Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

gotabaya_1_.jpg

சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

https://www.virakesari.lk/article/62436

  • கருத்துக்கள உறவுகள்

Breaking.jpg

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவை அறிவித்தார் மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

இந்த மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

http://athavannews.com/ஜனாதிபதி-வேட்பாளராக-கோட்/

 

கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்? அவர் பின்னணி என்ன?

இலங்கையில் எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

 

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபகஷ தம்பதியினருக்கு நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரனாக கோட்டாபய ராஜபக்ஷ பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரியில் கோட்டாபய ராஜபக்ஷ பயின்றுள்ளார்.

 

ராணுவ வாழ்க்கை

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷ 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

 

அமெரிக்க பிரஜை உரிமை

இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிககா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோட்டாபய ராஜபக்ஸ திகழ்ந்தார்.

பாதுகாப்பு செயலாளர் பதவி

தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.

உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

விடுதலைப் புலிகளின் கொலை முயற்சி

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்ஷ உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டது.

 

யுத்த குற்றச்சாட்டு

ஈழப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன், வெள்ளை வேனில் பலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

 

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா - கலிபோர்னியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

 

அமெரிக்க பிரஜை உரிமை ரத்து

இரட்டை பிரஜைவுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை பிரஜைவுரிமை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜைவுரிமை யை ரத்து செய்யும் ஆவணத்தை இந்த ஆண்டில் ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, அமெரிக்க பிரஜை உரிமையை ரத்து செய்யும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜைவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜைவுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49312326

Edited by ampanai

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார். 😀

"பயங்கரவாதம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை"


இதன்பின்னர், உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ, அன்று நாட்டுக்காக எனது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, எந்தவொரு வெளியக சக்திகளும்  அதற்கு தடையேற்படுத்துவதற்கு தான் இடமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


எனது நாட்டை எதிர்பவர்களுக்கு நான் ஒருபோதும் தலை வணங்கியதில்லை. எதிர்காலத்திலும் எனது தாய் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.


இன்று இந்த நாட்டுக்கு எதிர்காலம் தொடர்பாக நோக்குகை உள்ள, நாட்டின் அபிவிருத்திக்கு திட்டமொன்று உள்ள, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றல் உள்ள ஒழுக்கமுடைய, ஊழல்களற்ற மக்கள் நேயத்துடனான, நாட்டுப்பற்றுடைய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அவ்வாறான தலைமைத்தவமாகும். மக்கள் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை அளிக்கும் ஆற்றல் எனக்குள்ளது என்பதை நான் தற்போதும், எனது செயற்பாடுகள்மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன்.


எமது அரசாங்கத்தின் முதலாவது கடமைப் பொறுப்பு யாதெனில் நாட்டில் பூரண பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாகும். மீண்டும் இந்த நாட்டை உலகத்தில் பாதுகாப்பான நாடாக உருவாக்க முடியுமென நான் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றேன். உங்களதும், உங்களது பிள்ளைகளதும் பாதுகாப்பின் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன். 

பௌத்த தத்துவ கோட்பாட்டினுள் எமக்கு, எல்லா சமயங்களுக்கும் கௌரவமளிக்கும்படி கற்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த எழுத்திலான வரலாற்றினைக் கொண்டுள்ள எமது நாட்டில் பல்வேறு இனத்தவர் வாழ்கின்றார்கள். அவர்கள் பல்வேறு சமயங்களை பின்பற்றுகின்றனர். நாம் எப்போதும் ஒவ்வொருவரினது சமயத்திற்கு கௌரவமளித்து, ஒவ்வொருவரினது கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளித்து நற்புறவுடன் வாழ்ந்த இனமாகும். எமது பலமாக அந்த ஒற்றுமை இருத்தல் வேண்டும்.

இந்த தாய் நாட்டில் பிறக்கும் எவரொருவரும் அச்சமோ, சந்தேகமின்றி வாழக் கூடியதான, பாதுகாப்பான சூழலை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று நான் உறுதி கூறுகின்றேன்.நான் ஒருபோதும் தீவிரவாத பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன்.

அதே போன்று வடக்கு மக்களுக்கு தேவையான, விசேடமான எதிர்பார்ப்புகள் பற்றி எமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவர்களின் இந்த பிரச்சினைகளை எமது அரசாங்கத்தால் உறுதியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

 2014 ஆகிய காலப் பகுதிகளில் மகிந்த சிந்தனை கொள்கையின்கீழ் எமது நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டது.  தற்போது நாம் அதிலிருந்து நாட்டை முன்கொண்டுச் செல்லுதல் வேண்டும். அதற்காக தற்கால உலகளாவிய பொருளாதார செல்நெறிகளுடன் எனது நோக்கினை ஒன்றிணைத்து எதிர் காலத்திற்கு தேவையான, புதிய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222016/பயங்கரவாதம்-ஏற்பட-ஒருபோதும்-இடமளிக்க-போவதில்லை

 

1 hour ago, ampanai said:

இதன்படி, அமெரிக்க பிரஜை உரிமையை ரத்து செய்யும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜைவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜைவுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Police to probe Gota’s citizenship, passports

Two civil society activists, Gamini Viyangoda and Professor Chandragupta Thenuwara have lodged complaints with police headquarters demanding a probe into the revelations contained in the Daily FT last Monday (5) about irregularities in Gotabaya Rajapaksa’s Sri Lankan citizenship, recent passport and political activities in Sri Lanka as an American citizen. Daily FT previously revealed that Rajapaksa, who is widely tipped to be the presidential candidate of the Sri Lanka Podujana Peramuna (SLPP), came to Sri Lanka as an American on a tourist visa in 2005 to support his brother’s election campaign, and purportedly acquired dual citizenship immediately after his brother’s victory under mysterious circumstances.

http://www.ft.lk/front-page/Police-to-probe-Gota-s-citizenship-passports/44-683723

Edited by ampanai

image_e856507cfb.jpg

image_c3226de4df.jpg

image_640a0e9f90.jpg

"வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்" - கோட்டாபய ராஜபக்ஷ

வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

தனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை, எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லைக்கு அப்பாற் சென்று நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கமைவாகவே எல்லைக்கு அப்பாற் சென்று தனது பொறுப்பை நிறைவேற்ற முயற்சித்தமையினாலேயே, இலங்கையில் நிலைக்கொண்டிருந்த 30 வருட கால யுத்தத்தை, மூன்றரை வருட காலத்தில் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

''என்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் சரிவர நிறைவேற்றிய நான், மக்களின் தேவைகளையும் அதேபோன்று நிறைவேற்றுவேன். 20 வருட ராணுவ வாழ்க்கையும், 10 வருட அரச வாழ்க்கையிலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நான் நிறைவேற்றினேன். எல்லைக்குள் இருந்து அந்த பொறுப்புகளை நிறைவேற்றாது, எல்லையை மீறியாவது அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்.

எல்லையை மீறி செயற்படுகின்றமையினாலேயே 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தை மூன்றரை வருடங்களில் நிறைவேற்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்க என்னால் முடிந்தது. தாய் நாட்டிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு தலையிட இடமளிக்க முடியாது. எமது நாட்டில் பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும். இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். இனவாத தீவிரவாதமொன்றை மீண்டும் உருவாக்க இடமளிக்கமாட்டேன். பாதுகாப்பான நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன். வடக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

அரச ஊழியர்கள் சுதந்திரமாக கடமையாற்றிக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். பெண்கள் அச்சமின்றி எந்தவொரு நேரத்திலும் செல்லக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். அதனை நாம் செய்வோம். பாதிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர், விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன். அனைத்து உலக நாடுகளுடனும் நான் நல்ல தொடர்பை பேணுவேன்.

எனினும், நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். உலக நாடுகளிடம் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத வகையில் செயற்படுவேன். எமது தவறுகளை சரி செய்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எம்முடன் கைக்கோர்க்குமாறு அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். பிளாஸ்டிக் இல்லாத ஒரு தேர்தல் பிரசாரத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதனூடாக தேர்தல் கலாசாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்" என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49313127

11 hours ago, ampanai said:

அதே போன்று வடக்கு மக்களுக்கு தேவையான, விசேடமான எதிர்பார்ப்புகள் பற்றி எமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவர்களின் இந்த பிரச்சினைகளை எமது அரசாங்கத்தால் உறுதியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

 

Just now, ampanai said:

வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

வடக்கு மாகாணத்தை மட்டும் கோத்தா குறிப்பிட்டதன் மூலம் (கிழக்கை பற்றியோ குறிப்பிடவில்லை) இங்கேயும் குடியேற்றத்தை முன்னெடுத்தல் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம் என்கிறார் . 

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச - அறிவிப்புக்கு முன்னர் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர்

முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பகுதியை மையப்படுத்திய அமெரிக்க நகர்வுக்கு ஆசீர்வாதம்
 
 
main photomain photomain photo
  •  
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவாரென கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ், கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இரண்டு மணிநேரம் உரையாடினர். 
 
கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரெனவும் பின்னணியில் அமெரிக்கா ஆதரவு என்றும் கூர்மைச் செய்தித் தளம் கடந்த ஆண்டு யூன் மாதம் 23 ஆம் திகதி செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

 

திருகோணமலைத் துறைமுகம், முல்லைத்தீவில் இருந்து கிழக்குக் கடற்பகுதிகள், அங்குள்ள கனிய வளங்கள் போன்றவற்றை நோக்காகக் கொண்டே இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய அமெரிக்கா முற்படுவதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன

 

மைத்திரி - ரணில் அரசாங்கத்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கியதன் முக்கிய பங்குதாரராக அமெரிக்கா செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னரான சூழலில் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்கா ஏன் முன்னிலைப்படுத்தியது எனவும் அந்தச் செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் இலங்கையில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னரான சூழலில் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றெபோட் ஓ பிளேக் கடந்த மே மாதம் முதல் வாரம் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோது கோட்டாபய ராஜபக்சவின் போர்க்காலச் செயற்பாடுகளைப் பாராட்டியிருந்தமை தொடர்பாகவும் கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் பூகோள அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில்இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் பௌத்த பிக்குமார், கண்டி மகாநாயக்கத் தேரர்கள் ஆகியோரையும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் சந்தித்து உரையாடியிருந்த விடயங்களையும் கூர்மைச் செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளரென மகிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து மகிந்த ராஜபக்சவுடன் சென்ற 54 உறுப்பினர்கள், 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியிருந்தனர்.

 

புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென அமெரிக்கா தம்மிடம் உறுதியளித்திருந்ததாகவும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார். மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்திய அரசுடன் கூடப் பேசுவதைத் தவிர்த்திருந்ததாக சட்டத்தரணி சுமந்திரனும் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுமுள்ளார்

 

மகிந்தவின் சகோதரரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியின் தவிசாளராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செயற்படுகிறார். இந்த நிலையிலேயே அதன் தலைவராக மகிந்த ராஜபக்ச இன்று தெரிவானார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கட்சி இருநூறு சபைகளைக் கைப்பற்றி முதலாவது பிரதான சிங்கள அரசியல் கட்சியாக மாறியது.

இதன் பின்னணியிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் பல உறுப்பினர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இலங்கை அரசியலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளாகக் கடந்த எழுபது வருடங்களாக இயங்கின. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமாந்தரமான பிரதான கட்சியாக மாறியுள்ளது.

1952 இல் பண்டாரநாயக்கா அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ராஜபக்ச குடும்பம் சமாதிகட்டியுள்ளதென கொழும்பில் கிண்டலாகப் பேசப்படுகின்றது.

இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தங்களைத் தாங்களே மார்தட்டிய மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தற்போது நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலிலேயே பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டதெனலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவோடு 2009 ஆம் ஆண்டு ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலேதான் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் இலங்கை சிக்குண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் சிதறுப்படும் நிலை உருவானது.

இவ்வாறு கட்சிகள் சிதறுப்படுவதற்கு ராஜபக்ச குடும்பமே காரணமென சிங்களக் கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இதன் பின்னரான சூழலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவோடு 2009 ஆம் ஆண்டு ஈழப் போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலேதான் இந்தோ - பசுபிக் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் இலங்கை சிக்குண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் சிதறுப்படும் நிலை உருவானது

 

ஆனால் தற்போது ஜனாதிபதியாகவுள்ள அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச தரப்போடு இணைந்து போகும் சாத்தியங்கள் உள்ளதால் சந்திரிக்கா மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டு சேர்ந்து செயற்பட்டது போன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைத் தம் வசப்படுத்தும் ஜனாதிபதி வேட்பளார் ஒருவரைக் களமிறக்க சந்திரிக்கா முயற்சி எடுக்கிறார்.

ஆனால் கரு ஜயசூரிய சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சந்திரிக்காவின் முயற்சிக்குப் பின்னடைவாகவுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கொழும்புத் துறைமுகம் மற்றும் வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம், முல்லைத்தீவில் இருந்து கிழக்குக் கடற்பகுதிகள், அங்குள்ள கனிய வளங்கள் போன்றவற்றை நோக்காக் கொண்டே இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய அமெரிக்கா முற்படுவதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென அமெரிக்கா தம்மிடம் உறுதியளித்திருந்ததாகவும் ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் எதுவுமே நடக்க்வில்லையென்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் கடந்த மாத இறுதியில் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்திய அரசுடன் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதைத் தவிர்த்திருந்ததாக அதன் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரனும் அந்த விவாதத்தில் கூறியிருந்தார்.

புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திலேயே சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுமுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண மக்களுக்காம் பிரச்சனை, இனி கொஞ்ச நாளால யாழ்ப்பாணத்தாரின் பிரச்சனையா சுருங்கும் பாருங்கோ!

3 hours ago, ஏராளன் said:

வடமாகாண மக்களுக்காம் பிரச்சனை, இனி கொஞ்ச நாளால யாழ்ப்பாணத்தாரின் பிரச்சனையா சுருங்கும் பாருங்கோ!

ஏன் ..????

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Dash said:

ஏன் ..????

தமிழ் ஈழம் சுருங்கி , இன்றைக்கு கல்முனை பிராந்தியமாகவும் திருக்கேதீசுஸ்வரத்திற்கு பாதையின் முகப்பில்  வளைவு வைப்பது வரையும் வந்து விட்டது  இது எம்மாத்திரம்   ..

 

Edited by சாமானியன்

17 minutes ago, சாமானியன் said:

தமிழ் ஈழம் சுருங்கி , இன்றைக்கு கல்முனை பிராந்தியமாகவும் திருக்கேதீசுஸ்வரத்திற்கு பாதையின் முகப்பில்  வளைவு வைப்பது வரையும் வந்து விட்டது  இது எம்மாத்திரம்   ..

 

கேதீஸ்வரம் பிரச்சினை தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பிரச்சினை  உருவாக்க வேண்டும் என்று பாரிய திட்டத்துடன் அரங்கேற்றப்படுகறது, அதாவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றனர்

 

கோத்தபாயவின் தெரிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளித்தமைக்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது. 2015 க்கு முன்னர் ஊழல் நிறைந்த அரசாங்கமே இருந்தது. அந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தினால் நன்மைகள் கிடைக்கவில்லை. 

இதனால் அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் வெவ்வேறு துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தனர். யுத்தத்தை அவர்கள் நிறைவு செய்தார்கள். ஆனால் அவர்கள் தனியாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வரவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் பகுதியளவில் நிறைவடையச் செய்திருந்ததையே அவர்கள் முழுமையாக நிறைவடையச் செய்தார்கள். எனினும் அதுவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 

எனினும் எதிராகச் செயற்பட்ட இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அது மாத்திரமின்றி இராணுவத்தினர், பாதுகாப்பு செயலக அதிகாரிகள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஊடகவியலாளர்கள் பலர் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/62506

'ராஜபக்‌ஷ முகாமின் பலவீனமான வேட்பாளரே கோட்டா’

ராஜபக்‌ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கமற்றவராக கடந்த காலங்களில் தம்மை நிருபித்த  கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ராஜபக்-ஷ-முகாமின்-பலவீனமான-வேட்பாளரே-கோட்டா/175-236643

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für kottapaya with mahintha

 தமையன், தம்பி... மீண்டும் வந்தால்,
தமிழ் பகுதிகளில்.... இரத்த ஆறு, 
மீண்டும்... பெருக்கெடுத்து ஓடப்  போகின்றது.  🤬

அனுராதபுரத்திற்கு சென்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவிற்கு அமோக வரவேற்பு 

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் புனித பூமிக்கு சென்றிருந்தார்.

இதன்போது அவர் முதலாவதாக ருவன்வெலி மஹா சேயாவிற்கு சென்றார்.

அங்கு அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

http://www.hirunews.lk/tamil/222087/அனுராதபுரத்திற்கு-சென்ற-ஜனாதிபதி-வேட்பாளர்-கோட்டாபயவிற்கு-அமோக-வரவேற்பு

1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für kottapaya with mahintha

தமையன், தம்பி... மீண்டும் வந்தால்,
தமிழ் பகுதிகளில்.... இரத்த ஆறு, 
மீண்டும்... பெருக்கெடுத்து ஓடப்  போகின்றது.  🤬

தமையன், தம்பி மீண்டும் வந்தால் அவர்கள் குடும்பத்திலுள்ள ஏனையோரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பதவியை பெற்று குடும்ப ஆட்சி அமையும்.

இலங்கை இராணுவம் கோத்தாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இராணுவத்தினரின் வாக்குகள் கோத்தாவுக்கு விழும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Lara said:

தமையன், தம்பி மீண்டும் வந்தால் அவர்கள் குடும்பத்திலுள்ள ஏனையோரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பதவியை பெற்று குடும்ப ஆட்சி அமையும்.

இலங்கை இராணுவம் கோத்தாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இராணுவத்தினரின் வாக்குகள் கோத்தாவுக்கு விழும் என நினைக்கிறேன்.

நேற்று... யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் எல்லாம்....
கோத்தா... ஜனாதிபதி  வேட்பாளர், என்ற அறிவிப்பை கேட்டு...
வெடி கொழுத்தி கொண்டாடின படங்களை பார்த்தும்...
இதெல்லாம்... மனிதப் பிறவிகளா... என்ற கடுப்பில்,
அதனை இங்கு, பதிய...  மனமே வரவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für kottapaya with mahintha

 தமையன், தம்பி... மீண்டும் வந்தால்,
தமிழ் பகுதிகளில்.... இரத்த ஆறு, 
மீண்டும்... பெருக்கெடுத்து ஓடப்  போகின்றது.  🤬

இரத்த ஆறு பெருக்கு எடுத்து ஓட இனி மேல் என்ன இருக்கு?...இவர்களது குடும்ப ஆட்சி வந்தால் தான் தமிழருக்கு ஒர் தீர்வு வரும் 

1 hour ago, தமிழ் சிறி said:

நேற்று... யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் எல்லாம்....
கோத்தா... ஜனாதிபதி  வேட்பாளர், என்ற அறிவிப்பை கேட்டு...
வெடி கொழுத்தி கொண்டாடின படங்களை பார்த்தும்...
இதெல்லாம்... மனிதப் பிறவிகளா... என்ற கடுப்பில்,
அதனை இங்கு, பதிய...  மனமே வரவில்லை.   

இன்றிருக்கும் நிலையில் கோத்தாவுக்கு வடக்கில் இருந்து 50,000 இல் இருந்து ஒரு இலட்சம் வரைக்குமான வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றேன். கள யதார்த்தம் அப்படித்தான் இருக்கின்றதாக எனக்கு படுகின்றது.

எனக்கு ஒரு கேள்வி இருக்குது இது தொடர்பாக

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கும் / ஐ.தே.கவுக்கும் முண்டு கொடுத்து வருவதாக பலரால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஊடகங்களும் அவ்வாறுதான் செய்கின்றன. அப்படி பார்க்கும் போது, ரணிலுக்கு  / ஐ.தே.க வுக்கு எதிராக கோத்தா களம் இறங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோத்தா ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை குற்றம் சாட்டுகின்றவர்கள் எதிர்பாக்கின்றனரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இரத்த ஆறு பெருக்கு எடுத்து ஓட இனி மேல் என்ன இருக்கு?...இவர்களது குடும்ப ஆட்சி வந்தால் தான் தமிழருக்கு ஒர் தீர்வு வரும் 

ரதி.... நீங்கள், எந்த உலகத்தில்... இருக்கின்றீர்கள்?
யாருடைய ஆட்சியில்... அதிக இரத்த ஆறு ஓடியது என்பதையும்,
எமது தமிழ் தேசிய தலைவனையும்  இழந்தோம் என்பதை.... 
எவ்வளவு இலகுவாக.... கடந்து போக, முடிகின்றது ?

ஒரு இனத்தின்... வீழ்ச்சியை,  நடத்தி  முடித்தவர்கள்,  
அவர்கள் என்பதை அறியாதவரா நீங்கள்?

அதற்காக...  ரணிலோ... சஜித்தோ.... 
எமக்கு... உதவி செய்வார்கள் என்று....
முட்டாள்... சம்பந்தன், சுமந்திரன், மாவை மாதிரி...
இலவு  காத்த கிளி அல்ல, நாங்கள்.

எமக்கு என்று, ஒரு  நெஞ்சை  நிமிர்த்திய அரசியல்வாதி வேண்டும் என்பதே... எம் எதிர் பார்ப்பு.  
மனோ கணேசன், யோகேஸ்வரன்...  என்றாலும்,  எனக்கு... ஓகே... :grin:

கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி.... போன்றவர்கள்..
வேண்டவே... வேண்டாம்.  அவர்கள்... இதுவரை...  ஈழத் திரு நாட்டுக்கு... செய்த சேவை போதும். 😎 🤣

Edited by தமிழ் சிறி

தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களின் அரசியல் தலைமை இந்த இரண்டு முக்கிய வேட்பாளர்களில், இரண்டாம் இடத்தில் உள்ளவர் என நம்பப்படுவரின் கட்சியுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்து அந்த கட்சிக்கு தமிழர்களை ஆதரவளிக்க வைக்கலாம். அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க முதலாம் இடத்தில் உள்ளவர்களை விட கூடுதலான ஆர்வம் இருக்கும்

இல்லை முதலாம் இடத்தில் இருப்பவரின் கட்சியின் வெற்றியை பலப்படுத்த உதவி, அவர்களின் வாக்குறுறிதியை பெறலாம். இரண்டையும் பார்த்து ஒரு முடிவிற்கு வரலாம்.    

இல்லை மக்களின் அவரவரின் சுயாதீன முடிவிற்கு விடலாம். இந்தியா போன்று "நோடா" (NOTA)  இருந்தால் அதற்கும் கணிசமான வாக்குகள் வடக்கு கிழக்கில் விழலாம்.  

யாவும் சாத்தியமற்றதாகி விடும், எங்களுக்குள் பிரிவினைகள் அதிகரித்தால்......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இன்றிருக்கும் நிலையில் கோத்தாவுக்கு வடக்கில் இருந்து 50,000 இல் இருந்து ஒரு இலட்சம் வரைக்குமான வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றேன். கள யதார்த்தம் அப்படித்தான் இருக்கின்றதாக எனக்கு படுகின்றது.

எனக்கு ஒரு கேள்வி இருக்குது இது தொடர்பாக

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கும் / ஐ.தே.கவுக்கும் முண்டு கொடுத்து வருவதாக பலரால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஊடகங்களும் அவ்வாறுதான் செய்கின்றன. அப்படி பார்க்கும் போது, ரணிலுக்கு  / ஐ.தே.க வுக்கு எதிராக கோத்தா களம் இறங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோத்தா ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை குற்றம் சாட்டுகின்றவர்கள் எதிர்பாக்கின்றனரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு.... சுட்ட,  "பல்ப்"  என்று, தமிழர்களால் மட்டுமல்ல...
சிங்களவர்களால்  கூட... விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை,  நீங்கள் அறிவீர்கள்.

சம்பந்தன் / சுமந்திரன் /  மாவை.....எல்லாம்,  தங்களது அரசியல் பலத்தை...
கடந்த காலங்களில் பிரயோகிக்க, தகுதியோ... அறிவோ அற்ற ஆட்கள் என்பதை... 
தமிழ் மக்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.

இனியும்... தீர்வு... தீபாவளிக்கு வரும்,  தைப்  பொங்கலுக்கு  வரும் என்று சொன்னால்...
செருப்பால்... அடிக்க, வருவார்கள்.  

கஜேந்திரன் / விக்னேஸ்வரன்  கூட்டணி இணைந்தால்.... 
தமிழ் பகுதிகளில்... அதிக இடம் பிடிக்க, சந்தர்ப்பம் பிரகாசமாக உள்ளது.

அதற்கும்.. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால்....
சஜித் பிரேமதாஸவிற்கே...  மக்களின்வாக்குகள் சென்றடையும் என்பது, என் கணிப்பு.

ஏனென்றால்.... சஜித் பிரேமதாச  தற்போதிருக்கும், தனது அமைச்சு  அதிகாரத்தையும்,
செலவீட்டு செயல்களையும்..... வடக்கு/ கிழக்கு பகுதியில்.... இந்து மதத்தினர் மத்தியில், பல மடங்களை திறந்து வைத்துள்ளார்.

அவரின்.. எந்த,  ஒரு திறப்பு விழாவுக்கும்.... கூட்டமைப்பினருக்கு,   அழைப்பு விடுக்கப் படவில்லை என்பதை.... அறியக் கூடியதாக உள்ளது: 

சஜித் பிரேமதாச..... விபரமான ஆள் போல் உள்ளது:
சோத்து  மாடுகளான....  கூட்டமைப்பை, தன்  முதுகில் சுமந்தால்...   
கிடைக்கின்ற  தமிழ் வாக்குகளும்.. கோத்தாவுக்கு போய் விடும் என்று,

தமிழ் பகுதிகளில்.... தனியே, களம்  இறங்கி, 
பெரிய... வியூகம் எடுத்துள்ளார் என  நினைக்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நேற்று... யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் எல்லாம்....
கோத்தா... ஜனாதிபதி  வேட்பாளர், என்ற அறிவிப்பை கேட்டு...
வெடி கொழுத்தி கொண்டாடின படங்களை பார்த்தும்...
இதெல்லாம்... மனிதப் பிறவிகளா... என்ற கடுப்பில்,
அதனை இங்கு, பதிய...  மனமே வரவில்லை.   

அது வேலை வாய்ப்பு சம்பந்தமான விடயமெல்லோ,   மணித்தியாலத்திற்கு பேசிச்சினமோ இல்லை மொத்தமாக குடுத்தினமோ  ….. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.