Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாடத்திட்டத்தில், 38 ஆண்டுகள் இஸ்லாமியவாத தீவிரவாத கொள்கைகள் கற்பிக்கப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
islam.jpg?zoom=0.9024999886751175&resize

இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1980ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் “இஸ்லாமிய தண்டனைகள் ஒழுங்காக அமுல் நடத்தப்படுமாயின் உலகில் குற்றங்கள் அமைவது மிக அரிதாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை” என்று கூறப்பட்டு அதன் கீழ் உள்ள ‘குற்றங்களும் தண்டனைகளும்’ என்று தலைப்பிடப்பட்ட பட்டியல் ஒன்றில் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆரய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக முன்வந்து சாட்சியமளித்த, ரிஷ்வின் இஸ்மத் என்பவரால் இந்த விடயம் வெளியிடப்பட்டது.

இஸ்லாமிய தண்டனைகள்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரிஷ்வின் இஸ்மத், பிறப்பிலிருந்தே முஸ்லிம் என்றதுடன், அவர் 2013ஆம் ஆண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார். எந்தவொரு மதத்தையும் தற்போது தான் பின்பற்றாத பின்னணியில் தன்னை கொலை செய்ய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரிஷ்வின் இஸ்மத்திற்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் மரண அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகள்

‘எச்சரிக்கைகளின் பின் கொலை’

‘ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு தண்டனையாக எச்சரிக்கைகளின் பின் கொலை என்பது தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரித்தத் என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்பது. ஒருவர் இஸ்லாத்தில் இருந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு சென்று விடுவதை ‘ரித்தத்” என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் புதிய பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடபுத்தகத்திலும் சில பாரதூரமாக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு ‘மரண தண்டனை’ என்பதற்கு பதிலாக ‘கொலை’ என பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குரானில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், அது அதீஸ்-இல் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள போதகரான யூசுப் அல் கர்தாரி என்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரிஷ்வின் இஸ்மத் Image captionரிஷ்வின் இஸ்மத்

“தற்கொலை” என்பதற்கு பதிலாக “தற்கொடை”

அத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் “தற்கொலை” என்பதற்கு பதிலாக “தற்கொடை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை ஆராய்ந்த தெரிவுக்குழு உறுப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்டுரையின் ஊடாக வார்த்தைகளினால் விளையாடியுள்ளனர் என கூறியிருந்தார். ரிஷ்வின் இஸ்மத்திடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு ரகசிய விசாரணைகளையும் நடத்தியிருந்தது.

இலங்கை கல்வி அமைச்சர் பதில்

அகில விராஜ் காரியவசம் படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஅகில விராஜ் காரியவசம்

இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பரப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்படும் என்ற விதத்தில், பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக பிபிசி தமிழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

BBC

http://globaltamilnews.net/2019/125065/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

38 minutes ago, Paanch said:

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்ட விபரங்களை, செவி வழி கேள்விப்பட்டவைகளை அடிப்படையாக வைத்து பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டதே  மகாவம்சம். தொகுக்கும் போது பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் புகுத்தி தமக்கு சார்பாக எழுதியுள்ளார்கள். பிக்குகள் அதை தமக்கு சார்பாக தமிழர்களுக்கு எதிராக இன்னும் மாற்றியமைப்பார்களே தவிர தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைக்க மாட்டார்கள். 😊

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

6 minutes ago, Lara said:

பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்ட விபரங்களை, செவி வழி கேள்விப்பட்டவைகளை அடிப்படையாக வைத்து பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டதே  மகாவம்சம். தொகுக்கும் போது பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் புகுத்தி தமக்கு சார்பாக எழுதியுள்ளார்கள். பிக்குகள் அதை தமக்கு சார்பாக தமிழர்களுக்கு எதிராக இன்னும் மாற்றியமைப்பார்களே தவிர தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைக்க மாட்டார்கள். 😊

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

Edited by Jude

2 hours ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

நான் வேறு ஏதும் காப்பியத்தை படித்து பார்த்து தான் மகாவம்சத்தை உண்மைக்கு புறம்பானது என சொல்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? 😂

ஒரு காப்பியத்தையும் வைத்து நான் எனது கருத்தை எழுதவில்லை. மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்றும் நான் கூறவில்லை. பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் உள்ளடக்கி எழுதியுள்ளார்கள் என்றே எழுதியுள்ளேன். தமிழ் விளங்காவிட்டால் திரும்ப வாசித்துப்பாருங்கள்.

சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, என்பது போன்ற கட்டுக்கதைகளை நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். எனக்கு அந்த அவசியமில்லை. 😎 சிங்கபாகுவின் மகன் தானாம் விஜயன்.

பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை, எனவே இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு தோன்றுகிறது என்பதெல்லாம் உண்மையா இட்டுக்கட்டியதா? உண்மையான புத்தரின் போதனைகள் வேறு.

விஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வந்து தான் இலங்கையில் சிங்கள இனம் உருவானது. அதற்கு முன் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தார்கள். இதற்கான ஆதாரங்களை தருவதும் மகாவம்சம்.

இந்தியாவில் அசோகர் பௌத்த சமயத்துக்கு மாறி ஆசியா முழுவதும் பௌத்தத்தை பரப்ப முயற்சித்து அதில் ஒரு பகுதியாக இலங்கைக்கும் மகிந்தன், சங்கமித்தையை அனுப்பி பௌத்தத்தை பரப்பினார்.

இப்படித்தான் சிங்கள பௌத்தம் உருவானது. அப்படியிருக்க இலங்கையை சிங்கள பௌத்த நாடு போலும் தமிழர்களை அந்நியர்கள் போலும் காட்டி தமிழின விரோத கருத்துகளை முன்வைப்பதும் பௌத்த தீவிரவாத கருத்துகளை முன்வைப்பதும் உங்கள் போன்றோருக்கு சில வேளை சரியாக படலாம்.

சிங்கள ஆய்வாளர்களே மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக கருத முடியாது என்கிறார்கள், அதே நேரம் அதை முற்று முழுதாக புறக்கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். 😎

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

நீங்கள்....எதற்க்காக....எப்போதும் சிங்களத்துக்கு ....வக்காலத்து....வாங்குகிறீர்களோ....தெரியாது!

மகாவம்சத்தை....எழுதுவதற்காகப் பணமொதுக்கி....அதை ஆரம்பித்து வைத்தவனும்....எல்லாளன் எனும்...தமிழ் மன்னன் தான்!

எந்தப் புத்த விகாரையையும்....சோழர்கள்...உடைத்தாகவோ...அல்லது அழித்ததாகவோ...வரலாறு இல்லை!

அப்படியெனில்...கந்தரோடையில்...எதுவும் மிச்சமிருந்திருக்காது...!

நெடுந்தீவில்....வெடியரசன் கோட்டை என அழைக்கப்படுவதும்...ஒரு விகாரையே!

அது இன்னும் உள்ளதே....!

நயினா தீவு....விகாரையை....அழித்ததற்கான....சான்று ஒன்றையாவது தாருங்கள்...!

தமிழர்களின் பெளத்தம்....சிங்களவர்கள்.....அனுசரிக்கும் தேரவாத பெளத்தம் அல்ல...! அது வித்தியாசமானது! 

அது உண்மையான பெளத்தம்...! ஜைன் மதத்துக்கு மிகவும் நெருங்கியது..! 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Lara said:

ஒரு காப்பியத்தையும் வைத்து நான் எனது கருத்தை எழுதவில்லை. மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்றும் நான் கூறவில்லை. 

 மகாவம்சம் உண்மைக்கு புறம்பானதல்ல என்றால் உண்மையானது என்கிறீர்களா?

43 minutes ago, Lara said:

 பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் உள்ளடக்கி எழுதியுள்ளார்கள் என்றே எழுதியுள்ளேன். 

அத்தகைய கற்பனைகள் எல்லா காப்பியங்களிலும் உள்ளன. மகா பாரதம், இராமாயணம், மணிமேகலை, பைபிள் எல்லாவற்றிலுமே நோக்கம் சார்ந்த கற்பனைகள் கலந்துள்ளன. மகாவம்சம் அதற்கு விதிவிலக்கல்ல. உங்களுக்கு மகாவம்சத்தில் உள்ள கற்பனைகள் மட்டும் ஏன் குறிப்பிடத்தக்கதாக தெரிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புங்கையூரன் said:

நீங்கள்....எதற்க்காக....எப்போதும் சிங்களத்துக்கு ....வக்காலத்து....வாங்குகிறீர்களோ....தெரியாது!

மகாவம்சத்தை....எழுதுவதற்காகப் பணமொதுக்கி....அதை ஆரம்பித்து வைத்தவனும்....எல்லாளன் எனும்...தமிழ் மன்னன் தான்!

எந்தப் புத்த விகாரையையும்....சோழர்கள்...உடைத்தாகவோ...அல்லது அழித்ததாகவோ...வரலாறு இல்லை!

அப்படியெனில்...கந்தரோடையில்...எதுவும் மிச்சமிருந்திருக்காது...!

நெடுந்தீவில்....வெடியரசன் கோட்டை என அழைக்கப்படுவதும்...ஒரு விகாரையே!

அது இன்னும் உள்ளதே....!

நயினா தீவு....விகாரையை....அழித்ததற்கான....சான்று ஒன்றையாவது தாருங்கள்...!

தமிழர்களின் பெளத்தம்....சிங்களவர்கள்.....அனுசரிக்கும் தேரவாத பெளத்தம் அல்ல...! அது வித்தியாசமானது! 

அது உண்மையான பெளத்தம்...! ஜைன் மதத்துக்கு மிகவும் நெருங்கியது..! 

இவை எல்லாம் உங்கள் கற்பனைகளா அல்லது ஆதாரங்கள் காட்டுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Jude said:

இவை எல்லாம் உங்கள் கற்பனைகளா அல்லது ஆதாரங்கள் காட்டுவீர்களா?

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

3 hours ago, Jude said:

 மகாவம்சம் உண்மைக்கு புறம்பானதல்ல என்றால் உண்மையானது என்கிறீர்களா?

அத்தகைய கற்பனைகள் எல்லா காப்பியங்களிலும் உள்ளன. மகா பாரதம், இராமாயணம், மணிமேகலை, பைபிள் எல்லாவற்றிலுமே நோக்கம் சார்ந்த கற்பனைகள் கலந்துள்ளன. மகாவம்சம் அதற்கு விதிவிலக்கல்ல. உங்களுக்கு மகாவம்சத்தில் உள்ள கற்பனைகள் மட்டும் ஏன் குறிப்பிடத்தக்கதாக தெரிகிறது?

உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசிக்குமாறு கூறினேன். அதுவும் விளங்கவில்லை என்றால் என்ன செய்ய?

சில வரலாற்று சம்பவங்களுடன் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துகளுடன் தமிழின எதிர்ப்பு கருத்தையும் உள்ளடக்கி வாசிக்கும் சிங்களவர்களையும் சிங்கள பௌத்த மனப்பான்மையில் இருக்க செய்து தமிழர்களை அழிக்க துணை போக செய்வதற்கான புத்தகம் தான் மகாவம்சம்.

புத்தர் இயக்கர்களை அகற்றி பௌத்த மதத்தை தோற்றுவிக்க நினைப்பது போல் காட்டுவதும் பௌத்தத்துக்கான போரை நடத்துவது போல் காட்டுவதும் சைவ கோவில்களை, சைவ சின்னங்களை அழித்து பௌத்த தூபிகள் அமைப்பதை நியாயப்படுத்துவதும் இன்னும் பலவும் சிங்கள பௌத்த மக்களையும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளர்களாக்குவதற்காக எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டவை போல் தான் இன்று இலங்கையில் நடக்கிறது.

சிங்களவர்கள் இலங்கையில் உருவாக முன்னர் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக இருந்தும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு போல் காட்டி தமிழர்களை அந்நியர்கள் போல் காட்டியதை பற்றி நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள்.

ஏனைய காப்பியங்களை இங்கே ஏன் இழுக்கிறீர்கள். ஏனைய காப்பியங்கள் கற்பனைகளற்ற வரலாறு என நான் எங்கும் கூறவில்லையே. 

Edited by Lara

Quote

      11 hours ago, பிழம்பு said:

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இதுநாள்வரை கண்ணை மூடிக்கொண்டிருந்தார்களா?

மகாவம்சம் என்பது தங்களுக்கு ஏற்றவிதமாக சில திரிபுகளுடன்  அவர்களால் எழுதப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான செயல் இது, சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகத்தில் மதம் மாறுபவர்களை கொல்லவேண்டும் என்று கருத்தினை இட்டவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். அல்லாதான் அவர்களை தண்டிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Lara said:

உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசிக்குமாறு கூறினேன். அதுவும் விளங்கவில்லை என்றால் என்ன செய்ய?

சில வரலாற்று சம்பவங்களுடன் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துகளுடன் தமிழின எதிர்ப்பு கருத்தையும் உள்ளடக்கி வாசிக்கும் சிங்களவர்களையும் சிங்கள பௌத்த மனப்பான்மையில் இருக்க செய்து தமிழர்களை அழிக்க துணை போக செய்வதற்கான புத்தகம் தான் மகாவம்சம்.

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

1 hour ago, புங்கையூரன் said:

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

இங்கே எல்லாம் பௌத்தர்களா இருந்தார்கள்? அவர்கள் சிங்களவர்களா? நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் பௌத்தமா? இந்த அருஞ்செல்வமான பௌத்தத்தை விட்டு எம் மக்களை எல்லாம் இந்துக்கள் ஆக்கிய அந்த கொடியவர்கள் யார்?

51 minutes ago, Jude said:

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

நான் எழுதிய கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாமல் நழுவுவதற்கு இப்படியான கேள்விகளை தான் கேட்க வேண்டும். 😂

Edited by Lara

5 hours ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

பச்சைப் பொய்!
அது மதமாற்றக் கும்பல்களால் புனையப்பட்ட கட்டுக் கதை!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Jude said:

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

இங்கே எல்லாம் பௌத்தர்களா இருந்தார்கள்? அவர்கள் சிங்களவர்களா? நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் பௌத்தமா? இந்த அருஞ்செல்வமான பௌத்தத்தை விட்டு எம் மக்களை எல்லாம் இந்துக்கள் ஆக்கிய அந்த கொடியவர்கள் யார்?

ஆரப்பு சொன்னது...நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று...?

சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதமே.....சைவம் என அழைக்கப்படும்...!

இந்து மதம் என்பது....சைவம்...சாக்தம், வைணவம், காணபத்தியம், கெளமாரம், காபாலம், செளரம்  எனப் பல மதங்களின் கலவை..!

இந்து மதம் என்று தனியான மதம் ஒன்று இல்லை!

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களில்....நாலாவது  மார்க்கமே.....புத்த மதத்தின் சாரம்!

இலங்கையில்....இப்போது அனுஸ்டிக்கப் படுவது.....புத்த மதமேயல்ல!

புத்தம் இருந்திருந்தால்....முள்ளி வாய்க்கால்....நிகழ்ந்தே இருக்காது..!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

எங்களுக்கு அப்பிடி புத்தகங்களெல்லாம் வாசிக்க ஏலாது பாருங்கோ! எப்ப பார்த்தாலும் சிங்களவனுக்கு செம்பு தூக்கிறது மட்டும்தான் எங்கட வேலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.