Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

Mar 19, 20190

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை அமையப்போகும் வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய ஆட்சிக்கான சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறிய விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் நடைபெறும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஷ;டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும்.

இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோம்.

 

http://www.samakalam.com/செய்திகள்/போராட்டத்துக்கு-வட-மாகாண/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

 

கிழக்கில் போராட்டத்துக்கு ஓடினார்கள்

வடக்கில் வெளிநாட்டுக்கு ஓடினார்கள்.

இப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை.

மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர்.

விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை.

மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர்.

விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்

ஏன்...நிழலி...தமிழனுக்காக வெட்டிப் புடுங்குவம் என்டு வாற எல்லாரும்.....கடைசியில....தமிழனைப் பிழக்கிற வேலையை மட்டுமே பாக்க வெளிக்கிடுகினம்?

தமிழன்...எப்பவுமே....இளிச்ச வாயன் தானா?😚

இந்த செய்தியை பார்த்ததும் என்மனதில் தோன்றிய கருத்தும் நிழலியின் கருத்தும் ஒன்றாக உள்ளது!

ஒப்பீடுகள் ஒற்றுமையை உருவாக்க உதவப்போவதில்லை!

விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து மேலோட்டமாக உண்மை போல தெரிந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவற்றில் உண்மையில்லை! அதற்கு அப்பால் இது போன்ற ஒப்பீடுகள் இலகுவான விடயம் இல்லை!

விக்னேஸ்வரன் அவர்கள் இதுபோன்ற பத்தாம்பசலித்தன அரசியலை முற்றாக கைவிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஓர் ஒப்பீடாக நான் பார்க்கவில்லை. மதிப்பீடாகவே பார்க்கின்றேன். இயற்கை அழிவிலும் சரி, போராட்டத்திலும் சரி, உயிரிழப்பு / பொருளிழப்பு / படுகொலைகள் போன்றவற்றை கிழக்கு மக்களே கூடுதலாக அனுபவித்தவர்கள். இன்றும் கூட அவர்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பெரும்பாலும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்ததால் 
வெளிநாட்டு பயணமும் வெளிநாட்டு பணமும் என்று வாழ்க்கை சென்றுகொண்டு 
இருந்தது.

கிழக்கு மக்களுக்கு போராடடம்தான் ஒரே வழி என்று இருந்தது 
வாகரை பகுதிகளில் எல்லாவீட்டிலும் ஒரு போராளி உண்டு என்று சொல்லலாம் 
அவர்கள் அர்ப்பணிப்பும் தியாகமும் கூடுதல் என்பது என்னவோ உண்மைதான். 

அதனால்  இதனை கூறி கொண்டு இருப்பதால் ஒற்றுமை வளருமா என்றால் இல்லை எனலாம்.
அந்த போராளிகளின் கனவு சுதந்திர விடுதலை  ... அதை நோக்கி நகர்வதே கிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கு 
கொடுக்கும் மரியாதை ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சற்று பொறுமையோடு இருந்தால் இன்னும் சில நாட்களில் விக்கி அவர்கள் செய்தியை மறுத்து பதிலளித்து தான் அப்படியான ஒரு பிரிவினை வாத கருத்தை என்றுமே முன்வைக்கவில்லை என மாற்று அறிக்கையொன்றை விடக்கூடும். விக்கியரை வம்பில் மாட்டிவிடவேண்டும் என பலர் கிளம்பியிருப்பதும் புரிகிறது. 

4 hours ago, vanangaamudi said:

நாங்களும் சற்று பொறுமையோடு இருந்தால் இன்னும் சில நாட்களில் விக்கி அவர்கள் செய்தியை மறுத்து பதிலளித்து தான் அப்படியான ஒரு பிரிவினை வாத கருத்தை என்றுமே முன்வைக்கவில்லை என மாற்று அறிக்கையொன்றை விடக்கூடும். விக்கியரை வம்பில் மாட்டிவிடவேண்டும் என பலர் கிளம்பியிருப்பதும் புரிகிறது. 

சரி சரி விக்கியர் அறிக்கை வரும்வரை காத்திருப்போம்........

ஆனால் மட்டுவில் இழந்த போராளிகள் (அனைத்து இயக்கங்களிலும் ) அதிகம், இழந்த மக்கள் அதிகம்.

மட்டுவைப்போன்று போரினால் பாதிக்கப்பட்ட இடம் வடகிழக்கில் எங்குமேயில்லை. அவர்களும், தமிழோ முஸ்லீமோ தமிழர்களே. 

நேரடியாக பார்க்கணும் என்றால் ஒருமுறை படுவான்கரைப்பக்கம் போய் பாருங்கள்.

தயவு செய்து அவர்கள் தியாகங்களை கொச்சைப் படுத்தாதீர்கள் + அதை அரசியலாக்காதீர்கள்.

அவர்களையாவது வாழவையுங்கள் இல்லை குறைந்தது வாழவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் லாபத்திற்காகவும்,மக்களை உசுப்பேத்த சொன்னாலும் உண்மையை சொல்லி இருக்கார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.