Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
29 minutes ago, Justin said:

உயிரோடிருக்கும் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என்கிறேன் நான்! இதில் எங்கே மறுகன்னம் காட்டல் இருக்கிறது நாதமுனி? இனி இப்படி ஒரு அவலம் நடக்காமல் இருக்க இங்கே நீங்கள் ஆதரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறிதும் உதவாது என்பதே என் வாதம்! இது உங்களுக்கும் புரியும், ஆனால் ஏதோ உங்கள் புத்தியை மறைக்கிறது இப்போதைக்கு! அது விலகும் போது யோசியுங்கள்! மற்றபடி நீங்கள் எழுதியிருக்கும் காசு, சவூதி, எல்லாம் சதிக் கோட்பாட்டுக் காரர்களின் பிதற்றல்கள். நடந்தது உலகத்திற்கு இப்போது நன்கு பரிச்சயமாகி விட்ட ஐசிஸ்-தூண்டிய கொடூரம் என்பது தான் இப்போது எம் முன்னே உள்ள தகவல்களின் அடிப்படையிலான முடிவு! அதை எப்படித் தடுப்பது என்ற யோசிப்பை இந்தப் பிதற்றல்கள் இலகுவாக வழி மாற்றிவிடும், அவர்கள் மீண்டும் வந்து வெடிப்பார்கள்! இது நல்ல "புத்தி சாலித்தனமாக" தான் தெரியுது எனக்கு!  

எதனை வைத்து நான் முஸ்லீம் எதிர்ப்பாளர் என்று சொல்கிறீர்கள்?

நான் எங்கே சொன்னேன் இஸ்லாமியரை எதிர்ப்பதாக? தப்பான வியாக்கியானம் கொடுக்க வேண்டாம். இவ்வளவுக்கும் நான் முஸ்லீம் மத்தியில் வாழ்ந்தவன். இந்த தளத்தில் கொழும்பு முஸ்லீம் தமிழ் பேசக்கூடிய ஒரு சிலரில் நானும் ஒருவன்.

நான் சொல்வது, முஸ்லீம் மக்களின் அவலத்துக்கு காரணம், அவர்கள் தேர்ந்து எடுத்த, தீவிர எண்ணம் கொண்ட, றிசாத், ஹிஸ்புல்லா இருவரது செயல் பாடுகளே என்கிறேன்.

இன்று நேற்று அல்ல, பல நாட்களாக, இவர்களது நடவடிக்கை குறித்து நான் இந்த தளத்தில் சொல்லி வந்திருக்கிறேன்.

றிசாட் வில்பத்து செயல்பாடு குறித்து சண்டே லீடர் பத்திரிக்கையில் வந்த ஆக்கத்தினையே மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.

இந்த ஆசிரியர்கள் மீதான மக்களின் எதிர்ப்பு, பயத்தின் காரணமானது. அந்த பயத்தினை நீக்க, முன்னமேயே அப்பகுதி கல்வி அதிகாரிகள் செயல் பட்டிருக்க வேண்டும். அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பும் போது, மக்கள் எவ்வாறு நடந்து கொள்வர் என ஊகித்து, அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து clear பண்ணி விட்டனர். நீங்களும் பயப்படாது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

மொத்தத்தில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாதது, ஆகவே நம்பிக்கை இல்லாமல் மக்கள் தாமே பாதுகாப்பு விடயத்தில் கவனம் எடுக்கிறார்கள். அது தவறு என்று எப்படி சொல்ல முடியும்?

இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்பதால், மக்களுக்கு இந்த நம்பிக்கை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

லண்டனில் நிலக்கீழ் புகையிரதத்தில் வெடி.... அடுத்த நாள், அப்பாவி, பிரேசில் நாட்டு பயணி ஒருவர், பொலிஸாரினால் சுட்டு கொல்லப் பட்டார். போலீசார் பதட்டத்தில் செய்ததாக மன்னிப்பு கோரினார்கள். முன்னேறிய நாட்டிலேயே இந்த நிலை. 

இலங்கையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எமது மேலைத்தேய சூழல் மனப்பான்மையை அங்கே சாதாரண மக்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

நான் புலிகள் கூட, அனுராதபுரம் கெப்படிகொல்லாவா என்ற இடத்தில பயணிகள் பஸ் வண்டி மீது நடத்திய தாக்குதலே, அவர்கள் மீதான உலகின் பார்வை எதிராக மாற காரணம் என்று எழுதி இருக்கிறேன். 

யதார்த்தத்துக்கு வாருங்கள்.

இலங்கை அன்னையின் முக்கிய மூன்று பிள்ளைகளும், தமது தாய் மண்ணை பெரும் வன்முறைகளுக்கு உள்ளாக்கி விட்டனர். ஜேவிபி சிங்களவர்களை வன்முறையிலும், புலிகள் தமிழர்களையும், ஜிகாதிகள், இஸ்லாமியர்களையும் வன்முறையில் பிரதிநித்துவம் செய்து விட்டனர்.

அதன் காரணமாக அந்த அந்த மக்கள் பெரும் விலையினை கொடுத்து விட்டனர். தவிர்க்க முடியாது. நானும், நீங்களும் இங்கே பாதுகாப்பாக இருந்து கொண்டு, அங்கே சொந்தங்களை இழந்த மக்களின் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாது என்கிறேன்.

இதில் ஜிகாதிகள் மட்டுமே மதம் சார்ந்தது. சிங்களவர் போராட்டம் வர்க்க ரீதியானது. புலிகள் போராட்டம் நியாயபூர்வமானது.

சவூதி பணம் $24 மில்லியன் வந்தது, ஒருங்கிணைத்தவர் கைது என்று சொன்னது சதிகாரர்களின் பிதற்றல்கள் என்கிறீர்கள். அதை சொன்னது நாட்டின் ஜனாதிபதி என்பதை நீங்கள் அறிவீர்களா?

அந்த பணத்தில் ஹிஸ்புல்லாவால் கட்டப்பட்ட பல்கலைக்கழகம், அரசு கையகப்படுத்தும் என்பதை அதே ஜனாதிபதி சொன்னதையும் அறிவீர்களா, இல்லையா?

  • Replies 141
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நாதமுனி, மாட்டைப் பற்றிக் கேள்வி கேட்டால், மாடு கட்டிய மரத்தைப் பற்றி விளாவாரியாக எழுதியிருக்கிறீர்கள்!, நன்றி. இந்த vigilante கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும், அதை நாங்கள் வெளிநாட்டில் இருந்து முஸ்லிம் விரோதக் கருத்துகளால் சிலாகிப்பதும் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்கவும் உதவாது, நீண்ட காலப் போக்கிலும் குறைக்காது, வேண்டுமானால் பாதிக்கப் படும் சாதாரண முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை நடத்தவோ அல்லது தெரிந்தும் தகவல் தெரிவிக்காமல் இருக்கவோ இது தூண்டும்! கீழ்வரும் கேள்விகளை உங்களுக்கும், இங்கே முஸ்லிம் விரோதம் பரப்பும் நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன். பதில்கள் தேவையில்லை, ஆனால் உங்கள் reflection இற்காக மட்டும் இவை:

1. தாக்குதல் குழுவின் முன்னைய செயல்பாடுகள் பற்றி அசாத் சாலி என்ற முஸ்லிம் தலைவர் உட்பட சாதாரண முஸ்லிம்களும் முன்னரே தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பது fact. இதுவே இந்தத் தாக்குதல்களை அவர்கள் ஆதரிக்கவோ பாராட்டவோ இல்லை என்பதன் ஆதாரமாக இருக்கும் போது, வேறென்ன சாதாரண முஸ்லிம்கள் மேலதிகமாகச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

2.சாதாரண தமிழர்களைச் சந்தேகநபர்களாகச் சிங்களவர்கள் பார்த்ததால் நாம் இலங்கையில் பட்ட துன்பங்கள், அவமானங்கள், கைதுகள் நினைவிருக்கிறதா? இதை இன்னொரு சமூகம் மீது திணிக்க ஏன் நாம் சந்தோஷப் படுகிறோம்? இந்த சாதாரண தமிழர்கள் பலர் இன்றும் அரசியற் கைதிகளாக இருக்கும் நிலையில், இந்த முஸ்லிம் குரோதம் எங்களுக்கே கூசவில்லையா? இந்த உரிமை மீறல்களைக் காட்டித் தானே நாங்கள் சிறந்த வாழ்நிலைமைகள் கொண்ட நாடுகளுக்கு வந்து வாழ ஆரம்பித்தோம்?

3. உலகின் வேறு எந்த நாட்டில், இப்படி பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பற்ற சாதாரண மக்களைத் துன்புறுத்துவதும் demonize செய்வதும்  அமைதியைக் கொண்டு வந்திருக்கிறது? மேற்கில் 2001 இல் இருந்து தடுக்கப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லாம் அடிப்படைவாத அமைப்புகளுள் ஊடுருவி உளவு பார்த்த முஸ்லிம்களால் தான் தடுக்கப் பட முடிந்தது என்பதை அறிவீர்களா? இதற்காகவே முஸ்லிம்களை அன்னியப்படுத்துவதை மேற்கு நாடுகளின்பாதுகாப்புத் துறையினர் எதிர்க்கிறார்கள் என்றாவது அறிவீர்களா?

ஜஸ்டின் உங்கள் முதலாவது கேள்விக்கான விடை எனக்கு தெரிந்த வரைக்கும் காத்தான்குடி மக்கள் சேயோன் சேர்ச்சில் குண்டு வெடித்தவரோடு பிரச்சனை பட்டனர்..அவர் மார்க்க ரீதியாய் இல்லாததை சொல்லிக் கொடுத்து தங்கள் பிள்ளைகளை பழுதாக்குகின்றார் அல்லது கடும் போக்கு மதவாதத்தை படிப்பிக்கிறார் என்பதால் ஆகும்...தங்கட பிள்ளைகளுக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது என்ற கவலையே தவிர மற்றப் படி இவர்களுக்கு மற்ற உயிர்கள் மேல் அக்கறை இல்லை...இன்னமும் காத்தான்குடியில் இருந்து ஆயுதம்,ஆயுதமாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...இது தனியே ஒருவர்,இருவர் செய்த வேலையா?...தமிழ் இயக்கங்கள் தோன்றும் போது தமிழர் எப்படி பார்த்திட்டு பேசாமல் இருந்தார்களோ அதே மாதிரித் தான் இவர்களும் இருந்தார்கள்...அவருக்கு எதிராய் 2017 யில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.போலீசில் அறிவித்தார்கள்...இதெல்லாம் பிரச்சனை தங்களுக்கு வந்ததால் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை....காத்தான்குடி மசூதியில் இன்னமும் அந்த இரத்த கறையை கழுவாமல் அப்படியே வைத்துள்ளார்கள்..உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் 2வது  கேள்விக்கு, சாதாரண தமிழரை விசாரணைக்கு உட்படுத்தும் போதும்,கைது செய்து விசாரிக்கும் போதும் இவர்கள் என்ன செய்தார்கள்?...கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள்,காட்டிக் கொடுத்தார்கள்...சிங்களம் இன்றைக்கு தமிழருக்கு செய்யுது நாளைக்கு இதே நிலைமை தங்களுக்கு வரும் என்று யோசிக்க வேண்டாம்...எத்தனை தடவை தமிழர் தரப்பு கேட்டது தங்களோடு ஒத்துழைக்க சொல்லி...ஒரே மொழியை பேசிக் கொண்டு மதத்தை வளர வைப்பதற்காக இனத்தை அழித்தவர்கள்...கிழக்கில்  குறிப்பாய் மட் டுவில் எத்தனை கோயில்கள்,தமிழர் நிலங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து உள்ளார்கள்...இதெல்லாம் ஓர்,இருவர் செய்த வேலை இல்லை...இவ்வளவு விசாரணை அது,இது என்று நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் மு.புத்தகத்தில் அவர்கள் தமிழருக்கு  எதிராய்  எழுதும் துவேச கருத்துக்களை பார்த்தால் எந்த மானமுள்ள தமிழனும் இப்படி அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டான். 

மூன்றாவது கேள்விக்கான விடை தமிழரையும் இதே சிங்களம் தான் துன்புறுத்தியது?? ...யாராவது கேட்டார்களா இந்த ஒரே மொழியை முஸ்லீம் மக்கள் உட்பட...அரசே சட்டம் போட்டு இருக்குது முகத்தை மூட வேண்டாம் என்று அப்படியிருந்தும் மூடிட்டு போயிருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?...கொழும்பில் உள்ள பிரபல்ய சாஹிரா மகளிர் பாடசாலையில் கூட அப்படித் தான் வெளியில் எழுதி ஒட்டி இருந்தது? ...அந்தப் பாடசாலையில் யாராவது மீறினார்களா?...இந்த ஆசிரியைகள் செய்தது அரசியலுக்காய்...உங்களை மாதிரி ஆட்கள் வக்காலத்து வாங்க வருவீர்கள் என்று தெரியும்....அனுதாபத்தை சம்பாதிக்கலாம்...அவர்களுக்கு மாற்றல் தேவையாயிருக்கும் இதே சாட்டாய் வைத்து எடுத்திருப்பார்கள்.
அங்கே இருக்கும் மக்களிடம் போய் இவர்களை பற்றி கேளுங்கள்...ஒன்றாய் படித்து ,ஒன்றாய் வேலையில் இருந்தாலும் எவ்வளவும் துவேசம் பிடித்தவர்கள் என்று அவர்கள் சொல்லுவார்கள். தமிழர்கள் எப்பவும் மற்றவர்கள் மேல் பாவம்,பரிதாபம் பார்த்து தான் சீரழிஞ்சு போர் இருக்கான்  

உங்களுக்கு இருப்பதும் புலிக்கு மட்டுமே சப்போட் பண்ணி எழுதிவினமே அவையின்ட குணம் தான்...அவர்களும் சரி,நீங்களும் சரி பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று நிக்கிற ஆட்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,

உண்மையை, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த ஆசிரியர்களால் குண்டு வைக்கப்படும் என்றா நீங்கள் நெஞ்சார நம்புகிறீர்கள்? 

தர்க்க ரீதியாக சிந்தித்தால் இந்தப் பயம் பயமே இல்லை என்பதை நீங்கள் ஒரு நொடியில் விளங்கி கொள்வீர்கள்.

இங்கே நெடுக்கும், போலும் வெளிபடையாக சொல்லும் முஸ்லீம் விரோத கருத்தை உங்களால் சொல்ல முடியாமல் உங்கள் நாகரீகம் உங்களை தடுக்கிறது. ஆகவே பயத்தில் மக்கள் இப்படி நடந்தார்கள் என உங்களை நீங்களே ஏய்துக்கொள்கிறீர்கள் என்றே எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

திருப்பி, திருப்பி உடுக்கடிக்காதீர்கள்.

எனது நெஞ்சும், நம்பிக்கையும் ஒரு பொருட்டே இல்லை.

அங்கே உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்தே நான் பேசுகிறேன்.

இதை புரியாமல், இந்த கூமுடையுடன் விதண்டாவாதம் செய்ய, ஆள் மாறி, ஆள் மாறி வந்து நேரத்தினை செலவழிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தனி, ரதி,

நீங்கள் சொல்லுவது அத்தனையும் நியாயமே. இனப்பிரச்சினையில் இவ்விரு இனங்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாமே. 30 வருட இடைவெளியில் எமது நியாமான உரிமைகள பலதை பறித்து கொண்டது மட்டுமின்றி எமது அழிவிலும் பங்கெடுதார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

இப்போதும் தனி கோடி காட்டியுள்ள பல பிரச்சினைகள் குறிப்பாக கிழக்கில் உண்டு.

ஆனால் 

1. இவ்வாறு ஆசிரியர்களை துரத்தியதன் மூலம் நாம் அடைந்த நன்மை தான் என்ன?

எமது உணர்வை வெளிகாட்டி விட்டோம் என்ற களிப்பை தவிர இதில் நன்மை எதையும் நான் காணவில்லை.

2. ஆனால் எமது பிள்ளைகளின் படிப்பு பாழ் படுவது மட்டும் இல்லை, இப்போ இந்த விடயத்தில் மீண்டும் “தமிழர்கள் இனவாதிகள்” என வசைகூறும் வாய்ப்பையும் நாமே ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். மல்கம் ரன்சித், மல்வத்து பீடாபதிகள் எல்லாம் முஸ்லீம்களை அரவணைக்கும் நல்லவர்கள், ஆனால் தமிழர் இனவாதிகள். எப்படி இருக்கு கதை?

3. முஸ்லீம்-தமிழ் முரணை எப்படி தவிர்ப்பது என்றால் எனக்கு தெரியாது என்பதே என் இதயசுத்தியான பதில். ஆனால் இப்படி செய்வதால், தமிழ் ஊர்காவல் படை அமைப்பதால், பொதுபலசேனாவை கல்முனைக்கு அழைப்பதால் நாங்கள் இந்த முரணில் வெல்ல முடியாது. 30 வருடத்தில் முஸ்லீம்கள் இருந்தது போல, எம் மொழியை, எம் பண்பாட்டை பேணும் வரை, நாம் சிங்களத்தின் செல்லப் பிள்ளைகளாக ஒருபோதும் வரமுடியாது.

இந்த உண்மையை உணராவிட்டால், நாம் எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் அமைச்சர்களும்.. இலஞ்சத்துக்கு அலையும் சிங்கள அரச நிர்வாகமும்.. சவுதி உட்பட மத்திய கிழக்கு மற்றும் சில முஸ்லீம் நாடுகளின்.. மதவெறியூட்டல் பணத்தில் காலமோட்டும்.. முஸ்லீம் மத வெறி அடையாளம் காவலும்.. போர்க்குற்ற.. பெரும் மனித உரிமை மீறல்களுக்கும்.. கையூட்டுக்கும் பெயர் போன சொறீலங்கா பாதுகாப்புத்துறை என்று எதுவுமே பொதுமக்களை பாதுக்காக்க வக்கற்று இருந்த நிலையில்..  இவர்களின் பலவீனங்களுக்கு அப்பாவி தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களுக்கும்.. அப்பாவி வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும்.. குழந்தைகளும் சிறார்களும் உயிர்விட்டுள்ள நிலையில்..

பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாது. பெற்றோர் விரும்பாவிடில்.. பாதுகாப்பில் நம்பிக்கை இல்லையேல்.. முழுப் பிள்ளைகளையும் பாடசாலைக்குச் செல்லாமல் தடுக்க முடியும். அப்போது.. உந்த மத வெறி ஆசிரியைகளும் அதுக்கு வக்காளத்து வாங்கும் சொறீலங்கா உருப்படியான செயலற்ற.. ஊழல் அமைச்சுக்களும்.. என்ன கதிரை மேசைக்கா வகுப்பெடுக்க முடியும்.

பொதுமக்கள் குறிப்பாகப் பெற்றோர்..தங்கள் பிள்ளைகளின்.. பாதுகாப்பை அரசிடம்.. பள்ளிக்கூடங்களிடம்.. வலியுறுத்த எல்லா உரிமையும் கொண்டுள்ளனர். அதனை யாரும் குரோதம் என்று வகைப்படுத்தினால்.. அவர்களிடம் தான் ஏதோ சிந்தனைப் பிரச்சனை.. மத வெறிக்கு ஆதரவு என்ற நிலை உள்ளது என்ற பொருள் படும். இவர்கள் குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

திருப்பி, திருப்பி உடுக்கடிக்காதீர்கள்.

எனது நெஞ்சும், நம்பிக்கையும் ஒரு பொருட்டே இல்லை.

அங்கே உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்தே நான் பேசுகிறேன்.

இதை புரியாமல், இந்த கூமுடையுடன் விதண்டாவாதம் செய்ய, ஆள் மாறி, ஆள் மாறி வந்து நேரத்தினை செலவழிக்காதீர்கள்.

இது அங்குள்ளோர் மனநிலை இல்லை. மட்டகளப்பில், சிசிலியாவிலும், வின்செண்டிலும், கொழும்பு இந்து மகளிர் மற்றும் இராமநாதனிலும் ஹிஜாபி ஆசிரியர்களுக்கு ஒரு தடையும் இல்லை.

பிந்தங்கிய, தனித்து விடப்பட்ட ஒரு தமிழ்வழி பாடசாலையின், பாட்டாளி வர்க்க மக்கள் இங்கே தூண்டப்பட்டிருக்கிறார்கள்.

அநேகமாக இதன் பின்னால் ஒரு பெளத்த மதகுருவின் அல்லது சிங்கள பாதிரியாரின் மறைகரம் இருக்கும் என்பதே என் கணிப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் சொல்வது போல.. நாங்கள் நிஜமான அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களோ அல்லது மற்றைய மக்களையும் மதம் சாராமல்..சமனாக மதிக்கச் சொல்லும்.. துன்பப்படும் விடுதலை வேண்டி நிற்கும்... மக்களின் பக்கம் நில்லுங்கள் என்று சொல்லும்.. நபிகள் நாயகத்தின் உன்னத வரிகளின் உள்ள.. உண்மை இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் எதிரானவர்கள் கிடையாது.

அதேவேளை.. இஸ்லாத்தின் பெயரால்.. நிகழ்த்தப்படும் அனைத்து வித மத வெறியையும் அதுசார்ந்த மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தையும்.. அதுக்கு கூஜா தூங்கும் மத்திய கிழக்கு மற்றும் கடும் போக்கு முஸ்லிம் நாடுகள் மீதும்.. அவர்களுக்கு எடுபிடிகளாக இருக்கும் முஸ்லிம் கடும்போக்கு மத அடிப்படை பயங்கரவாதிகள் மீதும்.. அவர்கள் மற்றைய இனங்கள் மீது வெறுப்பை வளர்க்க எடுக்கும் எல்லாம் நடவடிக்கைகள் மீதும் .. மத வெறியை பெண்களிடம் திணிப்பதும்... பெண்களை மதத்தின் பெயரால் அடைக்கி ஆளுவதும்.. பிள்ளைப்பெறும் இயந்திரமாக நிகழ்த்துவதும்... உலகப் பெண்ணியவாதிகளால்.. மறக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால்.. சராசரி சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அதிலும் சவுதி உட்பட முஸ்லிம் கடும்போக்கு பிரதேசங்கள்.. நாடுகள்... மக்கள்.. மதத்தின் பெயரால் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்த மன்னிப்பையும் இந்த உலகம் காட்டக் கூடாது.

https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

இப்படி இருந்த.. எல்லா மக்களுக்கும் மதிக்கத்தக்க இஸ்லாமியக் கடவுள் கோட்பாடுகள்.. இன்று மத அடிப்படைப்பயங்கரவாதிகளால்.. பிற மக்களையும் இஸ்லாமிய பிற பிரிவுகளையும் அழிக்கும்... கொடும் மனித விரோத நிலைக்கு வந்து நிற்கிறது. இதனை சில முஸ்லீம் நாடுகள் பணத்தாசை காட்டி..வலுப்படுத்த முனைகின்றன.

இதனை உலகில் எங்கும் அனுமதிக்கவே கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் உண்மையான தரவுகளின் அடிப்படையில் பகிரப்படும், உருவாகும்  கருத்தியலே சரியான விளைவைத் தரும் என நம்புவவன் நான். அந்த வகையில்:

இங்கே இறந்தவரில் பெரும்பாலோனோர் தமிழ் கத்தோலிக்கர் என்ற ஒரு மாயவிம்பம் தோற்றுவிக்கப் படுகிறது. சீயோன் தேவாலயத்தில் மட்டுமே இது உண்மை.

நீர்கொழும்பில் இறந்தோரில் அறுதிப் பெரும்பான்மையும், கொச்சிக் கடையில் இறந்தோரில் பெரும்பான்மையும் சிங்களவர்களே.

கொட்டேல்களில் இறந்த உள்நாட்டவரிலும் தமிழர் பெரிதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்தில் இருந்து 12 ஆசிரியர்களை மாத்தும் போது, அவர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை நியமிப்பது அரசின் கடமை.

முடியாவிடில் மாத்தி இருக்க கூடாது. இருபகுதியினை சமாதானப் படுத்தி, தொடர விட்டிருக்க வேண்டும். 

இதற்கு சம்பந்தப்பட்ட, மக்கள் சம்பளத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தானே பொறுப்பு. அதை செய்யாத அதிகாரிகளை குறை சொல்ல மாட்டார்களாம்.

நடுநிலைமையால், பதட்டத்தில் தடுமாறிய ஏழை பாளை மக்களை குறை சொல்லிவினமாம்.

என்னய்யா உங்க நியாயம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

At least 207 people, including foreign tourists, have been killed in Colombo and Batticaloa in a series of bomb blasts that targeted worshippers, who were attending Easter Sunday services at three Christian churches. Most of the victims at the churches were Tamils. The bomb blasts have also targeted three hotels in Colombo. Thirty-five victims were foreigners. Around 450 people have sustained injuries. Fourteen of the 28 victims killed at the Zion Church in Batticaloa were children playing outside the church, medical sources at Batticaloa Teaching Hospital told TamilNet. Two more attacks have been reported at Dehiwale and Dematagoda in Colombo. The attacks on Christians and foreign nationals almost coincide with US - Sri Lanka naval exercise along the Hambantota port, which is owned by China under a 99-year lease. 
 
https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39422

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

பள்ளிக்கூடத்தில் இருந்து 12 ஆசிரியர்களை மாத்தும் போது, அவர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை நியமிப்பது அரசின் கடமை.

முடியாவிடில் மாத்தி இருக்க கூடாது. இருபகுதியினை சமாதானப் படுத்தி, தொடர விட்டிருக்க வேண்டும். 

இதற்கு சம்பந்தப்பட்ட, மக்கள் சம்பளத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தானே பொறுப்பு. அதை செய்யாத அதிகாரிகளை குறை சொல்ல மாட்டார்களாம்.

நடுநிலைமையால், பதட்டத்தில் தடுமாறிய ஏழை பாளை மக்களை குறை சொல்லிவினமாம்.

என்னய்யா உங்க நியாயம்?

அதிகாரிகளை, அரசை, அசாத்சாலியை குறை நல்லாச் சொல்லலாம். நானும் கூட ரெண்டு குறையை சேர்த்துச் சொல்லவும் ரெடி.

இந்த மக்கள் இப்படி பலிகடாவாக பட்டுள்ளார்களே என்று வருந்தலாம்.

ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி, இதுதான் பிள்ளைகளை பாதுகாக்கும் வழி என்பதில்தான் எனக்கு உடன்பாடில்லை. 

அண்மையில் செந்தில் தொண்டைமானின் பேட்டியை படித்தால், இதுவரை அமைதியாக இருந்த மலையக தமிழ் சமூகத்தை முஸ்லீம்களுடன் சிண்டு முடியும் கொந்திராத்து அவருக்கு கொடுக்கப் பட்டுளதோ எனும் ஐயம் எழாமலில்லை.

இப்போ நுவெரெலியாவில் புதிதாக 5 உள்ளூராட்சி சபைகள் இதில் 3 தமிழர் வசம்.

ஒரே நேரத்தில் மலையக தமிழரையும், முஸ்லீமையும் அடக்க வேண்டிய தேவை பேரினவாததுக்கு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

1. இன்னுமா இந்த உலகம் தமிழ் நெட்டை நம்பீட்டு இருக்கு. வேற ஏதாவது ஊடகம்( lobby group website with vested interest அல்ல) இருந்தால் பகிரவும். இன்னமும் அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியாகவில்லை. நான் அறிந்தது ஊடக நண்பர்கள் சொல்லக் கேட்டது. மற்றது நீர்கொழும்பை கூகிள் மேம்பில் மட்டும் பார்த்து, அல்லது அண்மையில் ஹனிமூன் ரிப்பில் பார்த்து கதை எழுதும் ஆளில்லை நான். சீயோன், கொச்சிகடை, நீர்கொழும்பு மூன்றிடங்களுமே நன்கு பரிச்சியமான இடங்கள். இங்கே இனவிகிதாசரம் என்ன, எப்போ எந்தமொழியில் திருப்பலி பூசை நடக்கும் என்ற தகவல் அடிப்படையிலேயே நான் கூறிய தரவு இருந்தது.

2. எனக்கு மொகமட் மீதோ, இஸ்லாம் மீதோ ஒரு விருப்பும் இல்லை. ஆனால் கடுமையான விமர்சனம் உண்டு. பெரும்பாலான முஸ்லீம்கள் வன்முறையை நாடாவிட்டாலும், இங்கே நிகழும் அத்தனை வன்முறைகளுக்கும் குரானிலும், ஹதீசிலும் நியாயப்பாட்டை காணலாம். ஆயிரம் வருடமாக ஒரே புத்தகத்தை கட்டிக் கொண்டு மாரடிப்பது, மாற்றாமல் இருப்பதை போல சுத்த வடிகட்டிய முட்டாள்த்தனம் வேறேதும் இல்லை. தவிர காபீர்கள் மீது, பெண்கள் மீது, அடிமைகள் மீது, ஓரினசேர்க்கையர் மீது இஸ்லாம் அங்கீகரிக்கும் வன்முறைகள் (முகத்தை மூடுவதற்கு நான் முழு எதிர், ஆனால் அதுக்கா ஒருவரை துவேசிக்க முடியாது) மனித குலத்துக்கே விரோதமனவை.

தவிரவும் முஸ்லீம்கள் தம் மததின் பெயரிலான வன்முறையை போதியளவில் தட்டி கேட்பதில்லை என்பதில் நான் முழுதாக உடன்படுகிறேன்.

ஆகவே நபி, நாயகம், பெருமானார், சல், அப்பாவி முஸ்லீம், என்று நீட்டி முளக்க வேண்டிய தேவை எனக்கில்லை 😂.

அதற்காக காடையர்கள் போல ஒரு பள்ளியின் முன்னால் நின்று ஹிஜாப் அணிந்தவர்களை துரதுவது சரி என்றாகாது. சரி இல்லை என்பது மட்டுமில்லை அது அவர்களைவிட எமக்கே அதிக பிரதிகூலங்களையும் தரவல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எப்போதும் உண்மையான தரவுகளின் அடிப்படையில் பகிரப்படும், உருவாகும்  கருத்தியலே சரியான விளைவைத் தரும் என நம்புவவன் நான். அந்த வகையில்:

இங்கே இறந்தவரில் பெரும்பாலோனோர் தமிழ் கத்தோலிக்கர் என்ற ஒரு மாயவிம்பம் தோற்றுவிக்கப் படுகிறது. சீயோன் தேவாலயத்தில் மட்டுமே இது உண்மை.

நீர்கொழும்பில் இறந்தோரில் அறுதிப் பெரும்பான்மையும், கொச்சிக் கடையில் இறந்தோரில் பெரும்பான்மையும் சிங்களவர்களே.

கொட்டேல்களில் இறந்த உள்நாட்டவரிலும் தமிழர் பெரிதாக இல்லை.

கோஷான்,

நீர்கொழும்புல் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் சிங்களவர்கள். ஆனால்,  கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தமிழ்த் திருப்பலி வேளையிலேயே குண்டு வெடித்தது. மட்டக்களப்பு100% தமிழர்.

தனிழர்களை நோக்கியே தாக்குதல் என்பதை சொல்லமுடியாவிட்டாலும்கூட, ஏன் இலக்குவைக்கப்பட்டார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட் சர்வதேச அரங்கில் பிபிசி உட்பட  ஊடகங்களால்.. நோக்கப்படும் ஒரு ஈழத்தமிழர் ஆங்கில இணையச் செய்தித்தளம்.

அதுக்கு சாதாரண நபர்கள் நண்பர்கள் சொல்வதை விட உண்மையை நிலை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட வேண்டிய பொறுப்பு உள்ளது. அதனை தமிழ்நெட் செய்தும் வருகிறது. 

இங்கு அந்த மக்களின் நிலையில் இருந்து அவர்களின் முதன்மை நோக்கமான தமது பிள்ளைகளின் பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொள்ளாது.. செயற்படும்.. இந்த முஸ்லிம் மதவெறி ஆசிரியைகளின் செயலே கண்டிக்கத்தக்கது.

தங்களின் இடமாற்றதுக்காக அவர்கள் ஆடிய நாடகம் போலவே இந்தக் காணொளி பதிவுசெய்யப்பட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால்.. அந்த அப்பாவி பெற்றோரின் பிள்ளைகளின் பாதுகாப்பை கோரும்.. செயல் சில முஸ்லிமை ஆதரிப்பவர்களாக தம்மை காட்ட விளையும் சிலருக்கு காடைத்தனமாகத் தெரிகிறது.

ஒரு பொறுப்புள்ள ஆசிரியையாக பெற்றோரினது கருத்தைக் கேட்டு.. சூழலைப் புரிந்து கொண்டு அந்தப் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்பதை விடுத்து.. உடனடியாக... இங்கு படிப்பிக்க முடியாது என்று குமுறும் குறித்த முஸ்லிம் மதவெறி ஆசிரியையின் நோக்கம் அப்படியே அப்பட்டமாக அங்கு தெரிகிறது.

அதையும் சிலர் இங்கு மூடிமறைத்து அப்பாவிப் பெற்றோரை காடைகளாக்க முனைகின்றனர். 🙄

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1. தமிழ் நெட் 2009 முன்புவரை புலிகளின் நிலையை அறிந்த ஊடகமாக, இருந்தது. புலிகளின் நிலைப்பாடு பற்றி அது சொன்னது நம்பகமாயும் இருந்தது ஆகவே எல்லாரும் தமிழ்நெட்டை quote செய்வார்கள். 2009 க்கு பின், தமிழ் நெட் சொப்பன சுந்தரி மாரி ஆயீட்டு. இப்ப அதன் நம்பகத்தன்மை அதளபாதாளத்தில்.

2. ரகு,

கொச்சிகடையில் எப்போதும் 3 மொழியிலும் அடுத்தடுத்து நடக்கும் என்பதே என் அனுபவம். சில சமயங்களில் ஒரே பாதரே 2 மொழியிலும் ஒரே நேரத்தில் ஜெபிப்பதும் உண்டு.

ஏன் தமிழர் இலக்கு வைக்கப் பட்டார்கள் என்பதற்கான பதில், ஏன் சிங்கள பெளத்தர்கள் தவிர்க்கப் பட்டார்கள் என்பதில்  இருக்கிறது. வெசாக் வரை பொறுத்திருந்தால், 3 வெசாக் வலயத்தை ஒரு இரவில் இலக்குவைத்தால், உயிரிழப்பு 1000 கும் மேலே போயிருக்கும். 

மேலும் சிரத்தை எடுத்து கொழும்பில் இருந்து  சீயோனுக்கு குண்டை எடுத்துப் போயுள்ளார்கள்.

ஆனால் நீர்கொழும்பில் வைக்காமல், அதையும் ஒரு தமிழ் சேர்சில் வைத்திருக்கலாம். ஆகவே சிங்கள கத்தோலிகரையும் இலக்கு வைத்தே உள்ளார்கள். 

ஆனால் எந்த கோவிலிலும் வைக்கவில்லை. நல்லூர் தேர் அல்லது மாமாங்க தீர்த்ததில் வைத்திருந்தாலும் சேதம் பலமாய் ஆகியிருக்கும். 

அப்போ ஏன் தமிழ், சிங்கள கத்தோலிக்கர் மட்டும் வெளிநாட்டினர் தங்கும் இடங்கள் மட்டும் இலக்காகின?

1. குண்டுதாரிகள் முஸ்லீம்கள் மீதான பின் விழைவை இட்டு அஞ்சினார்கள் - அதனால் பெளத்த இலக்குகளை தவிர்தார்கள்

2. ஆயத்தம் முன்பே நடந்தாலும் நியூசிலாந்து நிகழ்வுக்கு பின் கடைசி நேரத்தில் இலக்கை கத்தோலிக்க அமைபுகள் மீது மாற்றினார்கள்

3. அவர்களுக்கு கட்டளை இடும் நிலையில் ஒரு பேரினவாதி இருந்து அவர்களை இப்படி இயக்கியுள்ளான் ( அவர்களுக்கும் தெரியாமலே ) அவனின் திட்டபடி, பெளத்தர்களுக்கு பங்கம் வராமல், முஸ்லீம்களை அடக்க ஒரு சந்தர்பம் தேவைப்பட்டிருக்கலாம்.

4. நீங்கள் எல்லாருமே காபிர்கள் - தமிழர் சிங்களவர் இருவருமே எம் எதிரிகள் என்பதை காட்ட ஒரு இலக்கு முழு தமிழ் பகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்?

5. ஏன் மட்டக்களப்பு? குண்டுதாரி காத்தான்குடிவாசி - செய்வது சுலபமாக இருக்கும். அல்லது அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் மீது பழைய கறள் ( மசூதி படுகொலைகள்) இருந்து அதற்கான பழி வாங்கலாயும் இதை நடத்தி இருக்கலாம்.

மேற்சொன்ன, சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்றுக்காக அல்லது பலதுக்காக இந்த இலக்குகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்.

எல்லாம் வெறும் ஊகம் மட்டுமெ educated guess.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அவர்களுக்கு கட்டளை இடும் நிலையில் ஒரு பேரினவாதி இருந்து அவர்களை இப்படி இயக்கியுள்ளான் ( அவர்களுக்கும் தெரியாமலே ) அவனின் திட்டபடி, பெளத்தர்களுக்கு பங்கம் வராமல், முஸ்லீம்களை அடக்க ஒரு சந்தர்பம் தேவைப்பட்டிருக்கலாம்.

இங்கே நீங்கள் சொல்லாமல்ச் சொல்லும் பேரினவாதி கோத்தாவாக இருக்கலாம். 

ஆனால், தனது பதவியாசைக்காக தான் பொறுப்பெடுக்கக் காத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கக்கூடிய ஒரு தாக்குதலை அவன் செய்ய எத்தனிப்பான் என்று நினைக்கிறீர்களா?

அடுத்ததாக, இத்தாக்குதல்களைச் செய்தது கோத்தாதான் என்று ஒருநாள் வெளிப்படும்போது அவனது நிலை எண்ணாகும் என்று யோசிக்காமல் இதைச் செய்திருப்பான் என்று நினைக்கிறீர்களா?

ஆனால் யார் செய்திருந்தாலும் கூட, சிங்களப் பேரினவாதம் தனது அடக்குறையை இரு சிறுபான்மை இனங்கள்மீதும் நீட்டிப்பதற்கு இன்னொரு காரணத்தை இத்தாக்குதல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா நம்மவர்கள் "அரேபிசத்தை" இஸ்லாமாக காட்ட முனைபவர் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதை பார்க்க கவலையாக உள்ளது.
நானும் இஸ்லாம் மதத்து மக்களோடு பின்னிப்பிணைந்து, பள்ளி சென்று, அவர்கள் வீட்டில் படுத்து உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு , அவர்கள் பெண் பிள்ளைகளோடு ஒரே கட்டிலில் தூங்கி எழும்பியவன் தான் (சின்ன வயதில்) . 
குரானை ஓரளவுக்கு வாசிக்கும் தேர்ச்சியும் , ஸலவாத்து , கிராத் , துவா , ஹதீஸ் இப்படி எல்லாவற்றையும் சின்ன வயதில் கற்றவன் தான்.
அன்றைய முஸ்லீம்கள் தமிழில் ஆர்வம் கொண்டவர்கள், கோயில் திருவிழாவுக்கு வருபவர்கள், வில்லுப்பாட்டும்  பார்த்து ரசிப்பவர்கள், காவடி ஆட்டத்திற்கு  கைதட்டுபவர்கள், எங்கள் வீட்டு சமையல் கட்டில் அவர்கள் வீட்டு கறியை வைத்து  சமைப்பவர்கள்... அவர்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் எங்கள் வீட்டில் வந்து குளிப்பவர்கள்... எம்மை போலவே அழகாக உடை அணிந்தவர்கள் ...
தேவரின் திருவருள் படத்தையும், பழைய தசாவதாரம் படத்தையும் 5 முறை பார்த்து கைதட்டியவர்கள், வெசாக் கூடு தங்கள் வீட்டிலும் கட்டி அழகு பார்த்தவர்கள்...  

என்ன கொஞ்ச கொஞ்சமாக சவூதிக்கும், குவைத்துக்கும் வேலைக்கு போன பணிப்பெண்கள் திரும்பி வரும் பொழுது முக்காடையும் , முழு நீல மக்க்ஷி ஆடையும் அறிமுகப்படுத்தி....காலப்போக்கில் எதோ முழுமையாக அரேபியனை போல ஹிஜாப் ,நிக்காப், பர்தா, அபாயா அணிவது வரையிலும் வந்து நிக்கிறது.
இது இஸ்லாம் அல்ல.... இது "அரேபிஷம்" எனும் விஷம். 
இது ஒரு குறிப்பிட்ட தேசத்து மக்களின் ஆடை!!
அரேபியர்களை  எதோ மேல்சாதி காரன் என்றும், தாங்கள் எதோ அவர்களை விட குறைந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் கொஞ்ச கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு "படம் காட்ட" நினைத்த
மக்களின் மடைமை இன்று அவர்களை அதி தீவிர மதவாதிகளாய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஆகா மொத்தத்தில் அன்றைய நாட்களில், இலங்கை முஸ்லீம்கள் இயல்பாக இப்படி இருந்ததில்லை...
ஆகையினால் சொல்கிறேன் ...
இஸ்லாத்தில் இல்லாத கண்றாவியை கடன் வாங்கி "படம் காட்டுபவர்களுக்கு" யாரும் கவலை கொள்ள தேவை இல்லை.

எது எப்படியோ... தமிழன் சந்து பொந்தெல்லாம் புகுந்து தான் நடுநிலைவாதி என்பதை நிலை நாட்டுவான்... தன் இனம் நாடு ரோட்டில் தவிப்பது கண்ணுக்கு தெரியாமல்... 
யா அல்லாஹ் நான் என்னத்தை செல்ல!!!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

தான் பதவிக்கு வருவதற்கு இது மட்டுமே வழி எனும் போது செய்யவே மாட்டார் என்று நீங்கள் சொல்வீர்களா?  இல்லைத்தானே? அப்போ உங்கள் சந்தேகமும் நியாயமானதே. ஆனால் நிறுவும்வரை எதுவும் சந்தேகமே.

எதையும் நிறுவும் ஆற்றம் எனக்கோ உங்களுக்கோ இல்லை.

நிறுவும் ஆற்றல் உள்ளவர்களுக்கு நிறுவவேண்டிய தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

தான் பதவிக்கு வருவதற்கு இது மட்டுமே வழி எனும் போது செய்யவே மாட்டார் என்று நீங்கள் சொல்வீர்களா?  இல்லைத்தானே? அப்போ உங்கள் சந்தேகமும் நியாயமானதே. ஆனால் நிறுவும்வரை எதுவும் சந்தேகமே.

எதையும் நிறுவும் ஆற்றம் எனக்கோ உங்களுக்கோ இல்லை.

நிறுவும் ஆற்றல் உள்ளவர்களுக்கு நிறுவவேண்டிய தேவை இல்லை.

ஒரு திட்டமிட்ட இனக்கொலையை முழு உலகும் பார்த்திருக்க “மனிதாபிமானப் போர்” எனும் போர்வையில் செய்துமுடித்தவனுக்கு இத்தாக்குதல் ஒன்றும் பெரிதில்லை. ஆனால், பல வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டது இத்தாக்குதலுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Sasi_varnam said:

சும்மா சும்மா நம்மவர்கள் "அரேபிசத்தை" இஸ்லாமாக காட்ட முனைபவர் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதை பார்க்க கவலையாக உள்ளது.
நானும் இஸ்லாம் மதத்து மக்களோடு பின்னிப்பிணைந்து, பள்ளி சென்று, அவர்கள் வீட்டில் படுத்து உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு , அவர்கள் பெண் பிள்ளைகளோடு ஒரே கட்டிலில் தூங்கி எழும்பியவன் தான் (சின்ன வயதில்) . 
குரானை ஓரளவுக்கு வாசிக்கும் தேர்ச்சியும் , ஸலவாத்து , கிராத் , துவா , ஹதீஸ் இப்படி எல்லாவற்றையும் சின்ன வயதில் கற்றவன் தான்.
அன்றைய முஸ்லீம்கள் தமிழில் ஆர்வம் கொண்டவர்கள், கோயில் திருவிழாவுக்கு வருபவர்கள், வில்லுப்பாட்டும்  பார்த்து ரசிப்பவர்கள், காவடி ஆட்டத்திற்கு  கைதட்டுபவர்கள், எங்கள் வீட்டு சமையல் கட்டில் அவர்கள் வீட்டு கறியை வைத்து  சமைப்பவர்கள்... அவர்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் எங்கள் வீட்டில் வந்து குளிப்பவர்கள்... எம்மை போலவே அழகாக உடை அணிந்தவர்கள் ...
தேவரின் திருவருள் படத்தையும், பழைய தசாவதாரம் படத்தையும் 5 முறை பார்த்து கைதட்டியவர்கள், வெசாக் கூடு தங்கள் வீட்டிலும் கட்டி அழகு பார்த்தவர்கள்...  

என்ன கொஞ்ச கொஞ்சமாக சவூதிக்கும், குவைத்துக்கும் வேலைக்கு போன பணிப்பெண்கள் திரும்பி வரும் பொழுது முக்காடையும் , முழு நீல மக்க்ஷி ஆடையும் அறிமுகப்படுத்தி....காலப்போக்கில் எதோ முழுமையாக அரேபியனை போல ஹிஜாப் ,நிக்காப், பர்தா, அபாயா அணிவது வரையிலும் வந்து நிக்கிறது.
இது இஸ்லாம் அல்ல.... இது "அரேபிஷம்" எனும் விஷம். 
இது ஒரு குறிப்பிட்ட தேசத்து மக்களின் ஆடை!!
அரேபியர்களை  எதோ மேல்சாதி காரன் என்றும், தாங்கள் எதோ அவர்களை விட குறைந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் கொஞ்ச கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு "படம் காட்ட" நினைத்த
மக்களின் மடைமை இன்று அவர்களை அதி தீவிர மதவாதிகளாய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஆகா மொத்தத்தில் அன்றைய நாட்களில், இலங்கை முஸ்லீம்கள் இயல்பாக இப்படி இருந்ததில்லை...
ஆகையினால் சொல்கிறேன் ...
இஸ்லாத்தில் இல்லாத கண்றாவியை கடன் வாங்கி "படம் காட்டுபவர்களுக்கு" யாரும் கவலை கொள்ள தேவை இல்லை.

எது எப்படியோ... தமிழன் சந்து பொந்தெல்லாம் புகுந்து தான் நடுநிலைவாதி என்பதை நிலை நாட்டுவான்... தன் இனம் நாடு ரோட்டில் தவிப்பது கண்ணுக்கு தெரியாமல்... 
யா அல்லாஹ் நான் என்னத்தை செல்ல!!!

அஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு சசி பாய்,

உங்கள் பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு கண்டேன்.

முன்னெப்போதோ என்னுடன் ஏற்பட்ட கடுப்பில், என்னை நடுநிலையாளர் என பழித்திருந்தீர்கள்.

அல்லாவின் விளையாட்டை பார்த்தீர்களா, இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்த எனக்கு, இது இஸ்லாத்தின் பிழை அல்ல அரேபியஸ்தின் பிழை எண்டு blame deflect செய்த நீங்கள் தரும் பட்டம் “நடுநிலைவாதி”.😂

சரி எனி விடயத்துக்கு வருவோம்.

நீங்கள் புதிதாக கற்பனை செய்திருக்கும் அரேபியிசத்தின் உண்மை பெயர் வஹாபியிசம். இதுவே உண்மையான இஸ்லாமிய வழி என்றும், நீங்கள் கூறிய 40 வருடத்துக்கு முந்திய கந்தன் கருணை பார்த்த முறை தவறானது என்றும் கடந்த 25-30 வருடங்களில் பலத்த போதனை மூலம் மாற்றல் ஆகி விட்டது.

நீங்கள் சொல்வது இருந்தவர்கள் இவர்கள் பார்வையில் முஸ்லீம்களே இல்லை. அப்படியானவர்கள் உங்கள் ஆட்டோகிராபில் இருக்கலாம், ஆனால் இன்றைய இலங்கையில் மிக குறைவு.

தவிர வஹாபியிசத்தின் அத்தனை கடுபிடிகளும் நேரடியாக குரான் அல்லது ஹதீஸ் ஆதாரத்துடந்தான் வருகிறது. ஆகவே இந்த பொறுப்பு கூறலில் இருந்து இஸ்லாம் தப்பிக்கவியலாது.

தவிர, நீங்கள் கற்பனை செய்தது போல் ஹவுஸ் மெய்ட் இன் மெக்சியில் தொத்தியபடி வரவில்லை வஹாபியிசம். சவுதியில் இருந்து பணம் ஆறாக பாய்கிறது. அல்லும் பகலும் மெளவிகள் மண்டையை கழுவுகிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

அல்லாட காவல்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

ஜஸ்டின் உங்கள் முதலாவது கேள்விக்கான விடை எனக்கு தெரிந்த வரைக்கும் காத்தான்குடி மக்கள் சேயோன் சேர்ச்சில் குண்டு வெடித்தவரோடு பிரச்சனை பட்டனர்..அவர் மார்க்க ரீதியாய் இல்லாததை சொல்லிக் கொடுத்து தங்கள் பிள்ளைகளை பழுதாக்குகின்றார் அல்லது கடும் போக்கு மதவாதத்தை படிப்பிக்கிறார் என்பதால் ஆகும்...தங்கட பிள்ளைகளுக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது என்ற கவலையே தவிர மற்றப் படி இவர்களுக்கு மற்ற உயிர்கள் மேல் அக்கறை இல்லை...இன்னமும் காத்தான்குடியில் இருந்து ஆயுதம்,ஆயுதமாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...இது தனியே ஒருவர்,இருவர் செய்த வேலையா?...தமிழ் இயக்கங்கள் தோன்றும் போது தமிழர் எப்படி பார்த்திட்டு பேசாமல் இருந்தார்களோ அதே மாதிரித் தான் இவர்களும் இருந்தார்கள்...அவருக்கு எதிராய் 2017 யில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.போலீசில் அறிவித்தார்கள்...இதெல்லாம் பிரச்சனை தங்களுக்கு வந்ததால் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை....காத்தான்குடி மசூதியில் இன்னமும் அந்த இரத்த கறையை கழுவாமல் அப்படியே வைத்துள்ளார்கள்..உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் 2வது  கேள்விக்கு, சாதாரண தமிழரை விசாரணைக்கு உட்படுத்தும் போதும்,கைது செய்து விசாரிக்கும் போதும் இவர்கள் என்ன செய்தார்கள்?...கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள்,காட்டிக் கொடுத்தார்கள்...சிங்களம் இன்றைக்கு தமிழருக்கு செய்யுது நாளைக்கு இதே நிலைமை தங்களுக்கு வரும் என்று யோசிக்க வேண்டாம்...எத்தனை தடவை தமிழர் தரப்பு கேட்டது தங்களோடு ஒத்துழைக்க சொல்லி...ஒரே மொழியை பேசிக் கொண்டு மதத்தை வளர வைப்பதற்காக இனத்தை அழித்தவர்கள்...கிழக்கில்  குறிப்பாய் மட் டுவில் எத்தனை கோயில்கள்,தமிழர் நிலங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து உள்ளார்கள்...இதெல்லாம் ஓர்,இருவர் செய்த வேலை இல்லை...இவ்வளவு விசாரணை அது,இது என்று நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் மு.புத்தகத்தில் அவர்கள் தமிழருக்கு  எதிராய்  எழுதும் துவேச கருத்துக்களை பார்த்தால் எந்த மானமுள்ள தமிழனும் இப்படி அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டான். 

மூன்றாவது கேள்விக்கான விடை தமிழரையும் இதே சிங்களம் தான் துன்புறுத்தியது?? ...யாராவது கேட்டார்களா இந்த ஒரே மொழியை முஸ்லீம் மக்கள் உட்பட...அரசே சட்டம் போட்டு இருக்குது முகத்தை மூட வேண்டாம் என்று அப்படியிருந்தும் மூடிட்டு போயிருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?...கொழும்பில் உள்ள பிரபல்ய சாஹிரா மகளிர் பாடசாலையில் கூட அப்படித் தான் வெளியில் எழுதி ஒட்டி இருந்தது? ...அந்தப் பாடசாலையில் யாராவது மீறினார்களா?...இந்த ஆசிரியைகள் செய்தது அரசியலுக்காய்...உங்களை மாதிரி ஆட்கள் வக்காலத்து வாங்க வருவீர்கள் என்று தெரியும்....அனுதாபத்தை சம்பாதிக்கலாம்...அவர்களுக்கு மாற்றல் தேவையாயிருக்கும் இதே சாட்டாய் வைத்து எடுத்திருப்பார்கள்.
அங்கே இருக்கும் மக்களிடம் போய் இவர்களை பற்றி கேளுங்கள்...ஒன்றாய் படித்து ,ஒன்றாய் வேலையில் இருந்தாலும் எவ்வளவும் துவேசம் பிடித்தவர்கள் என்று அவர்கள் சொல்லுவார்கள். தமிழர்கள் எப்பவும் மற்றவர்கள் மேல் பாவம்,பரிதாபம் பார்த்து தான் சீரழிஞ்சு போர் இருக்கான்  

உங்களுக்கு இருப்பதும் புலிக்கு மட்டுமே சப்போட் பண்ணி எழுதிவினமே அவையின்ட குணம் தான்...அவர்களும் சரி,நீங்களும் சரி பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று நிக்கிற ஆட்கள் 

ரதி, நீங்கள் போய் தகவல்களை சரிபார்த்து விட்டு வந்து எழுதுங்கள்! முகத்தை மூடாத உடைக்குத் தடை இல்லாத போதும் சண்டித்தனம் விட்டு இப்ப மூக்குடை பட்ட பிறகு, இப்ப முதலில் இருந்து முகத்தை மூடிய உடை என்று ஆரம்பத்தில் இருந்தா..? facts முக்கியம், அதன் பிறகு உணர்ச்சி வசப்படலாம்! 

5 hours ago, Nathamuni said:

பள்ளிக்கூடத்தில் இருந்து 12 ஆசிரியர்களை மாத்தும் போது, அவர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை நியமிப்பது அரசின் கடமை.

முடியாவிடில் மாத்தி இருக்க கூடாது. இருபகுதியினை சமாதானப் படுத்தி, தொடர விட்டிருக்க வேண்டும். 

இதற்கு சம்பந்தப்பட்ட, மக்கள் சம்பளத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தானே பொறுப்பு. அதை செய்யாத அதிகாரிகளை குறை சொல்ல மாட்டார்களாம்.

நடுநிலைமையால், பதட்டத்தில் தடுமாறிய ஏழை பாளை மக்களை குறை சொல்லிவினமாம்.

என்னய்யா உங்க நியாயம்?

ஓம், நாதமுனி! நாங்கள் "பாதுகாப்பு" என்ற போர்வையில் அவர்களை சாறி உடுத்தி வா என்று தமாஸ் விடுவோம்! பிறகு அவங்கள் எங்களுக்குப் படிப்பிச்சும் விடோணும்! லூசுதனமான ஒரு வேலையைச் செய்து போட்டு, இன்னும், அவர்களே பிழை என்று தெனாவெட்டாக நிக்கிறீங்கள் பாருங்கள்? அங்க நிற்கிறான் "நவீன புத்திசாலித் தமிழன்"! 

  • கருத்துக்கள உறவுகள்

Confirmation-Bias.png

Confirmation Bias

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லீம்களுகென ஓரு தனியான கலாச்சாரம் இருந்தது.
மேலே சசி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்கள் அரபி கலாச்சரத்தை பின்பற்ற போனதாலெயே இந்த விளைவு வந்தது.

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் இருக்கும் உம்மிச்சி பள்ளி வாசலில் சிறுவயதில். நான் சுகவீனப்பட்டால் அம்மம்மா என்னை தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்கள் ஏதோ ஒதி பிள்ளை பயந்துள்ளான் என முகத்தில் தண்னீர் தெளித்து நூல் போட்டு அனுப்புவார்கள். அவ்வளவு தமிழ் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்தார்கள். 

இப்பொழுது பிறந்தநாள்/புதுவருட‌ வாழ்த்து கூறுவது கூட ஹராம் என்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் பல்வேறு இஸ்லாமிய மார்க்கங்களைப் பின்பற்றுகின்றார்கள். ஷியா, சுனி, வஹாபி, சூபி இன்னும் பல. இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அதிகமானோர் சூபியிஸத்தைப் பின்பற்றுவர்கள் என்று படித்திருந்தேன். அவர்கள் வன்முறையை நாடுவதில்லை. வஹாபிகள்தான் இறுக்கமான ஷரியா  சட்டங்களையும், பிற மதங்கள் மீதான குரோதங்களையும் காட்டுகின்றனர். இந்த வன்முறையாளர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.