Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newyear-3.jpg

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றதோடு தமிழ் சிங்கள புத்தாண்டினை அமைதியாக வரவேற்கின்றனர்.

அவ்வாறே கிளிநொச்சியிலும் சித்திரை புத்தாண்டு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இன்று காலை மருத்து நீர் தேய்த்து புத்தாடை அணிந்து மக்கள் வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று காலைமுதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி பிள்ளையார் கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அதேபோல் வவுனியா மாவட்டத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோன்று கிழக்கிலங்கையிலும் மக்கள் சித்திரை புத்தாண்டை விமர்சியாக கொண்டாடியதோடு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மலையக மக்களும் புத்தாண்டை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று புத்தாண்டை வரவேற்ற மக்கள் மிகவும் அமைதியான முறையில் சிங்கள தமிழ் பத்தாண்டை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சித்திரை-புத்தாண்டை-முன்/

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

முருகபெருமானுக்கு இரெண்டு மனைவிகள். போருக்கு பிறகு அங்கு விதவைகள் தனியாக குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் பாதுகாப்பு இல்லாமலும் துன்ப படுகிறார்கள். ஆண்கள் இவ்வாறான விதவைகளை இரெண்டவது மனைவியாக்கி வாழ்வு கொடுக்கலாமே? முருக பெருமான் காட்டிய வழிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம்.

சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) 

எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா).

இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை).

இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

முஸ்லிம்களுக்கு சட்ட சிக்கல் இல்லையே? 

உண்மையில் எங்கள் உலகம் இன்னமும் ஆணாதிக்க உலகமாக தான் இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஆணாதிக்க சிந்தனை - அல்லாவிட்டால் பாஞ்சாலி போல ஒருத்தி பல கணவர்களை கொள்ளும் உரிமையை கொண்டிருப்பாள். பழைய சிங்களவர்கள் மத்தியிலும் மலையாள நம்பூதிரிகள் மத்தியிலும் ஒரு பெண் பல கணவர்களை ஒரே காலத்தில் கொண்டு இருக்கும் பண்பாடு இருந்தது - ஐரோப்பியர் அதை தடை செய்யும் வரை. இந்த கணவர்கள் சகோதரர்கள். சொத்து பிரியாமல் இருக்க ஒரே பெண்ணை திருமணம் செய்தார்கள்.

போர் காரணமாக   ஆண்கள் இறந்து போக பெண்களுக்கு பாதுகாப்பு தேடி  முகம்மது நபி பல தார விவாகத்தை ஊக்குவித்தார். அதனால் முஸ்லிம் சமுதாயம் பலுகிப் பெருகி பூமியை நிரப்பியது. இன்று ஈழத்தமிழ் இனம் போரினால் அழிந்து மூன்றாவது சிறுபான்மை ஆகி நிற்கிறது.  இந்த நிலையில்இருந்து மீள முகம்மது நபி பயன்படுத்தி வெற்றி கண்ட வழியில் முருகப்பெருமானின் ஆசியுடன் ஏன் எங்கள் மக்கள் முயற்சிக்க கூடாது? எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

2. எங்கள் ஆண்களின் முதல் தாரங்கள் உலகே அழிந்தாலும் தங்கள் கணவர்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

இங்கே எங்கே ஆணாதிக்கம்? எனக்கு தெரிவது பெண்ணாதிக்கம் தான். இதற்கும் நபிகள் நாயகத்தின் தீர்வுதான் தேவை போலும்.  கல் மனம் கொண்ட, சுயநலமும் பொறாமையும் நிறைந்த முதல் தாரத்தை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டு இரெண்டு விதவை குடும்பங்களுக்கு எங்கள் ஆண்கள் வாழ்வளிக்க முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 
  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

57052926_790899091267263_196477031038949

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

4 hours ago, குமாரசாமி said:

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

அதே தான்...

ஆனால் இதில் பலர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது வேதனைக்குரியது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

இந்த தெய்வங்கள் வந்தாவது உங்களுக்கு கனவான்களுக்கும் கணவனுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரியவைப்பார்கள் என்ற நப்பாசை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 
ம்ம் அங்கேயும் மெனக்கெட்டு கன சனங்கள் பூசை பண்ணியது அது போக தைபொங்கலுக்கும் பொங்கி கொண்டாடினர் கன சனங்கள் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தில் அங்கு நின்றவர்கள்  ஆண்கள் பல பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்து 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தை காட்டுவது போல விதவை பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் தானே     ரதி அதை சொல்ல வந்தேன்

6 hours ago, ரஞ்சித் said:

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

ம்ம் இப்ப வரைக்கும் ஊர் அப்படித்தான் இருக்கிறது ரகுநாதன் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

கிரியாசக்தி ....தெய்வானை
இச்சாசக்தி .....வள்ளி 
ஞானாசக்தி ....வேல்

மனிதன் தனது செயல்,ஆசை இரண்டையும் அடக்கி ஞானம் அடையளாம் என்று காட்டவே இரு பெண்களை காட்டியுள்ளார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

மதம் பிடித்தால் மாறி மாறி  மதம் மாறலாம் தப்பில்லை....மதம் பிடிக்காவிட்டால் எப்படி மதம் மாறுவது....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

முப்பது வருடங்களுக்கு முதலே தமிழ் பகுதிகளில் பத்து பெண்களுக்கு ஒரு ஆண் என்று விகிதாசாரம் வந்து விட்டது. இப்போது பெண்கள் தொகை இன்னும் அதிகமாகி ஆண்கள் தொகை  நன்கு குறைந்து இருக்கும். இப்போது முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். தமிழர் இரேண்டாவது சிறுபான்மையாகி விட்டார்கள். நிலைமைகள் மாறும் போது பாதிப்புகளை தாக்குபிடித்து நிலைத்து நிற்க மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி மாற மறுப்பவை அழிந்து போவது இயற்கை. இதை தான் "தக்கன பிழைக்கும்" என்ற உயிரியல் தத்துவம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Jude said:

அழிந்து போவதுதான் நடக்கும் என்றால் அதை யாராலும்தடுக்க முடியாது....முஸ்லிம்கள் முதலாவது சிறுபான்மையினராக வ‌ருகின்றார்கள் என்றால் நல்லது தானே...அவர்களாலும் தமிழ்மொழி வளரும்...பாராட்ட பட வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

ஓம்  அண்ண ஆனால் மதம் முட்டாள்தனாமானது என்று சொல்பவன் அந்த மதத்தின் குறைகளை காவித்து திரிகிறான் என்றால் அவன் எவ்வளவு முழுமுட்டாளா இருப்பான் .

தன்ற பல்லை தட்டி மோந்து பார்ப்பது போலதான்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.