Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

நேரத்  தட்டுப்பாட்டால்  எழுத பின் போட்ட என் மைண்ட் வொய்ஸ் எழுத்தில் போட்டிருக்கும் கோசானுக்கு நன்றிகள் . 

ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு  2009  இல் ஆக  குறைந்தது  50 வருடமாவது பின்னுக்கு தள்ளிப் போய் விட்டது என்பது எனது எண்ணப்பாடு . 

எதோ ஒரு வகையில் (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ) இதில் பங்காளிகளாக இருந்த எமது தலைமுறைக்கு அந்த தீர்வு காலம் வரை செய்யவேண்டிய செயல்கள் உண்டு , அதை எவ்வாறு செய்யப்போகிறோம் என்பதை பொறுத்து அந்த 50 வருடம் இரண்டு பக்கமும் இழுபடலாம் .

எம்பவரிங் அவர்  சொசைட்டி ( Empowering the Society  ) என்பது நடைமுறைச் சாத்தியமான - ஒவ்வொருவராலும் நடைமுறைப் படுத்தக் கூடிய - ஒன்று. 

பின்னால் இணைத்திருக்கும் அன்பர் மாதிரியானவர்களை உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தன்னகத்தே கொண்டது

Allirajah Subaskaran

2 March 1972 (age 47)

Sri Lanka

Occupation

Chairman, Lycamobile

Net worth

£475 million(Sunday Times Rich List, 2014)[1]

கேட்டது  வட்டுக்கோட்டைக்கு போகும் வழி பற்றி எதாவது யோசனை இருக்க என்று , துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று தொடர்ந்து  பதில் வந்தாலும்  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ( அப்பாவித் தனமான😑 ) கேள்விகள் தொடரும்   ……   

  • Replies 112
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்த மக்களின் துயரங்களுக்காக பிரச்சனைகளுக்காக உளப்பூர்வமான செயற்பாடு எதனையும் செய்யாதிருப்பதே மக்களின் கோபத்திற்கு காரணம்.

அரசிற்கு ஆதரவு கொடுக்கும்போது தெளிவான வழி வரைபடம் ஏதுமின்றி கண்ணை மூடியபடி ஆதரவளித்தமை, குறைந்த பட்சம் சில கால எல்லைகளை வகுத்து இதற்குள் இந்த இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரவேண்டும் இல்லாவிடில் ஆதரவு விலக்கி கொள்ளப்படும் என்று தைரியமாக செயற்படாமை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

மன்னிக்க வேண்டும் சாமான்யன்! ஒரு முக்கியமான கேள்வியை அப்பாவித் தனமாகக் கேட்டு விட்ட உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்ற காரணத்தை வைத்தே சிரிப்புக் குறி இட்டேன்! மேலே இருக்கும் பதில்கள், குறிப்பாக நுணா இணைத்திருக்கும் செய்திகளில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் தீர்வு பற்றிப் பேசுவதில் யாழில் இருப்போர் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் கேள்வியின் நாயகர்கள் மட்டுமே, பதில் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! துரோகிப் பட்டம் Trump University degree போல உடனே கிடைக்கும்! 

4 hours ago, goshan_che said:

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

1. சம்பந்தன் ஆயுதம் ஏந்த வேண்டும் எண்டே சொன்னவர். அல்லது ஆயுதம் ஏந்துவோம் எண்டே சொன்னவர். ஆயுதம் ஏந்துவதை பற்றி “சிந்திக்க” வேண்டி “வரலாம்” என்றுதான் சொன்னவர். அதாவது நாங்கள் சிலசமயம் சிந்திப்போமே, நயந்தாராவுடன் ஹனிமூன் போக வேண்டும், தமன்னாவுடன் தள்ளாட வேண்டும், அப்படி, “சிந்திக்க வேண்டி வரலாம்” சிந்திப்போம் கூட இல்லை😂

2. சம்பந்தனுக்குகோ வேறு எந்த அரசியல் வாதிக்கோ, எமக்கான உரிமையை எப்படி பெறுவது என்ற திட்டம், மூலோபாயம் கொஞ்சமும் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் they are clueless. ஆனால் அதை அப்படியே வெளியே சொல்ல முடியுமே? அதனால காலத்துக்கு காலம் இப்படி புருடா விடுறது. தேர்தல் நெருங்க, நெருங்க சுருதி கூடும். இன்னும் சில மாதங்களில் மனிதர் பிரபாகரன் பற்றி உயர்வுநவிழ்சியாக சொல்லுவார் பாருங்க்கோ.

3. ஆனால் இது சம்பந்தர் போல அரசியல்வாதிக்கு மட்டும் இல்லை, இங்கே யாழில் கருத்தெழுதும் நாம் யாவரும் கூட we are all clueless as to how to realize  our aims. None of us have a workable strategy or even any short term tactics that would get us closer to the solution we want. ஆனால் அதை ஒத்து கொள்ளும் பக்குவம் கருத்தாளருக்கும் இல்லை. அதனால்தான், சுமந்திரன் போய் இந்தியாவிடம் கேட்கலாமே, சர்வதேசத்திடம் கேட்கலாமே என சாத்தியமிலாதவற்ரை எழுதுகிறோம். அல்லது 10 வருடங்களுக்கு முன் இறந்து போன பிரபாகரன் 25 வருடத்துக்கு முன் சொன்ன விடயத்தை இப்போ வெட்டி ஒட்டி, இதைதானே நாம்ன்கேட்கிரோம் என்பதாக எழுதுவது.

சம்சும் போய் கேட்டா இந்தியா சொல்லப்போகும் ஒரே பதில் “ஆகட்டும் பார்கலாம்”.

இலங்கையும் இந்தியாவும் ஏதோ வடகிழக்கு இணைந்த தீர்வை லாபாய், லாபாய் என கூவி விப்பதுபோலவும், சம்சும் அதை காலால் தள்ளி விடுவதுபோலவும் போகுது கதை 😂.

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

இருக்காதா பின்ன ...
நாங்க கசபோக்கிலி அரசியல்  செய்த  பத்துவருஷத்தை புலிகளின் தலையில் கட்டி அவர்களை காரணகர்த்தாக்கள் ஆக்கிவிட்டு அடுத்துவரும் நரேந்திரனை தேடுவதில் பிசி பாருங்கோ. 
இருக்கவே இருக்கிறார்கள் புலிகள் இன்னொரு இருபது வருஷம் ஓட்ட மாட்டோமா என்ன...
இதில காமெடி என்னவென்றால் கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தலையே  செய்ய முடியாத வக்கற்ற போக்கிலிகள் நாங்க எடுத்துவிட்ட ஆண்டுக்கொரு தீர்வு திட்டத்தை High intellectuals ஏ நம்பித்தொலைத்தது தான் சோகத்திலும் சோகம். நாங்க தான் Intellectuals ஆச்சே இனி அடிப்போம் கதை பாருங்கள் Clueless , own realm, workable strategy ,Short term tactics, renewable energy , partical acceleration வாயில் வருவதையெலாம் எடுத்து விடுவோம் 
காசா பணமா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

சம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம். 
புலிகளை அழித்தால் அரசியல் தீர்வு என்ற வாக்குறுதியை சம்பந்தனுக்கு ராஜபக்ச வழங்கியுள்ளார். 
அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் மீதான மிகக் கொடூரமான அந்த யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார் 
சம்பந்தர். யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக சர்வதேச சமூகத்திடம் ஸ்ரீலங்கா அரசு தீர்வைத்தரும் என்ற நம்பிக்கை இருப்பதாபவும் பிரசாரம் செய்து போருக்கான ஆதரவை திரட்டிக் கொடுத்து

மகிந்தராஜபக்சேவுடனும் கோட்டாபய ராஜபக்சேவுடனும் இணைந்து சொந்த இனத்தை அழிக்கும் இனவழிப்பு யுத்தத்தை அரங்கேற்றியுள்ளார்.
-ஈழப்பிரியன் பாலன்.-

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நம்பிக்கையின் படி, சம்பந்தர் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி இவ்வாறு சிறு பிள்ளைதனமான கருத்துக்களை அவர் கூற மாட்டார். அவர் வேறு ஏது அர்த்தத்தில் ஒரு வேளை நகைச்சிவையாக கூட கூறியிருக்கலாம். அதை இந்த பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு மிகைப்படுத்தி எழுதியுள்ளார்கள்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

65927486_841495689540936_881347733183528960_n.jpg?_nc_cat=108&_nc_oc=AQmAWGSMftC_AOJ4FbjV69KhLemAlNd5m-A67rdHEv-hS2v4qEYodqoUoc_o4jDPzsI&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3411c61f8efb6ff578e6e7fdb5c8194c&oe=5DB93EF0

முதல் செய்தி 2015 இல் தேர்தக் வெற்றியின் பின்னர்... காணுமிடமெல்லாம் 
புலி நீக்க அரசியலை முன்னெடுக்க முயன்றபோது, சொன்ன கதை )
காந்தி பிறந்த தின வைபவத்தின்போது , யாழ் இந்துக்கல்லூரியில் தெரிவித்தது.

இரண்டாவது : நான்கு வருடம் அரசுக்கு முண்டு கொடுத்து , மக்களிடம் அம்பலப்பட்ட பின்னர், 
மீண்டும் தேர்தல், வரும் நிலையில்.. புலிகளினை போற்றி பாடத் தொடங்கியபோது .
டபிழரசு கட்சி தேசிய மாநாடு 2019 ஜூன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்காதா பின்ன ...
நாங்க கசபோக்கிலி அரசியல்  செய்த  பத்துவருஷத்தை புலிகளின் தலையில் கட்டி அவர்களை காரணகர்த்தாக்கள் ஆக்கிவிட்டு அடுத்துவரும் நரேந்திரனை தேடுவதில் பிசி பாருங்கோ. 
இருக்கவே இருக்கிறார்கள் புலிகள் இன்னொரு இருபது வருஷம் ஓட்ட மாட்டோமா என்ன...
இதில காமெடி என்னவென்றால் கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தலையே  செய்ய முடியாத வக்கற்ற போக்கிலிகள் நாங்க எடுத்துவிட்ட ஆண்டுக்கொரு தீர்வு திட்டத்தை High intellectuals ஏ நம்பித்தொலைத்தது தான் சோகத்திலும் சோகம். நாங்க தான் Intellectuals ஆச்சே இனி அடிப்போம் கதை பாருங்கள் Clueless , own realm, workable strategy ,Short term tactics, renewable energy , partical acceleration வாயில் வருவதையெலாம் எடுத்து விடுவோம் 
காசா பணமா 

நாம் clueless என்பதை ஒத்துகொள்ள கொஞ்சம் அறிவும் (கல்வி மட்டுமல்ல) நிறைய   கொமென் ஸென்சும் தேவைப்படும்.

இவை இல்லாதவிடத்து வான் கோழி போல தலையை மணலுக்குள் புதைத்த படி, சக கருத்தாளர்களை திட்டி எழுதி விட்டு, கடந்து போக வேண்டியதுதான்.

சாமான்யனுக்கு அர்ச்சனை இருக்குன்னு ஜஸ்டின் எழுதினார்? ஆனா எங்க அடிச்சாலும் சிலருக்கு கோசான் மீதுதான் நெறி கட்டும் போல 😂.

ஓட்டுங்க ராஜா, ஓட்டுங்க- காசா, பணமா.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தாங்கள் Clueless என்பதை Intellectuals ஒத்துக்கொண்டால் போதும், தாயகமக்கள் கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவந்த சும்முக்கு வெளுத்த வெளுவையிலேயே தெரிந்திருக்கும் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்று  , அவர்கள் தெளிவாக தான் இருந்தார்கள் பசிக்கு பாண்துண்டு கேட்ட அவர்களை சாப்பிட்டால்  கோழி பிரியாணி தான் சாப்பிடவேண்டும் வாங்கித்தாறன் வா என்று கூட்டிக்கொண்டு போய் பத்துவருஷம் கூத்தாடி இருந்த பாண்துண்டுக்கும் வக்கத்தவர்களாக்கிய கூத்தமைப்பும் அதற்க்கு ஒத்தூதியவர்களும் தான் இந்த Cluelessness  இற்கு சொந்தக்காரர்கள், மக்களையே மாக்கள் ஆக்கி சும்மின் சம்ஷட்டிக்கு சும்முக்கே தெரியாத விளக்கம் கொடுத்த ஆக்கள் எலுவா...? இதுக்கு பிறகு தான் சும்முக்கே தெரிந்தது அட இப்படியெல்லாம் இதை விளக்கலாமா என்று  , மிக விரைவில் தாயக மக்கள் தமக்கென்ன தேவை என்பதை தாமாகவே கண்டுகொள்ளவார்கள் அந்த தெளிவு அவர்களுக்கும் நம்பிக்கை எங்களுக்கும் வந்துவிட்டது.
இனி இந்த intellectual அரசியல் அவியலாளர்கள் தங்கள் பாட்டில் அவிக்க வேண்டியது தான் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

மேலே நான் எழுதியவற்றை வாசிப்பது மட்டுமின்றி கிரகிக்கவும் இயன்றோருக்கு பின்வருவன விளங்கும்.

1. இங்கே யாரும் நானறிய தம்மை இண்டெலெக்சுவல் என்று பீற்றியதில்லை. சிலருக்கு தமது தாழ்வு மனச்சிக்கலால் இன்னொருவரை பார்க்க இண்டெலெக்சுவல் போல தெரிந்தால் அதுக்கு மற்றயவர்கள் பொறுப்பல்ல😂

2. நான் தனிப்பட்டு எப்போதுமே இந்த விடயத்தில் clueless தான். 2009 வரை புலிகளின் அணுகுமுறை சரிவருமாப் போல தோன்றவில்லை, ஆனாலும் மாற்று என்ன என்ற தெளிவு எனக்கு இருக்கவில்லை. ஆகவே 2009 வரையும் நான் clueless.

2009-2012 வரை முழு விரக்தி நிலையில் இருந்த படியால் இதை பற்றி சிந்திக்கவே இல்லை. 2012, சீவியின் வருகையோடு, சம் சும் நடவடிக்கைகளும் நம்பிக்கை தர, கொஞ்சம் க்ளூ கிடைப்பதாக தெரிந்தது, ஆனால் 2015 இல் இருந்து இந்த 3 வரின் செயல்பாட்டை பார்த்து, இப்போ cluelessness இன் உச்ச கட்டம். ஆகவே நான் clueless என்பதில் எனக்கு ஒரு குழப்பமும் இல்லை.

3. தாயக மக்கள் தாமாக கண்டு கொல்வார்கள், மாடு கொல்வார்கள் என்பதெல்லாம் சுத்த அலப்பறை. விடுதலை புலிகளின் ராசதந்திரத்தையே எதிர்கொண்ட சிங்கள ராசதந்திரத்தை, மக்கள் ஒரு நிறுவன மயப்பட்ட தலைமை இலாமல் எதிர்தாடுவார்கள், வெல்லுவார்கள் என்பது வெறும் காகித படிப்பு படித்து விட்டு, ஊரில் நாலன்ஞ்சு பேரை வச்சு கலர் காட்டும் பேர்வழிகளின் அபத்த பிதற்றல்.

4. கல்முனை விவகாரத்தில் மக்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஒரு பிக்குவால், அதுவும் ஞானசாரர் போன்ற, மங்களராமய சுமனே போன்ற பச்சை இனவாதிகளால்தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கூட கிடைக்கும் என்பதும், தமிழ் தலைவர்களை தமிழர்களை வைத்தே விரட்டி அடிப்பதும் (குறிப்பாக மனோவை விரட்டியமை) ஈற்றில் இந்த மக்களை தலைமை அற்றவர்களாக்கி, அடையாளம் அற்றவர்களாக்கி, பிக்குகள் சொல்கேட்கும் அடிமை சமூகமாக மாற்றும் நீண்டகால நோக்கின் முதல் படியே இந்த கல்முனை நகர்வு என்பது, மூளையை அதிகம் கசக்காமலே புரியக்கூடிய விடயம்தான்.

5. மேலே சொன்ன இந்த நகர்வு கருணா போன்ற ஒரு பிரதேசவாதியால் முந்தள்ள படுவதும் இதன் ஓரங்கமே. இந்த நீண்டகால திட்டத்துக்கு, கிழக்கு தேர்ந்தெடுக்க படக் காரணமே, கிழக்கு தமிழர்களை இலகுவில் பிரிதாளலாம் எனும் எடுகோளே. “ உங்களுக்கு உதவியாக, புலம்பெயர் தமிழன் வரமாட்டன், யாழ்பாணத் தமிழன் வரமாட்டான், கொழும்பு தமிழன் வரமாட்டன், ஒரு அரசியல் கட்சிகளும் வரமாட்ட்டர்கள், ஞானசாரவும், சுமணேயும்தான் உங்களின் ஒரே நம்பிக்கை, ஆபந்தாண்டவர்கள் என கொண்டுவந்து முடிப்பதே இதன் நீண்டகால நோக்கு.

5. வடக்கில் தமிழ் பெளத்த ஆளுனர் வந்தது இந்த திட்டத்தின் அடுத்த நகர்வு. 

6. சுமேயை விடுங்கள், கருணாவா, ஞானசாரரா, மனோ கணேசனா, தமிழ் தேசியத்துக்கு குழிபறித்தவர்கள்? மனோக்கு எதிர்ப்பு, அவர்களுக்கு வரவேற்பு! இது மட்டுமே போதும் இந்த கல்முனை போராட்டமும் இனி வரப்போகும் இத்தகைய போராட்டங்களும், எத்தகைய நச்சு வலைபின்னல் என்பதை எடுத்துக் காட்ட.

7. இதை எல்லாம் ஆராய மறுத்து( அல்லது ஆராய இயலாமல்), இந்த போக்க்கின் ஆபத்துகளை மறைத்து, மக்கள் வழி கண்டார்கள் என்று வெற்றுக் கோசங்களை காவித் திரிபவர்கள், ஒன்றில் சிந்திக்கிம் திறனற்று இருக்க வேண்டும் அல்லது, ஊரில் தாம் சிங்கள முதலாளிகளுக்கு “யெஸ் சேர்” போட்டு காரியம் சாதிப்பதற்க்காக, தமிழ் இனத்துக்கு இரண்ட்கம் செய்பவர்களாக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2009 ஜனவரியிலிருந்தே clueless தான். 

புலிகளின் அழிவுக்கு பின்னர் வந்த அரசியல் தலைமைகள் எவரையும் நம்பவில்லை. எதிர்ப்பு அரசியலா, இணக்க அரசியலா, சரணாகதி அரசியலா என்பதில் இவர்களுக்குள் நிறையக் குழப்பம். 

பொருளாதாரத்தில் முன்னேற அரசியல் பலம் வேண்டும். அரசியல் அதிகாரம் இல்லாமல் பொருளாதார அபிவிருத்தியை தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களின் துணையோடு மேற்கொண்டாலும் அறுவடை தமிழருக்குப் போகாது. இது புரியாத தமிழ் அரசியல் தலைமைகள் வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே இப்போது அரசியல் செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்காதா பின்ன ...
நாங்க கசபோக்கிலி அரசியல்  செய்த  பத்துவருஷத்தை புலிகளின் தலையில் கட்டி அவர்களை காரணகர்த்தாக்கள் ஆக்கிவிட்டு அடுத்துவரும் நரேந்திரனை தேடுவதில் பிசி பாருங்கோ. 
இருக்கவே இருக்கிறார்கள் புலிகள் இன்னொரு இருபது வருஷம் ஓட்ட மாட்டோமா என்ன...
இதில காமெடி என்னவென்றால் கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தலையே  செய்ய முடியாத வக்கற்ற போக்கிலிகள் நாங்க எடுத்துவிட்ட ஆண்டுக்கொரு தீர்வு திட்டத்தை High intellectuals ஏ நம்பித்தொலைத்தது தான் சோகத்திலும் சோகம். நாங்க தான் Intellectuals ஆச்சே இனி அடிப்போம் கதை பாருங்கள் Clueless , own realm, workable strategy ,Short term tactics, renewable energy , partical acceleration வாயில் வருவதையெலாம் எடுத்து விடுவோம் 
காசா பணமா 

உங்கள் பிரச்சினை உங்களுக்குக் கிடைக்காத ஏதோவொன்றின் தாழ்வுச்சிக்கலால் உருவான உயர்வுச் சிக்கல் மனப்பான்மை (superiority complex) தான் என இந்தக் கருத்தோடும் முன்னைய கருத்துகளோடும் இணைத்துப் பார்க்கையில் புரிகிறது! ஆனால், கோசான் சொன்னது போல  புத்திசாலித் தனத்தாலோ பேப்பரில் அடித்த சான்றிதழால் முதுகு சொறிந்தோ விளங்கிக் கொள்ளும் விடயமல்ல எங்கள் தமிழ் இடியப்பச் சிக்கல் பிரச்சினை! நடக்கிற சம்பவங்களை ஒழுங்கான செய்தி ஊடகங்களில் வாசித்துக்  கிரகிக்க முடிந்தாலே நாம் நிற்கும் இடம் புரியும்! சில சமயங்களில் "எனக்குப் புரிந்து விட்டது" என்ற மென்ராலிரி இருந்தாலும் இந்த கிரகிப்பு மறைந்து விடும்! சான்றிதழ் பெற்றவன் பெறாதவன் என்ற வேறு பாடுகளை ஏற்கனவே இருக்கும் வேற்றுமைகளுடன் சேர்த்து மக்களைக் குழப்பாமல் சாமான்யனுடைய சவாலான கேள்விக்குப் பதில் இருந்தால் கொடுங்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

சம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம். 
புலிகளை அழித்தால் அரசியல் தீர்வு என்ற வாக்குறுதியை சம்பந்தனுக்கு ராஜபக்ச வழங்கியுள்ளார். 
அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் மீதான மிகக் கொடூரமான அந்த யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார் 
சம்பந்தர். யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக சர்வதேச சமூகத்திடம் ஸ்ரீலங்கா அரசு தீர்வைத்தரும் என்ற நம்பிக்கை இருப்பதாபவும் பிரசாரம் செய்து போருக்கான ஆதரவை திரட்டிக் கொடுத்து

மகிந்தராஜபக்சேவுடனும் கோட்டாபய ராஜபக்சேவுடனும் இணைந்து சொந்த இனத்தை அழிக்கும் இனவழிப்பு யுத்தத்தை அரங்கேற்றியுள்ளார்.
-ஈழப்பிரியன் பாலன்.-

 தமிழ் சிறி, இன்னொருவர் சொன்னதை மேற்கோள் காட்டும் போது " என்ற மேற்கோள் குறியிட்டு எழுதுவது தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள விதிமுறை. இங்கே ராஜபக்ஷ சொன்னதை மேற்கோள் இல்லாமல் போட்டு ஏதோ சம்பந்தனே அழிக்க வேண்டும் என்று சேர்ந்து ஏற்றுக் கொண்டது மாதிரிக் காட்டியிருக்கிறார்கள்.

ஐயா, பெயரிலேயே தமிழ்  என்று வைத்துக் கொண்டு இப்படி தமிழ் தெரியாமல் இருக்கிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

உங்கள் பிரச்சினை உங்களுக்குக் கிடைக்காத ஏதோவொன்றின் தாழ்வுச்சிக்கலால் உருவான உயர்வுச் சிக்கல் மனப்பான்மை (superiority complex) தான் என இந்தக் கருத்தோடும் முன்னைய கருத்துகளோடும் இணைத்துப் பார்க்கையில் புரிகிறது! ஆனால், கோசான் சொன்னது போல  புத்திசாலித் தனத்தாலோ பேப்பரில் அடித்த சான்றிதழால் முதுகு சொறிந்தோ விளங்கிக் கொள்ளும் விடயமல்ல எங்கள் தமிழ் இடியப்பச் சிக்கல் பிரச்சினை! நடக்கிற சம்பவங்களை ஒழுங்கான செய்தி ஊடகங்களில் வாசித்துக்  கிரகிக்க முடிந்தாலே நாம் நிற்கும் இடம் புரியும்! சில சமயங்களில் "எனக்குப் புரிந்து விட்டது" என்ற மென்ராலிரி இருந்தாலும் இந்த கிரகிப்பு மறைந்து விடும்! சான்றிதழ் பெற்றவன் பெறாதவன் என்ற வேறு பாடுகளை ஏற்கனவே இருக்கும் வேற்றுமைகளுடன் சேர்த்து மக்களைக் குழப்பாமல் சாமான்யனுடைய சவாலான கேள்விக்குப் பதில் இருந்தால் கொடுங்கள்!  

பச்சை தீர்ந்துவிட்டது அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

உங்கள் பிரச்சினை உங்களுக்குக் கிடைக்காத ஏதோவொன்றின் தாழ்வுச்சிக்கலால் உருவான உயர்வுச் சிக்கல் மனப்பான்மை (superiority complex)

நான் அப்பவே சொல்லல ...இனி இப்படித்தான் வரும். தாழ்வுச்சிக்கலால் வந்த உயர்வுச்சிக்கல் , மலச்சிக்கலால் வந்த வயிற்றுப்போக்கு, இடியாப்பச்சிக்கலால் வந்த ஒற்றைத் தலைவலி இப்பிடி  எடுத்து விடுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்காதா பின்ன ...
நாங்க கசபோக்கிலி அரசியல்  செய்த  பத்துவருஷத்தை புலிகளின் தலையில் கட்டி அவர்களை காரணகர்த்தாக்கள் ஆக்கிவிட்டு அடுத்துவரும் நரேந்திரனை தேடுவதில் பிசி பாருங்கோ. 
இருக்கவே இருக்கிறார்கள் புலிகள் இன்னொரு இருபது வருஷம் ஓட்ட மாட்டோமா என்ன...
இதில காமெடி என்னவென்றால் கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தலையே  செய்ய முடியாத வக்கற்ற போக்கிலிகள் நாங்க எடுத்துவிட்ட ஆண்டுக்கொரு தீர்வு திட்டத்தை High intellectuals ஏ நம்பித்தொலைத்தது தான் சோகத்திலும் சோகம். நாங்க தான் Intellectuals ஆச்சே இனி அடிப்போம் கதை பாருங்கள் Clueless , own realm, workable strategy ,Short term tactics, renewable energy , partical acceleration வாயில் வருவதையெலாம் எடுத்து விடுவோம் 
காசா பணமா 

12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் அப்பவே சொல்லல ...இனி இப்படித்தான் வரும். தாழ்வுச்சிக்கலால் வந்த உயர்வுச்சிக்கல் , மலச்சிக்கலால் வந்த வயிற்றுப்போக்கு, இடியாப்பச்சிக்கலால் வந்த ஒற்றைத் தலைவலி இப்பிடி  எடுத்து விடுங்கோ 

2வதாக மேற்கோள் காட்டிய பெட்டிக்குள் இருக்கும் ஞானோதயம், 1ம் பெட்டிக்குள் இருக்கும் அநாவசிய, அநாகரீக வார்த்தை பிரயோகத்துக்கு முன் வந்திருக்க வேண்டும்.

ஒன்றரை பக்கமாக சம்பந்தர் பற்றியும், திரியின் விடயதானம் பற்றியும் பலரும் எதிர் எதிர் கருத்துகளை வைத்தாலும், மிகவும் கண்ணியமாக போய் கொண்டிருந்த விவாதத்தை, பூசை நேரத்தில் புகுந்த வெறிக்குட்டி போல உள்ளே வந்து சக கருத்தாளர்களை பிராண்டியது யார் என்று அறிய திரியை முதலில் இருந்து வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அண்ணை ..அநகாரிக வார்த்தை பிரயோகம் உங்களை நோக்கியதல்ல அது கூத்தமைப்பை நோக்கியது அவர்களை இப்போதுள்ள நிலையில் இதை விட கேவலமாக அழைக்க வேண்டும் 
திரும்பவும் ஒருதடவை கூர்ந்து படியுங்கள் ...உங்களை High Intellectuals என்று மரியாதையாகத்தான் அழைத்துள்ளேன்.உங்கள் மீது தனிப்பட்ட ரீதியில்  மிகுந்த மரியாதை உண்டு,   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ..அநகாரிக வார்த்தை பிரயோகம் உங்களை நோக்கியதல்ல அது கூத்தமைப்பை நோக்கியது 
திரும்பவும் ஒருதடவை கூர்ந்து படியுங்கள் ...உங்களை High Intellectuals என்று மரியாதையாகத்தான் அழைத்துள்ளேன் 

இதை விட பெரிய பப்பா மரம் எங்கட ஊரிலயே இருக்கு 😂

அதுசரி தனி ஒருவன் ஆள் ஓகேயா? ஆரோ கனநாளா காணேல்ல எண்டு தேடினவை.

சேவயர் எங்கேபோனார்ரொந்தெரியா 😂

நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதை விட பெரிய பப்பா மரம் எங்கட ஊரிலயே இருக்கு 😂

அதுசரி தனி ஒருவன் ஆள் ஓகேயா? ஆரோ கனநாளா காணேல்ல எண்டு தேடினவை.

சேவயர் எங்கேபோனார்ரொந்தெரியா 😂

நன்றி. வணக்கம்.

நீங்கள் அவ்வாறு நினைத்துக்கொண்டால் அதற்க்கு நானொன்றும் செய்ய முடியாது 
மேலே எழுதியதில் கல்முனை தரமுயர்த்தலையே செய்ய முடியாத என்ற வசனத்தை பாவிக்கும் போது 
இதனை உங்களை நோக்கித்தான் பாவித்திருக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்..அந்தளவுக்கு Sense இல்லாதவர்களா நாங்கள் ....? 
தனியை பற்றி தெரியாது நான் இப்போது சிங்கையில் இருப்பதால் தொடர்பில் இல்லை 
நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சரி விடுங்கள்.

அப்பப்போ வந்து போகவும். 

🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இதை விட பெரிய பப்பா மரம் எங்கட ஊரிலயே இருக்கு 😂

அதுசரி தனி ஒருவன் ஆள் ஓகேயா? ஆரோ கனநாளா காணேல்ல எண்டு தேடினவை.

சேவயர் எங்கேபோனார்ரொந்தெரியா 😂

நன்றி. வணக்கம்.

தனியொருவன் ஒவ்வொரு வருடமும் கதிரகாம பாத யாத்திரை போறபடியால் இம்முறையும் போயிருக்கலாம்.இல்லாவிட்டால் இதற்குள் தான் சுழன்று கொண்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன பிரச்சனை புதுசாக வந்தது.சம் சும் +குட்டமைப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது என்டது இங்கு ஏகமனதாக தீர்மானித்தாச்சு.இப்ப அடுத்த கட்டம்.யார் எமக்கு சரியான தலமை என்டது.அதைப்பற்றி கதைக்கலாம்.எனது தனிப்பட்ட கருத்து விக்கியர் சரிவரார்.புதுக்கட்சி என்டால் கொள்கை என்ன என்பது தான் அலசலாமே.இப்படியே போனால் தேசிய கட்டச்சிகள் ஆட்ச்சிக்கு வருவதை தடுக்க முடியாது.அண்மையில் ஊரில் பலரை கேட்டேன் உங்கள் வாக்கு யாருக்கு என்டு உடன் பதில் வீட்டுக்கு என்டு வந்தது.இங்கை இருந்து ஒன்டும் பிடுங்க முடியாது என்டதுக்கு இது ஒரு சின்ன உதாரனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2019 at 6:05 PM, Justin said:

மன்னிக்க வேண்டும் சாமான்யன்! ஒரு முக்கியமான கேள்வியை அப்பாவித் தனமாகக் கேட்டு விட்ட உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்ற காரணத்தை வைத்தே சிரிப்புக் குறி இட்டேன்! மேலே இருக்கும் பதில்கள், குறிப்பாக நுணா இணைத்திருக்கும் செய்திகளில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் தீர்வு பற்றிப் பேசுவதில் யாழில் இருப்போர் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் கேள்வியின் நாயகர்கள் மட்டுமே, பதில் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! துரோகிப் பட்டம் Trump University degree போல உடனே கிடைக்கும்! 

பதிலின் நாயகரான நீங்கள் பதிலை தரலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப என்ன பிரச்சனை புதுசாக வந்தது.சம் சும் +குட்டமைப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது என்டது இங்கு ஏகமனதாக தீர்மானித்தாச்சு.இப்ப அடுத்த கட்டம்.யார் எமக்கு சரியான தலமை என்டது.அதைப்பற்றி கதைக்கலாம்.எனது தனிப்பட்ட கருத்து விக்கியர் சரிவரார்.புதுக்கட்சி என்டால் கொள்கை என்ன என்பது தான் அலசலாமே.இப்படியே போனால் தேசிய கட்டச்சிகள் ஆட்ச்சிக்கு வருவதை தடுக்க முடியாது.அண்மையில் ஊரில் பலரை கேட்டேன் உங்கள் வாக்கு யாருக்கு என்டு உடன் பதில் வீட்டுக்கு என்டு வந்தது.இங்கை இருந்து ஒன்டும் பிடுங்க முடியாது என்டதுக்கு இது ஒரு சின்ன உதாரனம்.

10 hours ago, Justin said:

உங்கள் பிரச்சினை உங்களுக்குக் கிடைக்காத ஏதோவொன்றின் தாழ்வுச்சிக்கலால் உருவான உயர்வுச் சிக்கல் மனப்பான்மை (superiority complex) தான் என இந்தக் கருத்தோடும் முன்னைய கருத்துகளோடும் இணைத்துப் பார்க்கையில் புரிகிறது! ஆனால், கோசான் சொன்னது போல  புத்திசாலித் தனத்தாலோ பேப்பரில் அடித்த சான்றிதழால் முதுகு சொறிந்தோ விளங்கிக் கொள்ளும் விடயமல்ல எங்கள் தமிழ் இடியப்பச் சிக்கல் பிரச்சினை! நடக்கிற சம்பவங்களை ஒழுங்கான செய்தி ஊடகங்களில் வாசித்துக்  கிரகிக்க முடிந்தாலே நாம் நிற்கும் இடம் புரியும்! சில சமயங்களில் "எனக்குப் புரிந்து விட்டது" என்ற மென்ராலிரி இருந்தாலும் இந்த கிரகிப்பு மறைந்து விடும்! சான்றிதழ் பெற்றவன் பெறாதவன் என்ற வேறு பாடுகளை ஏற்கனவே இருக்கும் வேற்றுமைகளுடன் சேர்த்து மக்களைக் குழப்பாமல் சாமான்யனுடைய சவாலான கேள்விக்குப் பதில் இருந்தால் கொடுங்கள்

சாமானியனோ ...ஜஸ்டின் அண்ணையோ ..சுவையோ 
யார் கேட்டாலும் இப்போதைக்கான தீர்வு 

1.வடக்கு ,கிழக்கு என்பன வேறுபட்ட  இரண்டு மாகாணங்கள் என்பதை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளல் .

2.கூத்தமைப்பு கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பு இரண்டாவது தமிழீழம் (எப்போதுமே சாத்தியமில்லை)

3.யாழ் மையவாத அரசியல் சூழலில் இருந்துகொண்டு கிழக்கின் பிரச்சினையை அணுகவும் முடியாது 
   தீர்க்கவும் முடியாது (Cluelesness இற்கு இதுதான் காரணம்)

4. கூத்தமைப்பின் கிழக்கு மாகாண கச போக்கிலிகளுக்கும் தலைமைக்கும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் 
   செய்ய  தெரியவேண்டிய Basic Requirement முஸ்லிம்களுடனான சமாந்தர அரசியல் (சரணாகதி அரசியல் அல்ல)  

5. (தாயக மக்கள் தாமாக கண்டு கொல்வார்கள், மாடு கொல்வார்கள் என்பதெல்லாம் சுத்த அலப்பறை. விடுதலை புலிகளின் ராசதந்திரத்தையே எதிர்கொண்ட சிங்கள ராசதந்திரத்தை, மக்கள் ஒரு நிறுவன மயப்பட்ட தலைமை இலாமல் எதிர்தாடுவார்கள், வெல்லுவார்கள் என்பது வெறும் காகித படிப்பு படித்து விட்டு, ஊரில் நாலன்ஞ்சு பேரை வச்சு கலர் காட்டும் பேர்வழிகளின் அபத்த பிதற்றல்)

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினை சிங்களவர்கள் அல்ல தமிழ் தேசியமும் அல்ல அவர்களது தற்போதைய  பிரச்சினை முஸ்லிம்கள் (ஈஸ்ரர் தாக்குதலில் கிழக்கு மாகாண தமிழர்களும் ஒரு இலக்கு )

6.கல்முனை விவகாரத்தில் மக்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஒரு பிக்குவால், அதுவும் ஞானசாரர் போன்ற, மங்களராமய சுமனே போன்ற பச்சை இனவாதிகளால்தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கூட கிடைக்கும் என்பதும், தமிழ் தலைவர்களை தமிழர்களை வைத்தே விரட்டி அடிப்பதும் (குறிப்பாக மனோவை விரட்டியமை) ஈற்றில் இந்த மக்களை தலைமை அற்றவர்களாக்கி, அடையாளம் அற்றவர்களாக்கி, பிக்குகள் சொல்கேட்கும் அடிமை சமூகமாக மாற்றும் நீண்டகால நோக்கின் முதல் படியே இந்த கல்முனை நகர்வு என்பது, மூளையை அதிகம் கசக்காமலே புரியக்கூடிய விடயம்தான்

மிக இலகுவான பதில் ஒரு பிக்குவால், பச்சை இனவாதிகளால் தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கிடைக்கும் எனும் நிலைமைக்கு கிழக்கு மாகாண தமிழர்களை கொண்டுவந்த பெருமை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான கூத்தமைப்பின் கச போக்கிலிகளையே சேரும். (உ +ம் 11 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 7 உறுப்பினர் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தது கிழக்கு தமிழர்களுக்கு வாய்க்கரிசி போடுவதை துரிதப்படுத்தியமை)  

6. சுமேயை விடுங்கள், கருணாவா, ஞானசாரரா, மனோ கணேசனா, தமிழ் தேசியத்துக்கு குழிபறித்தவர்கள்? மனோக்கு எதிர்ப்பு, அவர்களுக்கு வரவேற்பு! இது மட்டுமே போதும் இந்த கல்முனை போராட்டமும் இனி வரப்போகும் இத்தகைய போராட்டங்களும், எத்தகைய நச்சு வலைபின்னல் என்பதை எடுத்துக் காட்ட.

தமிழ் தேசியம் கிழக்கில்  மர்கயா ... வேண்டுமென்றால் வடக்கு மாகாணமும் ,கூத்தமைப்பின் வடக்கு மாகாண போக்கிலிகளும் வடக்கில் தமிழர்கள் இரண்டாம் தர (சிறுபான்மை ) ஆகும்/ஆக்கும்  வரை தேசிய அரசியலை முன்னெடுக்கலாம் 

7. இதை எல்லாம் ஆராய மறுத்து( அல்லது ஆராய இயலாமல்), இந்த போக்க்கின் ஆபத்துகளை மறைத்து, மக்கள் வழி கண்டார்கள் என்று வெற்றுக் கோசங்களை காவித் திரிபவர்கள், ஒன்றில் சிந்திக்கிம் திறனற்று இருக்க வேண்டும் அல்லது, ஊரில் தாம் சிங்கள முதலாளிகளுக்கு “யெஸ் சேர்” போட்டு காரியம் சாதிப்பதற்க்காக, தமிழ் இனத்துக்கு இரண்ட்கம் செய்பவர்களாக இருக்க வேண்டும். 

Very True ,கூத்தமைப்பின் மொள்ளமாரித்தனத்தை கண்கூடாக கண்டபின்னர்தான் கூத்தமைப்பின் கூடாரத்தில் இருந்து வியாழேந்திரன் வெளியேறி கிழக்கு தமிழர்களுக்கு சார்பான அவசியமான அரசியலை முன்னெடுக்கிறார், கோடீஸ்வரனின் நிலையிலும் நல்ல முன்னேற்றம் , இவர்களை இணைத்து முஸ்லிம்களை வெட்டி ஓடி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதே கிழக்கு மாகாண தமிழர்களுக்கு முன்னுள்ள அரசியல் . சிங்கள எஜமானர்களுக்கு எஸ் சேர் போடுவது யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்பதால் தான்
இந்த நிலைமைக்கும் மக்களை கொண்டு வந்தது சாட்சாத் கூத்தமைப்பு கச போக்கிலிகளே ... 
முதலில் மனோ கணேசன் துரத்தபடவில்லை ,சும்மொடு சேர்ந்து வந்ததால் அவரும் ஓட வேண்டி வந்தது 
அதனை அவரது முகப்புத்தக பதிவை பார்த்தால் விளங்கும். 

சரி இவை அனைத்தையும் கூத்தமைப்பு தடுத்திருக்கலாமா ...அவர்களது அரசியல் திறனால் முடியாது 
ஆனால் சேதத்தை குறைத்திருக்கலாம்... எப்படி...? ....ஆண்டுக்கொரு தீர்வுத்திட்டத்தை தமிழர் திருநாட்களில் ஏலம் விட்டு அவர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி தமிழர்களுக்கான மாற்றுத்தெரிவை அறவே இல்லாமல் செய்திருக்கிறார்கள் , இவர்களுக்கான மாற்றுத்தெரிவின் அவசியம் வடக்கில் உணரப்படவில்லை 
ஆனால் கிழக்கில் .....?

முதலிலேயே தங்கள் கையாலாகாத்தனத்தை மக்களின் முன் பட்டவர்த்தனமாக கூறியிருந்தால் அவசியமில்லாத எதிர்பார்ப்பும் அதனால் ஏமாற்றமும் மக்களுக்கு வந்திருக்காது. 
(மிகப்பெரிய கேள்வி அரிச்சுவடியில் ஆ வே எழுதப்படாத தீர்வு விடயத்தை எப்படி எதை வைத்துக்கொண்டு 2015 இலிருந்து கூவி கூவி விற்றீர்கள் இங்கே நீங்கள் வைத்த வேட்டு தான் இன்றைய  கிழக்கு மாகாண தமிழர்களின் கையறு நிலை )   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

பதிலின் நாயகரான நீங்கள் பதிலை தரலாமே.

நான் பதிலின் நாயகன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உங்கள் அறியாமை நுணா! நானே அப்படி நினைப்பதில்லை! மேலும், தீர்வுக்கு முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் எவரையும் (அது என்ன தான் பயனற்ற நொண்டி முயற்சியானாலும்) கரிச்சுக் கொட்டிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது நான் அல்லவே! அவ்வாறு கேள்விகளும் வெற்று விமர்சனங்களும் வைப்போர் தான் பதில்களையும் கொடுக்கக் கடமையுடையோர்! 

7 hours ago, Justin said:

இன்னுமா இந்த உலகம் நம்புது .....எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .....என்னத்த  சொல்ல ...அப்படியே அடிச்சு விடுங்க ...

On 7/2/2019 at 7:09 AM, goshan_che said:

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

1. சம்பந்தன் ஆயுதம் ஏந்த வேண்டும் எண்டே சொன்னவர். அல்லது ஆயுதம் ஏந்துவோம் எண்டே சொன்னவர். ஆயுதம் ஏந்துவதை பற்றி “சிந்திக்க” வேண்டி “வரலாம்” என்றுதான் சொன்னவர். அதாவது நாங்கள் சிலசமயம் சிந்திப்போமே, நயந்தாராவுடன் ஹனிமூன் போக வேண்டும், தமன்னாவுடன் தள்ளாட வேண்டும், அப்படி, “சிந்திக்க வேண்டி வரலாம்” சிந்திப்போம் கூட இல்லை😂

2. சம்பந்தனுக்குகோ வேறு எந்த அரசியல் வாதிக்கோ, எமக்கான உரிமையை எப்படி பெறுவது என்ற திட்டம், மூலோபாயம் கொஞ்சமும் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் they are clueless. ஆனால் அதை அப்படியே வெளியே சொல்ல முடியுமே? அதனால காலத்துக்கு காலம் இப்படி புருடா விடுறது. தேர்தல் நெருங்க, நெருங்க சுருதி கூடும். இன்னும் சில மாதங்களில் மனிதர் பிரபாகரன் பற்றி உயர்வுநவிழ்சியாக சொல்லுவார் பாருங்க்கோ.

3. ஆனால் இது சம்பந்தர் போல அரசியல்வாதிக்கு மட்டும் இல்லை, இங்கே யாழில் கருத்தெழுதும் நாம் யாவரும் கூட we are all clueless as to how to realize  our aims. None of us have a workable strategy or even any short term tactics that would get us closer to the solution we want. ஆனால் அதை ஒத்து கொள்ளும் பக்குவம் கருத்தாளருக்கும் இல்லை. அதனால்தான், சுமந்திரன் போய் இந்தியாவிடம் கேட்கலாமே, சர்வதேசத்திடம் கேட்கலாமே என சாத்தியமிலாதவற்ரை எழுதுகிறோம். அல்லது 10 வருடங்களுக்கு முன் இறந்து போன பிரபாகரன் 25 வருடத்துக்கு முன் சொன்ன விடயத்தை இப்போ வெட்டி ஒட்டி, இதைதானே நாம்ன்கேட்கிரோம் என்பதாக எழுதுவது.

சம்சும் போய் கேட்டா இந்தியா சொல்லப்போகும் ஒரே பதில் “ஆகட்டும் பார்கலாம்”.

இலங்கையும் இந்தியாவும் ஏதோ வடகிழக்கு இணைந்த தீர்வை லாபாய், லாபாய் என கூவி விப்பதுபோலவும், சம்சும் அதை காலால் தள்ளி விடுவதுபோலவும் போகுது கதை 😂.

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

என்ன 2015 இல் சம்பந்தரின் ராஜதந்திரம் அது இது என்று புகழ்ந்து விக்னேஸ்வரனை எதிர் புகழ் பாடியதை மறந்து விடடீர்களா ?  அப்பவே தெரியும் இந்த சாம் சும் வெறும் வெற்று வேட்டுக்கள் என்று ....

காலம் கடந்து அறிவு வந்ததுக்கு நன்றி ....அப்படியே புலிகளுக்கு முன்னாள் எவ்வளவு சவால்கள் இருந்ததையும் உணரும் காலம் வரும்.  

அப்பப்ப அடிச்சு விடக்கூடாது ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.