by the youths, the security forces had found that the said individual was Shankar who was conducting operations and the main suspect who had abandoned a bag of weapons and explosives in Puttur-Vavuniya and fled.

Therefore, the security forces suspect that the story said by the youths that the photographs were meant to be sent overseas to collect funds, may not be the truth.

The Vavuniya security forces are conducting extensive investigations into this incident.

(Source : Divaina)

https://srilankamirror.com/news/12721-were-they-wearing-ltte-uniforms-for-ids

2 hours ago, ஜீவன் சிவா said:

கிருபன் இங்கு இணைக்கும் அநேகமான செய்திகள் புனைவுச் செய்திகளே.

புனைவுச் செய்திகளைப் பார்த்து, கனவில் மிதக்கும் புலம்பெயர் தமிழர்களை திருத்த முடியாது.

இது அவர்களைப் பீடித்துள்ள ஒரு தொற்று நோய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

புனைவுச் செய்திகளைப் பார்த்து, கனவில் மிதக்கும் புலம்பெயர் தமிழர்களை திருத்த முடியாது.

இது அவர்களைப் பீடித்துள்ள ஒரு தொற்று நோய்.

மேலே உள்ள செய்தி தமிழ்ப்பக்கத்தின் புனைவு இல்லை என்பதற்கு ஆதாரம் தந்த பின்னரும் புனைவு என்று சொல்லுவதற்கு ஏதாவது ஆதாரம் ஜீவனிடம் இல்லை. ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லுவதை விடப்போவதில்லை. இல்லாவிட்டால் கெளரவம் என்னாவது!

ஒவ்வொரு மனிதர்களுக்கும் சில சித்தாந்தங்கள் இருக்கும். எனவே சித்தாந்தத்திற்காகவே எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. அல்லது விட்டுக்கொடுப்பார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான  செய்தி  ஒன்று எல்லா  பத்திரிகைகளிலும் வந்திருப்பது  உண்மையே

ஆனால் இங்கு  இதனை நம்பாமல் பதில்  எழுதுபவர்கள்

செய்தியை  பொய்  என்கிறார்களா?

அல்லது  சம்பவத்தை நம்ப  மறுக்கிறார்களா???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

கிருபன் இங்கு இணைக்கும் அநேகமான செய்திகள் புனைவுச் செய்திகளே.

கிளுகிளுப்புக்கான பல செய்திகள் ஊர்ப்புதினத்தில் இணைக்கப்படுவதை பலதடவை பலர் சுட்டிக்காட்டி இருந்தும் இணைக்கின்றார் என்றால் - அது அவருக்கும் யாழ் நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை.

நமக்கேன் வம்பு - வாசிக்காமல் விடலாம் 

அது எமது உரிமை.

31 minutes ago, thulasie said:

புனைவுச் செய்திகளைப் பார்த்து, கனவில் மிதக்கும் புலம்பெயர் தமிழர்களை திருத்த முடியாது.

இது அவர்களைப் பீடித்துள்ள ஒரு தொற்று நோய்.

சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது.

37 minutes ago, கிருபன் said:

மேலே உள்ள செய்தி தமிழ்ப்பக்கத்தின் புனைவு இல்லை என்பதற்கு ஆதாரம் தந்த பின்னரும் புனைவு என்று சொல்லுவதற்கு ஏதாவது ஆதாரம் ஜீவனிடம் இல்லை. ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லுவதை விடப்போவதில்லை. இல்லாவிட்டால் கெளரவம் என்னாவது!

ஒவ்வொரு மனிதர்களுக்கும் சில சித்தாந்தங்கள் இருக்கும். எனவே சித்தாந்தத்திற்காகவே எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. அல்லது விட்டுக்கொடுப்பார்கள்!!

உங்களது சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு சிங்கள ‘திவயின’  source தான் கிடைத்ததா?

சிங்கள ‘திவயின’ - புனைவுச் செய்திகளுக்கு அப்பாற்பட்டது என்று கருதுகிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, thulasie said:

உங்களது சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு சிங்கள ‘திவயின’  source தான் கிடைத்ததா?

சிங்கள ‘திவயின’ - புனைவுச் செய்திகளுக்கு அப்பாற்பட்டது என்று கருதுகிறீர்களா?

இதுதான் தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பது!🤣

ஒரு செய்தியை இணைத்தேன். ஜீவன் வந்து நான் புனைவுச் செய்திகளை இணைப்பதாகச் சொன்னார். ஆனால் புனைவு என்பதற்கு ஒரு ஆதாரமும் வைக்கவில்லை.

அவருடைய கருத்துக்கு சிங் சக் அடித்து புனைவுச் செய்திகளைத்தான் புலம்பெயர் தமிழர் விரும்புகின்றார்கள் என்று சொன்ன நீங்கள் செய்தியை முழுமையாக வாசித்திருந்தால் புலம்பெயர் தமிழர்களிடம் காசு வாங்க நாடகமாடி படம் எடுத்தவர்களைப் பற்றிய செய்தியை புலம்பெயர் தமிழர் விரும்பமாட்டார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்.😬

சரி. தமிழ்ப்பக்கம் போலியான செய்தியை விட்டதா இல்லையா என்று கூகிளில் தேடினால் Sri Lanka mirror திவயினவை ஆதாரமாகக் காட்டி எழுதிய செய்தியும் இன்னும் பலவும் இருக்கின்றன. திவயின புனைவுக்கு அப்பாற்பட்டதா இல்லையா என்பதல்ல முக்கியம். எதுவித ஆதாரமும் இல்லாமல் இணைத்த செய்தி புனைவு என்று யாழில் கூசாமல் சொல்லமுடிகின்றதே. அந்தளவு சுதந்திரம் யாழில் இருப்பதுதான் முக்கியம்!

இதற்கு மேலும் விளக்கம் கொடுக்க வெளிக்கிட்டால் கீழே உள்ள குட்டிக்கதையில் வரும் புலியாகத்தான் நான் சிறைக்குள் இருப்பேன்😂🤣

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இவ்வாறான  செய்தி  ஒன்று எல்லா  பத்திரிகைகளிலும் வந்திருப்பது  உண்மையே

ஆனால் இங்கு  இதனை நம்பாமல் பதில்  எழுதுபவர்கள்

செய்தியை  பொய்  என்கிறார்களா?

அல்லது  சம்பவத்தை நம்ப  மறுக்கிறார்களா???

புலி சீருடையை படத்தில் பார்த்ததால் வரும் ஒரு நடுக்கம் என்று நினைக்கிறேன்.
புலி இல்லை என்று தமிழ் மக்களும் 
இலங்கை இராணுவமும் சொன்னாலும் 
இன்னமும் ஒருவித கிலி பிடித்த்து திரிகிறது ஒரு கூட்டம். 

பாவப்பட்ட ஜென்மங்கள் ..
2009 முன்பு எவ்வளவு கஸ்டரபட்டு இருப்பார்கள். 

3 hours ago, கிருபன் said:

இதுதான் தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பது!🤣

ஒரு செய்தியை இணைத்தேன். ஜீவன் வந்து நான் புனைவுச் செய்திகளை இணைப்பதாகச் சொன்னார். ஆனால் புனைவு என்பதற்கு ஒரு ஆதாரமும் வைக்கவில்லை.

நீங்கள் இணைத்த புனைவுச் செய்திக்கு, ஆதாரம் 'திவயின' இல் வந்த செய்தி. 

வேறொரு ஆதாரமும் இல்லை.

சிங்கள மொழியில் உள்ள 'திவயினயை' வழமையாகப் படித்துப் பாருங்கள்.
  
சிறுபான்மை மக்களுக்கு எதிராக திரித்தும், வளைத்தும் எழுதுபவர்கள்தான், 'திவயின' மாமணிகள்.

ஒரு தளத்திலிலிருந்து ஒரு செய்தியை எடுத்து பதிந்துவிட்டு, அதற்கு ஆதாரம் அந்த தளம்தான் என்றும், அது புனைவுச் செய்தி அல்ல என்றும் சொல்வது அழகல்ல.

நாட்டில் வசிப்பவர்கள்,  செய்திகளை இணைப்பவர்களைவிட,  நாட்டு நடப்பின் யதார்த்தத்தை அறிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இவ்வாறான  செய்தி  ஒன்று எல்லா  பத்திரிகைகளிலும் வந்திருப்பது  உண்மையே

ஆனால் இங்கு  இதனை நம்பாமல் பதில்  எழுதுபவர்கள்

செய்தியை  பொய்  என்கிறார்களா?

அல்லது  சம்பவத்தை நம்ப  மறுக்கிறார்களா???

புலி அதுவும் கரும்புலி செய்தியை பார்த்ததும் காற் சட்டை நனைத்து விட்டது மிச்சம் படிச்சபின் அட பிலிம் காட்டும் கூட்டம் என்றாலும் இப்படியான செய்திகளை இணைக்காதேங்கோ என்று மட்டுகளிடம் கேட்க்கவும் ஏலாது செய்தி படிக்கும்போது வேர்த்து விதிர் விதிர்த்து கை கால் நடுங்கியதைம் இதயதுடிப்பு அடி மண்டையில் டாங் டாங் கேட்டு வாயில் லைற்ற்ரா வீணி நுரை தள்ளியதையும் யாருக்கு சொல்லி அழுவது ஆகவே இணைத்தவர்மேல்தான்  பிழை என்று தாக்குவம் செய்தி உண்மையோ பொய்யோ கொஞ்ச நேரத்தில் மேல் உலகம் போயிருப்பம்  😁🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை படித்ததும் அரசின் மறைகரங்கள் இருக்கலாம் என்ற எண்ணத்திலேயே நான் எழுதினேன், கிருபண்ணா போலி செய்திகளை இணைக்கிறார் என்ற அர்த்தத்தில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

நீங்கள் இணைத்த புனைவுச் செய்திக்கு, ஆதாரம் 'திவயின' இல் வந்த செய்தி. 

வேறொரு ஆதாரமும் இல்லை.

சிங்கள மொழியில் உள்ள 'திவயினயை' வழமையாகப் படித்துப் பாருங்கள்.
  
சிறுபான்மை மக்களுக்கு எதிராக திரித்தும், வளைத்தும் எழுதுபவர்கள்தான், 'திவயின' மாமணிகள்.

ஒரு தளத்திலிலிருந்து ஒரு செய்தியை எடுத்து பதிந்துவிட்டு, அதற்கு ஆதாரம் அந்த தளம்தான் என்றும், அது புனைவுச் செய்தி அல்ல என்றும் சொல்வது அழகல்ல.

நாட்டில் வசிப்பவர்கள்,  செய்திகளை இணைப்பவர்களைவிட,  நாட்டு நடப்பின் யதார்த்தத்தை அறிந்தவர்கள்.

புனைவுச் செய்தி என்று உறுதியாக நம்பும் நீங்கள் அதனை உறுதிப்படுத்த ஏதாவது ஆதாரம் வைத்திருக்கின்றீர்களா? 

நாட்டில் வசிக்கும் “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” புனைவு என்று சொன்னதைத் தவிர ஒரு ஆதாரமும் உங்களடமில்லை.🤪

குறைந்தபட்சம் நாட்டில் வசிக்கும் “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” வவுனியா பொலிஸ் நிலையம் வரை போய்பார்த்து வந்து உறுதிப்படுத்தலாமே!

லங்காசிறி, தமிழ்வின் தளங்களிலும் இச்செய்தி வந்துள்ளது. அவர்களுக்கும் ஒரு முறைப்பாடு வைத்துவிடுங்கள்.

8 hours ago, thulasie said:

நீங்கள் இணைத்த புனைவுச் செய்திக்கு, ஆதாரம் 'திவயின' இல் வந்த செய்தி. 

வேறொரு ஆதாரமும் இல்லை.

சிங்கள மொழியில் உள்ள 'திவயினயை' வழமையாகப் படித்துப் பாருங்கள்.
  
சிறுபான்மை மக்களுக்கு எதிராக திரித்தும், வளைத்தும் எழுதுபவர்கள்தான், 'திவயின' மாமணிகள்.

ஒரு தளத்திலிலிருந்து ஒரு செய்தியை எடுத்து பதிந்துவிட்டு, அதற்கு ஆதாரம் அந்த தளம்தான் என்றும், அது புனைவுச் செய்தி அல்ல என்றும் சொல்வது அழகல்ல.

நாட்டில் வசிப்பவர்கள்,  செய்திகளை இணைப்பவர்களைவிட,  நாட்டு நடப்பின் யதார்த்தத்தை அறிந்தவர்கள்.

புலம் பெயர் தமிழர் ஒன்றும் வெளிநாட்டவர் இல்லை , நாட்டில் உள்ளவர்களை விட வெளியில் உள்ளவர்கள் தான்  எமது தாய் நிலத்தில் அக்கறையாக உள்ளார்கள்.  சும்மா புனை கதை பூனை கதை இங்க எழுத வேண்டாம் .

இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்த ஒன்று , சிங்களத்தின் ஒரு வகையான அடக்கு முறை , இதனை காரணம் காட்டி போராளிகளை கைது செய்ய அவர்களின் திடடம் .

நாட்டில் இருந்து கொண்டு இதுவும் விலங்காவிடடாள் மற்றவர்களை விமர்சிக்கக்கூடாது .

2 hours ago, கிருபன் said:

லங்காசிறி, தமிழ்வின் தளங்களிலும் இச்செய்தி வந்துள்ளது. அவர்களுக்கும் ஒரு முறைப்பாடு வைத்துவிடுங்கள்.

உங்களின் புனைவுச் செய்திக்கு ஆதாரமாக 'திவயின' மாத்திரம் என்று நினைத்திருந்தேன்.

உங்களின் புனைவுச்   செய்தியின் ஆதாரத்திற்கு உங்களால் புறந்தள்ளப்பட்ட லங்காசிறியும், தமிழ்வின்னும் அடக்கம் என்று, வேறு!

 ***செய்திகளை திரிக்கும் லங்காசிறி, ஐ பி சி, தமிழ்வின் போன்றவற்றை எட்டியும் பார்ப்பதில்லை***

செய்திகளைத் திரித்தால் என்ன? எட்டியும் பார்க்காமல் இருந்தால் என்ன? 
எனக்குத் தேவை, சரியோ, பிழையோ புனைவுச் செய்திக்கு ஆதாரம்தான்.

செய்தியை இணைப்பவர்கள், பிழைப்பது இப்படித்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, thulasie said:

முதலில் இது நான் தயாரித்த செய்தி அல்ல. இணைத்த செய்தி. அது உங்களுக்குத் தெரிந்திருந்தும் எனது செய்தி என்று திரிக்கின்றீர்கள்😁

இரண்டாவது திவயின நம்பகமில்லாத ஊடகம் என்பதால் அதில் வரும் செய்திகள் அனைத்துமே புனைவானவை என்பது ‘வீக்’கான வாதம். புனைவுச் செய்தி என்பதற்கு சரியான ஆதாரத்தைத் தந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கின்றது😎 எனவே, சமையற்கட்டுப் பக்கம் போகாமல் உப்புப் பிழை, புளி பிழை என்று சொல்லுவதைவிட்டுவிட்டு ஏதாவது தகுந்த ஆதாரத்தை வையுங்கள்😉

மூன்றாவது நான் லங்காசிறி, தமிழ்வின் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. கூகிளில் தட்டினால் இச்செய்தி வந்த பெரிய பட்டியலே இருக்கின்றது. விரும்பினால் கூகிளில் “விடுதலைப் புலிகள் சீருடை” என்று தேடி கடந்த வாரம்  என்று தேடலை மட்டுப்படுத்தினால் பட்டியலைப் பார்க்கலாம்.😀

நாலாவது சிங்கம் சொல்லுது ‘இனியும் வாதாடி மல்லுக்கட்டிக்கொண்டிருந்தால் ஒரு வருஷம் இல்லை பத்து வருஷம் உள்ளுக்கை போடுவன்’ என்று!🥺

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2019 at 8:42 AM, கிருபன் said:

வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து

ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகும் குழுவாென்று இந்தப்புலி படங்காட்டல் மூலம் புலிவந்து விட்டது என்ற பயத்தை உண்டாக்கி, சிங்கள மக்களின் ஒட்டுமாெத்த வாக்கை பெறுவதற்கும், தமிழ்மக்களை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தி, மறுபுறம் தமிழருக்கு உரிமை அளிப்பாேம் என்று பேய்க்காட்டி அவர்களின் மாெத்த வாக்கையும் காெள்ளை அடித்து  ஜனாதிபதி ஆகும் கனவில் இராணுவ மூளைபாேட்ட உத்தியே அன்றி வேறு ஒன்றுமில்லை

1 minute ago, கிருபன் said:

முதலில் இது நான் தயாரித்த செய்தி அல்ல. இணைத்த செய்தி. அது உங்களுக்குத் தெரிந்திருந்தும் எனது செய்தி என்று திரிக்கின்றீர்கள்😁

இரண்டாவது திவயின நம்பகமில்லாத ஊடகம் என்பதால் அதில் வரும் செய்திகள் அனைத்துமே புனைவானவை என்பது ‘வீக்’கான வாதம். புனைவுச் செய்தி என்பதற்கு சரியான ஆதாரத்தைத் தந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கின்றது😎 

!🥺

தயாரித்த செய்தியோ, இணைத்த செய்தியோ - அது உங்களால் பதிவு செய்த செய்தியை. உங்களின் புனைவுச் செய்தி என்று சொல்வதில் தப்பில்லை. அது திரிப்பாக ஆகாது.

'திவயின' நம்பகமில்லாத ஊடகம் என்றோ, அதில் வரும் அனைத்தும் புனைந்தது என்றும் நான் வாதிக்கவில்லை..  சிறுபான்மையைப் பற்றிய செய்திகளில் திரித்தும் வளைத்தும் எழுதுபவர்கள், 'திவயின' மாமணிகள். இப்படித்தான் எழுதினேன்.

புனைவுச் செய்தியை  இணைத்த உங்களுக்கே, ஆதாரத்தை தருவது சிரமமாக இருக்கிறது.  உங்களால் புறந்தள்ளிய, எட்டியும் பார்க்காத லங்காசிறி, தமிழ்வின்தான் தோள் கொடுத்திருக்கிறது.

நாம் உங்களை போல, கூகுளை இல் தட்டி செய்திகளை இணைப்போரல்ல.

உங்களது ஆதாரங்களே திரித்துக் கூறும் தளங்களில் இருந்து பெற்றவையாக இருக்க, எமது செவிவழி/வாய் வழி  செய்திகள், உங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுள்ளவராக மாற்றாது. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்

துளசி  வந்ததற்காக  கருத்து நீளுதா?

கருத்து  நீளுவதற்காக  துளசி வந்ததா???😀😀😀

16 hours ago, கிருபன் said:

ஒரு செய்தியை இணைத்தேன். ஜீவன் வந்து நான் புனைவுச் செய்திகளை இணைப்பதாகச் சொன்னார். ஆனால் புனைவு என்பதற்கு ஒரு ஆதாரமும் வைக்கவில்லை.

கிருபன் உட்பட தமது பொன்னான நேரத்தை செலவிட்டு இங்கு செய்திகளை இணைப்பவர்கள் தமிழினத்துக்கு ஒரு பெரும் சேவையை செய்வதாகவே கருதுகிறேன்! அவர்களுக்கு நன்றிகள் பலப் பல!!!

காரணம்,
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் குறிப்பா இனவழிப்பை எதிர்கொள்ளும் ஒரு இனம், தமது இருப்பை தக்க வைக்க கருத்துப் பரிமாற்றத்தில் வலுவாக இருக்கவேண்டியது கட்டாயமானது. மேலும் அவர்கள் தமிழர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஊடகங்களில் இருந்து தான் செய்திகளை இணைகிறார்கள். இணைப்பதன் நோக்கம் விருப்பமானவர்கள் அங்கு குறிப்பிட்ட கருத்துக்களை விவாதிப்பதற்காகவும், விவாதிப்பதன் மூலம் கருத்துப் பரிமாற்றத்தில் வலு உள்ளவர்களாக மாறுவதும் தான். இனப்பிரச்சினையால் உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களை ஓரிடத்தில் இணைத்து விவாதம் செய்யும் அருமையான களமாக யாழ் திகழ்கிறது.

இந்தப் பின்னணியில்,
செய்திகள் இணைப்பவர்களை குறிப்பிட்டு, தமிழர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகங்களை வசைபாடி எடக்கு முடக்கா கருத்தெழுவது நாகரீகமற்றவர்களின் செயலொழிய வேறொன்றும் இல்லை.

யாழ் களத்தில்,
தமிழின அழிப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும்,
தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
தமிழின அழிப்பை கனகச்சிதமாக செய்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
தமிழின அழிப்பை நியாயப் படுத்துபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முண்டுகொடுப்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும்,
.....
இப்பிடி பல தரப்பினரும் இருக்கிறார்கள்!
இவர்கள் யார், யார் என்று யாழுக்கு அடிக்கடி வருபவர்களுக்கு தெரியாமல் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனக்கொரு சந்தேகம்

துளசி  வந்ததற்காக  கருத்து நீளுதா?

கருத்து  நீளுவதற்காக  துளசி வந்ததா???😀😀😀

இதில் என்ன சந்தேகம்?

கருத்து நீளத்தான் துளசி வந்தது🤪

மேலேயுள்ள கருத்தை(?)ப் பார்த்தாலே தெரியுது நொங்கு எடுக்கவென்றே வந்திருக்கின்றார் என்று😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தளத்தில் வரும் செய்தியை யாழில் பதிந்தால் பதிவு செய்பவர் அந்த செய்தியை புனைகிறார் என்பது விதண்டாவாதமா இருக்கே!

அப்புகாத்தர் எங்க இருந்து கிளம்பி வாறார் என்று தெரியலையே! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு செய்திகளை இணைப்பவர்கள்  ஒரு சேவையை செய்வதாகவே கருதுகிறேன்'அவர்களுக்கு நன்றிகள் ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.