Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்

 

1519100904-room-fire-L

கொட்டாஞ்சேனையிலுள்ள கொச்சிக்கடை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்று முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்

http://www.dailyceylon.com/181139

  • Replies 76
  • Views 9k
  • Created
  • Last Reply

மிக raw ஆன படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வருகின்றன..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சற்றுமுன் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு வெடிப்பு

கிறிஸ்தவர்களின் புனித நாளான இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான இன்றைய ஈஸ்டர் சிறப்பு வழிபாடு கொட்டஹேன கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன 2A7E3066-B0B6-4D91-AF0C-854404BEF852.jpeCB4EBD05-5FD5-4CC8-8B95-24A322BF2F64.jpe

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஐந்து இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. Kochikade Church,Katuwapitiya Church, Shangri La hotel , Cinnamon Grand Hotel ,A church in Batticaloa.

Explosions in Kochchikade, Katuwapitiya and Colombo

Explosions were reported at St. Anthony's Church in Kochchikade, Kotahena and St.Sebastian's Church in Katuwapitiya,in Katana a short while ago, police said.

Meanwhile, explosions were also reported at two five-star hotels in Colombo.

Police said another explosion was reported at a church in Batticaloa.

image_673f71e96c.jpg

image_32e0c0705c.jpg

 

image_5ae5160bf3.jpg

image_de81269add.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பத்துபேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. அதிகாலை 6 மணி ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயேகுண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது. 

பெரும்பாலும் தமிழர்கள் செல்லும் இந்தத் தேவாலயங்களில் கொல்லப்பட்டவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தமிழரும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

Edited by ரஞ்சித்

19 minutes ago, ரஞ்சித் said:

இதுவரை பத்துபேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. அதிகாலை 6 மணி ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயேகுண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது. 

பெரும்பாலும் தமிழர்கள் செல்லும் இந்தத் தேவாலயங்களில் கொல்லப்பட்டவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தமிழரும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

மட்டக்களப்பிலும் குண்டு வெடித்துள்ளது.. அங்கும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என சொல்கின்றனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

சம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்

சம நேரத்தில் நாட்டின் 6 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

200 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் அடங்குகின்றன.

தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

1. கொச்சிக்கடை அந்தோனியார்
2.நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்
3. மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் தேவாலயம்
4. சங்கரில்லா ஹொட்டல்
5. சினமன் கிராண்ட் 57360264_1511271715674664_4215176115129457471756_2090319934336698_3413947410555057484825_1511271402341362_2291021429262557504059_1511271435674692_3575789711072957551859_1511271359008033_2161544554883357564643_1511271735674662_6566665581498458033021_1511271602341342_7306623966255258087839_1511271465674689_10977920946693colombo-hotel-blast-1-1.jpg?resize=810%2
6. கிங்ஸ்பெரி ஹொட்டல்https://newuthayan.com/story/10/சம-நேரத்தில்-நாட்டின்-6-இட.html

கொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு

கொழும்பு – நகரில் உள்ள பிரபலமான மூன்று,  ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இன்று காலை குண்டுவெடிப்புகள்  இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நகரின் மத்தியில்  கோட்டை பகுதியில் உள்ள ஷங்ரி-லா, சினமன் கிரான்ட், கொழும்பு கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

இந்தச் சம்பவங்களில் விடுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பலர் இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காயமடைந்துள்ளனர் என்றும்  பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

https://newuthayan.com/story/10/கொழும்பில்-3-ஐந்து-நட்சத்.html

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு - 25 ற்கும் மேற்பட்டோர் பலி..!: 300 க்கும் மேற்பட்டோர் காயம் :

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

virakesari.jpg

இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் 6 இடங்களில் பாரி குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து கிறிஸ்தர்வர்களின் தேவாலயங்களை இலக்கு  வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம்  கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/54314

 

 

நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!

கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

57599619_444888816246701_144122741205342

அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பங்களினால் இதனால் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் படுகயாமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு அருகிலும் மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை ஐந்து இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

koch.jpg

 

http://www.virakesari.lk/article/54310

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு  6 இடங்களில்... பாரிய  குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
யார் செய்த வேலையாக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்! –(2ஆம் இணைப்பு)

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தீவிர சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை ஈஸ்டர் ஆராதனையின்போது குண்டு வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் ஆதவனுடன் இணைந்திருங்கள்.

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்பு! – பிரதேசத்தில் பதற்றம்

 

 

 

 

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார்.

 

http://athavannews.com/கொச்சிக்கடை-அந்தோனியார்/

 

பதுளை மற்றும் கட்டுநாயக்காவிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மட்டக்களப்பில் 25 பேர் பலி. கொச்சிக்கடையில் 23 பேர் பலி என செய்திகள் வருகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு – 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு(2ஆம் இணைப்பு)

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் -5இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கொழும்பிலுள்ள இரண்டு தேவாலயங்கிளிலும் வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்திருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/மட்டக்களப்பு-சியோன்-தேவா/

  • கருத்துக்கள உறவுகள்

à®à®à¯à®à¯ à®à®²à¯à®²à®¾à®®à¯

இலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. பலர் படுகாயம்

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 4 சர்ச் மற்றும் இரண்டு தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

à®à®©à¯à®©

கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் மேலும் கிங்ஸ்பெரி சர்ச், பட்டிக்கலாவ் சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. நான்குமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும்.

மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 200 நபருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/multiple-bomb-blast-in-sri-lanka-including-in-4-churches-many-feared-death-347565.html

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படலாம் என்றும் பிரதான பகுதிகளையும் பிரபுக்கள் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுருத்தியிருந்தாக தகவல்
 
தவாஹித் ஜமான் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் என்பவரலால் இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவுருத்தப்பட்டிருள்தாக அறிய முடிகிறது.

 

Tamil mirror

IMG-20190421-WA0015.jpg

10 minutes ago, அபராஜிதன் said:

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படலாம் என்றும் பிரதான பகுதிகளையும் பிரபுக்கள் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுருத்தியிருந்தாக தகவல்
 
தவாஹித் ஜமான் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் என்பவரலால் இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவுருத்தப்பட்டிருள்தாக அறிய முடிகிறது.

 

Tamil mirror

மேலே நான் இணைத்துள்ளது இது தொடர்பானது என சமூக வலைத்தளங்களில் பரவுகின்றது

ஆனால் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. எல்லாம் திட்டமிடடவாறு நடப்பதாக தெரிகின்றது.... இந்த அறிவித்தல் உட்பட

  • கருத்துக்கள உறவுகள்

 இப் புனித நாளில் பாதிக்கப்பட்ட அனைவரையும் எண்ணிக் கொள்கிறேன்.

எழுதிச் செல்லும்   விதியின் கை.

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வைர கடத்தல் காரனின் நாடுகடத்தல்.

 என்ன செய்தாவது பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற பதவி இழந்தவர்களின் தவிப்பு , பிற நாட்டு குடியுரிமை திறப்பு ,

மட்டக்களப்பில் முன்பு நத்தாரில்  அம்மானின் சகா இன்று உயிர்த்தெழு நாளில் யாரோ    இரண்டு + இரண்டு 

மீண்டும் சிவக்கிறது இலங்கை ।

 


 

  • கருத்துக்கள உறவுகள்

100 பேர் அளவில் பலியாகி உள்ளதாக... இரண்டாம் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

இரு தேவாலயங்களுல் நடத்தப்பட்டவை தற்கொலைத் தாக்குதல் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

சில் தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்லீம் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் பற்றி அதிகாரப் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாம். 

நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

negambo.jpg

அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அருகாமையிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 25 பேரும், கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தோவாலயம் மற்றும் கொழும்பு மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களில் 24 பேருடைய சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையினுடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்கள் பலர் சத்திரசிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54320

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலை நடத்தியது ஐஸிஸ் அமைப்பென்று சிங்களவரின் இணையங்களில் எழுதுகிறார்கள்.

புனித நாளில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாமானியன் said:

 
 

 

28 minutes ago, தமிழ் சிறி said:

திட்டமிட்டு  6 இடங்களில்... பாரிய  குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
யார் செய்த வேலையாக இருக்கும்?

 

3 minutes ago, சாமானியன் said:

 இப் புனித நாளில் பாதிக்கப்பட்ட அனைவரையும் எண்ணிக் கொள்கிறேன்.

எழுதிச் செல்லும்   விதியின் கை.

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வைர கடத்தல் காரனின் நாடுகடத்தல்.

 என்ன செய்தாவது பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற பதவி இழந்தவர்களின் தவிப்பு , பிற நாட்டு குடியுரிமை திறப்பு ,

மட்டக்களப்பில் முன்பு நத்தாரில்  அம்மானின் சகா இன்று உயிர்த்தெழு நாளில் யாரோ    இரண்டு + இரண்டு 

மீண்டும் சிவக்கிறது இலங்கை ।

 


 

 

17 minutes ago, அபராஜிதன் said:

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படலாம் என்றும் பிரதான பகுதிகளையும் பிரபுக்கள் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுருத்தியிருந்தாக தகவல்
 
தவாஹித் ஜமான் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் என்பவரலால் இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவுருத்தப்பட்டிருள்தாக அறிய முடிகிறது.

 

Tamil mirror

கோத்தபாயா சீனாவின் ஆலோசனையில் அம்மானின் உதவியுடன் முஸ்லிம்களில் பழியை போட்டு,  முஸ்லிம் பயங்கரவாதத்தை அடக்க தன்னை ஜனாதிபதியாக்குங்கள் என்று கேட்க செய்த சதியாக இருக்கலாம் இல்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.