Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை. 

http://globaltamilnews.net/2019/126790/

  • கருத்துக்கள உறவுகள்

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

எங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

6 minutes ago, Justin said:

பனையாலை விழுந்து கிடக்கிறம், மாட்டையும் மிதிக்க விடாதேங்கோ என்று சனம் சொல்லுதோ.

ஏற்கனவே யுத்த பாதிப்பால் ஏற்பட்ட உடல் உள தாக்கங்களில இருந்து விடுபட போராடும் மக்களுக்கு நவீன 5G தொழினுட்பத்தாலும் தாக்கம் வருமோ என்று பயப்பிடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

மக்களைப் பற்றியே பேசுகிறீர்கள்.மற்ற உயிரினங்கள் நிலை என்ன?
உண்மையான தாக்கத்தைப் பற்றி வெளியே பேசுவதேயில்லை என்கிறார்கள்.

1 hour ago, Justin said:

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

போரால் பாதிக்கப்பட்ட தமக்கு வேறு உதவிகள் தேவைப்படுகின்றன, அவற்றை செய்யாமல் 5ஜி என்னத்துக்கு, அது தேவையில்லை என்ற ரீதியில் கூறப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை:

1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன்.

2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016  ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.  நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக  ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இணைப்பு இதோ:   https://academic.oup.com/aje/article/186/2/210/3111638

3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்!  

நன்றி.

9 minutes ago, Justin said:

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! !  

நன்றி.

தங்களைப்போன்ற துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள்  ஒதுங்குவது மூடத்தனங்களை  பரப்பும் யூரியூப் வியாபாரிகளுக்கு வரப்பிசாதமாக அமையும். அறிவியல் ரீதியான் ஆய்வுகளை விட பழமைவாத மூடத்தனத்தை நம்பும் மனவியாதி ஊரில் உள்ள படித்த சமூகம் என்று கூறுபவர்களிடமும் காலங்காலமாக  இருப்பதை அவதானிக்க முடியும். அறிவியிலால் கண்டு பிடிக்கப்பட்ட தற்போதைய தகவல் தொழிழ்நுட்ப வளர்ச்சி கூட எம்மவரால் மூடக்கொள்கைகளை பரப்பவே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

அதுவே என் கருத்தும்
ஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள்  அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும்  வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ஆய்வுகளும் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்..

இந்த அலைக்கற்றைகளின் நீண்ட காலப் பாதிப்பு என்பதை அறியாமல்.. இவற்றை உள்வாங்குவது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமே.

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இப்படி அடுக்கிட்டே போகலாம்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளை தங்களின் வியாபாரத்தின் தேவைக்கு ஏற்ப காட்டுவதும் பின் நிராகரிப்பதும்.. நடந்து கொண்டே இருக்கிறது.

அதைத்தாண்டி.. விஞ்ஞானத்தை மனித குலத்தின் இயற்கையில் நலன்கருதி இதய சுத்தியோடு பாவிக்க வேண்டிய தேவை ஒன்றுள்ளதால்..

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

ஏலவே பறவைகள் மத்தியில் இவை செலுத்தி இருக்கும் தாக்கம்.. என்பது அவற்றின் வாழ்வியலை பாதித்திருக்கும் நிலையில்.. மனிதர்களில் இவற்றின் தாக்கம் குறித்து நடுநிலையான உண்மையான விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் அவசியமே தவிர.. வியாபாரிகளின் நலனுக்கு ஏற்ப ஆய்வுகளையும் ஆய்வு முடிவுகளையும் ஒப்பிக்கும் நடவடிக்கைகள் பெருகி உள்ள நிலை அவசியமில்லை.

அறிவியல் விஞ்ஞானம் ஆராய்ச்சி.. என்ற உச்சரிப்போடு பல மோசடிகள் நடக்கின்றன. 

அந்த வகையில்.. இது மக்களால் எதிர்க்கப்படுவது.. இந்த அலைப்பாவனை குறித்த கூடிய தெளிவு விளக்கம் மற்றும் பாதிப்புக்கள் குறித்த தேடலுக்கு ஆய்வுகளுக்கு வழிகோலும் எனலாம். அது மக்களுக்கும் பூமிக்கும் இயற்கைக்கும் நன்மையே ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

இதில் உடன்பாடில்லை.

காரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். 

இருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.

ஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.

இந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில்  வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

இது உண்மையில் பல பில்லியன்கள் புரளும் வியாபாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சொறீலங்கா போன்ற நாடுகளில்.. இவை அரசியல்வாதிகளிடம் இலஞ்ச வியாபாரம் பேரம் பேசல் வியாபாரம் என்பதும் சாத்தியமே.

அதை எல்லாம் தாண்டி.. நீண்ட கால ஒழுங்கில் இவற்றின் சமூகத்தாக்கம்.. சூழல் தாக்கம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமே.

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. வியாபாரிகள்.... அரசியல் வியாபாரிகளின் நோக்கங்களுக்கு அப்பால். இதுதான் எங்கள் நோக்கம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2019 at 12:44 AM, nedukkalapoovan said:

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

டீசல், நெகிலி, அசேதன பசளை ஆகியவற்றை நீண்ட காலம் பாவித்து அதன் மூலம் உண்டான பாதிப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து அந்த ஆய்வுகளின் முடிவுகள் தான் இப்போது நீங்கள் நீலிக் கண்ணீர் என்று சொல்லும் புற்று நோய், சூழல் மாசடைதல் பற்றிய அக்கறை. இந்த மின் காந்த அலைகளையும் நீண்டகாலம் பயன்படுத்தி தானே அவற்றின் நீண்டகால பாதிப்பை அறிய முடியும்? அதற்காக தான் இப்போதே ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் நீங்கள் இப்போதே நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2019 at 2:00 AM, nedukkalapoovan said:

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. 

5G  கட்டின்றி பயன்படுத்த படும் அலைக்கற்றைகள் அல்ல. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முதல் சீனா உருவாக்கி உள்ளதால் உண்டான வணிக போட்டியின் விளைவாக  மக்கள் மத்தியில் பரப்பப்படும் பயம் காட்டும் கருத்துகளே இவை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.