Jump to content

கொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு

Recommended Posts

பதியப்பட்டது

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். 

keto_diet.jpg

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.
 
எச்சரிக்கை

இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
 
குறிப்பு

சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை.

img1b.png

உடலுக்கான சக்தியின் தேவை

பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 

1. முதலாவது காபோஹைதரேட்
இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. 

சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும்.  அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

  • ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 

2. இரண்டாவது கொழுப்பு.
முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும்.

  • ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும்.
     
வரலாற்றுக் குறிப்பு

ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 

20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். 

குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. 

இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது.
 
ஒப்பந்தம்

கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ?

இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை.  என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Pyramide2.png

சமன்பாடு

கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 
150 கிராம் கோழி = 350 கி.கலோரி 
ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி 

ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.

இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம்
.

அனுகூலங்கள்

கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன.

  • நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்
  • கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை
  • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides)
  • இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது
  • மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
  • சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது
  • சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும்
  • ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும்.
  • இன்னும் பல…
     
தீமைகள்

  • உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
  • நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்
  • கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
  • படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும்.

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.
தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.

தொடரும்.

Posted
35 minutes ago, இணையவன் said:

அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

தொந்திக் கொழுப்பு கொழுப்பு உணவினால் மட்டுமே உருவாகிறது என இதுவரை எண்ணியிருந்தேன். 

நீங்கள் குறிப்பிட்டபடி காபோஹைட்றேற் ➡️குளுகோஸ் ➡️ கொழுப்பு மாற்றம் தான் உண்மையான காரணம் என அறிந்ததும் காபோஹைட்றேற் அளவைக் குறைக்க வேண்டிய அவசியம் இன்னும் நன்றாகப் புரிகிறது. 😊

43 minutes ago, இணையவன் said:

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.

இதை அறியத்தான் மிக ஆவலுடன் உள்ளேன். காபோஹைட்றேற்ஐக் கட்டுப்படுத்த எவ்வளவு முயன்றும் கடினமாக உள்ளது. பரம்பரை பரம்பரையான உணவுப்பழக்கமோ தெரியவில்லை! 😃

தொடருங்கள் அண்ணா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

மிகச்சிறப்பான பதிவு.  நன்றாக தொகுத்துள்ளீர்கள். இப்பிடியான பதிவுகள் இதைப்பற்றி அறியாதவர்களுக்கு வேறு கோணங்களை காட்டும். 
எனக்கும் இந்த வகை diet இல் சிறிதளவு அனுபவம் உண்டு. 2011இல் தொடங்கி ஒரு மூன்று வருடங்கள் ஓரளவு கடுமையாக இருந்திருக்கிறேன். சில சூழ்நிலைகளால் தொடர முடியாமல் போய்விட்டது. அதன் பலன் இப்போது தெரிகிறது. இடைக்கிடை தொடங்குவதுண்டு ஆனால் தொடர முடிவதில்லை. இப்போதுகூட அப்பிடித்தான் இருக்கிறேன் ஆனால் ஏதாவது ஒரு ரெசிபியை பார்த்தவுடன் இடைக்கிடை செய்து சாப்பிட்டுவிடுவேன், அதனால் தகுந்த பலன் கிடைப்பதில்லை. அடிக்கடி இப்படி உணவு பழக்கத்தை மாற்றவும் கூடாது.
தொடருங்கள் 

Posted
4 hours ago, மல்லிகை வாசம் said:

தொந்திக் கொழுப்பு கொழுப்பு உணவினால் மட்டுமே உருவாகிறது என இதுவரை எண்ணியிருந்தேன்.

5 hours ago, இணையவன் said:

  • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides).

தொந்திக்கு காரணம் மாப்பொருள். மாப்பொருள் உடலில் ரைகிளிசரைட்(triglycerides) ஆக தொந்தியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பொருளை முற்றாக நிறுத்தும் வரை தொந்தி வளர்ந்து வரும். எனது மருத்துவர் இதை எனக்கு புரிய வைத்தபின் நான் சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றையும் விட்டு தாராளமாக மரக்கறி, பழங்கள், மீன், இறைச்சி சாப்பிட்டு நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேகமாக நடக்க தொந்தி மூன்று மாதத்தில் இறங்க ஆரம்பித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் மகள் கூட இறைச்சிவகைகளும் மரக்கறிகளும் உண்டு கணிசமான நிறையைக் குறைத்துவிட்டாள். என்னால்த்தான் சோற்றையும் மற்றைய உணவுகளையும் விட முடியவில்லை இன்னும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் உங்கள கேள்வி எல்லாம் கேட்க மாட்டன் இணையவன். ஒரு விண்ணப்பம் மட்டும் 😊நீங்கள் எடை குறைச்சிட்டிங்கள் என்று சொல்கிறீர்கள்...உங்கள் முழுமையான படத்தை😍 போடுங்கள் நாங்கள் பார்த்திட்டு தொப்பை குறைஞ்சிட்டுதா இல்லையா என்று சொல்கிறேம் 🤗
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 hours ago, Jude said:

தொந்திக்கு காரணம் மாப்பொருள். மாப்பொருள் உடலில் ரைகிளிசரைட்(triglycerides) ஆக தொந்தியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பொருளை முற்றாக நிறுத்தும் வரை தொந்தி வளர்ந்து வரும். எனது மருத்துவர் இதை எனக்கு புரிய வைத்தபின் நான் சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றையும் விட்டு தாராளமாக மரக்கறி, பழங்கள், மீன், இறைச்சி சாப்பிட்டு நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேகமாக நடக்க தொந்தி மூன்று மாதத்தில் இறங்க ஆரம்பித்தது.

உங்களின் ஒரு கிழமைக்கான தினசரி உணவுப்பட்டியலை இங்கே இணைக்க முடியுமா? 

Posted
8 hours ago, குமாரசாமி said:

உங்களின் ஒரு கிழமைக்கான தினசரி உணவுப்பட்டியலை இங்கே இணைக்க முடியுமா? 

காலை ஓட்ஸ், ஒன்பது பாதாம் பருப்புகள் (almonds) மற்றும் கிரான் பெர்ரி   குறைவான கொழுப்புள்ள பாலுடன்.

மதியம் கத்தரிக்காயும் மாமிசமும் சேர்த்து மிகச் சிறிய அளவு உருளை கிழங்கும் சேர்த்து செய்த கறி மட்டும். 

சில நாட்களில் கோவா, கரட் மற்றும் மாமிசம் சேர்த்த கறி மட்டும்.

இடையில் இரண்டு வாழைப்பழம். தோடம்பழம். 

இரவில் நிறைய தண்ணீர். ஒரே ஒரு அவக்காடோ (விழாவுழி  பழம்).

நாள் முழுவதும் தாராளமாக தண்ணீர் குடியுங்கள்.

கடைகளில் எல்லா சாப்பாட்டிலும் சீனி கலக்கிறார்கள். 

இறைச்சி கறியில் கூட சீனி கலக்கிறார்கள். ஆகவே கடையில் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

தினமும் காலையில் எதுவும் குடிக்கவோ சாப்பிடவோ முதல் நிறையை அளவுங்கள். கூடி இருந்தால் கூட நடவுங்கள்.

சீனித் தேவைகளுக்கு Stevia பாவியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் வாசிக்கின்றேன்... தேவையான‌ பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Justin said:

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

ஜஸ்டின்,
ஏன் நோயுற்றதாக கருதுகிறீர்கள்? இந்த வகை உணவு முறைகளில் கலோரி கட்டுப்பாடுகள் தேவையில்லை. இதில் எனது அனுபவத்தை பகிர்கிறேன். இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பின் நான் கார்போஹைட்ரட்  இற்கு பதிலா அதிகளவு saturated  கொழுப்பு, அதாவது கெட்ட கொழுப்பு என்று காலங்காலமாக சொல்லப்பட்ட கொழுப்பை மாற்றீடாக சேர்த்து கொண்டேன்.  தானிய வகைகள் கிட்டத்தட்ட சேர்ப்பதே இல்லை. மரக்கறி. மீன், bacon , கொழுப்பு கூடிய இறைச்சி வகைகள், organ meat , முட்டை (மஞ்சள் கரு தவிர்ப்பதே இல்லை) போன்றவை  பிரதானமாக இருக்கும். நெய், பட்டர், ஒலிவ் ஆயில் , heavy கிரீம் பால் போன்றவையும் தேவையை பொறுத்து இருக்கும். கலோரி அளவில் பார்த்தால் இலகுவாக 2500-3000 கலோரிகள் தாண்டிவிடும். முறைப்படி நிறை கூட வேண்டும் ஆனால் நிறை  குறைந்தது. ஆரம்பத்தில் அதிக கொழுப்பின் தயக்கத்தில் proteinஐ அதிகமாக சேர்த்ததுண்டு, பிறகு அது தவறு என்று தெரிந்து மாற்றிவிட்டேன். தற்பொழுது உடல் கலோரி எரிக்கும் முறை நாம் சாதாரணமாக கணிக்கும் முறையில் இல்லை என்று சிலர்/சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முதல் இரண்டு கிழமைகள் கொடூரமானவை, அதன் பிறகு பழகிவிடும், வயிறு எப்பவுமே நிறைந்தது போல ஒரு உணர்வு இருக்கும். நோயுற்ற உணர்வு இருப்பதில்லை. 

இதை இங்கே பகிருவதில் எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு குறைந்த வயதில் sugar பிரச்னை வந்துவிட்டது   (அப்பா, அம்மா இருவரது familyயிலும் உள்ளது). கொலஸ்டரோலும் ஓரளவுக்கு எகிறியிருந்தது. ஆரம்பத்தில் இந்த diet இல் தயக்கம் இருந்தது, மூன்று மாதங்களுக்கு பிறகு எனது  முதலாவது blood reportஇல் markerகள்  நம்ப முடியாத அளவுக்கு controlஇற்கு வந்தது.  இதற்கு பிறகு sugar மாத்திரையை நிறுத்த முடிந்தது, அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த diet இல் குழப்பம் வரும் வரைக்கும் எதுவித மாத்திரைகளும்  தேவைப்படவில்லை. வெறும் உணவு பழக்கத்துடன் , சிறிதளவு உடற்பயிற்சியுடன் சாதாரணமாக இருக்க முடிந்தது. நான் எதிர்பார்க்காத சில இன்ப அதிர்ச்சியும்  உண்டு. முன்பு சிறிது மந்தமாக இருக்கும் நிலை போய், மிகவும் தெளிவாக இருக்கும். இந்த dietஐ  சில சூழ்நிலைகளால் என்னால் கட்டுப்பாட்டுடன் தொடர முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதும் carb நிறைய சாப்பிடுவதில்லை. மீண்டும் தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை இணையவனின் இந்த பதிவு தருகிறது.

நீங்கள் இது ஒரு backup mechanism, பக்க விளைவுகள் இருக்கும் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். இது ஆராய்ச்சியில்  முழுமையாக நிரூபிக்கப்படாதவை என்று நினைக்கிறன் (பழைய புரிந்துணர்வு, myth என்கிறார்கள்). தற்போதைய சில ஆராய்ச்சிகளில், ஒரு உதாரணத்துக்கு  Alzheimer’s disease சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ketonகள் மூளையின் "preferred" energy source  ஆக அறியப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில்  மாச்சத்து ஒரு essential nutritionஆக  அறியப்படவில்லை. இந்த வகை diet இல் வரும் ketonகள்  சிறுநீரில் அமிலத்தன்மையை அந்த அளவுக்கு அதிகரிக்க போதாது என்று சொல்கிறார்கள். அது  ketoacidosis (இந்த diet இற்கு சம்பந்தம் இல்லாதது) என்ற நிலையிலேயே வரலாம் என்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தை/நிலைப்பாட்டை அறிய ஆவல். உங்களை challenge பண்ணும் நோக்கத்தில் எழுதவில்லை. 

நான் ஒரு மருத்துவன் கிடையாது, இது எனது வாசித்த, பின்பற்றிய அனுபவம் மாத்திரமே. பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. இணையவனின் இந்த பதிவு, மீண்டும் இதை பின்பற்றவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை தருகிறது. அவரது அனுபவத்தையம்  அறிய அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். தமிழர்களில் இந்த வகை diet பயன்படுத்துபவர்கள் அரிது , கனடாவில் இருந்து வந்த ஒரே ஒருவரை மாத்திரமே இதுவரை சந்தித்து, உரையாடி உள்ளேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நீர்வேலியான் said:

நீர்வேலியான், உங்கள் அனுபவப் பகிர்வுக்கும் தகவல்களுக்கும் நன்றி! கீற்றோன் உணவு முறை என்பது ஏன் நிரந்தர உணவு முறையாக எங்களுக்கு இருக்க முடியாது என்பதற்கு என்னிடம் பின் வரும் காரணங்கள் இருக்கின்றன. இவற்றை சில கட்டுரைகளின் அடிப்படையிலும் எனது இருபது வருடப் பழைய உயிர் இரசாயனவியல் பாட ஞாபகத்திலும் இருந்து தருகிறேன். ஆனால், இக்கருத்துக்கள் சிலவற்றை ஒரே இடத்தில் தந்திருக்கும் ஒரு அண்மைய ஆய்வுக் கட்டுரையையும் கீழே இணைத்திருக்கிறேன்:

1. இது நோய் நிலைமை அல்ல என்று நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரியான கூற்று. உடற்றொழியியல் ரீதியான கீற்றோசிஸ்  (physiological ketosis) நிலைக்குத் தான் இந்த உணவு முறை இட்டுச் செல்கிறது, இது டயபற்றிஸ் காரணமாக வரும் கீற்றோசிசை (diabetic ketosis) விட 1/3 பங்கு தீவிரம் குறைவானது!  ஆனால், தொடர்ந்து 8 மில்லிமோல் கீற்றோன்கள் இரத்தத்தில் பேணப் படும் போது(சாதாரண அளவு 0.3 மில்லிமோல்) , இதனால் வரும் அமிலத் தன்மையை சிறு நீரகம் சமாளிக்க முற்படும் போது தான் சிறு நீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறு நீரகக் கற்கள் உருவாக இது மட்டுமே காரணமாக இருக்காது, கல்சியம், குறைவான நீர் என்பனவும் சேரும் போது மட்டுமே இது பிரச்சினையாக வெளிப்படும். 

2. கீற்றோன்களை மூளை குளூக்கோஸ் தட்டுப் பாடான நேரத்தில் மட்டும் பயன் படுத்துகிறது என்பதாலேயே கீற்றோன்  ஒரு றிசேர்வ் சக்தி மூலமாக அடையாளம் காணப்படுகிறது. கீற்றோன் குளூக்கோசை விட வேகமாக மூளையால் பயன்படுத்தப் படலாம், ஆனால் குளூக்கோஸ் தான் மூளையின் சாதாரண சக்தி மூலம். கூர்ப்பு ரீதியில் பார்த்தால், மனிதனின் மிக முக்கியமான உறுப்பான மூளைக்கு கீற்றோன் தான் பிடித்தமான சக்தி மூலமெனில், நாம் ruminants  எனப்படும் ஆடு/மாடு/மான் போல நுண்ணங்கிகளால் செயற்படும் சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டிருப்போம் என நான் நினைக்கிறேன்! இந்த விலங்குகளில், அவற்றின் வயிற்றில் இருக்கும் நுண்ணங்கிகள் தாவரங்களில் இருந்து கீற்றோன்களையும் கொழுப்பையும் உருவாக்குகின்றன. இந்த நிலை பிறைமேற்றுகளில் இல்லை! இது myth அல்ல. 

3. இந்த கீற்றோன் டயற்றின் ஆரம்பமே 1920 இல், வலிப்பு (epilepsy) நோயால் அவதிப் படும் குழந்தைகளைக் குணமாக்கத் தான் உருவானது! எனவே நரம்பு மண்டலத்தில் கீற்றோன்களால் நீங்கள் குறிப்பிடும் நல்ல விளைவுகள் பல காலமாக அறிய பட்டவை தான். GABA எனப்படும் நியூரோன்களை அமைதிப் படுத்தும் நரம்புச் சுரப்பினை அதிகப் படுத்துவது ஒரு காரணம். அழற்சியைக் குறைத்தல், ROS எனப்படும் நச்சுப் பொருட்களைக் குறைத்தல் என்பன வேறு சில காரணங்கள். ஆனால், இந்த ஆய்வுகளில் பல விலங்குகளில் செய்யப் பட்டவை. மனிதர்களில் செய்த ஆய்வுகள் பலவும் நீண்ட கால ஆய்வாக இல்லாமல் குறுகிய கால விளைவுகளாக இந்த நன்மைகளை உறுதி செய்திருக்கின்றன. நீண்ட கால ஆய்வுகள் விரைவில் வெளிவரலாம், clinical trials பல நடந்து கொண்டிருக்கின்றன.

இயற்கை பிரதான சக்தி மூலமாக நிர்ணயிக்காத ஒரு பதார்த்தத்தை நாம் ஒரு நீண்ட கால உணவு முறையால் உடலில் கூட்டும் போது, அது அசாதரணமான ஒரு விடயம் என நினைக்கிறேன். பல மருந்துகள் உடலின் இயற்கையான நிலையை மாற்றுகின்றன தானே என நீங்கள் கேட்கலாம்! ஆனால், மருந்துகளை உடற்சமனிலை (homeostasis) பாதிக்கப் பட்ட நோய் நிலைமைகளில் மீள சமம் செய்ய மட்டுமே பாவிப்பதால் அவை தற்காலிக தீர்வாக ஓ.கே எனப்படுகிறது. இங்கே கீற்றோ முறைமூலம் நாம் உடலின் சமனிலையை குழப்பி எங்கள் நோக்கத்தை அடைவது தான் பிரச்சினை என நினைக்கிறேன்.

 https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6356942/ 

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. எனக்கு இந்த வகை dietஇன் நீண்ட கால விளைவுகள், இது சம்பந்தமான சம கால ஆராய்ச்சிகள், இதில் மற்றவர்களின் பார்வை, இதில் நான் தவறு செய்யும் இடங்கள்  போன்றவற்றை அறிவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நீங்கள் பகிர்ந்த ஆராய்ச்சி கட்டுரையை வாசித்தேன். Alzheimer, Parkinson போன்ற குறைபாடுகளுக்கு இந்த வகை டயட் குறுகிய காலத்தில் நல்லவிளைவுகளை தந்தாலும், நீண்ட கால விளைவுகள் சரியா அறியப்படவில்லை, malnutrition போன்ற குறைபாடுகள் வரலாம் என்பதாக இருக்கிறது. Keto diet இல், பல நீண்ட கால, கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் (controlled clinical trials) இப்போது நடத்தப்பட்டுக்கொண்டு இருப்பதாக அறிகிறேன். இவற்றின் முடிவுகள் சில விடயங்களை தெளிவு படுத்தும்.

நீங்கள் ஓர் balanced diet என்ற ஒரு conventional approach ஐ ஆதரிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த  keto diet நிபுணர்களின்/ஆதரவாளர்களின் பார்வையில் நாம் கூர்ப்பின் அடிப்படையில் எப்பிடி உருவானோமோ அதுவே balanced diet ஆகவே 10% இற்கு மேல் carb தேவையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. தற்போதைய பரிந்துரைகள் 50%இற்கு மேலாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட சில காரணங்களை வைத்து, குளுக்கோஸ்தான் பிரதான எரிபொருளாக இருக்க முடியும் என்று சொல்ல வருகிறீர்கள். உடல் குளுக்கோஸ் கிடைக்கும்பொழுது அதையே முதலாவதாக உபயோகிக்கும் என்பது உணமை, அதனால் அது பிரதான எரிபொருளாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறன். மது அருந்தும் பொழுது, நமது ஈரல் அதையே முதலாவதாக processபண்ணி (குளுக்கோஸ் இற்கு முதல்) அதன் சக்தியை பாவிக்கிறது இதன்படி பார்த்தல் மதுவும் பிரதான எரிபொருளாக கொள்ள முடியும் என்று வருகிறது (ஒரு வாதத்துக்காக). இதைவிட, அதிக மாச்சத்து உணவின் மூலம் வரும்பொழுது ஈரல் அதை ஒரு toxic ஆகவே  கருதி, கொழுப்பு, புரதங்களுக்கு முதல் அதை அகற்ற முனைகிறது. இந்த வகை பாதுகாப்பு கொழுப்பு /புரதம் போன்றவற்றுக்கு தேவைப்படவில்லை, இதுவும் ஒரு ஆதாரமாக, எமக்குரிய இயற்கையான உணவாக இந்த ஆதரவாளர்களால் முவைக்கப்படுகிறது. Ketonகள் குளுகோஸ் போல அன்றி, நீண்ட நேரமான (endurance), மாறாத (constant) சக்தியை வழங்குவதாகவும், efficient ஆனதாகவும் அறியப்பட்டுள்ளது. மூளையின் சக்தி தேவையில் 70% வரை ketonகளால் குளுக்கோஸ்ஐ  விட efficient ஆக வழங்க முடியும் அன்று அறியப்பட்டுள்ளது. மிகுதி 30% (உடனடியான) தேவையை குளுக்கோஸ் இனால் ஈடுகட்டலாம். இக்குளுக்கோஸ் மாச்சத்தினால்   வர வேண்டிய தேவையில்லை. எமக்கு தேவையான குளுகோஸ்ஐ நமது உடல் மேலதிக புரதம், கொழுப்புகளில் இருந்து உருவாகும் (நீங்கள் கூறியது போல), இதை ஒரு starvation நிலையாக கருத தேவையில்லை, இதுவே கூர்ப்பின் அடிப்படையில் இயற்கையானதாக (natural status ) கருதலாம். நாம் வேளா வேளைக்கு  சாப்பிடாத  வேட்டையாடும் விலங்குகளாகவே பரிணாமித்திருக்கிறோம் என்பது இவர்களின் நிலைப்பாடு. இன்னுமொரு ஆதாரமாக வைப்பது,  மாச்சத்தின் தேவை  இதுவரை அறியப்படவில்லை, ஆதாவது 0% மாச்சத்து இல்லாமல் உயிர்வாழமுடியும். ஆனால் புரதமும் கொழுப்பும் இல்லாமல் உயிர்வாழா முடியாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலால் உறிஞ்சப்படுகிறது. சில வகை கொழுப்புகள்  மூளையின் வளர்ச்சிக்கு, பாவனைக்கு  அத்தியாவசியமானது. இவைகள் ஆதரவாளர்களால் வைக்கப்படும் சில வாதங்கள். நான் வாசித்து அறிந்து கொண்டதை தொகுத்துள்ளேன். இது ஒரு முடிந்த முடிபு என்று சொல்ல முடியாது, இதற்கு எதிரானவர்களால் வைக்கப்படும்  சில சிறந்த வாதங்களையும் அறிந்துள்ளேன், ஆனால் இதை நோக்கியதாகவே இந்த துறை இப்போது போகிறது. 

கொழுப்பு உணவுகள் உடலுக்கு கேடானவை என்பதை சரியாக நிரூபிக்க முதல், சட்டரீதியான உணவு பரிந்துரைகள் 70களில் வந்துவிட்டன. நிறைய ஆராய்ச்சிகள் இப்பொழுது இருக்கும் பரிந்துரை தவறு என்று நிரூபித்தாலும். இது ஒரு மத நம்பிக்கை போல் இலகுவில் மாற்ற முடியாது. கொழுப்பின் மீதுள்ள நீண்டகால பயம்,  இந்த உணவு முறையில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. நான் இது பற்றி அறிய முற்பட்ட 2011இல் இப்பொழுது இருக்கும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளோ, கட்டுரைகளோ, பயன்படுத்துபவர்களோ கிடையாது. இப்பொழுது அப்படியல்ல. மாற்றங்களை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். இங்குள்ள பல மருத்துவர்கள் இந்த வகை உணவை இங்கு பரிந்துரைக்கிறார்கள். இதில் அவதனிக்க வேண்டிய ஒரு விடயம், இவர்களில் சிலர் டயாபடீஸ், இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெரிந்தும், பழைய, நிரூபிக்கப்படாத உணவு பரிந்துறைகைளை பின்பற்ற தேவையில்லை, "Ethical Practice"   செய்ய வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. உதாரணத்துக்கு, Dr Berstein என்ற பிரபலமான ஒரு மருத்துவர் இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு என்ஜினீயர், 1946இல் Type 1 டயாபடீஸ் இனால் பாதிக்கப்பட்டு,  அப்போது பரிந்துரைக்கப்பட்ட low fat முறையினால் எல்லாவகையான பாதிப்புக்குள்ளாகி, இறக்கும் நிலைக்கு சென்று, 46 வயதில் தனது சொந்த ஆராய்சியினால் இப்படியான ஒரு வகை உணவு பழக்கத்துக்கு மாறி, அதன்பிறகு medical college சென்று, இன்று டயாபடீஸ், மற்றும் இருதய நோய் போன்றவற்றுக்கு மருத்துவம் செய்கிறார். இவர் 1976களில் இருந்து  இப்படியான உணவு முறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கிறார்.  எனது சொந்த மருத்துவர் 2011இல் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை, அடுத்த சில வருடங்களில் அவரின் பார்வை மாறிவிட்டது. கிழே இணைத்திருக்கும் இந்த graph  நீங்கள் முன்பே பார்த்திருக்கலாம். கொழுப்பு உடலுக்கு கூடாது என்ற பரிந்துரை FDAஇனால் கொடுவரப்பட்டதன் பிறகு அமெரிக்காவில் obesity (உடல் பருமன்) எவ்வாறு அதிகரித்தது என்று தெளிவாக காட்டுகிறது.  

குறிப்பிட்ட காரணங்களை வைத்து உங்கள் நிலைப்பாடு புரிந்தது, எனது புரிதல்களையும் பதிந்துள்ளேன். இந்த வகையான உரையாடலை எத்தனை பேர் ஆர்வமாக வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.  இனி இணையவனின் அடுத்த பாகத்தை பார்த்துவிட்டு,  தொடர்கிறேன் 

HL128143-graph-2.jpg

Source: National Center for Health Statistics (US)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/15/2019 at 10:47 AM, Jude said:

காலை ஓட்ஸ், ஒன்பது பாதாம் பருப்புகள் (almonds) மற்றும் கிரான் பெர்ரி   குறைவான கொழுப்புள்ள பாலுடன்.

மதியம் கத்தரிக்காயும் மாமிசமும் சேர்த்து மிகச் சிறிய அளவு உருளை கிழங்கும் சேர்த்து செய்த கறி மட்டும். 

சில நாட்களில் கோவா, கரட் மற்றும் மாமிசம் சேர்த்த கறி மட்டும்.

இடையில் இரண்டு வாழைப்பழம். தோடம்பழம். 

இரவில் நிறைய தண்ணீர். ஒரே ஒரு அவக்காடோ (விழாவுழி  பழம்).

நாள் முழுவதும் தாராளமாக தண்ணீர் குடியுங்கள்.

கடைகளில் எல்லா சாப்பாட்டிலும் சீனி கலக்கிறார்கள். 

இறைச்சி கறியில் கூட சீனி கலக்கிறார்கள். ஆகவே கடையில் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

தினமும் காலையில் எதுவும் குடிக்கவோ சாப்பிடவோ முதல் நிறையை அளவுங்கள். கூடி இருந்தால் கூட நடவுங்கள்.

சீனித் தேவைகளுக்கு Stevia பாவியுங்கள். 

உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு நன்றி.உணவு விடயத்தில் நான் வைத்தியர்களின் ஆலோசனைகளை நம்புவதில்லை. எவராக இருந்தாலும்  அனுபவப்பட்டவரின் ஆலோசனைகள் என்றும் சிறந்தது. மீண்டுமொருமுறை நன்றி.

நான் கடைகளில் சாப்பிடுவதில்லை. சீனிவகை உணவுகளும் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் உண்பதில்லை.மாமிசம் பற்றி கூறினீர்கள்.அது  எந்தவகையான மாமிசம்? நான் தினசரி 2லீட்டர் தண்ணீர் குடிப்பேன்.

ஆனால் நடப்பது????

ஏறினால் கார் இறங்கினால் காபெட்.  😃
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நீர்வேலியான் said:

ஜஸ்டின், 
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. எனக்கு இந்த வகை dietஇன் நீண்ட கால விளைவுகள், இது சம்பந்தமான சம கால ஆராய்ச்சிகள், இதில் மற்றவர்களின் பார்வை, இதில் நான் தவறு செய்யும் இடங்கள்  போன்றவற்றை அறிவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நீங்கள் பகிர்ந்த ஆராய்ச்சி கட்டுரையை வாசித்தேன். Alzheimer, Parkinson போன்ற குறைபாடுகளுக்கு இந்த வகை டயட் குறுகிய காலத்தில் நல்லவிளைவுகளை தந்தாலும், நீண்ட கால விளைவுகள் சரியா அறியப்படவில்லை, malnutrition போன்ற குறைபாடுகள் வரலாம் என்பதாக இருக்கிறது. Keto diet இல், பல நீண்ட கால, கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் (controlled clinical trials) இப்போது நடத்தப்பட்டுக்கொண்டு இருப்பதாக அறிகிறேன். இவற்றின் முடிவுகள் சில விடயங்களை தெளிவு படுத்தும்.

நீங்கள் ஓர் balanced diet என்ற ஒரு conventional approach ஐ ஆதரிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த  keto diet நிபுணர்களின்/ஆதரவாளர்களின் பார்வையில் நாம் கூர்ப்பின் அடிப்படையில் எப்பிடி உருவானோமோ அதுவே balanced diet ஆகவே 10% இற்கு மேல் carb தேவையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. தற்போதைய பரிந்துரைகள் 50%இற்கு மேலாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட சில காரணங்களை வைத்து, குளுக்கோஸ்தான் பிரதான எரிபொருளாக இருக்க முடியும் என்று சொல்ல வருகிறீர்கள். உடல் குளுக்கோஸ் கிடைக்கும்பொழுது அதையே முதலாவதாக உபயோகிக்கும் என்பது உணமை, அதனால் அது பிரதான எரிபொருளாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறன். மது அருந்தும் பொழுது, நமது ஈரல் அதையே முதலாவதாக processபண்ணி (குளுக்கோஸ் இற்கு முதல்) அதன் சக்தியை பாவிக்கிறது இதன்படி பார்த்தல் மதுவும் பிரதான எரிபொருளாக கொள்ள முடியும் என்று வருகிறது (ஒரு வாதத்துக்காக). இதைவிட, அதிக மாச்சத்து உணவின் மூலம் வரும்பொழுது ஈரல் அதை ஒரு toxic ஆகவே  கருதி, கொழுப்பு, புரதங்களுக்கு முதல் அதை அகற்ற முனைகிறது. இந்த வகை பாதுகாப்பு கொழுப்பு /புரதம் போன்றவற்றுக்கு தேவைப்படவில்லை, இதுவும் ஒரு ஆதாரமாக, எமக்குரிய இயற்கையான உணவாக இந்த ஆதரவாளர்களால் முவைக்கப்படுகிறது. Ketonகள் குளுகோஸ் போல அன்றி, நீண்ட நேரமான (endurance), மாறாத (constant) சக்தியை வழங்குவதாகவும், efficient ஆனதாகவும் அறியப்பட்டுள்ளது. மூளையின் சக்தி தேவையில் 70% வரை ketonகளால் குளுக்கோஸ்ஐ  விட efficient ஆக வழங்க முடியும் அன்று அறியப்பட்டுள்ளது. மிகுதி 30% (உடனடியான) தேவையை குளுக்கோஸ் இனால் ஈடுகட்டலாம். இக்குளுக்கோஸ் மாச்சத்தினால்   வர வேண்டிய தேவையில்லை. எமக்கு தேவையான குளுகோஸ்ஐ நமது உடல் மேலதிக புரதம், கொழுப்புகளில் இருந்து உருவாகும் (நீங்கள் கூறியது போல), இதை ஒரு starvation நிலையாக கருத தேவையில்லை, இதுவே கூர்ப்பின் அடிப்படையில் இயற்கையானதாக (natural status ) கருதலாம். நாம் வேளா வேளைக்கு  சாப்பிடாத  வேட்டையாடும் விலங்குகளாகவே பரிணாமித்திருக்கிறோம் என்பது இவர்களின் நிலைப்பாடு. இன்னுமொரு ஆதாரமாக வைப்பது,  மாச்சத்தின் தேவை  இதுவரை அறியப்படவில்லை, ஆதாவது 0% மாச்சத்து இல்லாமல் உயிர்வாழமுடியும். ஆனால் புரதமும் கொழுப்பும் இல்லாமல் உயிர்வாழா முடியாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலால் உறிஞ்சப்படுகிறது. சில வகை கொழுப்புகள்  மூளையின் வளர்ச்சிக்கு, பாவனைக்கு  அத்தியாவசியமானது. இவைகள் ஆதரவாளர்களால் வைக்கப்படும் சில வாதங்கள். நான் வாசித்து அறிந்து கொண்டதை தொகுத்துள்ளேன். இது ஒரு முடிந்த முடிபு என்று சொல்ல முடியாது, இதற்கு எதிரானவர்களால் வைக்கப்படும்  சில சிறந்த வாதங்களையும் அறிந்துள்ளேன், ஆனால் இதை நோக்கியதாகவே இந்த துறை இப்போது போகிறது. 

கொழுப்பு உணவுகள் உடலுக்கு கேடானவை என்பதை சரியாக நிரூபிக்க முதல், சட்டரீதியான உணவு பரிந்துரைகள் 70களில் வந்துவிட்டன. நிறைய ஆராய்ச்சிகள் இப்பொழுது இருக்கும் பரிந்துரை தவறு என்று நிரூபித்தாலும். இது ஒரு மத நம்பிக்கை போல் இலகுவில் மாற்ற முடியாது. கொழுப்பின் மீதுள்ள நீண்டகால பயம்,  இந்த உணவு முறையில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. நான் இது பற்றி அறிய முற்பட்ட 2011இல் இப்பொழுது இருக்கும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளோ, கட்டுரைகளோ, பயன்படுத்துபவர்களோ கிடையாது. இப்பொழுது அப்படியல்ல. மாற்றங்களை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். இங்குள்ள பல மருத்துவர்கள் இந்த வகை உணவை இங்கு பரிந்துரைக்கிறார்கள். இதில் அவதனிக்க வேண்டிய ஒரு விடயம், இவர்களில் சிலர் டயாபடீஸ், இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெரிந்தும், பழைய, நிரூபிக்கப்படாத உணவு பரிந்துறைகைளை பின்பற்ற தேவையில்லை, "Ethical Practice"   செய்ய வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. உதாரணத்துக்கு, Dr Berstein என்ற பிரபலமான ஒரு மருத்துவர் இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு என்ஜினீயர், 1946இல் Type 1 டயாபடீஸ் இனால் பாதிக்கப்பட்டு,  அப்போது பரிந்துரைக்கப்பட்ட low fat முறையினால் எல்லாவகையான பாதிப்புக்குள்ளாகி, இறக்கும் நிலைக்கு சென்று, 46 வயதில் தனது சொந்த ஆராய்சியினால் இப்படியான ஒரு வகை உணவு பழக்கத்துக்கு மாறி, அதன்பிறகு medical college சென்று, இன்று டயாபடீஸ், மற்றும் இருதய நோய் போன்றவற்றுக்கு மருத்துவம் செய்கிறார். இவர் 1976களில் இருந்து  இப்படியான உணவு முறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கிறார்.  எனது சொந்த மருத்துவர் 2011இல் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை, அடுத்த சில வருடங்களில் அவரின் பார்வை மாறிவிட்டது. கிழே இணைத்திருக்கும் இந்த graph  நீங்கள் முன்பே பார்த்திருக்கலாம். கொழுப்பு உடலுக்கு கூடாது என்ற பரிந்துரை FDAஇனால் கொடுவரப்பட்டதன் பிறகு அமெரிக்காவில் obesity (உடல் பருமன்) எவ்வாறு அதிகரித்தது என்று தெளிவாக காட்டுகிறது.  

குறிப்பிட்ட காரணங்களை வைத்து உங்கள் நிலைப்பாடு புரிந்தது, எனது புரிதல்களையும் பதிந்துள்ளேன். இந்த வகையான உரையாடலை எத்தனை பேர் ஆர்வமாக வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.  இனி இணையவனின் அடுத்த பாகத்தை பார்த்துவிட்டு,  தொடர்கிறேன் 

HL128143-graph-2.jpg

Source: National Center for Health Statistics (US)

நீர்வேலியான், நீண்ட பதிலுக்கு நன்றி. இரண்டாவது பந்தியில் இருக்கும் விடயங்கள் அடிப்படை உயிரியல் அறிவைப் பொறுத்த வரை தவறான புரிதல்கள். இதை எப்படித் தமிழில் விளக்குவது என்று தெரியவில்லை, எனினும் முயல்கிறேன்:

1. ஈரல் அல்கஹோலைப் பாவிப்பதால் அது பிரதானம் என்று வாதிட முடியாது என்கிறீர்கள். உண்மை, அல்ககோல் ஈரலுக்கு பிரதான எரிபொருள் அல்ல! அது மூளைக்கு கீற்றோன் போன்றது! ஈரல் அல்கஹோலைக் கண்டதும் அதைப் பயன்படுத்துவது அதைக் கிளியர் செய்து உடலை விட்டு அகற்றுவதற்காகவேயொழிய அது ஈரலுக்கு விருப்ப எரி பொருள் அல்ல! ஈரல் அப்படி அல்கஹோலை எரிக்கா விட்டால், அது வேறு பாதைகளில் அல்டிகைட் என்ற நச்சுப் பொருளாக மாறி விடக் கூடும். இதனால் குளுக்கோசை கொழுப்பாக மாற்றி விட்டு அல்கஹோலை சக்தித் தேவைக்குப் பாவிக்கிறது! இதனால் தான் பெருங் குடிப் பழக்கம் உடல் பருமனையும் அதிகரித்து சர்க்கரை நோயையும் உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

2. மாச்சத்து புரதமாகவும் கொழுப்பாகவும் மாறுவது அது கூடாத பொருளாக அகற்றப் படவேண்டிய தேவைக்காக அல்ல! பெரும்போசணைப் பொருட்களான (macro nutrients) மாச்சத்து, புரதம், கொழுப்பு இவை மூன்றுக்கும் எமது உடலின் தொழிற்பாட்டில் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது இருக்கும் உயிரியல் அறிவின் படி, குளூக்கோஸ் எங்கள் உடலின் பெரும்பாலான அங்கங்களின் சக்தி எரிபொருள். புரதம் தான் எங்கள் உடலின் கட்டுமானப் பொருள். சாப்பாட்டைச் செமிக்கப் பண்ணும் நொதியங்களும் புரதங்களே! கொழுப்பு எங்கள் உடலின் ஹோர்மோன்களை உருவாக்கும் மூலப் பொருள்! (பட்டினி கிடப்பதால் அல்லது கீற்றொ டயற்றினால் பெண்களில் மாதவிடாய் கருக்கட்டல் பிரச்சினைகள் வர இது காரணம்!). நீங்கள் வட அரைக்கோளத்தில் வாழ்ந்தால் கொழுப்பு குளிரில் இருந்து உங்களைக் காக்கவும் அவசியமாகிறது! எனவே, புரதத்தையும் கொழுப்பையும் சக்தித் தேவைக்காக உடல் பயன்படுத்துவது அசாதாரண நிலை! இது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பு எரிப்பதற்குச் சமனானது!  இது அவசரத்திற்குச் செய்யலாம், ஆனால் அதுவே சாதாரண நிலை என்று பின்பற்ற இயலாது!

உங்கள் ஏனைய கருத்துகளை வாசிக்கவில்லை, பின்னேரம் பார்த்து பதில் தருகிறேன். ஆனால், மேலே நான் சொல்லியிருப்பது போல, உடல் economically smart ஆகத் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது! குழூக்கோசை விட கொழுப்பில் அதிக கலோரி கிடைக்கும் என்றாலும் கொழுப்பைப் பிரதானமாகப் பாவிக்காமல் இருக்க என்ன காரணம் இருக்கலாம்? பக்க விளைவுகள் கீற்றோன் போன்ற பக்க விளைவான பதார்த்தங்கள் உருவாகாமல் இருக்கத் தான் என்று என் உயிரியல் அடிப்படை சொல்கிறது! அந்த பக்க விளைவுகள் நீண்ட கால நோக்கில் ஆராயப் படவில்லை என்பது முக்கியமானது!

 உடற்பருமன் என்பது positive energy imbalance . உள்ளெடுப்பதைக் குறைத்து எரிப்பதைக் கூட்டினால் உடற்பருமன் இயற்கையான வழியில் குறையும் என்பது கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளாக மீள மீள நிரூபிக்கப் பட்ட உண்மை. இதை மறுதலிக்கும் எந்த ஆய்வையும் நான் இது வரை காணவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேலியோ அல்லது குறை மாவு நிறை கொழுப்பை பற்றி ஆரோக்கியம் நல்வாழ்வு முகநூல் குழுவினர் வழியாக அறிந்து கொண்டேன்.

https://www.facebook.com/groups/tamilhealth/

உணவு உற்பத்தி மனிதர்களால் செய்ய தொடங்க முதல் அவர்களின் பிரதான உணவு கொழுப்புடன் கூடிய இறைச்சியே, பழங்கள், விதைகள் உப உணவாக இருந்திருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது குளுக்கோஸ்/மாப்பொருளைத் தானோ?

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதனை குறைக்க இன்சுலினை குளிகையாகவோ ஊசி மூலமோ எடுத்து கொள்ளும் மக்கள் ஏன் உணவில் மாப்பொருளை குறைத்து குளுக்கோசை குறைக்க முன்வருகிறார்கள் இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு நன்றி.உணவு விடயத்தில் நான் வைத்தியர்களின் ஆலோசனைகளை நம்புவதில்லை. எவராக இருந்தாலும்  அனுபவப்பட்டவரின் ஆலோசனைகள் என்றும் சிறந்தது. மீண்டுமொருமுறை நன்றி.

நான் கடைகளில் சாப்பிடுவதில்லை. சீனிவகை உணவுகளும் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் உண்பதில்லை.மாமிசம் பற்றி கூறினீர்கள்.அது  எந்தவகையான மாமிசம்? நான் தினசரி 2லீட்டர் தண்ணீர் குடிப்பேன்.

ஆனால் நடப்பது????

ஏறினால் கார் இறங்கினால் காபெட்.  😃
 
அண்ணா எலும்பில்லாத கோழியை கொஞ்சம் தண்ணீர் விட்டு [சொட்டு நல்லெண்ணெய் விட்டும் தாளிக்கலாம்.]அவிய விட்டு அரைவாசி அவிந்ததும் அதற்குள் கோவா,புரோக்களி,கோலிபுலவர்,செலரி,ப.மிளகாய்,வெங்காயம் போன்றவற்றை போட்டு அவியவிட்டு இறக்கு முன் கேல் அல்லது ஏதாவது கிரையைப் போட்டு இறக்குங்கோ...பால் விடாமல் தக்காளி போடுங்கோ..இதை மட்டும் தனிய சாப்பிடுவது என்றால் 2,3 பேபி உ.கிழங்கு சேருங்கோ...அல்லது ஒரு கைப்பிடியில் குறைவாக அரிசி அதற்குள் போட்டு அவிய விடுங்கோ...மஞ்சள்,உள்ளி,இஞ்சி மறக்காமல் சேருங்கோ...விரும்பினால் சரக்குத் தூள் போடுங்கோ 😑

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடம்பிற்கு கூடாது என்று கொஞ்ச பேர் சொல்லினம்...இது பற்றிய சரியான விளக்கம் ஜஸ்டின் அல்லது யாராவது தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

பேலியோ அல்லது குறை மாவு நிறை கொழுப்பை பற்றி ஆரோக்கியம் நல்வாழ்வு முகநூல் குழுவினர் வழியாக அறிந்து கொண்டேன்.

https://www.facebook.com/groups/tamilhealth/

உணவு உற்பத்தி மனிதர்களால் செய்ய தொடங்க முதல் அவர்களின் பிரதான உணவு கொழுப்புடன் கூடிய இறைச்சியே, பழங்கள், விதைகள் உப உணவாக இருந்திருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது குளுக்கோஸ்/மாப்பொருளைத் தானோ?

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதனை குறைக்க இன்சுலினை குளிகையாகவோ ஊசி மூலமோ எடுத்து கொள்ளும் மக்கள் ஏன் உணவில் மாப்பொருளை குறைத்து குளுக்கோசை குறைக்க முன்வருகிறார்கள் இல்லை?

இணையவனின் திரியில் நானும் நீர்வேலியானும் தேவைக்கதிகமாக எழுதுகிறோமோ என்று நினைக்கிறேன். இந்தப் பதிவோடு நிறுத்திக் கொள்கிறேன்:

ஏராளன், இந்த பேலியோ அல்லது குறைமாவு நிறை கொழுப்பு இந்தக் காலத்து மனிதருக்கு ஆரோக்கியமா என்று யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் இந்த நிறை கொழுப்பு உணவு முறை இருந்தது. 6000 வருடங்கள் முந்தைய அந்த நாட்களில் வேறென்ன இருந்தன? உணவுக்காகவும், ஆபத்தில் இருந்து தப்பவும் தினசரி மைல் கணக்கான ஓட்டமும் நடையும் இருந்தது. Little Ice Age எனும் காலத்தில் பூமியை மூடிய பனிப் படலம் 10,000 ஆண்டுகள் முன்பு தான் விலகியது, அதனால் பூமி வடதுருவம் போல பனியுறைந்தும் இருந்தது! இன்றும், வடதுருவத்தை அண்டிய பகுதிகளில் வாழும் Inuit மக்கள் நிறைய இறைச்சி, கொழுப்பு சாப்பிட்டும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எப்படி? உடற்சூட்டை உருவாக்க அவர்களுக்கு இந்தக் கொழுப்புணவு தேவை. இதனால் கொழுப்பு உடலின் பிழையான இடங்களில் சேராமல் இருக்கக் கூடும்.

எனவே, ஆதிமனிதனின் உணவை இன்றைய சொகுசு வாழ்வில் கொண்டு வந்தால் அது இதய நோய்களை, உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது! வேண்டுமானால், பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

32 minutes ago, ரதி said:

அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடம்பிற்கு கூடாது என்று கொஞ்ச பேர் சொல்லினம்...இது பற்றிய சரியான விளக்கம் ஜஸ்டின் அல்லது யாராவது தர முடியுமா?

உயிரியல் ரீதியில், நீங்கள் குடிக்கும் தண்ணீர் குடலுக்குப் போகும். அங்கே குடல் தேவையான அளவு உறிஞ்சிய  பின்னர், எஞ்சியது மலத்தோடு வெளியேறும்.  பின்னர் உடலினுள் சென்ற தண்ணீர் இரத்தத்தை ஐதாக்கி விடாமல் இருக்க சிறுநீரகம் தொழிற்பட்டு சிறுநீராக வெளியேற்றும்!  எனவே யாரும் அளவுக்கதிகமாக தண்ணீர் அருந்த முடியாது!

Posted

வழமையாக 3 வேளை உண்ணும் உணவை 3 வேளை  6 வேளைகளாக பிரித்து உண்ணுதல் மிகச்சிறந்த பலனை தரும். அந்த ஆறு வேளைகளிலும் உடலுக்கு தேவையான தாதுப்பொருட் களை (காபோவைதரேட், கொழுப்பு) என பிரித்து உண்பதால் மேலும் உடல் நிறை கூடாமல் நிறையுணவை பெற்றதும் ஆகி விடும். போனசாக உடற்பயிற்சி செய்தால் மேலும் உடம்பு ஆரோக்கியமாகும்.

நன்றி இணையவன் உங்கள் பதிவுக்கு.

மேற் கூறிய முறை சிறுநீரகத்தை பாதிக்குமென அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

உண்மை தான், ஒரு நாளைக்கு 10000 தப்படி நடை பயிற்சியை வலியுறுத்துகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/14/2019 at 8:24 PM, Justin said:

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

கற்காலத்தில் வேட்டையாடி மாமிசத்தைத்தானே மனிதர் உண்டர் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கற்காலத்தில் வேட்டையாடி மாமிசத்தைத்தானே மனிதர் உண்டர் . 

முந்தி ஆதிகாலத்திலையெல்லாம் இறப்பு வீதம் எக்கச்சக்கமாய் எல்லே இருந்தது.இப்ப நாங்கள் எங்கடை மருத்துவ கெட்டித்தனத்தாலை இறப்பு வீதத்தை குறைச்செல்லே சாதனை புரிஞ்சிருக்கிறம்.....ஆனால் இப்ப வீட்டுக்கு வீடு புற்றுநோயாலை காடாத்தல் நடக்கிறதை வெளியிலை சொல்லமாட்டம்....🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Justin said:

இணையவனின் திரியில் நானும் நீர்வேலியானும் தேவைக்கதிகமாக எழுதுகிறோமோ என்று நினைக்கிறேன். இந்தப் பதிவோடு நிறுத்திக் கொள்கிறேன்:

ஏராளன், இந்த பேலியோ அல்லது குறைமாவு நிறை கொழுப்பு இந்தக் காலத்து மனிதருக்கு ஆரோக்கியமா என்று யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் இந்த நிறை கொழுப்பு உணவு முறை இருந்தது. 6000 வருடங்கள் முந்தைய அந்த நாட்களில் வேறென்ன இருந்தன? உணவுக்காகவும், ஆபத்தில் இருந்து தப்பவும் தினசரி மைல் கணக்கான ஓட்டமும் நடையும் இருந்தது. Little Ice Age எனும் காலத்தில் பூமியை மூடிய பனிப் படலம் 10,000 ஆண்டுகள் முன்பு தான் விலகியது, அதனால் பூமி வடதுருவம் போல பனியுறைந்தும் இருந்தது! இன்றும், வடதுருவத்தை அண்டிய பகுதிகளில் வாழும் Inuit மக்கள் நிறைய இறைச்சி, கொழுப்பு சாப்பிட்டும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எப்படி? உடற்சூட்டை உருவாக்க அவர்களுக்கு இந்தக் கொழுப்புணவு தேவை. இதனால் கொழுப்பு உடலின் பிழையான இடங்களில் சேராமல் இருக்கக் கூடும்.

எனவே, ஆதிமனிதனின் உணவை இன்றைய சொகுசு வாழ்வில் கொண்டு வந்தால் அது இதய நோய்களை, உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது! வேண்டுமானால், பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

உயிரியல் ரீதியில், நீங்கள் குடிக்கும் தண்ணீர் குடலுக்குப் போகும். அங்கே குடல் தேவையான அளவு உறிஞ்சிய  பின்னர், எஞ்சியது மலத்தோடு வெளியேறும்.  பின்னர் உடலினுள் சென்ற தண்ணீர் இரத்தத்தை ஐதாக்கி விடாமல் இருக்க சிறுநீரகம் தொழிற்பட்டு சிறுநீராக வெளியேற்றும்!  எனவே யாரும் அளவுக்கதிகமாக தண்ணீர் அருந்த முடியாது!

ஆம், இணையவனின் பதிவில் நாங்கள் தேவைக்கு அதிகமாக உரையாடுகிறோம் போலுள்ளது.  நானும் தற்போதைக்கு நிறுத்தி விடுகிறேன். ஒரு சிறப்பான உரையாடலுக்கு நன்றி 

முடிந்தால் தேவையை பொறுத்து உரையாடலாம். எனக்கு கீழ்வரும் விடயங்களில் ஆர்வம் உண்டு: மாச்சத்து பிரதான எரிபொருளாக இருந்தால் உடலின் இன்சுலின் விளைவுகள் ஏன் இப்படி வரவேண்டும், மாச்சத்தின் அத்தியாவசிய தேவை, குளுக்கோஸின் inflammatory (ஒவ்வாமை?) விளைவுகள் ஏன் இப்பிடி இருக்கிறது, diet heart எடுகோள் (hypothesis) எவ்வாறு, எதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது, இப்போது நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகள் ஏன் மீண்டும் மீண்டும் saturated fat பாதுகாப்பான எரிபொருள் என்பதாக வருகிறது. சில வேட்டுவ சமூகங்களின் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள். சிலரின்  "சிறுநீரகத்துக்கு கட்டாயம் பாதிப்பு"  என்பது போன்ற அதீதமான, தவறான புரிதல்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, nunavilan said:

வழமையாக 3 வேளை உண்ணும் உணவை 3 வேளை  6 வேளைகளாக பிரித்து உண்ணுதல் மிகச்சிறந்த பலனை தரும். அந்த ஆறு வேளைகளிலும் உடலுக்கு தேவையான தாதுப்பொருட் களை (காபோவைதரேட், கொழுப்பு) என பிரித்து உண்பதால் மேலும் உடல் நிறை கூடாமல் நிறையுணவை பெற்றதும் ஆகி விடும். போனசாக உடற்பயிற்சி செய்தால் மேலும் உடம்பு ஆரோக்கியமாகும்.

நன்றி இணையவன் உங்கள் பதிவுக்கு.

மேற் கூறிய முறை சிறுநீரகத்தை பாதிக்குமென அறிந்தேன். 

சிறுநீரகத்துக்கு மட்டும் இல்லை. பெண்களுக்கு மாதவிடாய் போன்ற விடயங்களில் எல்லாம் பாதிப்பு வரும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.