Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.

  • Replies 70
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன நடந்தது இதை கொஞ்சம் விபரமாக எழுதலாமே!

ஈழப்பிரியன் அண்ண கிழக்கில் அழகிய கிராமம் மேற்கே வயலும் கிழக்கே கடலும் சூழ்ந்தது அரச வேலை முதல்வேலையாகவும் பகுதி நேர வேலைகள்(உழைப்பு) கடல் , வயல் இந்த மூன்று தொழில்களும் முதன்மையானது. எங்கள் வீடுகள் எல்லாம் கடற்கரை ஓரத்தில் இருந்தது சொந்தங்கள் அனைவரும் அம்மாவுக்கு 8 தங்கைகைள் அப்பவுக்கு 6 தம்பி இரண்டு தங்கைகள் எல்லோரும் அருகருகில் தான் வாழ்ந்து வந்தோம் சுனாமி அன்று நான் கொடுத்தனுப்பிய போணுக்கு ஒரு சிம் காட் போடுவதற்கு தம்பி சென்றுள்ளான் என் நண்பனைக்கூட்டிக்கொண்டுள்ளான் சிம் கிடைத்தும் போணை வீட்டில் வைத்துவிட்டு ஒரு சித்தியின் வீட்டுக்கு சென்று அவரது மகனை எங்கள் வீட்டூக்கு தூக்கிவர சென்ற போது கடல் முதலாவது அலை பரவி வருவதைக்கண்டு  அம்மாவையும் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு போவதற்கு வீடு தேடி ஓடிவர அம்மாவும் தங்கையும் கடல் வருவதைக் கண்டு அவனைக்கூப்பிட்டு பார்த்தவாறே முதலில்  ஓடி இருக்கிறார்கள். ஆனால் அந்த அல்லோல கல்லோல சத்தத்தில் அவனுக்கு அது விளங்கவில்லை தெரியவும் இல்லை  அவர்கள் ஓடியது. அவனோ   ஓடி வீட்டுக்குள் செல்ல அடுத்த அலை வீட்டுக்கு மேலால சென்று விட்டது இதுவரைக்கும் அவனது சடலம் கிடைக்கவில்லை  அன்றிலிருந்து அம்மா  2 வருடம் சுயநினைவு இழந்த

 

து போல் இருந்திருக்கிறா கவுண்சிலிங் எடுத்து ஆனால் இதெல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை அறிந்தால் நான் மனஉழைச்சலுக்கு ஆளாவேன் என. எனது தம்பி மாமி இருவரும் அவர்கள் குழந்தைகளும் இறந்து போயினர் சுனாமியால் .

தற்போது நாங்கள் இருந்த காணியில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர் அரச காணியாக்கி

3 hours ago, நீர்வேலியான் said:

தனிக்காட்டுராஜா,
படிப்பதுக்கு மிகவும் கனமாக உள்ளது, தொடர்கிறேன். 

 

இதனால் தான் யாரிடமும் இதை சொல்வதில்லை என்னைச் சந்திந்த வீடு தேடி வந்த களஉறவுகள் ஜீவன் அண்ண , அக்னி, அர்ஜின் அண்ண, மீராஅண்ண, இவர்களுக்கு தெரியும் 

 

1 hour ago, ஏராளன் said:

தம்பியின் இழப்பு தாங்க முடியாத துயரம் தான், துன்பத்துக்கு மேல துன்பம்.

நன்றி நண்பா இழப்பு என்பதும் சோகம் என்பதும் ஈழத்தமிழனுக்கு கிடைத்த பரிசுகள் அது மனதில் மட்டும் இருந்து கோண்டே இருக்கும் 

27 minutes ago, சுவைப்பிரியன் said:

சோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.

ஓம் அண்ண படிப்பினையாக இருக்கட்டுமே என எழுத தோன்றியது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 

வாசித்தமைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....!   

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா

நன்றி அக்கா நீங்களும் என்னை சந்திச்சது ஆனால் இதெல்லாம் பேச நேரம் கிடைக்கல 

 

12 hours ago, suvy said:

வாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....!   

ஓம் அண்ண அதுதான் முழுமூச்சாக எழுதிக்கொண்டு இருக்கிறன் நடந்த சம்பவங்களை ஏதோ ஓர் மன ஆறுதல் ஏற்படுகிறது 

 

9 hours ago, ஏராளன் said:

ராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.

என்னைப்போல பலபேர் இன்றுவரைக்கும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் வெயிலிலும் , குளிரிலும்  தங்கள் குடும்பத்துக்காக

உங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம்  சகோதரனே.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜெகதா துரை said:

உங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம்  சகோதரனே.

ம்ம் நிட்சயமாக் கருத்துக்கு நன்றி சகோ

 

8 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார் 

 

மிக்க நன்றி ரதி

அந்த நிறுவன முதலாளி கூப்பிட்டிருந்தார் பயந்து போய் நின்றேன்  போட்டுக்கொடுத்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவன் ஏன் கார் கழுவுகிறாய் உனக்கு என்ன வேலை!!! என்ன செய்கிறாய் நீ ?......... என...... .நான் பதில் பேசாமல் நின்று விட்டு மன்னிக்கவும் சேர் வீட்டில் சரியான கஸ்ரம் எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் சுனாமி அடிச்சதால. எனக்கு கம்பனி தரும் சம்பளம் போதாது அதற்குத்தான் கார் கழுவினேன் தொழும் நேரம் என்பதால் எனக்கும் வேலை இல்லை அதானலதான் என்றேன். முழுவிபரங்களை கேட்ட அவர் பரிதாபப்பட்டார் சரி அப்படியென்றால் நமது நிறுவன கார்களையும் சேர்த்து கழுவி விடு அதற்கு செக் தருகிறோம் நாங்கள் என்றார். எனது சம்பளம் 800 +1000( கார் ) =64000

இந்த கார் கழுவுவது கம்பனிக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சினை உடனே வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள் அதுபோக அடிக்கடி வந்து செக் பண்ணிவிட்டு செல்வார்கள் எங்களை. பொலிசுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் பிடிச்சி போய் விடுவார்கள் இப்படி இருக்க எங்க மேனேஜரோ பொலிசுக்கும் மேலாக இருந்தவர் அவர்.

இப்படி நல்ல மனிதரா என நினைத்தாலும் அவரிடம் போட்டுக்கொடுப்பது மற்ற நாட்டுக்காரன்கள் ஈரானி, மிசிறி (எஜிப்ற்) சூடானி , எத்தியோப்பியா, இவனுகள் போய் அவரிடம் கோள் சொல்வது வழமைதானாம் என்று சொன்னார்கள் மற்றவர்கள்.  எங்களுக்கு அங்கு வேலை காலை 7.30 ற்கு ஆரம்பமாகி பகல் 2.30 ற்கு முடிந்து விடும் அதிகாலை நேரத்துடன் வேலைக்கு வருவதால் அந்த நிறுவன கார்களை நேரத்துடனே கழுவி விட்டு பகலில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும்  அரபி பெண்களின் கார்களையும் கழுவிக்கொள்வேன். அதற்கும் காசு தருவார்கள் மாதா மாதம் எனது வேலையையையும் திறமையையும் பார்த்த அவர்களுக்கு பிடித்து போக நானும் அங்கே ஓர் நம்பிக்கை மிகுந்த ஓர் சேவையாளன் ஆனேன்.

 (காலையில் டீ, அரபி கோப்பி வகைகள் எல்லாம் போட்டுக்கொடுத்து விட்டு  , புத்தகம் கட்டுவது , அங்கு வரும் அரபிகளுக்கு சகல வேலைகளையும் (போட்டோ கொப்பி, வைன்டிங்) செய்து கொடுத்து ஹிந்தி ,ஓரளவு அரபி விளங்கி கொள்ளும் பேச வராது ஆங்கிலம் ஓரளவுக்கு பேச கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன்.

மேனேஜருக்கும் அரபி பெண்களுக்கும் பிடித்தவனானேன் என்னை விடமாட்டார்கள் போல் ஆகிவிட்டது காரணம் களவு இல்லை வேலை தரமாக இருக்கும் ஒர் வேலை சொன்னால் அது எத்தனை மணியானாலும் செய்து முடிப்பது அதனால் ஆண்களை விட அரபி பெண்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஹிந்திப்படம் பார்ப்பார்களாம் அரபி பெண்கள் அதில் ராஜா என்ற பெயரில் சாருக்கான் வருவராம் சாருக்கான் மிகவும் பிடிக்குமாம்.

இன்று வரை பிடித்த நாடு துபாய்தான் சுரண்டல்கள் இல்லாமல் இருந்தால் ஊழியர்களும் வாழ்வார்கள் அவர்கள் சிந்தும் வியர்வைக்கும் சரியான கூலி கிடைக்கும்.

மற்ற நாட்டுக்கார்கள் வேலைசெய்யவும் விடமாட்டார்கள் வேலை செய்யவும் மாட்டார்கள் மெனேஜரை. இதனால் மேனேஜரோ வெள்ளிக்கிழமையும் வந்து காலையில் வேலை செய்து விட்டு  போவார் வெள்ளிக்கிழமை எனக்கு வேலைவரும் காரணம் செக்கியுருட்டி லீவு எடுத்துக்கொள்வான் அங்கே பரீட்சியம் ஆன ஆள் என்ற படியால் வெள்ளிக்கிழமையும் நான் வேலை செய்வது இதனால் எனக்கு விடுமுறை இல்லை ஓவர் டைம் வழங்கப்படும்.  

இப்படி இருக்க கணணியில் ஊர் செய்திகளை ஆவல் கொண்ட எனக்கு இணையத்தளங்களை பார்க்க பழகி அதை பிரின்ட் எடுத்து எங்கள் தங்குமிடங்களில் போட்டோ கொப்பிகள் அடித்து அதை பத்திரிகை போல எல்லா றூம்களுக்கும் அனுப்பிவிடுவேன் ஏனென்றால் ஊர் செய்திகளை படிக்க ஆவலாக இருப்போர் அதிகம் (சண்டைகள் ஆரம்பம்) அத்தனை பேரும் விலகி வந்தவர்களும் ஓடிவந்தவர்களும். இயக்கத்தை விட்டு அந்த இணையத்தளங்களை பார்க்கும் போது முதல் தடவையாக தட்டும் போது பரீட்சியமானதுதான் யாழ் இணையம். 2.30 ற்கு பிறகு எங்கள் நிறுவனத்தை கிளின் பண்ண ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு எல்லா கதவுகளையும் (றூம்களையும்) திறந்து கொடுத்து விட்டு செய்திகள் பார்ப்பேன் படிப்பேன்.  கணணி பற்றி பெரிதாக தெரியாது 6 மாதம் பயின்ற கொஞ்ச அனுபவத்தை வைத்து புரட்டலானேன் யாழ் இணையத்தில் விவாதங்கள் ,கதைகள் , கவிதைகள் பிடித்துப்போக ஏன் நானும் இணையக்கூடாது என இணைந்துகொண்டேன் முனிவர் ஜீ என அந்த பெயருக்கும் ஓர் காரணம்  எனது ரூமில் இருப்பவர் ஒருவர் கல்யாணம் கட்டவில்லை வயது வந்தும் அவருக்கு நாங்கள் வைத்த பெயரை அப்படியே நான் புனைப்பெயராக மாற்றிக்கொண்டேன்.  யாழை திறக்கும் போது முள் உள்ள பலாப்பழம் போல தான் இருந்தது உள்ளே நுழைந்ததும் அதன் சுவை அறிந்தேன் நான். (2008)ம் ஆண்டு

ஓர் நாள் ராஜவன்னியன் என்று அறிமுகமான சேகர் அண்ணையிடமும் தொலைபேசியில் கதைக்க முடிந்தது ஆனால் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை துபாயில் மன்னிக்கணும் அண்ண வேலைப்பழு அப்படி   

மேனேஜர் (லீவு நாளில் வெள்ளிக்கிழமை) வேலைக்கு வரும் போது எனக்கும் சேர்த்தும் சாப்பாடு வாங்கி வருவார் போகும் போது காசும் தந்து விட்டு செல்வார். வெள்ளிக்கிழமை. எல்லோருக்கும் லீவு என்பதால் வாகனம் வராது என்னைச் ஏற்றி செல்ல டிரைவருக்கும் விடுமுறை.  என்னுடைய காசை கொடுத்தே பஸ்ஸில் செல்வேன் ஆனால் மாலை ஆறு மணிக்கு பஸ்தரிப்பிடத்துக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறையென்பதால் பஸ்லில்கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் சாரதி ஏற்றிகொள்ளமாட்டான் காரணம் பஸ்ஸில் நின்று கொண்டு செல்ல முடியாது 10 ற்கு மேற்பட்டோர் சட்டம் அப்படி 10 மணிக்கு ஓரளவு கூட்டம் குறைய பஸ்ஸில் ஏறி தங்குமிடம் செல்ல 11.30 மணி ஆகும்.

நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.

தொடரும்.....................

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.

தொடரும்.....................

நம்பிட்டம் தம்பி நம்பிட்டம்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பிட்டம் தம்பி நம்பிட்டம்🤣

நம்பலாம் தம்பிக்கு பெண் என்றாக் அலர்ஜிக்கா இருந்தீச்சு அந்த நேரம் அதுவும் பிலிப்பைன்ஸ் ஆட்களை கண்டால் உவாக்தான் அவங்க சாப்பாட்டை கண்டியள் அடுத்த நொடி வாந்தி தான் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம் 😆
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில்   ஊமைக்கோபமும்   ஊமை அழுகையும் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன  கஷ்ட  பட்டு  வருகிறது காசு என  என விளங்காது ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

பிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம் 😆
 

அதே ஆட்கள் மட்டும் தான் வெள்ளையும் சொள்ளையும் பக்கா குப்பைகள்

4 hours ago, குமாரசாமி said:

நீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில்   ஊமைக்கோபமும்   ஊமை அழுகையும் வருகின்றது.

நன்றி அண்ணை 

எனக்கே வாழ்கையே வெறுத்த காலம் அது ஏழையாக இருந்திடக்கூடாது என ஆனால் வாழ்க்கை யாரைத்தான் விட்டது அதன் வட்டத்தில் சுழலத்தானே வேண்டும் 

2 hours ago, நிலாமதி said:

இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன  கஷ்ட  பட்டு  வருகிறது காசு என  என விளங்காது ..

ஓம் ஓம் இது கனபேருக்கு புரிய வேண்டும்  நன்றி அக்கா கருத்துக்கு 

 

உள்ளே என்ன நடந்தது எனக்கும் தெரியாது ஆனால் கொஞ்ச ரிசு பேப்பரை அள்ளி ரொய்லெட்டில் போட்டு விட்டு சென்றான் அவன் சென்ற ரூமை திறக்க முடியாது ஏனென்றால் நம்பர் லாக் பண்ணிருப்பார்கள். அந்த நம்பர் தெரிந்திருக்க வேண்டும் அடுத்த நாள் காலை மேனேஜர் வந்து என்னைக்கூப்பிட்டு நேற்று என்ன நடந்தது என்று கேட்க (அவர் எங்கோ இருந்து பார்த்திருப்பார் போல இவன் அவளை உள்ளே கூட்டி வந்ததை) நான் விபரங்களை சொன்னேன் ஏன் நீ எனக்கு முதலில் சொல்ல வில்லை என்று கேட்க??  அவர் என்ன செய்தார் என்று நான் என் கண்ணால் பார்க்கவில்லை அப்படி இருக்க எப்படி பொய் சொல்ல முடியும் அவர் ஒர் பெண்ணைக்கூட்டி வந்தது தெரியும் அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லலாம் என்று நினைந்திருந்தேன் எனவும் சொன்னேன்.

நிறுவனத்தில் அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் பயங்கர மேட்டர்க்காரன் என்பது அவர்களுக்கும் ஏன் எனக்கும் தெரியும். அவனுக்கு ஆப்பு அடிக்கப்பட்டது வேலையில் இருந்து மாற்றப்பட்டான் .

மீண்டும் நம்பிக்கைக்கு ஆளான நான் மேனேஜரின் ரூம் நம்பரும் எனக்கு மட்டுமே கொடுப்பட்டது வேற யாரும் உள் செல்ல முடியாது ஏனென்றால் அவர் துபாயில் மிகவும் முக்கிய புள்ளிகளில் ஒருவர். ஒரு மனிதாபிமானம் உள்ள நேர்மையான மனிதரும் கூட மதம் பார்க்காதவர்.

மற்றவர்கள் எங்கள் மதத்துக்கு வா உன்னை இங்கே எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இங்கே வசிக்க விசாவும் தருவார்கள் நல்ல சம்பளம் , இருக்க றூம் எல்லாம் தருவார்கள் என்று சொல்ல நானோ உங்களுக்கு என் வேலை மட்டும் தானே வேண்டும் அதை நான் இங்கு இருக்கும் வரைக்கும் செய்கிறேன் ஆனால் மதம் மாற என்னால் முடியாது என்றேன். என்னுடன் இருந்தவர்களில் வங்காளிக்கு விசா கிடைத்தது மற்றவன் மட்டக்களப்பு அவனோ தான் ஒரு கிறிஸ்டீன் என பொய் சொல்லி விசா எடுத்தான் நான் மட்டும் விரும்பல காசுக்காக மதத்தையெல்லாம் விட்டுச் செல்ல முடியாது என கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு லெக்சர் ஒருவர் என்னை அழைத்து அந்த மெனேஜரிடம் கூட்டிச்சென்று இவனுக்கும் விசா கொடுத்து இங்கே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்ல மெனேஜரும் ஓ நல்ல விடயம் என கூறி ஒரு எஜிப்ற் நாட்டுக்காரரிடம் இவருடைய விளக்கத்தை சரிபார்த்து கம்பனியிடம் கதைத்து முடிவு எடுங்கள் என்றார் .

இப்படி பல வருடங்கள் ஓடியது

அவனும் அவர் முன் தலையாட்டிவிட்டு மந்தமாகவே இருந்தான் ஏனென்றால் அவனுக்கு மதம் முக்கியமாக இருந்தது நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை எத்தனை வருடத்துக்கு இங்கே இருப்பது?? நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் நல்ல சம்பளம் அரச வேலை ஆர்வமும் இருந்தது  இப்படி வருடங்களும் சென்றது 2009 தங்கைகு கல்யாணம் என அழைப்பு வர நான் நாட்டுக்கு போக தயாரானேன் என் வேலைக்கு பதிலாக இன்னுமொரு வங்களாதேஷ் காரன் வந்தான் அவன் கொஞ்ச நாள் வேலை பழக்கியதும் நான் ஊர் செல்ல ஆயத்தமானேன்  அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் காசு சேர்த்து தந்தார்கள் அரபி பெண்களோ போய் வந்துடவேண்டும் வராமல் விட்டால் கொன்று விடுவோம் என்றும் சொன்னார்கள். ஊர் வந்து தங்கையின் திருமணத்தை) செய்து) கல்யாணமும் சிறப்பாக முடித்து விட்டேன் ஒருவரது (வளவு வாங்கி வீடு கட்டி அதன் மேலதிக வேலைகளயெல்லாம் நான் துபாயி இருக்கும் போது செய்துவிட்டன்)

ஊர் சென்ற போது

பொலிஸில் சேர இன்றவியுவிக்கு சென்றேன் அங்கே எனது ரிசேல்ட்ஸ், விளையாட்டுச் செட்டிபிகேட் எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்கள் உயரத்தை பார்த்துவிட்டு 5.5 அடி பார்போம் நீங்கள் 5.3 அடி இருக்கிறீர்கள் அடுத்த வருடம் முயற்ச்சி செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் , ரயில்வே ஊழியராக இன்றவியுக்கு சென்றேன் வவுனியாவில் அல்லது கிளிநொச்சியில் வேலை வரும் போவீர்களா போவேன். எனக்கூறிவிட்டு வந்தேன்ஆனால் வேலை கிடைக்கல அடுத்தது நில அளவை உதவியாளர் சகலதும்கேட்டார்கள் பார்த்தார்கள் ஆனால் வேலையென்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்படி இருக்க அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்கள் சென்றது அதிகம் அந்த வருடம் சரி இலங்கையில் வேலை கிடைக்காது நமக்கு இனியென்ன படகேறுவோம் என நினைத்து  இருந்தேன் . ஆனால் நீ படகேறினால் அங்கு செல்கிறாயோ  இல்லையோ இங்கே இருவர் இறந்து கிடப்பார்கள் என அம்மா அப்பா சொல்ல அதையும் கைவிட்டேன்.

விடுமுறை கழியும் தறுவாயில் இருக்க மீண்டும் விமானமேறினேன் அதே இடத்துக்கு செல்ல அங்கே நான் வேலை பழக்கிய வங்காளிக்கு விசா கொடுத்து அழகு பார்த்தான் அந்த எஜிப்ற்காரன் எனக்கு அங்கு இருக்க பிடிக்கல ஊருக்கு போய் வந்ததனாலும் சொந்தங்களும் பழகிவிட்டு வந்ததாலும் மேனேஜரிடம் போய் ஏன் எனக்கு விசா கொடுக்கல இத்தனை வருடமாக வேலை செய்கிறேன் என சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது ராஜா நான் அவரிடம் தானே சொல்லி இருந்தேன் என அவர் கூற அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் உள்ளே வர மேனேஜர் கேட்கிறார் என்ன நடந்ததென அவரோ நான் இருவருக்கு அப்பிளே பண்ணினேன் அவருக்கு கிடைத்தது இவருக்கு கிடைக்கல என்று சாதரணமாக சொன்னார். மேனேஜரோ உனக்கு வேலை நான் தருகிறேன் என அவர் காரில் ஏற்றி சென்றார் (இதுவரை யாரையும் அவர் காரில் ஏற்றியதில்லை அவர் காரின் பின்பே பல கார்கள் செல்லும் முக்கியமானவர்) பயத்தில் பின்சீட்டில் இருக்க எனக்கு நீ முதலாளியா முன்னுக்கு என் அருகில் வா என கூட்டிக்கொண்டு அந்த வாகனம் பறந்து சென்றது.

அங்கே ஓர் கடையில் நிறுத்தினார் நல்ல சம்பளம் நீ இங்கே வேலை செய் என்றார் அங்கே கடையில் நின்றவர்கள் எல்லாம் பெண்கள் எனக்கு பிடிக்கல யோசித்து சொல்கிறேன் சேர் என மீண்டும் காரில் ஏறி வந்துவிட்டேன் வந்த நான் அம்மாவுக்கு உடல் நலமில்லை நான் நாட்டுக்கு போகபோகிறேன் என கூறி கேன்சல் செய்துவிட்டுவர ஆயத்தமானேன் கணக்கு எல்லாம் பார்கப்பட்டு பிடித்து வைத்த காசயெல்லாம் கொடுத்தது கம்பனி நானும் ஊர் புறப்பட தயார் ஆனேன் 2010 ம் ஆண்டு

அப்பாவும் ஊரில் 5 ஏக்கர் வயல் எடுத்தவர் நானும் போணைப்போட்டு நானும் வருகிறேன். இன்னும் 5 ஏக்கர் வயல் மேலதீகமாக எடுங்கள் என்று சொல்லியும் ஊருக்கு வந்து விட்டேன். வயல் எடுத்து செய்ய அறக்கொட்டியும் , வெள்ளைக்கதிரும் நோயும் அடித்து மொத்தமாக நஷ்டம் வெள்ளாமை வெறும் மரமாக நின்றது கொண்டு வந்த காசும் மொத்தமாக செல்ல 5 லட்சத்துக்கு மேல் நட்டமும் அப்பாவுக்கு காட் அட்டக் வர என்ன செய்வதென்று தெரியாமல் உதவி யாழ் இணையத்திடமும் கேட்டிருந்தேன் நேசக்கரம் ஊடாக சிறிய உதவி மிக பெரியதாக இருந்தது. எப்பவும் சொல்லிக்கொள்வேன் இரண்டு வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூலி வேலைகளெல்லாம் செய்தேன் .

வேலைக்கு இண்டவியுக்கு கூட்டி சென்றார் ஒருவர் பல கேள்விகள் கேட்கப்பட்டது எனது பதில் சரியாக இருக்கும் ஆனால் வேலை கிடைக்காது என்ற நிலையில்தான் நான் இருந்தேன்

அதிஸ்ரம் கிடைத்ததா என்று தெரியவில்லை வேலை கிடைத்தது , ஒருவருடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது மீண்டும் முகாமைத்து உதவியாளருக்கு (M.A) பரீட்சை எழுத காத்துக்கொண்டிருக்கிறேன்.

மறக்க முடியா சம்பவங்கள் மனதிலிருந்து இறக்கி வைத்து இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது

வாசித்த கருத்துகூறிய அனைவருக்கும் நன்றிகள்✍️🙏🙏🙏.       

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்காக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது. :(

இருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.

நாளை சந்திப்போம்.:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

வாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்காக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா?

வேற பிரிவில் படிக்க ஆயத்தமானேன் ஆனால் எல்லாம் புதிய சிலபஸ் (பாட திட்டம்) அதனால் கைவிட்டு விட்டேன் இருக்கின்ற ஓ/ எல் தகமையும் ஏ /எல் படித்த சான்றிதழ்களை வைத்தே வேலையும் எடுத்துக்கொண்டேன்.

 

3 hours ago, குமாரசாமி said:

ஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது. :(

இருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.

நாளை சந்திப்போம்.:grin:

இதை சொல்வது ரண களத்திலும் ஓர் கிளுகிளுப்பு என்று  நன்றி குமாரசாமி அண்ண  எனக்கே ஓர் சலஞ்சாக இருந்தது அதாவது ஒரு போர்தான் என்றும் சொல்லலாம் எனக்கும் வாழ்க்கைகக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா  , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன். 

மேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

நானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா  , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன். 

மேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

ம்ம் நானும் தான் கொழும்பான் சவாலாக எடுத்து இன்று வென்று விட்டேன் ஆனால் இலங்கையில் வாழ்வதென்பதும் பாரிய சவால் தான் 

ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

இதைப்பற்றி சொல்லுங்களன் எனக்கு விளங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பழையவற்றை நினைத்து கவலை கொண்டுஇனிப் பயனில்லை. எமக்கெமக்கு எழுதியிருப்பதுபோல்தான் நடக்கும். இப்பதான் குடும்பத்தார் ஆகிவிட்டீர்களே. இனி எல்லா நல்லதே நடக்கும்.
 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.