Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்

 

பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

atha.jpg

அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள். இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள்.

பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும்.

பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை கஷ்ட்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன்?

இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர்.

மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும் வியாபாரம் செய்வதற்குமான அமைச்சு. எனவே அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு பயன்படாத அமைச்சு பதவியை ரிஷாட் பதியுதீன் துறக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/56572

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாள் எடுக்க வெளிக்கிட்டால் ... உங்கள் சமூகம் மட்டுமல்ல.... மசூதிகளும்  கூட மிஞ்சாது என்பது தான் இப்போதுள்ள நிலைமை..,!

4 hours ago, கிருபன் said:

அதாவுல்லாஹ்

எல்லாரும் இந்தாளை மறந்திட்டினம்!
இவரும் ஹிஸ்புள்ளா, பதியுதீன் ரேஞ்சில பயங்கரவாத ஈடுபாடுடையவர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

எல்லாரும் இந்தாளை மறந்திட்டினம்!
இவரும் ஹிஸ்புள்ளா, பதியுதீன் ரேஞ்சில பயங்கரவாத ஈடுபாடுடையவர்!

மூஞ்சீல தெரியுதே...😳🤤

3 hours ago, Rajesh said:

எல்லாரும் இந்தாளை மறந்திட்டினம்!
இவரும் ஹிஸ்புள்ளா, பதியுதீன் ரேஞ்சில பயங்கரவாத ஈடுபாடுடையவர்!

அவர்களை விட மேலும்  ஒரு மடங்கு மோசமான தமிழின வெறுப்பாளர்.

இப்பிடி சொல்றது இப்ப ஒரு ஸ்டைல் ஆகிற்று போல. ஆளாளுக்கு இப்பிடி சொல்லினம். புல்லு வெட்ட வாள் வைச்சிருந்தேன், பெண்களை காக்க வாள் வைச்சிருந்தேன், தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வாள் வச்சிருந்தேன்.....etc

என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் சிங்களவர் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான விதை விதை பட்டுட்டு. இனி அதை சுலபமா போக்க ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரைப்பற்று ஜிகாத் காடைகுழுவின் தளபதி அல்லவா? எப்படி மறக்க முடியும்.

ஆனால் இவர் சொல்லுவதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

அரச பாதுகாப்புடன் சிங்கள காடைக்கூட்டம் தாக்கும் போது, திகன, தர்காடவுனில் இப்படியான எதிர் தற்காப்பு தாக்குதல்களை முஸ்லீம்கள் நடத்தினார்கள். 

இலங்கை அரசு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை இனி சிறுகச்சிறுக அழிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

இலங்கை அரசு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை இனி சிறுகச்சிறுக அழிக்கும்.

கேட்க  நாதியற்றவர்களல்ல.

ஒரு  அளவுக்குத்தான்  அனுமதிப்பார்கள்

அதன்  பின்னர் அழுத்தங்கள்  வரும்

15 minutes ago, விசுகு said:

கேட்க  நாதியற்றவர்களல்ல.

ஒரு  அளவுக்குத்தான்  அனுமதிப்பார்கள்

அதன்  பின்னர் அழுத்தங்கள்  வரும்

சவுதி போன்ற நாடுகள் அடிப்படைவாதிகளை உருவாக்க உதவி செய்யுமளவுக்கு, அவர்களை காப்பதில் அக்கறை செலுத்த மாட்டார்கள்.

முஸ்லிம் தலைமைகளுக்கு மைத்திரி பிரச்சினை கொடுக்க மாட்டார். இப்ப அவர் செய்யிறது சிங்கள மக்களை கவர செய்யும் வெறும் அரசியல்.

சாதாரண முஸ்லிம்களை இனி இலங்கை அரசு சிறுக சிறுக அழிக்கும். அதற்கு அதில் நல்ல அனுபவம் இருக்கு.

19 hours ago, கிருபன் said:

தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்

ஏன் வாள்கள் மட்டும் கூட்டு சதிகார சிங்கள-பௌத்த அரசிடம் அனுமதி பெற்று துப்பாக்கிகளையும் வைச்சிருக்கலாமே?
முஸ்லீம் பயங்கரவாதிகளை அமைச்சர்களாகவும் ஆளுநர்களாகவும் வைத்திருக்கும் கூட்டுச் சதிகார சிங்கள-பௌத்த அரசு அதற்கும் அனுமதி தந்திருக்கும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.