Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்

தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டவரப்பட்டுள்ளனர்.

vavuniya.jpg

இலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கல் நிலைக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார்.

இந்நிலையில் அகதிகளை தற்காலிகமாக தங்க வைப்பத்தில் வவுனியா மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டு முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக செயற்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தலைமைகள் அதற்கு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் வவுனியா சென்று அரசியல்வாதிகளை சந்தித்திருந்தார்.

இதன்போது வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக்கல்லூரியில் அகதிகளை தங்க வைக்க கூடாது எனவும் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிற்கான ஒரேயோரு கூட்டுறவுக்கல்லூரி இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக குறித்த இடத்தில் அகதிகளை தங்க வைப்பத்தில்லை என கருத்துப்பரிமாற்றங்கள் அங்கு இடம்பெற்றிருந்த போதிலும் இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் இரவு குறித்த பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக்கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு எதிர்வரும் சனி ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/56190

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை  போல  கேணைகள் வேறு எந்த இனத்திலும் இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இன்னொரு காத்தான்குடி.. ரெடி. சம் சும் கும்பலின் உபயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தமிழரை  போல  கேணைகள் வேறு எந்த இனத்திலும் இல்லை 
 
முன்தோன்றி மூத்த தமிழ்.....

வேறு இனங்கள் உருவானதே தமிழிழ் இனத்திலிருந்துதான் என்று அரசல் புரசலாக சிலர் சொல்லவும், எழுதவும் கேள்விப்பட்டு படித்துமிருக்கிறேன். ரதி அவர்களே.! 

நாங்கள் 60 லட்சம் கொடுத்து பிரான்ஸ்ல அசைலம் அடிப்பதில் தான் குறி
 
  • கருத்துக்கள உறவுகள்

அகதி வாழ்வென்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை இலங்கை தமிழரைவிட யாரும் உணர்வு பூர்வமாய் அனுபவித்திருக்கமுடியாது.

ஐக்கியநாடுகள் சபை, இந்த மனிதர்களை எங்காவது பாதுகாப்பான நாட்டில் குடியேற்றவேண்டும், 

இஸ்லாமியர்களும் சிங்களவர்களும் சேர்ந்து தமிழர்களை  கொல்லும் நாட்டில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இந்தியனைத் தவறவிட்டது ஏனோ....??

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

அகதி வாழ்வென்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை இலங்கை தமிழரைவிட யாரும் உணர்வு பூர்வமாய் அனுபவித்திருக்கமுடியாது.

ஐக்கியநாடுகள் சபை, இந்த மனிதர்களை எங்காவது பாதுகாப்பான நாட்டில் குடியேற்றவேண்டும், 

இஸ்லாமியர்களும் சிங்களவர்களும் சேர்ந்து தமிழர்களை  கொல்லும் நாட்டில் அல்ல.

21 hours ago, Paanch said:

இந்தியனைத் தவறவிட்டது ஏனோ....??

பெரும்பான்மை இந்தியர்கள் எங்களில் பெரும்பான்மையினரை போல இந்துக்களாக இருப்பதால், இந்தியர்கள் தான் எம்மை அழிப்பதில் முன் நின்றாலும் நாம் அவர்களை "காட்டி கொடுப்பது" இல்லை.

On 5/18/2019 at 5:47 AM, Dash said:

நாங்கள் 60 லட்சம் கொடுத்து பிரான்ஸ்ல அசைலம் அடிப்பதில் தான் குறி
 
உலக நாடுகள் அகதியாக ஏற்று கொண்ட ஒவ்வொரு தமிழருக்கும் ஈடாக ஒரு அகதியை தமிழ் பகுதியில் மக்கள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லா விட்டால் தமிழ் பகுதியில் ஏற்று கொண்ட சர்வதேச அகதிகளுக்கு மேற்பட்ட தொகை தமிழரை ஸ்ரீ லங்காவுக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை பிரேரிப்பது தானே நியாயம்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Jude said:

தமிழீழத்தை அங்கீகரிக்கச் சொல்லுங்கள். தமிழர்கள் அகதிகளை ஐ நா விதிக்கமைய தமது நாட்டின் மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்வார்கள்.

உலகிலேயே மிக மோசமான மனித உரிமைகளை நிகழ்த்தும் சிங்கள அரசினதும் அதன் இராணுவ இயந்திரனத்தினதும் கீழ் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு வந்து வெளிநாட்டு அகதிகளை திணிப்பது எல்லோருக்கும் ஆபத்தாகும். 

இந்த விடயம் ஏன் உங்கள் மண்டைக்குள் ஏறவில்லை..??! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2019 at 10:56 AM, கிருபன் said:

பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர்

35 × ? = ?

family-planning.jpg

குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துக.. 👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

உலகிலேயே மிக மோசமான மனித உரிமைகளை நிகழ்த்தும் சிங்கள அரசினதும் அதன் இராணுவ இயந்திரனத்தினதும் கீழ் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு வந்து வெளிநாட்டு அகதிகளை திணிப்பது எல்லோருக்கும் ஆபத்தாகும். 

இந்த விடயம் ஏன் உங்கள் மண்டைக்குள் ஏறவில்லை..??! 

உங்கள் சிந்தனை எனது மண்டைக்குள் தாராளமாக ஏறி இருக்கிறது. இது போலவே தமிழ் அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்த போதும் அங்கிருந்த மக்கள் கவலைப் பட்டார்கள். இவர்கள் மத்தியில் எத்தனை பயங்கரவாதிகளோ என்று அவர்கள் பயந்தார்கள். ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த தமிழ் அகதிகள் மேல் இரக்கம் கொண்டு இவர்களை ஐரோப்பாவில்  உள்ளே விட்டு இன்று பல்வேறு குற்ற செயல்களால் இந்த நாடுகள்  பாதிக்க பட்டு உள்ளன. அந்த நாடுகளுக்கும் தீர்வு வேண்டும் என்பது தானே நியாயம்? ஆகவே அந்த நாடுகள் அனுமதித்து உள்ள அளவு இலங்கையும் தமிழ் பிரதேசத்தில் மற்ற நாட்டு அகதிகளை  அனுமதிக்க வேண்டி உள்ளது. 

12 hours ago, nedukkalapoovan said:

தமிழீழத்தை அங்கீகரிக்கச் சொல்லுங்கள். தமிழர்கள் அகதிகளை ஐ நா விதிக்கமைய தமது நாட்டின் மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்வார்கள்.

ஐ. சீஸ். அடிக்கும் அடியில் சிங்கள மக்கள் தமிழ் பிரதேசத்தை தனி நாடாக போக விடுவார்கள் போல தான் தெரிகிறது . ஆனால் எல்லா முஸ்லிமகளும் ஐ. சிசின் பின் பலத்துடன் சிங்கள பகுதிகள் முழுவதும் இருந்து வெளியேறி வடக்கு கிழக்கில் குடியேறினாலே இந்த தனி நாடு சாத்தியம் ஆகும். தனி நாட்டின் பெயர் தமிழீழ இசுலாமிய குடியரசு (Islamic State of Tamil Eelam)  என்று தான் அமையும் போல தெரிகிறது. 

இப்படி நடக்காமல் தமிழர் பலத்துடன் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால் எல்லா தமிழ் அகதிகளும் முஸ்லிம்கள் ஆட்சியை பிடிக்க முதல் தமிழ் பிரதேசத்துக்கு திரும்ப வேண்டும். ஐ,சீஸ் நாட்டுக்கு தமிழ் அகதிகள்  விரும்பி வருவார்கள் என்று கனவு காணாதீர்கள். ஐரோப்பிய நாடுகளை தமிழரை நாடுகடத்தி விட சொல்லி வற்புறுத்துவது  தான் தமிழரின் பலத்துடன் தமிழ் ஈழம் உருவாக ஒரே  வழி.

யூதரை ஹிட்லர் ஐரோப்பாவில் இருந்து அடித்து கலைக்க அவர்களுக்கு கனடா புகலிடம்  கொடுக்க  மறுத்ததால்  அவர்கள் பாலஸ்தீனத்தில் அடாத்தாக குடியேறி அதை தமது நாடாக்கினார்கள். ஹிட்லர் யூதரை அடித்து விரட்டி இருக்காவிடடால்  இன்று இசுரேல் என்ற ஒரு நாடு உருவாகி  இருக்காது. தமிழரையும் ஐரோப்பா, கனடாவில் இருந்து விரட்டி  விடாத வரை தமிழரின் தமிழ் ஈழம் உருவாகாது. அதற்குள்  இசுலாமிய தமிழ் குடியரசு உருவாகி  விட்டால்  என்ன செய்வீர்கள் ? ஐசிசின் தமிழீழ இசுலாமிய குடியரசு தான்.

எரித்திரியா எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்ததும், சோமாலிலாந்து சோமாலியாவில் இருந்து பிரிந்தததும் தென் சூடான் சூடானில் இருந்து பிரிந்ததும் இப்படி அடி தாளாமல் பிரிய விட்ட்தால் தான். 

இந்த விடயம் ஏன் உங்கள் மண்டைக்குள் ஏறவில்லை..??! 😁

Edited by Jude

3 hours ago, Jude said:

இன்னொரு திரியில் முட்டாள் முஸ்லிம்களை ஐசிஸ் என்று நம்ப வைத்த இந்தியா என்று எழுதினீர்கள், இப்ப உண்மையான ஐசிஸ் பற்றி எழுதுகிறீர்கள். கருத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதோ? 😂

யூதர்கள் உலகை ஆள முற்பட்டது ஒரு காரணம் ஹிட்லர் அவர்களை கொல்வதற்கு. ஹிட்லருக்கு முன்னமே யூதர்களை கொன்ற வரலாறு உள்ளது.

இஸ்ரேலை யூதர்களின் holy land ஆக்கும் திட்டம் யூதர்களிடம் முன்பிருந்தே இருந்தது. அதற்கு ஹிட்லர், உலகப்போர் 2 ஒரு சாட்டு மட்டுமே.

இப்ப உலகம் யூதர்களின் கையில் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

இன்னொரு திரியில் முட்டாள் முஸ்லிம்களை ஐசிஸ் என்று நம்ப வைத்த இந்தியா என்று எழுதினீர்கள், இப்ப உண்மையான ஐசிஸ் பற்றி எழுதுகிறீர்கள். கருத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதோ? 😂

எழுதிய கருத்தின் அடுத்த பாகத்தை எழுதி இருக்கிறேன். முட்டாள்  முஸ்லிம்களை இந்தியா பயன் படுத்தி இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் ஐ.சிசின் வளர்ச்சியை அது தூண்டி விடும். தமிழ் ஈழ போராட்டத்துக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. ஆனால் அது உண்மையில் தமிழ் ஈழம் பெற்று தர தந்த பயிற்சி இல்லை அல்லவா? ஆனால் விடுதலை புலிகள் அந்த ஆரம்ப உதவியில் இருந்து மாபெரும் படையை உருவாக்கி தமிழ் ஈழத்தை உருவாக்கினார்கள் இல்லையா? அப்படித் தான் இந்தியாவின்இந்த ஐ.சீஸ் முயற்சியும் தொடர போகிறது.. இவற்றுக்கு முதல் இந்தியா காலிஸ்தானுக்கும் இவ்வாறே செய்தது. பழைய வாய்ப்பாடு தான்.

புதிய தகவல்கள் கிடைக்கும் போதும், புதிய சிந்தனைகள் உருவாகும் போதும் கருத்துக்களில் மாற்றம் ஏற்படுவது எதிர்பார்க்கப் பட வேண்டியது. உண்மையில் எனது ஆரம்ப கருத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதலில் இதை பாகிஸ்தானின் உதவியுடன் கோத்தபாய செய்ததாகவே நான் கருதி இருந்தேன். இப்போது அதை நான் மாற்றிக் கொண்டு இருக்கிறேன்.

14 minutes ago, Jude said:

நன்றி. அத்திரியில் நான் இத்தாக்குதலின் பின்னணி “தனியே இந்தியா” என நீங்கள் கருதுவது தவறு என கூறியிருந்தேன்.

இத்தாக்குதலில் இந்தியாவின் றோ மட்டுமல்ல, பாக்கிஸ்தான், சவுதி, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கூட்டு வலையமைப்பு பின்னணி உள்ளது என்பதே என் கருத்து. இலங்கை அரசின் பங்கும் உள்ளது. தாக்குதல் நடக்க வசதியாக தான் மைத்திரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியில் சென்றார். பதில் பாதுகாப்பு அமைச்சரையும் நியமித்திருக்கவில்லை.

இலங்கையில் தாக்குதல் இடம்பெற்ற உடனேயே தமிழ் ஊடகங்களை விட பல வெளிநாட்டு ஊடகங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. தாக்குதலின் பின் பல நாட்டு புலனாய்வுத்துறை இலங்கைக்கு வந்தது. இவை காரணமில்லாமல் இல்லை.

இலங்கை அரசியலில் சர்வதேசம் மேலும் உட்புகும் முயற்சியாக இடம்பெற்ற ஒரு கூட்டு முயற்சியாகவே இத்தாக்குதலை நான் பார்க்கிறேன்.

இந்தியா, சீனா, அமெரிக்கா இடையில் பொருளாதாரப்போட்டி உள்ளது தான். ஆனால் அப்போட்டிகளை கடந்து சில முயற்சிகளை ஒற்றுமையாக செய்வார்கள். அதில் இதுவும் ஒன்று.

புலிகளுக்கு போராட்ட நியாயம் இருந்து. ஆனால் இந்தியா புலிகளுக்கு பயிற்சி கொடுத்தது வேறு நோக்கில் தான்.

இஸ்லாமியர்களை அடிப்படைவாதத்தை கூறி மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக்கும் செயற்பாடு இலங்கைக்கும் வந்து விட்டது. இதை தேவைப்படும் போதெல்லாம் தூண்டி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Lara said:

இலங்கை அரசியலில் சர்வதேசம் மேலும் உட்புகும் முயற்சியாக இடம்பெற்ற ஒரு கூட்டு முயற்சியாகவே இத்தாக்குதலை நான் பார்க்கிறேன்.

இந்தியா, சீனா, அமெரிக்கா இடையில் பொருளாதாரப்போட்டி உள்ளது தான். ஆனால் அப்போட்டிகளை கடந்து சில முயற்சிகளை ஒற்றுமையாக செய்வார்கள். அதில் இதுவும் ஒன்று.

புவிசார் அரசியல் போட்டியில் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள நாடுகள் பற்றியே பல ஆய்வாளரும் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசியலில் இந்த நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து உள்புகுவதற்கு இவ்வாறன பயங்கரவாதத்தை ஒற்றுமையாக மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன என்று விளங்கவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீர்களா?

15 hours ago, Jude said:

புவிசார் அரசியல் போட்டியில் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருந்தாலும் அந்நாடுகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்தோர் உட்பட சிலர் தமக்குள் தொடர்பாடலை பேணி வருவர்.

இவர்கள் இலங்கை அரசியலில் ஏற்கனவே தாக்கம் செலுத்தினாலும் இத்தாக்குதலின் பின் அரசியல், இராணுவ, உளவு பிரிவு சார்ந்து அவர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். (பின் பொருளாதார போட்டியில் அடிபடுவார்கள்)

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகள் தாமே ஆயுதக்குழுக்களை உருவாக்கி அதற்கு பயிற்சி வழங்கி அதை உபயோகித்து பின் அழிக்கிறோம் என்ற பெயரில் அந்நாடுகளில் காலூன்றுவார்கள்.

இலங்கையில் தாக்குதலை நடத்தி விட்டு இனி அதைக்காரணமாக காட்டி தமது நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றொன்றாக உள்நுழைவார்கள். இலங்கை அரசும் விட்டுக்கொடுக்கும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இத்தாக்குதலில் பங்குள்ளது. ஆனால் சாதாரண முஸ்லிம்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரம் இடம்பெற்ற தாக்குதல் என்பதால் தேர்தல் பற்றியும் ஏதும் பிளான் ஏற்கனவே போட்டிருக்கக்கூடும்.

Edited by Lara

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நீர்கொழும்பில் இருந்து வவுனியா - பூந்தோட்டம் முகாமுக்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளில் ஒரு குடும்பத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், தனது பொறுப்பில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று (19)  அழைத்து வந்துள்ளார்.

தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே, அவர் அந்தக்  குடும்பத்தைப் பொறுபு்பேற்று, தனது  பொறுப்பில் தங்க வைத்துள்ளார்.

இது குறித்து, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ரட்ணஜீவன் கூல், இந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் அந்தக் குடும்பத்தை, ஐ. நா பொறுப்பெடுக்கும் வரை, தனது பொறுப்பில் தங்க வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், சபாநாயகர், பிரதி பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.