Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13 hours ago, ஈழப்பிரியன் said:

                       காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது.
                      கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.

அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது.

Image may contain: one or more people and people standing

என்ன ஈழப்பிரியன், நல்லூர்  தேரைப் பற்றி...  கூடுதலாக எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தால்,  
நாலு வரியுடன், முடித்து விட்டீர்கள். கோயில் வீதியில் உள்ள கடைகள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றை படங்களுடன் எதிர்பார்த்தேன்.  (தண்ணீர் பந்தலில்... யார் நிற்கிறார் என்று  சொல்லுங்கள் பார்ப்போம்.)

 "யூபர் கணக்கு" என்றால் என்ன ஈழப்பிரியன். அதனைப் பற்றி விரிவாக கூறுங்களேன்

இனி  ஈழப்பிரியனின்... நினைவு வரும் போதெல்லாம்....  
கெத்து காட்டப் போய்,  பிலா மரத்தில் இருந்து விழுந்தது தான்.... கண்ணுக்கு முன்னாலை வரும்.
 :grin:

சென்ற வருடம் நடந்த சம்பங்களை.. நினைவில் வைத்து.... இப்போ:110_writing_hand: எழுதுவது, சிரமமான காரியம்.
ஆனாலும்...  "அந்த 70 நாட்கள்" பயணத்தை சுவராசியமாக எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.   :)

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் நல்லூர் திருவிழாவில் ஒரு சக்கரைத் தண்ணி, மோர்த் தண்ணி, ஊறுகாய் தண்ணி குடிக்கலாம் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைஞ்சன். ஒரு இடமும் கிடைக்கேல்ல. அப்படி ஒன்றை சனம் மறந்துபோய் பல வருஷம் ஆச்சு என நினைக்கிறன். .....எல்லா இடமும் கலர்சோடாத் தண்ணியும் மிஞ்சிப்போனால் கோப்பியும்தான்.....எனக்கு வெறுத்து போச்சு.....!  😗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

என்ன ஈழப்பிரியன், நல்லூர்  தேரைப் பற்றி...  கூடுதலாக எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தால்,  
நாலு வரியுடன், முடித்து விட்டீர்கள். கோயில் வீதியில் உள்ள கடைகள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றை படங்களுடன் எதிர்பார்த்தேன்.  (தண்ணீர் பந்தலில்... யார் நிற்கிறார் என்று  சொல்லுங்கள் பார்ப்போம்.)

சிறி நன்றாக ரசித்து என்னுடன் பயணம் செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக்க நன்றி.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பழக்கமில்லாத பிள்ளைகளுக்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.அத்துடன் ஓரிரு தடவை வேணுமென்றே இடிக்கிறார்கள் என்று முறைப்பாடு வெய்யில் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு சீக்கிரமே வீடு வந்துவிட்டோம்.

முன்னர் பந்தல்களில் களையோடவில்லை.
ஓ எமது முதலமைச்சர் நிற்கிறார்.இப்போ தான் படத்தையே பார்க்கிறேன்.எந்த பந்தல் என்று யாருக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

யூபர் கணக்கு" என்றால் என்ன ஈழப்பிரியன். அதனைப் பற்றி விரிவாக கூறுங்களேன்

யூபர் என்பது உலகளாவிய அப் வாடகைவண்டி.இது ஒரு ஜேர்மன் சொல் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.ஒரு கணக்கு வைத்திருந்தால் அவசரத்துக்கு நீங்களும் பாவிக்கலாம்.உலகத்தின் பல பகுதிகளிலும் இருப்பதால்  எங்கு போனாலும் ராக்சிக்காக காத்திருக்கத் தேவையில்லை.தெரியாத இடங்களில் ஏமாற்றுப்படத் தேவையில்லை.

என்ன ஒரு பிரச்சனை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ராக்சி சாரதிகள் கஸ்டப்படுகிறார்கள்.

நியூயோர்க்கில் 4 வருடம் முன்பு ஒரு ஜெலோகப் என்று சொல்லக் கூடிய ராக்சி வாங்குவதானால் அதன் விலை 1-1.2 மில்லியன்.இன்று ஒரு லட்சம் டாலருக்கு வாங்கலாம்.லண்டனில் அடிக்கடி பிரச்சனைப்படுகிறார்கள்.இப்போது இது பல இடங்களிலும் அத்தியாவசிய தேவையாக வந்து கொண்டிருக்கிறது.இந்த சேவை கொழும்பிலும் இருக்கிறது.

சகல இடங்களிலும் நல்ல வண்டி வைத்திருப்பவர்கள் பகுதிநேரமாக வேலை செய்கிறார்கள்.

6 hours ago, suvy said:

நானும் நல்லூர் திருவிழாவில் ஒரு சக்கரைத் தண்ணி, மோர்த் தண்ணி, ஊறுகாய் தண்ணி குடிக்கலாம் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைஞ்சன். ஒரு இடமும் கிடைக்கேல்ல. அப்படி ஒன்றை சனம் மறந்துபோய் பல வருஷம் ஆச்சு என நினைக்கிறன். .....எல்லா இடமும் கலர்சோடாத் தண்ணியும் மிஞ்சிப்போனால் கோப்பியும்தான்.....எனக்கு வெறுத்து போச்சு.....!  😗

முன்னர் பல இடங்களிலும் தண்ணீர் பந்தல் இருந்தது.ஒவ்வொரு பந்தலிலும் பலவிதமான தண்ணி வகைகள் இருக்கும்.
இப்போ நீங்கள் சொன்னது போல ஓரிரு பந்தல் தான்.அதிலேயும் கோப்பி தான்.நல்லா சீனியும் அள்ளி போட்டு கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

யூபர் என்பது உலகளாவிய அப் வாடகைவண்டி.இது ஒரு ஜேர்மன் சொல் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.ஒரு கணக்கு வைத்திருந்தால் அவசரத்துக்கு நீங்களும் பாவிக்கலாம்.உலகத்தின் பல பகுதிகளிலும் இருப்பதால்  எங்கு போனாலும் ராக்சிக்காக காத்திருக்கத் தேவையில்லை.தெரியாத இடங்களில் ஏமாற்றுப்படத் தேவையில்லை.

என்ன ஒரு பிரச்சனை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ராக்சி சாரதிகள் கஸ்டப்படுகிறார்கள்.

நியூயோர்க்கில் 4 வருடம் முன்பு ஒரு ஜெலோகப் என்று சொல்லக் கூடிய ராக்சி வாங்குவதானால் அதன் விலை 1-1.2 மில்லியன்.இன்று ஒரு லட்சம் டாலருக்கு வாங்கலாம்.லண்டனில் அடிக்கடி பிரச்சனைப்படுகிறார்கள்.இப்போது இது பல இடங்களிலும் அத்தியாவசிய தேவையாக வந்து கொண்டிருக்கிறது.இந்த சேவை கொழும்பிலும் இருக்கிறது.

சகல இடங்களிலும் நல்ல வண்டி வைத்திருப்பவர்கள் பகுதிநேரமாக வேலை செய்கிறார்கள்.

https://www.german-way.com/ubers-very-bumpy-road-in-germany/

ஜேர்மனியில் ஒருசில நகரங்களில் இயங்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஒருசில நகரங்களில் இயங்குகின்றது.

இந்தியாவிலும் மக்கள் விரும்பி பாவிக்கிறார்கள்.

Posted
On 3/22/2019 at 3:06 AM, ஈழப்பிரியன் said:

எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம்.
                     இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம்.

முற்றும்.

இன்று தான் முழுமையாகப் படித்து முடித்தேன். ஊர் செல்லும் ஆவலை மீண்டும் தூண்டிய ஓர் பயண அனுபவத்தை எமக்குத் தொடராகத் தந்துளீர்கள் அண்ணா. வாழ்த்துக்கள் 🙂 tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, மல்லிகை வாசம் said:

இன்று தான் முழுமையாகப் படித்து முடித்தேன். ஊர் செல்லும் ஆவலை மீண்டும் தூண்டிய ஓர் பயண அனுபவத்தை எமக்குத் தொடராகத் தந்துளீர்கள் அண்ணா. வாழ்த்துக்கள் 🙂 tw_thumbsup:

உங்கள் எல்லோரின் பங்களிப்புடன் எழுதி முடித்துவிட்டேன்.மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/22/2019 at 5:42 AM, தமிழ் சிறி said:

இனி  ஈழப்பிரியனின்... நினைவு வரும் போதெல்லாம்....  
கெத்து காட்டப் போய்,  பிலா மரத்தில் இருந்து விழுந்தது தான்.... கண்ணுக்கு முன்னாலை வரும்.
 :grin:

அட நீங்கள் வேறை!!!!!!

 இனிமேல் எனக்கு பிலாமரம்,பிலாக்காய்,பிலாப்பழம் எல்லாத்தையும் பாத்தாலே உந்த மனிசன்ரை ஞாபகம்தான் வரும்......இனி பிலாக்கொட்டை கறியே சாப்பிடேலாது...😃

Posted

ஈழபிரியன் உங்களின்  70 நாள் பயணத்தை ரசித்து வாசித்தேன். சுவாரசியமாக இருந்தது. சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் கவலையாகவும் (உரிய இடங்களில்) எழுதி அசத்தி விட்டீர்கள். பின்னூட்டங்கள் எழுதி  உங்களை உற்சாகப்படுத்தி கள உறவுகளும் அசத்தி விட்டார்கள். மீண்டுமொரு பதிவில் சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக நன்றாக இருந்தது.

ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது.

அனுபவ பகிர்விற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு பயணக் கட்டுரை பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“அமெரிக்காவிலுள்ளவர்களுக்காகஇலங்கை தூதுவராலயம் ஒரு சலுகை செய்துள்ளது.ஒரு முறை விசா எடுத்துவிட்டு உடனேயே மல்ரிப்பிள் என்றிக்கு 100 டெலர்கட்டி எடுத்தால் அடுத்த 5 வருடத்துக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் ஒரு தடவை போனால் 6 மாதத்திற்கு நிற்கலாம்.இதை அவுஸ்திரேலியா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளிலுள்ளவர்கள் முயற்சி செய்தும் கொடுக்கவில்லை.”

ஒவ்வொரு தடவையும் $35 கட்ட வேண்டியிருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

அட நீங்கள் வேறை!!!!!!

 இனிமேல் எனக்கு பிலாமரம்,பிலாக்காய்,பிலாப்பழம் எல்லாத்தையும் பாத்தாலே உந்த மனிசன்ரை ஞாபகம்தான் வரும்......இனி பிலாக்கொட்டை கறியே சாப்பிடேலாது...😃

சரி பலாப்பழத்தில் கை வைக்காட்டா பரவாயில்லை.
கடற்கரைக்கு போகும் போது என் நினைவு வந்தால்க் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nunavilan said:

ஈழபிரியன் உங்களின்  70 நாள் பயணத்தை ரசித்து வாசித்தேன். சுவாரசியமாக இருந்தது. சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் கவலையாகவும் (உரிய இடங்களில்) எழுதி அசத்தி விட்டீர்கள். பின்னூட்டங்கள் எழுதி  உங்களை உற்சாகப்படுத்தி கள உறவுகளும் அசத்தி விட்டார்கள். மீண்டுமொரு பதிவில் சந்திக்கலாம்.

உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நுணா.

17 hours ago, ராசவன்னியன் said:

மிக நன்றாக இருந்தது.

ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது.

அனுபவ பகிர்விற்கு நன்றி.

இன்னும் நிறைய எழுலாம்.ஏற்கனவே ஒருதிரியே எத்தனை பக்கங்கள் ஓடிவிட்டன.
ஆத்துக்காரி வேற இப்படி எழுதிக் கொண்டே இருந்தால் ஆரம்பத்தில் இருந்த ஆதரவு இல்லாமல் போகப் போகுது என்று வேற வெருட்டல்.(வீட்டுவேலைகள் செய்வதில்லை பேரனைப் பார்ப்பதில்லை என்ற கோபமோ தெரியாது).
ஆசைஅருமையாக யாழைப் பார்த்தாலும் அந்த நேரத்தில் இத்தனை ஊக்கம் தந்த உங்களுக்கு மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, colomban said:

நல்லதொரு பயணக் கட்டுரை பாராட்டுக்கள்

நன்றி கொழும்பான்.

12 hours ago, MEERA said:

ஒவ்வொரு தடவையும் $35 கட்ட வேண்டியிருக்கு.....

இதை பலருக்கும் சொல்ல நம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள்.
பலநாடுகளில் உள்ளவர்களுக்கும் சொல்லி அவர்கள் போய் கேட்க பல தூதுவராலயங்களில் இதைப்பற்றியே தெரியாது.சில இடங்களில் விசாரித்து விட்டு அமெரிக்காவுக்கு மாத்திரம் என்றார்களாம்.

இப்போது விசா தேவையில்லை என்கிறார்களே?

நன்றி மீரா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

சரி பலாப்பழத்தில் கை வைக்காட்டா பரவாயில்லை.
கடற்கரைக்கு போகும் போது என் நினைவு வந்தால்க் காணும்.

எனக்கு ஒரு முதியவர் சொன்னது அவர் அனுபவுஸ்தரும் கூட.....
கடல்கள் முன்னரைப்போல் இல்லையாம். முன்னரைப்போல் கடற்கரைகளில் விளையாட வேண்டாமென்று சொன்னார். எந்த நேரத்தில் எப்படியான அலைகள்  உள் நீரோட்டங்களை கணிக்க முடியாதிருப்பதாக சொன்னார்.
 கலிகாலத்தில் கவனமாக இருக்க வேண்டுமென புத்தியும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

உண்மை தான் தண்ணீருக்கும் நெருப்புக்கும் கண்ணில்லை என்று சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/15/2019 at 9:37 AM, புங்கையூரன் said:

வர...வர....எல்லாரும்.....எந்த இடத்தில......சஸ்பென்ஸ் ....வைக்கிறது....எந்த இடத்தில....தொடரை நிப்பாட்டிப் போட்டு...நித்திரைக்குப் போறது.....எண்டு வடிவாய்ப் பழகி வைச்சிருக்கினம்....! 

ரென்சன்........ரென்சன்......ரென்சன்.....!!!😚

தமிழ்நாட்டு சீறியல் பார்த்து பழகியிருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/13/2019 at 4:33 AM, ஈழப்பிரியன் said:

அருமையான தொடர் நன்றாக எழுதியுள்ளீர்கள்.....இனிமேல் தண்ணீருக்குள் ஆராச்சியில் ஈடுபாடாதையுங்கோ....எல்லாம் நல்லூரானின் திரு விளையாடல்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, putthan said:

தமிழ்நாட்டு சீறியல் பார்த்து பழகியிருப்பினம்

இன்னும் அதற்குள்ளேயே தவள்ற மாதிரி இருக்கே?

8 hours ago, putthan said:

அருமையான தொடர் நன்றாக எழுதியுள்ளீர்கள்.....இனிமேல் தண்ணீருக்குள் ஆராச்சியில் ஈடுபாடாதையுங்கோ....எல்லாம் நல்லூரானின் திரு விளையாடல்.....

நன்றி புத்தன்.நீங்களெல்லாம் சேர்ந்து இழுத்தபடியால்த் தான் தேர் இருப்பிடம் வந்துள்ளது.

எழுத தொடங்கும் போது இவ்வளவு ஆதரவு இருக்குமென்று எண்ணவில்லை.

மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.